ஊருக்கு புதுசாம்ல
➦➠ by:
பலே பிரபு,
பிரபு கிருஷ்ணா
தினம் தினம் எத்தனையோ புதுமுகங்கள் பதிவுலகத்தில் . ஒவ்வொரும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சிலர் எல்லோருக்கும் புதுமுகம், சிலர் எனக்கு புதுமுகம்.
முதலில் சகோ அருண் பிரபு. இப்போது "ராணா" படத்தில் உதவி இயக்குனராய் இருக்கிறார். அதிகமாக எழுதவில்லை இருந்தாலும் அனைத்தும் அருமை. இவர் எழுதிய ஏழாவது அறிவு புத்தகம் பற்றிய பதிவு மிக மிக அருமை. அத்தோடு கத்துக் குட்டி யும் கூட அருமை. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பற்றிய பதிவு எல்லோருக்கும் பிடிக்கும்.
நீங்கள் இசைப் பிரியரா? அது பற்றி எல்லாம் படிக்க ஆசையா? முதலில் செல்ல வேண்டியது அண்ணன் லலிதா ராம் அவர்களின் கமகம்.இவர் Gandharva Ganam என்ற ஆங்கில புத்தகமும் எழுதி உள்ளார். இவரின் அதிசய அகிரா அட போட வைக்கிறது. இவரைப் பற்றி அறிய இங்கே படிக்கலாம்.( மற்றபடி இவரின் எந்தப் பதிவையும் நான் இன்னும் படிக்கவில்லை என்று ஒத்துக்கொள்வது எனக்கு உத்தமம். )
தமிழ் ட்விட்டர்கள் நடத்தும் தமிழ் ட்விட்டர்கள் நல்ல முயற்சி. இங்கே எல்லாமே ட்விட்டர், ட்விட்டர், ட்விட்டர் தான். எனக்கு பிடித்தவை #GreenLies பச்சைப் பொய்கள் – 2, இன்னொரு அருமை 140 எழுத்தில் கதை முயற்சி, பட்டையை கிளப்பி இருக்கிறார்கள் #140Story கீச்சுக் கதைகள்.
நண்பர் cool , எலெக்ட்ரிகல் மோட்டார் மற்றும் இதர அதே வகை பதிவுகளை எழுதுகிறார். ரொம்ப படிப்ஸ் போல இவர். (நம்ம மண்டைல ஒன்னும் ஏறல) , இன்னொரு CoolBlog என்ற வலைப்பூவில் இந்தியா பற்றி நிறைய சொல்கிறார். இது மட்டும் இன்றி Gallery, cool-ஓவியம் என்ற இரண்டு வலைப்பூக்களில் எழுதுகிறார்.
சகோ rAgu bluffs ரகுபதி, 2009-இல் இருந்தே பதிவுலகில் இருக்கிறார். ஆனால் அதிகமாக பதிவுகள் எழுதவில்லை. இரண்டு தமிழ் பதிவுகள் மட்டும், அதில் ஏன் வேண்டும் ஈழம்-1 எல்லோரும் அறிய வேண்டியது. மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம்? நல்ல பதிவு.
ஒவ்வொரு நாளின் சிறந்த பத்து தமிழ் ட்வீட்களை படிக்க இது தான் ஒரே வழி Daily Top 10 Tamil Tweets. அட அட அட "சந்துல சிந்து பாடுறது"னா இதுதானோ என்னும் அளவுக்கு சிறந்த ட்வீட்கள் படிக்கலாம்.
புஷ்பராஜ் அவர்களின் என் பாதிப்புகள் இங்கே பதிப்புகளாய்!!!! எளிமையான நடையில் கவிதை எழுதுகிறார். நான் தொலைந்திருந்த அந்த நிமிடம்!, இங்கே புகை பிடிக்கக் கூடாது!!! போன்றவை ரசிக்க வைத்தன.
குழந்தைப் பையன் எனும் பிரிட்டோ எழுதும் சாரல் இதமாய் இருக்கிறது. ரயில் பயணத்தில்.. கனவு அருமை. தெற்கு வீதி ஐய்யனார் அவர்களிடம் இந்தக் கேள்விகள் உங்களுக்கும் இருக்கலாம்.
அடுத்து K7 பக்கம் கேசவன். நாங்களும் பிரபல ப்ளாக்ரா ஆவோம்ல என்ற ஒரு பதிவு எழுதி இருகிறார்அதற்கே 28 பேர் பின்தொடர்கிறார்கள். நிஜமாவே பிரபலம் தான் இவர்.
புதுமுகங்களை நல்லா கவனிக்க வேண்டியது உங்க கடமை.
தொகுத்தது
பலேபிரபு (எ) பிரபு கிருஷ்ணா
|
|
இன்றைய அறிமுக ம்புது முகங்களா? வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDeleteபுதுமுகங்களின் படையெடுப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
பல புதுமுகங்களை அறிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ.!
ReplyDeleteவித்தியாசமான அறி(புது)முகங்கள் .நன்றி!
ReplyDeleteபுதுமுக அறிமுகங்கள் சிறப்பாக உள்ளன. தலைப்பும் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். vgk
அனைவரையும் பின் தொடர ஆசை ஆனால் ரகு bluff ஏமாற்றி விட்டார்...
ReplyDeleteபுதுமுக அறிமுகத்திறகு வாழ்த்துகள்..
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி!!! தொடர்ந்து இணைந்திருப்போம்
ReplyDeleteஎன்னை வலைசரத்தில் ஏற்றிய நண்பருக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDelete@ Lakshmi
ReplyDeleteநன்றி அம்மா.
@ கவிதை வீதி... // சௌந்தர் //
ReplyDeleteநன்றி சகோ.
@ Abdul Basith
ReplyDeleteநன்றி சகோ.
@ கோகுல்
ReplyDeleteநன்றி சகோ.
@ வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteநன்றி ஐயா.
@ suryajeeva
ReplyDeleteநன்றி சகோ.
@ இராஜராஜேஸ்வரி
ReplyDeleteநன்றி சகோ.
@ புஷ்பராஜ்
ReplyDeleteநன்றி சகோ. தொடர்ந்து எழுதுங்கள்.
@ குழந்தபையன்
ReplyDeleteநன்றி சகோ. தொடர்ந்து எழுதுங்கள்.
@ விச்சு
ReplyDeleteநன்றி சகோ.
புதுமுகங்களை வரவேற்கும் புதியு யுக்தி.
ReplyDeleteபிரபு,
ReplyDeleteஇன்றுதான் பார்த்தேன்.
வலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றி!
அன்புடன்
லலிதா ராம்
வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா...
ReplyDeleteஎன் பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்!,பல காரணிகளால் தொடர்ந்து எழுத இயலவில்லை!,என் பழைய பதிவுகளும் இழந்துவிட்டேன். இப்போது புதிதாக எழுத தொடங்குகிறேன். உங்கள் ஆதரவு தேவை! நன்றிகள்!
ReplyDelete