வலைச்சரத்தில் ஞாயிறு.
➦➠ by:
ராம்வி
வணக்கம்.
அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி ஆகும்.சூரியன் பெருமளவு ஐதரஜன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும்,சிறிதளவு,இரும்பு,சிலிக்கன் நிக்கில்,கந்தகம்,அக்ஸிஜன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது, இது காந்த ஆற்றல் மிகுந்த நட்சத்திரம் என் கண்டறியப்பட்டுள்ளது. சூரியமரு,(sunspot), சூரியஎரிமலை (solar flare), சுரியசுறாவளி (solar winds),ஆகிய விளைவுகளை சூரியனின் காந்தப்புலம் ஏற்படுத்துகிறது.இந்த விளைவுகள் கதிரணு உயிர்ப்பு (solar activity) என்று கூறப்படுகிறது. சூரியன் தோராயமாக 25000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை சுமார் 225 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த தகவல்கள் நவீன கணித முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது.
இன்று வலைச்சரத்தின் எனது பணி முடியும் நாள். இன்றும், நேற்றைய தொடர்ச்சியாக பலசுவை பதிவுகளின் அறிமுகம்...
நம் தவறுகளைவிட, குறைகளைவிட, கோபங்களைவிட,
குரோதங்களைவிட பெரியது சகோதரத்துவம் என்கிறார் ராஜகோபலன் சகோதர உறவை பற்றிய தனது, வீணே வெறுத்தோம் உறவை மறந்தோம். என்கிற கவிதையில்.
நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல,வழி காட்டும் லட்சியங்களே அவர்களுக்கு நாம் அளிக்கும் பெரிய சொத்து என்கிறார் சம்பத்குமார், தன்னுடைய, குழந்தைகளுக்கு தர வேண்டிய மிகப்பெரிய சொத்து...என்ற பதிவில்..
வாழ்கையில் உருப்படியாய் ஏதும் சாதிக்காதவர்கள் தான், தன் பாக்யங்களையே தன் சாதனைகள் போல் காட்டிகொள்வார்கள். நாம், நம் செயல்களினாலேயே அறியப்படுகிறோம், பாக்யங்களினால் அல்ல, என்கிறார், தானைத்தலைவி தனது தங்கச்சி பாப்பா பிறந்த நாள். பதிவில்.
எவர் சொல்லும் வார்த்தையைக் கேட்டும் ஏமாந்து போகாமல்,மனம்விட்டு பேசி நல்லதொரு மணாளனை தேர்ந்தெடுக்க வேண்டும்,அப்படி இல்லாமல் பணம் கொடுத்து வாழ்வை வாங்க நினைத்தால்,குணங்கெட்டவன் துணையாக வந்துவிட்டால், நற்குடியும் முழ்கிப்போகும் அடியோடு அதனால,துணையை தேர்ந்தெடுக்க, எதுக்குதான் இந்த அவசரமோ? என்கிறார் அம்பாளடியாள்.
உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கா? கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேட வேண்டுமா? கவலைய விடுங்க சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்து விடலாம். நம்ப காட்டானப் பாருங்க, காளைய அடக்கச்சொல்லலாமா? இல்ல வெற்றிலைய மடிக்கச் சொல்லலாமா ,சிவலயனை அடக்க போகிறவர் யார்? இப்படீன்னு நிறைய யோசனைகள் சொல்லராரு சுயம்வரத்துக்கு..
ஆயிரம் வார்த்தைகளை கொண்டு உணர வைப்பதை ஒரு படத்தைக் கொண்டு உணர வைத்து விடலாம். அதைத்தான் நெல்லி. மூர்த்தி பண்ணராரு,அவரோட
கார்டூன்களைப் பாருங்க.--. குலுங்குவதோ,குமறுவதோ உங்க இஷ்டம்.
வெள்ளை நிறம் மனதை அமைதிபடுத்துமாம்,பிங்க் நிறத்துக்கு கோபத்தை குறைக்கும் குணம் உண்டாம் அப்படீன்னு நிறங்களுக்கும் குணங்கள் இருக்குன்னு அமைதிசாரல் சொல்லியிருக்காங்க தனது, நிறங்களும், குணங்களும்... பதிவுல.
தந்தையின் வீரத்தைக் கண்டும் அது பற்றிப்பலர் கூறக்கேட்டும் வளர்ந்த ஒரு சிறுவன், தன் தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டார் என்றறியும் போது,என்ன மனநிலயை அடைவான்? அவனுடைய மனநிலையை தெரிஞ்சுக்கனுமா?சென்னைப்பித்தன் அவர்களின், அங்கதன் காத்திருந்தான். கதையில் தெரிஞ்சுக்கலாம்.
போதி மரத்தடியில் புத்தருக்கு ஞானம் பிறந்தது மாதிரி,காதல் பிறந்தது ஒரு ஒற்றை மரத்தடியில் என்கிறார் அனந்து, காதலியை பிரிந்த சோகத்தில் எழுதப்பட்ட ஒற்றை மரமாய்.. என்கிற கவிதையில்...
பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார் டாக்டருக்கு பைத்தியம் பிடிச்சா? எப்படி அந்த டாக்டருக்கு பைத்தியம் பிடிக்குதுன்னு பார்க்கணுமா? வாங்க அப்பாவி யோட பதிவுக்கு,படிச்சு தெரிஞ்சுக்கலாம்..
அனைத்து எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் ஆரம்ப புள்ளி மனம், எனவேதான் யோகிகளும்,ஞானிகளும் மனதை கட்டுபடுத்த வேண்டும் என்று கூறினார்கள், மனம் ஒரு வினோதம் என்று மனதை கட்டுபடுத்துவது பற்றி அலசுகிறார், ராகவ் முரளி.
அம்மாவிற்கு இணை அம்மாதான்,அம்மாவின் நினைவுகள் மனதோடும், காகிதங்களோடும், மண்ணோடும் அழிந்துவிடக்கூடாது என்று அம்மாவுக்காக பதிவு எழுதும் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர்.அவர்கள் அம்மாவை, மீண்டும் வருவாயா?
என்று உருக்கமாக கேட்கிறார்.
இந்த ஒரு வாரமாக வலைச்சரத்தின் மூலம் உங்களையெல்லாம் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் அறிமுகப்படுத்திய பதிவுகள் மற்றும் பதிவர்கள் ஏற்கனவே உங்களுக்கெல்லாம் அறிமுகமாகி இருந்திருக்கலாம். நான் படித்ததில் எனக்கு பிடித்த பதிவுகள் என்ற முறையில் என் அறிமுகங்களை கொடுத்தேன். என் பதிவுகளை படித்து வாழ்த்தி கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்,
ரமாரவி.
|
|
அறிமுகத்துக்கு நன்றி ரமா..
ReplyDeleteமற்றவர்களுக்கும் வாழ்த்துகள்..
இந்த வார அறிமுகங்கள் அனைத்தும் உங்கள் ஸ்டைலில் அருமையா பகிர்ந்திருந்திங்க. நன்றி
ReplyDeleteநம்ம தளத்தில்:
மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்
வணக்கம் சகோ..
ReplyDeleteஎனது பதிவினையும் அறிமுகப்படுத்தியதற்க்கு மனமார்ந்த நன்றிகள்..
அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
www.tamilparents.com
ஒரு வாரமாக பல புதிய பதிவர்களை அறிமுகபடுதியமைக்கு நன்றி ராம்வி
ReplyDeleteஅருமையான கடினமான பணியை சிறப்பாக செய்ததற்கு நன்றி... அடுத்து வருபவர்க்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநாங்கள் அறிந்த , அறிந்திராத பல வலைத்தளங்களை கதம்பமாக தொகுத்து இவ்வாரம் முழுதும், வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்களும்,நன்றிகளும்.
ReplyDeleteரமா புதிய அறிமுகப்படுத்திய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஇயன்ற வரை இது வரை படிக்காத பதிவுகளைப் படிக்க முயல்வேன்!
அன்பு நிறை சகோதரி
ReplyDeleteகாலையிலேயே உங்களால் சூரியதரிசனம்
உங்களின் படைப்புகளைப் போலவே
எழுச்சியையும் தெளிவையும் தந்தது மகிழ்ச்சி. நன்றி உங்களால் இங்கு அறிமுகப்படுத்தபட்டமைக்கு, மனமும் மதியும் ஒரு சேர நிறைந்தது நன்றி.
ஆயிரம் வார்த்தைகளை கொண்டு உணர வைப்பதை ஒரு படத்தைக் கொண்டு உணர வைத்து விடலாம்.//
ReplyDeleteஅருமையா பகிர்வு.. வாழ்த்துக்கள்
சிறப்பான தங்களது பணிக்கு வாழ்த்துகள்.தங்களின் அறிவிப்பு தகவலை ஏற்கிறேன்.
ReplyDeleteஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியைச் சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துகள் ரமா ரவி...
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.வலைச்சரப் பணியை செவ்வனே செய்தமைக்கு தங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteWELL DONE. CONGRATULATIONS TO ALL.
ReplyDeleteTHANKS TO RAMAARAVI MADAM. vgk
//அமைதிச்சாரல்//
ReplyDelete//பிரகாஷ்//
//சம்பத்குமார்//
//மோகன் குமார்//
மிக்க நன்றி
//சுரேஷ்//
ReplyDelete//சத்ரியன்//
//லக்ஷ்மி அம்மா//
மிக்க நன்றி.
//சென்னைப்பித்தன்//
ReplyDelete//ராஜகோபாலன்//
//இராஜராஜேஷ்வரி//
மிக்க நன்றி.
//ஆச்சி//
ReplyDelete//வெங்கட்//
//ராஜி//
//வை.கோ சார்//
மிக்க நன்றி..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவலைச்சர ஆசிரியப் பணியை சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துகள்.
ReplyDelete@ Ramvi - Many thanks for including me in here...:)
ReplyDeleteரொம்பவே வித்யாச்மாய். அற்புதம்.
ReplyDeleteThanks Ramvi for introducing here.
ReplyDelete