07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 21, 2011

மூன்றாம்நிலை மாடம்!!




கொக்கரிக்கும் சேவலொன்னு
குயிலுபோல கூவுச்சு!
ஜொலிஜொலிக்கும் நட்சத்திரம்
காலையில எழுப்புச்சி!
ரோட்டோர புளியமரம்
கொடுக்காப்புளி காச்சுது!!
பிறந்ததுமே குழந்தையுமே
தாலாட்டு பாடுச்சு!
வருடமொரு பத்துபோக
விளைச்சலங்கே கிடைச்சுது!!

என்னடா இது என்னவோ புலம்புரான்னு பார்க்குறீங்களா?
ஊரூரா சுத்தினாலும், சீமையில பொழைப்பு நடத்த ஏழு கடல் தாண்டினாலும். சொந்த ஊர நினைச்சிபுட்டா நெஞ்செல்லாம் நிறைஞ்சிவிடும். அப்படி சொந்த ஊரைப்பத்தி பேசுறப்போ இப்படித்தான்
கொஞ்சம் அதிகப்படியா பேசுவோம். அதைத்தான் முதல்ல சொன்ன பாட்டில சொன்னேன்.




அதுவும் பெண்கள், பிறந்த ஊர் பெருமை பேசினா அப்பப்பா நாலுகாது வேணும் கேட்க. அவர்களை நான் குத்தம் சொல்லவில்லை, அதிகப்படியான ஊர்ப்பாசம் அவர்களை அப்படி பேச வைக்குது.
பேராசிரியர் திருமதி. விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் கூட தன் பாடலில் பிறந்த ஊர் பெருமை பேசுகையில்,
எல்லோரு கோவிலிலும்
எண்ணெய் ஊத்தி விளக்கெரியும்!
எங்க ஊரு கோவிலில
பச்சத் தண்ணி நின்னெரியும்!!
பார்த்தீங்களா! பச்சத் தண்ணியில எரிவது மட்டுமில்லையாம், நின்னு எரியுமாம்!!
இந்த பாட்டை பார்த்ததும் என்னோட வேதியியல் மூளை கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தது, இது சாத்தியமா?..... சாத்தியமே என வேதியியல் கூறிற்று.
கால்சியம் கார்பைடு என்ற ஒரு வகை வேதிப்பொருள் பார்ப்பதற்கு கருங்கல் போலவே இருக்கும், அதை தண்ணீரில் போட்டால் அசெட்டிலீன் என்ற ஒரு வகை வாயு வெளியாகும். அது எளிதில் தீப்பற்றக்கூடியது. இரும்புகளை ஒட்டவைக்க (வெல்டிங்) இந்த வாயுவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
அதுவுமன்றி சமீபத்திய வருடங்களில் மாங்காய்களை எளிதில் பழுக்கவைக்க இந்த கார்பைடு கல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். (நல்ல கழுவிட்டு சாப்பிடுங்க நண்பர்களே)
எது எப்படியோ, நம்ம விஷயத்துக்கு வருவோம். ஊர்ப்பெருமை என்று பேசுகையில் நம்மை நாமே மறப்பது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று.
சில நகைச்சுவைகள் தெரிந்தாலும் அங்கே பல நல்ல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. நம்ம ஊரைப்பத்தி சொல்லுகையில் தவறான தகவல் தந்துவிடக்கூடாதுன்னு, தேடித்தேடி சரியான தகவல்களை சேகரிப்பாங்க.
அப்படி நம்ம பதிவர்கள் சிலர் ஊர்களைப் பற்றி எழுதி இருக்காங்க...
அவங்களோட பதிவுகளை கொஞ்சம் பார்த்துவரலாம் வாங்க.....
.......................................................................................................................................
குழ போட்டுத் திரியும் நம்ம காட்டான் மாமா, கோழி..கொண்டக்கோழி!
அழகா தலைப்பு வைச்சு ஊர்ல இருக்கிற ஆச்சியையும் அங்கே சாப்பிட்ட கோழிக்குழம்பையும் என்னமா விவரிக்கிராருன்னு பாருங்க. வளர்ந்த சேவல்களை பிடிப்பதே ஒருதனிசுகம்னு அவர் சொல்லும்  இடத்தில் கொஞ்சம் நம்மகண்களை மூடி சொந்த ஊருக்கு 
போய் குழந்தையா மாறிடுவோம்..  இதோ அவருக்காக
கொண்டக்கோழி பிடிச்ச மாமா
கோழிக்குழம்பு எனக்குண்டா!
அண்டைவீட்டில் கோழிக்குழம்பு
உட்கார்ந்து சாப்பிட்டா
உறவுவளரும்னு சொன்னாங்கய்யா!!
.......................................................................................................................................
பதிவுலக நண்பர்களின் தொடர் பதிவால் நமக்கு கிடைத்த பொற்குவியல் பதிவுகளில் குட்டி சுவர்க்கம் கட்டி வாழும் சகோதரி ஆமினாவின் ராம்நாட் என்ற இந்தப் பதிவு அவரின் பிறந்த ஊரின் பெருமையை விளக்கிக் காட்டுகிறது. அப்படியே ஒரு தாய் தன் சேயின் விரல் பிடித்து ஊர்சுற்றி காட்டுவது போல அழகாக கூறியிருக்கிறார்...
வாங்க ராம்நாட் போய்வரலாம்.... அவருக்காக

இயற்கையன்னை சீற்றத்தால
அழிந்துபோன தனுஸ்கோடி
கண்ணில் நீரைவார்க்குது!
சின்னப்புள்ள எனக்கு நீங்க
ஊர்புகழைச் சொல்லிவந்து
சுத்திசுத்தி காண்பிச்சதும்
உற்சாகம் வந்துருச்சி!!
...............................................................................................................................

 பதிவுலகில் இவரின் எழுத்துக்கள் கண்டு மனம் லயித்துப் போயிருந்தேன். எழுத்துக்களில் அவ்வளவு வசீகரம். அனுபவமும் ஒரு
காரணமாக இருக்கலாம், குறை ஒன்றும் இல்லை என்று சொல்லும் இவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்குது. மதிப்பிற்குரிய லக்ஷ்மி அம்மாவின் இந்த பதிவின் ஆரம்பத்திலேயே கிரேட் கல்லிடைக்குறிச்சி என்று பார்த்ததுமே அப்படியே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். எங்க ஊரு நல்ல ஊருன்னு அவங்க சொல்வதை நாமளும் போய் பார்ப்போமே..... அவருக்காக

நாட்டிலொரு நல்ல ஊராம்
எங்க ஊரு அம்மே!
வைரமது விளஞ்சிவரும்
பொறந்த ஊரு அம்மே!
எம்மூரில் பொறந்தவரோ
விண்ணாள்வார் அம்மே!!
................................................................................................................................





பேருந்தில் ஏறிப்போய் பொறந்த ஊரை பார்த்துவரும் நம்மலே இப்படின்னா, ஓரிரு வருடங்களுக்கு பின்னர் விமானத்தில் பறந்துவந்து
ஊரை பார்த்துவிட்டு செல்பவர்கள் எப்படி பேசுவார்கள்...
நம்ம அன்பு சகோதரி சித்ரா அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு மாத காலம் இருந்து விட்டுப்போய் பின்னர் நன்றி ..மீண்டும் வருகிறேன் என கொஞ்சம் வெட்டிப்பேச்சு பேசியிருக்கிறார்... என்ன தான் பேசியிருக்கார் னு போய் பார்ப்போமா....
இதோ அவருக்காக

வந்தாரை வரவேற்போம்
தூளியாட வாங்க!
எம்மண்ணில் பிறந்தோரே
எம் வாசம் ஏத்துகோங்க!
என்னைவிட்டு பறந்துபோயி
மாற்றாந்தாய் மடிமீது
வாசம் செய்யும் மக்கா!
ம் சுவடொன்னு போதுமய்யா
மனம் குளுந்து போவேன்!!
................................................................................................................................


கரைசேரா அலையென அழகுத் தலைப்பிட்டு செம்மாந்து வாசம் செய்யும் அன்பு நண்பர் அரசன். இவரின் எழுத்துக்கள் படிக்கையிலே மனதுக்குள் ஊடுருவிப்பாயும் தன்மை வாய்ந்தது. எங்க ஊர் .. என்று
ஊரைப் பற்றி பேசுபவர் அளவில் சிறிய படைப்பில் அளவிடமுடியா செய்திகளை பரிமாறுகிறார்.. பால்ய நினைவுகள், திருவிழாக்கள். தான் பிறந்த கிராமம் இன்று படிப்பறிவில் முன்னேறி இருக்கிறது என்று தலை நிமிர்ந்து அவர் சொல்லுவதை நாமும் போய் பார்த்து வருவோமே..  இதோ அவருக்காக

கம்மாக்கரை மேடெல்லாம்
நேத்து நடந்த கதை சொல்லும்!
வத்திப்போன நீராவியோ
வக்கனையா ஓரம்கட்டும்!
புளியமரத்து கொப்பெல்லாம்
ஊஞ்சலாய் மாறிவரும்!
அன்று வந்த திருவிழாவ
இன்று நானும் பார்த்திடவே
திருநாளும் எப்ப வரும்!!
.............................................................................................................................


அனுபவத்தில் முதிர்ந்தவர் ஐயா.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தன் வலைப்பூவில் ஊரைச் சொல்லவா?!! பேரைச் சொல்லவா?!! என்று ஆரம்பித்து திருச்சிராப்பள்ளியின் ஆழ அகலங்களை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து, வரலாற்று ஆதாரங்களுடன் அழகாக பேசுகிறார். திருச்சிராப்பள்ளி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்த பதிவை பார்த்தாலே போதுமானது.. அவ்வளவு விஷயங்கள்..

இதோ அவருக்காக...

முதலடி எடுத்துவைச்சேன்
மூத்தோரை வணங்கிடவே!
இரண்டாமடி எடுத்துவைச்சேன்
அனுபவத்தை ஏற்றிடவே!
மூனாமடி எடுத்துவைச்சேன்
ஆவணத்தை காத்திடவே!
நாலாமடி எடுத்துவைச்சேன்
நாற்புறமும் கொண்டுசெல்ல!!
................................................................................................................................

இவ்வளவு சொல்லிட்டு எங்க ஊரு (தூத்துக்குடி) பெருமை சொல்லாம போனா எப்படி......
அன்றைய பெருமை ... முத்துக்குளிப்பது

இன்றைய பெருமை ....
பல தொழிற்கூடங்களுக்கு பெயரேற்று நின்றாலும், கப்பல் போக்குவரத்துடன் சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் இருந்தாலும். தேசத்துக்கே சுவை கொடுக்கும் உப்பின் விளைநிலமாம் எம்மூர். உப்பின் உற்பத்தியில்
தேசத்தில் இரண்டாமிடம் வகிக்கிறது.


அன்பன்
மகேந்திரன்

61 comments:

  1. மாடத்தில் பிரகாசிக்கும் பதிவர்கள் உண்மையில் என்னையும் கவர்ந்தவர்கள்...

    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தேர்ந்தெடுத்த பதிவர்கள் பட்டியல்..

    அனைவருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அருமையான அறிமுகங்கள். அனைவரையும் நீங்கள் பாட்டுகளால் அலங்கரித்தது மிக அற்புதம்.

    ReplyDelete
  4. அறிமுகங்களும் அருமை
    அறிமுகப் படுத்திய விதமும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஒருவேளை கற்பூரத்தில் திரி ஏற்றி நீரில் எரிய விட்டிருப்பார்களோ..
    அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  6. பதிவு அருமை ...
    அறிமுகமும்
    அறிமுக படுத்திய விதமும்
    சிறப்பாக இருந்தது...
    பிறந்த மண்ணை நினைவிற்கு..
    கொண்டு வரும் பதிவு..
    நன்றி சகோ...

    ReplyDelete
  7. இனிக்க இனிக்க பகிர்ந்த ஊர்பகிர்வுக்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அட என்ர மாப்பிள வலைசர ஆசிரியரா இருக்கிறார் பாத்திட்டு வருவோமென்றால் என்ர புகழ்பாடுகிறார் மாப்பிள.. நன்றி மாப்பிள அறிமுகபடுத்தப்பட்ட மற்ற ஊர் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. இந்த நாகரிக நாட்டில் இருந்தாலும் ஊரை நினைக்கும் போது வரும் இனம்புரியாத சந்தோஷமே அலாதியானது...

    அப்புறம் மாப்பிள ஈழத்தில் வற்றாபழை அம்மன் கோவிலில் கடல் தண்ணீரில்தான் விளக்கு ஏற்றுவார்கள்...!!!!!!!??????))))

    தொடருங்கள் உங்கள் ஆசிரியர் பணியை.. தொடர்ந்து வருவோமென..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  9. உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களுக்கும் நன்றி.. அறிமுகம் தரும் மாப்பிளைக்கும் நன்றி...

    ReplyDelete
  10. வலைச் சரம் அறிமுக சகபதிவாளருக்கு வாழ்த்துக்கள்.பலரை மிகவும் படித்துச் சுவைத்திருக்கிறீங்க மகேந்திரன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. //பேராசிரியர் திருமதி. விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் கூட தன் பாடலில் பிறந்த ஊர் பெருமை பேசுகையில்,
    எல்லோரு கோவிலிலும்
    எண்ணெய் ஊத்தி விளக்கெரியும்!
    எங்க ஊரு கோவிலில
    பச்சத் தண்ணி நின்னெரியும்!!//

    அருமையான நாட்டுப்புற பாடகியை நினைவு கூர்ந்ததற்கும், அவர் பாடலை ஆராய்ந்து பல நல்ல சமூக விழிப்புணர்வு கருத்துக்களை அளித்துள்ளதற்கும் மிக்க நன்றிகள்.

    தங்கள் ஊரைப்பற்றி அருமையாகப் பெருமையாகப் பேசியுள்ளவர்கள் பற்றிய இன்றைய தங்களின் அடையாளம் காட்டுதல் படலம் வெகு அருமை. அடையாளம் காட்டப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ஒவ்வொரு அறிமுகத்திற்கும் பின்னால் அழகான பாடல் ஒன்று அளித்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது.

    ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது பழமொழி. உலகுக்கே உப்பளிக்கும் தூத்துக்குடியைச் சார்ந்த திரு. மகேந்திரன் ஆகிய தங்களை யாரும் மறக்கவே முடியாது. என்றும் நினைக்கத்தான் முடியும்.

    குறிப்பாக என்னையும் இன்று அடையாளம் காட்டியுள்ள தங்களை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

    //அனுபவத்தில் முதிர்ந்தவர் ஐயா.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தன் வலைப்பூவில் ஊரைச் சொல்லவா?!! பேரைச் சொல்லவா?!! என்று ஆரம்பித்து திருச்சிராப்பள்ளியின் ஆழ அகலங்களை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து, வரலாற்று ஆதாரங்களுடன் அழகாக பேசுகிறார். திருச்சிராப்பள்ளி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்த பதிவை பார்த்தாலே போதுமானது.. அவ்வளவு விஷயங்கள்..

    இதோ அவருக்காக...

    முதலடி எடுத்துவைச்சேன்
    மூத்தோரை வணங்கிடவே!
    இரண்டாமடி எடுத்துவைச்சேன்
    அனுபவத்தை ஏற்றிடவே!
    மூனாமடி எடுத்துவைச்சேன்
    ஆவணத்தை காத்திடவே!
    நாலாமடி எடுத்துவைச்சேன்
    நாற்புறமும் கொண்டுசெல்ல!!//

    என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஆசிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள். ஊர்களின் அறிமுகமு்ம் அருமை

    ReplyDelete
  13. அன்பு நண்பர் சௌந்தர்
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  14. அன்பு சகோதரி இந்திரா
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. அன்பு சகோதரி ராம்வி
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  16. அன்பு நண்பர் ரமணி
    தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  17. அன்பு நண்பர் சூர்யஜீவா
    ஒருவேளை இருக்கலாமோ??
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  18. அன்பு நண்பர் வெளங்காதவன்
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. அன்பு சகோதரி சின்னதூரல்
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  20. அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  21. நல்ல அறிமுகங்கள். பாட்டுடன் அறிமுகப்படுத்திய விதம் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. அறிமுகப்படுத்திய விதம் ரொம்ப நல்லா இருக்கு கூடவே நீங்க கவிதையா சொல்லி இருப்பது இன்னும் நல்லா இருக்கு. என்னையும் அறிமுகப்படுதி இருக்கீங்க. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தியவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. அறிமுகப்படுத்திய விதம் ரொம்ப நல்லா இருக்கு கூடவே நீங்க கவிதையா சொல்லி இருப்பது இன்னும் நல்லா இருக்கு. என்னையும் அறிமுகப்படுதி இருக்கீங்க. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தியவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. மகேந்திரன் அண்ணே,

    ஊர்ப்பெருமை பேசறதும், கேக்கறதும்-னா தான் ஊரே ஒன்னா கூடிருமே!

    தேர்ந்த பதிவர்களின் பகிர்வுகளும் அருமை.

    ReplyDelete
  25. சிறப்பான அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஊர் பெருமை நன்று

    ReplyDelete
  26. சொந்த ஊரை நினைசிகிட்டா நெஞ்சமெல்லாம் நிரந்சுவிடும்.உண்மைதான்.ஊர்ப்பெருமை சொல்லும் பதிவுகள் அறிமுகம் அருமை.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. மூன்றாம் நிலை மாடத்தில் நல்ல பதிவர்கள்.... நன்றி....

    ReplyDelete
  28. நம் மண்ணின் பெருமையை உலகம் முழுக்க சுற்றினாலும் நம்மோடு கமழுவதை மறுக்கமுடியாது மறக்கவும் முடியாது. எங்கு சுத்தினாலும் நம்ம ஊருக்கு போய் சேர்ந்தா தான் சந்தோஷமே...ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க.. டாக்டர்விஜயலக்‌ஷ்மி நவநீதக்ருஷ்ணன் அவர்களைப்பற்றி நான் பள்ளியில் படிக்கும்போது அறிந்திருக்கிறேன்..

    அழகிய அறிமுக படலம்பா....

    உங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்பா...

    ReplyDelete
  29. ஓ! மகேந்திரன் மிக அருமை உங்கள் பதிவு. சிறப்புற நடக்கட்டும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  30. அருமை. அருமை.
    உங்களை நினைத்து எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. அசத்தல் அறிமுகங்கள்.வாழ்த்துகள்

    ReplyDelete
  32. சொர்க்கமே என்றாலும் நம்மூர் போல வருமா... என்பது போல் ஊரின் பெருமையை சொல்லி சந்தோசபடுத்திய நண்பருக்கு வாழ்த்துக்கள்... இன்றைய அறிமு பதிவர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. உப்பு என்றாலே தூத்துகுடி தான் ஞாபகத்திற்கு வரும் நண்பா... நான் கூட திருச்செந்தூர் ஆண்டவரை தரிசிக்க போகும் போது.... பார்த்துக்கொண்டே போனேன்...

    ReplyDelete
  34. அன்பின் இனிய தோழர் திரு. மகேன் அவர்கள் வலைசரத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருப்பதில் மட்டரற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
    அன்பரின் சீரிய ,கூர்மை மிக்க ,எழுச்சிமிக்க அரசியல், ஆன்மிகம், மன நலம், மருத்துவம் ,நகைசுவை என்று பல தரப்பட்ட சிந்தனை கட்டுரைகளையும், தமிழ் நாட்டுப்புற இலக்கியங்களையும் படித்து சுவைத்த பல அன்பர்களில் நானும் ஒருவன்.

    பல முறை இவரின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன்........!
    விவாதித்தும் இருக்கிறேன்......!

    நம் தமிழ் கலாச்சாரத்தின் கண்ணியமிக்க படைப்புகளை.....பண்பாடு மீறாமல்....
    நம் இளையதலை முறைக்கு கொண்டு செல்லும் மகத்தான பணியை மேற்கொண்டு ,தன்னை முழுமையாய் அர்பணித்து கொண்ட எம் அன்பின் தோழர் மகேன் அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்......!

    அன்புடன்,
    தோழன் சங்கர்.

    ReplyDelete
  35. அன்பு காட்டான் மாமா
    தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  36. அன்பு நண்பர் தனிமரம்
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  37. அன்புநிறை vgk ஐயா
    தங்களின் வாழ்த்துக்கும் ஆசிக்கும்
    இனிய கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  38. அன்பு நண்பர் கடம்பவன குயில்
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  39. அன்பு நண்பர் கோவை2தில்லி
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  40. அன்பு நண்பர் மனோ
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  41. அன்பு லக்ஷ்மி அம்மா
    தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  42. அன்பு நண்பர் சத்ரியன்
    தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  43. அன்பு நண்பர் சண்முகவேல்
    தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  44. அன்பு நண்பர் கோகுல்
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  45. அன்பு நண்பர் வெங்கட் நாகராஜ்
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  46. அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  47. அன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்.
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  48. அன்புநிறை ரத்னவேல் ஐயா
    தங்களின் வாழ்த்துக்கும் ஆசிக்கும்
    இனிய கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  49. அன்பு நண்பர் வைரை சதிஷ்
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  50. அன்பு நண்பர் ராஜேஷ்
    தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  51. அன்புநிறை நண்பர் சங்கர்
    தங்களின் வரவை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி.
    அரிய கருத்தளித்தமைக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  52. வணக்கம் அண்ணாச்சி,

    ஊர்ப் பெருமைகளை உன்னதமாய் எடுத்துரைக்கும் பதிவர்களைப் பற்றிய அறிமுகத்தினைக் கவிதைகளோடு சேர்ந்து கலக்கலாகத் தந்திருக்கிறீங்க.
    நன்றி.

    இன்று அறிமுகமாகிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  53. சொர்கமே என்றாலும் நம்மூரப் போலவாருமா!
    அருமையான பகிர்வு
    வாழ்த்துகள்ண்ணே

    ReplyDelete
  54. பிறந்த ஊர் பெருமையை பேசும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  55. என்னையும் என் மண்ணையும் அறிமுக படுத்திய விதம் அருமை ..
    என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறி கொள்கிறேன் ..
    மற்றும் மற்ற உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  56. அன்பு நண்பர் நிரூபன்
    தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  57. அன்பு நண்பர் நீச்சல்காரன்
    தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  58. அன்பு நண்பர் சே.குமார்
    தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  59. அன்பு நண்பர் அரசன்
    தங்களின் இனிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது