அனுபவத்தில் சில... வாழ்க்கைக்கு சில....
➦➠ by:
ஆமினா
என்ன கண்ணுலாம் செவந்துருக்கு?
நைட்டு தூக்கமே வரலை பொண்ணு…. புரண்டு புரண்டு படுத்து 4 தடவ டொபுக்கடீர்ன்னு கீழே விழுந்துட்டேனா பாத்துக்கோயேன் :-(
ம்ம். சரி என்ன இன்னைக்கு லேட்டு?
ஏன் கேக்குற? வார்ர வழில ஒரே ரகள… காலேஜ் பசங்கன்னா அவ்வளவு பெரிய பருப்பா? ஸ்ட்ரைக் பண்ணிட்டுருக்காங்க. அதான் கொஞ்சம் நேரமாய்டுச்சு!!
அப்படி பண்ணும் போதுதான் எனக்கும் கோபங்கோபமா வருது பொண்ணு!
ஏன் கோபப்படுற? கோபத்த கட்டுபடுத்துறவேந்தேன் வீரன்னு அபு சொல்லியிருக்காரு தெரியுமா? கோபத்துனால வர்ர பின்விளைவு என்னான்னு தெரியுமா ஒனக்கு?
பின்ன உனக்காக எவ்வளவு நேரமா காத்துட்டிருக்குறது?
இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் ஜெயில்ல தூக்கி போடணும்
அந்த அனுபவம்லாம் சாதாரணமா நெனச்சுக்கிட்டீயா? வைகை தம்பி கூட சொல்லியிருந்தாக அவுக கூட்டாளியோட அனுபவத்த….
இப்ப இப்படி இருக்குற பசங்கதேனே ரொம்ப கெட்டு போறாங்க. சாதிகா அக்கா கூட சொல்லி வருத்தப்பட்டாக. எங்கே போகுமோ இந்த பாதைன்னு???
அதுக்குதேன் கொழந்தைலையே அறிவுரை சொல்லி வளக்கணுங்குறது. அப்துல் மாலிக்கும் சினேகிதிபுள்ளையும் தமிழ்பேரண்ட்ஸ் மாதிரி இருக்குறவங்களாம் எவ்வளவு அழகா ஒவ்வொன்னா சொல்லி குடுக்குறாங்க. அதுபடி நடந்தாலே போதுமே…
அதுவும் சரிதேன். இப்படி வளர பசங்கதேனே பிற்காலத்துல மதிக்காம சுத்துதுக? அம்மாவ எங்கோ கொண்டு போயி கண் காணாத எடத்துல விட்டுட்டு வர்ரதும்….. கடைசி காலத்துல கவனிக்காம விடுறதும்னு ரொம்ப அநியாயம் பண்ணுதுக. சேர்த்துவச்ச புகழ் கூட சோறு போடாது…..
நம்ம புட் ஆபிசர் கூட சொல்லியிருந்தாங்க அவுக ட்ரெயின்ல போகும் போது நடந்த விஷயத்த… கேக்கும் போதே கஷ்ட்டமா இருந்துச்சுபுள்ள!! இப்படியாளுங்கதேனே நம்மள சுத்தியிருக்காங்க… கண்டுபிடிக்கவா முடியுது? எல்.கே சொன்னாரே அதே கணக்கா…. எல்லாம் ரெட்ட வேஷம்தேன்
ம்ம்…. தீபாவளிக்கு துணிமணி நெறையா எடுத்தீயா? கண்ணுலையே காட்ட மாட்டேங்குற?!!
அட நீ வேற………. அந்த பய தமிழ்வாசிதேன்… செவனேன்னு போன என் வூட்டுக்காரர்ட்ட தீபாவளிக்கு கடைக்கு போறீங்களா கவனம்னு எச்சரிக்கை போட்டுட்டாக……. அதுனால எனக்கு சரியாவே எடுத்துகொடுக்கல…. நாலே நாலு அனுஷ்கா சேல எடுத்தேன் :-(
நீ ஏன் அவுகளோட பழக விடுற? இனி சேர விடாத!!!
ஹும்ஹும் அப்படிதேன் செய்யணும். இப்பலாம் வெலவாசிலாம் ரொம்ப ஏறி போச்சு. ஆனா ஜவுளி தொறைக்கு நம்ம நாடு கொடுக்குற முகியத்துவத்த பாத்தீயா?. அப்பறம் டிரஸ் எடுக்க போகும் போது ரோட்ல நிம்மதியாவா போக முடியுது? உசுர கைல பிடிச்சுட்டு போகவேண்டியதா இருக்கு
ஏன் ? என்ன ஆச்சு?
கோகுல் சொல்ற கணக்கா ரோட்ல எதுக்க வர வண்டிலாம் கண்ணுக்கு நேரா லைட்ட அடிக்கிறாய்ங்க. கண்ணு கூசுறதுனால ஒழுங்காவே என் வூட்டுக்காரவுகனால வண்டிய ஓட்ட முடியல!
இப்படியே ஒவ்வொருத்தவுகளும் அசால்ட்டா இருந்ததுனாலதேனே தேக்கடில அம்மாம்பெரிய சோகம் நடந்துச்சு…. இளம் தூயவன் பிரதமர் ஆனாதேன் எல்லாம் சரியாகும்னு நெனைக்கிறேன்
வண்டின்னு சொன்னவொன்னதேன் ஞாபகம் வருது. லோன் கட்டியா வண்டிய வாங்குனீங்க?
பின்ன காசு மரத்துலையா காய்க்குது?
கவனமா இருந்துக்கோங்க…. போகும் போது மோகன் சார்ர பாத்துட்டு போ. அவுகதேன் இத பத்தி சொல்லிட்டிருந்தாங்க!
கண்டிப்பா கண்டிப்பா…. சொல்ல மறதுட்டேனே பாத்தீயா? வர்ர வழில சங்கவி பாத்தேன். அவுகளுக்கு தெரிஞ்ச ஒறவுக்கார பொண்ணு பத்தி சொன்னது கேட்டு அப்படியே ஆச்சர்யமா இருந்துச்சு!
ஹாஸ்பிட்டல் அனுபவம் எப்பவும் கொஞ்சம் கவலைகரமானதுதேன். கே.ஆர்.விஜயன் கூட கேன்சர் பத்தி சொல்லியிருந்தாங்கல?
ம்ம். எல்லாரும் கவனமா இருந்துட்டா நல்லதுதேன். இன்னொரு விஷயம் கேள்விபட்டீயா?
என்னவாம்?
டெல்லில எறந்துபோனாகளே,,,, அவுக அம்மாவ தேத்துறதுக்கே கஷ்ட்டமா இருந்துச்சுன்னு வெங்கட் சார் சொன்னாகல? அடுத்த நாள் போகும் போது பிரட் பக்கோடா சாப்பிட்டிட்டுருந்தாங்களாம்….
மனுஷ வாழ்க்கையே அவ்வளவுதேனே பொண்ணு! ஆமா உன் மகன் என்ன மார்க் எடுத்தான் பரிச்சைல? நல்லா எழுதுனானா?
ஏன் கேக்குற…. 5 மார்க் எடுத்து பெயிலானவன் கூட ஜாலியா சுத்திட்டிருக்கானுவ. 34 மார்க் வாங்கிட்டு இவன்படுத்துற பாடு இருக்கே……அய்யய்யய்யோ........
நூலிழையில் தவற விட்டா அது பெரிய எழப்பாதேனே தெரியுது….
அவன் பண்ண தப்புக்கு அடுத்த பெஞ்ச்ல உக்காந்த பையன் பேப்பர காமிக்கலன்னு ஒப்பாரி வைக்கிறான். இவன எப்படி திருத்துறது?
கையுங் காப்பி பேஸ்ட்டுமாய் பின்னூட்டவாதி அகப்பட்டு மாறின மாதிரி அவனும் மாறுவான். கவலைய விடு!
கரிக்ட்டு!!!!
லட்சிய ஆசிரியன் கெடச்சுட்டா புள்ளைங்க மனப்பாடம் பண்ணி எழுத வேண்டிய நெலமையும் மாறி உணர்ந்து படிக்குங்க….!!
ம்ம்…. ம்ம்……… சரி நேரமாச்சு…. பொறவு வாரேன்……..வர்ட்டுமா……….
************************************
அடுத்த பதிவு- மிக்சர் எக்ஸ்ப்ரஸ் :-)
|
|
ஆஹா..வித்யாசமான அறிமுகத்துக்கு நன்றிகள் பல.
ReplyDeleteஇளைய தாசன்
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
அறிமுகத்துக்கு நன்றி. அது யாரு லெ கே
ReplyDeleteஎல்.கே
ReplyDeleteசின்ன பொண்ணு இப்ப தேன் அவசரத்துல தப்பு தப்பா பேசும் :-)
மாத்திட்டேன் :-)
//வித்யாசமாக அறிமுகம் செய்து அசத்தியிருக்கீங்க. உங்களுக்கும் ”ஆஃபீசர்”தானா சகோ?//
ReplyDeleteசின்ன பொன்ணுக்கு தான் நீங்க ஆபிசர்
எனக்கு அண்ணாவாக்கும்!!
சீக்கிரம் ஓலப்பொட்டில தீபாவளி சீர் அனுப்பி வைங்க தங்கச்சிக்கு :-)
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteஎனது அறிமுகங்களுக்கு நன்றி!
//நைட்டு தூக்கமே வரலை பொண்ணு…. புரண்டு புரண்டு படுத்து 4 தடவ டொபுக்கடீர்ன்னு கீழே விழுந்துட்டேனா பாத்துக்கோயேன் :-( //
ReplyDeleteநாலாவது நாளேயாவா..!!!ஹா..ஹா.. :-)))
அழகான அறிமுகங்கள் :-))
ReplyDeleteஆமி அறிமுகங்கள் சூப்பரா வித்யாசமா இருக்கு எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete:-)
ReplyDeleteசற்றும் எதிர்பார்க்கலை ஆமினா....ஒரே பதிவில் நிறைய நண்பர்களை ஒன்று சேர்த்து இருக்கின்றீர்கள். உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeletesuper
ReplyDeletesuper
super
fantastic
அறிமுகத்திற்கு நன்றி ஆமினா.
ReplyDelete///அந்த பய தமிழ்வாசிதேன்… செவனேன்னு போன என் வூட்டுக்காரர்ட்ட தீபாவளிக்கு கடைக்கு போறீங்களா கவனம்னு எச்சரிக்கை போட்டுட்டாக……. அதுனால எனக்கு சரியாவே எடுத்துகொடுக்கல…. நாலே நாலு அனுஷ்கா சேல எடுத்தேன் ////
ReplyDeleteஆகா, நாம போட்ட இடுகை ஆமினா வீட்டுக்காரருக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கே... எப்படியோ நாலு அனுஷ்காவ வாங்கிட்டிங்களே...
அனைத்து அறிமுகங்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகதை வடிவில் அழகிய அறிமுகங்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
This comment has been removed by the author.
ReplyDeleteரொம்ப நன்றிங்க... என்னுடைய இந்த பதிவை தேடி அறிமுகப்படுதியதற்கு... இன்றுவரை எனக்கு மனநிறைவான பதிவு இது :))
ReplyDeleteஉரையாடல் வடிவில் அறிமுகங்கள் வித்தியாசமாக இருந்தது... அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஸலாம் சகோ.ஆமினா,
ReplyDeleteவலைச்சரத்தில் என் 'காபி-பேஸ்ட்' பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ.
அனுபவம் தானே வாழ்க்கை சூப்பர்...
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல:)
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .,
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி.அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவித்தியாசமான அறிமுகம்.. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ...
ReplyDeleteஒரு கதை வாசிப்பு போல உண்டான அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் அமினா
ReplyDeleteஅருமையாக அறிமுகப்படுத்தினீங்க அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..
எல்லாமே நல்ல அறிமுகங்கள். எனது பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி.....
ReplyDeleteவாழ்க வளமுடன்!
கலக்கலா அறிமுகம் பண்ணிக்கிட்டிருக்கீக ஆமி....வாழ்த்துக்கள்..
ReplyDeleteஸலாம் சகோ.ஆமினா நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள் !
ReplyDeleteஎன் நண்பரின் கோபம் பற்றிய கட்டூரையை என் தளத்தில் பகிர்ந்திருந்தேன் தாங்களும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி !
நன்றி ஆமினா, வித்தியாசமாகவும் இருக்கு, வாழ்த்துகள்
ReplyDeleteஎன்னை இங்கே அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுக படுத்திய விதம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
en pathivaiyum arimukap paduthiyatharku nandri
ReplyDeleteவாழ்த்திட்ட கருத்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல!!
ReplyDeleteஉங்கள் உற்சாகத்தால் தான் என்னால் தொடர்ந்து செயல்பட முடிந்தது... உங்களின் பங்கு தான் இதில் அதிகம்
அனைவருக்கும் மிக்க நன்றி சகோஸ்