தமிழ் சோறு போடுமா?
➦➠ by:
கவிப்ரியன்,
தமிழ்,
மின்னூல்
அரசியல்வாதிகளின் பிழைப்புக்கு மட்டுமே தமிழ் என்றாகி பல வருடங்களாகி விட்டது. நகரத்தில் வளரும் பிள்ளைகள் யாரும் தமிழ் எடுத்து படிப்பதில்லை. குறைவான மதிப்பெண் எடுத்து வேறு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்காத சூழலில் தமிழ் படிக்கிறார்கள். யாரும் ஆர்வத்திலோ, வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலோ யாரும் தமிழ் படிப்பதில்லை. அரசும் தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமையோ அல்லது வேறு எந்த சலுகைகளையோ கொடுப்பதில்லை.
ஒரு சில தன்னார்வலர்கள்தான் தமிழை பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கணிணித் துறையிலும் தன்னார்வலர்களே தமிழை முன்னெடுக்கிறார்கள். பழைய நூல்களை மின்னூலாக்கும் முயற்சியிலும், தமிழ் மென்பொருள் கண்டுபிடிப்பிலும் வெகு சிலரே ஈடுபடுகிறார்கள். தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பவர்களும் மிகக் குறைவு. முக்கியமாய் அரசு இதற்கெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு எதில் வருமானமோ அதில்தான் அக்கறையெல்லாம்.
இன்றைய அறிமுகத்தில் சில தமிழ் தொடர்பான வலைத்தளங்களை அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.
அலையல்ல சுனாமி என்ற தளத்தின் விச்சு அவர்கள், தமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று
தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத்
தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி...என்ற முன்னுரையோடு இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை தரவிறக்க இணப்புகளை ஒரே இடத்தில் கொடுத்திருக்கிறார்.
நிலாக்கால நினைவுகள் என்ற தளத்தில் TNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண, பொது அறிவு நூல்களையும் சுஜாதாவின் அனைத்து நூல்களையும் தரவிறக்கம் செய்யலாம். மேலும் வண்ண வண்ண கண்களைக் கவரும் செந்தமிழ் ஃபாண்ட்களை தரவிறக்கம் செய்யலாம்.
சகோதரன் ஜெகதீஸ்வரன் அவர்களின் TAMIL E-BOOKS DOWNLOADS தளத்திலும் தமிழ் நூல்களை தரவிறக்கம் செய்யலாம்.
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? ஆசிரியர் வேலை தவிர்த்து வேறு எந்த வேலையும் தமிழ் படித்தால் கிடைக்காது என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது எத்தனை பெரிய தவறு என்பதை வா. மணிகண்டன் தன் நிசப்தம் தளத்தில் தமிழ் படித்தால் வாத்தியார் என்ற பதிவைப் படித்தபின்தான் புரிந்தது.
எழுத்தாளர் ஆவதும் புத்தகம் வெளியிடுவதும் எல்லோருடைய கனவு என்றே சொல்லலாம். ஆனால் அந்த ஆசை எளிதில் நிறைவேறுவதில்லை. பதிவர்களின் படைப்புக்களை தொகுத்து அதை மின்னூலாக்கும் முயற்சியில் திரு. சீனிவாசன் அவர்கள் இறங்கி நூற்றுக்கும் மேலான நூல்களை அனைத்து கருவிகளிலும் வாசிக்கக்கூடிய வகையில் உருவாக்கியிருக்கிறார். இணைப்புக்கான சுட்டி. இது பற்றிய விபரம் தெரியாதவர்களுக்கும்,படைப்புகளை மின்னூலாக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கும், மின்னூல்களை தரவிறக்கம் செய்ய விரும்புபவர்களுக்கும் இது உதவக்கூடும்.
அன்புடன்,
கவிப்ரியன்.
|
|
நம் இனிய தமிழைக்குறித்த தங்களது பார்வை 100க்கு100 உண்மையே நண்பரே...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
தமிழ் மணம் 2
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி அவர்களே.
ReplyDeleteசிறப்பான தளங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteநன்றி தளிர் சுரேஷ் அவர்களே.
Deleteஓய்வு கிடைக்கும் போதெல்லாம் என் பணிச்சூழல் காரணமாக செல்லும் இடங்களில் டேப் பிசி மூலம் பல மின் நூல்களைத்தான் படித்துக் கொண்டு வருகின்றேன். உங்கள் ஆதரவுக்கு அன்புக்கு என் நன்றி. இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteநானும் இதே முறையைத்தான் பின்பற்றுகிறேன் ஜோதிஜி அவர்களே. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி
Deleteஅண்மைக்காலமாக தமிழ் விக்கிபீடியாவில் எழுதிவருகிறேன். தாங்கள் கேட்ட கேள்வியையே பலர் கேட்டுக்கொண்டு தாய்மொழியைத் தொலைத்துவருகிறார்கள். தாய்மொழியிலிருந்துகூட அன்னியப்பட்டு போய்விட்டோம். வேதனையே.
ReplyDeleteநன்றி டாக்டர்.ஜம்புலிங்கம் ஐயா. விக்கியில் தங்களின் பங்களிப்பைச் சென்று பார்க்கிறேன்.
Deleteதமிழைப் பற்றிய தங்கள் பார்வை சரியே! பல நல்ல தளங்களைத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி துளசிதரன் அவர்களே.
Deleteமின்னூல் - பதிவர்கள் பலருக்கும் பயன் தரும் சுட்டி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் அவர்களே.
Deleteநல்ல அறிமுகம்
ReplyDeleteத ம +
நன்றி மது அவர்களே.
ReplyDelete