07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 7, 2008

குருவுக்கு ஒரு வலைப்பூ

குரு அதாவது ஆச்சாரியார் நமக்கு மிகவும் முக்கியமானவர்.
ஆசிரியரை தெய்வமாக மதிப்பது நமது பண்பு.

ஆசிரியருக்கு அடுத்துதான் கடவுளே என்ற கூற்றே குருவுக்கு
இருக்கும் உயர்ந்த ஸ்தானத்தை பறை சாற்றுகிறது.

அப்படிப்பட்ட குருமார்களைப் பற்றிய இவ்வலைப்பூ
கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

ஆச்சார்யாஹ்ருதயம் இதுதான் இந்த வலைப்பூ.

இதில் பங்களிப்போர்
மதுரையம்பதி
கீதா சாம்பசிவம்
தி. ரா. ச.(T.R.C.)
kannabiran, RAVI SHANKAR (KRS) போன்ற சூப்பர் பதிவர்கள்.


ஸ்வயம் ஆச்சாரியர்கள் என்பவர்கள் யார்??? ஒரு சிறிய விளக்கம்!

இந்தப் பதிவில் குரு என்பவர் யார் என்பதை மிக அழகாக
விளக்கியிருக்கிறார்கள்.

படித்து தெளிந்தால் யார் உண்மையான குரு என்ற கேள்விக்கான
விடை கிடைக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குருவின் திருவருள் நமக்கு மிக மிக அவசியம்.
ஏன்?????????????

தெரிந்துக்கொள்ள மேலே சொடுக்கிப் பாருங்களேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


குருவிடம் கேள்வி கேட்டு ஞானம் பெருவது ஒருவகை கற்றல்.

அப்படி ஒரு கேள்வி பதில் பதிவுதான் குருவிடம் சில கேள்விகட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குருவின் ஆணையை மீறுவது தர்மம் ஆகுமா? தவறுதானே.

சில சமயம் விதிவிலக்கு உண்டு. அதை அறிய இந்தப் பதிவு.

நான் மிகவும் ரசித்தது இது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பள்ளிகளில் மட்டுமல்ல தற்போது வீடுகளிலும் நல்லது எது என்று போதிக்கப்படுவதில்லை.
அதனால் தான் ஆசிர்யரை பிள்ளைகள் வாத்தி, என்று அழைத்தல், பட்டப்பெயர் வைத்தல் போன்றவை அதிகமாக இருக்கிறது.

ஆசிரியரை எப்படி நடத்த வேண்டும் என்பது இந்த வலைப்பூவில்
ஆச்சாரியா உபாசணை என்ற பதிவில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தான் அறிந்ததை பிறருக்கு கற்றுக்கொடுக்க நல்ல உள்ளம் வேண்டும்.
எனக்குத் தான் தெரியும் என்ற அகம்பாவம் கூடாது.

தொற்றனைத் தூறும் மணற்கேணியாக சொல்லிக்கொடுக்க அறிவு ஊரும்
என்பார்கள் பெரியோர்கள்.

இந்த 7 மாதக் காலத்தில் வலையுலக நண்பர்கள் பலர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும், மற்றும் ஆசான்களுக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

12 comments:

  1. ///பள்ளிகளில் மட்டுமல்ல தற்போது வீடுகளிலும் நல்லது எது என்று போதிக்கப்படுவதில்லை.
    அதனால் தான் ஆசிர்யரை பிள்ளைகள் வாத்தி, என்று அழைத்தல், பட்டப்பெயர் வைத்தல் போன்றவை அதிகமாக இருக்கிறது.///


    :)

    ReplyDelete
  2. ///தான் அறிந்ததை பிறருக்கு கற்றுக்கொடுக்க நல்ல உள்ளம் வேண்டும்.
    எனக்குத் தான் தெரியும் என்ற அகம்பாவம் கூடாது.///

    எல்லோருக்கும் இப்படி ஒரு எண்ணம் இருந்துவிட்டால் எவ்ளோ நல்லா இருக்கும்?

    ReplyDelete
  3. வாங்க நிஜமா நல்லவன்,

    //எல்லோருக்கும் இப்படி ஒரு எண்ணம் இருந்துவிட்டால் எவ்ளோ நல்லா இருக்கும்?//


    மிகச் சரியாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அக்கா. :-)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கு நன்றி தங்கச்சி..

    :))))))))))

    ReplyDelete
  6. அக்கா மறக்காம "குருவுக்கு ஒரு வலைப்பூ" ன்னு ஒரு பதிவப் போட்டு நீங்க அடிப்படையில் ஒரு வாத்தியாரம்மான்னு காட்டிடிங்க :))

    ReplyDelete
  7. ஆச்சார்ய ஹிருதயம் என்ற ஒரு வலைப்பூவினை எடுத்துக் கொண்டு, அதனுடைய அருமையான பதிவுகளின் சுட்டிகளைக் கோண்டு சரம் தொடுத்த புதுகைத்தென்றல் - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அக்கா மறக்காம "குருவுக்கு ஒரு வலைப்பூ" ன்னு ஒரு பதிவப் போட்டு நீங்க அடிப்படையில் ஒரு வாத்தியாரம்மான்னு காட்டிடிங்க :))//

    ஆமாம் த.தலைவன்.

    கரீக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே.

    சும்மாவா, டீச்சர் ரத்தமல்ல ஓடுது உடம்புல. எங்க குடும்பத்துக்கு சொந்தமா ஒரு பள்ளியே இருக்குதுங்க புதுகையில.

    ReplyDelete
  9. தங்களின் நல் வாழ்த்துக்கு மிக்க நன்றி சீனா சார்.

    ReplyDelete
  10. அக்கா மறக்காம "குருவுக்கு ஒரு வலைப்பூ" ன்னு ஒரு பதிவப் போட்டு நீங்க அடிப்படையில் ஒரு வாத்தியாரம்மான்னு காட்டிடிங்க :))//

    ஆமாம் த.தலைவன்.

    அய்யோ அக்கா நா த.தலைவன் இல்லை அப்துல்லா...என்னைய மறக்குறதே அடிக்கடி உங்க வேலையாப் போச்சு
    :((

    ReplyDelete
  11. அக்கா மறக்காம "குருவுக்கு ஒரு வலைப்பூ" ன்னு ஒரு பதிவப் போட்டு நீங்க அடிப்படையில் ஒரு வாத்தியாரம்மான்னு காட்டிடிங்க //

    ஆமாம் த.தலைவன்.

    அய்யோ அக்கா நா த.தலைவன் இல்லை அப்துல்லா...என்னைய மறக்குறதே அடிக்கடி உங்க வேலையாப் போச்சு.

    ஆமாம் அப்துல்லா,
    சரியா கவனிக்கலை போல.
    மன்னிக்கவும். அடுத்த முறை
    சரியா உங்களுக்கே பதில் தருவேன்.

    சாரி. மனசுல வெச்சுக்கப்டாது. :)

    ReplyDelete
  12. வாத்தியாரம்மா!!!
    ///அய்யோ அக்கா நா த.தலைவன் இல்லை அப்துல்லா...என்னைய மறக்குறதே அடிக்கடி உங்க வேலையாப் போச்சு.///

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது