காற்றுக்கு ஒரு அரண்மனையா! (HAWA MAHAL)
➦➠ by:
ஆதி வெங்கட்
சரம் - மூன்று! மலர் - ஆறு!
மறுநாள் காலை தயாராகி நாங்கள் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸிலேயே உள்ள உணவகத்தில் ஆலு பராட்டா என்று சொல்லப்படுகிற உருளைக்கிழங்கு ஸ்டஃப் செய்த சப்பாத்தியும் ஊறுகாய், தயிருடன் சுவைத்தோம். வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு கிடைக்கும் அந்த ஊரின் உணவை உண்பதே சிறந்தது. அங்கு போய் இட்லியும், தோசையும் எதிர்பார்த்தால் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்….:)
பயணத்திட்டத்தின் அடுத்த கட்டமாக ஜெய்ப்பூர் நகரின் மத்தியில் இருக்கும் HAWA MAHALக்கு சென்றோம். ஹவா என்றால் காற்று. நான்கு அடுக்குகளைக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது ஹவா மஹல். ராஜா சவாய் பிரதாப் சிங் காலத்தில் கிபி. 1799ல் கட்டப்பட்ட இந்த ஹவா மஹலில் 953 ஜன்னல்கள் உள்ளதாக சரித்திரம் சொல்கிறது. வெயில் காலத்திலும் உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. பலவித வண்ணங்கள் கொண்ட கண்ணாடிகளால் உள்ளே வடிவமைக்கப்பட்டிருந்தது சிறப்பாக இருந்தது.
JANTAR MANTAR ஒரு பார்வை!
அரச வம்சத்து பெண்கள் தங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என்று ஒவ்வொரு தளத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குட்டி குட்டி ஜன்னல் வழியாக தான் நகரினையும், அங்கு நடக்கும் விழாக்களையும் பார்ப்பார்களாம்.
ஆமேர் கோட்டையைப் போன்றே இங்கும் பலதரப்பட்ட அறைகள் காணப்பட்டன. சுற்றுலாத் துறையினரால் AUDIO GUIDE வசதி இங்கேயும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் வரிசையாக ஒவ்வொரு எண்களை அழுத்தி அதற்கான இடத்தில் சென்று நின்று கொண்டால் அந்த இடத்தின் சிறப்புகளை பற்றித் தெரிந்து கொள்ளலாம். நாங்களும் அப்படித் தான் செய்தோம்.
CITY PALACE தெரிகிறதே!
நாங்கள் சென்ற போது இந்த ஹவா மஹலின் மேல் தளம் வரை சென்று ஜெய்ப்பூர் நகரின் அழகினை கண்டு ரசித்தோம். அங்கிருந்து JANTAR MANTAR, CITY PALACE ஆகியவற்றையும் பார்க்க முடியும். இப்போது பராமரிப்பு காரணங்களால் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்று தெரிய வந்தது.
நண்பர்களே இது என்ன? தெரிந்தவர்கள் சொல்லலாம். நாளை இது பற்றிய ஆச்சரியத் தகவல்கள்.....:)
சரி! வாங்க! இன்றைய அறிமுகங்களைக் காணலாம்...
இளையநிலா எனும் பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் தோழி இளமதி அவர்களின் அறுசீர் விருத்தத்தில் ஒரு கவிதையை வாசித்துப் பாருங்களேன்!
உண்மையானவன் வலைப்பூவில் எழுதும் சகோ சொக்கன் அவர்களின் சைவ சித்தாந்தச் செல்வர் சொக்கலிங்க ஐயா குறித்த பிரசங்கத்தை இங்கே வாசித்து மகிழுங்கள்.
மனதிற்கு புத்துணர்வையும், நம்பிக்கையும் தரும் பாசிட்டிவ் செய்திகளை வாரந்தோறும் தொகுத்து தந்துகொண்டிருக்கும் எங்கள் ப்ளாக்கின் பகிர்வு இதோ!
என். கணேசன் அவர்களின் ருத்ராட்சத்தின் மகிமைகள் பகிர்வு இதோ!
கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் வீர மங்கை வேலு நாச்சியார் குறித்த தொடரை வாசித்து அறியாத தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வலைச்சர வாரத்தின் இறுதி நாளான நாளை வேறு சில பதிவர்களின் பக்கங்களையும் ஜெய்ப்பூர் அரண்மனை குறித்த தகவல்களையும் பார்க்கலாம்!
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
|
|
என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரியாரே
ReplyDeleteதம 2
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
Deleteஹவா மஹல். மிக அழகாய் இருக்கும் அந்த ஜாடி பற்றிய விபரம் எனக்கு தெரியும் போய் பார்த்த காரணத்தால். பார்க்காதவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ReplyDeleteஇன்று இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
டீச்சர் சொல்லிட்டாங்க...:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
This comment has been removed by the author.
ReplyDeleteஆதி,
ReplyDeleteஅனைத்தும் அழகழகான கட்டிடங்கள் ! ஆவலில், ...... எப்படியோ தேடிப்பிடித்து அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டேன். மற்றவர்களின் கருத்துக்களையும் பார்ப்போமே !
