மனம் கவரும் மாலை -வலைச்சரம்
➦➠ by:
திருமதி.சாகம்பரி
வெளிச்சம் சென்றபின் பொதிகை தென்றல் கைவீசிட...
பகற்போதின் அலுக்கை மிக்க சுமைகளை கரைத்திட....
கண்களும் கண்களும் பேசிடலாம். களிப்பேருவகை எய்திட
மனதை தீண்டும் மணமிகு பூக்களுடன் வரும் அந்திமாலை.
வேலை முடிந்து வீடு திரும்பியாகிவிட்டது. உடை மாற்றி வாருங்கள். உங்களுக்காக இந்த இனிப்பு வகைகள் காத்திருக்கின்றன. இன்றைய மாலை நேரத்து அளவலாவலில் என்னையும் சேர்த்துக் கொள்வதற்குதான் இந்த இனிப்புகள்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயத்தை செய்யலாமா? என்னுடன் மாடிக்கு வாருங்கள். அதோ சூரியன் மறைந்து மேற்கில் வானம் நடத்தும் வண்ண வேடிக்கைகளை பாருங்கள். விடியலில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் இப்போதும் நடக்கும் - எதிர்மறையாக. மாலைக்குரிய கூடுதல் பெருமை வானவில். இப்போது மழை நேரம் என்பதால் அதோ அங்கே வானவில் தெரிகிறது பாருங்கள்.
இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் அவரவர் தேசக்கொடியை காலையில் மிகுந்த மரியாதையுடன் ஏற்றுவார்கள் அதேபோல் மாலையில் அவரவர் தேசக்கொடியை இறக்குவார்கள். அந்த சமயங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காததுபோல் இருக்கும். தேசியக்கொடிக்கு கிட்டும் மரியாதையை உளம் பூரித்து காண முடியும். காலையிலும் மாலையிலும் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு இயற்கைத் தாய் நடத்தும் இந்த விழாக்கோலங்கள் எனக்கு அதனையே நினைவூட்டுகின்றன.
இத்தகைய அழகிய உணர்வுகள் இனிமையாக வெளிப்படுகின்றன. மெல்லிய குரலில் பாடலாம். அழகிய கவிதைகள் புனையலாம். எனக்கு வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகள் மிகவும் பிடிக்கும். ஒரு மேகமாக தனிமையில் நான் அலைந்தேன் (I wandered lonely as a cloud) என்ற கவிதை நம்மை வானவெளிக்கே கொண்டு சென்று விடும். சிலருக்கு ஷெல்லியின் நினைவுகளும் வரும் - அதுதான் காதல் என்ற விளங்கமுடியாத விளக்க முடியாத உணர்வு. கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
சில விழாக்கள் மாலை நேரத்திற்கு பெருமை கூட்டுகின்றன. கேளிக்கைகளுக்கும் இப்போது முக்கியத்துவம் உண்டு.
மாலை என்றாலே புத்துணர்ச்சிதானே. ஒரு நாளைய நிகழ்வுகளின் தாக்கங்களின் பிடியில் இருந்து நம்மை முழுமையாக மீட்டெடுக்கும் புத்துணர்வு தருவது மாலைதான். குடும்பத்துடன் இனிமையாக நேரம் செலவிடுவதும், நண்பர்களுடன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதும் என எத்தனை அழகான தருணம் இது.
மாலை மிகவும் ரம்மியமானது என்றாலும், மனித வாழ்க்கையின் ஒப்புமை பருவமாகிய மூத்தமகன் பருவம் மிகவும் கடுமையான காலக்கட்டம் ஆகும். முப்பது வயதிற்கு மேல் அறுபது வயதிற்குள். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றுடன் எதிர்காலத்திற்கும் சேர்க்க வேண்டும். தம்மை பார்த்துக் கொள்வதுடன் இளைய பருவத்திலிருக்கும் பிள்ளைகளையும் மூத்தவயதிலிருக்கும் பெற்றோரையும் பேண வேண்டும். கிட்டதட்ட முப்பது ஆண்டுகாலம் நீ...ண்ட பருவம். எனவே யாராவது உங்களிடம் "இன்று முதல் எனக்கு முப்பது வயது" என்று சொன்னால், பிறந்த நாள் வாழ்த்துக்களை சக்தி மிக்கதாக சொல்லுங்கள்.
இதை எடுத்துக் கொள்ளுங்கள் |
இன்றைய குறிப்புகள்: மாலை நேரம், உறவுகள், காதல், அன்பு, விழா கொண்டாட்டங்கள், புதிர்கள், கதைகள்.
1. மாலை வேளை என்றாலே இயல் இசை நாடகம் உண்டல்லவா? இதோ நாடகம் பற்றிய அருமையான பதிவினை மதிப்பிற்குரிய ஐயா திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியம் அவர்கள் பதிவிட்டுள்ளார். மெல்ல மறைந்து கொண்டிருக்கும் நாடகக்கலை பற்றி படியுங்கள். நான் போட்ட நாடகங்கள். ...
2. திருமதி.இராஜராஜேஸ்வரியின் மணிராஜ் வலைப்பூவில் கண்ணைக்கவரும் புகைப்படங்கள் தசரா கொண்டாட்டத்தை விழிகளுக்கு விருந்தாக்குகின்றன. தசரா கொண்டாட்டம் - பொதுவாகவே இந்த வலைப்பூவில் காட்சிப்பதிவுகள் மனதை கொள்ளை கொள்ளும்.
3. அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை சிவாவின் வலைப்பூவில் இந்த கவிதை படியுங்கள். விழிகளிலே ஒரு மயக்கம்...!
4. தோழி.பிரஷாவின் வலைப்பூவில் கிடைத்த இந்த கவிதை இனிமையாக இருக்கிறது மௌனம். ரோஜாப்பூ கவிதைகள் அழகாக இருக்கின்றன.
5. என் வார்த்தை .. என் குரல் .. என் முகம் .. வருணனின் வலைப்பூவில் அருமையான கவிதைகள் கிட்டுகின்றன. . - இதைப் படியுங்கள்
6. குட்டிக்குட்டி கவிதைகள் மட்டும் பதிவிடப்பட்டு வரும் வலைப்பூ பிரணவனின் சில மணித்துளிகள். ஏன் என்று இந்த கவிதையை படித்தாலே புரிந்துவிடும். என்றும் என் நினைவில்
7. அன்னை தமிழ் தமிழ் விரும்பியின் வலைப்பூவில் இந்த கவிதை அழகாக இருக்கிறது. உன்மத்தமாக இனி இங்கு யாருமில்லை
8. திரு.நம்பிக்கை பாண்டியனின் எண்ணங்கள் அழகானால் வலைப்பூவில் நீ படித்த கவிதைகள் . இந்த வலைப்பூவில் கவிதைகள் கடுகு மாதிரி. சிறியதாக இருந்தாலும் காரம் குறையாது.
9. நண்பர்கள் வலைப்பூவில் சிறுகதை ஒன்று படியுங்கள். விதியின் ரேகை.
10. திரு.கறுவல் அவர்களின் வலைப்பூவில் இந்த பதிவு சிந்திக்க வைக்கிறது. படித்து சிந்தியுங்கள். இறுதிக்கணங்கள்
11. உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு உறங்குமுன் கதை சொல்ல புத்தகத்தை தேட வேண்டாம். அதற்கு மதிப்பிற்குரிய காஞ்சனா மேடம் அவர்களின் கதைகள் உதவும். சிறுவர் உலகம்
12. இது மாலை மயக்கத்தில் சிக்காத இளையவர்களுக்கு. முத்தரசுவின் முத்தான தகவல்கள் வலைப்பூவில் கணிதப்புதிர்கள் உள்ளன. போட்டுப்பாருங்கள்.
மாலை நன்கு முடிந்தது. மீண்டும் இதம் தரும் இரவு பொழுதில் சந்திப்போம். நன்றி
|
|
மாலை மட்டுமா மனம் கவரும்
ReplyDeleteஅதைச் சொல்பவர்கள் சொல்லிச் செல்லும் அழகு கூட
மனம் கவரும் என்பது தங்கள் மாலை வர்ணனையைப் படித்தாலே
நிச்சயம் புரியும்
அழகான வர்ணனை
அருமையான் அறிமுகம் வாழ்த்துக்கள்
பூக்களை அடுக்கி அடுக்கிக் கட்டப்பட்ட மாலை போல உங்கள் "மனம் கவரும் மாலை" தொகுப்புக்கள் மிக அழகாக உங்கள் கைவண்ணத்தில் வெளிவந்துள்ளது. உங்களுக்கும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDelete"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றான் நமது மகாகவி...
ReplyDeleteஅதைபோன்றே பரவிக் கிடக்கும் பல கலைகளை ஒரு கழகமாக்கி இருக்கிறீர்கள்..
தங்களின் முயற்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும் அன்புச் சகோதிரி..
"உவப்பத் தலைக் கூடி" பிரிந்தாலும் மீண்டும் மீண்டும் கூடுவோம்.
அன்புடன்,
தமிழ் விரும்பி.
மனதை மயக்கும் மாலை வேளையைப் பற்றி உங்களுக்கே உரித்தான சொற்களில் அழகுபட மொட்டை மாடிக்கு அழைத்துச்சென்று சூரிய அஸ்தமனத்துடன், அழகிய வான வில்லுடன் அனைத்தையும் சுட்டிக் காட்டி மகிழ வைத்து விட்டீர்கள்.
ReplyDeleteஸ்வீட் சாப்பிடக்கூடாத நிலைமையில் உள்ள எனக்கு நீங்கள் படத்தில் காட்டியுள்ள ஸ்வீட்களைப் பார்த்ததுமே, வாய் மட்டுமல்லாமல், மனதும் ஒரே தித்திப்பாகிப் போனது. இது எப்படி என்று திகைத்து சற்றே யோசித்துப் பார்த்தேன்.
பிறகு தான் புரிந்தது, இன்றைய அறிமுகத்தில், என் அன்புத்தோழி ஒருவரின் பதிவான ”தஸரா கொண்டாட்டம்” மும் இடம் பெற்றுள்ளது என்பது.
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அவர்களின் பதிவை தினமும் படிப்பதே எனக்கு அல்வா சாப்பிடுவது போலத் தான் இனிப்பாக உள்ளது.
மற்ற அனைத்து அறிமுகங்களும் அருமையோ அருமை.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். அன்புடன் vgk
நான் பதிவு எழுதவந்த புதிதில் பதிந்த என் சிறுகதையை மீண்டும் வாசகர்கள் படிக்கும் வண்ணம் தங்கள் தளத்தில் குறிப்பிட்டதுக்கு நன்றி.
ReplyDeleteஅதவிட நண்பர் பிரணவனின் கவிதைகளை அறிமுகப்படுத்தியதுக்கும் நன்றி எனக்கும் இவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும்
மாலைக்குரிய கூடுதல் பெருமை வானவில்
ReplyDeleteஅதைவிட இனிமையான இனிப்புகளுடன் எமது தஸரா கொண்டாட்டங்களைப் பகிர்ந்திருப்பத்ற்கு மனம் நிறைந்த நன்றிகள்..
மனம் கவரும் மாலை என்று அழகாய் மாலையின் பெருமையைச் சொல்லி பதிவர்களை அறிமுகப்படுத்தியது நன்று. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி.
ReplyDeleteகலக்கல் மாலை
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு
விடியலில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் இப்போதும் நடக்கும் - எதிர்மறையாக. மாலைக்குரிய கூடுதல் பெருமை வானவில்.
ReplyDeleteமாலை நேரத்து அழகியலை அழகாக சொல்லியுள்ளீர்கள்!
என் வலைபதிவை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்!
அருமையான அறிமுகங்கள், தொடருங்கள், தொடர்கிறேன்
ReplyDeleteமனம் கவரும் மாலை பற்றிய தொகுப்பு மாலை அருமை சகோதரி. மாலை போல அமைதியாகவும் இருந்தது. பதிவர்களின் வலகளையும் பார்க்கும் எண்ணம் உருவானது. வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteVetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
மாலை-யில் மாலை மலர்களாய் மலர்ந்த பதிவர்களுக்கு நன்றி! வலைச்சர மாலை தொடுத்த உங்களுக்கு புகழ் மாலை!
ReplyDeleteமாலைப்பொழுதின் வசீகரம்
ReplyDeleteமனதில் நிலைக்கும் வகையில்
அழகிய விளக்கத்துடன்
பதிவர்கள் அறிமுகம்..
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என்னுடைய வலைப்பூவைப் பற்றி எழுதியமைக்கு நன்றி சாகம்பரி.
ReplyDelete//காலையிலும் மாலையிலும் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு இயற்கைத் தாய் நடத்தும் இந்த விழாக்கோலங்கள்//
ReplyDeleteமிகவும் அழகான விளக்கம் மயக்கும் மாலைப்பொழுதுக்கு,மேடம்.
அருமையான அறிமுகங்கள்,வாழ்த்துக்கள்.
தொடர்ந்து கருத்து பதிந்து ஊக்குவித்ததற்கு நன்றி ரமணி சார்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
ReplyDeleteமிக்க நன்றி மதுரைத்தமிழன்.
தங்களின் முயற்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும் அன்புச் சகோதரி..
ReplyDelete//அழகிய தமிழில் கருத்து பதிந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
இனிப்புகளைப்போலவே சுவைமிக்க கருத்துரை பதிந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி VGK சார்.
ReplyDeleteமிக்க நன்றி K.s.s.Rajh.
ReplyDeleteபிரணவன் தினமும் மாலையில் மதுரை தெப்பக்குளத்தில் அமர்ந்து கொண்டு 'நெலா..' என்று ஆகாயத்தை பார்த்து விளித்துக் கொண்டிருப்பதற்கு யார் காரணம் என்பதும் புரிந்துவிட்டது. (பிரணவன் என் மகனின் இனிய சினேகிதனும்கூட)
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி திரு.வெங்கட் நாகராஜ்
ReplyDeleteதங்களின் வருகைக்கு மிக்க நன்றி திரு.ராஜா. உங்களின் இன்றைய பதிவு சிரிக்க வைத்துவிட்டது.
ReplyDeleteமாலை நேரத்து அழகியலை அழகாக சொல்லியுள்ளீர்கள்! //மிக்க நன்றி திரு.நம்பிக்கை பாண்டியன்.
ReplyDeleteதசரா கொண்டாட்டங்களை கண் முன்னே நிறுத்தியது அந்த அழகிய பதிவு. வருகைக்கு நன்றி அன்புத் தோழி ராஜேஸ்வரி
ReplyDeleteதொடர்ந்து கருத்து பதிந்து ஊக்குவித்ததற்கு நன்றி திரு.சூரியஜீவா. (திரு.அன்புதேவனின் நேற்றைய பின்னூட்டத்தில் தெரிவித்திருந்த நன்றி உங்களுக்கு உரித்தாகுக.)
ReplyDelete@ kavithai (kovaikkavi) said..
ReplyDeleteதங்களின் தொடர் வருகை என்னை மகிழ்விக்கிறது. அதேபோல் தங்களின் கருத்துரையால் மற்ற வலைப்பூக்களும் சிறப்புறட்டும். மிக்க நன்றி சகோதரி.
மாலைக்கு மிக்க நன்றி மாதவி. தங்களின் வருகைக்கும் நன்றி.
ReplyDeleteஎங்கள் வீட்டில் சிறு பிள்ளைகள் இல்லை. இருந்தாலும் உங்கள் கதைகளுக்கு நான் ரசிகை. மிக்க நன்றி மேடம்.
ReplyDeleteதொடர் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ராம்வி.
ReplyDeleteஇயற்கையின் மாலை நேர வர்ண ஜாலங்களை, அழகுகளை இயற்கைத்தாய் சூரியனுக்கு செய்யும் விழாக்கோலங்களாய் குறிப்பிட்டதும் அதற்கு வாகாவில் இரு நாட்டு வீரர்களும் தத்தம் தேசீயக்கொடிகளுக்கு வணக்கம் செலுத்துவதை உவமையாய் குறிப்பிட்டதும் ஒரு அபூர்வமான கற்பனை சாகம்பரி!
ReplyDeleteஎனக்கும் பல சமயங்களில் மாலை நேர அழகுகளைக் காணும்போது, Wordsworthன் கவிதையான Daffodils நினைவுக்கு வரும். ஆனால் உங்களின் அழகான கற்பனை எழுத்தைப் படித்த போது ' மாலைப் பொழுதின் மயக்கத்திலே' என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது.
ரொம்பவும் அழகான எழுத்து உங்களுடையது!
அறிமுகம் பெறப்பட்ட அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!!
நல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவோர்ட்ஸ்வொர்த்தின் கவிதை பற்றி தாங்களும் குறிப்பிட்டத்து மகிழ்வைத் தருகிறது மனோ மேடம். தங்கள் கருத்துரைக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி திரு.சண்முகவேல்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி ...
ReplyDeleteஉங்களுக்கும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏனைய அனைத்து பதிவாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு வருவதற்கு மன்னிக்க. எனது கவிதைகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteநீங்கள் அறிமுகப்படுத்திய பதிவாளர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பான தொகுப்பைத் தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு சாகம்பரி, மாலை இத்தனை அழகாக் இருக்கும் என்கிற சித்திரம் நானும் மாலையில் வெளியே வரமாட்டேனா என்று ஆசைப்படவைக்கிறது.
ReplyDeleteஅருமையான உழைப்பு சேர்ந்து வலைச்சரத்தை உருவாக்குகிறீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா.