07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 22, 2011

கவிதை பந்தலில் இளைப்பாறலாம்

வணக்கம் நண்பர்களே நீங்கள் படித்துக் கொண்டு இருப்பது உங்கள் வலைச்சரம்.தொகுத்து வழங்குவது உங்கள் பிரபு.  என்றுமே கவிதை என்பது நம் மனதுக்கு நெருக்கமானது. கவிதைப் பந்தலில் இளைப்பாறி குளிர்ச்சியாய் கவிதை படித்திடும் நேரம் இது. 

முதலில் நீங்க விஜயம் செய்வது எங்க ஊர் முசிறிக்கு, காவிரிக் கரையில் கணினியில் கவிதை குளிக்கும் விஜய் அண்ணாவின்  பயணம் என்ற கவிதை இன்னும் மனதில் நிற்கிறது ஒவ்வொரு பயணத்திலும். யதார்த்தக் கவிதைகளை இவர் சொன்ன விதம் தீபாவளி பதார்த்தமாய் இனிக்கிறது.   ஆரம்பத்தில் புரியாத கவிதைகளை எழுதியவரது இன்றைய கவிதைகள் மனதை விட்டு பிரியாது நிற்கின்றன. பழையதுக்கும் நேரில் பார்த்து அர்த்தம் கேட்க வேண்டும்.


ராஜா சந்திரசேகர் அவர்களின் வலைப்பூ இரண்டும் கவிதையாய் பூத்துக் கிடக்கிறது.அவர் எழுதிய, அவர் கவிதை அவர், நம் இன்றைய வாழ்க்கையை நாலே வரியில் சொல்கிறது.  நம் விவசாயி பற்றி  யாருக்கும் தெரியாமல் இவர் எழுதிய கவிதை, எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது. சில கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள இவரைப் பற்றி படிக்க இங்கே 


அடுத்து செல்வது கரூர் பிரபாகரனிடம் காதல் 25 என காதலில் கொஞ்சுபவர் நாம் தமிழர்  என்று நமக்கு யார் தமிழர் என்று உணர வைக்கிறார்.அதிகமாக எழுதமாட்டார், எழுதினால் அதிக முறை படிக்க வைப்பார்.  


சென்னை உழவனின் நெற்குவியலடுத்து துடியான சாமியென சாமி பேசுவதை சொல்பவர், மியாவ் என்று ரசிக்கவும் வைக்கிறார். ஆனந்த விகடன்,கல்கி என மேலும் இருக்கிற இதழ்களில் எல்லாம் வந்து விட்டது. இனி எதாவது புது இதழ் வந்தால் இவரிடம் சொல்ல மறக்காதீர்கள். இவரது கவிதைகள் அந்த இதழுக்கே அழகு. 


அடுத்தது சகோ நாகப்பட்டினம் தமிழ்வாசல் இமலாதித்தன் எனக்கொன்றும் தெரியாது என்று தகப்பனாய் பாசம் கொள்ள வைக்கும் இவர், பிச்சைப் பாத்திரம்  என்றெழுதி இந்திய பொருளாதாரத்தின் இடத்தைக் காட்டுகிறார். இவரின் கிறுக்கல்கள் எல்லாம் கிறு கிறுக்க வைக்கின்றன. 


அடுத்து நாம் போவது இலங்கைக்கு கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களின் கவிதை படிக்க. குயில்கள் இப்போது குரைக்கின்றன மனத்தைக் கரைக்கிறார். விருதுகள் பெறும் எருதுகள் என வியக்கும் வண்ணம் எழுதி உள்ளார். பல கவிதைகள், திரைப்பாடல்கள் எழுதி உள்ள இவரைப் பற்றி அறிய இங்கே செல்லவும் 


அடுத்து நாம் செல்வது மதுரைக்கு நம்பிக்கை பாண்டியன் என பெயரிலேயே நம்பிக்கை தந்து விட்டு படிக்க சொல்கிறார். முதலில் குழந்தைப் பருவ அழகிய பொய்களை அடுக்குபவர். அடுத்து கவிதைகளாகவும் இருக்கலாம் என்று சொல்லி நம்மை கவர்கிறார். அதிகமாக கவரப்படாமல் அருமையாக எழுதும் நண்பர் இவர்.


மீண்டும் சென்னை வந்தால் நம்ம ஷீ-நிஷி சிந்திக்க வைக்கும் கவிதை சொல்கிறார். இவர்கள் தவழும் குழந்தைகள் என என மாற்றுத் திறனாளிகள் பற்றி மனதில் பதிய வைக்கிறார். வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் என்று கேட்பது நமக்கு நியாயமாய் தான் படுகிறது.  ஈகரை கவிதைப் போட்டிக்கு இவர் எழுதிய கவிதை இரும்பிலே ஒரு சேலை முதல் பரிசை பெற்றுள்ளது.


காதல் தளும்பும் நம்ம மதுரை பிரணவன் நீயே சொல் என்று அணை கட்டுகிறார் , கூடவே புகைப்படத்திடம் காதல் சொல்லி புலம்புகிறார் . சில மணித்துளிகள் படிக்க சென்றால் சில மணி நேரங்கள் படிக்க வைக்கிறார்.


சகோதரி திருவண்ணாமலை கயல்விழியின் க"விதை"களில் பேசித்தீர்த்தல் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு. மகிழ்ச்சி பற்றி இவர் சொன்ன போது ஒரு வெறுமை சிரிப்பு வருகிறது இந்த இயந்திர வாழ்வை நினைத்து. "திண்ணை" இணைய இதழில் இவர் எழுதிய கவிதைகளில்  என்னைக் கவர்ந்தவை. மீண்டும் ஒரு முறை  மற்றும் அந்த ஒரு விநாடி


ரவி ட்ரீம்ஸ் தளத்திற்கு சென்றால் இந்த தொழில்நுட்ப மனுஷன் கவிதையில் மயக்கி வைக்கிறார் நம்மை. இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள் என்று இன்றைய வாழ்க்கையை சொல்கிறார், இவரது பழைய பேப்பரும், புதிய பேப்பரும் இன்றும் வாசம் தருகின்றன. படிக்கும் போதே கவிதை எழுதத் தோணுதா? அப்படியே ரவியின் தமிழகத்தில் கவிதை ரசனை படித்து விட்டு எழுதுங்கள். சில விஷயங்களில் முரண்பட்டாலும் இதுவே இன்று உண்மை.

இப்பவும் எழுதத் தோணுதா? முதலில் ஒரு போட்டியில் பங்கேற்று கவிதைகளை ஆரம்பியுங்கள் ஈகரை நடத்தும் 30,000 ரூபாய் பரிசு கவிதை போட்டியில் கலந்து வெற்றி பெற வாழ்த்துகள்.  

தொகுத்தது, 
பலே பிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

51 comments:

  1. தம்பியின் அன்பை தலை வணங்கி ஏற்றுகொள்கிறேன். இந்தமுறை சந்திக்க முடியவில்லை, அடுத்தமுறை கட்டாயம் சிந்திப்போம்

    நன்றி

    விஜய்

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம் பிரபு தொடர்ந்து கலக்குங்க

    ReplyDelete
  3. கவித்துவமான அறிமுகங்களுக்கு நன்றி சகோ.!

    ReplyDelete
  4. //பழையதுக்கும் நேரில் பார்த்து அர்த்தம் கேட்க வேண்டும்.//

    விஜய் கவிதைகள் படித்து யோசித்து யோசித்து கடைசியில் நானாக ஒரு அர்த்தம் எடுத்துப்பேன். நேரில் அர்த்தம் கேட்க போறப்போ என்னிடமும் சொல்லுங்க...நிறைய சந்தேகம் இருக்கு. :))

    கவிஞர்களை அருமையா அறிமுகபடுதியாச்சு இனி படிக்க வேண்டியதுதான் எங்க வேலை.

    இதில் ராஜா அவர்களின் கவிதை தொடர்ந்து படிப்பேன்.இமலாதித்தன் கவிதை படிச்சி வியந்திருக்கிறேன். மற்றவர்கள் கவிதைகளை இனி படித்துவிடுகிறேன்.

    ReplyDelete
  5. கவிஞர்களின் கவிதைகள் அழகான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ரசணையோடு அறிமுகப்படுத்தியுள்ளீர்...

    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள்.

    கவிதைப்பந்தலில் இளைப்பாறி
    இளநீர் சீவிக்குடித்து இன்புற்றோம்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    தங்களுக்குப் பாராட்டுக்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  8. நட்பாக அறிமுகத்திற்கு நன்றி பிரபு,உங்கள் வழியே நானும் பல பதிவர்களை அறிந்துகொண்டேன்!

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே..

    கவிஞர்களை தொகுத்த விதம் கலக்கல்

    அறிமுகங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  10. அறிமுகங்களை பின் தொடர்கிறேன்

    ReplyDelete
  11. கவிஞரே.... கவிதை பற்றிய தொகுப்பில் ஊர் சுத்திக் காட்டிங்க. அதான் ஒவ்வொரு ஊரிலும் கவி பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிங்களே..... அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  13. அறிமுகம் செய்பவர்க்கும்
    அறிமுகம் ஆகிறவர்களுக்கும்
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. அன்பும் நன்றியும் தோழர்!...

    ReplyDelete
  15. @ விஜய்

    கண்டிப்பாக அண்ணா

    ReplyDelete
  16. பதிவு அருமை சகா, உங்களுக்கு என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும். . .

    ReplyDelete
  17. @ சௌந்தர்

    நன்றி சௌந்தர்

    ReplyDelete
  18. @ Abdul Basith

    நன்றி சகோ.

    ReplyDelete
  19. @ Kousalya

    கண்டிப்பாக அக்கா.

    ReplyDelete
  20. @ Lakshmi

    நன்றி அம்மா

    ReplyDelete
  21. @ கவிதை வீதி... // சௌந்தர் //

    நன்றி சகோ.

    ReplyDelete
  22. @ வை.கோபாலகிருஷ்ணன்

    நன்றி ஐயா

    ReplyDelete
  23. @ நம்பிக்கைபாண்டியன்

    நன்றி சகோ.

    ReplyDelete
  24. @ ஆமினா

    ஹா ஹா ஹா அதுதான் முயற்சி செய்தேன் ஆனால் வேலை செய்யவில்லை.

    ReplyDelete
  25. @ சம்பத் குமார்

    நன்றி சகோ.

    ReplyDelete
  26. @ suryajeeva

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  27. @ தமிழ்வாசி பிரகாஷ்

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  28. @ வெங்கட் நாகராஜ்

    நன்றி சகோ.

    ReplyDelete
  29. @ ஷைலஜா

    நன்றி சகோ.

    ReplyDelete
  30. @ middleclassmadhavi

    நன்றி அக்கா.

    ReplyDelete
  31. @ "உழவன்" "Uzhavan"

    நன்றி சகோ. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  32. நல்லதொரு அறிமுகம்.. கவிதை தாகத்தை தணித்த தம்பி பிரபுகிருஷ்ணாவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  33. @ ராஜா சந்திரசேகர்

    நன்றி சகோ. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  34. @ தங்கம்பழனி

    நன்றி சகோ.

    ReplyDelete
  35. Nalla arimuhangal prabhu.. Valthukkal..

    ReplyDelete
  36. கவிதைகள் அறிமுகம் அசத்தலாக உள்ளது. அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்குப் பாராட்டுகள். ஒவ்வொரு தளமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி பிரபு.

    ReplyDelete
  37. @ பிரணவன்

    நன்றி சகோ. தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.

    ReplyDelete
  38. @ பதிவுலகில் பாபு

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  39. @ நேசமித்ரன்

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  40. @ கீதா

    நன்றி சகோ.

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. அறிமுகத்திற்கு நன்றி சகோ!!

    ReplyDelete
  43. என்னை அறிமுகம் செய்து வைத்த இனிய நண்பர் பிரபுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி ! அன்புடன் அனாதைக்காதலன்

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. @ கயல்விழி

    நன்றி சகோ தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  46. @ Karur Prabha

    தொடர்ந்து கவிதை எழுதுங்க பாஸ்

    ReplyDelete
  47. @ FOOD

    நன்றி அப்பா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது