ஊருக்கு நல்லது சொல்ல...
➦➠ by:
அறிமுகம்,
சுயபுராணம்,
மிடில் கிளாஸ் மாதவி
என்னைத் தெரியுமா?
என்னை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்கலாம். ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பணிக்குச் செல்லும் பெண்மணி. மனைவியாக, இரண்டு மகன்களுக்கு அன்னையாக, வயதான ஒரு தாய்க்கு மகளாக, புகுந்த வீட்டுக்கு அவர்கள் வீட்டுப் பெண்ணாக, இதற்கு மேல் நேர்மையான, உண்மையான உழைக்கும் பெண்மணியாக ஒரு சராசரி குடும்பத் தலைவி. சுருக்கமாக, உங்களைப் போல ஒருத்தி!
மகாகவி பாரதியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பாடல்களை மிகவும் ரசிப்பேன். அடுத்து எழுத்தாளர் கல்கியின் எழுத்துகளை முடிந்தவரை திருப்பித் திருப்பி சுவாசித்து வாசித்திருக்கிறேன். எழுத்தார்வத்துக்கு இவர்கள் காரணம். மகாகவிக்கு சமர்ப்பணமாக எனக்குப் பிடித்த அவர் பாடல் முதலில்:
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்
மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்
எனக்கு இங்கே எழுத வாய்ப்பளித்த வலைச்சரக் குழுவினருக்கு நன்றி!
சென்ற வாரம் ஆசிரியப் பணியைச் சீரிய வகையில் செய்திட்ட திரு மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்! குவிக்கும் கவிதைக் குயிலாகச் சிறந்து பணியாற்றினார்!
இனி, என் வலைப்பூ பற்றி -
எனக்கு வலைப்பூவை அறிமுகம் செய்து, நான் எழுத ஆரம்பித்தது எப்படி என்பதை இந்தப் பதிவில் பாருங்கள். இதில் என் பெயர்க் காரணமும் இருக்கும். சில சமயம், ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படி?, மொக்கை -ஆராய்ச்சி என்று நகைச்சுவையாக எழுதுவேன். சில சமயம், உயில் எழுதுவதின் முக்கியம், தற்கொலையைத் தவிர்ப்போம் போன்ற பதிவுகளும் இடுவேன். காரட் கீர், புளிமிளகாய் ஊறுகாய் போன்ற சமையல் குறிப்புகளும் உண்டு. பல்வேறு சமயங்களில் என்னைப் பாதித்த விஷயங்களைத் தொகு(டு)த்து கதம்பம் என்றும் பதிவிடுகிறேன், (கொடுத்திருக்கும் லிங்க் சமீபத்தியது)
சென்ற வாரம் ஆசிரியப் பணியைச் சீரிய வகையில் செய்திட்ட திரு மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்! குவிக்கும் கவிதைக் குயிலாகச் சிறந்து பணியாற்றினார்!
இனி, என் வலைப்பூ பற்றி -
எனக்கு வலைப்பூவை அறிமுகம் செய்து, நான் எழுத ஆரம்பித்தது எப்படி என்பதை இந்தப் பதிவில் பாருங்கள். இதில் என் பெயர்க் காரணமும் இருக்கும். சில சமயம், ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படி?, மொக்கை -ஆராய்ச்சி என்று நகைச்சுவையாக எழுதுவேன். சில சமயம், உயில் எழுதுவதின் முக்கியம், தற்கொலையைத் தவிர்ப்போம் போன்ற பதிவுகளும் இடுவேன். காரட் கீர், புளிமிளகாய் ஊறுகாய் போன்ற சமையல் குறிப்புகளும் உண்டு. பல்வேறு சமயங்களில் என்னைப் பாதித்த விஷயங்களைத் தொகு(டு)த்து கதம்பம் என்றும் பதிவிடுகிறேன், (கொடுத்திருக்கும் லிங்க் சமீபத்தியது)
சிறுகதைகளுக்கு :தண்ணி, , 50-50, மொழிமாற்றக் கதை... கவிதையிலும் கைகளைச் சுட்டுக் கொண்டிருக்கிறேன் மூன்று வார்த்தைகள், சமமான கல்வி { ;-( }; என் முதல் சிறுகதை அனுபவத்தையும் பதிவிட்டிருக்கிறேன்! லாஜிக்கா, மொக்கையா என்றே தெரியாமல் சில சமயம் கேள்விகள் கேட்பதுமுண்டு! எனது பதிவுகளில் அதிகம் படிக்கப்பட்டது இந்தியா தோற்காது! - கிரிக்கெட்டும் நானும் மற்றும் சொந்த சரக்கில்லையும் தாம்!
என்னை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் எழுத வைத்த தோழமை உள்ளங்களுக்கு நன்றியாக 'தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?' சக பதிவர்களுக்காக நகைச்சுவையாக ச்சும்மா- காமெடிக்கு!
சுய புராணம் எனக்கு பழக்கமில்லை (?!!) எனவே அறிமுகம் போதும் என நினைக்கிறேன். ஏழு நாட்கள் உங்களுடன் என் பார்வையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பளித்தவர்களுக்கு மறுபடியும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை வரவேற்று வாழ்த்தளித்த உள்ளங்களுக்கும் நன்றி!
ஏழு என்றவுடன் என்ன ஞாபகம் வருகிறது? என்னைப் போன்ற ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு அது ஒரு மாய எண். ஆனால், எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் உடனே ஞாபகத்துக்கு வந்தது, வானவில் தான். என் பார்வையை வலையுலகில் வலைச்சர ப்ரிசம் (prism) மூலம் பார்ப்பதில் வானவில்லாகப் பதிவர்கள் தெரிகிறார்கள். வானவில்லின் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டாம்! உதாரணத்துக்கு வயலட் நிறம் மனித நேயத்தையும் தெய்வீகத் தன்மையையும் காட்டுகிறதாம்!
என் பார்வையில் வானவில்லாக வர்ணஜாலம் காட்டும் பதிவர்களை நாளை முதல் காண்போம்!
|
|
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து...//
ReplyDeleteஅருமையான என்க்குப் பிடித்த பாரதி படைப்புடன் ஆரம்பித்திருக்கும் தங்கள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..
அருமையான அறிமுகத்துடன் அமர்களமாக வலைச்சர பணியைத்தொடங்கி இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteமகாகவி பாரதி பற்றி எழுதி மிக அருமையான அறிமுகம்.
ReplyDeleteவானவில் வண்ணம் அனைவருக்கும் பிடிக்கும்.வாழ்த்துக்கள்.
வருக வருக...
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteவருக! தருக! பெறுக!
ReplyDeleteஅனைவரின் வாழ்த்துக்களையும்
முதற்கண்
என் வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
ஆசிரியருக்கு வாழ்த்துகள்.. ஆரம்பமே அமர்க்களம் :-)
ReplyDeleteவானவில் மினுமினுக்கும் அறிமுகம் நன்று. பணி சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
மஹாகவி பாரதியாரின் பாடலுடன் ஆரம்பித்துள்ள இந்த சுய அறிமுகப்படலம், சுவையாகவே உள்ளது.
ReplyDeleteவெற்றி நடை போடுங்கள். வெற்றிவாகை சூடுங்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk
புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சரத்தில் இவ்வாரம் ஆரவாரமாக எனது நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த வார வலைச்சர ஆசிரியராக பொருப்பேற்றுள்ல குடும்பத்தலைவிக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteடீச்சருக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎளிமையான பெண்ணிடமிருந்து வந்து எளிய அறிமுகம்.. அருமைப்பா.. பாரதி என்றாலே அவர் கம்பீரமும் கண்ணம்மாவென்று உருகி பாடும் பாட்டும் சட்டென நினைவில் வந்து முட்டும்... நானும் பாரதியின் ரசிகையே...
ReplyDeleteஅழகிய அறிமுகம்.... ஏழு நாட்களும் அருமையாய் உங்கள் ஆசிரியப்பணி தொடர என் அன்பு வாழ்த்துகள் மாதவி...
வருக வருக சகோதரி,
ReplyDeleteபாரதியின் வார்ப்பிலிருந்து
முன்னுரை கொடுத்து பணியேற்கும்
தங்கள் பணிசிறக்க நல்வாழ்த்துக்கள்.
உங்கள் படைப்புகள் சிலவற்றைப் பார்த்தேன்..
கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் படிக்கிறேன்.
வானவில்லின் வண்ணங்களை வைத்து
பதிவர்களை நீங்கலரிமுகப்படுத்தப்போகும் முயற்சி
புதுமை.
பாரதியின் புதுமைப் பெண்ணாய் ஒளிர்ந்திடுக!!
அன்பன்
மகேந்திரன்
சுவாரஸ்யமான அறிமுகத்துடன் களம் இறங்கியிருக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteநிறம்
ReplyDeleteஅருமையான அறிமுகத்துடன் அமர்களமாகபணியைத் தொடங்கி இருக்கின்றீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
இந்த வாரம் சிறந்த வாரமாக அமைய வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள்! கலக்குங்க.
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறப்பாக அமையட்டும்.
ReplyDeleteதங்கள் வலைச்சர ஆசிரியர் பணி
ReplyDeleteவண்ணமயமாக இருக்கும் என்பதை
மிக அழகாகக் கோடிட்டுக் காட்டிவிட்டீர்கள்
தொட்ர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
ஆசிரியத் தோழிக்கு வரவேற்பும் வாழ்துக்களும்.
ReplyDeleteவருக வருக..
ReplyDeleteநேத்துதான் உங்க வலைப்பூவில் இணைந்தேன்.இன்னைக்குப் பார்த்தால் வலைச்சரம் ஆசிரியர்.மிக்க சந்தோசம் அடைந்தேன்!
ReplyDeleteஅறிமுகமே அசத்தல் இனி அறிமுகப்படுதப்போகிரவர்களும் அசத்துவார்கள் என நம்புகிரேன்!
