07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 6, 2011

சென்று வருக சாகம்பரி - வருக வருக R கோபி

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற சகோதரி சாகம்பரி, தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, நம்மிடம் இருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

இவர் வித்தியாசமான முறையில் சிறு பொழுதுகளாகிய விடியல், காலை, முற்பகல், ஏற்பாடு, மாலை, இரவு என்ற தலைப்புகளில், பல பொருட்குறிப்புகளில், இடுகைகளைத் தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ முன்னூற்று இருபத்தைந்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப் படுத்திய பதிவர்களோ எழுபத்திரண்டு. அறிமுகப் படுத்திய இடுகைகளோ 82. ( சொந்த இடுகைகள் 10 உட்பட ) . இவரது கடும் உழைப்பு நன்கு பலனைத் தந்திருக்கிறது.

சகோதரி சாகம்பரியின் உழைப்பினைப் பாராட்டி, நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை நவம்பர் 7ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் கோபி ராமமூர்த்தி அவர்கள்.

இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக R. கோபி என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார்.


இவர் பிறந்தது வளர்ந்தது கும்பகோணத்தில். படித்தது இளங்கலை வணிகவியல். மேற்படிப்பு Chartered Accountancy (CA). Financial Risk Manager (FRM).


இவருக்கு வாசிப்பின் மேல் மாறாத நேசமுண்டு. பக்கோடாத் தாளில் இருந்து டெலிஃபோன் டைரக்டரி வரை எது கையில் கிடைத்தாலும் வாசித்துவிடும் பழக்கமுண்டு!


ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடைய இவர் கடந்த பத்தாண்டுகளில் பல திவ்ய தேசங்கள் (97), திருமுறைத்தலங்கள் (88), மேலும் பல்வேறு கோவில்கள் எனச் சென்று வந்துள்ளார்.


காதலியை ஆறாண்டுகளுக்கு முன் கைப்பிடித்து, செல்ல மகன் ஒருவனைப் பெற்று இருக்கிறார். தற்போது வசிப்பது பெங்களூரில். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உத்தியோகம். இதற்குமுன் வசித்தது சென்னையில் (ஒரு வருடம்), மும்பையில் மூன்று வருடங்கள்.


இவருக்குப் படிப்பது, பாட்டுக் கேட்பது, பயணம் செய்வது, திரைப்படங்கள் படங்கள் பார்ப்பது என்று மனதிற்குப் பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு .


நண்பர் கோபி ராமமூர்த்தியினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


நல்வாழ்த்துகள் சகோதரி சாகம்பரி


நல்வாழ்த்துகள் கோபி ராம்மூர்த்தி


நட்புடன் சீனா

16 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு உள்ள‌ங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. அன்பு சகோதரி சாகம்பரியின் வலைச்சரப்பணி
    மிகவும் இனிமையாக நிறைவுற்றிருக்கிறது.
    பொழுதுகளின் ஊடே நமை நடைபோட வைத்து
    போற போக்கினில் பதிவர்களையும் அறிமுகப் படுத்தி
    தன் பங்கை தனிச்சிறப்புடன் வலைச்சரத்துக்கு
    அளித்திருக்கிறார்...
    வாழ்த்துக்கள் சகோதரி....

    அடுத்து வரும் நண்பர் கோபி அவர்களை
    பணி சிறக்க வாழ்த்தி வரவேற்கிறோம்...

    ReplyDelete
  4. ஈடுபாட்டுடன் தன் பணீயை செய்து முடித்த சாகம்பரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வருக சகோ கோபி

    வாழ்த்துக்கள்

    கலக்குங்க

    ReplyDelete
  6. மிகச்சிறப்பாக பணியாற்றி பிரியாவிடை பெற்றுச்செல்லும் திருமதி சாகம்பரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    புதிய ஆசிரியராக பொறுப்பேற்க உள்ள திரு. R. கோபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    திரு R கோபி அவர்களை
    வருக! வருக!! வருக!!!
    என வரவேற்கிறோம்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  7. @சீனா ஐயா, மிக்க நன்றி

    @மனோ மேடம், மிக்க நன்றி

    @மகேந்திரன், மிக்க நன்றி

    @K.S.S. Rajh, மிக்க நன்றி

    @லக்ஷ்மி மேடம், மிக்க நன்றி

    @ஆமினா சகோ, மிக்க நன்றி

    @ வை. கோபாலகிருஷ்ணன் சார், மிக்க நன்றி

    ReplyDelete
  8. தலைவருக்கு எனது வரவேற்புகள் :-))

    ReplyDelete
  9. கோபி சார்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. VaazhthukkaL - Sagampari & gopi ramamoorthy

    ReplyDelete
  11. சாகம்பரி -நன்றி
    R.கோபி -வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. @ராஜி மேடம், மிக்க நன்றி

    @மிடில் கிளாஸ் மாதவி, மிக்க நன்றி

    @மாதவன், மிக்க நன்றி

    @நிஜாமுதீன், மிக்க நன்றி

    @சிவகுமார், மிக்க நன்றி

    ReplyDelete
  13. இது வரை ஆற்றியவர்களின் பனி எப்படி இருந்தது என்பது அறிந்ததே, இவரும் தோய்வில்லாமல் செயல் படுவார் என்ற நம்பிக்கையிலும், புதிய பதிவர்கள் கண்ணில் படுவார்கள் என்ற நம்பிக்கையிலும் வருக வருக

    ReplyDelete
  14. @Suryajeeva, மிக்க நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது