வலைச்சரத்தில் ராகங்கள்- 1
➦➠ by:
திருமதி.மனோ சாமிநாதன்
பொதுவாய் நடன நிகழ்ச்சிகளில் குருவிற்கு முதலில் நன்றி சொல்லி ஆரம்பிப்பார்கள். அது போல நானும் இங்கே நன்றி சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
பன்னிரண்டு வயதில் எனக்கும் என் தங்கைக்கும் கர்நாடக சங்கீதம் பயிற்றுவித்து, கோவிலில் மக்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்வித்தார்கள் போலீஸ் அதிகாரியாக பணி புரிந்த என் தந்தை. அந்த வயதில் கர்நாடக சங்கீதத்தின் அருமையோ புலமையோ புரியவில்லை. ஸ்வரங்கள் அடுக்கடுக்காய் வந்து விழ, ஆலாபனையில் உச்சத்தைத் தொட்ட நாட்களில் கண் மூடி ரசித்த தந்தையின் 'சபாஷ்'கள் மனதை அப்படியொன்றும் உருக்கியதில்லை.
பின்னாட்களில் இசையை உயிருக்குயிராய் ரசிக்கும், அதிலேயே மூழ்கிப்போகும் மனநிலை வந்த பின்பு தான் சங்கீதம் பற்றிய புரிதல் வந்தது. நல்ல சங்கீதத்தை ரசிப்பதற்கு கொடுப்பினை வேண்டும். ஆனால் அதைப்பற்றிய அறிவும் இசையை அனுபவித்துப்பாட போதுமான திறமையும் அமைந்து விட்டாலோ அதுவே பெரிய வரம். அதை என் மனதில் உயிரில் விதைத்த என் பெற்றோருக்கு நன்றி! இது வரை அந்த விதைக்குத் தண்ணீர் ஊற்றி மேலும் மேலும் என் ரசனையை வளர்த்தும் ஊக்குவித்தும் ஆனந்தப்படுத்திக்கொண்டிருக்கும் என் கணவருக்கு நன்றி!
முதலில் எனக்கு மிகவும் பிடித்த ராகத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.
அது சுத்த தன்யாசி!
நாதஸ்வரத்தின் கம்பீர இனிமையில் சுத்த தன்யாசி மயக்க வைக்குமென்றால் வயலின் இசையில் சுத்த தன்யாசி அப்படியே மெய்யுருக வைக்கும்.
மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுக்கும் ராகங்களில் ஒன்று இது!இந்த ராகம் அப்படியே ஆளை மயக்கக் கூடியது. இந்த ராகத்தை முத்துச்சுவாமி தீட்சிதர் வழிவந்தவர்கள் உதயரவிச்சந்திரிகா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். ஹிந்துஸ்தானி இசையில் இந்த ராகத்தை தனி [ Dhani ] என்று அழைக்கின்றனர்.
திரை இசையமைப்பாளர்களும் இந்த ராகத்தை பெருமளவில் பயன்படுத்தி பெருமை சேர்த்திருக்கின்றார்கள். மொழி எல்லைகளைக் கடந்து இந்திய திரை இசையை வளப்படுத்திய ராகங்களில் இதுவும் ஒன்று.
முதலில் ஒரு கர்நாடக சங்கீதம். அன்னமாச்சார்யாவின் புகழ்பெற்றை கீர்த்தனை இது. பல புகழ்பெற்ற பாடகர்கள் இதைப்பாடியிருக்கிறார்கள். ஆனால் கமகங்கள் அதிகம் இல்லையென்றாலும் இவரின் குரல் என்னை மிகவும் வசீகரித்து விட்டது. நீங்களும் கேட்டு ரசியுங்கள்!
அன்றும் என்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் முதலிடத்தில் இருப்பது இந்தப்பாடல். கண்ணதாசனின் அழியாத வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் நம்மை மயங்க வைக்கிறார் பி.சுசீலா!
இளையராஜாவும் சுத்த தன்யாசியை வைரமுத்துவின் வரிகளில் அப்படியே இழைக்கிறார் இங்கே!
இனி பதிவர்களின் அறிமுகம்:
1. அருமையான கருத்துக்களால் நிரம்பிய பதிவுகள் கொண்ட பூவனம் இவருடையது. ஜிவியின் மறக்க முடியாத மதுரை நினைவுகளை படித்துப்பாருங்கள். நான்கு பாகங்கள் படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றன!!
2. சாதாரண கட்டிக்கும் கான்ஸர் கட்டிக்கும் எப்படி வித்தியாசம் காண்பது என்பதை இங்கே அழகாகச் சொல்லியிருக்கிறார் இணையக்குயில் துரை டேனியல்!!
3. வாழ்க்கையை ஒரு வங்கிக் கணக்காக கற்பனை செய்து மிக அழகாய் எழுதியிருக்கிரார் இங்கே அவனி சிவா தன் உண்மையுடன் கொஞ்சம் பொய் என்னும் தன் வலைத்தளத்தில்!
4. அரசியல், ஜோதிடம் என்று பற்பல துறைகளில் இருக்கும் ஏமாற்றுக்காரர்களை நயம்பட சாடுகிறார் ஊரான் தன் வலைத்தளத்தில்! மாதிரிக்கு இங்கே ஒன்று!!
5. எண்ணங்கள் இனியவையாக எப்போதுமே இருக்காது. சில சமயங்களில் நாம் வேண்டாம் என்று மறுத்தாலும் இதயத்தின் அடித்தளத்தில் நீரு பூத்த நெருப்பாய் கிடக்கும் சில வலிகளின் நினைவுகள் பீரிட்டுக்கொன்டு மேலெழும்பும். தன்னை பாதித்த மரணங்கள் பற்றி இங்கே இவர் எழுதியிருப்பதைப் படிக்கையில் நம் மனமும் நெகிழ்ந்து கலங்குகிறது.
6. தன்னம்பிக்கை இருந்தால் தரணியை வெல்லலாம் என்றும் "முடியாது என்பது மூட நம்பிக்கை, முடியுமா என்பது அவ நம்பிக்கை, முடியும் என்பதே தன்னம்பிக்கை" என்றும் இங்கே திரு எழிலன் சொல்கிறார் தன் காளிங்கராயர் என்ற வலைத்தளத்தில்!
7. மதுரன் ரவீந்திரன் இங்கே தனக்குப்பிடித்த கல்கியின் நாவல்களைப்பற்றிச் சொல்கிறார். கல்கியின் 'சிவகாமியின் சபதம்' பற்றி விவரிக்கும்போது, சிவகாமியும் நரசிம்ம பல்லவரும் ஊடல் கொண்டபோது தானே தூது போனதாகச்சொல்லி கற்பனைப்பறவையின் சிறகுகள் விரித்து வானில் பறக்கிறார்! இதுவரை 'சிவகாமியின் சபதம்' படித்திராதவருக்குக்கூட ஒரு முறையாவது படித்து விடத்தோன்றும் அளவு அத்தனை அழகாயிருக்கிறது இவரது எழுத்து!
8. யாதவன் நம்பி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் புதுவை வேலு மெளனத்தின் சக்தியைப்பற்றி மிக அழகாய் இங்கு சொல்லுகிறார்.
9. பெண்ணை சக உயிரினமாக,தோழமையாகப் பார்க்கிறார் தன் பெயரிலேயே வலைத்தளத்தை வைத்திருக்கும் தியாகு!
10. இன்றைய மாணவர்கள் அதாவது நாளைய உலகத்தின் பிரதிநிதிகள் எவ்வாறெல்லாம் வகுப்பறையில் இருக்கிரார்கள், எப்படிப்பட்ட சூழ்நிலையில் தினம் தினம் வளர்கிறார்கள், என்ன மாதிரி தரத்தில் அவர்கள் பொழுதுகள் கழிகின்றன என்பதை பரமேஸ்வரி ஆணித்தரமாக, விலாவாரியாக மெல்ல அழுகும் சமூகம் என்று வேதனையுடன் எழுதியிருப்பவற்றைப்படிக்கும்போது மனதில் கலக்கம் வந்து மோதுகிறது.

|
|
வணக்கம்
ReplyDeleteசிறப்பான விளக்கத்துடன் இரசனை மிக்க வீடியோக்கள் எல்லாம் இரசித்தேன் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்து பின்னூட்டமளித்ததற்கு அன்பு நன்றி ரூபன்!
Deleteவணக்கம்
ReplyDeleteஎல்லாம் தொடரும் தளங்கள்தான் அறிமுகத்திற்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ராகங்கள் மனதை வருடின. வேறு ஒரு உலகிற்கு எங்களை அழைத்துச்சென்றமைக்கு நன்றி. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் பதிவை ரசித்ததற்கும் இனிய நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
Deleteஎன்றும் மனதை கவரும் பாடல்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்!
Deleteஅழகான பாடல்களுடன் பதிவர் அறிமுகம்...
ReplyDeleteஅறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா...
இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி குமார்!
Deleteமனதை இளக வைக்கும் பாடல்களுடன் இன்றைய அறிமுகம் அருமை.
ReplyDeleteஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வருகைக்கும் பதிவை ரசித்து பாரட்டியதற்கும் மனமார்ந்த நன்றி சொக்கன் சுப்ரமண்யம்!
Deleteஇனிக்கும் பாடல்களோடு இனிமையான அறிமுகம். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteகருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி வெங்கட்!
Deleteஇசையால் வசமாகா உலகம் எது!..
ReplyDeleteசுத்த தன்யாசி - பற்றிய விளக்கங்களுடன் இன்றைய தொகுப்பு - இனிமை!..
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!
Deleteஆஹா.. அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிகள் சகோ !
ReplyDeleteவருகைக்கும் கருத்திட்டமைக்கும் அன்பு நன்றி மதுரன் ரவீந்திரன்!
Deleteசிறப்பான பதிவு. வாழ்த்துக்கள். த.ம.+
ReplyDeleteஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கவிப்ரியன்!
Deleteநீங்கள் கர்நாடக இசை பயின்றதும், உங்களுக்கு பிடித்த ராகத்தில் பாடல்களை பகிர்ந்து கொண்டதும் அருமை. அப்படியே நீங்களும் இந்த வாரத்தில் ஒருநாள் ஒரு பாடலை பாடி பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் .
ReplyDeleteஇன்று உடம்பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு! கர்நாடக சங்கீதத்திற்கு மிக முக்கியமானது அன்றாடம் சாதகம் செய்வது. இதை என்றோ நிறுத்தி விட்டேன். இப்போது பாத்ரூம் சிங்கர் மட்டும் தான்! சங்கீத அறிவு மட்டும் மறந்து போகாமல் நிற்கிறது!
Deleteசூப்பர்!!! ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் ரசித்துப்பாராட்டியதற்கும் அன்பு நன்றி துளசி!
Deleteகர்நாடக இசையை இசைத்துக்கொண்டே, அதன் அழகிய ராகங்களுடன், நமக்கு மிகவும் பிடித்த மணம் கமழும் பூவனத்திற்கே அழைத்துச்சென்று, மதுரை மல்லியின் மணத்தில் மனதை மகிழ வைத்துள்ளது, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் VGK
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
Deleteஅழகான ராக அறிமுகத்தோடு, இன்றைய அறிமுகங்கள்.
ReplyDeleteஇனிமையான காணொளிப்பாடல்கள்.
இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி பிரியசகி!
Deleteகர்ணன்ல கண்கள் எங்கே பாட்டு என் ஆல்டைம் பேவரைட். மொபைல்ல வெச்சு அடிக்கடி பாக்கறதுண்டு. அதோட ராகம் என்னன்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். தொடருங்க மனோம்மா உங்க அசத்தலை. அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகண்கள் எங்கே பாடல் உங்களுடைய ஆல்டைம் ஃபேவரைட் பாடல் என்று அறிந்த போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது! உங்களின் வார்த்தைகள் எனக்கு அப்படியொரு உற்சாகத்தைக் கொடுத்து விட்டது!
Deleteவருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!
உள்ளம் ஒன்றிட ஒளிக்காட்சியோடு நல்ல பதிவும்
ReplyDeleteபதிவர்கள் அறிமுகமும் சிறப்பு அக்கா!
நன்றியுடன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி இளமதி!
Deleteஅன்னமாச்சார்யாவின் புகழ்பெற்றை கீர்த்தனை
ReplyDeleteகண்ணதாசனின் அழியாத வரிகளில் உருவான பாடல்
இளையராஜா தொடுத்த சுத்த தன்யாசி வைரமுத்துவின் வரிகளில்
"ஒலியும் ஒளியுமாய்" கொடுத்த விதம் போற்றி கொட்டுகிறோம் நன்றி முரசினை!
வாழிய வழியவே!
குழலின்னிசையை பெருமை படுத்தியமைக்கு மிக்க நன்றி!
அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் நனி சிறக்கும் நல்வாழ்த்துக்கள்!
நன்றியுடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com
அருமையான பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி வேலு!
Deleteஎனது தள 'மறக்க முடியாத மதுரை நினைவுகள்' பகுதியை வலைச்சர அன்பர்களுக்கு அறிமுகப்படுத்திய திருமதி மனோ சாமிநாதன் அவர்களின் அன்பு உள்ளத்திற்கு நன்றி.
ReplyDeleteஇந்த வலைப்பதிவைப் பற்றி எனக்குத் தகவல் தெரிவித்த அன்பு நண்பர்களுக்கும் மிக்க நன்றி. அன்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் இனிய நன்றி ஜிவி!
Deleteமனதை இசைய வைத்து ...அறிமுகங்கள்..அருமை சகோ...
ReplyDeleteஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி உமையாள் காயத்ரி!
Deleteசுத்த தன்யாசி இராகம் எனத் தெரியாமலேயே இரசித்த திரைப்படப் பாடல்களை முதலில் கர்நாடக இசையை இரசிக்கவைத்து பின்னர் அவைகளை இரசிக்க வைத்த உங்களின் ‘கச்சேரி’ ஆரம்பத்திலேயே களை கட்டிவிட்டது என்பேன் நான். வாழ்த்துக்கள். இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் அருமையான பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் நடனசபாபதி!
Deleteமுதல் பாடல் அருமை, இரண்டாவது பாடல் நான் தினமும் கேடபது...
ReplyDeleteஇசைக்கு மயங்காதோர் உண்டோ.... அருமையான விரிவாக்கம் வாழ்த்துகள்.
இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
தமிழ் மணம் – 6
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
இனிய பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!
Deleteராக அறிமுகம் இனிமையான பாடல்களுடன் முத்தான பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி தளிர் சுரேஷ்!
Deleteசுத்த தன்யாசி அழகான ராகம். மாஞ்சோலைக் கிளிதானோ, புஞ்சை உண்டு நஞ்சை உண்டு, மாலையில் யாரோ போன்ற பாடல்களும் இதே ராகம். தொட்டால் பூ மலரும் கூட இதே ராகம் என்று நினைக்கிறேன்! :)))
ReplyDeleteஜீவி ஸார் தவிர மற்ற அனைவரும் எனக்குப் புதியவர்கள்.
நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்கள் அனைத்தும் தொட்டால் பூ மலரும் உள்பட சுத்த தன்யாசி தான் ஸ்ரீராம்! ரசித்து கருத்திட்டமைக்கு அன்பு நன்றி!
Deleteசுத்த தன்யாசி இசை இராகத்தை கேட்டவுடன் இசை பற்றி நான் எழுதிய "இசை என்பதே ஒரு கணக்கு என்பார்கள். இசையின் கணக்கும் இதயத்துடிப்பின் கணக்கும் ஒத்திசையும் போது இசையை நாம் இரசிக்க முடிகிறது. இக்கணக்கு முரண்படும் போது இசை நம்மோடு ஒட்டுவதில்லை. இசையின் தாளத்திற்கேற்றவாறு நமது இதயத்துடிப்பும் ஒத்திசைய வேண்டும். இசையின் ஓட்டத்திற்கு நம் இதயத் துடிப்பு ஈடு கொடுக்க முடியாத போது நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது, இசையின் இந்த எளிய கணக்கை நாம் புரிந்து கொள்ளவில்லை எனில் இசை இம்சையானதுதான். 'ஆர்க்கெஸ்ட்ராக்காரர்களுக்கு' இது புரிய வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய இலக்கு அன்றைய வருமானம்." இவ்வாறு எனது மூன்றாவது பதிவில் எழுதியது என் நினைவுக்கு வந்தது. பொருள் தெரியவில்லை என்றாலும் இந்த இசைக் கணக்கு பொருந்திவிட்டால் இரசிகனும் இசையோ இயைந்துவிடுவான் என்பதே எனது கணக்கு. ( Wednesday, November 10, 2010, பாட்டுக் கச்சேரிகள் படுத்தும்பாடு! http://hooraan.blogspot.in/2010/11/blog-post_10.html).
ReplyDeleteஊரானை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை நான் அறிவதற்கு முன்பே yathavan nambi, Dr B Jambulingam, ரூபன் ஆகியோர் தாங்கள் என்னை அறிமுகப்படுதியமைக்கு எனது வலைப்பூவில் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள், பாராட்டி இருக்கிறார்கள். வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தங்களுக்கும் என்னை ஊக்குவித்து ஆதரவளித்து வரும் வலைப்பூ வாசகர்களுக்கும் எனது நன்றி! தங்களால் அறிமுகமாகியிருக்கும் வலைப்பூவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!.
அழகிய கருத்துரைக்கு இனிய நன்றி!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பு நன்றி ஜலீலா!
Deleteமனோ, உங்க வாசகர்களுக்கு இன்னொரு (பழைய) சேதியை இங்கே சொல்லிக்கவா?
ReplyDeleteநம்ம பதிவர் சிமுலேஷன் ( சுந்தரராமன்) , இசை விற்பன்னர். அவர் ராக சிந்தாமணி ன்னு ஒரு புத்தகம் போட்டுருக்கார் 2005லே! அடுத்த ரெண்டே வருசத்தில் இரண்டாம் பதிப்பும் வந்துள்ளது. இதில் கர்நாடக ராகங்கள். தமிழ்சினிமாவில் இடம்பெற்றவைன்னு ஒரு பெரிய பட்டியலே ராகங்களின் பெயர்வரிசையில் இருக்கு. சுத்த தன்யாசிக்கு சுமார் 60 பாடல்கள். மொத்தம் 1819 பாடல்கள் இருக்கு அந்தப்புத்தகத்துலே! எல்லாம் 2005 க்கு முன்னால் வந்தவைகள். இப்போ இன்னும் 10 வருசங்கள் கூடுனதால் புதுசு புதுசா இன்னும் எவ்ளோ வந்துருக்கோ!!!!
கிரி ட்ரேடிங், சப்தஸ்வரா ம்யூஸிகல்ஸ் இப்படி பல இடங்களில் கிடைக்குதாம்.
எனக்கு அவர் கைப்பட அன்பளிப்பாகக் கிடைத்த பொக்கிஷம் இது:-)
இது தவிர அந்த ராக சிந்தாமணியில் சங்கீத சம்பந்தமுள்ள க்விஸ் வேற! சூப்பர் போங்க!
அன்புள்ள துளசி!
Deleteசிமுலேஷன் அவர்களது பதிவுகளை நானும் படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகம், அவை கிடைப்பதாகச் சொல்லியிருக்கும் இடங்கள் எல்லாம் சென்னையிலா? சப்தஸ்வரா ம்யூஸிகல்ஸ் எங்கிருக்கிறது?
விபரங்களுக்கு அன்பு நன்றி.
ஆஹா திரு சுந்தரராமன் சிமுலேஷன் என்று எழுதுகின்றாரா தெரியாமல் போனது இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! துளசி சகோதரி! இந்தப் புத்த்கம் இருக்கின்றது என்னிடம். கச்சேரி buzz, சப்தஸ்வர ம்யூசிக்கல்ஸ், the karnatic music book centre/the indian music publishing home, sripuram first street, royapettah chennai, கிடைக்கின்றது. கீதா
Deleteபுத்தகம் கிடைக்கும் விபரங்கள் சொன்னதற்கு அன்பு நன்றி கீதா! சென்னை பக்கம் போகும்போது வாங்க வேன்டும்!
Deleteசுகமான ராகங்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!
ReplyDeleteஆஹா! சுத்த தன்யாசி.....இதைக் கேட்டவுடன் பாலசந்தரின் படமான உன்னால் முடியும் தம்பி தம்பி.....யில் வரும் நஞ்சை உண்டு புஞ்சை உண்டு.....ஹீரோ பாட அதைக் கேட்டதும் அவர் தந்தை அசுத்த தன்யாசி அசுத்த தன்யாசி என்பாரே அதுதான்...என்ன அருமையான ஒரு ராகம்....
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! கீதா
'உன்னால் முடியும் தம்பி' வசனங்களை நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள்! கருத்திட்டமைக்கு அன்பு நன்றி!
Deleteஅனைவருமே புதியவர்கள் எங்களுக்கு. அறிமுகங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇசை பிடிக்கும் .... ஆனால் அது என்ன ராகம் என்றெல்லாம் ஆராய்ந்ததில்லை. நீங்கள் சொல்லித் தருகிறீர்கள் நான் தெரிந்து கொள்கிறேன் நன்றி. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்பவும் சிம்பிளாக, அதே சமயம் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் எழில்! அன்பு நன்றி!
Deleteநன்றி மனோ சாமிநாதன். கடந்த சில நாட்களாக, கணினியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் பயன்படுத்த இயலாத சூழலிலிருந்தேன். இன்றைக்கு ஆனந்த அதிர்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteவருகைக்கும் அன்பு நன்றி!
ReplyDelete