போஜனம் செய்ய வாருங்கள்!
➦➠ by:
ஆதி வெங்கட்,
நான்காம் நாள்
மதுரையில் குடிகொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் எப்படி நடந்தது, அந்த திருக்கல்யாணத்தில் சாப்பிட என்னன்ன கொடுத்தார்கள் என்பதற்கு ஒரு பாட்டு இருக்கிறது. பாம்பே சகோதரிகள் பாடிய அந்த ”போஜனம் செய்ய வாருங்கள்…” பாடலைக் கேளுங்கள்…
Bhojanam Seyya Vaarungal | Online Karaoke
என்ன பாடலைக் கேட்டீர்களா? பாடலில் வரும் அத்தனை வகை உணவுகளையும் இப்போது சமைக்க யாராவது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இன்றைய வலைச்சரத்தில் சமையல் குறிப்புகள் எழுதும் சில பதிவர்களின் பக்கங்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறேன்.
”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று தனது பக்கத்தின் தலைப்பில் எழுதி வைத்திருக்கும் சகோதரி கமலா தனது அடுப்பங்கரை பக்கத்தில் வித்தியாசமாக பப்பாளிப் பழ கேசரி என்ற இனிப்பினை நம்முடன் பகிர்ந்து இருக்கிறார். படத்தைப் பார்த்த உடனேயே சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது. நீங்களும் செய்து அசத்துங்களேன்.
சாதாரணமா குடைமிளகாயை சாம்பார்ல போடுவோம். ஆனா குடை மிளகாய் வைத்து பொரியல் கூட செய்யலாம் என்பதை சொல்லிக் கொடுக்கிறார் மழை மேகம் சகோ சுந்தரா. அந்தப் பக்கத்தில போட்டு இருக்கிற பச்சைப்பசேல் குடை மிளகாயைப் பார்த்தாலே செய்து சாப்பிடணும்னு ஆசையா இருக்கு! என்ன பொரியல் செய்தபிறகு எப்படி இருக்கும்னுதான் படம் போடல. அதுனால என்ன, இன்னிக்கு சமைச்சுப் பார்த்துட்டா போச்சு என்கிறீங்களா? அதுவும் சரிதான்.
சில சமையல் குறிப்புகள் ஆங்கில நாளிதழ்களிலோ அல்லது புத்தகங்களிலோ வரும்போது அவற்றைப் பார்க்கும்போது நன்றாக இருக்கும். செய்து பார்க்கலாம் என்றால் அவற்றில் தேவையான பொருட்கள் என்று ஆங்கிலத்தில் போட்டிருப்பது தமிழில் என்ன பொருள் என்று தெரியாது. அந்தப் பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதா? கவலைப் படேல். உங்களுக்கு உதவ இங்கே சென்று பாருங்கள். தீர்ந்ததா உங்கள் பிரச்சனை?
மீனா.கே. என்கிற சகோதரி “அம்மாவின் சமையல்” என்ற வலைப்பூ வைத்திருக்கிறார். செட்டி நாடு சமையல் என்றால் சுவையாக இருக்கும் அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் என்று சொல்லும் இவர் செய்திருக்கும் வெள்ளைப் பணியாரம் எப்படி இருக்குன்னு இங்கே பாருங்க.
மங்கையர் உலகம் என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் சகோதரி அனிதா சமையல் குறிப்புகள் என்ற பதிவில் நிறைய குறிப்புகளை எழுதி இருக்கிறார். மேலும் மருத்துவக் குறிப்புகள், நவராத்திரி பற்றிய பதிவுகள் என பல விஷயங்களில் பதிவுகள் வெளியிட்டிருக்கிறார்.
இந்த மாதத்தில் தீபாவளி வரப்போகிறது. முன்பெல்லாம் நிறைய வீடுகளில் தீபாவளி மருந்து கிளறுவார்கள். இப்போது அதை எப்படிச் செய்வது என்றே பலருக்குத் தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்காகவே சகோதரி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் ”தீபாவளி மருந்து” செய்வது பற்றி எழுதி இருக்கிறார் இங்கே.
இன்றைய வலைச்சரத்தில் ஸ்வீட், காரம், மருந்து எல்லாம் பார்த்தாச்சு.. இனி நாளை வெள்ளிக்கிழமை என்ன என்று கேட்பவர்களுக்கு, “நாளை காலை தெரிந்துவிடும்! அதுவரை காத்திருங்கள்!
நாளை சந்திப்போம்…..
நட்புடன்
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteநேற்று இது எங்க ஏரியான்னு தலைப்பைப் பார்த்ததுமே சமையல் தொகுப்பை எதிர்பார்த்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎல்லா பதிவர்களும் எனக்கு புதியவர்கள்.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete'போஜனம் செய்ய வாருங்கள்' கேட்டதுமே சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது.பகிர்விற்கு நன்றி
தீபாவளி நேரத்தில் தேவையான லேகியம் செய்வது எப்படி கொடுத்து விட்டீர்கள்.
ReplyDeleteஎல்லோரும் புதியவர்களே படித்து விடுகிறேன்.
அறிமுகம் நல்லா இருக்கிறது.
வாழ்த்துக்ககுள் ஆதி.
இன்று அருமையான சாப்பாடு.
ReplyDeleteஜீரணமாக தீபாவளி லேகியம் வேறு.
அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
ReplyDeleteஅருமையான போஜனப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...
சூப்பரான பாட்டு.கேக்கவே ஆசையா இருக்கு.அனைவரும் எனக்கு புதியவர்களே.அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteசூப்பரான பாட்டு.கேக்கவே ஆசையா இருக்கு.அனைவரும் எனக்கு புதியவர்களே.அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவயிறும் மனதும் நிறைந்துவிட்டது.
ReplyDeleteநல்ல பாட்டு ஆதி.
ReplyDeleteஅருமையான பகிர்வு. மிக்க நன்றி
பகிர்விற்கு நன்றி
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஇன்று என் வலையில் ...
ReplyDeleteபாவம் நடிகர் விஜய்
தீபாவளிக்கு முன்னாலேயே விருந்தா? ஒரு கை (!!!) பார்த்துவிட வேண்டியதுதான்.
ReplyDeleteஇன்று அனைத்தும் சமையல் குறிப்பா?
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete@ கலாநேசன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ ராஜி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிப்பா.
ReplyDelete@ கோமதி அரசு: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிம்மா.
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றி சார்.
ReplyDelete@ ரத்னவேல்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றி அய்யா.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ thirumathi bs sridhar: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிப்பா.
ReplyDelete@ கோகுல்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ லக்ஷ்மி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிம்மா.
ReplyDelete@ புதுகைத் தென்றல்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ சமுத்ரா: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ "என் ராஜபாட்டை"- ராஜா: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ வேங்கட ஸ்ரீனிவாசன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றி அண்ணா.
ReplyDelete@ suryajeeva: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ சே.குமார்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDeleteஒவ்வொன்றாய் படித்து பிடித்ததை செய்து சாப்பிடணும்..
ReplyDeleteஎன்னது நாளைக்கு வரை காத்திருக்கணுமா?
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
அழகாய் தொகுத்தளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.
நல்ல "போஜனம்" கிடைத்தது.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
பாட்டும் பிரமாதம் ...சமையல் அறிமுகங்களும் பிரமாதம்
ReplyDeleteபுதிதாய் சிலரை அறிந்ததில் மகிழ்ச்சி...நன்றி ஆதி
ReplyDeleteஅருமை... அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteபப்பாளி பழக்கேசரி,கொடைமிள்காய்ப் பொரியல், சமையலிற்கு உபயோகப்படும்
ReplyDeleteபொருட்களின் தமிழ் ஆங்கில சொற்கள்,தாவரவியல் பெயரும் கூட,செட்நாடு வெள்ளைப்பணியாரம்,ஏகப்பட்ட சமையல் டிப்ஸ்,தீபாவளி லேகியம் என்று போஜனப் பகுதியை வித்தியாசமாய் பகிர்ந்து அசத்திவிட்டீர்கள்.பகிர்வுக்கு நன்றி..
பசிக்குது
ReplyDelete@ அமுதா கிருஷ்ணா: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ சத்ரியன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ மாதேவி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ பத்மநாபன்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ அப்பாவி தங்கமணி: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ மாய உலகம்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ ஆசியா உமர்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க.
ReplyDelete@ மோகன் குமார்: தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றிங்க சார்.
ReplyDeleteஅருமையான பாடல் பகிர்வுக்கும் அறிமுகத்துக்கும் என் நன்றிகள்!
ReplyDelete@ சுந்தரா: நன்றிங்க.
ReplyDelete