இது எங்க ஏரியா… உள்ள வாங்க!
➦➠ by:
ஆதி வெங்கட்,
மூன்றாம் நாள்
டைட்டில் பார்த்த உடனே இங்கேயும் தொலைக்காட்சியா என்று அலற வேண்டாம்! டைட்டில் உபயம் மட்டுமே அங்கிருந்து. மற்றபடி தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட எதுவும் இல்லை. என்னதான் கோவை பிறந்த வீடாக இருந்தாலும் புகுந்த வீட்டுப் பெருமையையும் கொஞ்சம் சொல்லணும் இல்லையா! அதனால இன்னிக்கு தலைநகர் தில்லியில் வசிக்கும் தமிழ்ப் பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறேன். அதற்கு முன் எனக்குப் பிடித்த ஒரு குட்டிக் கவிதை...
வைரங்கள்
“உழவனின் மனைவி
ஓர்நாள் கேட்டாள்
வைரத்தை நாமும்
பார்க்க முடியுமா? என்று
உழவனோ நெற்றி
வியர்வையை வழித்தான்
வியர்வைத்துளிகளோ
வைரமாய் ஜொலித்தன”
மதுரை ஃபாத்திமா கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் சுசீலா WWW.MASUSILA.COM என்ற வலைத்தளத்தில் சங்க இலக்கியம், ஆன்மீகம், சமூகம் போன்ற தளங்களில் பல நல்ல கருத்துகளை எழுதி வெளியிடுகிறார். இலக்கியம் சார்ந்த இவரது பகிர்வுகள் படிக்க சுவையானவை.
தில்லி பதிவர் திருமதி கயல்விழி முத்துலெட்சுமி அவர்கள் வலைச்சரத்திற்கு புதியவர் அல்ல. வலைச்சரத்தில் முந்தைய பொறுப்பாசிரியர். தில்லியை சேர்ந்த பதிவர், அதுவும் கடந்த நவம்பர் 2006 முதலாகவே தன்னுடைய படைப்புகளை WWW.SIRUMUYARCHI.BLOGSPOT.COM என்ற வலைப்பூவில் எழுதுபவர். இதைத்தான் ”திருப்பதிக்கே லட்டு”ன்னு சொல்றாங்களோ!
“நீர்க்கோல வாழ்வை நச்சி” என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ள லாவண்யா சுந்தரராஜன் தில்லியிலிருந்து வலைபூவில் எழுதுகிறார். இவரது வலைப்பூ முகவரி WWW.UYIRODAI.BLOGSPOT.COM. நல்ல தமிழில் கவிதைகள் பல எழுதி அதை தனது வலைப்பூவிலும், அகநாழிகை, வடக்குவாசல் போன்ற இதழ்களிலும் வெளியிடுகிறார்.
தில்லியில் இருக்கும் நண்பர் சந்திரமோகன் ஒரு ஓவியர். வடக்குவாசல், உயிர்மை போன்ற பத்திரிகைகளில் ஓவியம் வரையும் இவர் ஒரு தனியார் அலுவலகத்தில் அனிமேஷன் துறையில் பணி புரிகிறார். இவரது சந்தனார் வலைப்பூவில் வரும் ஓவியங்கள் அருமையாக இருக்கும்.
WWW.VIGNESHWARI.BLOGSPOT.COM என்ற வலைப்பூவில் சுவையான பல விஷயங்களைப் பற்றி எழுதி வருபவர் திருமதி விக்னேஷ்வரி. கவிதை, சினிமா விமர்சனம் என்ற பல தளங்களில் எழுதி வருபவர்.
கலாநேசன் என்ற புனைப் பெயரில் கருத்துமிக்க கவிதைகளை எழுதும் ஒரு தில்லி வாழ் தமிழர் திரு சரவணன். இவர் WWW.SOMAYANAM.BLOGSPOT.COM என்ற வலைப்பூவில் நிறைய கவிதைகள் வெளியிட்டு வருகிறார். சில கதைகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது எழுதும் இவர் கவிஞர் வைரமுத்துவின் ரசிகர்.
வார்த்தைகளால் சித்திரம் வரைந்து கொண்டிருப்பவர் திருமதி ஜிஜி. இவரது வலைப்பூ முகவரி WWW.VAARTHAICHITHIRANGAL.BLOGSPOT.COM. இதில் பயணக் கட்டுரைகள், மழலைப் பட்டாளம் பற்றிய அனுபவங்கள் என்று பல்வேறு சுவையான விஷயங்களைப் பகிர்கிறார்.
”பிறந்தது குடந்தையில், வளர்ந்தது சென்னையில், உழல்வது தில்லியில்” என்று தன்னைப் பற்றிய அறிமுகத்தில் செல்லும் வேங்கட ஸ்ரீனிவாசன் குழந்தை வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் பற்றி தன் அனுபவமாய் சொல்லிய”காலை எழுந்தவுடன் கடும்போர்” நம் எல்லோர் வீட்டிலும் அணுதினமும் நடக்கும் ஒன்று. உங்க வீட்டிலும் இப்படி நிச்சயம் நடந்திருக்கும்.
கைக்குட்டை கனவுகள் என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இருக்கும் தில்லி நண்பர் தேவராஜ் விட்டலன் ஆசிரியர்கள் பற்றி எழுதிய கவிதையை இங்கே படித்து ரசிக்கலாம்.
இவர்களைத் தவிர தில்லியில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் இருக்கிறார் ஒருவர். அவருக்கு வலைச்சரத்தில் அறிமுகம் என்பது தேவையில்லை. சென்ற வாரம் வலைச்சரத்தில் அவர் தந்த கதம்பங்களின் மணம் இன்னும் வீசிக்கொண்டு இருக்கிறது. ஆம் அவர் சென்ற வார வலைச்சர ஆசிரியர் திருமதி பி.எஸ். ஸ்ரீதர். பல சுவையான தகவல்களைத் தனது ஆச்சி ஆச்சி பக்கத்தில் வாசகர்களுக்குப் பகிர்ந்து கொள்கிறார்.
மேலே சொன்ன நண்பர்கள் தவிர வேறு இரண்டு பதிவர்களும் தில்லியில் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று குழம்ப வேண்டாம். நானும் என் கணவரும் [இந்த வார தமிழ்மணம் நட்சத்திரம்] தான்…
இன்னும் ஒரு செய்தி: முடிந்தபோது தில்லி பதிவர்கள் சந்திப்பும், மற்ற பதிவர்களின் தில்லி வருகை போது சந்திப்புகளும் அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கிறது. பதிவர்கள் ஸ்வாமி ஓம்கார், கோமதி அரசு, புதுகைத் தென்றல் மற்றும் துளசி கோபால் ஆகியவர்களின் தில்லி விஜயத்தின் போது சந்திப்புகள் நடந்திருக்கிறது.
என்ன எங்க ஏரியா பதிவர்களை பார்த்தீர்களா? நாளை வேறு சில பதிவர்களோடு மீண்டும் சந்திப்போம்…
நட்புடன்
|
|
சோதனை மறுமொழி….
ReplyDeleteதில்லி பதிவர்கள் அறிமுகம் அருமை.
ReplyDeleteஅட நம்ம ஏரியா...வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteபாராட்டுக்கள்.
ReplyDeleteஅப்ப..தலை நகரில் தமிழ் கொடிகட்டி பறக்கிறது... நல்ல அறிமுகங்கள்...வாழ்த்துகள்
ReplyDeleteதில்லி பதிவர்கள் அறிமுகம் அருமை.
ReplyDeleteபதிவர்கள் சந்திப்பை மறக்க முடியுமா
ஆதி.
வாழ்த்துக்கள்!
நன்றி திரு வெங்கட் அவர்களே..
ReplyDeleteதில்லி பதிவர் சந்திப்பு பற்றிய எனது செய்தி
http://vediceye.blogspot.com/2010/03/09-2010.html
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வார தமிழ்மண நட்சத்திரத்திற்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள்.
“உழவனின் மனைவி
ReplyDeleteஓர்நாள் கேட்டாள்
வைரத்தை நாமும்
பார்க்க முடியுமா? என்று
உழவனோ நெற்றி
வியர்வையை வழித்தான்
வியர்வைத்துளிகளோ
வைரமாய் ஜொலித்தன”/
பதிவிற்கே வைரமாய், மணிமுடியின் வைரமாய் ஜொலிக்கும் அருமையான வாசகம்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகங்கள்...வாழ்த்துகள்
ReplyDelete//வியர்வைத்துளிகளோ
ReplyDeleteவைரமாய் ஜொலித்தன”//
ஆம் உழைப்புக்கு இடு இணை எதுவும் இல்லைதான்.
டில்லி பதிவர்கள் அறிமுகம் அருமை.வாழ்த்துக்கள்.
:)
ReplyDeleteநன்றி ஆதி.மற்ற பதிவர்களையும் தெரிந்துகொண்டோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆதி.பதிவர்கள் அறிமுகம் சூப்பர்.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் ஆதி.. தொடருங்க :-)
ReplyDeleteநன்றி ஆதி
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி.மிக்க மகிழ்ச்சி ஆதி...
ReplyDeleteபுகுந்த வீட்டு அறிமுகங்கள் சூப்பரோ சூப்ப்ர்.
ReplyDeleteபலர் தெரிந்தார்க தான் அதில் சிலர் தெரியாதவர் நேரம் கிடைக்கும் போது அவர்கள் வலை தளம் சென்று பார்க்கனும்..
ரொம்ப வே வித்தியாசம் இன்று அறிமுகங்கள், உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்.உங்களுக்கும் வாழ்த்துக்கள்
தில்லியிலிருந்து பதிவெழுதும் ஜாம்பவான் பதிவர்களுக்கு மத்தியில் புதிதாக எழுதத் துவங்கியிருக்கும் என் பதிவையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள்.
ReplyDeleteமாலையில் நீங்கள் அறிமுகப்படுத்திய அனைவரையும் சந்திக்கிறேன்
ReplyDeleteதில்லி பதிவர்கள் அறிமுகம் நல்லா சொல்லி இருக்கீங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
இன்று புஜ்ஜியும் வந்தாச்சு. Backpack-ல் எண்ணற்ற பதிவுகளுடன் பயணம் செய்ய வாழ்த்துக்கள்!!
//வியர்வைத்துளிகளோ
ReplyDeleteவைரமாய் ஜொலித்தன”//
ஜொலிக்கும் வரிகள்!;))))
தலைநகரில் உள்ள தலைசிறந்த பதிவர்கள் பற்றிய அறிமுகம் மிகச் சிறப்பாகவே உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk
தில்லி பதிவர்களின் அறிமுகம் அருமை! அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஆதி வெங்கட்.
ReplyDelete@ NIZAMUDEEN,
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
@ கலாநேசன்,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றிங்க.
@ DrPKandaswamyPhD,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அய்யா.
@ பத்மநாபன்,
ReplyDeleteஆமாங்க.தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க சகோ.
@ கோமதி அரசு,
ReplyDeleteஅருமையான பதிவர் சந்திப்புகள்...
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.
@ ஸ்வாமி ஓம்கார்,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அய்யா.
@ இராஜராஜேஸ்வரி,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
@ சே.குமார்,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
@ thirumathi bs sridhar,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.
@ ஆசியா உமர்,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
@ புதுகைத் தென்றல்,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
@ எம்.ஏ.சுசீலா,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.
@ Jaleela Kamal,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
@ வேங்கட ஸ்ரீனிவாசன்,
ReplyDeleteநீங்களும் ஒருநாள் ஜாம்பவான் பதிவர் ஆகத்தான் போகிறீர்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா.
@ suryajeeva,
ReplyDeleteமாலையில் படித்துப் பாருங்கள்.தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
@ Lakshmi,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.
@ "என் ராஜபாட்டை"- ராஜா,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
@ middleclassmadhavi,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
@ வை.கோபாலகிருஷ்ணன்,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
@ chandramohan,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
நல்ல அறிமுகங்கள்...வாழ்த்துகள்.
ReplyDelete@ செல்வராஜ் ஜெகதீசன்,
ReplyDeleteதங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
டில்லி அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிலர் ஏற்கனவே அறிமுகமானவர்கள். புதியவர்கள் நேரம் கிடைக்கும்போது கண்டுகொள்கின்றேன்.நன்றி.
//வியர்வைத்துளிகளோ வைரமாய் ஜொலித்தன” //
ReplyDeleteஉண்மை.உழைப்புக்கு இணை ஏதும் இல்லை.
டில்லி பதிவர்களின் அறிமுகம் அருமை.
உங்க ஏரியால நான் ஏற்கனவே உள்ள வந்து நிறைய பதிவர்களின் பதிவுகள் படிச்சிருக்கேன்.சும்மாவா?தலை நகர ஏரியாவாச்சே!
ReplyDeleteஇருப்பினும் மூன்று பேர் நான் அறியாதவர்கள்.இனிதான் பார்க்க வேண்டும்.
டோரா ரகசியத்தை எனக்கு மட்டும் காதுல நைசா சொல்லிடுங்களேன்.நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேனாம்.(சிந்து பைரவி ஜனகராஜ் மாதிரி மண்டை வெடிக்குதுங்க)
டில்லி பதிவர்களின் அறிமுகங்கள் நல்ல தேர்வு. நன்றி ஆதி!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...வாழ்த்துகள்
ReplyDelete@ மாதேவி,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
@ ராம்வி,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
@ ராஜி,
ReplyDeleteடோரா ரகசியம் (காதை காட்டுங்க..ஞாயிறு வரை பொறுத்திருக்க வேண்டியது தான்).
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.
@ மோகன்ஜி,
ReplyDeleteசார். உங்களைத் தான் காணோமேன்னு பார்த்தேன்..
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
@ மகேந்திரன்,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
உழைப்பின் வியர்வை துளிகளே வைரங்கள் என்று அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்... இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete@ மாய உலகம்,
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.