பதிவுலகில் பெண்கள்!!!
பல காலமாய், மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேர்களைப் போல, சமுதாயத்தின் வளர்ச்சியில் தனது மறைமுகப் பங்காற்றலை வழங்கிய பெண்கள்,தன் உணர்வுகளை கரண்டிகளின் வழியாகவே பேசிக் கொண்டிருந்த பெண்கள் ,இன்று சிறகு முளைத்து எல்லாத் துறைகளிலும் தடம் பதித்து தங்கள் தனித் தன்மையை அழகாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..சமுகத்தின் சோதனைகளைத் தாண்டி, சாதனைகளைப் படைக்கிறார்கள். அப்படி நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கும் பல பெண்பதிவர்களில் சில பெண் பதிவர்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்...
திவ்யா மத்தாப்பாய் தன் உணர்வுகளை,அழகாய் வெளிப்படுத்துவார் இவரது எழுத்து நடை கவித்துவமாய் மிளிரும்.
இவர் தரும் ஆலோசனைக் குறிப்புகள் நிச்சயம் பெண்களுக்கு ஒரு நல்ல வழிக்காட்டி. சமிபத்தில் இவர் பதித்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக" பதிவு, அலுவலகம் போகும் பெண்களுக்கு மிகவும் அவசியமான பதிவு...
அதுவும், புதியதாய் திருமணம் ஆகபோகும் பெண்கள் மாமியாரிடமும் , நாத்தனாரிடமும் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று இவர் தந்த குறிப்புகள் நல்ல சிந்தனை. ஆண் பெண் மென்மையான நட்பில் இயல்பாக எழும் சில அவசியமில்லாத உணர்வுகளை எப்படி சரி செய்த்துக் கொள்வது என்ற மிக கவனமாக கையாள வேண்டிய விடயத்தைக் குறித்து இவர் கொடுத்த ஆலோசனைக் குறிப்பு என்னை ரசிக்கவும்,சிந்திக்கவும் வைத்தது.இவர் கதை எழுதும் திறமையை நாம் அனைவரும் அறிவோம்.நட்புக்கு இவர் கொடுக்கும் முக்கியத்துவமும் என்னை கவர்ந்தது.
ஆகாய நதி : பதிவுகளில் புதியதாய் பூத்திருக்கும் அழகிய பூச்செடி இவர். இதுவரை பதிவுலகில் அமைதியாய் உலாவிக் கொண்டிருந்தவரை, நம் நட்புலகில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.குழந்தைகளுக்கும் அழகாய் கதை சொல்லுகிறார் .கர்பிணிகளுக்கான மிகவும் பயனுள்ள குறிப்புகளை தெளிவாய் தொகுத்து பதித்துவருகிறார். சிறந்த பதிவுகளை தொடர்ந்து வழங்கிட, வாழ்த்தி வரவேற்ப்போம்.
காயத்ரி: தன் உணர்வுகளை கவிதைகளில் இயல்பாய்,அழகாய் வெளிப்படுத்துவதில் சிறந்தவர். இவரது உதிர்தல் கவிதை உணர்வுகளை வரிகளாய் வார்த்தெடுத்த ஒரு அற்புதம்.
இவரது சமீபத்து பெயரிடாத கவிதை
"யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்."
அழகிய ஒரு படைப்பு.....
இவரது பதிவெங்கும் நம்மை ஈர்க்கும் அற்புதக் கவிதைகள் அழகாய் மலர்ந்திருக்கின்றன.....
லக்ஷ்மி சாகம்பரி பதிவுலகில் சமீபத்தில் விரும்பி படிக்கும் வலைப்பூ. தன் கவிதைகளில், உணர்வுகளை மிகவும் அருமையாக வெளிப்படுத்திருப்பார். இவரது நத்தைக்கூடு என்னை மிகவும் கவர்ந்த ஒரு பதிவு... இவரின் சிந்தனையில், இன்னொரு குறிப்பிடும் படியான அருமையான கவிதை கண்ணாடி . மென்மையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்.
இவர்களை போன்று மேலும் பற்பல திறமைகளை வெளிப்படுத்தும் நிவிஷா, ஷாலினி, இனியவள் புனிதா... போன்ற பலர் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்போம்
நாளை சில பதிர்வகளோடு உங்களை சந்திக்கிறேன்!
|
|
தொகுப்பு அருமை. லக்ஷ்மி சாகம்பரி மற்றும் ஆகாய நதி பதிவுகள் படித்ததில்லை. சுட்டிகளுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான தொகுப்பு அம்மணி.... இன்னும் எண்ணற்ற பெண்கள் பதிவுலகில் பட்டைய கெளப்பிட்டு இருக்காங்க... எல்லாத்துக்கும் வாழ்த்துக்களோடு வரவேற்பும் :)))
ReplyDeleteநல்ல தொகுப்பு
ReplyDeleteஎழில்
ReplyDeleteவிதிமுறைகளுக்கு ஏற்ப - பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்தது நன்று. அனைத்தையும் படித்து விடுவோம். நல்வாழ்த்துகள்
நன்றி நல்லவன்!!! கட்டாயம் படியுங்கள்!!!!
ReplyDeleteநன்றி ஜி!!!!! ஆம் நிறைய பேர் இருக்காங்க... நேரமின்மையால் சில சுட்டிகள் தான் இட முடிந்தது....
ReplyDeleteநன்றி குள்ளமணி!!!
ReplyDeleteஅழகாக சரம் தொடுத்திருக்கிறீர்கள் எழில்.
ReplyDeleteஎன் பதிவுகளை விரிவாக அறிமுகப்படுத்தி விமர்சித்தமைக்கு நன்றி!!!
ரொம்ப நன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி... :) என்னைய ரொம்பப் புகழ்ந்துட்டீங்க போங்க...:)
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி சீனா அய்யா!!
ReplyDeleteநன்றி திவ்யா!!!!
ReplyDeleteநல்லதை எல்லோருக்கும் சொல்லனும்ல!!!
நன்றி ஆகாய நதி உண்மையை தானே சொன்னேன்!!!
ReplyDeleteபொருமையாகத் தொடுத்த மல்லிக்கைப் பெண்கள் சரம்
ReplyDeleteமணம் வீசுகிறது எழில்.... :)))
வாழ்த்துக்கள் எழில். தொடர்ந்து நல்ல பல பதிவுகளை சுட்டிக்காட்டுங்கள்
ReplyDeleteஅருமையான தொகுப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள் எழில் ;-))
கவித்துவமான வாழ்த்துகளுக்கு நன்றி நவீன்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி பிரேம் அண்ணா!!! கட்டாயம் செய்கிறேன்!!
ReplyDeleteநன்றி கோபிநாத்!!!
ReplyDelete