07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 24, 2015

வலைச்சரத்தில் ராகங்கள் -5!!!

'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' – என்ற இந்தப்பாடல் 'தளபதி' என்ற திரைப்படத்தில் ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமண்யம் இவர்களால் பாடப்படுவது. மிகவும் புகழ்பெற்ற‌ பாடல் இது. இதன் பின்னணி இசைக்குழுவினர் பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் இசைக்குழுவில் இடம் பெற்றவர்கள்.  இவர்கள் ஒவ்வொரு பகுதி இசைத் துணுக்கையும் வாசித்த பின் கைதட்டி பாராட்டியதாக பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பல சந்தர்ப்பங்களில் பேசியிருப்பதோடு, இந்த மாதிரி இசையை யாரும் கொடுத்ததில்லை என்று வியந்து கூறியதுண்டு!

அது என்ன ராகம்? கல்யாணி!

கல்யாணி

கல்யாணி என்றால் மங்களம் எனபது பொருள். நம் மனதில் தோன்றும் பயம் என்னும் இருளை நீக்கி ஒளி தரும் ராகம். இதற்கு மேச கல்யாணி, சாந்த கல்யாணி என்ற பெயர்களும் உண்டு.  ஹிந்துஸ்தானி பாரம்பரியத்திலும் இது முக்கியமான இராகம். இதை அவர்கள் யமன் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு ஸ்வரத்திலும் கமங்களைக் குழைத்து மிக நீண்ட நேரம் இராக ஆலாபனை செய்ய வசதியானது. எல்லா இசை வடிவங்களும் இந்த ராகத்தில் உள்ளன. இசை நாட்டிய வடிவங்களில் அதிகம் கையாளப்படுகிற ராகம். இந்த ராகம் ஆர்ப்பாட்டமாகவும் இசைந்து கொடுக்கும், அதே சமயத்தில் அமைதியாகவும் ஸ்வரம் பாடும்.

இனி பாடல்களைப்பார்ப்போம்!

முதலாவது கல்யாணியில் ஒரு கீர்த்தனை. தியாகையர் தஞ்சை அரசன் புகழ் பாட மறுத்து கடவுளை நினைத்து பாடிய பாடல் இது. இந்த‌ ' நிதி சால சுகமா' என்ற பிரபல கீர்த்தனையை பிரியா சிஸ்டர்ஸ் அருமையான ஆலாபனையுடன் அற்புதமாய்ப் பாடுவதைக் கேட்டு ரசியுங்கள்!





'ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத் தாங்கி நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா! ஈரேழு ஜன்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா? ' ஒரு அருமையான மகன் தன் தாய்க்காக பாடும் அற்புதமான பாடல்! இப்படி ஒரு மகன் இருந்து விட்டால் ஒரு தாய்க்கு வேறென்ன வேண்டும்? வாலியின் அத்தனை வரிகளும் மிக அழகு! கல்யாணியில் இசைக்கும் ஜேசுதாஸின் கம்பீரம் அதை விட அழகு.





மறுபடியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இந்த முறை பத்மினியுடன்! திருவருட்செல்வர் என்ற படத்தில் வரும்  ' மன்னவன் வந்தானடி' பாடலில் இழையும் கல்யாணியின் இனிமையுடன் சிவாஜியின் கம்பீரமும் பத்மினியின் அசத்தும் நடனமும் போட்டி போடும்! கண்டு களியுங்கள்!!





இனி பதிவர்கள் அறிமுகம்:


1.  வியாசன் யாரும் அறியாத தகவல் ஒன்றை இங்கே பகிர்ந்திருக்கிறார். ராஜராஜ சோழன் தன் மனைவி லோகமாதேவியுடன் தன் இறுதிக்காலத்தில் திருவிசை நல்லூரில் பிறவா வரம் தரும் யாகத்தைச் செய்தாராம்! ராஜராஜ சோழனின் சிலயும் அவரின் துணைவி சிலையும் அத்தனை அழகு! விபரங்களை இங்கே படித்துப்பாருங்கள்!

2. பொழுது போக்கு பக்கங்கள் என்று சித்ரா சுந்தர் எழுதியிருந்தாலும் கொத்துமல்லி, புதினா வளர்ப்பது என்று எத்தனை உபயோகமான விஷயங்கள்! ஆனால் எனக்கு முற்றிலும் புதியது வெங்காயத்தாள் வளர்ப்பது! சீக்கிரம் இதை முயற்சி செய்யப்போகிறேன்!

3. வாழ்க்கையில் திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியமானது. அது எந்த அளவிற்கு முக்கியமானது, எப்படியெல்லாம் திட்டமிடுவது என்பது பற்றி கவிதா தன் பார்வைகள் வலைத்தளத்தில் அருமையாக எழுதியிருக்கிறார். அவசியம் படித்துப்பாருங்கள்! அனைவருக்கும் தினசரி வாழ்க்கையில் மிகவும் பயன்தரக்கூடியது.

4. மூதுரையில் ஒளவையார் நல்ல நட்பையும் தீய நட்பையும் இனம் பிரித்துப்பாடியதை சங்கப்பலகை அறிவன் தன் பதிவில் இங்கே வெளியிட்டு அருமையாக விளக்கத்தைத்தந்திருப்பதுடன் அதையொட்டிய தனது சிந்தனைகளையும் பகிர்ந்திருக்கிறார்!

5. அருண் பிரசாத் தனது சூரியனின் வலைவாசல் தளத்தில் வலைச்சர அனுபவம் பற்றி சுவாரசியமாக எழுதியிருக்கிறார். வலச்சர ஆசிரியர் பணியின் சாதகங்கள், பாதகங்கள், அதற்கான டிப்ஸ் என்று ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்! வலைச்சர ஆசிரியர் பணி மேற்கொள்ளுபவர்களுக்கு இது மிகவும் உதவும்!!

6.  மதுரக்காரன் கான்ஸர் மருந்துக்களுக்கான விழிப்புணர்வுப் பதிவை இங்கே அருமையாக எழுதியிருக்கிறார்! அனைவரும் தெரிந்து கொள்ள‌ வேண்டிய தகவல்கள் இவை! படித்துப்பயன் பெறுங்கள்!

7. நிறைய பேருக்கு மிகவும், அவசியம் தேவைப்ப‌டும் பதிவு ஒன்றை செந்தில்வேல் தனது உனக்காக என்ற வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்! எத்தனையோ பேர் இதற்காக எந்த அளவு செலவு செய்கிறார்கள், எத்தனை முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பதை நானறிவேன். அத்தனை முக்கியமான தேவை இது. என்னவென்று சொல்ல மாட்டேன். நீங்களே படித்துப்பாருங்கள்!

8. வாழ்க்கை முறைக்கான கடிகாரம் ஒன்றை இங்கே நமக்காக காட்டிடிருக்கிறார் ஆனந்த். இந்த கடிகாரத்தின் முட்கள் ஒவ்வொரு மணியைக்காட்டும்போதெல்லாம் என்ன என்ன செய்ய வேண்டும், அப்போது நம் உடல் உறுப்புகள் எப்படியெல்லாம் இயங்கிகுன்றன, அதன் படி நம் உடம்பை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று இவரின் அனைத்து விபரங்களும் தெளிவானவை! அவற்றை பின்பற்றினால் நிச்சயம் கிடைக்கும் ஆனந்தம்!

9. நட்பு எத்தனை எத்தனை வகைகள்! நல்ல நட்பு கிடைக்க மாதவம் செய்திருக்க வேண்டும் என்று இங்கே சுபாஷிணி தன் வலைத்தளத்தில் நட்பைப்பற்றிய தன் எண்ணங்களை அழகாகப் பகிர்ந்திருக்கிரார்!

10. உஷா கெளதம் தன் வலைத்தளத்திற்கு அழகான பெயர் வைத்திருக்கிறார். மீள்கின்றதென் பாதை! அழகான ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார். மனோ தைரியம் யாருக்கு அதிகம், ஆணுக்கா, பெண்ணுக்கா? என்று! அதற்கான அலசல்கள் சுவாரசியம் மிகுந்தவை. படித்துப்பாருங்கள்!

11. 'உங்களைச்சுற்றி ஒரு நூறு மலர்கள் பூத்திருக்க நடுவில் நின்றிருக்கிறீர்களா? நீங்கள் செய்த ஒரு சிறு உதவிக்கு உங்கள் பாட்டி வயதுள்ள ஒருவர் உங்கள் தலை மேல் கைவைத்து துளி கண்ணீருடன் வாழ்த்தும் வாழ்த்தைப் பெற்றிருக்கிறீர்களா? இதுபோல் ஒரு சந்தோஷத்தை தரக்கூடிய நிகழ்வொன்று நடந்தது எனக்கு.' அந்த நிகழ்வை நினைத்து  வண்ண நிழல் அர்ஜுன் புண்ணியம் என்று நெகிழ்கிறார்! படித்த எனக்கு அது உண்மையிலேயே புண்ணியம் என்று புரிந்தது! நீங்களும் படித்துப்பாருங்கள்!

12. செல்வா தன் வலைத்தளத்திற்கு கோமாளி என்று பெயர் வைத்திருப்பது ஏனென்று தெரியவில்லை. ஆனால் இவரின் பதிவுகள் ஆழமாகவும் அர்த்ததுடனும் விளங்குகின்றன. இந்தப்பதிவு கூட யாருக்கும் வராத கற்பனை! 70ம் வயதில் நான் என்று ஒரு பதிவிட்டிருக்கிரார்! படித்துப்பாருங்கள்! அருமையான கற்பனைத்திறனும் தேர்ந்த எழுத்தும் கொடி கட்டிப்பறக்கிறது இங்கு!

13. நாளுக்கு நாள் பெருகி வரும் செலவினங்கள் மூச்சை அடைக்கிற‌து. எந்த மாதிரியெல்லாம் நம் செலவினங்களைக்குறைக்கலாம், என்னென்ன தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கலாம் என்ற கேள்விகளுக்கு  தன் மழைக்காகிதத்தில்  தவிர்க்க வேண்டிய வீண்செலவுகளைக்குறைக்க‌ கெளதமன் அருமையான யோசனைகளை எழுதியிருக்கிறார்!

14. இளம் வயதில் பூனைக்குட்டியைப்பார்க்கப் போய் கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டதையும் காயத்தின் வலியை இன்னும் மற‌க்க இயலவில்லை என்றும் மிக அழகாய் எழுதியிருக்கிரார் சுஜாதா செல்வராஜ் தன் பிரியத்தின் இசை வலைத்தளத்தில்!

15. அற்புதங்கள் நிகழ்த்துபவன் என்ற இந்த கவிதை படித்துப்பாருங்கள்! விநாயக முருகனின் கற்பனை நம்மை ரசிக்க வைக்கின்ற‌ன!

16. கடல் நுரைகளும் என் கவிதையும் என்ற வலைத்தளத்தில் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சுவாரசியமான பல பதிவுகள் எழுதிக்கொன்டிருக்கிறார். இந்த வியட்நாம் பயணக்கட்டுரையும் படிக்கப் படிக்க சுவாரசியம் மேலிடுகிறது. படித்துப்பாருங்கள்!


 

30 comments:

  1. இரு பாடல்களும் என்றும் ரசிக்கத்தக்கவை...

    இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

      Delete
  2. பாடல்கள் ரசனையான தேர்வு, அருமை.
    அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். படிக்க வேண்டும் அனைத்தையும்.
    பயனுள்ள பதிவுகள் அனைத்தும்.
    வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

      Delete
  3. என் பங்குக்கு உயர்ந்த உள்ளம் படத்தின் 'வந்தாள் மகாலக்ஷ்மியே' பாடலை கல்யாணி ராகத்துக்குச் சொல்கிறேன்! :))))

    எல்லோரும் (எனக்குப்) புதிய பதிவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வந்தாள் மகாலக்ஷ்மியே பாடலும் மிக நன்றாக இருக்கும் ஸ்ரீராம்! வருகைக்கு அன்பு நன்றி!!

      Delete
  4. கல்யாணி ராகமும், அதற்கான மூன்று பாடல்களும் இனிமை. சிவாஜி பத்மினி படமும் அந்தப்பாடலும் பரவஸம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

      Delete
  5. வணக்கம்
    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு அன்பு நன்றி ரூபன்!

      Delete
  6. 2009 ல் எழுதிய பதிவை தேடிப்பிடித்து அறிமுகம் செய்திருக்கீங்க.. மிக்க நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. பதிவர்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் சிறந்ததொரு பதிவை தேடி எடுத்து அறிமுகப்படுத்துவது என் வழக்கம் கவிதா! வருகைக்கு அன்பு நன்றி!