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
ஏம்பா! முதல் பின்னூட்டமும் ரசிக்க வைத்ததே....ஏன் எடுத்திட்டீங்க? யாருமே யோசிக்காதது...:)
Deleteநாளை சொல்லி விடுகிறேன் முழுவதுமாக...:) இப்போ டீச்சர் சொல்லிட்டாங்க பாருங்க...:)
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா.
ஓ, பின்னூட்டத்தைப் பாத்துட்டீங்களா! :)
Deleteபின்னூட்டங்கள் இப்போ பொறுப்புலிருப்பதால் மின்னஞ்சலில் வருமே...:)
Deleteஆச்சரியத் தகவல்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.
Delete"//ஹவா மஹலில் 953 ஜன்னல்கள் உள்ளதாக சரித்திரம் சொல்கிறது. //"
ReplyDeleteகாரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் 1000 ஜன்னல்கள் இருக்கிறது. அந்த வீட்டிற்கு 1000ஜன்னல் வீடு என்று தான் பெயரே.
அருமையாக சுற்றுலா சென்றுக்கொண்டிருக்கிறது.
என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.
இன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ஆயிரம் அரிவாள் கோட்டையை நினைவுப்படுத்தியது 1000 ஜன்னல் வீடு...:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சகோ.
ஹவா மஹல், JANTAR MANTAR, CITY PALACE ஆகியவை பற்றிய படங்களும் செய்திகளும் மிக அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteகடைசியாகக் காட்சியளிக்கும் பாண்டம், முதல் அறிமுகமான ‘இளைய நிலா’ போலவே ஜொலிக்கிறது. :)
மேலும் அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.
Deleteஉங்களவர் பதிவிலும் இந்த விவரங்கள் படித்த நினைவு இருக்கிறது. :))))
ReplyDeleteஇன்றைய சரத்தில் நாங்களும் கோர்க்கப்பட்டிருப்பது சந்தோஷம். உடன் கொர்க்கப்பட்டிருப்பவர்களுக்கும் வாழ்த்துகள்.
நன்றி.
அதே அதே! நன்றி!
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார் மற்றும் கெளதமன் சார்.
Deleteஇனிய சுற்றுலா !..
ReplyDeleteஅரிய தகவல்கள்.. அழகிய படங்கள்.. - நெஞ்சை அள்ளுகின்றன.
இன்றைய தொகுப்பின் அறிமுக நண்பர்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.
Deleteஅறியாத விஷயங்களையும்
ReplyDeleteஅருமையான பதிவர்களையும்
அற்புதமாக இணைத்துக் கொடுத்தமைக்கு
நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Deleteஅருமையான தகவல்கள்
ReplyDeleteஎமது நண்பர் திரு. கரந்தையார், திரு. சொக்கன். திருமதி. இளமதி அவர்களுக்கு வாழ்த்துகள்
காரைக்குடி 1000 ஜன்னல் வீடு நான் எழுத வேண்டுமென்று நினைத்ததை நண்பர் சொக்கன் எழுதி விட்டார் நன்றி.
காரைக்குடி பக்கம் போகும் போது பார்க்க வேண்டும் 1000 ஜன்னல் வீட்டை....:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
வணக்கம் சகோதரி!
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் அருமையான தங்களின் பதிவோடு
என்னையும் அறிமுகம் செய்திருக்கும் தங்களின் செய்திகண்டேன்!..
மிக்க மகிழ்ச்சியுடன் என் உளமார்ந்த நன்றியையும் கூறுகின்றேன் சகோதரி!
என்னுடன் இன்று இங்கு அறிமுகமாகியிருக்கும் அன்புச் சகோதரப் பதிவர்களுக்கும்
என்னை வாழ்த்தி ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்களும்
உளமார்ந்த நன்றிகளும்!
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க இளமதி.
Deleteயாரும் சொல்லலையேன்னு இருக்கேன். கங்கைத் தண்ணிக்கான ராஜா வீட்டுக் கூஜா:-)
ReplyDeleteடீச்சர் சொன்னா தப்பாகுமா....:) ராஜா வீட்டு கூஜா தான்....:))) நாளை முழுசா சொல்லிடறேன்...:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.
பயணத்தில் quiz - உம் உண்டா? பார்த்ததில்லை அதனால் தெரியவில்லை. நாளை உங்கள் பதிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளுகிறேன்.
ReplyDeleteஅறிமுகம் ஆனவர்களுக்கு வாழ்த்துக்கள்!
மேலே டீச்சர் சொல்லி இருக்காங்க பாருங்க ரஞ்சனிம்மா.
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
ஹவா மஹால் குறித்த தகவல்கள் அருமை! சிறந்த வலைபதிவர்களை இன்று வலைச்சரத்தில் இணைத்து பெருமை செய்தமைக்கு நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.
Deleteஅந்த ஜாடி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிய காத்திருக்கிறேன். இன்றைக்கு அறிமுகம் ஆன பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇப்போ கொஞ்சம் வெளியாகியிருக்கு ... நாளைக்கு முழுசா சொல்லிடறேன்...:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.
துளசி சொல்லி விட்டார்கள்.
ReplyDeleteஆமாம்மா...:)
Delete