சிக்கிக் கொண்டேன் எந்தன் எண்ணப்படி
வலையுலக வலையில் சிக்கியது எவ்வாறு?
FREECELL விளையாட்டில் மட்டுமே மூழ்கிக்கிடப்பேன் முன்பெல்லாம். அது மட்டுமே பிடிக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் அவ்விளையாட்டை, முக்கியமக இரவு படுக்கு முன்
சிறிது நேரம் விளையாடி விட்டுப் படுத்தால்தான் தூக்கமே வரும்.
சுற்றுலாப் பயணமாக என் முதல் அமெரிக்க விஜயம். ரெண்டாம் முறையாக 'ஆயாவாக'
(என் மகன் வேடிக்கையாக குறிப்பிட்ட வார்த்தை)...ஆம் மகளின் பிரசவத்துக்கு உதவியாகப் போயிருந்தாலும்.....'ஹாயாக' செலவழிக்க நிறைய நேரம் கிடைத்தது. மருமகன்(அவரும் ஒரு ப்ளாக்கர்தான்) மூலம் தமிழ்மணத்தில் மேயக் கற்றுக்கொண்டேன். ஆஹா...!
எவ்வளவு விஷயங்கள்! தகவல்கள்! விதவிதமாய் வித்தியாசமாய் நாமறிய கொட்டிக்கிடக்கின்றன்.
அவற்றை அள்ளி அள்ளி உண்டேன் பருகினேன். ஆனாலும் பசியோ தாகமோ அடங்கவில்லை. FREECELL-ஐ விடுவித்துவிட்டு, தமிழ்மணத்தின் வாசத்தில் கிறங்கிப்போனேன். அவரது ப்ளாக்கிலும் மற்றவர்களது ப்ளாக்கிலும் நுழைந்து படித்து
நிறைய அனானிக் கமெண்டுகள் போடவாரம்பித்தேன். பதில் பின்னோட்டங்களும் வர ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தது. அதிலும் 'நான்..நான்..' என்று பெயர் குறிப்பிடாமல் போட்ட
அனானி பின்னோட்டங்களால் நான் "நானானி" ஆனேன். ஆம்! சக பதிவர் ஒருவர் வைத்த பெயர்தான்.."நானானி!"
என் ஆர்வத்தைப் பார்த்து மருமகன் எனக்கே எனக்கு என்று ஒரு ப்ளாக் ஆரம்பித்துக்கொடுத்து எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்றார். சேரி...ப்ளாக்குக்கு என்ன பேர் வைக்கலாம்?
என் பொறந்த வீட்டு விலாசத்தையே ப்ளாக்குக்கு பெயராகவும் எனக்கு கிடைத்த புதுப் பெயரான "நானானி" என்ற பெயரிலேயே எழுதுகிறேன் என்றேன்
இப்படித்தான் 9-west ம் நானானியும் பிறந்தார்கள்!!
எனக்...கே எனக்கா? எதை வேண்டுமானாலும் எழுதலாமா? குபீரென்று நானிருந்த அறையின்
நான்கு பக்க ஜன்னல்களும் திறந்துகொண்டன!! கடற்காற்று, தென்றல்காற்று, வாடைக்காற்று, ஊதக்காற்று, புயற்காற்று என் சகல வகைக்காற்றுகளும் உள்ளே நுழைந்து
என்னையும் சேர்த்து வெளியே இழுத்துப் போட்டன. ஜிவ்வென்று மூச்சை உள்ளிழுத்து
வெளியே விட்டேன் மனசு லேசாச்சு. திரும்பி முதுகைப் பார்த்தேன் ரெண்டு ரெக்கைகள்
முளைத்திருந்தன.
எனக்கே எனக்கென்று ஒரு ராஜ்ஜியம்..! எனக்கே எனக்கென்று ஒரு சிம்மாசனம்..!
அதில் நானே ராணியாய்...எனக்கே..எனக்கென்று குடிமக்களாய் வலையுலக மக்கள்!!
இனி எனக்கென்ன வேண்டும்?
பறக்கவாரம்பித்தேன். பறந்து கொண்டேயிருக்கிறேன். சுகமாய்..சுவாரஸ்யமாயிருக்கிறது.
மடமடவென்று பதிவுகள் மடைதிறந்த வெள்ளம் போல் பாயவாரம்பித்தது. ஆஹா!
நமக்குள்ளும் இவ்வளவு சரக்கிருக்கா? அல்லது எனக்குப் புடிச்சது கிருக்கா? என்று வியந்தேன்.
சிலரிடம் பேசும் போது,'நீங்கள் அழகாகப் பேசுகிறீர்கள்!' என்பார்கள். என் தங்கையும்,'நீ
பத்திரிக்கைகளுக்கு சின்னச்சின்ன துணுக்குகள் எழுதேன்!' என்பாள். ஹீஹும்! சோம்பேறித்தனம்!! ஆனால் நெட்டில் நேரடியாக எழுத..டைப் செய்ய வெகு சுலபமாயிருந்தது. விமர்சனங்களும் உடனக்குடன் கிடைத்தன. பிறகென்ன?
பகல் தூக்கம் மறந்தேன்...வாங்கிய பத்திரிக்கைகள் படிக்க மறந்தேன். மெகா தொடர்கள்
மறந்தேன். அறுபது வயதுக்கு மேல் வாழ்கை வெகு சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருக்கிறது.
ஏன் அதுக்கு முன் டல்லாயிருந்ததா? இல்லையில்லை முந்தைய சுவாரஸ்யங்களை
எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் அமைந்துவிட்டது பற்றி பெரும் மகிழ்ச்சியிலிருக்கிறேன்.'
'நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான் - இதை
நம்ப வைக்கும் பொறுப்பு உங்களிடம்தான்!!!!
|
|
நானானியாக அவதரித்து தங்கள் பிறந்த வீட்டின் மேல் கொண்ட பாசத்தால் அந்த நைன் வெஸ்டையே வலைதளத்தில் பார்த்துப் பார்த்துச் செதுக்கி கம்பீரமாக எழ வைத்து, அதன் வாசல் கதவுளை விரியத் திறந்து வைத்து வருவோர்கெல்லாம் வயிறும் அறிவும் மனமும் குளிர தமிழ் விருந்து படைத்து வரும் நானானியே வலை வாசகர் அத்தனை பேரின் சார்பிலும் நன்றி, நன்றி, நன்றி.
ReplyDelete//'நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான் - இதை
நம்ப வைக்கும் பொறுப்பு உங்களிடம்தான்!!!!//
இதோ நம்ப வைக்க வந்து கொண்டேயிருக்கிறார்கள் பாருங்கள்.
அட்றா சக்கை.
ReplyDeleteவலையில் அப்பா, அம்மா, மகள்ன்னு குடும்பம், இன்னொரு இடத்தில் கனவன் & மனைவி இப்படி சில இருக்கேன்னு நினைச்சேன்.
உங்கது மாமியாரும் மருமகனுமா? பேஷ் பேஷ்.
ஜமாய் ராணி:-)
///'நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான் - இதை
ReplyDeleteநம்ப வைக்கும் பொறுப்பு உங்களிடம்தான்!!!!////
நாங்களேல்லாம் இருக்கோம்ல! பயப்படாதீங்க.... ந்மக்குன்னு தனிப்பாதை இருக்கு.. எதையும் கண்டுக்காம போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்.... :)
சூப்பரா எழுதுறீங்க.... :)
(கேசரி ஒரு கிலோ பார்சலேய்.......)
அன்பின் நானானி,
ReplyDeleteஅருமையான பதிவு - கொசுவத்தி சுத்திட்டீங்க - நகைச்சுவை ததும்ப, ஏற்ற இறக்கங்களுடன் வலைப்பூ ஆரம்பித்த கதையினை அழகாக, மனமகிழ்வுடன், அனுபவித்து, எழுதி இருக்கிறீர்கள். ஒவ்வொரு சொல்லும் அலங்கரிக்கிறது பதிவினை.
நல்வாழ்த்துகள்
ஆமா - ரங்க்ஸ் இதெல்லாம் படிப்பாரா ? மருமகன் ஆரம்பிச்சுக் கொடுத்ததோட சரியா ? உங்க சொந்த வூட்டுக்கு வரமாட்டாரா ? ம்ம்ம்
ஆயா - தாய் வழிப் பாட்டியை ஆயா என அழைப்பது எங்கள் வழக்கம். ஹையா எனச் சொல்லி இருப்பான் பேரன் - இல்லையா ?
ப்ஃரீசெல்லுடன் குடும்பம் நடத்தியவன் நான். இப்பொழுதும் நடத்துபவன்.
இனிய அனுபவங்கள்
//நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான் - இதை
ReplyDeleteநம்ப வைக்கும் பொறுப்பு உங்களிடம்தான்!!!!//
நிச்சயமாக நம்ப வைப்போம் கவலைப்படாதீர்கள்
நமக்குள்ளும் இவ்வளவு சரக்கிருக்கா? அல்லது எனக்குப் புடிச்சது கிருக்கா? என்று வியந்தேன்.
ReplyDeleteஇது என் டயலாக் ஆச்சே.
சரி இதுலயும் நீங்க சேம் ப்ளட்டா?
நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான் - இதை
ReplyDeleteநம்ப வைக்கும் பொறுப்பு உங்களிடம்தான்!!!!//
நிச்சயமாக நம்ப வைப்போம் கவலைப்படாதீர்கள்
மறுக்கா கூவிக்கிறேன்ப்பா.
வாழ்த்துக்கள் நானானி.
ReplyDelete//'நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான் - இதை
நம்ப வைக்கும் பொறுப்பு உங்களிடம்தான்!!!!//
கவலையேப்படாதீங்க... நாங்களாச்சி..
நானானிக்கு பின்னால இவ்வளவு விசயம் இருக்கா?
ReplyDeleteஅற்புதமா இருக்கு.
/
ReplyDelete//'நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான் - இதை
நம்ப வைக்கும் பொறுப்பு உங்களிடம்தான்!!!!//
/
வாங்க வாங்க வெல்கம் டு தி க்ளப்
அதெல்லாம் சரி எங்க உங்க பதிவோட லிங்க் காணோம் பதிவுல!?
ReplyDeleteபூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்னு குடுக்காம விட்டுட்டீங்களோ!?!?!
ReplyDeleteஃப்ரீ செல்லுல நாங்கல்லாம் பி.அச்டியே பண்ணீருக்கோம் இப்பதான் டைம் கிடைக்கிறதில்லை
ReplyDelete:))))
ஆமாம்! ராமலஷ்மி! இந்த வரிகளைச் சொல்லிச் சொல்லியே எல்லோரும் தெம்பூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ReplyDeleteயெஸ்! துள்சி! எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு!!!
ReplyDelete//அட்றா சக்கை.// இன்னும் அடிக்கவேண்டியது நிறய இருக்கு.
அதுக்குள் சக்கையாயிடாம பாத்துக்குங்க.
தமிழ்பிரியன் பக்கத்திலிருப்பது தெம்பாயிருக்கு.
ReplyDeleteகேசரி என்ன கலரில் வேணுமின்னு சொல்லலியே. ஆனாலும் பச்சைகேசரி
பார்சல் அனுப்பியிருக்கிறேன்.
எப்படியிருந்துன்னு சொல்லுங்க.சேரியா?
சீனா,
ReplyDeleteரங்ஸுக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லை. ஹிண்டுவும் டைம்ஸ்
ஆஃப் இண்டியாவும் ஜுவியும் போதுமவர்க்கு. மருமகன் ஆரம்பத்தில் என் வீட்டுக்கு வந்ததோடு சரி.
நன்றிகள்!!இவன்
ReplyDeleteசேம் ப்ளட்னு சொல்லியாச்சு,
ReplyDeleteஅப்புரமென்ன? புதுகைத்தென்றல்!
நானும் மறுக்கா....நன்றிக்கிறேன்ப்பா!
ReplyDeleteவெண்பூ!
ReplyDeleteகடைசி வரிகள்தான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கா? தாங்ஸ்ம்மா!
வெயிலான்!
ReplyDeleteசுள்ளுன்னு சொல்லிட்டீங்க. ஆனாலும்
தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டினாற்போல் ஜில்லுன்னு இருக்கு.
அடுத்த பதிவில் குடுத்திட்டாப் போச்சு!
ReplyDeleteமங்களூர் சிவா!
இதுவும் சரியாத்தான் சொல்லீட்டீங்க!
ReplyDeleteம.சிவா!
ப்லாக் என்ட்ரிய நகைச்சுவையோடு தந்தது இனிமை. கடைசியில் ஒரு தத்துவம் (மாதிரி). ம்ம்ம்ம். அடிச்சு ஆடுங்க நானானிம்மா.
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யமாயிருக்கும்மில்ல?
ReplyDeleteஇப்பவும் ரங்கமணி அதில்தான் இருப்பார். அவரோட பாதி ஆட்டையை
நான் முடிப்பேன்.
வாழ்த்துக்கள்!! இதுதான் ninewest-இன் பெயர் காரணமா? நல்லாயிருக்கு!!
ReplyDelete//புதுப் பெயரான "நானானி" என்ற பெயரிலேயே எழுதுகிறேன் என்றேன்
ReplyDelete//
ம்ம்ம்..:) :).'அனானி' 'நானானி' ஆன கதை ஜூப்பரு.
//திரும்பி முதுகைப் பார்த்தேன் ரெண்டு ரெக்கைகள்
ReplyDeleteமுளைத்திருந்தன.//
அது! அருமை! 'நச்'. :D
//நமக்குள்ளும் இவ்வளவு சரக்கிருக்கா? அல்லது எனக்குப் புடிச்சது கிருக்கா?//
ReplyDeleteஆஹா! எகன, மொகன...:)).சும்மா அதிருதுல்ல :D
//'நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான் - இதை
ReplyDeleteநம்ப வைக்கும் பொறுப்பு உங்களிடம்தான்!!!!//
இதெல்லாம் சொல்லோணுமா அம்மா? நாங்களெல்லாம் எப்போதும் உண்மையின் பக்கமே.அடுச்சு ஆடுவோமே!. :D
உய்....உய்...உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :P
உய்....உய்...உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :P
ReplyDeleteஅது தத்துவமில்லை சதங்கா!
ReplyDeleteமனசிலிருக்கும் மகிழ்ச்சி!
பொறந்த வீட்ட மறக்ககூடாதில்ல, சந்தனமுல்லை? அதான். மேலும் ninewest ன்னு பேரோட ஒரு கடையையும் US-ல் பாத்து ஆசையாய் ஆசையாய் அதன் முன் நின்று படமும் எடுத்துக்கொண்டேன். அதுவும் உபயோகமாச்சு.
ReplyDeleteஎன்னைச் சுத்தி சுத்தி வந்து ரீங்காரமிடும்
ReplyDeleteபுதுத்தேனீயே!!
உன் பிகிலுச் சத்தம் இங்காவரை கேக்குது...கேக்குது...கேக்குது.