      Delete
  7. இன்றைய கல்யாணி ராகம் அருமை மன்னவன் வந்தானடி தோழி எனது விருப்பமான பாடல்
    பிரியா சிஸ்டர்ஸ் ஆலாபனையை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
    இன்றைய பதிவர்களுக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. ஆலாபனையை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் கில்லர்ஜி!
      பாராட்டிற்கு அன்பு நன்றி!

      Delete
  8. கம்பீரம்.. கம்பீரம்..
    கல்யாணி கன கம்பீரம்!..

    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அருமையான பாராட்டிற்கு இனிய நன்றி!

      Delete
  9. விறுவிறுப்பாக அதே சமயம் மனதில் நிற்கும் வகையில் பதிவுகள் தொடர்கின்றன. வாழ்த்துக்கள். புதிய பதிவர்களுக்கு நல்வருகை. நாளை மற்றொரு ராகத்திற்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  10. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  11. தினம் ஒரு ராகத்தை விளக்கி அதில் அமைந்த பாடல்களைத் தேர்வு செய்து கொடுக்கும் விதம் அருமை! புதுமை! அறிமுகமாகும் பதிவர்க்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அருமையான பாடல்கள். இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. இனிமையான பாடல்கள். குறிப்பா "அம்மாவென்றழைக்காத" பாடல் பிடித்த பாடல்.
    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. ரசித்து எழுதிய இப்பதிவை இங்கே அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.

    பாடல்களை விரும்பிக் கேட்பேன். ஆனால் அவை என்ன ராகத்தில் உள்ளன என்பதெல்லாம் தெரியாது.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அன்பின் மனோ சாமி நாதன்

    பதிவர்கள் அறிமுகம் அருமை - 16 பதிஅவ்ரக்ளையும் அவர்களது 16 பதிவுகளையும் அருமையாக பதிவிட்டது நன்று. 23 மறுமொழிகளும் நான்கு வாக்குகளும் பெற்றது பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அன்பின் மனோ சாமி நாதன்

    பதிவர்கள் அறிமுகம் அருமை - 16 பதிவர்களையும் அவர்களது 16 பதிவுகளையும் அருமையாக பதிவிட்டது நன்று. 23 மறுமொழிகளும் நான்கு வாக்குகளும் பெற்றது பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. வலைச்சரத்தில் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள். ராகங்களும், பாடல்களும் அருமை. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நன்றி திரு மனோ சாமிநாதன்,
    நாளொரு பாடலை நிறுத்தாமல் எழுத வேண்டும் என்ற உறுதியுடன் தொடங்கினேன். ஆனால் நேர மேலாண்மைச் சிக்கல்களுக்கிடையில் இதனைத் தொடர்வது இயலாமற் போன குற்றம் இன்னும் இருக்கிறது.
    திரும்பவும் தொடங்க இந்த சுட்டி உதவலாம்; ஆனால் இதனை என்னுடைய அறிமுகமாக நான் கருதவில்லை.
    வலைப் பக்கத்திலும் தமிழ்மணத்திலும் மிக விருப்பமுடன் நேரத்தைச் செலவிட்ட சில ஆண்டுகளுக்குப் பின் தமிழ் வலைப் பதிவுகள் இயங்கும் முறை மாறிப் போனது. எனவே வலைப்பதிவுகளை இடுவது மிகவும் குறைந்தும் போனது.
    வலைப்பதிவுகளில்தான் எழுதுவதை குறைத்து விட்டேனே தவிர எழுதுவதை அல்ல. எதிர்வரும் உலகத்தமிழ் மாநாட்டின் ஒரு அமர்வில் பங்கேற்கிறேன்.
    இந்த சுட்டிக்கு எனது நன்றி.

    ReplyDelete
  19. இனிய பாடல்களுடன் வலைப்பூ அறிமுகங்கள்...

    ஒரே ஆதங்கம், இத்தனை அருமையான வலைப்பூக்களையும் தொட்ர ஆசை என்றாலும் நேரம் தடுக்கிறது... தொடர முயற்சிப்பேன் !

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  20. ஜனனி ஜனனி...என்ற பாடல் அருமையான பாடல்...அம்மா என்றழைக்காத உயிரில்லையே....இப்படி நிறைய சொல்லலாம் இல்லையா?!

    அருமையான பாடல்கள் நீங்கள் கொடுத்திருப்பவையும்....

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது