07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 4, 2011

எழுச்சியை தரும் எற்பாடு -வலைச்சரம்

         
         உண்ட உணவு வயிற்றுக்குள் செல்லும் முன் மீண்டும் வேலை
         சொற்பமான சப்தங்களுடன் மட்டும் ஒரு மௌன வேள்வி நடக்க
         தொடங்கிய வேலை மாலைக்குள் முடியுமா என்ற கவலையும் சேர
         நாழிகை வட்டத்தை வருடும் கண்களுடன் ஆயாசமிகும் சாயங்காலம்.
        

    என்ன இதுவரைக்கும் நாள் நல்லபடியாக சென்றதா? சற்று சோர்வாக தோன்றுகிறதல்லவா? எனக்கும்தான். ஏனெனில் நம்முடைய முழு கவனத்தையும் முற்பகலில் செலவிடுவதால் ஒருவித அயர்ச்சி தோன்றும். முக்கியமாக கண்கள் சோர்வுற்றிருக்கும். சிந்திக்கும் வேகம் குறையும். உடல் சக்தியும் குறைந்துவிடுவதால் ..... என்ன நடக்கும்? சரிதான், பசிக்க ஆரம்பித்துவிடும்.

முன்னோர்கள் சொன்னதின்படி மதிய உணவு நிறைவு பெற்ற உணவாக இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான எல்லா சத்தும் நிறைந்திருக்க வேண்டும். ஒருவேளை (முக்கியமாக பெண்களுக்கு) மதியத்திற்குமேல் ரொம்பவே சோர்வடைவதுபோல் தோன்றினால், உணவின் முடிவில் சில பழத்துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடனடியாக சீரணிக்கவும் புத்துணர்வு பெறவும் வைக்கும்.
சாப்பிடுங்கள்.

சூரியனின் பயணம் இறங்கு முகத்தில் இருப்பதால், சாயும் நேரம் என்பதையே சாயுங்காலம் என்று குறிப்பிட்டனர். வெயில் குறைந்திருந்தாலும் உச்சி வெயிலின் பாதிப்பு நமக்குள் சக்தியிழப்பை தந்துவிடும், இந்தியாவில் இது குறிப்பிடத்தக்கவிதமாக இருக்கும்.  உள்வாங்கும் திறன் குறைகிறது. நீங்கள் ஒரு கற்பிக்கும் பணியில் இருக்கிறீர்கள் எனில் இந்த நேரத்தில் புதிய பயிற்சிகள், பாடங்களை தொடங்காதீர்கள். என்னுடைய கருத்து என்ன என்றுதானே கேட்கிறீர்கள். இந்த நேரத்தில் கல்லூரியின் வகுப்பறைக்குள் சென்று கடினமான  பொறியியல் தேற்றங்களை(algorithms) எடுப்பதைவிட சிங்கத்தின் வாய்க்குள் தலையைவிடலாம்.

    மனோவியல் என்ன சொல்கிறது? மதிய உணவு முடித்தபின் பத்து நிமிடங்களுக்கு(மட்டும்) கோழித்தூக்கம் போட்டபின், முகம் கழுவி உடைகளை சீர் திருத்திக்கொள்ள வேண்டுமாம். கண்ணாடியில் கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் நாம் தெரிந்தாலும் உற்சாகம் பிறந்துவிடுமாம். சில தொழில் நிறுவனங்கள் இதை கடைபிடிக்கின்றன. பொருட்களின் தயாரிப்பில் நேரடித் தொடர்புடைய தொழிலாளர்களுக்கு இது போன்ற சிறு ஓய்வுகள் கொடுப்பது தயாரிப்பின் திறனை அதிகரிக்கிறதாம்.

மனித வாழ்வில் யௌவன பருவம். இல்லறம் ஆரம்பிக்கும் நேரம். புரிந்து கொள்ளுதலும் நெகிழ்ந்து போகுதலும்தான் இல்லறத்தின் விளக்கம் என்பது என் கருத்து.

சரி பெருமையாக சொல்வதற்கு எற்பாடு பற்றி எதுவுமே இல்லையா என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ இதுதான் சரியான சமயம். என்னுடன் வாருங்கள். தாழ்வாரத்தின் ஓரமாக சில நிமிடம் நிற்கலாம். இயலாதவர்கள் சன்னலோரமாகவும் வரலாம். கண்களை மூடி உணருங்கள்....

சிறு சிறு துளிகளாக மழைச்சாரல் பன்னீரை தெளிக்கிறதா? வெளியே இருக்கும் குளுமை உள்ளேயும் பரவியிருக்குமே!. விடியல் மழை மடிதுயில், காலை மழை வேலையை கெடுக்கும், முற்பகல் மழை கவனிக்கப்படாது, மாலை மழை இதம் தராது, இரவு மழை உறக்கம் தருவிக்கும். சாயுங்கால மழைதான் உயிர்ப்பிக்கும். விடுமுறை நாட்களில்  நனைந்தாலும் பரவாயில்லை என்று நகைக்கும். இதனை மழையை ரசித்தபடியேதான் எழுதுகிறேன்.

மழையில் நனைந்தாகிவிட்டதா...! அப்படியே விடாமல் சூடாக இதைப் பருகுங்கள். எந்த தோஷமும் பிடிக்காது.
சுக்குமல்லி காபிதான்....

அப்படியே விட்ட வேலையையும் தொடருங்கள். முற்பகல் செய்த தவறுகள் ஏதாவது இருந்தால் திருத்திக் கொள்ளவும் நேரம் இருக்கிறது.

இன்றைய குறிப்புகள்: சிந்திக்கும் தருணம், இல்லறம், கொஞ்சம் கசந்துபோன நினைவுகள், மழை, செய்தவற்றின் விளைவுகளை சீர் தூக்கி பார்க்கும் நேரம். 

1.  அமைதிச்சாரல் அவர்கள் வலைப்பூவில் அரைகுரையாய்போன கனவுகள் பற்றி சொல்கிறார். படியுங்கள். அரைகுறையாய்ப் போன கனவுகள்... பெண்களுக்குத் தேவையான செய்திகள் இவர் வலைப்பூவில் நிறைய இருக்கிறது.

2. ஒரு தந்தையாக மாறும் தருணம் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். அதனை எத்தனை அழகாக பதிந்துள்ளார் திரு.சங்கவி. ரொம்பவும் பிடித்த பதிவு.   - என் குழந்தையின் மழழைச் சத்தம் 

3.  இவர் அன்னைபூமியின் பங்களிப்பாளர். விளிம்பு நிலை வாழ்க்கை பற்றிய கவிதைகள் மனம் வலிக்க வைக்கும். சில கவிதைகளே பதியப்பட்டுள்ளன. மற்றவை தாளின் எழுத்துக்களாக மட்டுமே உள்ளன. ஆராய்ச்சி படிப்பு முடிந்தபின் தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். சகா என்கிற சண்முகம். சாமி கொடுத்த வரம்.

4. இல்லறத்தினை நல்லறமாக்குவது குழந்தைகளே. புதிதாக நமக்கு நிறைய கற்றுத்தருகின்றன. வலிக்காமல் சுமக்க வைக்கின்றன. அவையே சுமையென்றாகும்போது... கரடிபொம்மை லாலியின் கவிதை, சுமையை அதிகரிக்கிறது. .    யார் தொலைத்த கவிதை அவள்? 

5. இதுவும் குழந்தை பற்றியதுதான். விளிம்பு நிலையில் வாழும் உழைப்பாளித்தாய் குழந்தைக்காக பாடும் பாட்டு. ஷி-நிஷியின் கவிதைகளில் அழகிய நடையில் வந்துள்ளது. தாய்ப்பாசம்

6. மிகவும் நுட்பமான உணர்வுகளை நான் எழுதுவதாக சொல்வார்கள். ஆனால் என்னுடைய வாக்கு கீதமஞ்சரிக்குத்தான். பெண்ணியல்பாய் வெளிப்படும் கவிதைகள் நிறைந்த கீதாவின் கீதமஞ்சரி வலைப்பூவில்  அலையும் மனதிற்கு ஆதரவாய்….

7. நகர வாழ்வு நரக வாழ்வு என்று சில வேலைகளில் எனக்குத் தோன்றும். அதுவும் மின் தடை ஏற்படும் மதிய வேளைகளில் கவனித்துப் பாருங்கள். பார்பதற்கும் பேசுவதற்கும் ரசிப்பதற்கும் எதுவுமே இல்லாததுபோலத் தோன்றும்.  திரு.அரசனின் எழுத்துக்களில் இந்த ஆதங்கம் அதிகமாகவே வெளிப்படுகிறது. நகர வாழ்வு...

8. ஒரு தோல்வியை சந்தித்தாகிவிட்டது. அப்படியே விழ முடியாதல்லவா? எழ வேண்டுமே. அதற்குத்தேவை தன்னம்பிக்கை.  கிராமத்துக்காக்கையின் வலைப்பூவில் இந்த பதிவை படியுங்கள்.  ன்னம்பிக்கையின் பக்கம் .


9.  நான் இரசித்தவை... ரசிக்க வாருங்கள்... கல்பனாவின் வலைப்பூவில் இந்த கவிதை ஆதரவற்ற குழந்தையை பற்றி சிந்திக்கிறது. பதியம் போடாத விதை   . இன்னும் பல கவிதைகள் அழகாக பதியப்பட்டுள்ளன.  


 10   குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை விளக்கும் கவிதையாய் ஒரு புகைப்படம் ஸ்டாலின் அவர்களின் எனதி ஆய்வகம் வலைப்பூவில் இருந்து.... 


11. திரு.நாகசுப்ரமணியத்தின் நதியில் விழுந்த இலை (தலைப்பே மிக அருமையாக இருக்கிறதல்லாவா?) வலைப்பூவிலிருந்து வாழ்க்கை பற்றிய கவிதையை படியுங்கள்.

12. மிக சில பதிவுகளே பதிவிட்டிருக்கும் அன்புதேவனின் வசந்தம் வலைப்பூவில் இந்த கவிதை சட்டென்று என் கவனத்தை ஈர்த்துவிட்டது.
  சாமான்யன் 
 
சரியாக சிந்தித்து செயல்பட்டால் எற்பாடு ஒரு எழுச்சியை தரும். இனி மனம் கவரும் (நாளை) மாலை சந்திப்போம். நன்றி.

48 comments:

  1. //இந்த நேரத்தில் கல்லூரியின் வகுப்பறைக்குள் சென்று கடினமான பொறியியல் தேற்றங்களை(algorithms) எடுப்பதைவிட சிங்கத்தின் வாய்க்குள் தலையைவிடலாம். //

    எத்தனை யதார்த்தமான உண்மை!

    //புரிந்து கொள்ளுதலும் நெகிழ்ந்து போகுதலும்தான் இல்லறத்தின் விளக்கம் என்பது என் கருத்து. //

    அருமையான விளக்கம்! அழகாக எழுதியிருக்கிறீர்கள் சாகம்பரி! மகிழம்பூவாய் மணக்கின்றது!!‌

    அறிமுகமானவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  3. //மதிய உணவு நிறைவு பெற்ற உணவாக இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான எல்லா சத்தும் நிறைந்திருக்க வேண்டும்.//

    நல்ல கருத்து.

    அறிமுகங்கள் நன்று.

    ReplyDelete
  4. நீங்க போட்ட மதிய உணவு போட்டோ போல நீங்கள் அறிமுகப்படுத்தும் பதிவாளர்களும் அருமையாக பதிவு இட்டுள்ளார்கள் .நீங்கள் அறிமுகப் படுத்தும் விதமும் நன்றாக உள்ளது. உங்கள் எழுத்து நடையும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அழகான நடையில் அருமையான அறிமுகங்கள்.. என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு மகிழ்ச்சியும் நன்றிகளும்..

    //இந்த நேரத்தில் கல்லூரியின் வகுப்பறைக்குள் சென்று கடினமான பொறியியல் தேற்றங்களை(algorithms) எடுப்பதைவிட சிங்கத்தின் வாய்க்குள் தலையைவிடலாம்//

    எடுப்பது மட்டுமல்ல படிக்கிறதும்தான்.. :-)))

    ReplyDelete
  6. அந்த சாப்பாடு தட்டில் இருந்த மிருதுவான இட்லியும், உப்பலான சூடான பூரிகளும், என் மனதுக்கு பூரிப்பைத் தந்தன.

    மழைச்சாரலில் நனைய வைத்து உடனே சுக்குமல்லி காஃபி கொடுத்து, சுறுசுறுப்பை வரவழைத்தது, நல்லதொரு டெக்னிக் தான்.

    அறிமுகங்கள் யாவும் அருமையோ அருமை.

    //இந்த நேரத்தில் கல்லூரியின் வகுப்பறைக்குள் சென்று கடினமான பொறியியல் தேற்றங்களை(algorithms) எடுப்பதைவிட சிங்கத்தின் வாய்க்குள் தலையைவிடலாம். //

    அடடா! எவ்வளவு அனுபவபூர்வமாகச் சொல்லியுள்ளீர்கள். பேராசிரியை அல்லவா!))))

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

    ReplyDelete
  7. அன்புச் சகோதரிக்கு முதற்கண்
    வலைச்சர பணி ஏற்றமைக்கு என்
    நல் வாழ்த்துக்கள்! உடல் நிலை காரணமக உடன் வாழ்த்த இயலவில்லை! மன்னிக்க!
    எற்படு நேரத்தை மிக எழிலுறக்
    காட்டினீர்! அற்புதமா அறிமுகப் படுத்
    தினீர்

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. மழையின் இதத்தில் மல்லிக் காப்பியின்
    சுவையோடு பதிவர்கள் அறிமுகம் அருமை.

    ReplyDelete
  10. //மனித வாழ்வில் யௌவன பருவம். இல்லறம் ஆரம்பிக்கும் நேரம். புரிந்து கொள்ளுதலும் நெகிழ்ந்து போகுதலும்தான் இல்லறத்தின் விளக்கம் என்பது என் கருத்து. //

    அருமை.

    அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமையான அறிமுகங்கள், அனைவரையும் கண்டு, பின்தொடர செய்து விட்டு வந்திருக்கிறேன்.. ஆனாலும் அந்த கடைசி பதிவர், கொஞ்சம் அதிகம் எழுதலாம் தான்..

    ReplyDelete
  12. ஏறுபகல் விடுத்து
    உச்சிப்போழுதை வர்ணித்திருத்தல்
    மிக அழகு சகோதரி..

    அறிமுகமான அத்தனை பதிவர்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அறிமுகங்களுக்கும் , உங்களுக்கும் வாழ்த்துக்கள் மேடம் ..

    ReplyDelete
  15. vanakkam ., nalla arumaiya arimugam mathiya unavotu ., migavum nantri .,

    annaivarukum vazddhugal ...................

    ReplyDelete
  16. தங்களின் தொடர் வருகை எனக்கும் மகிழ்ச்சி தருகிறது மனோ மேடம்.

    ReplyDelete
  17. வருகிறேன் நன்றி உலக சினிமா ரசிகன்

    ReplyDelete
  18. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  19. @அமைதி அப்பா
    வணக்கம் சார். பொறுப்புமிக்க தங்கள் பதிவுகள் குடும்பத்திற்குள் நடக்கும் கலந்துரையாடல் போல யதார்த்தமாக இருக்கின்றன. மிக்க நன்றி

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அறிமுகங்கள் யாவும் அருமையோ அருமை.//
    மிக்க நன்றி சார்.

    //அடடா! எவ்வளவு அனுபவபூர்வமாகச் சொல்லியுள்ளீர்கள்.//
    ஆரம்ப காலத்தில் ஒரே ஒரு முறை அந்தத் தவறினை செய்திருக்கிறேன் சார். கரும்பலகை முழுக்க எழுதிவிட்டு திரும்பினால், இறகு பந்தின் இறகுகளை காதில் சொருகிக் கொண்டு காட்டுவாசிகள் போல மொத்த வகுப்பும் இருந்தது. அ,ஆ... மொத்தமும் மறந்து
    படிக்கின்ற நிலைக்கு போய்விட்டார்களாம். எனக்கு சிரிப்புதான் வந்தது.
    பாராட்டுக்களுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  21. @புலவர் சா இராமாநுசம்
    எனக்குத் தெரியும் ஐயா. இது மழைக்கால ஆரம்பம் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். வருகைக்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  22. @அமைதிச்சாரல்...
    வருகைக்கு மிக்க நன்றி. கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.

    ReplyDelete
  23. மிக்க நன்றி திரு.கருண்

    ReplyDelete
  24. வருகைக்கு நன்றி ராஜி..

    ReplyDelete
  25. வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி ராம்வி.

    ReplyDelete
  26. நல்லது செய்தீர்கள் நன்றி. புதிதாக வலைப்பூ தொடங்குபவர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும் வரவேற்பு கிட்டாததால் எழுதும் ஆர்வம் குறைந்துவிடுகின்றது. தேங்கும் நீரில் சிக்கின் கொண்ட ஓடம் போலாகிவிடுகின்றனர். முடிந்த அளவிற்கு நானும் ஊக்கப்படுத்துகிறேன். நன்றி திரு.சூரியஜீவா.

    ReplyDelete
  27. வணக்கம் மதன்மணி. மிக்க நன்றி.

    ReplyDelete
  28. மிக்க நன்றி திரு.அரசன்

    ReplyDelete
  29. நிறைவான மதிய உணவு சாப்பிட்ட திருப்தி...உங்கள் எழுத்துக்கள்.

    ReplyDelete
  30. மிக்க நன்றி கல்பனா. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  31. சிந்திக்கும் தருணம், இல்லறம், கொஞ்சம் கசந்துபோன நினைவுகள், மழை, செய்தவற்றின் விளைவுகளை சீர் தூக்கி பார்க்கும் நேரம். /

    மிக அருமையான அனுபவ பொக்கிஷப் பகிர்வுகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. அருமை.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. வணக்கம்

    மிக்க பயன் உள்ள
    தகவல்களுடன்
    நன்கு உணரப்பட வேண்டிய கருத்துக்களும்
    சமமாய் பகிர்ந்து
    கொண்டு உள்ளமைக்கு
    மிக்க நன்றி

    அனைத்து அறிமுகம் அனைவருக்கும்
    அன்பான வாழ்த்துக்கள்

    வாழ்த்த வயதில்லை
    இருந்தாலும்
    வணக்கங்கள்
    வாழ்த்துக்கள்
    மேலும் தொடர்க உங்கள் தொண்டு

    ReplyDelete
  34. //அருமையான அறிமுகங்கள், அனைவரையும் கண்டு, பின்தொடர செய்து விட்டு வந்திருக்கிறேன்.. ஆனாலும் அந்த கடைசி பதிவர், கொஞ்சம் அதிகம் எழுதலாம் தான்..
    //


    //நல்லது செய்தீர்கள் நன்றி. புதிதாக வலைப்பூ தொடங்குபவர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும் வரவேற்பு கிட்டாததால் எழுதும் ஆர்வம் குறைந்துவிடுகின்றது. தேங்கும் நீரில் சிக்கின் கொண்ட ஓடம் போலாகிவிடுகின்றனர். முடிந்த அளவிற்கு நானும் ஊக்கப்படுத்துகிறேன். நன்றி திரு.சூரியஜீவா.//



    உண்மைதான்
    ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  35. ஒவ்வொரு நாளும் சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்

    நம்ம தளத்தில்:

    இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

    ReplyDelete
  36. காலை மழை வேலையை கெடுக்கும், முற்பகல் மழை கவனிக்கப்படாது, மாலை மழை இதம் தராது, இரவு மழை உறக்கம் தருவிக்கும். சாயுங்கால மழைதான் உயிர்ப்பிக்கும்.

    அழகாக சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete
  37. My Dash Board is not working since last ten days. I have to search the Blogs.
    Heartiest Blessings.

    ReplyDelete
  38. நல்ல குற்றால சாரல்.
    அருமையான அறிமுகங்கள்.
    நிறைய புதியவர்கள்.
    நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. நன்றி சகோ...

    ReplyDelete
  40. தொடர்ந்து வருகை புரிந்து பாராட்டியதற்கு நன்றி திரு.விச்சு.

    ReplyDelete
  41. இராஜராஜேஸ்வரி said.
    மிக்க நன்றி அன்புத் தோழி.

    ReplyDelete
  42. பாராட்டிற்கு நன்றி திரு.சண்முகவேல்.

    ReplyDelete
  43. மிக்க நன்றி சிவா

    ReplyDelete
  44. கவிதை நன்றாக இருக்கிறது அன்புதேவன். நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. மிக்க நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  46. அழகாக சொல்லியுள்ளீர்கள்!//
    மிக்க நன்றி திரு.நம்பிக்கை பாண்டியன்.

    ReplyDelete
  47. தங்களின் மனப்பூர்வ வாழ்த்துக்கள் என் எழுத்தினை வளப்படுத்துகின்றன நன்றி ஐயா.

    ReplyDelete
  48. மிக்க நன்றி ஷீ-நிஷி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது