நான்காம்நிலை மாடம்!!
➦➠ by:
சமுதாயம்,
மகேந்திரன்
மூன்றாம் மாடத்தில
ஊரைச் சுத்தி பார்த்தீகளா?
சுத்திவந்த களைப்பெல்லாம்
உடைப்பில போட்டுவிட
நாலாம் மாடத்துக்கு
நல்லோரே வந்தீகளா?
மனம் நிறைய ஊர்ப்பெருமை பேசிவந்தோம், யப்பாட என்று வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சும்மா நேரம் போவது தெரியாம மனதுக்கு பிடித்தவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது எவ்வளவு நிறைவு தரக்கூடிய விஷயம்.
சரி.. சரி.. அப்படியே வாங்க வேறு ஒரு பாதையில் பயணிப்போம். பேசுவதில் பலவிதம், அதில் மிகவும் முக்கியமான விதம் நம்மைச் சுற்றி நடக்கும் பொல்லாத நடப்புகளை சாடிப் பேசுவது. அதைத்தான் இன்றைய பதிவில் காணப்போகிறோம்....
சுள்ளென்ற பார்வையாலே
சுற்றியுள்ள நடப்புகளை
சூரிய வார்த்தைகளால்
சுட்டெரிக்க வந்திடுங்க!
என்ன இது உலகமின்னு
ஒதுங்கி இருக்காம
எள்ளுப்பூ நாசியுடன்
மோப்பம் பிடிக்க வந்திடுங்க!
துணிந்த மனம் கொண்டோரே
தும்பைப்பூ மனத்தோரே!
துடைப்பம் ஒன்னு எடுத்துவாங்க
தூசிதும்பை தட்டிடுவோம்!!
அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கும் பல பொல்லாத நடப்புகளை கண்டு மனம் கொதிப்பதுண்டு.
உதாரணமாக, காய்கறி வாங்க கடைக்குப்போகிறோம், நேற்று வாங்கிய காய்கறி அதே அளவில் இன்று விலை மட்டும் இரண்டு அல்லது மூன்று மடங்கு. இந்த நிலையில் நாம் என்ன செய்வோம்?
வெளியே சொன்னால் என்ன ஆகுமோ? யாரைப் பகைக்க வேண்டுமோ? என மனதிலேயே பூட்டி வைத்திருக்கும் அப்பாவி மக்கள் ஒருபுறம். உடனுக்குடன் கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல் என அந்த இடத்திலேயே திட்டித்தீர்த்துவிடும் சாரார்கள் ஒருபுறம்.
பார்த்ததையெல்லாம் மனதில் வைத்து நேரம் வரும்போது, ஏமாந்த யானை பழிவாங்குவதுபோல சாட்டையடி கொடுத்திடும் சாரார்கள் மறுபுறம்.
இப்படி எத்தனையோ வகைகள்.
இதில் நாம் எந்த வகை?
நம்மைச் சுற்றி நடக்கும் கேடுகளை தட்டிக் கேட்கிறோமா?
எவ்வளவு தூரம் அவர்களை தவறு செய்ய அனுமதிக்கிறோம்?
இப்படி பல கேள்விகள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கூடங்குளம் அணுமின்நிலையம் நிரந்தரமாக மூட வேண்டும் என்று 127 நண்பர்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க ஆயிரக்கணக்கானோர் அவர்களுக்கு ஆதரவு தர, பதினோரு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் முதல்வரின் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது தற்காலிகமாக தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உண்ணாவிரதமும் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நான் ஏன் இதைச் சொல்லுகிறேன்... நமக்கென்ன என்று இல்லாமல் பிற்கால சந்ததியினரை மனதில் கொண்டு நம்மவர்கள் போராடி வென்றதின் நோக்கம் என்ன? சமுதாய அக்கறை. அன்புநிறை நண்பர் கூடல்பாலாவிற்கு இதன்மூலம் என் பணிவான சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
..............................
இதுபோல நம் சக பதிவர்கள் எப்படியெல்லாம் இந்த சமுதாய கொடுமைகளை, சமுதாய சீரழிவுகளை சாடுகிறார்கள் என்று ஒரு வட்டமடித்து பார்த்து வருவோம் வாங்க.....
..............................
இவரின் எழுத்துச் சாரம் மனத்தைக் கிறங்கடிக்கும். இவரின் பதிவை இரண்டாம் முறை படித்தால் கண்களை அகற்றவே மனம் வராது. அனுபவத்தால் எழுத்தில் அனல் பறக்க வைத்து தீதும் நன்றும் பிறர்தர வாரா...எனச் சொல்லிவரும் அன்புநிறை நண்பர் ரமணி இங்கே ஒரு வித்தியாச தலைப்போடு லெட்சுமணக்கோடு நின்று பார்க்கச் சொல்கிறார்... இரட்டை மனநிலைகளில் இருக்கும் மனிதர்களை இங்கே தன் எழுத்தால் வாங்கு வாங்கென்று வாங்குகிறார்... வாருங்கள் போய் பார்த்து வருவோம்...
இதோ அவருக்காக
ராமனவன் தம்பியாம்
லெட்சுமணன் பேர்சொல்லி
கோடு ஒன்னு போட்டீங்க!
நித்தம் நித்தம் பார்த்துவந்த
பச்சோந்திப் பயலுகள
கோட்டில நிக்கவைச்சு
முட்டங்கால் போடச்சொல்லி
முட்டியில அடிச்சீங்க!
..............................
மனதோடு மட்டும் மந்திரங்கள் பேசிவரும் அன்பு சகோதரி கௌசல்யா, நாம் அன்றாடம் சந்தித்து வரும் நிகழ்ச்சிகளை சமுதாயத்தின் முன்னேற்றக் கண்ணுடன் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள். குண்டு சத்தமும் துப்பாக்கி வெடிச் சத்தங்களும் அடிக்கடி கேட்டு பார்த்து இன்று சாதாரணமாக அவைகளை துச்சமென மதித்துச் செல்கிறோம். இவ்வளவு கொடூரங்களுக்கு மத்தியிலும் பணத்தை சேர்க்க ஓடியோடி அலைந்தால் மட்டும் போதாது, கொஞ்ச நேரம் உங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி நல்ல விஷயங்களையும் நல்ல பழக்கங்களையும் பழகிகொடுங்கள், நல்ல சமுதாயம் அங்கே தான் உருவாகும் என அவர் சொல்லும் விதத்தை போய் பார்த்து வருவோமா....
இதோ அவருக்காக..
கண்களில் பட்டதெல்லாம்
காணமுடியவில்லையே?
காணக் கிடைத்ததெல்லாம்
சாணம் பிடிக்க வந்தேன்!
மொட்டைமாடி தளத்திலே
காக்கைக்கு நீர்வைத்தால்
பழகிப் போகுமய்யா
பதுசான பழக்கமெல்லாம்!
சமுதாய விருட்சத்தின்
வீரிய விதையதை
குழந்தையின் நெஞ்சில் விதையப்பா!!
..............................
பதிவுலகில் தனக்கென்று ஒரு தனியிடத்தை ஒதுக்கி அங்கே மெல்லத் தமிழ் வாழும் என்ற சாம்ராஜ்யம் கட்டி ஆண்டு வரும் எமதருமை நண்பர் ரெவெரி. பல்சுவை பதிவுகள் தருவதில் வல்லவர். கூடங்குளம் மூடவேண்டி உண்ணாவிரதம் நடந்துகொண்டிருக்கையில் தனது பதிவில் பிரதமருக்கும் முதல்வருக்கும் கடிதங்கள் அனுப்ப மின் முகவரி கொடுத்து அனைவரையும் வெகுண்டெழச் செய்தவர். இதோ தன் பதிவொன்றில் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு சிறுதொழில்களில் ஈடுபட அரசாங்கம் வழிவிட்டிருப்பதை மன நெகிழ்ச்சியோடு இங்கே அழியப்போகும் இந்திய சிறுவணிகர்கள்.. என அங்கலாய்ப்பதை போய் பார்த்துவருவோம் வாருங்கள்....
இதோ அவருக்காக
வாசலுன்னா என்னதுன்னு
தெரியுமாய்யா உனக்கு!
புறவாசல் வழியாக வந்தவனே
அட... தெரியுமாய்யா உனக்கு!!
குருவிக்கூடு பக்கம்வந்து
பருந்து உட்காராதய்யா!
அதுக்கு தெரியுமய்யா
மூளையின்னு ஒன்னிருந்தா
வந்தவழி செல்லு!
வந்தவழி போகலேன்னா
எடுத்திடுவோம் வில்லு!!
..............................
பலபேர் இந்த தலைப்பை எடுத்துப் பேச சற்றுத் தயங்குவார்கள் பதிவுலகில் எதிர்வாதிகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள். இங்கே நண்பர் காந்தி பனங்கூர் கொஞ்சம் வித்தியாசமானவர், தெரியாததை தெரிந்துகொள், தெரிந்ததை பகிந்துகொள் என வியாக்கியானம் பேசி வருபவர். தான் கண்ட சில மூட நம்பிக்கைகளை எப்போது ஒழியும்? என கேட்டுக்கொண்டே இங்கே சாடுகிறார் பாருங்கள்....
இதோ அவருக்காக...
வாங்க வாங்க காந்தியய்யா
மேளதாளம் பார்க்க!
பெரியாரின்னு ஒருத்தரிங்கே
வந்த காலமுண்டு! அவர்
வாழ்ந்த காலமுண்டு! அவர்
வழிவந்த தம்பிகளோ
சாதி பார்க்குரான்யா!
சகுனம் பார்க்குரான்யா!!
என்னாத்த சொல்ல
நாம எங்க போயி முட்ட!!
..............................
பல்சுவைப் பதிவுகளில் தனக்கென்று இடம்போட்டு சம்மணமிட்டு பலகதைகள் பேசுகிறார் இவர். அன்பு நண்பர் கோகுல் பெயரின் அளவில் தான் சுருக்கம் தெரியும் இவரின் பதிவுகளில் உள்ள விஷயங்கள் மிகவும் சிந்திக்கக் கூடியவை. அப்படியே வலைகள் சுற்றி வந்தபோது கோகுல் மனதில் என்ன இருக்கிறதென்று பார்த்துவரச் சென்றேன். பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் மற்றும் கழிவிடங்கள் பற்றிய ஒரு கட்டுரையைக் கண்டேன். சும்மா இலவசங்கள் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குவதற்கு பதிலாக, கட்டணக் கழிப்பிடங்களை நல்லா சுத்தம் செய்து அதற்கு இலவசமா அனுமதிக்கலாமே இதுக்கு கூட காசு வாங்கனுமா? அப்படின்னு கேள்வி எழுப்பி இருக்கிறார்.. வாருங்கள் போய் பார்த்து வருவோம்...
இதோ அவருக்காக...
அடக்குறதுக்கு இதுஎன்ன
ஜல்லிக்கட்டு மாடா?
அவசரத்துல புகுந்தேய்யா
உனக்கு என்ன கேடா?
காச வைச்சிட்டு போடான்னு
சொல்லபுடாது ஐயா
கால்நிமிஷ வேலைக்கு
காசு எதுக்கு ஐயா!!
இயற்கையா வாரதுக்கு
தடைபோடாத மாமா!
இலவசமா அனுப்பிடுங்க
இன்றுமுதல் ஆமா!!
..............................
தமிழ் இவரின் நாவிலே விளையாடும். தென்றலுக்கு பொதிகையாம் தாய்வீடு போல இங்கே இவரின் விரல்நுனியில் எம் தாய் தமிழின் வாசமிடம். தமிழ்மணக்க கவிபுனைவதில் வல்லவர் எமதருமை புலவர். சா. இராமாநுசம். தமிழெழுதிய கையோடு சாலைகளில் குப்பைகள் நிறைந்திருக்க கண்டு குப்பையை அகற்ற வேண்டாமா?வெகுண்டெழுகிறார் பாருங்கள். சுத்தம் சோறு போடும் னு சொல்லிப்புட்டு காலுக்கடியில் கிடக்கும் குப்பையை அலட்சியப்படுத்தி செல்லும் ஒவ்வொரு சாமானியனையும் மண்டையில் குட்டுகிறார். வாங்க நாமும் குட்டு பட்டு வருவோம்...
இதோ அவருக்காக ...
தண்டனிட்டு வணங்குகிறோம்
தாழ்பாதம் பணிந்து!
உங்க தமிழ்ப்பாதம் பணிந்து!
கூடையொன்னு சுமந்துவந்தேன்
கூவிகூவி விற்க!
ஐயா கூவிக்கூவி விற்க!!
குப்பை பற்றி எழுதியதை
புவனமெல்லாம் விற்க!!
..............................
பெரிய நோட்டுகள் சில சமயங்களில் செல்லாது.. பேருந்தில் பயணம் செல்கையில் சரியான சில்லறைக் காசு இல்லையென்றால் நடத்துனரின் பார்வையே ஒரு மாதிரியா இருக்கும். அது போல இங்கே சில்லறைக் கவிதைகள் எழுதி பதிவுலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துள்ளார் அன்பு நண்பர் நிரோஷ். ஒரு பெண் தன் படிப்பை பாதியில் விட்டு தன் சொந்த மாமன் மகனை கட்டாயத்தின் பேரில் திருமணம் முடித்து, பின்னர் கணவன் குடிகாரன் என்று அறிந்து தன் வாழ்க்கையை நொந்து பின்னால் வரும் இளம்பெண்களுக்கு அறிவுரை சொல்வதுபோல ஒரு சுமங்கலியின் குமுறலாய் படைத்திருக்கிறார்.. வாருங்கள் போய் பருகிவிட்டு வருவோம்...
இதோ அவருக்காக ....
பெண்ணுன்னா என்னான்னு
புரியவைய்யு தாயி!
பொசகெட்ட பயலுகள
பொறிச்சிஎடு தாயி!
உன்னடிய தாங்குவதால்
உத்தரமுன்னா நினைச்சே
உலக்கையா மாறிடுவேன்
உன் குணத்த மாத்து !!
..............................
இன்னும் நிறைய பதிவர்கள் சமுதாயக் கொடுமைகளை கண்டு வெகுண்டு பதிவிட்டிருக்கலாம். அத்தனை உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்பன்
மகேந்திரன்
|
|
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலக்குற தம்பி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅட்டகாசமாக கொண்டு செல்கிறீர்கள் நண்பா.... சூப்பர் அசத்துங்கள் வாழ்த்துக்கள்... பதிவுலக நண்பர்களை அறிமுகபடுத்தும் அழகே தனி தான்... இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅசத்தல் அறிமுகங்கள்
ReplyDeleteநச்சென்ற நான்கம்நிலை
ReplyDeleteசமுதாய அக்கரை பற்றிய நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய ஆசிரியர் மகேந்திரனுக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும்.
ReplyDeleteஎன்னைப்போன்று அறிமுகமாகிய மற்ற அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி இனிதே நடைபெற தங்களுக்கும் வாழ்த்துக்கள் திரு மகேந்திரன்.
என்னையும் வலைச்சரத்தில்
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு நன்றி
என்னோடுஅறிமுகம் செய்யப்பட்ட
பதிவர்கள் அனைவருமே
சமூகச் சீர்கேடு ஒழிய அழகிய பதிவைத்
தருகிறவர்கள்
அவர்களை மிகச் சரியாக தேர்ந்தெடுத்து
அழகிய கவிமூலம்
அறிமுகம் செய்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம3
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கும் நண்பரே
ReplyDeleteசகோ!
ReplyDeleteதாங்கள் என்னை வலைச்சரத்தின்
வாயிலாக, இன்று அறிமுகப் படுத்தி
யுள்ள அன்புக்கு யான் என்றும்
கடமைப்பட்டுள்ளேன்
அன்பிற்கும் உண்டோ
அடைக்குந் தாழ் என்ற குறளுக்கு
ஏற்ற விடையாக அமைந்தது
தங்களின் அறிமுகச் செயல்
நன்று மகி!
புலவர் சா இராமாநுசம்
என் மனமகிழ்ந்த நன்றிகள் நண்பா...! அறிமுகங்கள் அத்தனையும் அழகிய கவிதைகள் வாழ்த்துக்கள்..!
ReplyDeleteவெகு அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருமே சமுதாய சிந்தனை மிக்க சிற்பிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம் மாப்பிள நான் அடிக்கடி பின்னூட்டம் போடும் எனக்கு விருப்பமான பதிவர்களை அறிமுகபடுத்தியுள்ளீர்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
ReplyDeleteமகேந்திரன் இப்படி ஒரு அழகான கவியுடன், அருமையான வார்த்தைகள் கோர்த்து என்னை அறிமுக படுத்திய அழகை என்ன சொல்லி பாராட்ட தெரியல...
ReplyDeleteஇந்த கவியை அப்படியே எடுத்து என் பிளாக்கில் போட்டுவிட்டேன். நன்றிகள் பல.
உங்களால் அறிமுகம் பெற்ற அனைவரும் சிறந்த பதிவர்கள்...அவர்களை இனி தொடருகிறேன்...இந்த அறிமுகங்களை அறிய செய்தமைக்கு மீண்டும் நன்றிகள்.
உங்களின் சீரிய பணி தொடரட்டும்...
நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅசத்தல் அசத்தல் அசத்தல்...
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா ஊரு சுத்தி பார்த்துட்டு ஓய்வா திண்ணைல உட்கார்ந்துகிட்டு நாட்டு நடப்பை பத்தி பேசலாம் ஹுஹும் இல்ல இல்ல சாடலாம் வாங்க வாங்க....
எல்லாரும் வந்தாச்சா... ரமணி சார், காந்தி, கௌசல்யா, நிரோஷ், ராமானுசம் ஐயா, கோகுலு, ரெவரி... ஹப்பா வாங்கப்பா வாங்க... நாலு பேருக்கு நல்லது இதுன்னு பட்டா அதை தைரியமா திண்மையா எடுத்துரைக்க உங்களை போல எல்லாருமே முன் வரணும்....
அருமையான அசத்தலான பகிர்வு இது மகேந்திரன்.. அமைதியா இருக்கீங்க. எழுத ஆரம்பிச்சா அதரகளம் தான் போல.....
அருமையான அறிமுகங்கள்..... நான் விரும்பி படிக்கும் பதிவர்கள் இவர்கள் எல்லோரும்....ரமணி சார் கண்டிப்பா இதுல இருப்பார்னு நினைத்தேன். அதே போல இருக்கார்...
அன்பு வாழ்த்துகள் மகேந்திரன்...
அன்பு வாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும்...
ஆல் பாஸ்
ReplyDelete///suryajeeva said...
ReplyDeleteஆல் பாஸ்/////
ரிப்பீட்டு.....
என்னை அறிமுகப்படுத்திய அருமைச்சகோதரர் மகேந்திரனுக்கு எனது நன்றி...
ReplyDeleteஅறிமுகமாகிய மற்ற அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...உங்கள் எழுத்து உங்கள் அனைவருக்கும் ஆத்ம திருப்தியும்...மற்றவர்க்கு மகிழ்ச்சியும் நீண்ட நாள் தர
என் பிரார்த்தனைகளும்...
நம்மால் முடிந்தவரை நடப்பவைகள் தவறு எனும் பட்சத்தில் எதிர்க்குரல் கொடுக்கும் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்,.எனது அறிமுகத்திற்கு நன்றி.அனைவரையும் உங்கள் அழகுத்தமிழில் அறிமுகப்படுத்தியது அருமை! நண்பரே
ReplyDeleteஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகான தொகுப்புகள் நண்பரே
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
அனைத்து அறிமுகங்களுக்கும்> உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரா!.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நான் தொடர்ந்து படிக்கும் பதிவர்கள்..
ReplyDeleteசமூக அவலங்களைப் படம்பிடித்துக்காட்டும் பதிவர்கள்.
விழிப்புணர்வளிக்கும் பதிவர்கள்..
அறிமுகம் அருமை நண்பா..
பதிவுலகின் ஒளிவிளக்குகள்!!
தொடர்க.
அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புநிறை நண்பர் கருன்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சௌந்தர்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜேஷ்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராம்வி
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமணி
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் அரசன்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நிரோஷ்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை ஐயா வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை காட்டான் மாமா
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கௌசல்யா,
ReplyDeleteதங்களின் இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கோவை2தில்லி
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி மஞ்சுபாஷிணி,
ReplyDeleteதங்களின் இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெளங்காதவன்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரெவெரி
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கோகுல்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சண்முகவேல்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமேஷ்
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்.
ReplyDeleteதங்களின் இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை முனைவரே..
ReplyDeleteதங்களின் இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.