ஸ...ரி...க...ம...ப..த...நி..ஸ...!!
➦➠ by:
ஆனந்தி
இசை........பலருக்கு இது இருந்தால் போதும்...:))சோறு தண்ணி வேணாம்.ஆனால் அந்த இசையவே கணிச்சு...ரசிச்சு..லயிச்சு...
இசை கருவிகள் எல்லாம் எப்படி பாட்டுக்களில் யூஸ் பண்ண பட்டு இருக்கு...ன்னு தானும் ரசிச்சு...நம்மளையும் அடடே போட்டு மலைக்க வைக்கும் கே.ரவிஷங்கர்க்கு ஒரு பெரிய சல்யூட்..
பெரும்பாலும் இவர் எடுத்து கொண்டிருப்பது இளையராஜா அவர்களின் இசையில் வெளிவந்த பாட்டுக்கள் தான்...இவர் புல்லாங்குழலில் இருந்து கோரஸ் வரை அக்கு வேறு..ஆணி வேறு ன்னு ரசிச்சு...அதகளம் பண்ணி இருக்கார்...
மேலும்..வயலின்,வீணை (இந்த பதிவு என் பேவரைட் ):), கிட்டார் ன் சாகசங்கள்(அதுவும் அந்த "பூ வாடை காற்று" பாட்டின் "முதல் இசை "ஆராய்ச்சி சூப்பர் ரூ ) ...
படு பயங்கர சுவாரஸ்யம்...எந்த manual இசைக்கருவிகளும் தன்னிச்சையாய் கொடுக்க முடியாத
இசையை இங்கே நாம் கேட்கலாம்..:)))))
இசையில் கவுண்டர் பாயிண்ட்னால்...ஏதோ கவுன்ட் பண்ற ரிதம்னு கொச்சா..முச்சான்னு நினைச்ச எனக்கு :))இந்த பதிவு தான் உண்மையை புரிய வச்சது.....
ஷெனாய்..அதுவும் ஆண்பாவம் படத்தில் "குயிலே..குயிலே" பாட்டில் ஷெனாயின் கலக்கலை இந்த பதிவு படிச்சு தான் அசந்தேன்...மீண்டும் மீண்டும் கேட்க பரம சுகம்...
இசைதந்தை மொஸார்ட்டை பற்றிய திரைப்படம் (Amadeus)..பற்றிய ஒரு பதிவு தான் இது..
ஹாங்காங் தெரியும்..ஆனால் ஹாங் இசை தெரியுமா..படிக்க ஆச்சர்யமாய் இருந்தது...you tube இல் தேடி பார்த்து இந்த இசையை கேட்டேன்...யப்ப்பா...செம ..செம...நீங்களும் கேட்டு பாருங்க.
நம் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல நம்ம ஊரு தமிழ் பசங்க சிலர் சேர்ந்து போட்ட இந்த தமிழ் இசை ஆல்பம்...
எங்கே நம் இளையராஜா னு தேடு தேடுன்னு தேடுகிறார் ...அது மட்டுமில்லாமல்..தான் ரசித்த ராஜா மற்றும் ரகுமானை பற்றிய ஒரு அட்டகாசமான,சூடான விவாதம்..பின்னூட்டம் வரைக்கும் கலக்கல்..:)))
ஏ .ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு சீன மொழி படத்துக்கான (Between Heaven and Earth) இசை விமர்சனம்...இந்த பதிவர் செமத்தியா ரசிச்சு சொல்லி இருக்கார்...
ஜான் பி ஹிக்கின்ஸ் பாடகரை பத்தி தெரியுமா.. ரசித்த அவரின் பாடல்களை பத்தி சொல்கிறார் இந்த பதிவர்..
பலர் மறந்துவிட்ட பின்னணி பாடகர்களுக்காக நினைவூட்டும் அழகான ஒரு இசை பதிவு.
ஜஸ்ட் இப்போ தான் பார்த்தேன் இந்த இசை வலைப்பூவை...முழுக்க முழுக்க இசை வழிந்தோடுகிறது இதில்.
(இது வரை "இசை" என்ற இன்ப வெள்ளத்தில் "தொபுக்கடீர்" னு குதிச்ச உங்களுக்கு மிக்க நன்றி..மீண்டும் நாளை பார்ப்போம்...:)) )
|
|
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
repeatu!!! :-)
இசை தளங்களை அறிமுகம்..
ReplyDeleteவித்தியாசமான முயற்ச்சி...
அறிமுகங்களுக்கும்.. தங்களுக்கும் வாழ்த்துக்கள்..
Thanks for share!!
ReplyDeleteMy wishes Acca!
இசை என்னும் இன்பவெள்ளத்தில், மூழ்கி முத்தெடுக்க ஓடோடி வந்த என்னை நீங்களும் ஏமாற்றவில்லை! நல்ல தேடல்! அருமையான தொகுப்பு!! வாழ்த்துக்கள், ஆனந்தி!!
ReplyDeleteஇசை மழை பொழியுது....கண்டிப்பா அனைத்து பதிவுகளையும் பார்க்கணும்...
ReplyDeleteஇசைமழையில் நனைந்தோம்.
ReplyDeleteஇசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த வைத்த ஆனந்திக்கு மிக்க நன்றி.தொடருங்க..
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை
ReplyDeleteவித்தியாசமாக இசையிலிருந்துஆரம்பிச்சி ருக்கீங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteகே ஆர் எஸ் இளையராஜா பக்தர்
ReplyDeleteஇசையை விரும்பாதவங்க உண்டா என்ன....அசத்தல்.
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துகள்....
என்ன இது சொல்லவே இல்ல ....
ReplyDeleteநீங்கள் வலைச்சரதிலா?
அறிமுகம் எல்லாம் விதியாசமா இருக்கு ...........
என்ன இது சொல்லவே இல்ல ....
ReplyDeleteநீங்கள் வலைச்சரதிலா?
அறிமுகம் எல்லாம் விதியாசமா இருக்கு ...........
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஎன்ன இது சொல்லவே இல்ல ....
நீங்கள் வலைச்சரதிலா?//
இதுதானா உங்க டக்கு.....
// (இது வரை "இசை" என்ற இன்ப வெள்ளத்தில் "தொபுக்கடீர்" னு குதிச்ச உங்களுக்கு மிக்க நன்றி..//
ReplyDeleteதெரியாம குதிச்சுட்டோமுங்க.....ஹ ஹ ஹா..இசைத்தொகுப்பை ரசித்தேன்.
//கே ஆர் எஸ் இளையராஜா பக்தர்//
ReplyDeleteஆமாம் கார்த்திக்.....ரொம்ப அழகா சொல்லிட்டேங்க...அவர் ராஜாவை பற்றி போடும் ஒவ்வொரு பதிவும் கடும் உழைப்பில் போட்டதாய் இருக்கும்...
//என்ன இது சொல்லவே இல்ல ....
ReplyDeleteநீங்கள் வலைச்சரதிலா?
அறிமுகம் எல்லாம் விதியாசமா இருக்கு ...........//
அப்புடிங்களா...;)))
இசை வெள்ளத்துல நீந்த வச்சுட்டீங்க (அப்படின்னு ஒரு டெம்ப்ளேட் கமெண்ட் போட்டு விட்டு போய் கொண்டே இருப்போர் சங்கம் )
ReplyDeleteம்ம்ம்ம் உண்மைலே படிக்க டைம் இல்ல ,எனிவே அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் (வேல வெட்டி இல்லாம இருக்குறப்ப வந்து படிக்கிறேன் )
Super selections. Thank you.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்று இசை வெள்ளத்தில் நீந்த தெரியாமல் மூழ்கினேன். நாளை எந்த வெள்ளமோ? ஹி..ஹி...ஹி... ஆனந்தியக்கா முதல் பகிவே செம கலக்கல்....
ReplyDeleteநன்றிங்க !!!
ReplyDeleteஇசையால் எம்மை வசமாக்கும் பதிவர் ரவிசங்கரின் பதிவுகளை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றிகள் சகோ.
ReplyDeleteசிறந்ததொரு அறிமுகம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇசைவெள்ளத்தில் நல்லா நனைஞ்சுட்டேன்..
ReplyDeleteஇசையருவி வலைச்சரத்தில் வழிந்தோடுகிறது, பகிர்வுக்கு நன்றி மேடம்
ReplyDelete