கனவு மெய்ப்பட வேண்டும்!
➦➠ by:
ஐந்தாம் நாள்,
மிடில் கிளாஸ் மாதவி,
வலைச்சரம்
இந்த முறை நவராத்திரியில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை தான்! கோயில்களில் கூட்டம் நெரியும்! நாம் நவராத்திரி நாயகியரை இங்கேயே தரிசிப்போம்!
என் அம்மாவுக்காக, பாரதியாரின் இன்னுமொரு நவராத்திரிப் பாட்டு இன்று இதோ: (இல்லையென்றால் உம்மாச்சி கண்ணைக் குத்தாட்டாலும் என் அம்மா என்னைத் திட்டுவார்! பாட்டு மூன்று தேவியரையும் குறித்துப் பாடுவதால், கொஞ்சம் நீளம்!)
தலைப்பைப் பார்த்து, திருப்பி நேற்றைய கனவுக்குப் போய் விட்டேனோ என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் கனவு மெய்ப்பட்டால் நன்றாகத் தான் இருக்கும்! இன்றைய என் பதிவர்களைப் பற்றிப் பார்ப்போம்! ஒவ்வொருவர் வலைப்பூ எழுதும் போதும் தம்மிடம் மற்றவர்களுடன் பகிரத்தக்க விஷயங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் எழுதுகிறார்கள். எழுதும் ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கும்! அவரவர் கனவு கட்டாயம் மெய்ப்பட வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் மேலான பரம்பொருளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்மையே நினைத்தும் செய்தும் வந்தால், நல்ல கனவெல்லாம் பலிக்கும் என்பதை அனுபவபூர்வமாக நம்மில் பலர் உணர்ந்தும் இருப்போம்!
முதலில் யாரைப் பற்றிப் பதியலாம் என்று 'உட்கார்ந்து யோசித்த' போது, மனங்கவரும் நடிகர் நாகேஷின் படத்தை அடையாளமாக வைத்திருக்கும் சேட்டைக்காரன் நினைவு வந்தது! 'இங்குள்ள மொக்கைகளைப் படிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!' என்று சொல்வதைத் தாண்டி தைரியமாக உள்ளே நுழையலாம்! பொருத்தமாக அன்னை காளிகாம்பாள் பற்றி அவர் எழுதிய பாடல்கள் அழகு! அவருடைய 'சேட்டை' பதிவுகளுக்கு அறிமுகமே தேவையில்லை! சமீபத்தியது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
'நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !' - யாரைப் பற்றிச் சொல்கிறேன் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் - பத்திரிகை உலகிலே எழுத்தாளராகப் பிரபலம் ஆன ரிஷபன் - அவர் பதிவுகள் அத்தனையுமே அருமை! - கதையாகட்டும், கவிதையாகட்டும், ஒரு ரிஷபன் டச்சோடு இருக்கும்! சமீபத்திய அவர் இடுகைகள் - குட்டி நாய் சிறுகதை - இதில் யார் பரிதாபத்துக்குரியவர்? அன்பின் மொழி - கவிதை - கவிதை!!
கற்றலும் கேட்டலும் என்று அழகுப் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் ராஜி, எழுத்தின் பல துறைகளிலும் எழுதுகிறார்; கதை, கட்டுரை, ஆன்மிகம் என்று எழுதி வந்த இவர், கவிதைகளிலும் ஜமாய்க்கிறார்! பல வருடங்களுக்கு முன் வீதியில் வந்த மிட்டாய்க்காரர்கள் போன்ற தொலைந்த தொழிலாளிக்கு வருந்தும் அவருடைய ஒரு கவிதை! உறவுகளைப் பற்றி நெகிழச் செய்யும் ஒரு கதை! அழகில்லாத ஓவியமா-இதில் ஜெய்ப்பூர் ஓவியங்களை ரசிக்கலாம்!
அய்யம்மாளின் அழகுத் தமிழ் நினைவலை - இந்த வலைப்பூவில் எழுதி வரும் அய்யம்மாள் ஒரு புதிய பதிவர்! சில சமையல் குறிப்புகள் எழுதியிருக்கிறார். பூரண கொழுக்கட்டையும் உண்டு; பொள்ளாச்சி சிக்கன் பிரியாணியும் உண்டு இவர் இடுகைகளில்! இவர் ‘தெய்வகுளத்து காளியம்மன்’ என்ற பெயரில் ஒரு கோவிலைப் பற்றியும் அழகாகப் பகிர்ந்திருக்கிறார்.
'ஃப்ரீயா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க... ' என்று அதிரடியாகச் சொல்லும் ஸ்வர்ணரேக்கா, பூசலம்பு என்ற வலைப்பூவின் சொந்தக்காரர். நடுவில் காணாமல் போயிருந்த(!) அவருடைய சமீபத்திய பதிவு பார்க்க, கேட்கப் பிடிக்காத பாடல்கள்! சரியாகத் தான் படித்தீர்கள், அது பிடிக்காத பாடல்கள் தான்!
Mano - !¡...என் செய்வேன்...¡! என்ற வலைப்பூவைப் பார்ப்போம். டைரக்டர் கே.பாலச்சந்தர் பற்றி ஒரு இடுகையும் எழுத்தாளர் சுஜாதாவின் மின்னூல்களை அளித்து ஒரு இடுகையும் என்னை மிகவும் ஈர்த்தன.
கொஞ்சம் கனவு,கொஞ்சம் கண்ணீர்,கொஞ்சம் புன்னகை,நிறைய ஆசைகள் கொண்டவன்.. உலகையும் மனிதர்களையும் ரசிப்பவன்.. என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் Raazi !..யாதும் ஊரே...! என்ற பெயரில் ஜூலை 2011 முதல் எழுதுகிறார். இவருடைய லேடிஸ் பர்ஸ்ட் என்ற நகைச்சுவைப் பதிவு வலை மேய்கையில் கண்ணில் பட்டது.
பல நிறம் கொண்ட வானவில் போன்று விதவிதமான பதிவர்களின் இடுகைகளை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். வானவில்லின் ஐந்தாவது நிறமான மஞ்சள் ஆக்கசக்தியின் வெளிப்பாடாம்! இந்த நிற உடைகளை அணிந்து கொண்டால், எந்தப் பிரச்னையிலும் தீர்க்கமாக ஆலோசித்துத் தெளிவான முடிவை எடுக்க முடியுமாம்!
அய்யம்மாளின் அழகுத் தமிழ் நினைவலை - இந்த வலைப்பூவில் எழுதி வரும் அய்யம்மாள் ஒரு புதிய பதிவர்! சில சமையல் குறிப்புகள் எழுதியிருக்கிறார். பூரண கொழுக்கட்டையும் உண்டு; பொள்ளாச்சி சிக்கன் பிரியாணியும் உண்டு இவர் இடுகைகளில்! இவர் ‘தெய்வகுளத்து காளியம்மன்’ என்ற பெயரில் ஒரு கோவிலைப் பற்றியும் அழகாகப் பகிர்ந்திருக்கிறார்.
'ஃப்ரீயா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க... ' என்று அதிரடியாகச் சொல்லும் ஸ்வர்ணரேக்கா, பூசலம்பு என்ற வலைப்பூவின் சொந்தக்காரர். நடுவில் காணாமல் போயிருந்த(!) அவருடைய சமீபத்திய பதிவு பார்க்க, கேட்கப் பிடிக்காத பாடல்கள்! சரியாகத் தான் படித்தீர்கள், அது பிடிக்காத பாடல்கள் தான்!
Mano - !¡...என் செய்வேன்...¡! என்ற வலைப்பூவைப் பார்ப்போம். டைரக்டர் கே.பாலச்சந்தர் பற்றி ஒரு இடுகையும் எழுத்தாளர் சுஜாதாவின் மின்னூல்களை அளித்து ஒரு இடுகையும் என்னை மிகவும் ஈர்த்தன.
கொஞ்சம் கனவு,கொஞ்சம் கண்ணீர்,கொஞ்சம் புன்னகை,நிறைய ஆசைகள் கொண்டவன்.. உலகையும் மனிதர்களையும் ரசிப்பவன்.. என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் Raazi !..யாதும் ஊரே...! என்ற பெயரில் ஜூலை 2011 முதல் எழுதுகிறார். இவருடைய லேடிஸ் பர்ஸ்ட் என்ற நகைச்சுவைப் பதிவு வலை மேய்கையில் கண்ணில் பட்டது.
பல நிறம் கொண்ட வானவில் போன்று விதவிதமான பதிவர்களின் இடுகைகளை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். வானவில்லின் ஐந்தாவது நிறமான மஞ்சள் ஆக்கசக்தியின் வெளிப்பாடாம்! இந்த நிற உடைகளை அணிந்து கொண்டால், எந்தப் பிரச்னையிலும் தீர்க்கமாக ஆலோசித்துத் தெளிவான முடிவை எடுக்க முடியுமாம்!
டிஸ்கி: பேரன்புடைய வலையுலகப் பெருந்தகையீரே! வலைச்சரப் பதிவுகள் தமிழ் மணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள்/உங்களுக்குப் பிடித்த பதிவுகள் பலரைச் சென்றடைய ஓட்டுப் போட மறக்காதீர்கள்! நன்றி!
|
|
அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteஅறிமுகங்கள் அற்புதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்றைய ஒருசில அறிமுகங்களால்? [தவறோ!]
ReplyDeleteஅடையாளம் காட்டப்பட்டவர்களால்! [இது தான் சரியோ!!]
ஏற்கனவே அழகான அந்த வானவில்லே இன்று அழகுக்கு அழகூட்டுவதாக அமைந்து விட்டது.
அனைவருக்கும்,
திருமதி மி.கி.மாதவிக்கும்
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
vgk
கனவு மெய்ப்படட்டும்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும்!சிறப்பாக செல்கிறது.
//வானவில்லின் ஐந்தாவது நிறமான மஞ்சள் ஆக்கசக்தியின் வெளிப்பாடாம்! இந்த நிற உடைகளை அணிந்து கொண்டால், எந்தப் பிரச்னையிலும் தீர்க்கமாக ஆலோசித்துத் தெளிவான முடிவை எடுக்க முடியுமாம்!//
ReplyDeleteகலைஞர் முடிவெடுக்க திணறுவதை பார்த்தால் அப்படி நினைக்க தோன்றவில்லையே
அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteஅறிமுகத்திற்கு ரொம்ப நன்றிங்க.. என் மொக்கை பதிவுகளையும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.. மனசு பூரிப்படைகிறது,
ReplyDeleteமற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்..
அனைவரும் அறிந்த முகங்கள் தான் என்றாலும், உங்கள் தொகுத்த முறை சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்று 300-வது இடுகையை எழுதுமளவுக்கு என்னை உற்சாகப்படுத்தியவர்கள், உங்களைப் போலவே என்னை வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதியவர்கள் தான் என்றால் அது மிகையாகாது. உங்களது பெருந்தன்மைக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்! வலைச்சரத்தில் மீண்டும் ஒரு முறை எனது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
@ வெங்கட் நாகராஜ் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDelete@ கடம்ப வனக் குயில் - உங்கள் பெயரே அழகு! (பின்னணியில் ம்யூசிக்!)
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
@ வை.கோபாலகிருஷ்ணன் - அனைவரும் உங்களுக்குத் தெரிந்தவர்களாகிப் போனார்களா?!:-)
ReplyDeleteகருத்திட்டமைக்கு நன்றி!
@ கோகுல் - வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ReplyDelete@ suryajeeva - //கலைஞர் முடிவெடுக்க திணறுவதை பார்த்தால் அப்படி நினைக்க தோன்றவில்லையே// மஞ்சளோட சக்தியே அடிபடற மாதிரி அவ்ளோ குழப்பம் போல! நடுவில் விட்டு விட்டு திருப்பிப் போட்டதைப் பார்த்தால் ஏதோ சக்தி இருக்கற மாதிரி தெரியுதே?!!
ReplyDelete@ மகேந்திரன் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
ReplyDelete@ Raazi - வாழ்த்துக்கள்
ReplyDelete@ சத்ரியன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@ சேட்டைக்காரன் - ரொமபத் தன்னடக்கத்தோடு சொல்லியிருக்கீங்க! இத்தனை பேரைக் கவரும் மாதிரி எழுதுகிறீர்களே! மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDelete@ கோவை2தில்லி - உங்கள் மேலான ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தி பாராட்டும் தந்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றி..
ReplyDeleteஇந்தப் பெருமை எல்லாம் என்னை உற்சாகப்படுத்தி எழுத வைத்து வரும் சக பதிவாளர்களுக்கே சமர்ப்பணம்.
எல்லோருடைய கனவும் மெய்ப்பட வேண்டும் என்பது உங்கள் நல்லமனதை காட்டுகிறது. ஆனால், மெய்யாகி விட்டால் வேறு வினையே வேண்டாம்.எனக்கு எல்லா சாமிகளையும் என்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும்!
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.பிற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவானவில் நிறங்களின் விளக்கம் மிக அருமை
@ ரிஷபன் - //இந்தப் பெருமை எல்லாம் என்னை உற்சாகப்படுத்தி எழுத வைத்து வரும் சக பதிவாளர்களுக்கே சமர்ப்பணம்.// நிறைகுடம் தளும்பாது!
ReplyDelete@ ராஜன் - //எல்லோருடைய கனவும் மெய்ப்பட வேண்டும் என்பது உங்கள் நல்லமனதை காட்டுகிறது. ஆனால், மெய்யாகி விட்டால் வேறு வினையே வேண்டாம்.எனக்கு எல்லா சாமிகளையும் என்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும்!//
ReplyDeleteகவலையே படாதீங்க, ஒரு கனவு பலித்தால் அடுத்த கனவு ஆட்டமாடிக்கா வந்துடும்! :-))
@ raji - உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்!
ReplyDeleteதெரிந்தவையும் தெரியாதவையும் சரி விகிதத்தில்தான் தருகிறீர்கள். நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteஎன்னையுமா.. ? சந்தோஷமா இருக்குங்க மாதவி..
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல...
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உம்மாச்சி கண்ணு குத்தாதுப்பா கண்டிப்பா... என்ன அழகு ஹப்பா மூணு தேவியரும் அத்தனை அழகு....
ReplyDeleteவானவில்லின் அமர்க்களம் தெரிகிறதே...
அருமையான பகிர்வுப்பா...
உங்கள் மகன்களுக்கு என் அன்பு ஆசிகள் என்றென்றும்பா.....
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் ( அட ரிஷபன் உண்டு அல்லோ ) என் அன்பு வாழ்த்துகள்...
அருமையான பகிர்வுக்கு என் அன்பு வாழ்த்துகள் மாதவி.... சுண்டல் எனக்கு கனகச்சிதமா ஜோரா கிடைச்சுதே... அம்மாட்டயும் சொல்லிட்டேன் இனி நம்ம வீட்டிலும் இப்படி ஒரு சுண்டல் சாலட் எப்படியும் ஒகே கண்டிப்பா உண்டு இனி....
காஃபி டீ குடிக்கிற பழக்கமே இல்லப்பா எனக்கு.. இந்தாங்க என் காஃபியும் உங்களுக்கு தான்....
அன்பு வாழ்த்துகள் மாதவி எளிமை எளிமை நீங்க....
குட்!!
ReplyDeleteஇன்றைய அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள்... பாரதி பாட்டுடன் அறிமுகம் அருமை
ReplyDeleteஅறிமுகம் தன்னை அழகுற செய்தீர்
ReplyDeleteஅறிந்திட அனைவரும் பெருமை எய்தீர்
செறிவுள வலைபல செப்பினீர் நன்றே
செந்தமிழ் வளர்க்கும் பணயிது நன்றி
புலவர் சா இராமாநுசம்
பகல்ல கனவு கண்டா பலிக்குமுன்னு சொல்வாங்க ....!! ( நா தலைபை சொன்னேன் ஹா..ஹா.. ) :-)))
ReplyDeleteநல்ல அலசல் + அறிமுகம் = சூப்பர் பதிவு :-)
@ ஸ்ரீராம் - //தெரிந்தவையும் தெரியாதவையும் சரி விகிதத்தில்தான் தருகிறீர்கள். நல்ல அறிமுகங்கள்.// மிக்க நன்றி!
ReplyDelete@ Rathnavel - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
ReplyDelete@ மஞ்சி பாஷினி - உங்கள் கருத்துக்குக்களு ரொம்ப நன்றி!
ReplyDelete@ சி.பி.செந்தில்குமார் - /குட்/ - நன்றி சார்!
ReplyDelete@ மாய உலகம் - //இன்றைய அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள்... பாரதி பாட்டுடன் அறிமுகம் அருமை// ரொம்ப நன்றி!
ReplyDelete@ புலவர் சா இராமாநுசம் - /அறிமுகம் தன்னை அழகுற செய்தீர்
ReplyDeleteஅறிந்திட அனைவரும் பெருமை எய்தீர்
செறிவுள வலைபல செப்பினீர் நன்றே
செந்தமிழ் வளர்க்கும் பணயிது நன்றி
/
ஐயா, என்னை மெய்மறக்கச் செய்து விட்டீர்! மிக்க நன்றி!
@ ஜெய்லானி - //பகல்ல கனவு கண்டா பலிக்குமுன்னு சொல்வாங்க ....!! ( நா தலைபை சொன்னேன் ஹா..ஹா.. ) :-)))//
ReplyDelete:-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
என்னையும், என் பூசலம்புவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... நன்றி...
ReplyDeleteAs my Laptop almost dead I m unable to blog for last few weeks..
ReplyDeleteThanks for adding me in this post.
Hope I will be back within 2-3 months...