கலையழகு முத்துக்கள்
➦➠ by:
திருமதி. மனோ சாமிநாதன்
கலையழகு முத்துக்கள்
ஓவியம் எனக்கு சின்ன வயதிலேயே பழக்கமான ஒன்று. எந்தப்பயிற்சியும் இல்லாமல் ஆர்வத்திலேயே வந்த பழக்கம் இது. அந்தக் கால ஓவியர்கள் வினு, லதா, கோபுலு, நடராஜன் போன்றவர்கள் என் ஓவிய தாகத்தை மேலும் மேலும் வளர்த்தார்கள். பின்னாளில் ஆனந்த விகடன், சாவி, தேவி என்று சில வார இதழ்களுக்கு சில வருடங்கள் வரைந்து கொண்டிருந்தேன். கை விரலில் ஏற்பட்ட விபத்தொன்றினால் வரைவது எல்லாம் சில வருடங்களுக்கு நின்று போயின். பலரும் பாராட்டியிருந்தாலும், காலஞ்சென்ற எழுத்தாளர் சாவி அவர்கள் இங்கே ஷார்ஜாவிற்கு என் இல்லத்துக்கு சாப்பிட வந்த போது, என் ஒவியங்களை மற்ற ஓவியர்களுடன் ஒப்பிட்டு பாராட்டியது என்றைக்குமே என்னால் மறக்க இயலாத நிகழ்வாக அமைந்து விட்டது. என் ஓவியம் ஒன்றை மீள் பதிவாக இங்கே பதித்திருக்கிறேன். மிகவும் பிரபலமான இந்த ஓவியம் ‘ சாவி ’ அட்டைப்படத்தில் அப்போது வெளியாகியிருந்தது. அந்தக் கண்ணீர் மனதைப் பிசைய, அன்றே இந்த ஓவியத்தை வரைந்து முடித்தேன்.
ஓவியம், புகைப்படக்கலை, கைவினைக்கலை இம்மூன்றும் இங்கே கலையழகு முத்துக்களில் இடம் பெறுகின்றன!
[RASIKKA RUSIKKA]
இந்த வலைப்பூவின் உரிமையாளர் ப்ரியாவின் கை வண்ணம் இது. எம்போஸிங் முறையில் வண்ணம் தீட்டியிருக்கும் அழகிய ஓவியம் இந்த எம்போஸிங் பெயின்டிங்!
[ வானம் வசப்படும் ]
அருமையான ஓவியரான பரணியின் பென்சில் ஓவியங்கள் மயக்க வைக்கின்றன. மெல்லிய கோடுகளும் அடர்ந்த கோடுகளும் நரையைத் தெளிவாய்க் காண்பிக்கும் மெல்லிய வெள்ளைக் கோடுகளும் அற்புதம்!
கோவையைச் சேர்ந்த ஓவியர் மார்ட்டின் வரைந்த இந்த ஓவியம் மனதை நெக்குருக வைக்கும். ஈழத் தமிழர்களின் அவல நிலையையும் அத்தனை துயரத்தையும், இந்தக் குழந்தையின் முகத்திலிருக்கும் வலியிலும் விழியோரத்திலிருந்து வழியும் கண்ணீரிலும் காண்பித்து விட்டார் இவர்.
[சேனைத்தமிழ் உலா]
கத்தாரைச் சேர்ந்த ‘சம்ஸ்’ அவர்களது ஓவியங்கள் இவை. இவையும் பென்சில் ஓவியம் தான் என்றாலும் மெல்லிய கோடுகளும் அடர்த்தியான ஷேட்ஸ்-ம் நம்மை அசர வைக்கின்றன! முக்கியமாய் அந்த பிஞ்சுக்குழந்தைகளின் பாவங்களும் மெத்தென்ற கைகளும் எத்துணை அழகு!
இந்த கோட்டு ஓவியங்களுக்குச் சொந்தக்காரர் திரு.நடன சபாபதி. முழுமையாக ஓவியப் பயிற்சி இல்லாமலேயே இவரது ஓவியங்கள் அழகாக உள்ளன. முக்கியமாக கேலிச்சித்திரங்கள் மிக அழகு.
இங்கே ஓவியர் செந்தில்நாதனின் பென்சில் ஓவியங்கள் சற்றே அழுத்தமான, தெளிவான கோடுகளைக்கொண்டவை. எளிமையான ஓவியங்களை மிக அழகாக வரைந்திருக்கிறார்.
7. http://aarellen.blogspot.com/2010/12/blog-post.html [எல்லென்]
இங்கே சகோதரர் லஷ்மி நாராயணன் மகாத்மா காந்தியடிளைஈ எத்தனை அழகாக வரைந்திருக்கிறார்!
[என் மனதில் இருந்து]
ப்ரியா ஒரு அருமையான ஓவியர். அவரின் வண்ணக்கலவைகள் இங்கே!
[கதம்பம்]
டிஷ்யூ பேப்பர் பூ முதல் பல வகை ஓவியங்கள் வரையும் முறைகள் அனைத்தும் ஹர்ஷிணி அம்மா இங்கு சொல்லித் தருகிறார்.
இந்த தளத்தில் புகைப்படக்கலை அருமையாகச் சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. கூடவே புகைப்படங்களுக்கான போட்டிகளும் உண்டு!
[இது இமாவின் உலகம்]
விருந்தினர் வந்தால்தான் மேஜை அலங்காரமா என்று கேட்கிறார் இமா! திராட்சைப்பழங்களில் அழகிய பூங்கொத்து செய்திருக்கிறார் இங்கு!
|
|
எத்தனை ஓவியக் கலைஞர்களை மிஸ் பண்ணியிருக்கிறேன் என்று இன்றுதான் தெரிந்தது. எல்லோரிடமு்ம் join பண்ணியாச்சு. உங்கள் அறிமுகங்கள் அத்தனைபேரும் முத்துக்களே.
ReplyDeleteஉங்கள் ஓவியம் அனைத்தும் ஏற்கனவே ரசித்திருக்கிறேன் . இப்போது நீங்கள் வலைச்சரத்தில் இணைத்துள்ள ஓவியம் ஓடோடிச்சென்று சிறுவனின் கண்ணீரைத் துடைக்கவேண்டுமென்று எங்களை வேகப்படுத்துகிறது.
விரல்களால் விந்தை படைக்கும் அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக அழகாக பதிவுகளை வகைப்படுத்தி
ReplyDeleteபதிவர்களை அறிமுகம் செய்து போவது மிக மிக அழகு
மிகச் சிறப்பாக வலைச்சர அறிமுகம் இருக்கவேண்டும் என
தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள கடின உழைப்பும் அதிக ஈடுபாடும்
ஒவ்வொரு நாளின் அறிமுகத்தின் போதும்
புரிந்து கொள்ள முடிகிறது
தொடர வாழ்த்துக்கள்
மிக பெரிய பயன் தந்துள்ளது இந்த பதிவு. பல்வேறு ஓவியத் திறன் கொண்டோரை அரிய முடிந்ததே. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஓவியம் எனபது அது ஒரு தனி கலை ,
ReplyDeleteஅதுவும் நீங்க வரைந்ததை பார்த்து நான் அதிலேயே லயித்து இருக்கீறேன்
இங்கு வித்தியாசமாக சிந்த்தித்து, கலையழகான அந்த ஓவியத்தையும் கலையழகு முத்துகக்ள் என்று அற்புதமான பெயரை வைத்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி இருக்கீங்க.
என் பெரிய பையனும் அருமையாக வரைவான்.
( மனோ அக்கா கவனிக்க சில லின்குகல் ஓப்பன் ஆகல,
இமா அக்கா உடையதும்...ஓப்பன் ஆகல
கத்தார் சம்ஸ் பதிவும்,ஒப்பன் ஆகுது ஆனால் எந்த பதிவுன்னு தெரியல
ReplyDeleteஅதே போல் ஹர்ஷினி அம்மா கதம்பம் கூட ஓப்பன் ஆகுது நீங்க குறிப்பிடும் கைவினை இல்லை
மனோ அக்கா யாரும் எனக்கு தெரிந்து இந்த வலைச்சரத்தில் நான் பார்த்ததில் கலை அழகை தேடி பிடித்து அறிமுக படுத்தல/
ReplyDeleteகழ்டபட்டு கை ஒடிய வரைந்தவர்களுக்கு இது கண்டிப்பா மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும்.
http://kathampamtamil.blogspot.com/2009/05/blog-post_05.html
ReplyDeleteஹர்ஷினியின் டிஷ்ஷூ பேப்பர் பூ
உங்க ஓவியம் அருமையாக இருக்கு.நீங்கள் கூறியிருப்பது போல அந்த கண்ணீர் கலங்க வைக்கிறது.
ReplyDeleteஅறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பொருத்தமான தலைப்புடன் தகுதியானவர்களை
ReplyDeleteஅறிமுகம் செய்வது எனக்கு நல்ல வழி நடத்தலாக
உள்ளது.
