07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 9, 2011

தம்பிக்கு அண்ணாவின் கடிதம்...

ன்புள்ள தம்பி சித்துமொழியனுக்கு,

வணக்கம். நலம் விரும்புகிறேன். ”வலைச்சரம்” பள்ளியில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆரம்பித்து எதிர்வரும் ஞாயிறு வரைக்கும் ”ஒரு நாள் முதல்வர்’ போல , ”ஒருவார ஆசிரியராக” பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறேன். வேலை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. அதனால் தான் நேற்று நீ தொலைபேசியில் அழைத்தபோதும் உன்னுடன் அதிக நேரம் பேசமுடியவில்லை. நீ மனம் வருந்திவிட கூடாதென்று இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்.

வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணிக்கு நானே உனக்கு போன் செய்கிறேன். அதுவரை இந்த அண்ணனின் நினைவு உன்னை வாட்டாமல் இருக்க, இம்மடலில் சில வலைப்பூக்களையும், அவற்றில் எனக்குப் பிடித்த பதிவுகளையும் இணைப்பு கொடுத்து அனுப்பி இருக்கிறேன். நீ படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த வலைதளங்களை நண்பர்களுக்கும் தெரியப் படுத்து.
***
ம் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்து வரும் சகோதரி மயூரா, தான் காணும் காட்சிகளையும், தன்னை பாதிக்கும் நிகழ்வுகளையும் புதுப்புதுச் சொற்களைக் கொண்டு புது நடையில் கவிதைகளாக்கி நதியானவள் என்னும் வலைப்பூந்தோட்டத்தில் மலரச் செய்திருக்கிறார். எல்லாக் கவிதைகளுமே எனக்கு பிடித்தவைகளே. சான்றாக, வாழ்தலில்... படித்துப்பார்.
***
டுத்ததாக,
அரக்கோணத்தில் பிறந்து தற்போது U.K-வில் பணியாற்றி வரும் ப்ரியா அவர்கள், வெட்டிபுள்ளை என்ற புனை பெயரில்  “என் உலகத்தில்...” என்னும் வலைப்பூவில் தனது மன ஓட்டங்களை பதிவு செய்து வருகிறார். தலைப்புக்கேற்பவே இவரது உலகமே தனியானது தான். இவரது படைப்புகளும் தனித்துவமானது. நீ படித்து சுயம் உணர ”அசோக வனங்களும் ராதையும்” கவிதையைப் படி.
***

கீ ர்த்தி. இவரும் ஈழத்துச் சகோதரி தான். சொந்த மண்ணிலேயே வாழ்ந்து வருபவர். ”சிந்தனைச் சிறகினிலே” என்னும் வலைப்பதிவில் எழுதுகிறார். தமிழ்மண் மீது தீராத தாகம் கொண்டவர். இவர் எளிய சொற்களைக் கொண்டே அதி அற்புதமாக எதுகை,மோனையுடன் கவிதைகள் வடிப்பவர். ஓய்வாய் உணரும் தருணங்களில் எல்லாம் ஓடோடிச் சென்று அவரது கவிதைகளைப் படித்து இளைப்பாறி விட்டு வருவேன்.இதோ தலை நிமிர்ந்துச் செல்லுவோம் என்ற இக்கவிதையைப் படித்து பார்.
***
தி.பரமேஸ்வரி. அண்ணாவின் அன்னை மண்ணான காஞ்சியில் வசிப்பவர். தமிழாசிரியராக பணிபுரிகிறார். அண்ணாவைப் போன்றே தன் இனத்தை தட்டி எழுப்பும் வீரியச்சொற்களுக்குச் சொந்தக்காரர்.  அன்பென்று கொட்டு முரசே என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரின் சமீபத்திய படைப்பான விழித்தெழுவாய் தமிழா என்ற கட்டுரையைப் படித்து உணர்வு கொள்.
***
கார்த்திகேயன். சேலத்தைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார். கார்த்திகேயன் கவிதைகள் , இரவல் இதயம் ஆகிய இரு வலைதளங்களில் எழுதி வருகிறார். சமீபத்தில் எழுதியிருக்கும் தலைப்பற்ற ஒரு கவிதை யைப் படித்து பார். உனக்கும் கவிதை எழுதத் தோன்றும். 
***
துரைவாசகன் என்னும் புனைப்பெயரில் ”மதுரைக்கும், தமிழுக்கும் நேர்ந்துவிடப் பட்டவன்” என்ற வசனத்துடன், சித்திர வீதிக்காரன் என்ற வலைப்பூவில் நமது வரலாற்றுப் புகழ் மிக்க தலங்களை தான் சென்று தரிசித்த பயண அனுபவத்தை அவர் பகிரும் பாங்கே தனி. படிக்கும் போதே அவருடன் சேர்ந்து பயணப்பட்ட அனுபவத்தை நமக்கு தந்து விடும் எழுத்து வண்மை மிக்கவர். பஞ்சப்பாண்டவ மலையில்.... கட்டுட்ரையைப் படித்து, வாய்ப்பு கிடைக்குமானால் உன் நண்பர்களுடன் ஒரு பயணம் போய் விட்டு வா.
***
ம்ம்ம்...!  சொல்ல மறந்து விட்டேன். நாளை இரவு நம் அன்பு மாமா சிங்கைத் தங்கம் சி.கருணாகரசு தாயகம் வருகிறார். நீ விரும்பி குடிக்கும் HEINEKEN பீர் வாங்கி கொடுத்தனுப்புகிறேன், பெற்றுக்கொள்ளவும். தூங்கச் செல்லும் முன் யாருக்கும் தெரியாமல் குடித்து விட்டு தனியே படுத்து தூங்கவும். குறிப்பாக உன் மனைவிக்கு தெரியக் கூடாது. தெரிந்தால் என்னை திட்டி தீர்த்து விடுவார். 

அன்புடன்,
அண்ணன் சத்ரியன்.


***

32 comments:

  1. வணக்கம் சத்ரியன் அண்ணா.

    மின்னஞ்சல் அனுப்புவது போன்று ஆரம்பித்து நம் ஈழத்து சகோதிரிகளையும், நம்ம உள்ளூர் சகோதரர்களையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை.

    HENEIKEN BEER க்கு இனி வரவேற்பு அதிகமாகிவிடும்.

    ReplyDelete
  2. சிலருக்கு வலைச்சரத்தில் எழுதுவது ஒரு தனியான பெருமை அல்லது கௌரவம். ஆனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்பென்பது உங்களிடம் உள்ள உழைப்பை சீனா அவர்கள் வாங்குவதற்காக கொடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. உங்கள் வலையுலக வாசிப்பு ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. காலை வணக்கம் நண்பரே! அறிமுக படுத்தும் ஒவ்வொரு பதிவர்களும் வித்தியாசமான தரமான படைப்புகளுடன் உள்ள பதிவர்களையே அறிமுக படுத்திவரும் உங்களுக்கும்... இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து அற்புத பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    நல்ல அறிமுகங்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  5. நீ விரும்பி குடிக்கும் HEINEKEN பீர் வாங்கி கொடுத்தனுப்புகிறேன், பெற்றுக்கொள்ளவும்////

    இது என்ன பாஸ்? பார்லி தண்ணியா? :)

    ReplyDelete
  6. ”ஒருவார ஆசிரியராக” பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறேன். //

    பதவிப்பிரமாணம் யாரு பண்ணி வச்சா? :))

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  8. ஆஜர்.....

    அருமையான அறிமுகங்கள்....

    ReplyDelete
  9. வணக்கம்ணே,

    இன்றும் சிறந்த அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    சிறப்பாக அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றிகள் பல....

    ReplyDelete
  10. // வைகை said...
    நீ விரும்பி குடிக்கும் HEINEKEN பீர் வாங்கி கொடுத்தனுப்புகிறேன், பெற்றுக்கொள்ளவும்////

    இது என்ன பாஸ்? பார்லி தண்ணியா? :)///

    ஆமாண்ணே, பார்லி தண்ணிதான் ஆனால் நமக்கு புடிச்சது கின்னஸ்தான் இல்லயாண்ணே :))

    ReplyDelete
  11. follow செய்து விடுகிறேன்..

    ReplyDelete
  12. சரத்தை கதம்பமாய்க் கட்டித் தொடுப்பது
    மிக‌அருமை பார்க்காத மலர்களெல்லாம்
    பறித்துவந்து கட்டுவதும் பெருமையாய்
    இருக்கிறது. கஷ்ரமென்று நினைக்காமல்.....
    பூரணமாய் செய்கிறோம் என்ற மகிழ்வுடன்
    செய்கிறீர்கள் தொடருங்கள்

    ReplyDelete
  13. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நல்ல பதிவு.
    நல்ல அறிமுகங்கள்.
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வணக்கம் காந்தி.

    நம்மளது எந்த பிராண்ட்?

    ReplyDelete
  16. இடையறாத பணியின் நடுவிலும் வந்து உற்சாகப் படுத்த மரப்பதில்லை.நன்றிங்க ஜோதிஜி.

    ReplyDelete
  17. வணக்கம் ராஜேஷ்.

    உங்களது தினசரி வருகை என்னை மேலும் உற்சாகப் படுத்துகிறது.

    ReplyDelete
  18. வணக்கம்.
    வாங்க ரத்னவேல் ஐயா.

    ReplyDelete
  19. வாங்க , பார்லி தண்ணிய அறியாத பாலகன் வைகை அவர்களே!

    ReplyDelete
  20. விக்கி,

    வணக்கம்ணே!

    ReplyDelete
  21. வெளங்காதவன் அண்ணே,

    ஆஜர் போட்டுட்டு எந்த தியேட்டரில் படம் பாத்துக்கிட்டு இருக்கீங்க?

    ReplyDelete
  22. வணக்கம் சிம்பு,

    கண்றாவி ”கின்னஸ்” ரொம்ப கசக்குமேய்யா!

    ReplyDelete
  23. சூர்யஜீவா சார்,

    வீட்டுக்கு தெரியாம குடிங்கன்னு சொன்னதயா?

    ReplyDelete
  24. வணக்கம்.

    நன்றிங்க கலா.

    ReplyDelete
  25. வாங்க சரவணன் அண்ணா.

    நலந்தானே?

    ReplyDelete
  26. வணக்கம் ரமனி அய்யா.

    இங்க வேலையா இருக்கிறதால நம்ம வீட்டு பக்கம் வரமுடியல. மன்னிக்கனும்.

    ReplyDelete
  27. சிறப்பு சத்ரியன்.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. இன்றைய வித்தியாசம் என்னவா இருக்கும்னு யோசிச்சிக்கிட்டே பார்த்தேன்...

    அட

    இன்னைக்கும் வித்தியாசமா தான் எழுதி இருக்கீங்க சத்ரியன்....

    நாட்கள் எத்தனை வேகமாக போகிறது....

    நேரமின்மையைக்கூட தம்பிக்கு மின்னஞ்சல் மூலமா தெரிவிச்சிக்கிட்டே அப்டியே எல்லாரையும் அறிமுகப்படித்தினது வித்தியாசமா இருந்திச்சுப்பா...

    அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்....

    அன்பு வாழ்த்துகள் சத்ரியன் இன்றைய வித்யாசமான பகிர்வுக்கு...

    ReplyDelete
  29. //சத்ரியன் said...
    வணக்கம் சிம்பு,

    கண்றாவி ”கின்னஸ்” ரொம்ப கசக்குமேய்யா!///

    அண்ணே மருந்து கசக்கும் ஆனால் உடம்புக்கு நல்லது :-)

    ReplyDelete
  30. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது