சுயம் - ஒரு அறிமுகம்
➦➠ by:
அகல்விளக்கு
வலைச்சர வாசகர்களுக்கு வணக்கங்கள். உண்மையில் இன்று மிகப்பிரம்மிப்பாக உணர்கிறேன். ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டது. 2009 ஆகஸ்டு மாதத்தில் அகல்விளக்கு என்ற பெயரில் ஒரு வலைப்பூ-வினைத் தொடங்கினேன். எத்தனையெத்தனை நண்பர்கள், வாசகர்கள், முகமறிந்த, அறியாத நலவிரும்பிகள், தட்டிக்கொடுத்து நல்வழிப்படுத்தும் அன்பு உள்ளங்கள்... அனைத்திற்கும் காரணம் இந்த தமிழ் வலைப்பூ உலகம்தானே.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தமிழ் வலையுலகில் மகத்தானதொரு சேவையை தொடங்கி வைத்த திரு.சிந்தாநதி அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூர்வது முக்கியம். பொருத்தமான நேரத்தில் இதைத் தொடங்கி வைத்த அவருக்கும், அதனை சிறப்பாக தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் வலைச்சர நிர்வாகத்தினருக்கும் நிச்சயம் தமிழ் வலைப்பூ உலகம் கடமைப்பட்டிருக்கிறது...
இனி என்னைப் பற்றி எழுதுவதற்கு முன்....
சுயம் என்பதே என்றும் மாறாதது என்பதால் :-) முன்பு இப்பணியை ஏற்றபோது எழுதிய அறிமுகப் பதிவு...
********************************************
நான் என்பதாக அறிமுகம் செய்து கொள்ளப் பயன்படுத்துவது "ராஜா ஜெய்சிங்". எம் அம்மையும் அப்பனும் ஈன்ற அவர் உயிர்க்கு இட்ட பெயர்தான் அது. ஒத்த விசைகள் கொண்ட காந்தப்புலம் ஒன்றையொன்று விலக்குவதுபோல், ஒன்றோடொன்று வேறுபட்ட இருவேறு சமூகங்களை இணைக்கும் ஒற்றை இரும்புப்புள்ளியாகப் பெற்றெடுத்தனர்.
அடர்ந்த மலைக்காடுகளிலும், அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மென்தென்றல் காற்றுடனும் என் சிறுவயதுப் பருவத்தை தொலைத்தேன். பிழைப்புக்காகப் பெயர்ந்த சமூகத்தின் ஓர் அங்கமாக, வாழ்வை எதிர்நோக்கியபடி தற்போது நகரவாசம். மலையின் வனப்புகளை நெஞ்சில் நிறைத்து நடமாடிக்கொண்டிருக்கும் நகரத்து மனிதர்கள் வெகுசிலரில் நானும் ஒருவன்.
பகல்முழுதும் அலைந்து திரிந்து பின் பட்டியில் அடைபடும் ஆடுகளின் மனதையொத்தது என் நிலை. மீண்டும் கிராமங்களில் உறைந்து, உறக்கம் கொள்ளும் தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சீவன்.
என் எண்ணங்களை வலையில் பதிக்க எண்ணியபோது தோன்றியதுதான் இந்த அகல்விளக்கு எனும் புனைப்பெயர். ஒற்றை மண்சுவர் தாங்கிய மாடம் சூழ எழுப்பிய ஓர் குடிசை. அங்கு நித்தமும் நிறைந்தது அகலின் ஒளி வெளிச்சம். அந்த வெளிச்சத்தில்தான் பிழைத்துக் கிடந்தது என் பள்ளிப்பிராயம்.
பள்ளிப்பிராயம் கடந்த பின் பெயர்ந்து விட்ட சில நண்பர்களை மீண்டும் சேர்த்த பெருமை இந்த இடுகைக்கு உண்டு - என் அவள்.
வலையுலகிலும், மின்னஞ்சல்குழுமங்களிலும் எனக்கொரு நற்பெயரைப் பெற்றுத்தந்த இன்னொரு இடுகை - வசனக்கோயில்.

சமீபத்திய(?) இடுகை - யாக்கை
என் சில கவிதைகள்...
என் சில கவிதைகள்...
*******************************************
உண்மையில், சீனா ஐயா வலைச்சரத்தில் ஆசிரியராக அழைப்பு விடுத்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. காரணம், முன்பு ஒருமுறை ஆசிரியர் பணிக்கு இசைந்தபோது எதிர்பாராத நிகழ்வுகளினால் தொடர இயலாமல் போயிற்று. இப்போது அந்த பணியை நிறைவு செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதைக் கருதுகிறேன். இந்த அரிய பணியை மேற்கொள்ளுமாறு மீண்டும் பணித்த சீனா ஐயா அவர்களுக்கும், ஆதரவு தரப்போகும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் நன்றிகள்.
நான் ரசித்த பதிவுகளை நாளை முதல் பார்க்கலாம்.
நன்றி...
|
|
பகல்முழுதும் அலைந்து திரிந்து பின் பட்டியில் அடைபடும் ஆடுகளின் மனதையொத்தது என் நிலை. மீண்டும் கிராமங்களில் உறைந்து, உறக்கம் கொள்ளும் தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சீவன்.
ReplyDeleteஎன் எண்ணங்களை வலையில் பதிக்க எண்ணியபோது தோன்றியதுதான் இந்த அகல்விளக்கு எனும் புனைப்பெயர். ஒற்றை மண்சுவர் தாங்கிய மாடம் சூழ எழுப்பிய ஓர் குடிசை. அங்கு நித்தமும் நிறைந்தது அகலின் ஒளி வெளிச்சம். அந்த வெளிச்சத்தில்தான் பிழைத்துக் கிடந்தது என் பள்ளிப்பிராயம்.
////
சூப்பர் வாழ்த்துக்கள்:)
வருக வருக நண்பரே..
ReplyDeleteதாங்கள் தொடுக்கும் வலைச்சரம் காண
ஆவலாய் உள்ளோம்....
சுய அறிமுகம் நன்று நண்பரே...
வாழ்த்துகள். தங்களை பற்றி மிக குறைவாக, எளிமையாக கூறி உள்ளீர்கள். பஸ்ஸில் உங்களை பார்த்த நினைவு. வாரம் முழுதும் அசத்துங்கள்
ReplyDeleteshort and sharp introduction.
ReplyDeleteஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே... இந்த வாரம் முழுதும் புதியதாய் பதிவுச்சரங்கள் தொடுக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு
பழமுண்டு விதையிட்ட பதிவர்க்கு இந்த இளம் கிழத்தின் வாழ்த்துக்கள்....
ReplyDeleteதங்கள் வலைச்சர பணி சிறப்பாக அமையும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை
ReplyDelete//மீண்டும் கிராமங்களில் உறைந்து, உறக்கம் கொள்ளும் தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சீவன். //
ReplyDeleteஇருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில். இழந்த ஏதோ ஒன்றை நினைவுறுத்தி மருந்திடும் இரவுகள். இந்த கருத்தில் நான் ஒப்புகிறேன். அருமையான அறிமுகங்களை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
ஆஹா.. அருமையான அறிமுகம் ராசா... ரசனையான எழுத்து.. இவ்வாரம் இச்சரம் சிறக்கட்டும்... வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல அறிமுகம்.... வாழ்த்துகள் நண்பரே....
ReplyDeleteஅன்பின் ராஜா ஜெய்சிங்
ReplyDeleteஅருமையான சுய அறிமுகம். பள்ளிப் பிராயத்தினையும் - அதனைக் கழித்த - களித்த கிராமச் சூழ்நிலையும், இன்றும் நினைவில் பசுமையாய் இருப்பதையும் - மீண்டும் அச்சூழ்நிலை கிடைக்காதா என ஏங்குவதும் .......... அருமை அருமை.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அறிமுக இடுகையில் அழகான தமிழ்வார்த்தைகளின் கோர்வையில் மதி மயங்கித்தான்போகிறேன். கொள்ளைகொள்ளும் அழகு கிராமபுறத்தில் மட்டுமல்ல.. அதை வார்த்தைகளில் வர்ணிக்கும் உங்கள் இடுகையிலும் காண்கிறேன்.. தொடர்ந்து சிறப்புற எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..!! தங்களின் அடுத்த அறிமுக இடுகைகளுக்காக காத்திருக்கிறோம் ஆவலுடன்..!!!
ReplyDelete