வலைச்சரத்தில் செவ்வாய்..
➦➠ by:
ராம்வி
வணக்கம்.
திங்களுக்கு அடுத்தது செவ்வாய். செவ்வாய் என்பது மார்ஸ் என்கிற கிரகத்தை குறிக்கிறது. நமது சூரிய குடும்பத்தின் 4 வது கிரகம்,பூமிக்கு மிக அருகில் உள்ளது. தோற்றத்தில் பூமியை ஒத்தது போல தோன்றினாலும் இது பூமியைவிட சிறியது. இது தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏறக்குறைய 24 மணி 40 நிமிடங்கள் ஆகும். இது சூரியனை சுற்றும் வட்டப்பாதை பெரியது எனவே செவ்வாய் ஒரு முறை சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் 1.88 வருடங்களாகும். தொலைநோக்கு கருவி வழியே பார்த்தால் செவ்வாய் சிகப்பு நிறத்தில் தெரிவதால் இதனை ரெட் பிளானட் என்று கூறுகிறார்கள். செவ்வாயில் நீர் இருப்பதாகவும், உயிர்வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதாகவும் ஆராய்ச்சி தகவல்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் இன்னும் தெரியவில்லை.
நாம் பதிவுகள் எழுதுவது நம் சிந்தனைகள், அனுபவங்கள், கற்பனைகள், சந்தோஷங்கள், சங்கடங்கள், ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளவே. இப்படி பகிர்வதின் மூலம் வாழ்க்கை நமக்கு கற்றுத்தந்த பாடங்கள் நமக்குமட்டுமல்ல மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்குமல்லவா? எனவே..........
செவ்வாயில் சிந்தனைக்கான அறிமுகங்கள்......
செவ்வாயில் சிந்தனைக்கான அறிமுகங்கள்......
பதிவுலகில் எல்லோராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவர் லக்ஷ்மி அம்மா. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதனை எப்படி எதிர்கொண்டு குறைஒன்றுமில்லை.. என வாழ்க்கையை பொறுமையாக, நிதானமாக நடத்திச்செல்லவேண்டும் என்று இவர் பதிவுகளில் நாம் கற்றுக் கொள்ளலாம்.
தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும், காலம் மாறிப்போச்சு.. என்று கூறும் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா நன்றே செய்! அதுவும் இன்றே செய்! என்கிறார். சொந்த அனுபவமோ அல்லது கற்பனையோ அதனை சுவாரசியமாக எழுதுவது என்பது ரொம்ப கஷ்டம். அப்படி சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர் திரு வை.கோ ஐயா அவர்கள்.
அறிஞன் இல்லை- கவிஞன் இல்லை-புலவன் இல்லை-தமிழ் கற்றவன் அவ்வளவே என்று தன்னடக்கத்துடன் கூறும் இவர் அசைபோடுவதும் தமிழ். இவரின் தமிழ்பணி பல்லாண்டு காலம் தொடரவேண்டும். ஆம் அறிமுகமே தேவை இல்லை திரு.சீனா ஐயா அவர்களுக்கு.
என்றுமே அழியாமல் கூடவே துணை நிற்கும், உச்சரித்ததும் பேரானந்தம் வாய்க்கும் “நட்பு” என்னும் மந்திரச்சொல் தெரியும் என்று சொல்லுகிறார், திரு ரிஷபன். எப்பொழுதும் காற்றை நேசிக்கும் இவர் மனிதர்களை கொண்டாடச் சொல்லுகிறார், ஈரங்கொல்லியில்.
தீதும் நன்மையும் பிறர் சொல்லி வருவதில்லை.இருளுக்கும் ஒளிக்கும், பொய்மைக்கும் உண்மைக்கும் இடையில் ஒரு மாயக்கோட்டில் நின்று பார்த்தவர்கள்தான் இன்று தலைவர்களாக, கலைஞர்களாக, ஞானிகளாக ஆகிரார்கள் என்று கூறும் திரு.ரமணி, பெரிய ஞானிகள் ஆகாவிட்டாலும் பரவாயில்லை ஏமாறாமல் இருக்கவாவது நம்மையும் லெட்சுமணன் கோட்டில் நின்று பார்க்க சொல்லுகிறார்.
தான்கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து எடுத்த செயலை
அடுத்தநிமிடம் செய்வேனென அடம் பிடிக்காது தீர்க்கமாக ஆராய்ந்து
திடமான நம்பிக்கையுடன் நிதானத்துடன் செயல்படுதல் ஆளுமையின் ஒர்குணம் என்கிறார் மகேந்திரன் அவர்கள், ஆளுமையின் பொருளுக்கு பதம் காண முயற்சி செய்கையில்..ஆளுமையின் மற்ற குணங்களைப்பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்று தெரிய வேண்டுமா? வாருங்கள் வசந்த மண்டபத்திற்கு...
தான்கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து எடுத்த செயலை
அடுத்தநிமிடம் செய்வேனென அடம் பிடிக்காது தீர்க்கமாக ஆராய்ந்து
திடமான நம்பிக்கையுடன் நிதானத்துடன் செயல்படுதல் ஆளுமையின் ஒர்குணம் என்கிறார் மகேந்திரன் அவர்கள், ஆளுமையின் பொருளுக்கு பதம் காண முயற்சி செய்கையில்..ஆளுமையின் மற்ற குணங்களைப்பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்று தெரிய வேண்டுமா? வாருங்கள் வசந்த மண்டபத்திற்கு...
அன்புக்குப் பல இலக்கணங்கள் உண்டு, அரச கால புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள் வரை அன்பைப்பற்றி பாடாத பாடல்களே இல்லை. சிறு வயது முதல் அன்பு ஏதாவது ரூபத்தில் பின்னிப்பிணைந்தும் நம் மனதின் ஈரத்தை காத்துக்கொண்டிருக்கிறது என்று கூறும் திருமதி .மனோ சுவாமிநாதன், பல வருடங்களின் வாழ்வியல் அனுபவங்களுக்குப் பின்னாலும் அன்பின் இலக்கணம் முழுமையாக புரியவில்லை என்கிறார், இதயத்தின் தேடலுக்கு மனதில் எழுந்த அன்பென்பது என்கிற சிறு கவிதையில்.
நேற்று நவம்பர் 14 குழந்தைகள் தினம். பதிவுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் குழந்தைகளுக்கென தனி பதிவுகள் அபூர்வம். அந்த வகையில் குழந்தைகளுக்காகவே பதிவு எழுதுபவர் திருமதி ருக்மணி சேஷசாயி. அவருடைய. பாட்டி சொல்லும் கதைகள், குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் படித்து ரசிக்கலாம், பாடம் கற்கலாம்..
நேற்று நவம்பர் 14 குழந்தைகள் தினம். பதிவுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் குழந்தைகளுக்கென தனி பதிவுகள் அபூர்வம். அந்த வகையில் குழந்தைகளுக்காகவே பதிவு எழுதுபவர் திருமதி ருக்மணி சேஷசாயி. அவருடைய. பாட்டி சொல்லும் கதைகள், குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் படித்து ரசிக்கலாம், பாடம் கற்கலாம்..
மீண்டும் நாளை சந்திக்கிறேன்.
அன்புடன்
ரமாரவி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
ரமாரவி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
|
|
நல்ல தொகுப்பு
ReplyDeleteஅனைவருமே பதிவுலக சிற்பிகள்..
ReplyDeleteதொகுத்த விதம் அருமை..
இவர்களை வாழ்த்த வயதில்லை வார்த்தைகளுமில்லை
நன்றியுடன்
சம்பத்குமார்
அருமையான தொகுப்பு, அனைவருக்கும் வாழ்த்த்க்கள்
ReplyDeleteஆஹா!அனைவரும் எனது மனங்கவர்ந்த பதிவர்கள்.
ReplyDeleteசெவ்வாய் பற்றிய தகவலுக்கு நன்றி ராம்வி மேடம்
அன்பு சகோதரி,
ReplyDeleteகோள்களின் விளக்கங்கள் கூறி நீங்கள் தொடுக்கும் வலைச்சரம்
மிகவும் இனிமையாகவும் அறிவியல்பூர்வமாகவும் உள்ளது.
வித்தியாசமாக செய்கிறீர்கள்.
நீங்கள் பகிர்ந்திருக்கும் அத்தனை பதிவர்களும் எழுத்துச் சித்தர்கள்..
லக்ஷ்மி அம்மா, வை.கோ.ஐயா, அவர்களின் எழுத்துக்கள் கண்டு விழிவிரிய
படித்திருக்கிறேன்.
சீனா அய்யாவின் எழுத்துக்கள் முத்துமுத்தாய்
நிதர்சனங்கள் சொல்லிநிற்பதை கண்டு பூரித்து
படித்திருக்கிறேன்.
நண்பர் ரமணி அவர்களின் லட்சுமணக்கோடு என்னை மிகவும் கவர்ந்த பதிவுகளில் ஒன்று.
அவரின் யதார்த்த பதிவுகள் கண்டு வியந்து வியந்து படித்திருக்கிறேன்.
நண்பர் ரிஷபன் எழுத்துக்கள் இதுவரை படித்ததில்லை. இன்றுமுதல் தொடர்கிறேன் சகோதரி.
அதுபோல சகோதரி திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களின் எழுத்துக்களும் உங்கள் மூலம்
எனக்கு அறிமுகம். நிச்சயம் தொடர்கிறேன்.
இவ்வளவு பெரிய எழுத்தாளர்கள் மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு
என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
தொடர்க..
நீங்கள் தொடுக்கும் வலைச்சரம்
வரலாற்றில் நிற்கட்டும்..
அன்பன்
மகேந்திரன்
நீங்கள் அறிமுகம் செய்த சகபதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வித்தியாசமான நடையில் இருக்கின்றது உங்கள் பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராஜா.
ReplyDeleteமிக்க நன்றி சம்பத்குமார்.
ReplyDeleteமிக்க நன்றி Jaleela Kamal.
ReplyDeleteமிக்க நன்றி,ராஜி.
ReplyDeleteமிக்க நன்றி மகேந்திரன்.
ReplyDeleteமிக்க நன்றி நேசன்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கு என் பாராட்டுக்கள்.
அசத்துங்க சகோ...
வலைச்சர ஆசிரியர் பணிக்கு பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் ரமா!
ReplyDeleteஇன்று என் வலைத்தளத்தை எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவான என் கவிதையை அறிமுகம் செய்திருப்பதற்கு என் மனங்கனிந்த நன்றி! இன்றைக்கு அறிமுகம் பெறப்பட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!!
ரமா வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி அனைத்து அறிமுகப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவித்யாசமான பகிர்வு ராம்வி... ஒவ்வொரு நாளும் தொடர்கிறேன். வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறந்த பதிவர்களுடன்
ReplyDeleteஎன் பதிவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு
மனமார்ந்த நன்றி
முக உரையும் அறிமுகம் செய்யும் விதமும் அருமை
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்க
செவ்வாய் பற்றிய நல்ல தகவல்கள்.
ReplyDeleteஅறிமுகமான அனைவருமே அருமையான பதிவர்கள். வாழ்த்துகள்.
தொகுத்த விதம் வித்யாசமான பகிர்வு
ReplyDeleteமிக்க நன்றி இந்திரா..
ReplyDeleteமிக்க நன்றி மனோ மேடம்.
ReplyDeleteமிக்க நன்றி லக்ஷ்மி அம்மா..
ReplyDeleteமிக்க நன்றி பிரகாஷ்.
ReplyDeleteமிக்க நன்றி ரமணி சார்.
ReplyDeleteமிக்க நன்றி ஆதி.
ReplyDeleteமிக்க நன்றி மாதவன்.
ReplyDeleteமிக சிறப்பான அறிமுகங்கள். நன்றி ராம்வி.
ReplyDeleteமிக்க நன்றி சாகம்பரி மேடம்.
ReplyDeleteமங்கள வாரமாகிய இன்றைய செவ்வாய்க் கிழமையை வெற்றிகரமாகவே முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஇன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
”காலம் மாறிப்போச்சு”
அதனால்
”நன்றே செய் அதையும் இன்றே செய்”
என்று செய்து காட்டி விட்டீர்கள். அதற்கு என் கூடுதல் நன்றிகள்.
இன்று முழுவதும் எங்கள் பகுதியில் மின் தடை, பிறகு இரவு நான் கொஞ்சம் வெளியே போக வேண்டிய அவசர வேலை. அதனால் தாமதமாக பின்னூடமிட நேரிட்டு விட்டது.
vgk
செவ்வாய் கிழமையில் செவ்வாய் கிரகத்தினை பற்றி அருமையாக சொல்லி பதிவர்களை அறிமுகப்படுத்திருக்கீங்க.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் .வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகிய விஷயத்துடன் அழகான அறிமுகங்கள் ,அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete