வலைச்சரத்தில் ராகங்கள்-6!
➦➠ by:
திருமதி.மனோ சாமிநாதன்
ஒரு வாரம் உங்கள் அனைவரின் துணையுடனும் வாழ்த்துக்களுடனும் பாராட்டுக்களுடனும் இசையோடு பயணம் செய்தது மனதிற்கு நிறைவளிக்கிறது. இன்றைய இயந்திர வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அவசர கதியில் ஓடுவதால் நின்று நிதானிக்கக்கூட நேரமிருப்பதில்லை. இதில் சங்கீதத்தில் முழுமையாகக் கரைய நேரமிருந்ததேயில்லை எனக்கு!
ஆனால் தினமும் சமையல் செய்யும்போது மட்டும் இசையின் துணை அவசியம் வேண்டும் எனக்கு! பொதுவாய் எல்லா பாடல்களும் ஐந்து காப்பிகள் என்னிடம் இருக்கும். ஷார்ஜாவில் காரில் ஒன்று, கடையில் ஒன்று, வீட்டில் ஒன்று, தஞ்சையில் வீட்டில் ஒன்று, கார்ப்பயணத்தின் போது ஒன்று, என்று வைத்திருப்பேன். புதிய பாடல்களின் காப்பி ஒன்றை நெருங்கிய நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன். தெரிந்த டாக்ஸியில் போகும்போது அவர்களே என்னிடம் ரிமோட் ப்ளேயரைக்கொடுத்து விடுவார்கள். அவ்வப்போது சிடி யைக் கொடுப்பது மட்டும் தான் என் வேலை! சமையலறை அருகே ஒரு குட்டி சிடி ப்ளேயர் இருப்பதால் காலை காப்பி போடும்போதே நாதஸ்வர இசையுடன் தான் பொழுது ஆரம்பிக்கும்.
நாதஸ்வரம் என்றதும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
என்னிடம் ' வேதனை எவரிடம்' என்று தொடங்கும் நாதஸ்வர இசை [ஜெயசங்கரின் நாதஸ்வரமும் வலையப்பட்டி தவிலும் இணைந்தது] இருக்கிறது. இந்த இசை மனதை அப்படியே பிசையும். வேதனையும் தவிப்புமாய் நாதஸ்வர இசை கமகங்கள் நிறைந்த தேன்குரல் போல இழையும். இதை முதன் முதலாகக் கேட்டபோது ஜெயசங்கரின் மீது ஒரு தனி மரியாதையே தோன்றி விட்டது. இதன் ராகம் பற்றி கூகிளில் தேடியபோது 'பார்வதி' என்று போட்டிருந்தது. பார்வதி என்றொரு ராகம் பற்றி நான் அறிந்ததில்லை. யாரேனும் அதைப்பற்றிச் சொல்ல முடியுமா?
ஒரு வாரம் முழுவதும் வலைச்சரத்தில் இசை உலகில் சஞ்சரிக்க முடிந்ததற்கு நான் இங்கே சகோதரர் சீனா அய்யா அவர்களுக்கு அன்பு வந்தனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கும் முத்துச்சிதறலிலும் எனக்கு அருமையான பின்னூட்டங்கள் கொடுத்த/கொடுத்துக்கொண்டிருக்கிற அன்புள்ளங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனி இன்றைய ராகம் பற்றிப்பேசலாம்!
ஷண்முகப்ரியா
ஷண்முகப்ரியா ராகம் மனிதனுக்கு உடலுக்கு சக்தியையும் மனதிற்கு தைரியத்தையும் கொடுக்க வல்லது. ஒரு பாடகனின் இசைத்திறனை கூர்மையாக்கும் வல்லமை கொண்டது. இந்த ராகம் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து பிறந்த ராகமாகச் சொல்லப்படுகிறது. முருகனுக்கு உகந்த ராகம் இது!! நகைச்சுவைப்பாடல்களிலும் பக்திப்பாடல்களிலும் ஷண்முகப்ரியா உபயோகப்படுத்துவது வழக்கம். . பக்தி ரசத்தை பொழியும் ராகம். விருத்தம் பாட ஏற்ற ராகம். தியாகராஜர் இந்த ராகத்தில் ஒரே ஒரு கீர்த்தனையே புனைந்துள்ளார்.
இனி பாடல்கள்!
பார்வதி நாயகனே என்ற பாடல். தன் வளமான, இனிமையான குரலில் சுதா ரகுநாதன் இங்கே பாடுவதைக்கேளுங்கள்!
மறுபடியும் சிவாஜி பத்மினியுடன்! யாரும் மறக்க முடியாத பாடல்! பத்மினி ஷண்மிகப்ரியா ராகப்பாடலின் பின்னணியில் தில்லானா மோகனாம்பாளாய் எத்தனை அழகாய் நடனமடுகிறார்!
ஷண்முகப்ரியா ராகத்தில் இளையராஜாவின் மற்றுமொரு முத்து! காட்சியமைப்பும் மயக்கும் பாடலும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் கம்பீரமும் சித்ராவின் தேன் குரலும் நம்மைக் கட்டிப்போடுகிறது இங்கே!
இனி பதிவர்கள் அறிமுகம்:
1. அடை செய்வது எப்படி என்று தேடினால் அதற்கான குறிப்பு இன்று புத்தகங்களிலும் இணைய தளங்கிலும் 1000 கிடைக்கின்றது. அடை செய்வதில் பல திறமை வாய்ந்த பெண்மணிகள் இருக்கிறார்கள். நானும் பலவிதமாக அடை செய்பவள் தான். ஆனாலும் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அடை செய்யும் குறிப்பை அடித்துக்கொள்ள யாரும் கிடையாது. இத்தனை விளக்கமாக, சுவையாக, சுவாரசியமாக அடை செய்யும் குறிப்பை யாருமே எழுதியதில்லை என்று அடித்துச் சொல்வேன். அடையின் ருசி அதையும் விட பிரமாதம்! நேற்று கூட என் வீட்டில் இவரின் குறிப்பு தான் அடையாகியது!
2. பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழன் காலத்துக் கோவில்களுக்கும் அவர் சமாதி அடைந்த உடையாளூருக்கும் சென்று வந்த அனுபவத்தை இங்கே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் கரந்தை ஜெயக்குமார்! கணித ஆசிரியராக இருந்தாலும் இவரின் சிந்தனையிலும் எழுத்திலும் எப்போதும் செந்தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. நற்சிந்தனைகள் தான் இவரது பதிவுகளின் உள்ளடக்கம் எப்போதும்! அவசியம் இந்தப்பதிவை மட்டுமல்ல, இவரது அனைத்துப்பதிவுகளையும் தொடர்ந்து படித்து வாருங்கள்.
3. கீதா குட்டிக்கவிதைகளால் தன் வலைத்தளமான தென்றலை அழகாக்கி வருகிறார். இந்தக் கவிதையும் அப்படித்தான். மழையின் சாரல் நம் மீது தெறிக்கிறது!
4. இயற்கை மருத்துவம் இந்த வலைத்தளத்தை மிகவும் சிறப்புடையதாக ஆக்குகிறது. இயற்கை உணவு உலகம் என்ற இந்த வலைத்தளத்தில் இந்தப்பதிவைப் படித்துப்பாருங்கள். சிறு நீரக கல் பிரச்சினைக்கு மருத்துவம் சொல்லியிருக்கிறார்கள். மிக மிக உபயோகமான வலைத்தளம் இது!
5. அகம் புறம் என்ற இந்த வலைத்தளத்தில் தம்பி பிரபு தன் தந்தையைப்பற்றி அவரின் நினைவு தினத்தில் எழுதியிருக்கும் கவிதை மனதை கனமாக்குகிறது! ஒவ்வொரு வரியும் அருமை! படித்துப்பாருங்கள்!
6. RDK தன் வலைத்தளமான அக்கினி குஞ்சுவில் தஞ்சை பெரிய கோவிலைப்பற்றிய பல தகவல்களை இங்கு குவித்து வைத்திருக்கிறார். அருமையான எழுத்து.
7. சிவாவின் தோட்டத்தில் எண்றற்ற செடிகள்! அவற்றை வளர்க்கும் தெளிவான வழி முறைகள். செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட ஒரு பெரிய தோட்டம் போடும் ஆசை வந்து விடும்! ' காய்கறிக்கழிவுகளை உரமாக்கலாம்' என்ற இந்தப்பதிவைப் படித்துப்பாருங்கள்!
8. சகோதரர் பழனி கந்தசாமி அவர்கள் பலதரப்பட்ட சிறந்த பதிவுகள் எழுதுவதில் நீண்ட நாட்கள் அனுபவமுடையவர்கள். இங்கே தன் 'மன அலைகளில்' எலும்பு முறிவு வைத்தியத்திற்கு சிறந்ததொரு நாட்டு மருந்தளித்து குணமாக்கும் வைத்தியசாலை பற்றி எழுதியுள்ள பதிவு அனைவருக்கும் மிகுந்த பயன் அளிக்கும் என்பது உறுதி.
9. திருமதியின் பக்கங்கள் முழுவதும் ஆன்மீகப்பதிவுகள் நிறைய இருக்கும். அழகழகாய் புகைப்படங்கள் வெளியிட்டிருப்பார். எப்போதாவது சில சமையல் குறிப்புகளும் இடம் பெறும்.இறைவன் படைப்பில் அதிசயங்கள் என்று எறும்புகள் கூடு கட்டும் அழகை கவிதை போல சொல்லுகிறார் கோமதி அரசு இங்கே!
10. தஞ்சை பெரிய கோவிலின் உள்ளே உள்ள சோழர் கால ஓவியங்களை சாதாரணமாக யாரும் பார்த்திட இயலாது. போலீஸ் அதிகாரியாக இருந்த என் தந்தையுடன் மிகச் சிறு வயதில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் தான் பார்த்த அந்த ஓவியங்கள் பற்றி மிக அழகாக எழுதியிருக்கிறார் இங்கு!
12. பிரியசகியும் அவர் வீட்டுத்தோட்டத்தில் அழகழகாய் புதினாவும் மிளகாயும் மலர்ச்செடிகளையும் வளர்த்து வருவதை இங்கு பார்த்து ரசியுங்கள். பார்க்கவே அத்தனை அழகாய் இருக்கிறது!
13. பருப்பு முனுக்கி சாம்பார் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உமையாள் காயத்ரியின் கைப்பக்குவம் இது! பெரும்பாலும் தினமும் ஒரு பதிவு போடும் இவரின் சுறுசுறுப்பு என்னை ஆச்சரியகக்டலில் ஆழ்த்துகிறது! செட்டி நாட்டு சமையல் குறிப்புகள், சிறு கவிதைகள் என இவர் பதிவுகள் அமர்க்களமாக இருக்கின்றன!
14. இயக்கப்படாத வங்கிக்கணக்குகளை எப்படியெல்லாம் கையாளலாம் என்பதற்கு தெளிவான, நல்லதொரு விளக்கம் கொடுக்கிறார் எனது எண்ணங்கள் என்ற வலைத்தளத்தில் பதிவுகள் எழுதி வரும் சகோதரர் தமிழ் இளங்கோ!
15. மிகச் சிறந்த புகைப்பட கலைஞர் ராமலக்ஷ்மி! அவரின் முத்துச்சரம் பல அழகிய புகைப்படங்களையும் அசத்துகின்ற ஓவியங்களையும் தன்னகத்தே கொண்டது! இந்த ஓவியங்கள் எத்தனை அழகு என்று பாருங்கள்!
16. சகோதரர் தின்டுக்கல் தனபாலன் பற்றி வலையுலகில் அறியாதவர் யார் இருக்கிறார்கள்!நற்சிந்தனைகளின் தொகுப்பே இவரின் வலைத்தளம்! ஒவ்வொரு பதிவையும் திறந்தால் ஆயிரம் நல்முத்துக்கள் ஒளிரும். இந்தப் பதிவும் அப்படித்தான்! எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் இவை!! படித்து ரசியுங்கள்!
17. ராஜ ராஜ சோழனைப்பற்றியும் அவர் பிறந்த நாளான ஐப்பசி சதயத்திருநாளில் தஞ்சை பெரிய கோவிலில் நடந்த சிறப்புக்கொண்டாட்டங்கள், வழிபாடுகள் பற்றியும் மிக சிறப்பாக தன் வலைத்தளமான தஞ்சையம்பதியில் சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் பதிவிட்டிருப்பதைப் படித்துப்பாருங்கள்!
18. /ஒவ்வொரு முறையும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நான் பயணம் செய்த விமானம் தரையிறங்கும் போதே ஒரு விதமான ஆழ்ந்த நிம்மதி மனதில் பரவும் ! உலகின் மிக பாதுகாப்பான இடமாக தோன்றும் ! விமானத்திலிருந்து வெளியேறும் முதல் தருணத்தில் முகத்தில் வீசும், அனைவரும் அலுத்துக்கொள்ளும் சென்னையின் வெப்பம் எனக்கு மட்டும் கருவறை சூடாகப் படும் !//
இது சாமானியனின் உணர்வுகள் மட்டுமல்ல! வெளிநாட்டில் வாழும் அத்தனை தமிழர்களின் [ என்னையும் சேர்த்துத்தான்] உணர்வுகளையும் சேர்த்தே தன் எழுத்தில் பிரதிபலிக்கிறார்!!! ' தாய் மண்ணே வணக்கம் ' என்று அவருடன் நானும் சேர்ந்து பாடுகிறேன்! அவரின் மன உணர்வுகளை முழுவதுமாகப் படியுங்கள்!
தாய் மண்ணே வணக்கம்!

|
|
வலைச் சரத்தின் ராகங்கள் 6
ReplyDeleteவிலை மதிப்பில்லாத ராக புஷ்பங்களை இசையாக தொடுத்தமைக்கு
அசையும் உலகமே ஆர்ப்பரித்து எழுந்து நன்றி இசை இசைக்குதம்மா!
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து பிறந்த ராகமாகச் சொல்லப்படுகிற "ஷண்முகப்ரியா" ராகப்பாடலின் பின்னணியில் 'தில்லானா மோகனாம்பாளில்' இடம்பெற்ற "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? பாடலை லயித்து கேட்டபொழுது,
நெஞ்சத்தின் ஈரம், இசை என்னும் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்டு உற்சாகம் பிறப்பெடுத்து, கரை புரண்டு ஓடுதம்மா! ஆஹா! ஆனந்தம் ஆனந்தமே! அனைத்து பாடல்களுமே!
செவிகளுக்கு செந்தேன் இசையை தந்தமைக்காக "செவாலியே விருதே" (பிரான்சு தேசத்து விருது) வழங்கலாம்.
மொத்தத்தில் இன்றைய பதிவு இனிமை
ஒரு அன்பு வேண்டுகோள்!
ராகங்கள் 16ல் ஆறு மட்டுமே சொல்லி உள்ளீர்கள்.மீதி உள்ள 10 ராகங்களை தருவதற்கு இன்னும் இரு வாரங்கள் ஆசிரியராக தொடருங்களேன்.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
அன்புள்ள வேலு!
Deleteநீங்கள் தந்திருக்கும் பாராட்டு மழைக்கு முன்னால் விருதெல்லாம் தூசிக்கு சமானம். தொடர்ந்து வருகையும் உற்சாகமும் கொடுத்து வந்ததற்கு என் அன்பு நன்றி!
அன்பின் மனோ சாமி நாதன்
ReplyDeleteஅருமையான பதிவு - வலைச்சரத்தில் ராகங்கள் ஆறு - அருமை - 18 பதிவர்களையும் அவர்களது 18 பதிவுகளையும் அருமையாக அறிமுகம் செய்தது நன்று.. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் சீனா அய்யா!
Deleteஅருமை! இந்த வாரம் முழுசும் அபூர்வராகங்களாக மனதில் மணை போட்டு உக்கார்ந்தாச்சு! இனிய பாராட்டுகள் மனோ!
ReplyDeleteபாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி துளசி!
Deleteஇசை என்ற இன்ப வெள்ளத்தில் --பாராட்டுக்கள்.
ReplyDeleteபாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி!
Deleteவணக்கம் மனோசாமிநாதன், வாழ்க வளமுடன். ஒருவாரம் ஆகி விட்டதா? இசையை கேட்டுக் கொண்டு சமையல் செய்வது எனக்கும் பிடித்த ஒன்று.
ReplyDeleteஉங்கள் இசை ஆர்வத்தால் எங்களுக்கு இசை விருந்து கிடைத்தது. இன்று பகிர்ந்த பாடல்கள் எல்லாம் அருமை.
என் வலைத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
இப்படி கவிதையாக வந்து தகவல் சொன்ன யாதவன் நம்பி அவர்களுக்கு நன்றி..
இன்று இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். விரும்பி படிக்கும் தளங்கள் உள்ளன.
நீங்கள் வரைந்த ஓவியம் தானே! அழகு.
அழகிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த வந்தனங்கள் கோமதி அரசு!
Deleteமுடிவில் இருப்பது எனது ஓவியம் தான்!
வலைச்சரத்தை இனிய இசையால் நிறைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி மறுபடியும்!
Deleteஅற்புதமான இசை வாரம் போல்
ReplyDeleteதங்கள் வலைச்சர வாரம் அமைந்தது
மிக்க மகிழ்வளித்தது
அறியாத பல பயனுள்ள இசைத் தொடர்பான
தகவல்களை தங்கள்பதிவின் மூலம் அறிந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!
Deleteநன்றி நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎல்லாவற்றிக்கும் எனக்கு பாட்டு தான்...
வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி தனபாலன்!
Deleteஒரு வாரம் சென்றதே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய ராகத்தைப் பற்றிய செய்தி, தொடர்ந்து பாடல் பதிவுகள். தொடர்ந்து நீங்கள் எழுதினாலும் படிக்க ஆவலோடு உள்ளோம். தொடர்ந்து உங்களது எழுத்துக்களை உங்களது வலைப்பூவில் வாசிக்க ஆர்வமாக உள்ளேன். எனது இரு வலைப்பூக்களில் ஒன்றை இன்று அறிமுகப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஅவசியம் என் வலைப்பூவிற்கு வாருங்கள். நானும் உங்கள் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருவேன்.
Deleteதொடர்ந்து எனக்கு பாராட்டுக்களும் உற்சாகமும் கொடுத்து வந்ததற்கு மனம் நிரைந்த நன்றி!
Nandri Sakothari
ReplyDeleteவருகைக்கு அன்பு நன்றி சகோதர் ஜெயக்குமார்!
Deleteஇரவு வேலையை முடித்து விட்டு - (இங்கே குவைத்தில் காலை 6.10)
ReplyDeleteஇசையெனும் இன்ப வெள்ளத்தில் நீந்துதற்கு ஓடோடி வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி!..
தெய்வீக ராகமான ஷண்முகப் பிரியாவின் மகத்துவத்துடன் - தஞ்சையம்பதியின் அறிமுகம்!..
அடிப்படையில் - ஷண்முக ப்ரியன் நான்!.. என்னே விநோதம்!..
எப்படி இது அமைந்தது!.. இசை.. இசை.. அதனால் அமைந்தது!..
இசையால் வசமாகா இதயம் எது..
இறைவனே இசை வடிவம் எனும் போது!..
அன்பின் வணக்கமும் நன்றியும்!.. வாழ்க நலம்!..
நீங்களும் பக்கத்து நாட்டில் தான் இருக்கிறீர்களா? துபாய் நகரத்தைக் கடக்கும் நேரம் வரும்போது அவசியம் எங்கள் இல்லம் வாருங்கள்!
Deleteதொடர்ந்து உற்சாகமும் பாராட்டுக்களும் வழங்கி எனக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டிருந்ததற்கு இதயப்பூர்வமான நன்றி!
அனைத்து நலன்களுக்கும் அபிராமவல்லி துணையிருப்பாளாக!..
Deleteதங்களின் அழைப்பினுக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..
மிக்க நன்றி. இந்த வருட சித்திரச் சந்தைக்கும் சென்றிருந்தேன். விரைவில் அதுகுறித்துப் பகிர்ந்து கொள்கிறேன்.
ReplyDeleteதொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் நல்வாழ்த்துகள்!
ஷார்ஜாவுக்கும் தஞ்சைக்கும் இரு வருடங்களாகவே அலைந்து கொண்டிருப்பதால் உங்களின் புகைப்படங்கள், ஒவியங்களை அடிக்கடி வந்து பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது. கருத்துரைக்கு அன்பு நன்றி!
Deleteஇசை மேல் இசைவுடன் கூடிய தங்களின் மிகுந்த ஈடுபாடு மிகவும் வியப்பளிக்கிறது.
ReplyDelete>>>>>
ஷண்முகப்பிரியா ராகத்திற்காக தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள இரு பாடல்களும், காணொளிகளும் அருமையோ அருமை.
ReplyDeleteதில்லானா மோகனாம்பாள் படத்தில் நாட்டியப்பேரொளி பத்மினி நடனத்துடன் வரும் .... ’மறந்திருந்து பார்க்கும் மர்மமென்ன .....’
வேதம் புதிது படத்தினில் வரும் ... ’கண்ணுக்குள் நூறு நிலவா .... இது ஒரு கனவா’
இவற்றை யாருக்குத்தான் பிடிக்காது?
பலமுறை பார்த்து/கேட்டு/ரசித்துள்ள அருமையான அழகான காலத்தால் அழியாத காவியங்கள் அல்லவா !
நினைவூட்டல் பகிர்வுக்கும் காணொளிகளுக்கும் நன்றிகள்.
சுதாரகுநாதன் அவர்களின் ’பார்வதி நாயகனே.....’ பாடலும் மிகவும் இனிமை தான்.
>>>>>
//1. அடை செய்வது எப்படி என்று தேடினால் அதற்கான குறிப்பு இன்று புத்தகங்களிலும் இணைய தளங்கிலும் 1000 கிடைக்கின்றது. அடை செய்வதில் பல திறமை வாய்ந்த பெண்மணிகள் இருக்கிறார்கள். நானும் பலவிதமாக அடை செய்பவள் தான். ஆனாலும் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அடை செய்யும் குறிப்பை அடித்துக்கொள்ள யாரும் கிடையாது. இத்தனை விளக்கமாக, சுவையாக, சுவாரசியமாக அடை செய்யும் குறிப்பை யாருமே எழுதியதில்லை என்று அடித்துச் சொல்வேன். அடையின் ருசி அதையும் விட பிரமாதம்! நேற்று கூட என் வீட்டில் இவரின் குறிப்பு தான் அடையாகியது!//
ReplyDeleteஅடடா ! அடை மழையாய் மீண்டும் என் அடைப் பதிவினைத் தாங்கள் பாராட்டி, சிலாகித்து இங்கு எழுதியிருப்பது எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. மிக்க நன்றி, மேடம்.
ஏற்கனவே தாங்கள் 19.01.2013 அன்று ‘வைரம் போன்று மின்னும் பதிவர்கள் ....!!!’ என்ற தலைப்பினில் என்னைப் பாராட்டி எழுதியுள்ளது இன்றைய என் வலைத்தளத்தினில் அகஸ்மாத்தாக வெளியிடப்பட்டுள்ளது. :)
http://gopu1949.blogspot.in/2015/01/11-of-16-61-70.html
>>>>>
எனக்கு சந்தேகமாகவே இருந்தது. முன்பே அடை பற்றி எழுதியிருப்பேனோ என்று! மறதி வேறு இருக்கிறது அல்லவா? உங்களைப் பற்றி எழுதி வெளியிட்ட பின் இன்று காலை அதைப்பற்றி செய்து தெரிவிப்பதற்காக உங்கள் தளம் வந்த போது நானும் என் பதிவைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதைப்பார்த்தேன்.
Deleteதொடர்ந்து வந்து உற்சாகமூட்டியதற்கும் பாராட்டுக்கள் அள்ளித்ததற்கும் என் மனம் நிறைந்த நன்றி!
’தாய் மண்ணே வணக்கம்’ என்ற தலைப்பினில் இறுதியில் தாங்கள் வரைந்துள்ள(?) நாட்டிய மங்கையின் ஓவியம் உயிரோட்டமாகவும் அழகோ அழகாகவும் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteமூன்றாம் முறையாக வலைச்சர ஆசிரியர் பணியினை ஏற்று மிகச் சிறப்பாகச் செய்து, எனது 'அடைச் சுவையுடன்’ நகைச்சுவையாக அழகாக முடித்துள்ளீர்கள். மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது.
தங்களால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
தங்களுக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துகளும், நன்றிகளும்.
அன்புடன் VGK
oooooooooooooo
ஒரு வாரமாக ஒரே இசையாக இருந்தது இந்த வலைச்சரம்.
ReplyDeleteபாடல்களும் அவைகள் கொண்ட ராகங்கள் பற்றிய தகவல்களும் சிறப்பாக இருந்தன.
இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஒரு தகவலில் ஒரு சிறு பிழை.
---ஷண்முகப்ரியா ராகத்தில் இளையராஜாவின் மற்றுமொரு முத்து! காட்சியமைப்பும் மயக்கும் பாடலும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் கம்பீரமும் சித்ராவின் தேன் குரலும் நம்மைக் கட்டிப்போடுகிறது இங்கே!---
என குறிப்பிட்டு கண்ணுக்குள் நூறு நிலவா என்ற வேதம் புதிது படப் பாடலை சொல்லியிருக்கிறீர்கள். மன்னிக்கவும். வேதம் புதிது படத்திற்கு இசை அமைத்தது தேவேந்திரன் என்ற ஒரு புதிய இசை அமைப்பாளர். இளையராஜா இல்லை. பாரதிராஜா - இளையராஜா மோதல் விரிசலுக்குப் பிறகு வந்த முதல் படமிது. மற்றபடி இது மிக நல்ல பாடலே.
வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் என் சிறு தவற்றை சுட்டிக்காண்பித்திருப்பதற்கும் அன்பு நன்றி! நான் வேதம் புதிது படத்திற்கு இசையமைத்திருப்பது இளையராஜா என்றே உறுதியாக இருந்து விட்டேன். தாங்கள் நினைவுபடுத்திய பிறகு தான் எனக்கும் அது தேவேந்திரன் என்று ஞாபகம் வந்தது!
Deleteஎன்னையும் ஒரு பதிவராக அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, சகோதரி.
ReplyDeleteரெம்ப நன்றி மனோக்கா. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு.
ReplyDeleteஆவ்வ் இன்று ஷண்முகப்பிரியா ராகம் மிக பிடித்த ராகமும் கூட. 'சரவணபவ எனும் ' பாடலை படித்த நாட்கள் நினைவில்.
இனறு அறிமுகமான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக வித்தியாசமாக உங்க ஆசிரியப்பணியை செய்திருக்கிறீங்க மனோக்கா. வாழ்த்துக்கள். நன்றிகள்.
Deleteவாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி பிரியசகி!
Deleteஅம்மா,
ReplyDeleteவாரம் முழுவதும் மிகச் சிறப்பான அறிமுகங்களை, வலைப்பூக்களின் நறுமணங்களை இசை தென்றலுடன் மிக வித்யாசமாக தொகுத்து வழங்கி வலைச்சரத்தை சிறப்பித்துள்ளீர்கள்.
அதுவும் இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்ட வேதம் புதிது பாடல் என் பால்யத்துடன் கலந்த ஒன்று ! உங்கள் தொகுப்பில் என் வலைப்பூவினையும் சேர்த்து " பூவுடன் சேர்ந்து மணக்கும் நாராக்கியதற்கு " நன்றிகள் பல.
இந்த வார வலைச்சர அறிமுகங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
( தாங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ஒரு சின்ன தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
வேதம் புதிது படத்தின் இசையமைப்பாளர் தேவேந்திரன் என்பவர். இளையராஜா, பாரதிராஜா பனிப்போர் உச்சத்தில் இருந்த அந்த காலகட்டத்தில் " இளையராஜாவுக்கான மாற்று " என்ற அறிவிப்புடன் பாரதிராஜாவால் வேதம் புதிதில் அறிமுகப்படுத்தப்பட்டவர்... வைரமுத்துவின் வரிகளுடன் படத்தின் பாடல்கள், இசை அனைத்தும் அருமையாக அமைந்தாலும், இளையராஜாவின் பாணியிலேயே அமைந்ததாலோ என்னவோ அவரால் தொடர்ந்து வெற்றிபெற முடியவில்லை.
