வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!
➦➠ by:
ஊஞ்சல்- கலையரசி
எல்லோருக்கும்
வணக்கம்.
இந்நூற்றாண்டில்
வயது வித்தியாசமின்றி, அனைவரையும் பாதிக்கும் ஒரு நோய் மனஅழுத்தமே.
இந்நோயால் மனநலமும்,
உடல்நலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, மனச்சோர்வு(Depression)
ஏற்படுவதுடன், இதயத்தாக்கு, அதிக இரத்த அழுத்தம் போன்ற உயிருக்கு ஆபத்தான வியாதிகளும் உண்டாகின்றன.
கால் நூற்றாண்டுக்கு
முன் மனஅழுத்தம், மனச்சோர்வு, மனச்சிதைவு போன்ற
உளவியல் கோளாறுகளைப் பற்றிய விழிப்புணர்வு, நம்மிடம் அறவே இல்லை. அக்காலத்தில் மனநோய் என்றாலே பைத்தியம் தான். அதற்குச் சரியான வைத்தியமும் கிடையாது.
ஆனால் இன்று நிலைமை
மாறிவிட்டது. இன்று குழந்தைகள் முதல் முதியவர் வரை, அவர்களுக்கேற்படும் பல்வேறு
மனக்கோளாறுகளுக்கு இத்துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை கேட்பதும், சிகிச்சை பெறுவதும்
சாதாரண விஷயமாகிவிட்டது.
இன்றைய வாழ்க்கை
சூழலில், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த மன அழுத்தத்துக்கும், மனத்தளர்ச்சிக்கும்
ஆளாகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
போட்டிகள் நிறைந்து முற்றிலும் வணிகமயமாகிவிட்ட
இக்காலச்சூழலில் தோல்வி, ஏமாற்றம், பயம்,
குறிப்பிட்ட கெடுவுக்குள் அளவுக்கதிகமான வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம், போதுமான
ஓய்வின்மை, சரியான தூக்கமின்மை ஆகியவை மன அழுத்தம்
ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இவை தவிர நெருங்கிய உறவினரின் திடீர் மரணம்,
முதுமையில் தனிமை, காதல் தோல்வி ஆகியவையும், மது, சிகரெட், போதை மருந்து போன்ற கெட்ட பழக்கங்களும், மனஅழுத்தத்தை
அதிகப்படுத்துகின்றன.
மன அழுத்தம், அதைப் போக்கக்கூடிய வழிகள் போன்றவற்றை
விளக்கமாக அலசுகிறது உளவியல் தமிழ் என்ற
வலைப்பூ. உளவியல் சம்பந்தப்பட்ட அருமையான பல கட்டுரைகள் இதில் உள்ளன.
இன்று நம் ஆரோக்கியமான வாழ்வுக்குப் பெரும்
சவாலாக இருக்கும் இந்நோய், ஆதிகாலத்தில் மனிதனின்
உயிரைக் காப்பாற்றவே உருவானது என்று டாக்டர்
சித்ரா அரவிந்த் அடேங்கப்பாவில் விளக்கும் போது வியப்பாக இருக்கிறது!
மனக்கோளாறு
நீங்கி மன அமைதி பெற நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் பற்றியறிய இணைப்பு
இங்கே:-
குழந்தைகளையும் இந்நோய் கடுமையாகப் பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கான காரணங்கள், அதிலிருந்து அவர்களை
மீட்கும் வழிகள் என்பதை விரிவாக விளக்குகிறது இன்னொரு விதைவிருட்சம் கட்டுரை.
எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும், கவலையை மறந்து வாய் விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும்
என்பது தான் உளவியல் நிபுணர்களின் கருத்து
நகைச்சுவை மனமகிழ்ச்சிக்கு வித்திடுவதில் முக்கிய
பங்கு வகிக்கிறது. சிரிக்கக் கற்றுக்கொண்டால், எந்நேரமும் மனதை அழுத்திக்
கொண்டிருக்கும் கவலைகளிலிருந்து நம்மால் விடுபட
முடியும்.
பதிவுலகில் நான் ரசித்த நகைச்சுவை பதிவுகளை, நீங்களும்
ரசிக்க கீழே கொடுத்துள்ளேன். -
தமிழ்ச்சிறுகதை
மன்னர் புதுமைப்பித்தன் அவர்களின் பூசணிக்காய் அம்பி என்ற கதையைச் அழியாச்சுடர்கள் தளத்தில் சமீபத்தில்
வாசித்து மகிழ்ந்தேன்.
நான் ரசித்த கரிசல்காட்டு
இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜ்நாராயணன்
அவர்களால் நகைச்சுவை இழையோட எழுதப்பட்ட 'நாற்காலி' கதை தமிழ்த்தொகுப்புகள் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது:-
2014 ல் சூப்பர் ஹிட்ஸ் பதிவர் யார் தெரியுமா? என்று மூங்கில் காற்று
வலைப்பூவில் திரு. டி.என்.முரளிதரன் கொடுத்த பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு, யாரென்று
தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், அதை வாசித்தால் நான் தாங்க அது என்கிறார்.
வியப்பு மேலிட தொடர்ந்து வாசித்த போது தான்
தெரிந்தது, வீட்டில் அம்மணியிடம் இவர் வாங்கிய குட்டுகளையெல்லாம் ஹிட்ஸ் கணக்கில்
சேர்த்திருக்கிறார் என்று! அதற்குப் பொருத்தமான
விவேக் படம் வேறு! நல்ல நகைச்சுவை.
ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகாலைத் தரிசிக்க வேண்டும் என்பது உங்களது
நீண்ட நாள் ஆசையா? ஹிந்தி தெரியாமல் எப்படி வட இந்தியப் பயணம் செய்வது என்ற தயக்கமா
உங்களுக்கு? கவலையை விடுங்கள்.
உங்களை ஆக்ராவிற்கு அழைத்துப்போய் தாஜ்மகாலைச் சுற்றிக் காட்டுவது
ஒன்றையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் 'மும்தாஜ் வந்துவிட்டால்' ஆக்ரா பயணம் என்ற பதிவைப் படியுங்கள். அடிக்கடி
ஆக்ராவிற்குப் போய் வருவதால், மும்தாஜே இவரது கனவில் வருகிறாராம்!
நினைவுகள் என்ற தளத்தில் அபயா அருணாவின் காரமான கடுகு சைஸு பதிவு என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.
டாடா பிர்லா மாதிரி பணக்காரர் ஆக வேண்டுமா? என்ற தலைப்பைப் பார்த்து ஆர்வமாகப் பதிவைப் படித்தவர்கள், கடைசியில் களியைப் பற்றியறிந்து நொந்து போயிருப்பார்கள். மன அலைகள் என்ற வலைப்பூவில் திரு பழனி கந்தசாமி அவர்களின் கோவை குசும்பு நகைக்க வைத்தது.
டாடா பிர்லா மாதிரி பணக்காரர் ஆக வேண்டுமா? என்ற தலைப்பைப் பார்த்து ஆர்வமாகப் பதிவைப் படித்தவர்கள், கடைசியில் களியைப் பற்றியறிந்து நொந்து போயிருப்பார்கள். மன அலைகள் என்ற வலைப்பூவில் திரு பழனி கந்தசாமி அவர்களின் கோவை குசும்பு நகைக்க வைத்தது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே ஸாதிகா
எழுதிய இரவல் புத்தகம் வாசித்திருக்கிறீர்களா?
நகைச்சுவை இழையோடும் சிறுகதை.
வாழ்க்கைக்கும்
வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம். அது என்ன? என்ன தான் நெருப்பு கோழியா இருந்தாலும், அதால அவிச்ச
முட்டை போட முடியாது போன்றவை அருணா செல்வத்தின்
ரசிக்கக்கூடிய இம்சை தத்துவங்கள்.
வரைபடத்தில் அசோகர்
சாம்ராஜ்யத்தைச் சீனாவில் முட்டை போட்டு வரைந்து காட்டிச் சரித்திரம் படைத்த ராசியின் நினைவலைகள் வாய் விட்டுச் சிரிக்கவைத்தது. இவ்வலைப்பூவின் சொந்தக்காரர் ராஜலெஷ்மி பரமசிவம்.
அக்காலத்தில் திருமணமான
பெண்கள் தங்கள் கணவர், மாமனார் பெயர்களைச்
சொல்லமாட்டார்கள். சொல்ல வேண்டிய கட்டாயம்
வரும் போது ஏதேதோ குறிப்பு கொடுத்து நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். இதனை அடிப்படையாக வைத்து இலக்கியச்சாரல் சொ.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய புதிரோ புதிர் நல்ல நகைச்சுவை கதை.
பதிவுலகில் திரு வை.கோபாலகிருஷ்ணன் என்கிற கோபு சாரைத்
தெரியாதவர்கள் இருக்க முடியாது. வலைச்சரத்தில்
முதல் தடவை ஆசிரியர் ஆனவர்களில் பெரும்பாலோர் (என்னையும் சேர்த்து), இவரது பரிந்துரையில் ஆனவர்களே!
நகைச்சுவையாக எழுதுவது கடினம். ஆனால் கோபு சாருக்கோ, அது கை வந்த கலை. இவரது பல கதைகளில்
நகைச்சுவையும் கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும் எடுத்துக்காட்டுக்கு ஒன்று:- .
பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார் என்ற புதுக் குறளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க உதயம் என்ற கதை முழுக்க
முழுக்க கிண்டலும் கேலியும் நிறைந்த நகைச்சுவைத்
தொடர். நான் மிகவும் ரசித்து வாசித்த பதிவு இது. யான் பெற்ற
இன்பம் நீங்களும் பெற உங்களுக்கு இக்கதையைச் சிபாரிசு செய்கிறேன்.
இறுதியாக சிரிக்க மட்டுமே சிந்திக்க அல்ல என்ற தலைப்பில் வகுப்பறை வாத்தியார் தொகுத்திருக்கும் நகைச்சுவை துணுக்குகளிலிருந்து ஒன்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன்:-
மனைவி:- ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும், இல்ல உங்க அம்மா இருக்கணும்!
மனைவி:- ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும், இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன்:- நீங்க
ரெண்டு பேருமே கிளம்புங்க.
வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்.
மனைவி??????????
நாளை சந்திப்போம்,
நன்றியுடன்,
ஞா.கலையரசி
|
|
நகைச்சுவைப்பதிவர்களில் பலரின் படைப்புக்களை சுவைபட எடுத்துச் சொல்லி அறிமுகம் செய்துள்ளது, புன்னகை புரிய வைக்கிறது.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
>>>>>
தங்களது முதல் பின்னூட்டத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்!
Deleteவாய் விட்டுச் சிரித்தால் .... என்ற தலைப்பும் அருமை.
ReplyDeleteஇன்றைய அவசர உலகில் பலரின் மன அழுத்தத்திற்கான காரணங்கள் + அதற்கான இன்றைய நவீன மனநோய் மருத்துவ மனைகள் + சிகிச்சைகள் என பல்வேறு தகவல்கள் கொடுத்திருப்பதும் சிறப்பாக உள்ளன.
>>>>>
சிறப்பு எனப் பாராட்டியதற்கு நன்றி சார்!
Delete//பதிவுலகில் திரு வை.கோபாலகிருஷ்ணன் என்கிற கோபு சாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வலைச்சரத்தில் முதல் தடவை ஆசிரியர் ஆனவர்களில் பெரும்பாலோர் (என்னையும் சேர்த்து), இவரது பரிந்துரையில் ஆனவர்களே! //
ReplyDeleteஅடடா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மேடம். திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் அதுவாகவே அவர்களைத் தேடி, ஓடி, நாடி வருகின்றன.
அவ்வாறான மிகத்திறமையாளர்களை அடையாளம் காட்டிடும் அரிய பெரிய வாய்ப்புகள், சமயத்தில் என் மூலம் அமைந்து விடுகிறது என்பதே உண்மை. அதில் எனக்கும் மிகவும் சந்தோஷமே.
>>>>>
திறமையை மதித்து மேலும் ஊக்கமும், ஆக்கமும் கொடுப்பதற்குப் பெரிய மனது வேண்டும். அது உங்களிடம் தாராளமாகவே இருக்கிறது. மிகவும் நன்றி சார்!
Delete//நகைச்சுவையாக எழுதுவது கடினம். ஆனால் கோபு சாருக்கோ, அது கை வந்த கலை. இவரது பல கதைகளில் நகைச்சுவையும் கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும்.//
ReplyDeleteமிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நகைச்சுவைக் கதைகள் கேட்பதோ, படிப்பதோ, எழுதுவதோ, தொலைகாட்சியில் ‘ஆதித்யா’ போன்ற நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் பார்ப்பதோ எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.
நகைச்சுவை கலந்து பேசுவோரிடம் மட்டுமே, எனக்கு மணிக்கணக்காகப் பேசப்பிடிக்கும். மற்றபடி நான் ஒரு Reserved Type. அதிகமாக யாருடனும் பழகவோ, அனாவஸ்யமாக பேசவோ விரும்பாதவன்தான்.
சினிமாவில் அனைத்து நகைச்சுவை நடிகர்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, வி.கே. ராமசாமி, சோ போன்ற பழைய நடிகர்களின் நகைச்சுவைகளும் மிகவும் பிடிக்கும்.
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் வானொலியில் பேசுவதை [தினம் ஒரு தகவல்] தினமும் விரும்பிக் கேட்டதுண்டு.
நகைச்சுவை உணர்வு இல்லாவிட்டால், வாழ்க்கையே மிகவும் போர் அடித்துப்போகும்.
>>>>>
“நகைச்சுவை உணர்வு இல்லாவிட்டால், வாழ்க்கையே மிகவும் போர் அடித்துப்போகும்"
Deleteமுழுக்க முழுக்க உண்மை.
//”பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
ReplyDeleteமற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்”
என்ற புதுக் குறளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க உதயம் என்ற கதை முழுக்க முழுக்க கிண்டலும் கேலியும் நிறைந்த நகைச்சுவைத் தொடர்.//
நானும் மிகவும் அனுபவத்து சிரித்துக்கொண்டே எழுதிய கதை அது.
// நான் மிகவும் ரசித்து வாசித்த பதிவு இது.//
சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
அந்தக்கதைக்கு திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் எழுதியிருந்த சங்கீத உபன்யாசம் போன்ற விமர்சனம் [முதல்பரிசு பெற்றது] என்னையே மேலும் சிரிக்க வைத்து விட்டது.
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html
//யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற உங்களுக்கு இக்கதையைச் சிபாரிசு செய்கிறேன். //
என் முழுநீள நகைச்சுவைக் கதையொன்றை தாங்கள் ரசித்துப்படித்து இன்புற்று, பிறரும் படிக்கும் வண்ணம் இங்கு அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
ooooo
வ.வ.ஸ்ரீ கதைக்கு நான் எழுதிய விமர்சனத்தை இங்கு பின்னூட்டத்திலும் நினைவுகூர்ந்து சிலாகித்தது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி. தங்களுடைய விமர்சனப் போட்டியின் தூண்டுதலே அது போன்று வித்தியாசமாக எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. அனைத்துப் பெருமையும் தங்களுக்கே கோபு சார்.
Deleteகீத மஞ்சரி Tue Jan 27, 03:13:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//வ.வ.ஸ்ரீ கதைக்கு நான் எழுதிய விமர்சனத்தை இங்கு பின்னூட்டத்திலும் நினைவுகூர்ந்து சிலாகித்தது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி.//
ஆமாம், தாங்கள் எழுதியனுப்பியிருந்த VGK-07 http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html மற்றும் VGK-13 http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html ஆகிய இரண்டு விமர்சனங்களும் என்னை மிகவும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தன என்பதே உண்மை. :)
//தங்களுடைய விமர்சனப் போட்டியின் தூண்டுதலே அது போன்று வித்தியாசமாக எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. அனைத்துப் பெருமையும் தங்களுக்கே கோபு சார்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. என் தூண்டுதல்களெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், தங்களின் எழுத்துக்கள் வைரமாக ஜொலிக்கத்தான் செய்தன என்பதே மிகப்பெரிய உண்மை.
’விமர்சன வித்தகி’ பற்றிய சிறப்புச்செய்திகள் மீண்டும் ‘என் வீட்டுத்தோட்டத்தில் .... பகுதி 16 of 16 [101-110] இல் இடம்பெற உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்த நிறைவுப்பகுதி மட்டும் அநேகமாக 01.02.2015 மதியம் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
101வது அறிமுகம் என்ற பெருமை தங்களுக்கும், அஷ்டோத்ரம் போல 108வது அறிமுகம் என்ற பெருமை திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கும் கிடைத்துள்ளன என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.
பிரியமுள்ள கோபு
“101வது அறிமுகம் என்ற பெருமை தங்களுக்கும், அஷ்டோத்ரம் போல 108வது அறிமுகம் என்ற பெருமை திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கும் கிடைத்துள்ளன என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.’
Deleteகீதாவின் விமர்சனமும் நகைச்சுவையாக ரசிக்கும்படி இருந்தது. 108 பெருமை எனக்குக் கிடைக்கப்போவதையறிந்து மிக்க மகிழ்ச்சி சார்!
//நானும் மிகவும் அனுபவத்து சிரித்துக்கொண்டே எழுதிய கதை அது.//
ReplyDeleteஅனுபவத்து = அனுபவித்து
என மாற்றிப்படிக்கவும். அவசரத்தில் எழுத்துப்பிழையாகி விட்டது.
- கோபு
வணக்கம்
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிவாளர்களை
மிகவும் நேர்த்தியான முறையில்
அனைவரும் போற்றும் வகையில்
தெரிவு செய்துள்ளீர்கள்!
வலைச் சரத்தின் வாசமிகு இன்றைய பதிவாளர்களுக்கு
இனிய வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.fr
வருகைக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்!
Deleteமிகவும் ரசித்த வை.கோ கதைகளில் ஒன்று.
ReplyDelete//Durai A Tue Jan 27, 02:42:00 AM
Deleteவாங்கோ சார், தங்களின் அபூர்வ திடீர் வருகை ஆச்சர்யம் அளிக்கிறது.
//மிகவும் ரசித்த வை.கோ கதைகளில் ஒன்று.//
தன்யனானேன். மிக்க நன்றி. அன்புடன் VGK
மிகவும் ரசித்த வை.கோ கதைகளில் ஒன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!
Deleteஇன்றைய வலைச்சரத்தில் என்னையும் ஒரு மலராகத் தொடுத்தமைக்கு
ReplyDeleteமிக்க நன்றி.
தங்களுக்கும் மற்ற அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அருணா!
Deleteசிரிப்பு தான் சிறந்த மருந்து...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாங்க தனபாலன் சார்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.நேற்று(ஜனவரி 26) எனது திருமண நாள்.மறுதினம் சூப்பர் ஹிட் பதிவு அறிமுகம் என்ன பொருத்தம் ஹிஹிஹி
ReplyDeleteஇவற்றில் ஒன்றிரண்டு படித்ததில்லை. இபோது படித்து விடுகிறேன்.
அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி
ஆஹா
Deleteஇன்று ஒரு தகவல் போல
இங்கு ஒரு தகவல்
கிடைத்திருக்கிறதே.
உலகிலேயே ?! மை (கொஞ்சம் குழம்பிய) மைண்ட் வாய்ஸ்...
தம்ப்ரி இது ஓவரா ... (நான் சாரிசாரி சரி சரி)
பதிவுலகிலேயே தாம் சிறைபட்டதை குடியரசு தினமாக விடுமுறை உடன் கொண்டாடும் TNM அவர்களுக்கு பதிவர்கள் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகள்.
“எனது திருமண நாள்.மறுதினம் சூப்பர் ஹிட் பதிவு அறிமுகம் என்ன பொருத்தம் ‘
Deleteதிருமண நாள் வாழ்த்து சார்! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!
“பதிவுலகிலேயே தாம் சிறைபட்டதை குடியரசு தினமாக விடுமுறை உடன் கொண்டாடும் TNM அவர்களுக்கு பதிவர்கள் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகள்.”
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்!
நகைச்சுவை உணர்வு நம்மிடம் தேவை என்பதை தாங்கள் அனாயசமாக எடுத்துத் தந்துள்ள விதம்அருமையாக உள்ளது. அதற்கேற்றாற்போல் உரிய பதிவுகளைத் தெரிவு செய்து அனைத்தையும் ஒட்டுமொத்தமாக படிக்கும் வாய்ப்பையும் தந்தமைக்கு நன்றி. பதிவர்கள் அறிமுகம் நன்று.
ReplyDeleteஅருமையாக உள்ளது என்ற பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி சார்!
Deleteஹை இன்றைய அறிமுகங்களில் நிறைய நண்பர்கள்,சகோதரிகள். சிலர் மட்டுமே புதிது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! துளசிதரன், (துளசியின் தோழி)கீதா
ReplyDeleteபொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்// ஆஹா! இது எங்கேயோ கேட்ட்து போல் உள்ளது என்று பார்த்தால் ஒண்ணும் இல்லைங்க....நான் பள்ளிக் காலத்தில் (35-36வருடங்களுக்கு முன்....) பஸ்ஸில் பயணித்த போது பொடி போடும் ஒருவரின் தும்மலில் வந்த விளைவால் இப்படி எழுதியது நினைவுக்கு வந்தது. நம்மைப் போல் சிந்திப்பவரும் இருக்கிராரே என்று சந்தோஷமாக இருக்கின்றது....பார்த்தால் ஹை வைகோ சார்! அட! இதைத்தான் ஒருவர் எங்கோ ஒரு மூலையில்/மூளையில் சிந்திப்பதைப் போன்று உலகில் வேறு எங்கோ ஒரு மூலையில்/மூளையில் அதே போன்று சிந்திப்பார்-டெலிபதி என்று சொல்லவார்களே அதுவோ என்று தோன்றியது.....என்ன ஒரே ஒரு வித்தியாசம் வார்த்தையில் மற்றவரெல்லாம் என்பதற்கு பதில் நான் போட்டது மற்றோரெல்லாம் என்று. வைகோ சார் உங்களுக்கு வணக்கங்கள்! பல வணக்கங்கள்! எப்படி இப்படி என்று தோன்றிய மிகவும் சந்தோஷப்பட்டேன் சார்....-கீதா
//வைகோ சார் உங்களுக்கு வணக்கங்கள்! பல வணக்கங்கள்! எப்படி இப்படி என்று தோன்றிய மிகவும் சந்தோஷப்பட்டேன் சார்....-கீதா //
Deleteவெவ்வேறு ஊர்களில் இருப்பினும், வெவ்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்தாலும், ஒரே எண்ணங்களும், ஒரே நகைச்சுவை உணர்வுகளும் உள்ளவர்களுக்கு இதுபோல ஒரே வார்த்தைகள் மனதில் உதித்து வெளிப்படலாம் என நினைக்கிறேன். இதை இங்கு ஒப்பிட்டு, ஒருங்கிணைத்து, சிலாகித்துச் சொல்லியுள்ளதற்கு மகிழ்ச்சி + நன்றி.
VGK
மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்// ஆஹா! இது எங்கேயோ கேட்ட்து போல் உள்ளது என்று பார்த்தால் ஒண்ணும் இல்லைங்க....நான் பள்ளிக் காலத்தில் (35-36வருடங்களுக்கு முன்....)
Deleteமலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி சார்!
என்னையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி. மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!
Deleteபொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
ReplyDeleteமற்றரெல்லாம் சளி பிடித்தே சாவார்!..
இது 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தமிழாசிரியர் ஐயா K.T. பாலசுந்தம் அவர்கள் சொன்னதாயிற்றே!.. ( ஐயா அவர்களுக்கும் முன்னால் - யார் சொன்னார்களோ!..)
குறளின் வடிவம் அல்லவா!.. அது தான் நின்று நிலைத்திருக்கின்றது.
நகைச்சுவையால் முகம் மலரும்.
நல்லதொரு தொகுப்பில் - நினைவுகளும் மலர்கின்றன..
துரை செல்வராஜூ Tue Jan 27, 09:54:00 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றரெல்லாம் சளி பிடித்தே சாவார்!..
இது 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தமிழாசிரியர் ஐயா K.T. பாலசுந்தம் அவர்கள் சொன்னதாயிற்றே!.. ( ஐயா அவர்களுக்கும் முன்னால் - யார் சொன்னார்களோ!..)//
அப்படியா ? இதைக்கேட்க எனக்கும் மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது. அவர் எந்த ஊர் ஆசிரியரோ ! அப்படியென்றால் இது பலகாலமாக, யுகம் யுகமாக பேசப்பட்டுவரும் ஓர் நகைச்சுவைக்குறளாகவே இருந்திருக்குமோ !
ஆனால், ஏதோ எனக்கு அன்று இந்தக்கதை எழுதும்போது என் மனதில் புதிதாக உதித்தது. உடனே அதை நான் என் கதையில் எழுதி உபயோகித்துக் கொண்டேன்.
//குறளின் வடிவம் அல்லவா!.. அது தான் நின்று நிலைத்திருக்கின்றது.//
சரியாகவே சொல்லியுள்ளீர்கள். அதே அதே .....
2-3 நாட்கள் முன்பு கைபேசியில் இதுபோல பல குறள்களை புதுமையாக யாரோ படைத்துத் தொகுத்து எல்லோருக்கும் அனுப்பி வைத்திருந்தார்கள். எல்லாமே நல்ல நகைச்சுவையாக இருந்தன.
அன்புடன் VGK
அன்பின் ஐயா..
Deleteதமிழாசிரியர் ஐயா K.T. பாலசுந்தரம் அவர்கள் போற்றுதலுக்குரியவர். வீட்டிலிருந்து கொண்டு வரும் மதிய உணவை ஏழை மாணவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சியடைபவர்.
நான் உயர்நிலை பயின்றது - பந்தநல்லூர் எனும் ஊரில். இது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இந்த ஊர் மயிலாடுதுறை - மணல்மேடு - திருப்பனந்தாள் சாலையில் உள்ளது.
கருத்துரைக்குக் கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!.
துரை செல்வராஜூ Tue Jan 27, 05:06:00 PM
Delete//அன்பின் ஐயா..
தமிழாசிரியர் ஐயா K.T. பாலசுந்தரம் அவர்கள் போற்றுதலுக்குரியவர். வீட்டிலிருந்து கொண்டு வரும் மதிய உணவை ஏழை மாணவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சியடைபவர்.//
ஆஹா, மிகவும் நல்ல மனிதநேயம் மிக்கவராக உள்ளாரே ! கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
//நான் உயர்நிலை பயின்றது - பந்தநல்லூர் எனும் ஊரில். இது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இந்த ஊர் மயிலாடுதுறை - மணல்மேடு - திருப்பனந்தாள் சாலையில் உள்ளது.//
தகவல்களுக்கு மிக்க மகிழ்ச்சி. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகிய பந்தநல்லூரில் பிறந்ததால்தானோ என்னவோ வலையுலகில் எல்லோரிடமும் பந்த பாசத்துடன் பழகி வருகிறீர்கள் என நினைக்கிறேன். :)
’மணல்மேடு’ பற்றி படித்ததும் ‘வாய்மேடு’ என்ற கிராமம் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது. .
’கிழக்கு வாசல் உதயம்’ என்று ஓர் மிகச்சிறப்பான மிகத்தரமான, மாத இதழ் திருத்துறைப் பூண்டியிலிருந்து வெளியாகி வருகிறது. அதன் ஆசிரியர்: உத்தமசோழன் என்பவர்.
‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ என்ற தலைப்பினில் ஓர் தொடர்கதை [வரலாற்றுக் காவியம் என்றும் சொல்லலாம்] எழுதி வருகிறார்.
அதில் இந்த ’வாய்மேடு’ கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கைகள் நன்கு மிக அழகாக எழுதப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து சந்தா கட்டி மிகவும் ஆர்வத்துடன் ரசித்துப்படித்து வருகிறேன். எழுத்து என்று சொன்னால் இந்தக்கதையில் வரும் எழுத்துக்களே எழுத்துக்கள் என்பேன்.
அவரின் எழுத்துக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அவ்வளவு அருமையாகவும், பொறுமையாகவும், வர்ணித்து எழுதி என்னை அந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஏழைப்பெண்ணான ‘சுந்தரவல்லி’யிடமே அழைத்துச்சென்று வருகிறார் அதன் ஆசிரியர் திரு. உத்தமசோழன் அவர்கள்.
அவரை இங்கு மானஸீகமாக நான் பாராட்டி கெளரவித்து மகிழ்கிறேன்.
//கருத்துரைக்குக் கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!.//
மிக்க நன்றி, ஐயா.
அன்புடன் VGK
Delete“நகைச்சுவையால் முகம் மலரும்.
நல்லதொரு தொகுப்பில் - நினைவுகளும் மலர்கின்றன..”
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!
’கிழக்கு வாசல் உதயம்’ என்று ஓர் மிகச்சிறப்பான மிகத்தரமான, மாத இதழ் திருத்துறைப் பூண்டியிலிருந்து வெளியாகி வருகிறது. அதன் ஆசிரியர்: உத்தமசோழன் என்பவர்.
‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ என்ற தலைப்பினில் ஓர் தொடர்கதை [வரலாற்றுக் காவியம் என்றும் சொல்லலாம்] எழுதி வருகிறார்.
நல்லதொரு தகவலுக்கு நன்றி சார். எனக்கும் அந்த முகவரியைச் சொல்லுங்கள். நானும் வாசித்து மகிழ்கிறேன்.
VGK >>>>> Mrs. GK Madam
Delete//நல்லதொரு தகவலுக்கு நன்றி சார். எனக்கும் அந்த முகவரியைச் சொல்லுங்கள். நானும் வாசித்து மகிழ்கிறேன். //
திரு. உத்தமசோழன் அவர்கள்,
ஆசிரியர் ‘கிழக்கு வாசல் உதயம்’
525 சத்யா இல்லம்.
மடப்புரம் 614 715
திருத்துறைப்பூண்டி
Mobile: 9443343292
ஓர் ஆண்டு சந்தா ரூ. 300
For 3 years: Rs. 850
For 5 years: Rs. 1400
வாழ்நாள் சந்தா ரூ. 5000/-
சிட்டி யூனியன் பேங்க் நடப்புக்கணக்கு மூலமும் சந்தா செலுத்தலாம். A/c No. 510909010007381 [IFSC CODE: CIUB 0000257]
Just for your information only.
VGK
முகவரி குறித்துக் கொண்டேன். தகவலுக்கு நன்றி சார்!
Deleteதங்கள் அறிமுக பதிவர்கள் அருமை. தங்களை எனக்கு அறிமுகப்படுத்திய ஆதிவெங்கட் அவர்களுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரையும் தொடர்வோம்.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி!
Deleteமனசு விட்டுப்பேசுவதும், கள்ளங்கபடமில்லாமல் சிரிப்பதும் இல்லாமல் போய்விட்டதால்தான் இந்ததகைய நோய்களுக்கு மிக்கிய காரணம். அப்போதெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் பாரங்களை சுமக்க பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போதோ பெரியவர்களும் இல்லாமல் சுமைகளும் அதிகமாகிவிட்டதால்தான் மனிதர்களிடத்தில் மன அழுத்தங்களும் அதிகமாகிவிட்டன. த.ம.+
ReplyDeleteநல்லதொரு கருத்து பகிர்வுக்கு நன்றி கவிப்பிரியன்! தம வாக்குக்கும் என் நன்றி!
Deleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஅருமை எனப்பாராட்டியதற்கு நன்றி கவிப்பிரியன்!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன் கற்பனைக் கதாநாயகி ராசி இன்று வலைச் சரத்தில் வலம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ராசி வலம் வர உதவி புரிந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.
ReplyDeleteஎன்னுடன் அறிமுகமான என் நண்பர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். ஓரிருப் பதிவர்கள் எனக்குப் புதிது. தொடர்கிறேன்.
மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி!
Deleteராசி கற்பனை கதாநாயகியா? நீங்கள் எழுதியிருந்ததைப் படித்த போது உங்கள் மலரும் நினைவலைகள் என்றல்லவா நினைத்தேன். அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருக்கிறீர்கள்.
மிகவும் ரசித்த பதிவு இது. மேடம் வேண்டாம் கலை என்றே கூப்பிடுங்கள்.
இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் மிகுந்த பயனுள்ளவை. மன அழுத்தம் உண்டாவதன் காரணங்களையும் அது பற்றிய பதிவுகளையும் அறிமுகப்படுத்தியதோடு வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதற்கேற்ப நகைச்சுவைப் பதிவுகளையும் அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு. கிராவின் நாற்காலி முன்பே வாசித்திருந்தேன். புதுமைப்பித்தனின் பூசனிக்காய் அம்பி இப்போதுதான் வாசித்தேன். மற்றப் பதிவுகளையும் வாசிக்கிறேன். சில தளங்கள் எனக்குப் புதியவை. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பு எனப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி கீதா!
Deleteசிரிப்பு இல்லாத வாழ்வு வெறுப்பு ஆகிவிடும் – ஆம்
ReplyDeleteமனிதன் சிரிக்கத் தெரிந்த ஜீவி அருமை.
இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.
தமிழ் மணம் – 6
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
தங்களது வருகைக்கும், அருமையான கருத்துக்கும்,, தம வாக்குக்கும் என் நன்றி கில்லர்ஜி சார்!
Deleteஅறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! ஒரு தடவை 'கிரேஸி' மோகன் சொன்னது "ஒரு மனுஷனை மனசு விட்டு சிரிக்க வைக்கர்து அப்பிடிங்கர்து ரொம்ப சீரியஸான வேலை, அதை அவ்ளோ சுலபமா எல்லாராலையும் பண்ண முடியாது"
ReplyDeleteநகைச்சுவையாக எழுதுவதும் பேசுவதும் எல்லோருக்கும் வாய்க்கப்பெறாது. நீங்கள் பகிர்ந்த கருத்து முழுக்க முழுக்க உண்மை. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteசிறப்பான பல பதிவுகளையும் பதிவர்களையும் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! அருமை! தொடருங்கள்!
ReplyDeleteஅருமை எனப் பாராட்டி ஊக்குவிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஆஹா ! இவ்வளவு பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதே தங்களின் பதிவின்வழிதான் அறிந்துகொண்டேன் அக்கா ! அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி !!
ReplyDeleteஎன் பதிவின் மூலம் பதிவர்களை நீங்கள் அறிந்து கொண்டதையறிந்து மிக்க மகிழ்ச்சி. நன்றி திருமுருகன்!
Deleteமிகச் சிறந்த பதிவர்களை
ReplyDeleteசுருக்கமாக ஆயினும் மிகச் சிறப்பாக
அறிமுகம் செய்த விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ரமணி சார்!
Deleteவணக்கம் கலையரசி. இன்றுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். என்னுடைய பதிவை இங்கு அறிமுகம் செய்ததற்கு மனமார்ந்த நன்றி.
ReplyDelete