வாழ்த்துக்கள்!
@ இராஜராஜேஸ்வரி - வாழ்த்துக்களுக்கு நன்றி
ReplyDelete@ ஸாதிகா -
ReplyDelete@ தமிழ் உதயம்-
@ Jaleela Kamal - வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@ வெளஙகாதவன் - வரவேற்புக்கு நன்றி!
ReplyDelete@ விக்கியுலகம் - வாழ்ததுக்களுக்கு நன்றி
@ புலவர் சா.இராமாநுசம் - வாழ்த்துககும் ஊக்கத்துக்கும் நன்றி
@ அமைதிச்சாரல் - ஆசிரியராக வேண்டும் என்பது என் சின்ன வயது ஆசை - அதான்! :-)
ReplyDelete@ அமைதிச்சாரல் - ஆசிரியராக வேண்டும் என்பது என் சின்ன வயது ஆசை - அதான்! :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஆரம்பமே அமர்க்களமாக இருக்கு.பாராட்டுக்கள்.
ReplyDelete@ kavithai (kovaikkavi) வானவில்லை ரசித்ததற்கு நன்றி
ReplyDelete@ வை. கோபாலகிருஷ்ணன்- பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
ReplyDelete@ Lakshmi -
ReplyDelete@ சேட்டைக்காரன் -
வாழ்த்துக்களுக்கு நன்றி
@ காந்தி பனங்கூர் - நன்றி
ReplyDelete@ இந்திரா - டீச்சரா?! ஹோம்வொர்க் முடிச்சுட்டீங்களா? :-)
@ மஞ்சுபாஷினி - அந்தக் கால புகைப்படங்களில் கணவன் உட்கார்ந்திருக்க, மனைவி அருகே நின்று கொண்டிருப்பார்! இங்கே நான் போட்டிருக்கும் பாரதியின் (கலர் கொடுக்கப்பட்ட) புகைப்படத்தைப் பார்த்தீர்களா?!
ReplyDelete@ மகேந்திரன் - உங்கள் அழகு வாழ்த்துக்களுக்கு நன்றி
ReplyDelete//வானவில்லின் வண்ணங்களை வைத்து பதிவர்களை நீங்கலரிமுகப்படுத்தப்போகும் முயற்சி
புதுமை.//
வானவில்லைப் போன்று பலதரப்பட்ட பதிவர்களை அறிமுகம் செய்யலாம் என்று எண்ணம்!
@ ஹுஸைனம்மா - நன்றிகள்
ReplyDelete@ suryajeeva - /நிறம்/? :-(
@ சே.குமார் -
ReplyDelete@ ஸ்ரீராம் -
@ மோகன் குமார் -
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்
@ கோவை2தில்லி -
ReplyDelete@ ramani-
@ raji-
@ காட்டான்-
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@ கோகுல் -
ReplyDelete@ ஆர்.சண்முகம் -
@ asiya omar-
வாழ்த்தளித்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி
வாழ்த்துகள் மிடில்கிளாஸ் மாதவி... வானவில்லின் வர்ணங்கள் ..... எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது தோழி.... வாரத்தின் மற்ற பகிர்வுகளுக்காகக் காத்திருக்கிறேன்...
ReplyDeleteமீண்டும் வாழ்த்துகள்.
நிறம் மனித நேயத்தையும் தெய்வீகத் தன்மையையும் காட்டுகிறதாம்!//
ReplyDeleteஆஹா எனக்கு பிடித்த கலர்... அருமையான உங்கள் பதிவை பற்றி முன்னுரை.. பாரதியின் பாடல் வரியுடன் தொடங்கிய விதம் அருமை சகோதரி... கலக்குங்க...
@ வெங்கட் நாகராஜ் - //எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது தோழி// மிடில் கிளாஸ்னு ஞாபகம் வச்சுக்கங்க! :-))
ReplyDelete@ மாய உலகம் - உங்களுக்குப் பிடிச்ச கலர் உங்கள் குணத்தைக் காண்பிக்கும்!! :-)
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
@ மஞ்சுபாஷினி - அந்தக் கால புகைப்படங்களில் கணவன் உட்கார்ந்திருக்க, மனைவி அருகே நின்று கொண்டிருப்பார்! இங்கே நான் போட்டிருக்கும் பாரதியின் (கலர் கொடுக்கப்பட்ட) புகைப்படத்தைப் பார்த்தீர்களா?!
ReplyDeleteஓ பார்த்தேன் மனைவிக்கு சமமாய் தானும் நின்றே தோள் மேலே கைப்போட்டு என்ன ஒரு தைரியம் பாருங்க அந்த காலத்திலேயே பாரதிக்கு :)
மனைவியை சமமாய் பாவிக்கும் பாரதியை பிடிக்காமல் இருக்குமாப்பா யாருக்கும்???
பார்த்தேன் பார்த்தேன் ரசித்தேன் ரசித்தேன்..
அன்பு நன்றிகள் மாதவி....