நெஞ்சத்தை தொடும் நிதர்சனம்..!!!
➦➠ by:
சௌந்தர்
கவிதையெல்லாம் படிச்சு உங்களுக்கும் கவிதை எழுதனும்னு தோனுமே...எழுதிப் பாருங்க.கண்டிப்பா வரும். சரிங்க இன்னைக்கு என்ன பதிவு பாக்கபோறோம்னு தெரியுமா.? நெஞ்சைத் தொடும் நிதர்சனம்.! ஆமாங்க பதிவைப் படிச்சவுடன் நம்ம மனசு எல்லாம் ஒரு மாதரி ஆகிடும்...அந்த மாதரி இருக்குங்க..
இவங்க என்னோடு ரசிக்க வாருங்கள் அப்படின்னு அன்போடு அழைச்சிட்டு போய் அழகிய கவிதைகள் சொல்வாங்க. இவங்க பயன்படுத்தும் வார்த்தைகள் புதியதாக இருக்கும். அடிக்கடி கவிதை எழுதும்பொழுதுகண்ணீருடன் எழுது வாங்க போல. இவர் எழுதும் காதல் கவிதையே சிறந்தது அப்பாவின்பிரிவை பற் றி ஒரு கவிதை எழுதி இருக்காங்க இதை படிக்கும் பொழுது உங்களுக்கும் உங்க அப்பா நினைவு வரும்
இவங்க தான் கற்றலும் கேட்டலும்..ராஜி இவங்க பதிவை படிக்கும் போதே தெரிகிறது இவங்களுக்கு கடவுள் பக்திஅதிகம் இருக்கும்ன்னு..அலமேலுவின் அட்டகாசங்கள் எழுதிட்டு வராங்க. அந்த ஜோக்ஸ் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும்...உயிர் காத்த உறவும் நட்பு ஒரு பதிவைப் படித்தேன். இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அவருக்கு அடிபட்டதைச் சொல்லி இருக்கிறார். நல்ல வேளை அவருக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. உறவும் நடப்பும் கை கொடுத்திருக்கிறது .
இவங்க தாங்க மதுரைக்காரி. என்ன பயமா இருக்கா.? பயப்படாதீங்க. ஒன்னும் செய்ய மாட்டாங்க. இவங்க எழுதுற பதிவு எல்லாம் நகைச்சுவை கலந்தும் எழுதுவாங்க. அடிக்கடி ஊருக்கு போகும் போது இளையராஜா பாட்டுக் கேட்டுட்டே போவாங்களாம் ...இதுக்கு பேரு பக்தியான்னு ஒரு பதிவு எழுதி இருக்காங்க அதில் சொல்லி இருக்கும் விஷயம் எல்லாம் மனதை அப்படியே பாதித்ததுங்க. அவங்க தாத்தாவைப் பற்றி எழுத்தி இருந்தாங்க. அதைப் படிச்சவுடன் எனக்கு எங்க தாத்தா நினைவு தான் வந்தது.. நீங்களும் படிச்சுப் பாருங்க..
குறை ஒன்றுமில்லை சொல்றாங்க லக்ஷ்மி அம்மா அவங்களுடைய நினைவுகளை மலரும் நினைவுகளாக எழுதிட்டு வராங்க. சிறுவயதிலே திருமணம் செய்துகொடுத்ததைப் பற்றி எழுதி வராங்க. பிறந்த வீட்டில் இருக்கும் வரை தான் சந்தோஷம் எல்லாம்னு இவங்க எழுத்து சொல்லாமல் சொல்கிறது..!!!
ஜெ ஜெ வின் மலரும் மனம். இவரின் வருங்கால பதியை பற்றி கவிதை கதை எழுதி வருகிறார். வருங்கால மாமியாரிடம் பேசணுமாம். அதற்காக மாமியார் வீட்டிற்கு போன் செய்து இல்லாத பெயரை சொல்லி பேசிவிட்டு நம் குடும்பம் துள்ளி குதிக்குறாங்க. கான்பரன்ஸ் போட்டுப் பேசி அதைப் பதிவு செய்து வச்சிருக்காங்களாம்.
தம்பி கூர்மதியன். ஐ ஆம் சீரியஸ்னு சொல்றார் அப்படி என்ன தான் சீரியஸா சொல்றார்னு பார்த்தா அவருக்கு ஒரே ஒரு மகளிர் தான் தெரியுமாம். அவங்க அம்மாவை பற்றி சந்தோசமான விசயங்களை சொல்றார் நீங்களும் பாருங்க அவருக்கு தெரிந்த மகளிருக்கு வாழ்த்து சொல்றார்.!!! நீங்களும் வாழ்த்து சொல்லுங்களேன்..
இன்றைய பிரபலம்
இவங்களைத் தெரியாத ஆளே இருக்க மாட்டாங்க. இவங்களை நான் தான் பிரபலம் சொல்லனுமா என்ன நீங்க எல்லாருமே சொல்வீங்க...பின்னூட்ட புயல் சித்ரா...சாரிங்க கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா,எந்த விஷயம் சொன்னாலும் அதில் நகைச்சுவையோடு சொல்றது தான் இவங்க பாணி. வெளிநாட்டிற்கு போகும் போது சத்தியம் வாங்கலையா அப்பாவிடம் அப்பாவியா கேட்டு இருக்காங்க...!!! அதுக்கு அவங்க அப்பா எப்படி பதில் சொல்லி இருக்கார் பாருங்க...அப்பாவிடம் அரட்டை அடித்ததை ரொம்ப சுவாரசியமா சொல்றாங்க, கலகலப்பா சொல்றாங்க. இவங்க எழுதிய பதிவில் இரண்டு பதிவுகளை மட்டும் நான் எப்போதும் மறக்க மாட்டேன்.
சரிங்க நான் கிளம்புறேங்க உங்களை தான் என்னங்க யாரும் பாக்க மாட்டுறீங்க...எல்லாம் ஒரே கவலையா இருக்காங்க போல.....
|
|
அதான் வந்துட்டோம்ல..
ReplyDeleteநேற்று வலைச்சரத்தில் கவிதை வீதியை அறிமுகம் செய்ததற்கு நன்றி..
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி சகோ என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படித்தியமைக்கு....:-)
ReplyDeleteஎன் வாழ்த்துக்கள்..
அடப்பாவிகளா வடை திங்க விடமாட்டீங்களா...
ReplyDeleteSuper intros Soundar..:)
ReplyDeleteஅறிமுகம் எல்லாம் சூப்பர்....
ReplyDeleteஅப்பிடியே ஒரு டிவி, ஃபிரிஜ், வாசிங் மெஷினும் குடுத்தா நல்லா இருக்குமேன்னு கல்பனா ஃபீல் பண்ணுறாங்க ஹே ஹே ஹே ஹே ஹே......
This comment has been removed by the author.
ReplyDeleteஅப்பிடியே ஒரு டிவி, ஃபிரிஜ், வாசிங் மெஷினும் குடுத்தா நல்லா இருக்குமேன்னு கல்பனா ஃபீல் பண்ணுறாங்க ஹே ஹே ஹே ஹே ஹே......//
ReplyDeleteஅண்ணா அதுஎல்லாம் வேஸ்ட்
ஒரு boy friend ya குடுக்க சொல்லுங்க ப்ரீ யா
ஹி..ஹி...ஹி... வழக்கம்போல கலக்கற மக்கா... அனைத்து அறிமுகப்பதிவுகளும் அருமை.
ReplyDelete//கல்பனா said...
ReplyDeleteஅப்பிடியே ஒரு டிவி, ஃபிரிஜ், வாசிங் மெஷினும் குடுத்தா நல்லா இருக்குமேன்னு கல்பனா ஃபீல் பண்ணுறாங்க ஹே ஹே ஹே ஹே ஹே......//
அண்ணா அதுஎல்லாம் வேஸ்ட்
ஒரு boy friend ya குடுக்க சொல்லுங்க ப்ரீ யா// என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு.... ஹி..ஹி..ஹி.. இருக்குற பாய் பிரண்டு கூட கடலை போடுறது பத்தாதா.. உங்களுக்கு... ஹி..ஹி...!!!!
//பின்னூட்ட புயல் சித்ரா...சாரிங்க கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா,எந்த விஷயம் சொன்னாலும் அதில் நகைச்சுவையோடு சொல்றது தான் இவங்க பாணி.//
ReplyDeleteஹி..ஹி..ஹி... கண்டிப்பாக வடிவேலுக்கு அப்புறம் இவுங்க.. அப்பாவி முகத்தை பார்த்தலே தானா சிரிப்பு வந்துடும்..!! அவங்க பதிவ படிச்சா.... ஹி..ஹி.. சொல்லவா வேணும்...!!
வணக்கம் மச்சி,
ReplyDeleteசிறப்பாக அறிமுகபடுத்தியதற்கு வாழ்த்துக்கள் :)
தொடரட்டும் உங்கள் மகத்தான பணி
//இவங்க என்னோடு ரசிக்க வாருங்கள் அப்படின்னு அன்போடு அழைச்சிட்டு போய்....//
ReplyDeleteஅழ வச்சு அனுப்புவாங்கன்னு சொல்லு.... ஹி...ஹி...
//இவங்க பயன்படுத்தும் வார்த்தைகள் புதியதாக இருக்கும்.// ஹெ..ஹெ.. இருக்காதா பின்ன தமில தலைகீலா படிச்சவங்களாம்.. சௌந்தர்...!! அதுனால அப்படித்தான் புதுசா புதுசா... எழுதுவாங்களாம்...!!! ஹி..ஹி....ஹி.....
ReplyDelete//அடிக்கடி கவிதை எழுதும்பொழுதுகண்ணீருடன் எழுதுவாங்க போல.// இவுங்க எழுதும் போதுதான் கண்ணீருடன் எழுதுவாஹ.. படிச்சு முடிச்சதும் நம்பளைல அழுவச்சு அனுப்பறாஹ... ஹி..ஹி..ஹி.. என்ன கொடுமை தல.... இது...!!!
ReplyDelete//இவர் எழுதும் காதல் கவிதையே சிறந்தது// அப்ப மற்ற கவிதையெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு சொல்லு..!!!! ஹி..ஹி..ஹி... பாவம்பா கல்பு இருந்தாலும் இப்படியயெல்லாம் ஓட்டக்கூடாது சௌந்தர்.. நீயி...
ReplyDeleteசௌந்தர் ..... என்னையும் பிரபலம் என்று சொல்லி அறிமுகப்படுத்தி இருக்கீங்களே... ஹையா..... நன்றிங்க....
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! எனக்கும் சேர்த்து.... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...
உண்மையில் நெஞ்சை தொடும் நிதர்சனம் எல்லாமே...இங்கே குறிப்பிட்ட அனைத்தையும் படித்திருக்கிறேன்...மீண்டும் படிக்கும் அளவிற்கு நல்ல பதிவுகள். பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.
ReplyDeleteநேரில் பேசுவது போன்ற எழுத்து நடை மிக அழகு, நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.
//கல்பனா said...
ReplyDeleteஅப்பிடியே ஒரு டிவி, ஃபிரிஜ், வாசிங் மெஷினும் குடுத்தா நல்லா இருக்குமேன்னு கல்பனா ஃபீல் பண்ணுறாங்க ஹே ஹே ஹே ஹே ஹே......//
அண்ணா அதுஎல்லாம் வேஸ்ட்
ஒரு boy friend ya குடுக்க சொல்லுங்க ப்ரீ யா///
பிச்சிபுடுவேன்....
//பிரவின்குமார் said...
ReplyDelete//இவங்க என்னோடு ரசிக்க வாருங்கள் அப்படின்னு அன்போடு அழைச்சிட்டு போய்....//
அழ வச்சு அனுப்புவாங்கன்னு சொல்லு.... ஹி...ஹி...//
அழுகாச்சி காவியம்....
மீ ஹியர் அகேன்.. சூப்பர்.. தி போஸ்ட் விச் ஆல் ஹேவ் என்கரேஜ்டு ஈஸ் லிங்க்டு ஹியர்.. ஸோ ஸ்வீட்.. தேங்க் யு சௌந்தர்..
ReplyDeleteமீ ஹியர் அகேன்.. சூப்பர்.. தி போஸ்ட் விச் ஆல் ஹேவ் என்கரேஜ்டு ஈஸ் லிங்க்டு ஹியர்.. ஸோ ஸ்வீட்.. தேங்க் யு சௌந்தர்..
ReplyDeleteஅட கொடுமையே !!!
ReplyDeleteநான் தான் ஆடா இந்த போஸ்ட்க்கு ... சுத்தி சுத்தி அடிகிறிங்க !!
//நான் தான் ஆடா இந்த போஸ்ட்க்கு ... சுத்தி சுத்தி அடிகிறிங்க !!//
ReplyDeleteயாருப்பா அது கருப்ப கிண்டல் பண்றது.??
என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்ப
ReplyDeleteடுத்தியதற்கு நன்றி. சந்தோஷமா இருக்கு.
அறிமுகங்களின் தேர்வு அருமை.சௌந்தர் நெஞ்சத்தை தொட்ட பகிர்வுகள்.
ReplyDeletethanks for my blog introduction
ReplyDelete