இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
தலைப்பை பார்த்து டெரர்ரா இருக்கும்னு நெனச்சு வரவங்களுக்கு நிர்வாகம் சார்பில் காளிமார்க் சோடா பார்சல்…….
தன் திறமையை வெறும் மொக்கை பதிவுகளில் அடக்காமல் கதை,கவிதை, சமையல், கைவினை, தொழில் நுட்பம், புகைப்படம், சமூக விவாதம் என அனைத்து பகுதிகளிலும் புகுந்து விளையாடும் பெண்களை பற்றியான தொகுப்பு
வா சின்ன பொண்ணு.........வா........... உன்னைய தான் விடியகருக்காலருந்து தேடிட்டிருந்தேன்.
ஆத்தா…..உனக்கு சேதி தெரியுமா?
ஹும்ஹும் தெரியாதுசின்ன பொண்ணு:-( நீ வந்த பொறவு நியூஸ் பாக்குறதையே விட்டுட்டேன் :-/
நம்ம அமைதிச்சாரல் இருகுல…… அதான் எப்பவும் குருவி,புறாலாம் போட்டோ பிடிச்சுட்டு இருக்குமே! கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏன் எனக்கு மட்டும் இப்படிலாம் நடக்குதுன்னு புலம்பிட்டு இருந்தாவ. அதோட சேர்த்து பல்பு வாங்குன கதை தான் இப்ப ஊர் பூராவும் ஒரே பேச்சு
அட அப்படியா?
அட ஆமாங்குறேன். அப்பறம் அந்த தீபிகா பொண்ணு.
ஆங்…… சாரு கூட பாராட்டுனாரே……. ஆனா எதுக்குன்னு தெரியல
என்ன இப்படி ஒன்னும் தெரியாத அப்பாவியா இருக்க.. அந்த பொண்ணு தான் பாட்டி வட சுட்ட கதைய சொல்லுச்சு. இப்ப பரிச்சைக்கு போயிருக்கு.
அப்படியா…. சரி பிரஷா கவிதை எழுதுவாங்கன்னு தான் தெரியும். டெக்னிக்கல்லா பதிவு கூட போடுவாகளாம்ல அப்படியா?
ஆமாம். தெரியாதா உனக்கு?அன்னைக்கு கூட என்னமோல சொல்லிட்டிருந்துச்சு..... ஆங் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரியுமா உனக்கு?
தெரியாதே….
அப்ப படிச்சு பாரு. புரியும்.
ம் கண்டிப்பா
ஷர்மி தெரியுமா உனக்கு?
ம் கேள்விபட்டேன். ஏரியாவுக்கு புதுசா வந்துருக்காகளாம்ல?
அட அப்படியா?
பின்ன இல்லையா பின்ன? சுந்தரா தான் இப்படியும் கொடும நடக்குமான்னு அந்த விஷயத்த சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுச்சு பாவம். கேக்கும் போதே நெஞ்செல்லாம் துடிச்சுச்சு.
ஐய்யோ பாவமே
சரி அத விடு. டிரங்கு பொட்டி ஹுசைனம்மா இருக்காகளே…. அவங்க தான் இப்படி குப்ப தொட்டி கொடுத்தா எப்படி குப்ப போட மனசு வரும்னு எல்லார்க்கிட்டையும் சொல்லிட்டிருந்தாங்க.
அப்படியென்ன விஷேஷமான குப்ப தொட்டியாம்?
அதெல்லாம் நீயே போயி விஷாரிச்சுகோ. உனக்கு விஷாலி தெரியுமா? அதான் வியட்நாம் விஷாலி
ஆங் தெரியுமே…..
அவங்க மொத மொத வியட்நாம் போன அனுபவத்த சொல்லிட்டிருந்தாங்க. பயம் என்னை விட்டுன்னு. கீதா அசலூர்ல இருக்கும்போது அங்கே பேசுற புரியாத பாஷைலாம் சொல்லிட்டு இருந்தாவ. தெரிஞ்சுக்கணும்னா ஒரு எட்டு போயிட்டு வந்துடு.
ஓ அப்படியா
அட ஆமாங்குறேன்…..அப்பறம் கவிதா புள்ள. கன்னா பின்னான்ன்னு கதம்பம் கட்டி வச்சுச்சு. ஆனாலும் அதுவும் அழகா இருந்துச்சு தெரியுமா?
ஆமா நா கூட பாத்தேன். நல்லா கட்டி இருந்தாக
இது வேறையா ? எனக்கு தெரியாதே
அது கொல்ல காலமாச்சு. அப்பறம் ராஜி இருக்காங்களே……… அந்த புள்ளதேன் பிரபல பதிவர்களோட சின்ன வயசு போட்டோலாம் கலெக்ட்டு பண்ணி எல்லாருக்கும் காமிச்சுச்சு. அடையாளம் கண்டுபிடிக்குறதுல கஷ்ட்டமே படமுடியாத அளவுக்குல இருந்துச்சு எல்லா போட்டோவும்
என்கிட்டையும் தான் காமிச்சாக. நல்லவேள என் போட்டோ மாட்டல ஹி…ஹி…ஹி….
பரவாயில்லையே சின்ன பொண்ணு. இதெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்க?
பின்ன காய்கறி கொடுத்தோமா வந்தோமான்னு இருந்தா எப்படி நாலு மனுஷ மக்களோட பழவுறது?
அதுவும் சரி தான்.
கொஞ்ச நாளா ரொம்ப சூடான விஷயமே இந்திரா சொன்ன விஷயம் தான்.
ஜோக்கா பேசுவாகளே…. தலைப்பு கூட பக்காவா வைப்பாகளே அவுகளா? என்னவாம்? என்ன விஷயம் சொன்னாக?
அடக்கொடுமையே. அப்பறம்?
அப்பறம் என்ன? மகா இருக்குல? அதான் ஸ்டேட் போர்ட் மற்றும் மெட்ரிக் பாடதிட்டங்களோடு சமச்சீர் பொது பாடத்திட்டத்தை ஒப்பிடுவது தவறுன்னு சொன்னாக
ம். அதுவும் சரி தான்.
அட இது எப்ப?
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதேன். இன்னொரு விஷயம் தெரியுமா? எப்பவுமே அக்கம் பக்கம் பார்த்து பேசுமே அமுதா…. அவுங்க பிரியாணி ஆக்குனாகளாம். அத எப்படி செஞ்சேங்குறத 2 பக்க கதையா எழுதியிருக்கான்னா பாத்துக்கோயேன்.
அவ்வளவு பெரிய செய்முறையா?
அதெல்லாம் நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ. ஏஞ்சலின் தெரியுமா உனக்கு??
ஆங்….. வீடு முழுக்க அவுக கையாலேயே செஞ்ச பொருட்கள வச்சு அலங்கரிப்பாங்களே அவுகளா??
இந்……….த்தா………சரியா சொல்லிட்ட………..அந்த பொண்ணேதேன். சர்ச் போனுச்சாம். அங்கே நடந்த ஒரு கலியாணத்த பாத்துப்புட்டு
உன்கிட்ட மட்டுமா சொன்னாக? நானும் தான் கேட்டேன்
இலங்கை பொண்ணு அதிரா இருக்கே………
ம் எப்பவும் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ன்னு பூன பாசையிலேயே பேசுமே?
ம் அந்த பொண்ணுதேன். விவாகரத்து பத்தி பேசிட்டு இருந்துச்சு. பொம்பளைங்கனால கூட இப்ப அதிகமாகுதாம்.சொல்லிட்டுருந்துச்சு.
அப்படியா……இப்படியும் புரியுற மாதிரி பேசுமா?…….. நா கூட அந்த பயபுள்ளைய என்னமோல நெனச்சேன். அதுக்குள்ளையும் என்னவோ இருந்துருக்கு பாரேன்.
சரி உங்கிட்ட பேசிட்டே இருந்ததுல நேரம் போய்டுச்சு. இந்நேரம் 4 தெருக்குள்ள போயிருந்தாலும் வித்துருப்பேன். சரி வரட்டுமா? கதவ நல்லா சாத்திக்கோ.
ம்ம்
எப்பவும் பதினாறு வயசுல ஒரு அம்மா சுத்திட்டு இருக்குமே?! அது திருடன் வீட்டுக்குள்ள வந்த ஒரு கதையையும் தாழ்ப்பாள் எப்படி இருக்கணும்னு சொலிட்டுருந்தாவ. அத தெரிஞ்சு வச்சுக்கோ. நாள பின்ன வாரேன்.
கண்டிப்பா வந்துடு சின்ன பொண்ணு. உன்ன நம்பி தான் நானும் இங்கே பொழப்ப ஓட்டிட்டிருக்கேன் :-(( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அடுத்த பதிவு- வித்தியாசமாய் :-)
|
|
'எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்'!! சிறப்பான பதிவு! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் ஆமி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆமினா.
ReplyDeleteதங்களுக்கும் ஐயா சீனா அவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅறிமுகம் சூப்பர் ஆமினா....
ReplyDeleteஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......
ReplyDeleteஅட இது எப்பத்திலிருந்து ஆச்சரியாமா இருக்கு
ReplyDeleteபுதுப் பதிவர்களை ஊக்குவிக்கும் உங்கள் வலைச்சரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அதில் என்னையும் குறிப்பிடக்கூடிய பதிவராய்த் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி...
ReplyDelete//பின்ன காய்கறி கொடுத்தோமா வந்தோமான்னு இருந்தா எப்படி நாலு மனுஷ மக்களோட பழவுறது?//
ReplyDeleteஊர் ரெண்டுபடாம இருந்தா சந்தோஷம்தான் :-)))
ஒரு சிலர் தெரியாதவர்கள் .பழகிடுவோம் :-)))
தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!
ReplyDeleteஎன்னை அறிமுகபடுத்தியதற்கு
மிக்க நன்றி ஆமினா...
கதைத்தபடியே.... அழகாக பதிவர்களை...அறிமுகபடுத்தியிருக்கீங்க சகோ!
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..
முதலில் காளி சோடா தந்து உபசரிதத்துக்கு ஹி ஹி நன்றி நன்றி
ReplyDeleteஒவ்வொருவரையும் அறிமுகம் செய்வித விதம் மிக அருமை .
என்னை அறிமுகம் செய்ததுக்கும் மிக்க நன்றி .தொடர்ந்தும் அசத்துங்கள் .தொடர்கிறோம் .
ஆமினா நிறைய அசத்தலான அறிமுகங்கள்.கடும் உழைப்பு தெரிகிறது..
ReplyDeleteரொம்ப நல்லா தொடுத்து இருக்கீங்க.. :) எவ்ளோ கலெக்ஷன்ஸ்.. கிரேட்..
ReplyDeleteஅதில் என்னையும் சேர்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க :)
புதிய அறிமுகங்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பு.
ReplyDeleteஅத்தோடு என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ஆமினா!
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஎன்னை அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி ஆமினா.
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
மற்ற அறிமுகங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
தொடர்ந்து கலக்குங்க ஆமினா.
உஸ்ஸ்ஸ்ச் அப்பாடா.. அங்கின பஸ் பிடிச்சு, இங்கின ரெயின் பிடிச்சு.... கடேசில ஒரு குட்டி பிளேனை வாடகைக்கு எடுத்து கரீட்டா.. வலைச்சர வாசல்ல வந்து இறங்கினா.... லைட்டுப் போட்டிட்டாங்கோ... இருண்டிட்டுதாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
ReplyDeleteஅறிமுகங்கள் ஒரு குட்டிக் கதையாகச் சொல்லப்பட்ட விதம் மிக அருமை.
என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மியாவும் நன்றி.
//அப்படியா……இப்படியும் புரியுற மாதிரி பேசுமா?…….. நா கூட அந்த பயபுள்ளைய என்னமோல நெனச்சேன். அதுக்குள்ளையும் என்னவோ இருந்துருக்கு பாரேன். //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
காளிச்சோடாவா? அதென்னது புயுப்:) பெயரா இருக்கு?:)).
ReplyDelete//ஜெய்லானி said...
/
ஒரு சிலர் தெரியாதவர்கள் .பழகிடுவோம் :-))////
“இருக்கிறதை எல்லாம் விட்டுப்போட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படக்கூடாதாம்” எனச் சொல்லி வையுங்க ஆமினா....:))))...
ஹையோ தெரியாமல் வாயில வந்திட்டுது... படிச்சதும் கிழிச்சிடுங்க ஆமினா... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))).
வணக்கம் அக்கா,
ReplyDeleteநலமா?
இன்றைய பெண் படை - பெரும் படையின் அறிமுகங்கள் அனைத்தும் அசத்தல்.
தொடர்ந்தும் அனைவரையும் காத்திரமா எழுதும் வண்ணம் வேண்டுகிறேன்.
ஹி...ஹி...
@மாதவி
ReplyDelete//எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்'!! சிறப்பான பதிவு! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்! //
வருகைக்கு நன்றி மாதவி
@மாமி
ReplyDelete//சிறப்பான அறிமுகங்கள் ஆமி அனைவருக்கும் வாழ்த்துக்கள். //
நன்றி மாமி
@காந்தி பனங்கூர்
ReplyDelete//அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆமினா.
தங்களுக்கும் ஐயா சீனா அவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி காந்தி
உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@ராஜி
ReplyDelete//தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். //
மிக்க நன்றி ராஜி
@நிகாஷா
ReplyDelete//அறிமுகம் சூப்பர் ஆமினா.... //
நன்றி நிகாஷா
@அம்பாளடியாள்
ReplyDelete//என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு ....... //
மிக்க நன்றி அம்பாளடியாள். உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@ஜலீலாக்கா
ReplyDelete//அட இது எப்பத்திலிருந்து ஆச்சரியாமா இருக்கு //
இந்தவாரத்துல இருந்துதேன் :-)
@ஷர்மி
ReplyDelete//புதுப் பதிவர்களை ஊக்குவிக்கும் உங்கள் வலைச்சரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அதில் என்னையும் குறிப்பிடக்கூடிய பதிவராய்த் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி...//
வருகைக்கு நன்றி ஷர்மி
@ஜெய்
ReplyDelete////பின்ன காய்கறி கொடுத்தோமா வந்தோமான்னு இருந்தா எப்படி நாலு மனுஷ மக்களோட பழவுறது?//
ஊர் ரெண்டுபடாம இருந்தா சந்தோஷம்தான் :-)))
ஒரு சிலர் தெரியாதவர்கள் .பழகிடுவோம் :-))) //
ஹி...ஹி...ஹி...
சின்ன பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு :-)
@கீதா
ReplyDelete//தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!
என்னை அறிமுகபடுத்தியதற்கு
மிக்க நன்றி ஆமினா..//
உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கீதா
@மாய உலகம்
ReplyDelete//கதைத்தபடியே.... அழகாக பதிவர்களை...அறிமுகபடுத்தியிருக்கீங்க சகோ!
இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.. //
நன்றி மாயா
@ஏஞ்சலின்
ReplyDelete//முதலில் காளி சோடா தந்து உபசரிதத்துக்கு ஹி ஹி நன்றி நன்றி
ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்வித விதம் மிக அருமை .
என்னை அறிமுகம் செய்ததுக்கும் மிக்க நன்றி .தொடர்ந்தும் அசத்துங்கள் .தொடர்கிறோம் . //
நன்றி ஏஞ்சலின்
@ஆசியா
ReplyDelete//ஆமினா நிறைய அசத்தலான அறிமுகங்கள்.கடும் உழைப்பு தெரிகிறது.. //
நன்றி ஆசியா
@கவிதா
ReplyDelete//ரொம்ப நல்லா தொடுத்து இருக்கீங்க.. :) எவ்ளோ கலெக்ஷன்ஸ்.. கிரேட்..
அதில் என்னையும் சேர்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க :) //
:-)
வருகைக்கு நன்றி கவிதா. ரொம்ப அருமையா எழுதுறீங்க... வாழ்த்துக்கள்
@சுந்தரா
ReplyDelete//புதிய அறிமுகங்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பு.
அத்தோடு என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ஆமினா//
வருகைக்கு நன்றி சுந்தரா
@ஆயிஷா
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
வருகைக்கு நன்றி ஆயிஷா
@அதிரா
ReplyDelete//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). //
இதுவும் மியாவ் பாசை தானா? மாயாவுக்கு தான் புரியும் :-)
@அதிரா
ReplyDelete//காளிச்சோடாவா? அதென்னது புயுப்:) பெயரா இருக்கு?:)).
//
ஹி...ஹி...ஹி...
நம்மூர் பக்கம் வந்ததில்லையா :-)
//“இருக்கிறதை எல்லாம் விட்டுப்போட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படக்கூடாதாம்” எனச் சொல்லி வையுங்க ஆமினா....:))))...
//
நா ஒன்னும் சொல்லல..... எல்லாமே அதிராவே திட்டமிட்டு செய்த சதி.. மீ எஸ்கேப்பூ :-)
@நிரூ
ReplyDelete//வணக்கம் அக்கா,
நலமா?
இன்றைய பெண் படை - பெரும் படையின் அறிமுகங்கள் அனைத்தும் அசத்தல்.
தொடர்ந்தும் அனைவரையும் காத்திரமா எழுதும் வண்ணம் வேண்டுகிறேன்.
ஹி...ஹி//
கண்டிப்பா எழுதுவாங்க
வருகைக்கு நன்றி தம்பி
அருமை
ReplyDeleteநன்றி சகோ சூர்யஜீவா
ReplyDeleteஇந்த படை பெரிய படை போல
ReplyDeleteசோடா குடிச்சி குடிச்சி படிக்கனும் போல
அறிமுகத்திற்கு நன்றி ..மற்ற அறிமுகங்கள் அசத்தல்.
ReplyDeleteஆஹா.. அறிமுகத்துக்கு நன்றி ஆமி.. சின்னப்பொண்ணு கிட்ட சொல்லிருங்க :-))
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்..
ReplyDeleteதீபாவளி லீவு முடிஞ்சு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
வாழ்த்திட்ட கருத்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல!!
ReplyDeleteஉங்கள் உற்சாகத்தால் தான் என்னால் தொடர்ந்து செயல்பட முடிந்தது... உங்களின் பங்கு தான் இதில் அதிகம்
அனைவருக்கும் மிக்க நன்றி சகோஸ்
வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்னையும் மறக்காமல் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ஆமினா.