முதல்நிலை மாடம்!!
➦➠ by:
மகேந்திரன்
அன்புநிறைந்த சான்றோர் சபையினில் இன்று ஆசிரியர் பொறுப்பேற்கும் அளவுக்கு என்னை விளைவித்த எனைப் பெற்ற என் தெய்வத்திற்கு முதற்கண் என் மனமார்ந்த அஞ்சலி....
வாகை மாலை சூடி வான்வென்ற மன்னவன் போல் என் மனதில் ஒரு உற்சாகம் குடியேறி இருக்கிறது. பதிவுலகில் இன்னும் மாணவனாம் எனை வலைச்சரத்திற்கு ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொள்ள அழைத்த வலைச்சர குழுமத்தின் பொறுப்பாசிரியர் அன்புநிறை சீனா ஐயா அவர்களை நான் இன்று பெற்ற இந்த இன்பம் உன்னால் தானன்றோ!! எனக்கூறி என் சிரம் தாழ்ந்த நன்றிகளையும் பணிவான வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன்.
எனக்கு முன்னர் ஆசிரியராய் இருந்த எமதருமை நண்பர் மாயவுலகம் ராஜேஷ் அவர்கள் சிறப்புற பணியாற்றிருக்கக் கண்டேன், அவரை நன்றியுடன் வழியனுப்புதல் செய்து என் பணி துவங்குகிறேன்....
உப்பின் பிறப்பிடமாம் தூத்துக்குடியில் வாசம் செய்யும் என் மனதில் கருவாகிய மணம்நிறைந்த வலைப்பூவாம் வசந்தமண்டபம் பிறப்பெடுத்த நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமான 14 -04 -2011 வியாழக்கிழமை. மனதில் இருந்ததை கொட்டினேன். இதோ 5 மாதங்கள் முடிந்துவிட்டன, 67 பதிவுகள் அரங்கேறிவிட்டன. என்னையும் என் எழுத்தையும் மதித்து 89 நண்பர்கள் தங்கள் பொற்பாதங்களை வைத்து வசந்தமண்டபத்தில் நுழைந்திருக்கிறார்கள். இன்று இக்கணம் வரை எனக்கு ஆதரவு கொடுத்துவரும் அத்தனை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வலைப்பூக்களில் கருத்துக்கள் மட்டுமே சொல்லி வந்த என்னை, நீங்கள் ஏன் தனி வலைப்பூ ஆரம்பிக்கக் கூடாது என்று என்னை தட்டிகொடுத்து நம்பிக்கை ஊற்றிய தோழி அனுவை இங்கு முதற்கண் நினைக்கின்றேன்.
என் எழுத்துக்களின் பிரதிபிம்பமாய், என் மூளையைத் தூண்டிவிடும்
தூண்டுகோலாய் என் அருகிருந்து என்னை ஊக்குவிக்கும் என் மனைவிக்கு இங்கு நான் மரியாதை செய்கிறேன்.
நாட்டுப்புறக் கலைகள் மீது தணியாத அன்பு கொண்டதால் என் கவிதைகள் சாரம் சற்று நாட்டுப்புற மனம் தூக்கலாகவே இருக்கும்.
எனக்குப் பிடித்த என்னுடைய நாட்டுப்புறக் கவிதைகள் சில உங்கள் பார்வைக்கு .......
ஒருகாணி நிலமிருக்கா??!!
ஏலேலங்கும்மி ஏலேலோ!!
அப்போதே அழிச்சிருப்பேன்!!
மனசு கனக்குதய்யா!!
எட்டுச்சோ தெரியலியே???!!!
கலைகள் காக்க வேணுமைய்யா!!
கவிஞர்களுக்கு தமிழ் மீது காதல் என்பது நிதர்சனமான ஒன்றே, அப்படி எனக்கும் தமிழ்க் காதல் வந்ததில் தவறில்லை......
அதில் சில ......
என்னுயிரில் கலந்துவிடு!!!
பூக்களின் ஒன்பது நிலைகள்!!
பதினொன் ஆடற்கலைகள்!!
ஏற்பது யாது?!!'ங' ப்போல் வாழ்ந்திடு!!
இன்று என் எழுத்துக்களை அங்கீகாரப்படுத்தும் எத்தனையோ நண்பர்கள் என் வலையில் வலம் வருகிறார்கள்..
அடுத்து வரும் படைப்புகளில் அவர்களையும், அவர்களின் படைப்புகளையும் உங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறேன்..
வாழ்த்துங்கள் ..
வளர்கிறேன்...
வழங்குங்கள் உங்களின் கருத்துக்களை
எனக்கு அணிவிக்கும்
வரவேற்பு மாலையாய்.
அன்பன்
மகேந்திரன்
|
|
இந்த வாரம் பொருப்பாசிரியராக வந்திக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்குள்...
ReplyDeleteமாடத்தில் ஒளிரும் விளக்குபோல் ஒளிவீச வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாருங்கள்
ReplyDeleteகலக்குங்கள்
வாழ்த்துக்கள்
அன்பின் மகேந்திரன் - லேபிள் இட வில்லையே ! இடுக லேபிளை ! சுய அறிமுகம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாருங்கள் மகேந்திரன் ஐயா!
ReplyDeleteஉங்கள் பொன்னான பணி தொடரட்டும்....
வாருங்கள் மகேந்திரன்.
ReplyDeleteசரமாக்குங்கள் புது வலைகளை!
அருமையான அடக்கமான அழகான சுய அறிமுகம்
ReplyDeleteதொடர்ந்து வருகிறோம்
ஜமாயுங்கள்
வாழ்த்துக்கள் மகேந்திரன்...
ReplyDeleteவாங்க மாப்பிள வாங்க.. சுறுக்கமான அறிமுகம் இவ்விடத்தில் மனைவிக்கும் நன்றி சொல்லியது பாராட்டத்தக்கது.. நாள் முழுவதும் வலையில் இருக்கப்போறீங்க அவங்க ஒத்துழைப்பு கட்டாயம் தேவை உங்களுக்கு.. உங்கள் தலம் மூலம் புதிய புதிய கிராமிய படைப்புக்களை வழங்கிவரும் நீங்கள் இதற்கு சரியான நபர்தான்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
ReplyDeleteநல்வரவு மகேந்திரன்.ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பு நண்பரே..
ReplyDeleteஇணையத் தமிழ்வெளியில் நான் கண்ட முத்தான பதிவர்களுள் தாங்களும் ஒருவர்...
நாட்டுப்புற வாசனையோடு பகிர்வுகளைத் தரும் தங்கள் கவிதைகளுக்கு இணையாக அதற்குத் தாங்கள் தேர்வு செய்யும் நிழற்படங்களையும் நான் பல மணித்துளிகள் கண்டு இரசித்ததுண்டு.
எனது வலையிலும்
பிற வலைப்பக்கங்களிலும் தாங்கள் வழங்கும் மறுமொழிகளிலும் தங்களுக்கான தனித்துவத்தை நான் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
தங்களுக்கான பாதையில் தாங்கள் தெளிவாகப் பயணித்துக்கொண்டிருப்பது மகிழ்வளிக்கக்கூடிய ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.
வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க மனம் நிறைய வாழ்த்துகிறேன் நண்பா..
அன்புநிறை நண்பர் சௌந்தர்,
ReplyDeleteவிளக்கொளியாய் நானிருக்க
எரியவைக்கும் எண்ணெயாக
எம் நண்பர்களாகிய நீங்கள் தான்...
அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி...
கலக்கிருவோம்.....
அன்புநிறை சீனா ஐயா,
ReplyDeleteதங்களின் நல்வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இதோ லேபிளை சரி செய்துவிட்டேன் அய்யா...
சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி..
அன்புநிறை நண்பர் வெளங்காதவன்
ReplyDeleteதங்களின் பொன்னான கருத்துக்கு மிக்க நன்றி.
சரங்களை
ReplyDeleteசாரங்களாக்கித் தர
முயற்சிக்கிறேன் நண்பர் சத்ரியன்.
அன்புநிறை நண்பர் ரமணி
ReplyDeleteதங்களின் அழகான கருத்துக்கு
மிக்க நன்றி.
வாழ்த்துக்களுக்கு
ReplyDeleteசிரம் தாழ்ந்த வணக்கங்கள்
நண்பர் ரமேஷ்பாபு....
அன்புநிறை காட்டான் மாமா
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள், வீட்டில் முழுநேரமும்
கணினி முன் அமர்கையில்
மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் முடியுமா???
என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு சகோதரி மேனகா
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு சகோதரி ராம்வி
ReplyDeleteதங்களின் இனிய வரவேற்பிற்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை முனைவரே,
ReplyDeleteஉங்கள் கருத்து எனக்கு கிடைத்த மாபெரும் பரிசு..
என் பதிவுகளை மட்டுமன்றி என் கருத்துக்களையும்
வாசித்து வந்த உங்களுக்கு நன் எப்படி நன்றி கூற போகிறேன்....
நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எப்போதும்
நான் இழவேன். தங்களின் ஆசியுடன் பொறுப்பினைத் தொடர்கிறேன்....
வலைச்சர பொறுப்பாசியராக வலம் வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பல.
ReplyDeleteஅறிமுகத்திலே அசத்திவிட்டீர்கள்!
தமிழ் புத்தாண்டில் பிறந்ததாலோ என்னவோ உங்கள் தளம் இயல்புத்தமிழில் அழகு நடை போடுகிறது.
தொடருங்கள்!வாழ்த்துக்கள்!
சென்ற வாரம் வலைச்சர ஆசிரியராக சிறப்பாகப் பணியாற்றி விடைபெறும் மாய உலகம் திரு. ராஜேஷ் அவர்களுக்கும், இந்த வாரம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரு மகேந்திரன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeletevgk
அன்பு நண்பர் மகேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.... சும்மா பூந்து விளையாடுங்க நண்பா.... வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புநிறை நண்பர் கோகுல் தங்களின் வாழ்த்துக்கும்
ReplyDeleteவரவேற்புக்கும் மிக்க நன்றி.
அன்புநிறை கோபாலகிருஷ்ணன் ஐயா
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கும் வரவேற்புக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு நண்பர் ராஜேஷ்
ReplyDeleteநீங்கள் வகுத்த வழியை
பின்பற்றுகிறேன்.....
அன்புநிறை சகோதரி மிடில்கிளாஸ்மாதவி
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
வணக்கம் அண்ணாச்சி,
ReplyDeleteவார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்.
அதான் உங்கள் வலைப் பக்கம் வர முடியலை...
எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.
மன்னிக்க வேண்டும்!
ஆரம்ப பதிவிலே...நாட்டுப் புறப் பாடல்கள் மீதான காதலினை அழகுறச் சொல்லி அடியெடுத்து வைத்திருக்கிறீங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா..
அடிச்சுத் தூள் கிளப்புங்க.
வருக.... வருக..,,,
ReplyDeleteவலைச்சரத்தின் பொறுப்பாசிரியராக இந்த மாதம் பொறுப்பேற்ற நண்பர் மகேந்திரனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துகள் !
ReplyDelete- அனு.
அருமையான ஆரம்பம் மகேந்திரன்...
ReplyDeleteஅப்பாவின் படம் பார்த்ததும் எனக்கு உடனே இந்த படம் யாருடைய வலைத்தளத்திலோ அடிக்கடி பார்ப்பேனே அப்ப கண்டிப்பா எனக்கு தெரிந்தவர் யாரோ தான் ஆசிரியர் என்று நினைத்து பார்த்தபோது அது நீங்கப்பா...
உங்கள் பகிர்வும் சரி கருத்தும் சரி பெற்றோரை தெய்வமாய் முன்னிறுத்தியதில் இருந்தே அறியமுடிகிறது....எத்தனை அடக்கம் இந்த பிள்ளை என்று....
குடத்திலிட்ட விளக்காய் என்றும் பிரகாசிக்கிறது உங்கள் எழுத்துகள்....
பொறுப்பேற்ற பணியை சிறப்புடன் செய்து முடிக்க என் அன்பு வாழ்த்துகள் மகேந்திரன்.
தனக்கிட்ட பணியை செவ்வனே செய்து விடைபெற்ற மாயஉலகம் ராஜேஷ் அவர்களுக்கும் இந்தவாரப் பொறுப்பேற்று வீறுகொண்ட நாட்டுப்புற நடையுடன் கலக்க இருக்கும் நண்பர் திரு.மகேந்திரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்பிங்க நண்பரே உங்கள் ஆட்டத்தை. சும்மா அடிச்சு ஆடுங்க....
வாழ்த்துகள் மகேந்திரன்.
ReplyDeleteமணக்கும் கதம்பச் சரம் தொடுத்திடுங்கள்!
வாழ்த்துகள் மகேந்திரன்....
ReplyDeleteஅன்புநிறை நண்பர் நிரூபன்
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கும்
வரவேற்புக்கும் மிக்க நன்றி.
அன்பு பிரகாஷ் அண்ணே தங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅன்புநிறை சகோதரி அனு,
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கும் இனிய வரவேற்பிற்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கடம்பவன குயில் தங்களின் வாழ்த்துக்கும்
ReplyDeleteவரவேற்புக்கும் மிக்க நன்றி.
அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ் தங்களின் வாழ்த்துக்கும்
ReplyDeleteவரவேற்புக்கும் மிக்க நன்றி.
அன்புநிறை ரத்னவேல் ஐயா
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
குடத்து விளக்கல-இனி
ReplyDeleteகுன்றின் விளக்கே
நடத்துவீர் நாளும்-முத்து
நகர்தனில் வாழும்
மண்மணம் கமிழ-கிராம
மண்மணம் தவழ
நண்பரும் அருமை-இங்கே
நவிலலென் பெருமை
புலவர் சா இராமாநுசம்
அருமையான பணிவான சுய அறிமுகம்
ReplyDeleteஅன்புநிறை புலவரே..
ReplyDeleteதங்களின் கவி வாழ்த்துக்கு
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்பு சகோதரி ஜலீலா
ReplyDeleteதங்களின் கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
3 நாளிடுகைகளையும் ஒன்றாக வாசிக்கிறேன். வாழ்த்துகள் சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அன்பின் இனிய தோழர் திரு. மகேன் அவர்கள் வலைசரத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருப்பதில் மட்டரற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
ReplyDeleteஅன்பரின் சீரிய ,கூர்மை மிக்க ,எழுச்சிமிக்க அரசியல், ஆன்மிகம், மன நலம், மருத்துவம் ,நகைசுவை என்று பல தரப்பட்ட சிந்தனை கட்டுரைகளையும், தமிழ் நாட்டுப்புற இலக்கியங்களையும் படித்து சுவைத்த பல அன்பர்களில் நானும் ஒருவன்.
பல முறை இவரின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன்........!
விவாதித்தும் இருக்கிறேன்......!
நம் தமிழ் கலாச்சாரத்தின் கண்ணியமிக்க படைப்புகளை.....பண்பாடு மீறாமல்....
நம் இளையதலை முறைக்கு கொண்டு செல்லும் மகத்தான பணியை மேற்கொண்டு ,தன்னை முழுமையாய் அர்பணித்து கொண்ட எம் அன்பின் தோழர் மகேன் அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்......!
அன்புடன்,
தோழன் சங்கர்.
அன்புநிறை நண்பர் சங்கர்
ReplyDeleteதங்களின் வரவை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி.
அரிய கருத்தளித்தமைக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்.
ReplyDeleteதங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.