குளோபல் வார்மிங் - இனி எல்லாம் பயமே
➦➠ by:
சஞ்சய்
இயற்கை பாதிப்புகள் என்றால் நாம் நன்றாக அறிந்த வரையில் புயல், வெள்ளம், சூறாவளி, எரிமலை குமுறல் போன்றவை தான் தெரியும். அதையும் தாண்டி புனிதமானதாக இல்லாமல் அபாயமானதாக சில இயற்கை பாதிப்புகளும் இருக்கின்றன. அவைகளுக்கு காரணம் மகா ஜனங்களாகிய நாம் தான் என்பது தான் முக்கியம்.
நாம் செய்யும் சில செயல்களால் பீமி வெப்பமடைகிறது. புவி வெப்பம்னா என்ன.. அதனால் என்ன பாதிப்பு என்பதை கொஞ்சம் நக்கலாக விளக்கி இருக்கிறார் மாயன். பார்க்க உலகத்துக்கு பால் ஊத்திடாதீங்க....
குளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை என்ற பதிவில் நம்ம கண்மணி அக்கா தலைப்புல இருக்கிற சமாச்சாரங்களை பத்தி சுருக்கமாவும் தெளிவாவும் சொல்லி இருக்காங்க.
"அண்டார்டிகாவில் 33 சதம் பென்குயின் பறவைகளின் எண்ணிக்கை குறைந்தும், தென் அமெரிக்கக் காடுகளில் இருந்து 20 வகைக்கும் மேற்பட்ட தவளை மற்றும் தலைப்பிரட்டை இனங்கள் அழிந்தும் உள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகின் சிறந்த பவளப் பாறைகள் 25%-க்கும் மேலாக அழிந்துள்ளன. 1990 முதல் 2002 வரை உள்ள ஆண்டுகளில் 1998, 2001 மற்றும் 2002 ஆகிய மூன்று ஆண்டுகள், கடந்த 143 ஆண்டுகளில் அதிக அளவு ஆண்டு சராசரி வெப்பநிலையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது." இப்படி சொல்லி அநியாயத்திற்கு பயமுறுத்தறார் சித்தாமுரளி. http://www.muthamilmantram.com
"பசுமைக் குடில் வாயுவான கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, புவியின் வெப்பநிலையும் அதிகரித்துக் கொண்டே செல்லும், இதுவே ஒரு காலத்தில் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமியை மாற்றி விடும் என்பது திண்ணமே!" என்று மிரட்டுகிறார் ஜிம்ஷா.
"ஒவ்வொரு தொழிற்சாலைகளும் ஏராளமான மரங்களை வளர்க்க வேண்டும். நம்மால் ஏற்பட்ட உலக வெப்பத்தை குறைக்க ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். அதற்கு, இப்போதே மரம் வளர்க்க தொடங்குங்கள். கணியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை." என்று புவி வெப்பம் பத்தி சொல்வதோடு அதில் இருந்து தப்பிக்கும் வழியையும் சொல்கிறார் Kricons.( என்ன சாமி பேர் இது? )
மனிதன் உலகை மாற்றுகின்றானா? என்ற பதிவில் மாதவன், பில் க்ளிண்டன் ஆகியோரை மேற்கோள் காட்டி புவி வெப்பமாதல் பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பார்தி.
மேலும் பார்க்க- இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது.
புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை!!!
இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்!
அழிவின் விளிம்பில் (செ.முத்துக்குமாரசாமி)
மற்ற பதிவுகள் மாதிரி பதிவை மட்டும் படிக்காம :P இதுல இருக்கிற சுட்டிகளை தயவு செய்து பாருங்க. அவ்ளோ முக்கியம் இது.
ஆகவே மக்களே.. மரம் வளர்ப்போம்.. பூமியை காப்போம்.. அடுத்த சந்ததியினரை நிம்மதியாய் வாழ விடுவோம்.
இப்பத்திக்கு அப்பீட்டேய்....:))
|
|
மீ தி பர்ஸ்ட்டு
ReplyDeleteநல்ல பதிவு. பொறுப்பாளி சஞ்சய்க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉருப்படியான் பதிவு.உபயோகமான சுட்டிகள்.
ReplyDeleteபொறுப்பாளி சஞ்சய்க்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//
ரிப்பீட்டுடுடுடு
நம்மள தவிர எல்லோரும் உருப்படியா எழுதி இருக்காங்க போல...எம்புட்டு பேரு என்னமா எழுதி இருக்காங்க.
ReplyDeleteசுட்டிகளுக்கு நன்றி. உலக வெப்பமயமாதல் பத்தி நிறைய படிச்சுகிட்டு இருக்கேன். ஒரு சேர இவ்வளவு சுட்டிகளக் குடுத்ததுக்கு மறுபடி நன்றி.
ReplyDeleteபரவாயில்ல, பொடியனுக்கு கொஞ்சம் பொறுப்பும் இருக்கு :)
good, keep it going
ReplyDeleteஅனைவரும் வாசிக்கவேண்டிய ஒரு பதிவு.
ReplyDeleteசுட்டிகளெல்லாம் சேர்த்துத் தந்திருக்கிறீங்க, நன்றி.
"இனி எல்லாம் பயமே"னு மாயன் பதிவுக்கு அனுப்பினீர்கள்.
ReplyDelete//சைனாவில இருந்து ஒருத்தன் சொல்றான்... இப்படியே போனா இன்னும் 30 வருசத்துல உலக வரைபடத்துல இருந்து சென்னை, மும்பை, லண்டன், நியூயார்க் நகரம் எல்லாம் காணாம போய்டுமாம்….
அமெரிக்கால இருந்து இன்னொருத்தன் சொல்றான் பனிமலை எல்லாம் உருகுதாம்... 2080-ல உலகத்தோட கடல் மட்டம் 23 அடி ஜாஸ்தி ஆயிடுமாம்... //
அவர் எவ்ளோ பயம்னு காட்டியிருக்கிறார்!
நடைமுறை வாழ்கையில் கடைபிடிக்க முடியும் என்று தனக்குத் தோன்றும் 10 விஷயங்களை மட்டும் "இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்!" பதிவில் சொல்லியிருக்கிறார் ராதா ஸ்ரீராம். முடியாதா நம்மால்...? முயற்சிக்கலாமே!
ReplyDeleteநல்ல பதிவு சஞ்சய்!
ReplyDeleteஆகா ஆகா - வாரக் கடைசி வர வர, சஞ்செய்க்குப் பொறுப்பு வந்துடுச்சி - பூமியைப் பத்தின பயமும் கவலையும் வந்துடுச்சி - தேடிப் பிடிச்சு நல்ல பதிவுகளைச் சுட்டி இருக்காரு - நன்றுநன்று - கடைப்பிடிச்சுடுவோம்ல
ReplyDeleteஇயற்கை போதுமான அளவு நமக்கு தந்திருக்கிறது...ஆனால் நாம்தான் அதனையிட்டு திருப்தியும் கவனமும் கொள்வதில்லை...
ReplyDelete@ மங்களூர் சிவா...
ReplyDelete///நல்ல பதிவு. பொறுப்பாளி சஞ்சய்க்கு வாழ்த்துக்கள்///
ரிப்பீட்டு...
எப்போதோ எழுதியதை திரட்டி உங்கள் வளைப்பூவில் சுட்டி கொடுத்தற்க்கு நன்றி. Kricons என்பது எந்த சாமி பெயரும் கிடையாது.
ReplyDelete// மங்களூர் சிவா said...
ReplyDeleteநல்ல பதிவு. பொறுப்பாளி சஞ்சய்க்கு வாழ்த்துக்கள்//
நன்றி மாமா.. :)
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஉருப்படியான் பதிவு.உபயோகமான சுட்டிகள்.//
நன்றி தலைவரே. எல்லாம் நீங்கள் குடுத்த உற்சாகம். :)
//குசும்பன் said...
ReplyDeleteநம்மள தவிர எல்லோரும் உருப்படியா எழுதி இருக்காங்க போல...எம்புட்டு பேரு என்னமா எழுதி இருக்காங்க.//
ஆமாம் மாமா.. நம்மளால அந்த மாதிரி எழுத முடியலைனாலும் , எழுதறவங்கள படிச்சி பாராட்டனும்.
//தஞ்சாவூரான் said...
ReplyDeleteசுட்டிகளுக்கு நன்றி. உலக வெப்பமயமாதல் பத்தி நிறைய படிச்சுகிட்டு இருக்கேன். ஒரு சேர இவ்வளவு சுட்டிகளக் குடுத்ததுக்கு மறுபடி நன்றி.//
படிங்க படிங்க.. நீங்களும் எழுதுங்க... :)
பரவாயில்ல, பொடியனுக்கு கொஞ்சம் பொறுப்பும் இருக்கு ://
நன்றி தஞ்சாவூரானந்தா.. :)
// இம்சை said...
ReplyDeletegood, keep it going//
நன்றி வெங்கி அண்ணா.. :)
// மதுவதனன் மௌ. said...
ReplyDeleteஅனைவரும் வாசிக்கவேண்டிய ஒரு பதிவு.
சுட்டிகளெல்லாம் சேர்த்துத் தந்திருக்கிறீங்க, நன்றி//
வருகைக்கு நன்றி மதுவதனன். :)
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteநடைமுறை வாழ்கையில் கடைபிடிக்க முடியும் என்று தனக்குத் தோன்றும் 10 விஷயங்களை மட்டும் "இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்!" பதிவில் சொல்லியிருக்கிறார் ராதா ஸ்ரீராம். முடியாதா நம்மால்...? முயற்சிக்கலாமே!//
நிச்சயம் முயற்சிக்கலாம்.
//ராமலக்ஷ்மி said...
நல்ல பதிவு சஞ்சய்!//
ரொம்ப நன்றி லக்ஷ்மியக்கா :)
// cheena (சீனா) said...
ReplyDeleteஆகா ஆகா - வாரக் கடைசி வர வர, சஞ்செய்க்குப் பொறுப்பு வந்துடுச்சி - பூமியைப் பத்தின பயமும் கவலையும் வந்துடுச்சி - தேடிப் பிடிச்சு நல்ல பதிவுகளைச் சுட்டி இருக்காரு - நன்றுநன்று - கடைப்பிடிச்சுடுவோம்ல//
நன்றி சீனா சார்.. :)
// தமிழன்... said...
ReplyDeleteஇயற்கை போதுமான அளவு நமக்கு தந்திருக்கிறது...ஆனால் நாம்தான் அதனையிட்டு திருப்தியும் கவனமும் கொள்வதில்லை...//
சரியா சொன்னிங்க தமிழன்.. இனியாவது கவனமா இருப்போம்.
நன்றி.
// KRICONS said...
ReplyDeleteஎப்போதோ எழுதியதை திரட்டி உங்கள் வளைப்பூவில் சுட்டி கொடுத்தற்க்கு நன்றி. Kricons என்பது எந்த சாமி பெயரும் கிடையாது//
ஹாஹா.. அது நல்ல பதிவு நண்பரே. :)