"அதகளப்படுத்தும்" அரசியல் அதிரடி பதிவுகள்/பதிவர்கள்
➦➠ by:
ஆனந்தி
தேர்தல் ஒரு வழியா "பூச்சாண்டி" காமிச்சுட்டு போய்டுச்சுன்னு "துணை முதல்வர் ஸ்டாலின்" மாமல்லபுரம் ரிசார்ட்டில் ஓய்வெடுப்பது மாதிரி நாமும் இன்னும் ரிலாக்ஸா இருக்க முடியாது:))...மே 13 வரை கண்ணாமூச்சி ஆட்டம் அரசியல் களத்தில் டிங்கு..டிங்குன்னு:)) ஆடிட்டு தான் இருக்கும்...தேர்தலுக்கு முன்னர் வரை கூட்டணி குத்தாட்டம் மற்றும் குரங்கு ஜம்பிங் அரசியல் கோமாளிஸ் பத்தியே பேசி அசை போட்ட நமக்கு இன்னும் தேர்தல் முடிவு வரும் வரை யாருக்கு டிபாசிட் போகும்..யாரு ,யாருக்கு வோட்டு போட்டு இருப்பாங்கனு "அமானுஷ்ய விடுகதையை" :)) நோண்டி பார்ப்பதில் ஒரு குஷியோட இருப்போம்...அரசியல் விஷயங்களை குப்புற போட்டு கும்மு கும்முன்னு கும்முற அட்டகாச சில அரசியல் பதிவுகள் /பதிவர்கள் இன்னைக்கு...:)))
1.ஹெல்மெட்டை ஏன் அரசாங்கம் இலவசமாய் கொடுக்க கூடாதுன்னு சொல்லும் வேழவனத்தின் இந்த பதிவு செம..
2."இந்த தனியார் பொறியியல் கல்லூரிங்க தொல்ல தாங்க முடில நாராயணா"...:)) அடுத்த தேர்தலில் அனைவருக்கும் "இலவச பொறியியல் படிப்புன்னு"அறிக்கை கொடுக்க சொல்லலாமான்னு "ரூம் போட்டு" கல்லூரி ஓனர்ஸ் யோசிச்சுட்டு இருப்பதாய் கேள்வி..:).மிக மிக அருமையா பகிர்கிறார் அசோக் மூர்த்தி
3.தனியார் மின் உற்பத்தி ஆலைகளிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் முழி பிதுங்குவதை அலசுகிறார் maniblog பதிவு .
4.ஆபத்து என்றால் நாம எஸ்கேப் ஆகுறோம் அந்த இடத்தில் இருந்து...!ஆனால் ஐந்தறிவுடைய ஜீவன்கள்..!!ம்ம்...இந்த காணொளியை "கூடல் பாலா" ப்லாக் கில் கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தேன்...மனசே சரியில்லை...என்னனு பாருங்க.
5.காமடி பீஸ் ஆக சித்தரிக்கப்பட்ட வை.கோ வின் அழகு பக்கங்களை வெளிக்கொண்டு வந்த செங்கோவியின் அருமையான பகிர்வு
6.ஸ்பெக்ட்ரம் பத்தி கட்டுரை எழுதி...படிச்சு போர் அடிச்ச நமக்கு இந்த அழகான ஸ்பெக்ட்ரம் ஹைக்கூ/கவிதையை படிங்களேன்.
7.ஏன் கட்சி தலைமைக்கு மட்டும் தான் இலவச திட்டம் போட தெரியுமா...நாங்களும் போடுவோம்பூ ன்னு போட்டு இருக்கும் அரசியல் நகைச்சுவை பதிவு
8.பெர்னாட் ஷா சொன்ன ஒரு வாக்கியத்தை வச்சு..தோனிக்கு இருக்கும் மேலாண்மை செயல்பாடை சிலாகிச்சு முடிச்சிருக்கும்" மனந்திறந்து... மதியின்" பதிவு.
9.புழல் சிறையில் நடக்கும் விஷயங்களை ஒரு "அனுபவப்பட்ட" பதிவர் பகிர்ந்து கொள்ளும் பதிவு
10.ஆளும் கட்சி தவிர தேர்தல் ஆணையத்தை நம்மெல்லாம் பாராட்டிட்டு இருக்கோம்...ஆனால் இதன் மற்றொரு கருப்பு பக்கத்தை அலசுகிறார் இந்த பதிவர்..மிக அருமையான பதிவு("ஸ்மைலி "ட்டேன் இவர் ப்லாக் டைட்டில் பேரு படிச்சு !! "வாங்க .."ப்லாக்" க்கலாம்..:) )
11.கடாபி, ராஜ நடராசன் அவர்களின் இந்த பதிவை படிச்சால் உலகின் உத்தமருடன் :))ஒப்பீட்டமைக்காக ,பரமாத்மாவாக மாறி இமயமலை பக்கம் டென்ட்டு போட்டு த்யானம் பண்ணி வாழ்க்கையை முடித்து கொள்ள (கொல்ல) சான்ஸ் இருக்கு....:)))
12. "டாஸ்மாக் லாபம் வச்சு தான் இலவசமே கொடுக்கிறோம்னு" நம்ம மொதல்வர்ஜி மிக பெருமையாக சொல்லி நம்மை கௌரவப்படுத்தியதற்கு
நன்றி தெரிவிச்சு:) "வைகை" சீறும் இந்த பதிவு
13..தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்க பத்து ஐடியா கைவசம் வச்சுருக்கார் நம்ம தல ஜோதிஜி ...ஹீ..ஹீ.....கனவு மெய்ப்படவேண்டும்..:)))))
14.செக் நாட்டு அரசியல்வாதிக்கு புத்திசாலிதனம் பத்தல , நம்ம ஊருக்கு வந்து பாடம் படிக்கணும்னு ரொம்ப பிரியபடுறாரு அஞ்சா சிங்கம் இந்த நகைச்சுவை பதிவில்:))
15.தமிழ் ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மதிப்பு குறைஞ்சதுக்கு, அரசியல் பாரம்பர்யத்துக்கும் சம்பந்தம் இருக்குமோ னு அலசும் ச.தமிழ்செல்வன் பதிவு
16.கலைஞர்,அம்மா,கேப்டன் தேர்தல் வாக்குறுதி கேட்டு "போர்" அடிச்ச நமக்கு, எம்.ஜி.ஆர் தேர்தல் வாக்குறுதி கேளுங்க...சுவாரஸ்ய காணொளி..
17.மார்க்ஸிஸ்ட் குடும்ப அரசியல்:)) செஞ்சா நாங்க செய்ய கூடாதா :)) ன்னு புலம்பி,அவங்கள நிறுத்த சொல்லு...நாங்க நிறுத்துறோம் னு கேட்கும் "அப்பாவி":) பற்றி சொன்ன நட்புடன் ரமேஷ் பதிவு
இன்னும் எக்கச்சக்க அரசியல் "சூப்பர் ஸ்டார்" பதிவர்கள்(பட்டாப்பட்டி மாதிரி) கொட்டி கிடக்காங்க பதிவுலகத்தில்...
ஓகே...மக்களே...மீண்டும் நாளை இறுதியாய் சநதிப்போம்..:)) Bye for now :))
|
|
அனைவரும் அதிரடி அரசியல் பதிவர்கள், விரிவாக அலசுபவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஎல்லாருமே ஜூப்பரு..!!
ReplyDeleteஇத்தேர்தலில் தே.மு. தி.க. விற்கு ரத்தம் சிந்தி வேலை பார்த்த ஒன்றிய செயலாளர் திரு.செல்வினை(அஞ்சாசிங்கம்)பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி ஆனந்தி. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்று அறிமுகமாகிய அனைத்த பதிவர்களுக்கும் கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎன்னை இங்கே அறிமுகப் படுத்தியதற்கு, மிக்க நன்றி, ஆனந்தி அவர்களே! அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்திய மற்ற நெஞ்சங்களுக்கும் மனம் திறந்து நன்றி செலுத்துகிறேன்!
தற்போதைய அரசியல் நிலையை அலசிய என் பதிவு இதோ: அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! மருத்துவர், கேப்டன், சிங்கம், ஆற்காட்டார் மற்றும்...?
அக்கறைக்கு நன்றி ஆனந்தி.
ReplyDeleteஆனாலும் பத்து ஆலோசனை கொடுத்த எனக்கு பதினொன்றாக ஒரு நண்பர் மைனஸ் ஓட்டு குத்தியிருக்காரே பாத்தியளா? படிச்சாலும் நாங்க திருந்தவே போறதில்லை என்று வெளியே காட்டிக் கொள்ள விரும்பாத உபிகளும் ரரக்களுமாக நிரம்பி வழியில் உலகம் தான் இந்த வலையுலகம்.
அட அதை விடுங்க ஜோதி அண்ணா:)) போற்றுவார் போற்றட்டும்...தூற்றுவார் தூற்றட்டும்...:)) உங்கள் கடமை பணி செய்து கிடப்பதே..:)) கூல் அண்ணா...இதெல்லாம் பதிவுலகில் சகஜம்.:))..அந்த பத்து பேரு விரும்பிருக்காங்க தானே...ஸோ மெஜாரிட்டியில் ஆட்சி உங்களுக்கே..:)))
ReplyDeleteபதிவுகளின் தாக்கத்தில் மட்டுமே பெரும்பாலோரின் பெயர்கள் எனக்கு அறிமுகம்.ஆனால் பின்னூட்டத்தில் யார் இது என்று திரும்பிப் பார்க்க வைத்த பதிவர் நீங்க:)
ReplyDeleteவானம்பாடிகள் பாலாவுக்கு அடுத்து எனக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தவங்க நீங்க மட்டும்தான்:)நன்றி.
ஹ ஹ...ராஜ நடராசன் அந்த பின்னூட்டத்தை இன்னும் நீங்க மறக்கலையா...:))))
ReplyDeleteஅப்புறம் இன்னொன்னும் சொல்லணும்ன்னு தோணிச்சு.சின்னப்பையனா இருக்கும் போது கைல எழுதி கண்ணாடி பிரேம் போட்டு சுவத்துல மாட்டுன ஒரு வாசகம் அப்போதைய காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியின் தமிழக அரசின் “வாய்மையே வெல்லும்”.
ReplyDeleteஇப்ப அவர் மறந்துட்டாலும் கற்றுக்கொண்ட நாம மறக்ககூடாதுல்ல:)
இப்பவும் குறைஞ்சு போகல...அது அப்படியே தான் இன்னும் இருக்கு..."வாய்" "my " வெல்லும் னு :))
ReplyDeleteஅதிரடி பதிவர்கள், வாழ்த்துகள்....
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள், வந்தனங்கள்....
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்! பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteநான், நம் உலக நாயகன் தோனியைப் பற்றிப் பதிவு எழுதி சரியாக மூன்று வாரம் கூட முடியவில்லை. ஆனால் இதற்குள்ளாகவே, என்னுடைய கருத்தை அமோகமாக ஆதரித்துள்ள உலகப் புகழ் பெற்ற அமெரிக்கப் பத்திரிகையான TIME, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, இன்னும் ஒருபடி மேலே போய், "அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவர் தோனி!" என்று உலகின் கூரை மேல் ஏறி உரக்கச் சொல்லி இருக்கிறது பாருங்களேன், இதோ: Dhoni more influential than Obama: Time magazine. இதற்கு மேல் என்ன அங்கீகாரம் வேண்டும் இந்தப் பதிவுக்கு...? இல்லை... எனக்கு? இல்லை...இல்லை... இந்தியர்களாகிய நமக்கு?!
ReplyDeleteதினம் ஒவ்வொரு விதமான பதிவுகள் அறிமுகம் கலக்குறீங்க.....
ReplyDeleteசூப்பர்....இன்றும் வித்தியாசமான அறிமுகம்...
ReplyDeleteஎன்னை மற்றவர்களுக்கும், மற்ற அரசியல் பதிவர்களை எனக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆனந்தி.
ReplyDeleteமற்ற அரசியல் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் அறிமுகம், எங்களுக்கு பெருமிதம் தொடரட்டும் உங்கள் வலை சேவை, வாழ்த்தட்டும் வாசகர் வலைப்பூவை
ReplyDeleteஇது என்ன ஆச்சரியம்! தோனி பற்றிய என் பதிவிற்கு உள்நாட்டுப் பத்திரிகை வலைச்சரத்திலும் வெளிநாட்டுப் பத்திரிகை TIME மூலமாகவும் ஒரே நாளில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறதே! :)))
ReplyDeleteஅரசியல் அதிரடிகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்ப எல்லாரும் விரும்பி படிபப்து இந்த வலை தளங்கள் தானே
வாழ்த்துக்கள் ஆனந்தி
இன்றைய அறிமுகமும் அசத்தல்....
ReplyDeleteகொஞ்சம் வெரைட்டியாக யோசிக்கிறீங்க.
வாழ்த்துக்கள்.
தாமதமான வருகையுடன் ஒரு நன்றி அக்கா
ReplyDeleteநேற்று முன்தின வலைச்சரத்தில் அறிமுக படுத்தியதற்கு ,
இன்னைக்கும் நானா..அக்காவிர்கு நன்றி!
ReplyDeleteஎன்னை இங்கே அறிமுகப் படுத்தியதற்கு நன்றி, ஆனந்தி அவர்களே! அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்!
ReplyDeleteவித்தியாசமாக பின்னுறீங்க தொடரட்டும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பின் ஆனந்தி ,
ReplyDeleteஎன் பதிவை பற்றி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. இன்னும் கூடியவரை பதிவின் தரத்தையும் விஷய ஆழத்தையும் காப்பாற்ற முயற்சிக்கிறேன்.
நன்றிகள் பல.
நல்ல அறிமுகங்கள். அறிமுகப்படுத்திய உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்..........
ReplyDeleteநாமதான் மாத்தியோசிக்கிறோம் னா, ஆனந்தியுமா? கலக்கிட்டீங்க சிஸ்டர்!! வாழ்த்துக்கள்!!
ReplyDelete! சிவகுமார் ! said...
ReplyDeleteஇத்தேர்தலில் தே.மு. தி.க. விற்கு ரத்தம் சிந்தி வேலை பார்த்த ஒன்றிய செயலாளர் திரு.செல்வினை(அஞ்சாசிங்கம்)பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி ஆனந்தி. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்................
//////////////////////////
ஏன் இந்த கொலை வெறி தக்காளி உன்னை உக்கார வச்சி உன் தலையில நலம்தானா வாசிச்சிருவேன்.....................
என் பதிவை இங்கே தோழி ஆனந்தி அவர்கள் அறிமுகப்படுதியதாக செய்தி அனுப்பி இருந்தார் அவருக்கு நன்றி நானும் இங்கே வந்து என் பெயரை தேடி பார்தேன் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவரது முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றி
ReplyDelete@அவர்கள் உண்மைகள்
ReplyDeleteதங்கள் பதிவு பற்றி ஏழாவது பாயிண்ட் டில் கொடுத்திருக்கேனே...இந்த பதிவாது முழுசா படிங்க சார்..:)))
7.ஏன் கட்சி தலைமைக்கு மட்டும் தான் இலவச திட்டம் போட தெரியுமா...நாங்களும் போடுவோம்பூ ன்னு போட்டு இருக்கும் அரசியல் நகைச்சுவை பதிவு
This comment has been removed by the author.
ReplyDeleteவேழவனம் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteதங்களின் கலகலப்பான எழுத்துக்கு வாழ்த்துக்கள்.
வலைச்சரத்தில் "தேர்தல் ஆணையம்-வலிமைக்குள் சில வலிகள்" பதிவை பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி ...உங்கள் சுயவிபரத்தை பார்த்த பொது தான்
ReplyDeleteஇருவருக்கும் சில ஒற்றுமைகள் தெரிந்தன ...பெயர் - ஆனந்த் , ஆனந்தி ..
சொந்த ஊர் - மதுரை , ராசி - சிம்மம் ...
அட அப்படி போடுங்க..ஆனந்த்..நீங்களும் மதுரையா...அப்புறம் ப்ரோபைல் இல் ஒழுங்கா மதுரைன்னு குறிப்பிடுங்க...ரொம்ப சந்தோஷம்:)
ReplyDelete@ஆனந்தி: //ஆனந்த்..நீங்களும் மதுரையா...அப்புறம் ப்ரோபைல் இல் ஒழுங்கா மதுரைன்னு குறிப்பிடுங்க...//
ReplyDeleteஎன்னதான் மதுரைன்னாலும், நீங்கள் ஆனந்தை எடுத்த உடனே இப்படி மிரட்டறது ஞாயமா? :)))
good intro ananthi
ReplyDelete