07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 28, 2008

கீ-போர்டில் ஓம்!!!

வலைச்சரம் எழுதுகிறீர்களா? என்று கண்மணி, கயல்விழி முத்துலெட்சுமி, சீனா ஆகியோர்...
"பர்சனல் லோன் வேணுமா? கோல்ட்கார்ட் வேணுமா? டெபாஸிட் செய்யும் எண்ணம் இருக்கிறதா? இந்த ஆஃபர் வேணுமா? அந்த ஆஃபர் வேணுமா?" என்று மதியம் மூன்று
மணி தூக்கத்தைக் கலைக்கும் போன்கால்கள் போல் அல்லாமல்......அன்போடு வேண்டுகோள்
வைத்தார்கள். மறுக்கவில்லை கொஞ்சம் தள்ளி வைத்தேன் ...அவகாசம் கேட்டேன். ஆனாலும்...

ஏனெனக்குத் தயக்கம் ஏனெனக்கு மயக்கம்? ஏனெனக்கு என்னாச்சு? பெரிய பெரிய
ஜாம்பவான்கள் எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்ட கோட்டையிது. 'என்னால் எப்படி முடியும் என்னால் எப்படி முடியும்?' என்று திருவிளையாடல் பாணபத்திரர் போல்
புலம்பவாரம்பித்தேன். 'என்னால்..என்னால்..என்று ஏன் புலம்புகிறாய்? எல்லாம் அந்த ஈசன் செயலல்லவோ?' என்று என் பின்னால் நின்று தேற்றுவாருமில்லை ஆற்றுவாறுமில்லை.
காலை வாறுவார் இல்லாமலிருந்தால் போதாதா? என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

இவ்வாறெல்லாம் நான் புலம்பியது எங்கிருந்து தெரியுமா?
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சொக்கநாதர் மீனாட்சி
சமேதராக கோயில் கொண்டுள்ள கூடல் மாநகரம் மதுரையில்தான்!

சொந்த வேலையாக ரங்கமணி மதுரை கிளம்பினார். நானும் வருவேன்...என்று அவரோடு
கிளம்பிவிட்டேன். மூன்றுநாட்கள் ஓய்வு கிடைக்குமே!! 'அம்மே...!நானும் கூட வருவேன்'
ன்னு சிணுங்கிய என் மடிக்கணினியையும் மடியோடு எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். மதுரை நாத்தனார் வெளிநாடு சென்றிருந்ததால் ஹோட்டல்வாசம்தான்.

'சொக்கா!!!அவன் வரமாட்டான்..அவன் வரமாட்டான். அவனை நம்பாதே! தனியா பொலம்ப வெச்சிட்டானே!' என்று பலவாறு அலம்பிக்கொண்டிருந்த என்முன்னால்
மீனாட்சி சமேதராக ஈசன் காட்சியளித்து, 'எழுது மகளே! எழுது!' என்று என் கீபோர்டில்
தன் சூலாயுதத்தால் 'O' வையும் 'M' மையும் அழுத்திவிட்டு என் தயக்கத்தையும்
ஹேமநாத பாகவதரை விரட்டியது போல் விரட்டிவிட்டு மறைந்தான். திடுக்கிட்டு கண்விழித்தால்...அறை நாற்காலியிலேயே போட்ட குட்டித்தூக்கத்தில் வந்த கனவு!!!
குட்டித்தூக்கத்தில் வந்த கனவு பலிக்குமாமே!!கனவு...நல்லாருந்துச்சில்ல?

அழிக்கும் கடவுளான ஈஸ்வரனே ...என்னை ஆக்கச் சொல்லி விட்டான்! பிறகென்ன
தயக்கம்..மயக்கம்? 'பி..ரம்பி....ஆரம்பி!' என்று என்னுள் ஒரு குரல் ஆரவாரித்தது.
நம்மால் முடியாதா என்ன? சேரீன்னு நானும் பழம் தின்ன ஆரம்பித்தேன்.
பழமா? எதற்கு? எதற்கா? கொட்டை போடத்தான்!!

எழுதுவதை எழுதுவோம்..பின் விளைவுகளை அந்தப் பித்தன், பேயன் பாத்துக்கொள்வான்.
ஏனிந்த ஓவர் பில்டப் என்கிறீர்களா? நிஜமாகவே பயம்தானுங்க..அதை விரட்டத்தான்.
இனி ஒரு வாரத்துக்கு எங்கிட்டேயிருந்து தப்ப முடியாது. பாத்துட்டு, படிச்சிட்டு,
ரசிச்சிட்டு,,,சிட்டாப் பறந்துடாம கொஞ்சம் நல்லவிதமாக சொல்லீட்டுப்போங்கோ! நன்னி!!

எனக்கு வாழ்த்துக்கள் சொல்லிய நல்ல நெஞ்சங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!!!

46 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆரம்பமே அமர்க்களம். ஈசனே வந்து தொடங்கி வைத்த 'திருவிளையாடல்' அல்லவா? வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சுவையான ஆரம்பம், சூப்பராக் கலக்குங்க!
    தலைப்பைப் பார்த்து என்னவோ, கீபோர்டில், ஓம் வாசிக்கத்தான் போறீங்கன்னு நினைச்சுட்டேன்!;-)

    ReplyDelete
  4. ஆகா, ஆரம்பமே அசத்தல்... :)

    ReplyDelete
  5. அன்பின் நானானி,

    அருமையான ஆரம்பம். இனிமையாக ஈசனே தொடங்கி வைத்த பதிவு. எத்தனை கொட்டைகள் ? எண்ணத் தயாராகி விட்டோம்.

    வயதுக்கேற்ற பொறுமையுடன், பதிவு அழகாக, அமைதியாகத் தொடங்குகிறது. ஓம் என்றால் ஆமென்று கூட பொருள் உள்ளது அல்லவா ?

    ஆம் ஆடல் அழகனே தொடங்க அருள் புரியட்டும்.

    ReplyDelete
  6. //தன் சூலாயுதத்தால் 'O' வையும் 'M' மையும் அழுத்திவிட்டு என் தயக்கத்தையும்
    ஹேமநாத பாகவதரை விரட்டியது போல் விரட்டிவிட்டு மறைந்தான்.//

    ஈசனின் வழக்கம் 'உலகெல்லாம்' என்று அடியெடுத்துக் கொடுப்பதுதான். உங்களுக்குத்தான் முதன்முறையாக ஓமென்றிருக்கிறார். கலக்குங்கள் !

    ReplyDelete
  7. ஏனிந்த தயக்கம், ஏனிந்த மயக்கம். அதென்ன பெரிய பெரிய ஜாம்பவாங்கள். என்னைத் தானே சொல்கிறீர்கள். :))) இப்ப உங்களுக்கு மஹா தைரியம் வந்திருக்குமே :))

    ReplyDelete
  8. அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை!!!!

    நல்வரவு.

    ReplyDelete
  9. ஓம் நமச்சிவாயா!
    இப்படிச் சான்ஸ் கிடைத்தால் விடலாமா?
    அடித்து நொறுக்குங்கள் சகோதரி!
    கைதட்ட நாங்கள் இருக்கிறோம்!

    ReplyDelete
  10. நல்ல வேளை, கீபோர்டுல, உண்மையாவே 'ஓம்' தெரியும், அப்பாலிக்கா, கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சதும் ஈசனின் திருவிளையாடல்னு ஏதாவது சொல்லியிருப்பீங்களோன்னு நெனச்சேன்.

    அடிச்சு ஆடுங்க ;)

    ReplyDelete
  11. மிக்க நன்றி! திகழ்மிளிர்! வாயினிக்கும் தமிழ்ப்பெயர்!!

    ReplyDelete
  12. ஈசனின் விளையாடல்தான்....சன் டிவி
    திருவிளையாடல் மாதிரி நான் சொதப்பிடக்கூடாது. பார்ப்போம்!!

    ReplyDelete
  13. வாங்க, ஜீவா!
    தலைப்பிலேயே விசை வெச்சு ஊதிட்டேனோ?

    ReplyDelete
  14. இனி ஒரு வாரத்துக்கு எங்கிட்டேயிருந்து தப்ப முடியாது. //

    ஹை! நீங்களும் தான் எங்ககிட்ட இருந்து தப்ப முடியாது. பின்னூட்டமா போட்டு வறுத்துருவோம்ல

    ReplyDelete
  15. தமிழ்பிரியன்!
    பேருக்கேத்தாப்பல ஒவ்வொரு முறையும்
    பிரியத்தோடு பின்னோட்டமிடும் உங்கள்
    அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  16. மிக்க நன்றி! சகோதரர் சீனா!
    பொறுமைக்கு பெருமை சேர்க்கும் விதம்
    பதிவுகள் வரும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  17. எல்லோருக்கும் எடுத்துக் கொடுப்பதுபோல் எனக்கும்
    எடுத்துக் கொடுத்தால்....
    'என் இம்மேஜ்'
    என்னாவது? ஈசனுக்கும் இது தெரிந்ததால்
    எனக்கு புது மாதிரி....காலத்துக்கேத்த மாதிரி கீ போர்டில் அடியெடுத்துக் கொடுத்திருக்கிறார்.ஹா..ஹா..!

    ReplyDelete
  18. போனாப் போவுது உங்களையும் ஜாம்பவான்கள் லிஸ்டில் சேத்துக்கிறேன்.
    சரிதானே? சதங்கா?
    தைரியம் வந்தாச்சு!!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் நானானி.. முதல் பதிவிலேயே நகைச்சுவை தாண்டவமாடுகிறது. காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  20. துள்சி! என்ன...? இந்த அடி அடிச்சிட்டீங்க? உங்க மேளச் சத்தம்
    ஊரெல்லாம் கேக்கட்டும். சந்தோசம்!

    ReplyDelete
  21. வாங்க வெண்பூ!!
    வாழ்த்துக்கு நன்றி!
    நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதே
    இந்த நகைச்சுவையும் நக்கலும் நய்யாண்டியும்தானே!!!

    ReplyDelete
  22. ம் அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கீங்க வாரம் முழுவதும் இதே மாதிரி கலக்குங்க!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. /
    குட்டித்தூக்கத்தில் வந்த கனவு பலிக்குமாமே!!கனவு...
    /
    /
    நல்லாருந்துச்சில்ல?
    /

    ஏன் நல்லா இருக்காது 'குட்டி' தூக்கமில்ல!!?!?!?

    :)))))))))))))

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள்!

    இயல்பான நகைச்சுவையில பின்னி எடுக்கறீங்க.. அப்புறம் என்ன?
    காலத்துல இறங்குங்க! தூள் பண்ணீடலாம்...

    ReplyDelete
  25. அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை!!!!

    நல்வரவு.

    ingayum repeatu potukaren.

    ReplyDelete
  26. //"பர்சனல் லோன் வேணுமா? கோல்ட்கார்ட் வேணுமா? டெபாஸிட் செய்யும் எண்ணம் இருக்கிறதா? இந்த ஆஃபர் வேணுமா? அந்த ஆஃபர் வேணுமா?" என்று மதியம் மூன்று
    மணி தூக்கத்தைக் கலைக்கும் போன்கால்கள் போல் அல்லாமல்......//

    //ஏனெனக்குத் தயக்கம் ஏனெனக்கு மயக்கம்? ஏனெனக்கு என்னாச்சு? //

    //என்று திருவிளையாடல் பாணபத்திரர் போல்
    புலம்பவாரம்பித்தேன்.//

    ஹா..ஹா..ஹா..ஜூப்பரு..கலக்கல்ஆரம்பம்....உய்...உய்....உய்...:))

    ரொம்ம்ம்ம்ம்ம்ம்பாஆஆஆஅ அருமை.

    ReplyDelete
  27. வரணும் மங்களூர் சிவா!
    ஒங்களையெல்லாம் நம்பித்தான்
    இறங்கியிருக்கிறேன். 'கொஞ்சம் மீட்டருக்கு மேல் பாத்துப் போடுங்க!'

    அது யாருங்க குட்டி? நான் என் தூக்கத்தையல்லவா சொன்னேன்?

    ReplyDelete
  28. புதுகை அப்துல்லா!
    சலாம் அலேகும்!ஹையோ! வறுத்துடுவீங்களா? பாத்து உப்பு,காரம்,மசாலா எல்லாம் சரியாப் போட்டு வறுத்தெடுங்க. சாப்பிடுறவங்க
    வாய்க்கு ஒணக்கையா இருக்கணுமில்ல?

    ReplyDelete
  29. வாத்தியாரையா!
    சந்தோசம்! நல்ல மார்க் போடுவீங்கதான?

    ReplyDelete
  30. வாங்க சர்வேசன்! ரொம்ப நாளா காணோம்?
    தலைப்பிலே வெச்ச வெச எல்லோரையும் இழுத்திட்டுது.
    நன்றி!!!

    ReplyDelete
  31. வருகைக்கு நன்றி! பரிசல்காரன்!
    களத்திலே....இல்லை ஆத்திலே
    இறங்கீட்டேன். பத்திரமா அக்கரைக்கு
    கொண்டு சேத்துடுவீங்கதானே?

    ReplyDelete
  32. புதுகைத்தென்றல்...நாயனத்துக்குத்தான் ஒத்து ஊதுவாங்க. நீங்க மேளத்துக்கே ஒத்தா? அடிச்சுமொழக்குங்க...யாருக்குக்கிடைக்கும் ரெட்டை மேளம்!!

    நாம எப்போதுமே ரிப்பீட்டுக்காரங்கதான்!!சேரியா?

    ReplyDelete
  33. புதுத்தேனீயை காணுமேன்னு பாத்தேன். எந்த மலரில் தேன் உறிஞ்சிக் கொண்டிருந்தாய்?
    எனக்கும் ஒரு பாட்டில் சேர்த்து வை!

    ReplyDelete
  34. //'பி..ரம்பி....ஆரம்பி!' என்று என்னுள் ஒரு குரல் ஆரவாரித்தது.
    //

    "ஹாஹா! நின் தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம்!"னு வாரத்தின் முடிவில் மறுபடி கனவில் வருவார் பாருங்க. :))

    அசத்தலான துவக்கம்.

    ReplyDelete
  35. வாழ்த்துகள் நானானி. மதுரை ரகசியம் இதுதானா:)

    நல்ல தமிழில் அழகாக எழுதுகிறீர்கள். அதுதான் அந்த நமச்சிவாயமே வந்துவிட்டார் கனவில்.

    ரசிக்கும் எழுத்துக்காகக் காத்திருக்கிறேன்.
    எங்க மதுரைக் காத்து மாதிரியே இனிமையா வரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  36. //நின் தமிழூடு விளையாடவே யாம் இங்கு வந்தோம்னு வாரத்தின் முடிவில்
    மறுபடி கனவில் வருவார் பாருங்கள்//
    அப்படியானால் நான் தன்யளாவேன்
    அம்பி!! உங்க வாக்கு பலிக்கட்டும்!!!

    ReplyDelete
  37. /
    நானானி said...

    வரணும் மங்களூர் சிவா!
    ஒங்களையெல்லாம் நம்பித்தான்
    இறங்கியிருக்கிறேன். 'கொஞ்சம் மீட்டருக்கு மேல் பாத்துப் போடுங்க!'
    /
    அதெல்லாம் தூள் கிளப்பீடலாம்!!


    /
    அது யாருங்க குட்டி? நான் என் தூக்கத்தையல்லவா சொன்னேன்?
    /

    ஹிஹி இது ச்சும்மா டமாசு!!

    :)))

    ReplyDelete
  38. /எந்த மலரில் தேன் உறிஞ்சிக் கொண்டிருந்தாய்?
    //

    ஹி..ஹி..தேன் குடிச்சுட்டுத் தூங்கிட்டேன்.எழுந்து பாத்தா விடிஞ்சுடுச்சு.பின்னூட்டம் அடுத்த நாள் ஆயுடுச்சு..:)).

    இனிமேட்டு 'அலார்ம்' வெச்சுர்ரேன்..:)

    ReplyDelete
  39. மங்களூர் சிவா!
    ஓகே!!
    டமாசு...நல்ல டமாசு!

    ReplyDelete
  40. 'அது!' புதுத்தேனீ!

    ReplyDelete
  41. "ஒரு வாரம் போதுமா
    ப்ளாக் எழுத
    இந்த ஒரு வாரம் போதுமா"

    ஹேமநாத பாகவதர் மீண்டும் வந்து விட்டாரோ
    என்று பயந்து விட்டீர்களா

    நான் சகாதேவ பாகவதர்

    ReplyDelete
  42. சகாதேவ பாகவதரே, பலே பலே!

    ReplyDelete
  43. சகாதேவபாகவதரே...!சகானாவில் ஒரு பாட்டு எடுத்துவிடுங்க!!!பாணபத்ரி கேக்கிறேன்.

    ReplyDelete
  44. அசத்தலான ஆரம்பமா கொடுத்திருக்கீங்க! மற்ற பதிவுகளையும் பார்த்தேன் நல்ல இருக்கு சரம். இந்த சரம் தான் எல்லாவற்றையும் விட ரொம்ப நல்லாஇருக்குன்னு சொல்லலாம்!

    //முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் //

    பாண்டித்துரை அமைத்த நான்காவது சங்கம்!
    2000-ல் தமிழ் - கணினி ஆர்வலர்கள் அமைத்த கணித்தமிழ் சங்கம்!
    என மதுரை ஐந்து சங்கம் கண்டது எம் மீனாட்சி பட்டணம்!

    ReplyDelete
  45. பதிவுகளிலேயே என் நல்ல பதிவு
    என்றதற்கு மிக்க நன்றிகள்!!சிவமுருகன்!!!
    உங்களுக்கு இன்னொரு நன்றியும் சொல்லவேண்டும். உங்கள் பதிவுக்குச் சென்று பார்த்த போதுதான். காணவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த 'ஞானவெட்டியானின்'
    குறவஞ்சி.காம் காணமுடிந்தது.
    புதுப் பெயரில் உலா வருகிறார் என்பதும் தெரிந்தது. நன்றி மறுபடியும்.

    ReplyDelete
  46. ஞானவெட்டியானைக் கண்டுபிடிக்கக் காரணமான சிவமுருகனுக்கு நன்றிகள்!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது