வானகமிங்கே தென்பட வேண்டும்!
➦➠ by:
நான்காம் நாள்,
மிடில் கிளாஸ் மாதவி,
வலைச்சரம்
வானகமிங்கே தென்பட வேண்டும் என்று தட்டச்சும் போது என் மூத்த மகன் வந்தான். 'வானத்தை இங்கு தெரிய வைக்கணுமா, என்ன கண்ணாடி ஏதும் வைச்சு ரிஃப்லெக்ஷன் அது மாதிரி...' என்று கிண்டலாகவும் கொஞ்சம் பயத்தோடும் கேட்டான். காரணம், கணிணியில் ஏதாவது தெரிந்து கொள்ளணும் என்றால் அவனைத் தானே படுத்துவேன்!! 'இல்லையடா, இதன் அர்த்தம், சொர்க்கமே பூமிக்கு வரணும் - அதாவது பூமியே சொர்க்கமாக மாறணும்னு எடுத்துக்கலாம். இந்தத் தலைப்பில் எழுதப் போறேன்' என்று அவனிடம் சொன்னேன். 'ஏதோ பண்ணு, எனக்கு கொஞ்சம் கம்ப்யூட்டரில் பார்க்கணும், நீ வேலைய முடிச்சுட்டு கூப்பிடு' என்று சொல்லி விட்டுப் போனான்.
என்ன பேசுவது என்று தெரியாமல், பக்கத்திலிருந்த கணிணியைக் காட்டி 'இப்பல்லாம் எல்லாரும் எழுதலாம்! வலைப்பூ என்றொரு விஷயம் கணடுபிடித்து, விரும்பியவர்கள் தாம் சொல்ல நினைக்கும் கருத்தைச் சொல்லலாம்! கணிணியின் மூலம் பலவும் சாத்தியமாயிருக்கிறது' என்று சொல்லி, 'உங்களுக்கு, இந்தப் பாட்டைத் தெரிகிறதா?' என்று கொஞ்சம் வம்புடனே, முந்தாநாள் போட்ட 'நெஞ்சுக்கு நீதியும்' போட்டுக் காண்பித்தேன். 'பாட்டைத் திறப்பது பண்ணாலே!' என்று பண்புடனே பதில் வந்தது. 'உஜ்ஜயினி' பாட்டையும் ரசித்ததாகத் தெரிந்தது. பதிவுகளைப் பார்த்தவர், 'இன்று யாரைப் பற்றிச் சொல்லப் போகிறாய்?' எனக் கேட்டார்!
மகாகவியல்லவா, முதலில் ஒரு கவிதைப் பதிவரைக் காண்பிப்போம் என எல் கேயின் கவிச் சோலைக்கு கூட்டிப் போனேன். சங்கப் பாடல்களையும் அவற்றுக்கு புதுக் கவிதைகள் படைத்துக் கொடுத்திருப்பதையும் ரொம்பவே ரசித்தார்! சமீபத்திய பதிவு செங்கால் மடநாராய் பதிவைப் பாராட்டினார்!
அப்படியே அதே பதிவரின் பாகீரதி யையும் காண்பித்தேன். உறுதி கதையையும் ஹேப்பி பர்த்டே கிருஷ்ணாவில் பாடல்களையும் மற்ற சமூக அக்கறைப் பதிவுகளையும் காண்பித்தேன். 'பலே பாண்டியா' என்றார்!
இவர் தொடர்கதைகளும் எழுதுவாரே என்றவுடன், தொடர் நாயகர்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள்! அவர்களின் பதிவுகளையும் பார்த்தோம்.
பெரிய சிறு கதைகளைத் தொடர்களாக வெளியிட்டு, அடுத்த பாகம் எப்போ என்று தேட வைக்கும் வை.கோபாலகிருஷ்ணன் - சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று தன்னடக்கமாகச் சொல்லிக் கொள்பவர், இப்போதைய பதிவுகளில் கதைக்கான ஓவியங்களையும் அவரே தீட்டுகிறார். இவர் கதைகளைப் படிக்கும் போது கண்முன்னே அந்தக் காட்சிகள் விரிவது மாதிரி, அழகாகக் கதை சொல்லுவார். சமீபத்திய பதிவுகளான ஏமாறாதே, ஏமாற்றாதே சிறுகதையையும் ஓவியத்தையும் சகுனம் சிறுகதை இரண்டு பகுதிகளையும் காண்பித்தேன். பாரதியாருக்கு மிகவும் பிடித்திருந்தது, அதுவும் இரண்டாவது கதை - மூட நம்பிக்கைகளின் எதிரி அல்லவா?!
அப்படியே அவரை எங்கள் Blog பக்கம் கூடடிப் போனேன். ஸ்ரீராம், kggouthaman, raman, kg, Kasu shobana என்று ஐவர் ராஜ்ஜியம் இது என்றவுடன் அவருக்கு ரொம்பவே சந்தோஷம். அதுவும் 'நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படியுங்க! படியுங்க!! படிச்சுகிட்டே...இருங்க' என்ற வரவேற்பைப் பார்த்தவுடன் ஜாஸ்தியாகிவிட்டது! ஜே.கேயின் சிந்தனைகள், இந்த வார செய்தி அரட்டை எனப் பார்த்து ரசித்தார்! ஞாயிறு ஃபோட்டோக்கள், கேயைத் தே....டும் தொடர் எல்லாம் பார்த்தார்!
இப்போது பாரதி என்னை ஒரு கேள்வி கேட்டார் - 'நான் என்ன கடவுள் பாட்டுகள் மட்டுமா பாடியிருக்கிறேன்? கண்ணன், கண்ணம்மா பாடல்கள் உனககுப் பிடிக்காதா?' என்று! ஆகா, இப்படிக் கேட்டு விட்டாரே என்று வருந்தி, அவருடைய எல்லாப் பாடல்களும் பிடிக்கும் எனறும் உதாரணத்துக்கு ஒரு பாடலைப் போட்டுக் காடடுவதாகவும் சொல்லி, இந்தப் பாடலைப் போட்டேன்:
இப்போது பாரதி என்னை ஒரு கேள்வி கேட்டார் - 'நான் என்ன கடவுள் பாட்டுகள் மட்டுமா பாடியிருக்கிறேன்? கண்ணன், கண்ணம்மா பாடல்கள் உனககுப் பிடிக்காதா?' என்று! ஆகா, இப்படிக் கேட்டு விட்டாரே என்று வருந்தி, அவருடைய எல்லாப் பாடல்களும் பிடிக்கும் எனறும் உதாரணத்துக்கு ஒரு பாடலைப் போட்டுக் காடடுவதாகவும் சொல்லி, இந்தப் பாடலைப் போட்டேன்:
பாட்டை ரசித்துக் கேட்டபின், இன்னும் பதிவர்களைப் பார்க்கலாமா என்று பாட்டுக்கொரு புலவன் கேட்க, நானும் தயாரானேன். மோகன்குமார் என்றொரு சட்டம் படித்தவரின் வீடு திரும்பல் பார்க்கலாமா என்று கேட்டவுடன், 'ஆகா, என் நண்பர் வ.உ.சி. போல் வக்கீலா' என்று ஆனந்தப்பட்டார்! இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு? என்று கேட்கும் இந்தப் பதிவருடைய சமீபத்திய பதிவு நடிகர் நாகேஷ் பற்றி! வானவில் என்று பல்சுவைக் குறிப்புகளாக எழுதும் இவர், அவற்றில் சட்டச்சொல் விளக்கங்களும் எழுதுவது எனக்குப் பிடிக்கும்! (நடிகர் நாகேஷை சொர்க்கத்தில் தெரியுமாம் பாரதிக்கு!!)
பின்னர் அரசியல் பற்றி எழுதும் ஒரு புதிய பதிவரின் இடுகைகளை எடுத்தேன். ராஜன் என்பவரின் எல்லைகள் என்ற வலைப்பூவில் நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா என்ற பதிவைக் காண்பித்தேன். இன்றைய அரசியல் அவல நிலை சொர்க்கத்திலும் எல்லாரும் வருத்தப்படும் டாபிக் என்றுவிட்டார் பாரதி!
இன்னொரு புதிய பதிவரைச் சற்றே பெருமையுடன் அறிமுகப்படுத்தினேன், ஸ்டாலின் என்பவர் மார்ச் 2011 முதல் எழுதும் என்டர் தி வேர்ல்ட் -உனக்குள்ளே உலகம்! பற்பல செய்திகள் இருக்கிறது இந்த வலைப்பூவில், ஒரு செய்திச் சானலின் லிங்க்கும் இருக்கிறது! கூகுளில் சில நகைச்சுவைத் தேடல்களைப் பார்த்து நாமும் முயன்று பார்க்கலாம்! HTML தொடர்- லிங்க் பட்டன் உருவாக்குதல் பற்றித் தெரிந்து கொள்ளலாம்! சில வார இதழ்களின் பதிவிறக்கத்துக்கும் வழியிருக்கிறது! பாரதியார் 'பலே பாண்டியா' என்று மீண்டும் சொன்னது போல் காதில் விழுந்தது!
'வாருங்கள், இன்னொரு தளத்துக்குப் போகலாம்' என்று ஓம் சிவாய நம என்ற வலைப்பூவிற்கு அழைத்துச் சென்றேன். ஆன்மிகமாக பல திருத்தலங்கள் பற்றி பதிவுகள் உள்ளன. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பற்றி பதிவு அழகாய் இடப்பட்டுள்ளது. பங்குச் சந்தைக்குப் புதியவரானால் இந்தப் பதிவைப் படிக்கலாம்!
இவையெல்லாம் பார்த்த பாரதியார், நல்ல முன்னேற்றம் என்று சொல்ல, நானோ அவரிடம் என்னை ஆசீர்வதிக்குமாறு கேட்டேன். அவர் காலில் விழுந்து வணங்க, அவர், 'எழுந்திரம்மா' என்றார்! என்னை அவர் திருக்கரங்களால் தொட்டு எழுப்பவும் செய்தார்!
என்ன, திடீரென்று அவர் குரல் வேறு மாதிரி மாறிவிட்டது? எழுந்து பார்த்தால் என்னைத் தட்டி மறுபடி எழுந்திருக்கச் சொன்னது என் மகன்! 'அம்மா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி அப்புறம் சமயம் இருக்காது என்று உன்னை அவர்கள் வீட்டுக் கொலுவுக்குக் கூப்பிட வந்திருக்காங்க!' என்றான். 'பாரதி எங்கே,புகை...' என்று நான் மறுபடி உளற, 'நீ தூங்கிட்டே, அப்பா உனக்குத் தொந்தரவாக இருக்கும்னு பாட்டை நிறுத்திட்டு ஹாலில் ஐபாடு கேட்கிறார்! பாட்டி சாம்பிராணி பத்தி ஏத்தினது தான் புகை!' என்று விளக்கமும் கொடுத்தான். நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை!!
வானவில்லாக வர்ணஜாலம் காட்டும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! அப்புறம். வானவில்லின் நடுவில் அரசோச்சும் பச்சை நிறம், வளமை, ஒற்றுமை, இசைவு, வளர்ச்சி இவற்றைக் குறிக்கிறதாம்!!
|
|
//பெரிய சிறு கதைகளைத் தொடர்களாக வெளியிட்டு, அடுத்த பாகம் எப்போ என்று தேட வைக்கும் வை.கோபாலகிருஷ்ணன் - சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று தன்னடக்கமாகச் சொல்லிக் கொள்பவர், இப்போதைய பதிவுகளில் கதைக்கான ஓவியங்களையும் அவரே தீட்டுகிறார். இவர் கதைகளைப் படிக்கும் போது கண்முன்னே அந்தக் காட்சிகள் விரிவது மாதிரி, அழகாகக் கதை சொல்லுவார். சமீபத்திய பதிவுகளான ஏமாறாதே, ஏமாற்றாதே சிறுகதையையும் ஓவியத்தையும் சகுனம் சிறுகதை இரண்டு பகுதிகளையும் காண்பித்தேன். பாரதியாருக்கு மிகவும் பிடித்திருந்தது, அதுவும் இரண்டாவது கதை - மூட நம்பிக்கைகளின் எதிரி அல்லவா?! //
ReplyDeleteமஹாகவி பாரதியாருக்கே என் கதைகளை படிக்கக் காண்பித்தீர்களா!
அவருக்கும் படித்ததும் பிடித்து விட்டதா!! ஆஹா, ஆஹா, தண்யனானேன்.
கற்பனையே என்றாலும் என்னை இன்று என்னை அப்படியே சொக்குப்பொடி போட்டு இப்படி வீழ்த்திவிட்டீர்களே!!
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
vgk
மகாகவியை வலைவலம் கூட்டிச்சென்ற சகோதரி,
ReplyDeleteஉங்களின் கற்பனைத்திறன் அபாரம் ...
படித்து படித்து ரசித்தேன்.
அறிமுகங்களுக்கு அதுவும் பாரதி கண்ட
அறிமுகங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆஹா!பாரதிக்கே வலைசுற்றி காட்டிவிட்டீர்கள்!
ReplyDeleteபாரதியிடம் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நன்றி இன்றைய வானவில்லில் உங்களையும் பதிவையும் குறித்து நானும் பகிர்ந்து விட்டேன்
ReplyDeletehttp://veeduthirumbal.blogspot.com/2011/09/blog-post_29.html
எங்கள் ஆசிரியர்கள் சார்பாக நன்றி. வாழ்க வளமுடன்!
ReplyDeleteகாரணம், கணிணியில் ஏதாவது தெரிந்து கொள்ளணும் என்றால் அவனைத் தானே படுத்துவேன்!! /
ReplyDeleteநானும்தானே .. அவர்கள் படுத்தியது போக இப்போது நம் முறை.
வானவில்லின் வர்ணஜாலமாய் அழகான அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலையுலகம் வந்த பாரதிக்கு நன்றி.
ReplyDeleteபாரதிக்கு ஜே.கே வா ?
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@ வை.கோபாலகிருஷ்ணன்- இந்த வலைச்சர சுட்டியை நான உங்களுக்கு அனுப்பும் நேரம் நீங்களே எழுதி விட்டீர்கள்!
ReplyDeleteஎன் பதிவைப் பாராட்டியதற்கு உங்களுக்கும் நன்றி
@ மகேந்திரன் - //படித்து படித்து ரசித்தேன்// ரொம்ப நன்றிங்க!
ReplyDelete@ கோகுல் - :-)) வருகைகும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@ மோகன் குமார் - //இன்றைய வானவில்லில் உங்களையும் பதிவையும் குறித்து நானும் பகிர்ந்து விட்டேன் // சுடச்சுடப் பகிர்வு?! உங்களுக்கு என் நன்றிகள்!
ReplyDelete@ kggouthaman - எங்கள் ஆசிரியர்களின் வாழ்த்துக்களுக்கு என் நன்றி!
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி - தங்கள் வருகைகும் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, நன்றி!
ReplyDelete@ NIZAMMUDEEN - பாரதிக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDelete@ suryajeeva - பாரதிக்கு விஷயம் தெரியாமயா மத்தப் பதிவுகளைப் பார்த்தார்?!
ReplyDelete@ சே.குமார் - எல்லார் சார்பிலும் வாழ்த்துக்களுக்கு நன்றி
ReplyDeleteபாரதியாரே வந்து பதிவர்களின் இடுகைகளை படித்து கருத்து கூறியதில் மகிழ்ச்சி.
ReplyDeleteவீணையடி நீ எனக்கு..... இனிமை.
நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஹேப்பா செம்ம க்ரியேட்டிவிட்டிப்பா...
ReplyDeleteஅப்டியே நிஜம் போலவே படித்தவர் உணரும்படி எழுதுவதே ஒரு கலை.... அதை உங்க பகிர்வில் காண்கிறேன். என்னப்பா தலைப்பெல்லாம் செம்ம அசத்தலா இருக்கே ஒவ்வொரு நாளும் புதுமையிலும் புதுமையா இன்னைக்கு நீங்க போட்ட பகிர்வும் அறிமுகப்படலமும் செம்ம செம்மப்பா...
நான் தான் இப்படி தனியா கண்ணாடி முன் நின்று (யாரும் இல்லாதப்ப தான் :) ) ரெண்டு பேரும் பேசிக்கிற மாதிரி பேசி பார்ப்பேன்.. அதே ஏற்ற இறக்கத்துடன் குரலில் என்னவோ நமக்கே நமக்கென்ற தனி உலகில் இருப்பது போல....
இப்ப பாரதியாரை நீங்க இன்வைட் பண்ண நினைத்தபோது அவரே சட்டுனு உங்க கண்முன்னாடி வந்து உங்களோடு பொழுதை போக்குகிறேன் என்று வலைப்பூவை எல்லாம் வந்து பார்த்து அட அட அட என்று அசந்திருப்பார் தானே? பிள்ளைகள் முன்னேறிக்கிட்டே இருக்காங்க என்பதற்கு இதை விட அருமையான உதாரணம் வேணுமா என்ன??
எங்க உங்க பையன் கொஞ்சம் கூப்பிடுங்க?? எதுக்கா ?? அட கால் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள தான்... எப்படிப்பா இது எல்லார் வீட்டிலும் இப்படி ஒரு பிள்ளை இருந்துடுறாங்க? அப்படி இருப்பதால தான் நமக்கும் உதவியா இருக்காங்க....
வை கோபாலக்ருஷ்ணன் சார் அழகா ஓவியமும் வரைகிறாரா?? அட இது எனக்கு கூடுதல் தகவலாச்சே.. இனி மிஸ் பண்ணாம பார்க்கனும் அவர் பதிவுகளை....
அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் எல்லோருடைய பதிவுகளும் பாரதியால் ஒரு பார்வையும் பார்த்தாகிவிட்டது... ரொம்ப சந்தோஷம்பா....
இன்னைக்கு சுண்டல் என்னப்பா?
பாரதிக்கு சுண்டல் தரலையா?? இப்படி தான்....
அன்பு வாழ்த்துகள் மாதவி... என்னது மஞ்சுவையே பார்க்கிறார்போல் உணர்கிறேன் உங்க பகிர்வை படிக்கும்போதெல்லாம்...
அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்பா...
@ கோவை2தில்லி - பாட்டை ரசித்ததற்கும் உங்கள் மேலான கருத்துக்கும் ரொம்ப நன்றி!
ReplyDelete@ மஞ்சுபாஷினி - உங்கள் கருத்தைப் படித்தவுடன் சூடாக ஒரு கப் காஃபி சாப்பிட்டா மாதிரி இருக்கு! (ஃபில்டர் காஃபி) நன்றிங்க!
ReplyDeleteநான் இதுவரை வைத்த தலைப்புகள் எல்லாமே பாரதியார்கிட்டேருந்து வாங்கித் தான் - பாடல்களும் அவரோடது தான்! இப்போ பாவம், அவரையும் வலையுலகைச் சுத்த வைச்சுட்டேன்! :-))
கருத்துக்களுக்கு நன்றி! (என் மகன் வயதில் ரொம்ப சின்னவன் - உங்கள் ஆசிகளைக் கொடுங்கள்! நன்றி)
அழகிய அறிமுகம்... அதுவும் பாரதியின் துணையுடன்....
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
மிடில் கிளாஸ் மாதவி அவர்களுக்கு
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ் ......
நான் மொபைல் இன்டர்நெட் யூஸ் பண்ணறேன் . அதுல வலைச்சரம் web version னா வருது ..
மொபைல் டெம்ப்ளேட் ஆக்டிவேட் பண்ணுங்க...
அழகான அறிமுகங்கள். நல்ல ரசனை உங்களுக்கு மாதவி!
ReplyDeleteபாரதியுடன் பேசி.. அவரை அழைத்துச்சென்று அன்பர்களின் வலைப்பதிவுக்களை சுற்றி காண்பித்தது உண்மையாக இருக்குமோ என்கிற தோனியில் இருந்தது இன்றைய வலைச்சரம்... அருமை சகோ வாழ்த்துக்கள். இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபாரதி துணையில் வலைப் பக்க அறிமுகங்கள் ஜோர். எங்கள் மீதும் அவர் பார்வை பட்டது என்று (கற்பனையாகவேனும்) நினைக்கும்போது புல்லரிக்கிறது. நன்றிகள்.
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி. நான் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தி கொஞ்ச காலம் ஆய்டுச்சு. இருந்தாலும் என்னையும் நினைவில் கொண்டு இங்கே சொன்னதற்கு நன்றி.
ReplyDeletewww.atheetham.com
@ வெங்கட் நாகராஜ் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
ReplyDelete@ stalin - இது வலைச்சரம் - பற்பல பதிவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு தளம் - இதன் செட்டிங்க்ஸ் எல்லாருக்கும் உதவும் வகையிலும் வாக்குகள் இடும் வகையிலும் செய்யப்பட்டிருக்கிறது.
ReplyDeleteஉங்களுக்கு என் வாழ்த்துகள்!
@ மோகன்ஜி - //அழகான அறிமுகங்கள். நல்ல ரசனை உங்களுக்கு மாதவி!// நன்றி!
ReplyDelete@ மாய உலகம் - //பாரதியுடன் பேசி.. அவரை அழைத்துச்சென்று அன்பர்களின் வலைப்பதிவுக்களை சுற்றி காண்பித்தது உண்மையாக இருக்குமோ என்கிற தோனியில் இருந்தது இன்றைய வலைச்சரம்//
ReplyDeleteமாய உலகமா இருந்ததோ? :-))
@ ஸ்ரீராம் - //எங்கள் மீதும் அவர் பார்வை பட்டது என்று (கற்பனையாகவேனும்) நினைக்கும்போது புல்லரிக்கிறது// நன்றி!
ReplyDelete@ எல் கே - // நான் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தி கொஞ்ச காலம் ஆய்டுச்சு. // உங்கள் பணியைத் தொடருங்கள் ஐயா! எல்லார் சார்பிலும் கேட்கிறேன்!
ReplyDeleteஎன்ன கொடுப்பினை!பாரதியிடம் பேச அப்படி ஒரு பாகியம் இருந்தால்தான் முடியும்.கற்பனையில்தானேனு சொல்ல வேண்டாம்.அதற்கும் கொடுப்பினை இருக்க வேண்டும்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் எனக்கு புதியவர்கள் பலர்.சென்று பார்க்கிறேன்
நவராத்திரியின் காரணமாக சற்று தாமதமான பின்னூட்டம்.மன்னிக்கவும்
தாங்கள் வலைப் பதிவுக்கு பாரதியை அழைத்துவந்து எனது பதிவையும் அறிமுகப் படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி! உங்களுக்கும்,என்னைப்போலவே அறிமுகமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்!, -அன்புடன்,ராஜன்.
ReplyDelete@ ராஜன் - நன்றி!
ReplyDeleteதோழி,middle class madavi அவர்களுக்கு உங்களின் வலைச்சரத்தில் எம் வலைத்தளத்தை www.kavithaimathesu.blogspot.com அறிமுகப்படுத்தியற்கு நன்றிகள் .அழகான நடையில் வானவில் வலைச்சரங்களில் உங்கள் எழுத்துக்கள் வலைப் "பூக்களாக" மின்னுகின்றன. வாழிய நலம்.வாழ்த்துக்கள்.
ReplyDelete