சிட்டி பேலஸ்!
➦➠ by:
ஆதி வெங்கட்
சரம் - மூன்று! மலர் - ஏழு!
அடுத்து நாங்கள் சென்றது CITY PALACE என்ற இடத்திற்கு. இதுவும் நகரின் மையத்திலேயே உள்ளது. ராஜாக்களின் வீர தீர பிரதாபங்களை விவரிக்கும் கலைப்பொருட்கள், அவர்களின் உடைகள், ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் என்று சுற்றிப் பார்க்க பல அம்சங்கள் உள்ளன.
பேலஸின் மேலே பறந்து கொண்டிருந்த கொடியில் கூட ராஜா இருக்காரா? இல்லையா? என்று வித்தியாசம் கண்டுபிடிக்கலாமாம். இப்பவும் அரச வம்சத்தை சேர்ந்தவர்கள் அந்த பேலஸில் வசிப்பதால் சில இடங்களில் நமக்கு அனுமதியில்லை.
நேற்று காண்பித்தது துளசி டீச்சர் சொன்னது போல் ராஜா வீட்டு கூஜா தான். எதிர் எதிராக வைக்கப்பட்டிருந்த இரண்டு கூஜாக்களைப் பற்றிய தகவல் என்னவென்றால், ஆளுயரத்தை விட பெரிதாக காணப்பட்ட இவை வெள்ளியால் செய்யப்பட்டது. அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, ராஜா எந்த நாட்டுக்கு சென்றாலும் அவரோடயே பயணிக்குமாம் இந்த கூஜாக்கள். காரணம் கங்கை நீரில் தான் ராஜா எப்பவும் குளிப்பாராம்...:) எப்படியிருக்கு பாருங்க!!!
இந்த சிட்டி பேலஸ் உள்ளேயே PUPPET SHOW என்று சொல்லப்படுகிற பொம்மலாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மனதை கவர்ந்தது. அப்போ நான்கு வயதேயான எங்கள் மகள் அதில் காண்பித்த பொம்மலாட்ட துணிப் பாம்பை பார்த்து கதறி அழுதது இன்றும் நினைவில். அவளை சமாதானப்படுத்த நெடுநேரமானது……:))
எங்கள் பயணத்திட்டத்தில் உள்ள எல்லா முக்கிய இடங்களையும் பார்த்து முடித்து விட்டதால், நகரின் மையத்தில் இருந்த கடைகளில் காட்சிப்படுத்தியிருந்த ராஜஸ்தான் மாநிலத்து கலைப்பொருட்களை பார்வையிட்டோம். நானும் நண்பரின் மனைவியும் எங்களுக்கு KURTI வாங்கிக் கொண்டோம். மகளுக்கு ராஜஸ்தானிய உடையான காக்[G]ரா சோளியும். பேரம் பேசித் தான் வாங்க வேண்டும். ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் அவற்றில் ஒன்று இன்னும் நன்றாக உள்ளது….:)
இன்னும் ஒரு சில இடங்கள் ஜெய்ப்பூரில் இருந்தாலும் நேரமின்மையால் பார்க்க முடியாமல் போய்விட்டது. நீங்கள் செல்லும் போது நிதானமாக எல்லா இடங்களையும் பார்த்து விட்டு வாருங்கள். பக்கத்தில் தான் உதய்ப்பூர் உள்ளது. அங்கும் பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் உள்ளன.
குடும்பத்துடன் தனியாக செல்வது ஒரு அனுபவம் என்றால் நண்பர்களுடன் செல்வது ஒருவித அனுபவம். நம்மோடு ஒத்து வருகிறவர்களாக இருந்தால் நல்லது. கொஞ்சம் அனுசரித்து நாமளும் போனால் மிகவும் நல்லது. செலவுகளை பகிர்ந்து கொள்ளலாம். சந்தோஷமாக அரட்டை அடித்துக் கொண்டு செல்லலாம். எப்போது நினைத்து பார்த்தாலும் மனதுக்கு இதம் தரும் நினைவுகள் அவை.
எங்களோடு நீங்கள் எல்லோரும் இந்த பயணத்தில் தொடர்ந்து வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்.
வலைச்சர வாரத்தின் கடைசி நாளான இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்க்கலாம்!
புகைப்படங்களுக்கு தக்க சிறு சிறு கவிதை வரிகளாக தருகிறார் காரஞ்சன் சிந்தனைகள் சேஷாத்ரி சார் அவர்கள்.
கே.பி.ஜனா சார் அவர்களின் அன்புடன் ஒரு நிமிடத்தை வாசித்து இருக்கிறீர்களா? நான் தொடர்ந்து வாசிக்கும் தொடர் இது. வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இங்கே குட்டிக் கதைகளாக..
தோழி நிலாமகளின் விளையும் பயிர் பகிர்வை வாசித்தீர்களா? இவர்கள் போன்று பலர் முன் வந்தால் தான் நம் நாட்டிற்கே நல்லது.
அதிசயங்கள் நிறைந்த அத்திப்பழத்தை குறித்து தோழி நிலாமகளின் கணவர் சகோதரர் பாரதிக்குமார் அவர்களின் பழம்பெருமை பேசுவோம்தொடரில் பல அறியாத தகவல்களை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
குழந்தைகளுக்கான நீதிக்கதைகளை காஞ்சனா ராதாகிருஷ்ணன் மேடம் அவர்களின் சிறுவர் உலகத்தில் படித்து சொல்லித் தரலாம்!
மூன்றாம் முறையாக கிடைத்த இந்த வலைச்சர வாரத்தினை சிறப்பாக செய்தேன் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். உறுதுணையாக இருந்த என்னவருக்கு இந்த நேரத்தில் என் ஸ்பெஷல் நன்றிகள்!!
நட்புகளின் ஒரு சில வலைப்பூக்களை மட்டுமே என்னால் அறிமுகப்படுத்த முடிந்தது. சிறப்பான வலைப்பூக்கள் இன்னும் ஏராளம் இருந்தாலும் நேரமின்மை தான் என் தவறுக்கு காரணம்...:)
என் மேல் நம்பிக்கை வைத்து மூன்றாம் முறையாக வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நாளை முதல் பள்ளிகள் திறப்பதால் இனி காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு பறக்க வேண்டியது தான்....:)) தொடர்ந்து எனது பக்கமான கோவை2தில்லி-ல் சந்திக்கலாம் நட்புகளே!
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
|
|
யம்மாடி எம்மாம் பெரிய கூஜா...!
ReplyDeleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு பாராட்டுக்கள்... இன்றைய அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.
Deleteஅருமையாக வலைச்சரத்தைத் தொடுத்துட்டீங்க ரோஷ்ணியம்மா.
ReplyDeleteசரத்தில் ஒரு பயணமும் சேர்த்துச் சொன்னது பயணப்ரேமியான எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.
நல்லா இருங்க.
உங்க வாசகர்களுக்காக இங்கே ஒரு இலவச விளம்பரம் போட்டுக்கவா?
ராஜஸ்தான் பயணம் விருப்பம் இருப்பவர்கள் இங்கிருந்து நூல்பிடிச்சுப் போகலாம்:-)
http://thulasidhalam.blogspot.com/2011/04/blog-post_11.html
இதில் ராஜா வீட்டுக் கூஜா இங்கே:-)
http://thulasidhalam.blogspot.com/2011/05/7.html
மன்னிக்கணும். நானே உங்க ஜெய்ப்பூர் பயணத்தை அறிமுகப்படுத்தியிருக்கணும் டீச்சர். தேட நேரமில்லாமல் போய்விட்டது.
Deleteவாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி டீச்சர்.
வணக்கம்
ReplyDeleteசிறப்பான பதிவுடன் மற்ற பதிவர்களையும் அறிமுகம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்.
Deleteவலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக முடித்தமைக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.
Deleteத ம +
ReplyDeleteநல்ல தகவல் தொகுப்பு
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மது.
Deleteஅன்புடன் அறிமுகம் செய்தமைக்கு நன்றி...
ReplyDeleteவாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
வலைச்சரத்தில் என்னுடைய படைப்பை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! சிறப்பான முறையில் நிறைவு செய்துள்ளீர்கள்! புகைப்படங்கள் மிக அருமை! நன்றி!
ReplyDeleteவாய்ப்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி சார்.
ஆதி,
ReplyDeleteராஜாவின் இங்கிலாந்து பயணத்தின்போது புனித நீருடன் இந்தக் கூஜாவும் பயணமாச்சாமே ! பார்க்கும்போது இந்தநாள் ஆட்சியாளர்களே தேவலாம்போல் தெரிகிறது. ஒரு வாரமாக ராஜஸ்தானுக்கு சுற்றுலா போனதுபோல் உள்ளது. பணியை வெற்றிகரமாக முடித்ததற்கும் பாராட்டுக்கள்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆமாங்க! பாவம்! இதை ஏற்றி இறக்க எத்தனை பேர் பாடுப்பட்டிருப்பார்கள்....:(
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா.
தனியாக பயணம் செய்யாமல் நட்புகளுடம் பயணம் செய்வது நல்லது தான்.
ReplyDeleteபயண அனுபவம், விபரங்கள் அழகு.
இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வலைச்சர பொறுப்பை சிறப்பாக செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
என்னவருக்கு நண்பர்களுடன் சேர்ந்து செல்வது தான் எப்போதும் பிடிக்கும்...:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
இனிய சுற்றுலாவுடன் - வலைச்சரத் தொகுப்புகளும் அருமை!..
ReplyDeleteவாழ்க நலம்!..
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.
Deleteஅருமையாக சுற்றிக் காண்பித்ததற்கு மிக்க நன்றி சகோ.
ReplyDeleteசிறப்பாக ஆசிரியப்பணியை முடித்ததற்கு வாழ்த்துக்கள்.
இன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சகோ.
Deleteராஜா வீட்டு கூஜா கதையும், மற்ற படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள். மூன்றாம் முறையாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று அதனை சிம்பிளாகவும் சிறப்பாகவும் முடித்துள்ளதற்கு வாழ்த்துகள். - VGK
ReplyDeleteகதை, கவிதை, சமையல் என்று தொகுத்திருந்தால் வேறு மாதிரி இருக்கும். இது பயணமாக எடுத்து கொண்டதால் ஒழுங்காக சென்று முடிக்க வேண்டுமே.....:) வாரம் முழுமைக்கும் தகவல்கள் வேண்டுமே, படங்கள் வேண்டுமே என்று பலவித குழப்பங்கள். எல்லோரையும் பயணம் முடித்து நல்லபடியாக கொண்டு விட்டாச்சு.....:))
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.
கூஜாவை பளிச்சுனு வச்சிருக்காங்க.. பிரதிபலிக்கிற மாதிரி.. ஒரு பயணம் சில அறிமுகங்கள்னு கலவையா ரசிக்க வச்சிட்டீங்க
ReplyDeleteஆளுயரத்துக்கும் மேல் பிரம்மாண்டமான கூஜாக்கள். பளிச்னு பராமரிக்கிறது பெரிய விஷயம் தான்....:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.
இனிய பயண அனுபவங்கஉள்.
ReplyDeleteமூன்றாவது சரத்தின் ஏழாவது சரத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
சிறப்பாகச் செய்தீர்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
Deleteஅருமையான விடயங்களோடு சிறப்பான முறையில் இந்த வாரத்தை கொண்டு போனீர்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
Deleteஅரையாண்டு விடுமுறையில் அழகாக பணி முடிதிருகிர்ரீர்கள்:)) வாழ்த்துகள்!
ReplyDeleteஇன்னும் முடிக்கவில்லை....:) தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மைதிலி.
Deleteவலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக முடித்தமைக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சமுத்ரா.
Deleteமிக்க நன்றி சகோதரி... எங்களது வலைப் பக்கங்களை அறிமுகம் செய்தமைக்கு.. அருமையான ஆசிரியர் பணிக்கு பாராட்டுக்கள் .. உங்களோடு நாங்களும் மகிழ்வோடு ..பயணித்தோம் ..
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார் சார்.
Deleteஅன்பின் ஆதி வெங்கட்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் - ஏழு பதிவுகளிலும் தூள் கெளப்பிட்டீங்க. - அப்படியே இன்று முதல் இன்னும் ஏழு நாட்களுக்குத் தொடருங்கள் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்க, தங்களது விருப்பதுக்கிணங்க முடிந்த அளவு தொடர்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா.
Deleteஇதுவரை நான் பார்க்காத இடம். பார்க்க விரும்பும் இடம். தங்கள் பதிவு ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. வாழ்த்துக்கள். மறுபடியும் இந்த வாரமும் எங்களுடன் கைகோர்ப்பதற்கு நன்றி. உடன் வருகிறோம்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.
Deleteநன்றி- Aadhi.
ReplyDelete