இந்த பதிவுகளுக்கு இத்தனை நாள் நான்
செல்லாமல் விட்டு விட்டேனே என்று கொஞ்சம் வருத்தமாக
இருந்ததது.ஆனால் இப்பொழுது தாங்கள் உதவி செய்து விட்டீர்கள்.நன்றி
பொருத்தமான தலைப்புடன் தகுதியானவர்களை
ReplyDeleteஅறிமுகம் செய்வது எனக்கு நல்ல வழி நடத்தலாக
உள்ளது.
இந்த பதிவுகளுக்கு இத்தனை நாள் நான்
செல்லாமல் விட்டு விட்டேனே என்று கொஞ்சம் வருத்தமாக
இருந்ததது.ஆனால் இப்பொழுது தாங்கள் உதவி செய்து விட்டீர்கள்.நன்றி
குறிப்பாக இரண்டாவது லிங்க் மற்றும் எட்டாவது லிங்க் அன்கம்பேரபிள்
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
எனக்கும் கடைசி லிங்க் ஓப்பன் ஆகலை
குறிப்பாக இரண்டாவது லிங்க் மற்றும் எட்டாவது லிங்க் அன்கம்பேரபிள்
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
எனக்கும் கடைசி லிங்க் ஓப்பன் ஆகலை
குறிப்பாக இரண்டாவது லிங்க் மற்றும் எட்டாவது லிங்க் அன்கம்பேரபிள்
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
எனக்கும் கடைசி லிங்க் ஓப்பன் ஆகலை
இத்தனை பேர் ஓவியம் வரையுராங்களா? !!!
ReplyDeleteஎனக்கும் ஓவியத்துக்கும் ரொம்ப தூரம். பார்த்து ரசிப்பதோடு சரி
அட இத்தனை ஓவியம் வரையும் பதிவர்கள் இருக்கிறார்களா? எல்லென் அவர்கள் பக்கம் பார்த்திருக்கிறேன்...
ReplyDeleteபலர் புதியவர்கள்... அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
ஓவியத்தில் ஆர்வமுள்ள தங்களது ஆர்வம் மகிழ வைக்கிறது கடம்பவனக்குயில்! உங்களின் பாராட்டிற்கு அன்பு நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் தங்களின் அக்கறையான பாராட்டுக்களுக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் ரமணி!
ReplyDeleteஉடனே வந்து அருமையான பின்னூட்டம் தந்து, வாழ்த்துக்களும் சொல்லி, சிறு தவறையும் சுட்டிக்காண்பித்ததற்கு என் அன்பு நன்றி ஜலீலா!
ReplyDeleteஅனைத்து இணைப்புகளையும் ஒரு முறைக்கு இரு முறையாக சரி பார்த்துத்தான் பதிவு செய்தேன். எதனால் ஓப்பன் ஆகவில்லை என்று தெரியவில்லை. கத்தார் சம்ஸ் பதிவுமே அப்படித்தான். டைப் அடித்துப் பார்த்தால் வருகிறது. சரி, மறுபடியும் சரி செய்து பார்க்கலாம் என்று உள்ளே போனால், அனைத்து இடுகைகளும் இடம் மாறிப் போய் விடுகின்றன. அதனால் நான் மறுபடியும் அந்த விஷப்பரீட்சையில் இன்று இறங்கவில்லை.
என் ஓவியத்தைப் பாராட்டியதற்கு அன்பு நன்றி ராம்வி!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் ...அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட கலையழகு முத்துக்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது பதிவையும்,
ReplyDeleteஓவியங்களையும்,வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அழகிய ஓவிய முத்துமாலை!
ReplyDeleteஇத்தனை ஓவியக்கலைஞர்கள் தெரிந்து கொள்ள உதவிய இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் சாவி அவர்கள் தங்கள் வீட்டுக்கே நேரில் வந்து விருந்துண்டு, தங்கள் ஓவியங்களின் தனித்தன்மையைப் பாராட்டியிருக்கிறார் என்பதைக் கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
ReplyDeleteதங்களின் ஓவியங்கள் பலவற்றை, தங்களின் பதிவினில், நான் மிகவும் ரசித்துள்ளேன். இந்தக்கண்ணீர் சிந்தும் சிறுவன் படம் இன்று இப்போது தான் பார்த்தேன்.
வெகு அருமையாகவே, இயற்கையாகவே, அவனை நன்கு அழவைத்துள்ளீர்கள். அதற்கொரு ஸ்பெஷல் சபாஷ்!
மற்ற ஓவியர்களையும், கைவினைக் கலைஞர்களையும், சிறந்த புகைப்பட நிபுணர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றியுள்ளதே தங்களின் தனித்தன்மையைக் காட்டுவதாக உள்ளது. அதற்கு ஒரு சபாஷ்!
அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவரின் திருக்கரங்களுக்கும், அறிமுகம் செய்துள்ள அஷ்டாவதானியான தங்களின் திருக்கரங்களுக்கும், சிறந்த ஓவியங்கள், கைவேலைகள் முதலியவற்றைக் கண்டால் மிகுந்த ஈடுபாட்டுடன் மெய்மறந்து நின்றுவிடும், மிகச்சாதாரண ஓவியனான என் அன்பான வணக்கங்கள்.
நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் vgk
இவ்வளவு ஓவியர்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்.
ReplyDeleteதாங்களும் ஓர் ஓவியர் என்பதை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.
மிகவும் சிறப்பான பதிவு!
நீங்கள் பத்திரிக்கை இதழ்களில் ஓவியம் வரைந்துள்ள விசயங்களை அறிந்துகொண்டோம்...வாழ்த்துக்கள்... சிறுவன் அழுவது போன்ற ஓவியம் ஒரு வித வலியை தரக்கூடிய ஓவியம் அருமை... இன்று அறிமுகமாகியிருக்கும் அனைத்து ஓவிய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதலில் இந்தச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். @}->--
ReplyDeleteஎன்ன சொல்லட்டும்!! எப்பொழுதும் எதையாவது சுரண்டிக் கொண்டு இருப்பேன். முடிகிறபோது வலைப்பூவில் பகிர்ந்து கொள்கிறேன். குறிப்பிட்ட அந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தது என்று முன்பே குறிப்பிட்டிருந்தீர்கள். இங்கு அறிமுகத்தை எதிர்பார்க்கவில்லை. சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி அக்கா.
வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
அன்பான பின்னூட்டங்களால் எனக்குள் உற்சாகத்தையும் மகிழ்வையும் ஒரு சேர மலருமாறு செய்த அன்புத் தோழமைகள் அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!!
ReplyDeleteஒரு அழகு ஓவியர் மற்றவரின் ஓவியங்களை பாராட்டுவது உலகில் அபூர்வம்தான் . தொடருங்கள் :-)
ReplyDeleteரொம்பவே ஆச்சர்யமா இருக்குங்க.. பலநாள் கூகிள் தேடுபொறியில் குழந்தைகள் சித்திரங்களை காணும்போது இந்த குழந்தையின் படத்தை வெகுவாக ரசித்திருக்கிறேன். இப்போதுதான் உங்களுடையது என்று அறிகிறேன். மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்..
ReplyDeleteஉங்களது அறிமுகங்களும் சிறப்பாக இருக்கிறது.. நன்றி..
மிக அழகிய கண்களில் கண்ணீரோடு சோகத்தை தேக்கிய கண்களை அற்புதமாக வரைந்த ஓவியத்தை அறிமுகப்படுத்தி இருக்கீங்க மனோ அம்மா..
ReplyDeleteநீங்க வரைந்ததா அம்மா? அற்புதம் கண்களில் ஒற்றிக்கொள்ள தோன்றும் அழகிய ஓவியம் அம்மா...
அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்...
நானும் வரைவேன் அம்மா ஆனால் பெண்களை மட்டுமே விதம் விதமாக வரைவேன் வேற வரைய வரலை அம்மா...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு மனோ அம்மா..
ரமணி சார் சொன்னது போல உங்களின் சிரத்தை ஒவ்வொரு நாளும் தெரிகிறது மனோ அம்மா...
ஒவ்வொரு அறிமுகமும் அக்கறையான தேடலுடன் வெகு நேர்த்தியாக... மிக்க நன்றி சகோதரி! வலைச்சரத்தில் கோர்க்கப்படும் முத்துக்களும் எப்போதும் போல அர்த்தம் மிக்கதாய்... செய்வன திருந்தச் செய்ய தாங்கள் தக்க உதாரணம். தங்கள் ஓவியச்சிறுவனின் வழியும் கண்ணீரில் அமிழ்ந்தே போகிறோம். அந்தக் கண்களின் அளப்பரிய துக்கமும், குழந்தைமையும்... அப்பப்பப்பா!
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி மேடம்...!
ReplyDelete//குறிப்பாக இரண்டாவது லிங்க் மற்றும் எட்டாவது லிங்க் அன்கம்பேரபிள்//
ஹி...ஹி... ராஜிக்கு ஸ்பெஷல் நன்றி :)
Thank U AMMA
ReplyDeleteSorry for Late