நன்றிகள் பல.
சாமானியன்
பாராட்டிற்கு அன்பு நன்றி சாமானியன்!
Deleteபதிவில் எழுதிய போது தேவேந்திரன் என்று ஞாபகம் வரவில்லை. இளையராஜா என்றே திடமாக நம்பிக்கொண்டிருந்தேன். காரிகன் எழுதியதைப்படித்த போது தான் என் ஞாபக மறதி எனக்குப் புரிந்தது!
வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteபாடலுடன் ஆசிரியப்பணியை அழகாக செய்தீர்கள் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி உமையாள் காயத்ரி!
Deleteராகங்களால் மகிழ்வித்த நீங்கள் மீண்டும் எங்களை பல ராகங்களால் மகிழ்விக்க வர வேண்டும் என வாழ்த்துகின்றோம். தொடர்கின்றோம் தங்களை தங்கள் வலையில். நீங்கள் ராகங்கள் சொன்னவுடன் எங்கள் வலையிலும் ராகங்கள் பற்றி அலசலாமோ என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது....
ReplyDelete.தம்தனதம்தன் தாளம் வரும் சுக ராகம் வரும்....எனபதாகிய அருமையான ராகம். கம்பீரமான அழகு மிளிரும் ராகம்...அருமையான பகிர்வுகள்..
ஹை இன்று எங்கள் நண்பர்கள், சகோதரிகள் பலர் அறிமுகம்...எல்லொருக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி துளசிதரன்!
Deleteபாடல்களால் கலக்கியுள்ளீர்கள் வாழ்த்துகள் மா.என் வலையை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபாராட்டிற்கு அன்பு நன்றி கீதா!
Deleteமீண்டும் ஒரு அழகிய ராகம்.
ReplyDeleteகண்ணுக்குள் நூறு நிலவா பாடல் பற்றி நான் சொல்ல வந்த கருத்தை திரு காரிகன் சொல்லி விட்டார். அதன் இசை இளையராஜா இல்லை, தேவேந்திரன்.
சரத்தில் கோர்க்கப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
கலக்கலான வாரமாக அமைந்தது அம்மா....
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகடந்த சில நாட்களாகவே வழக்கம் போல எப்போதும் போல, தினமும் வலைச்சரம் படித்து விடுகிறேன். ஆனால் உட்கார்ந்து கருத்துரைகளை எழுத இயலவில்லை. எதிர்பாராத வெளியூர் அலைச்சல்தன் காரணம் (இப்போது மறுபடியும் செல்ல கிளம்பிக் கொண்டு இருக்கிறேன்)
Deleteநேற்றைய வலைச்சரத்தில் எனது வலைத் தளத்தினை அறிமுகப் படுத்திய சகோதரிக்கு நன்றி. தகவல் தந்த சகோதரர் யாதவன் நம்பி (புதுவை வேலு) அவர்களுக்கும் நன்றி.
த.ம.5
இன்றைக்கு அறிமுகமானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி மனோ மேடம்
ReplyDeleteநானும் இந்த நுணிக்கி வைச்ச சாம்பார் வைப்பேன். அதன் பெயர் துவரம் பருப்பு சட்னி. என் சமையல் வலைத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது :)
வருகைக்கு அன்பு நன்றி தேனம்மை! நீங்கள் எழுதியிருக்கும் துவரம்பருப்பு சட்னியைச் சென்று பார்க்கிறேன். செய்தும் பார்க்கிறேன்!
Deleteவலைச்சரத்தில் இனியதோர் இசைப்பயணத்தில் எங்களையும் உலா வரச் செய்தமைக்கு மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்....
ReplyDeleteசிறப்பாக பணியாற்றியமைக்குப் பாராட்டுகள்.