விச்சு அறிமுகம்
➦➠ by:
விச்சு
கனியிடை ஏறிய
சுளையும்- முற்றல்
கழையிடை ஏறிய
சாறும்
பனிமலர் ஊறிய
தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய
சுவையும்
நனிபசு பொழியும்
யாலும் - தென்னை
நல்கிய குளிர் இள
நீரும்
இனியன் என்பேன்!
தமிழை...
என் உயிர் என்பேன்
கண்டீர்!
- பாவேந்தர் பாரதிதாசன்
அனைவருக்கும் வணக்கம். வலைச்சரத்தினை தொடுக்க என்னை அழைத்த மதிப்பிற்குரிய சீனா அவர்களுக்கு முதலில் எனது நன்றி. கடந்த சில வருடங்களாகத்தான் வலைப்பதிவினைப் படித்துவருகிறேன்.ஜாக்கிசேகரின் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் அதிகமாக விரும்பி படித்த ஒன்று. பின்பு அறிவியல், கதை,கட்டுரை, நகைச்சுவை எனத் தேடி படிக்க ஆரம்பித்தேன். நாமும் கொஞ்சம் எழுதலாமே எனப் பதிவுகள் எழுத ஆரம்பித்தது கடந்த செப்டம்பர் மாதம்தான். சுனாமி போன்று எழுதலாம் என நினைத்துதான் அலையல்ல சுனாமி என்ற பெயரினை வைத்தேன். பின்புதான் தெரிந்தது 'அலை' கூட எழுத்தில் வரவில்லை. இருந்தாலும் என்னுடைய பிளாக் மற்றும் வெப் என்ற மொக்கையான பதிவிற்கு கவிதை வீதி... // சௌந்தர் அவர்களின் "மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்" என்ற அன்பான திட்டு என்னை எழுத மேலும் உற்சாகப்படுத்தியது.
சமீபத்தில் நிரூபன் அவர்கள் நாற்று மூலம் என்னை அறிமுகப்படுத்தினார். மேலும் வலைச்சரத்தில் கோகுல் , வீடு சுரேஷ்குமார் , திருமதி சாகம்பரி ,ஆமினா , மிடில் கிளாஸ் மாதவி போன்றோர் என் பதிவுகளை அறிமுகப்படுத்தியது என்னை மேலும் உற்சாகமூட்டி எழுதத் தூண்டியது.
பாராட்டுக்கள்தானே ஒரு மனிதனை மேலும் மேலும் உற்சாகமூட்டும். சகோதரி ராஜி லீப்ஸ்டர் விருதினையும் யுவராணி தமிழரசன் Versatile Blogger என்ற விருதினையும் கொடுத்து கவுரவப்படுத்தினார்கள்.
சுயபுராணம் போதும் என்று அலுப்பவர்களுக்கு என்னுடைய சிறந்த பதிவாக நான் கருதுவதனைத் தொகுத்துத் தருகிறேன்.போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் என்ற எண்ணத்தில் தாவரவியல் வினாவிடைகள் என்ற தொடர்பதிவு எழுதினேன். பின்பு குழந்தைகள் என்றாலே நாம் அடிக்கடித் தருவது அட்வைஸ்தானே! அவர்களுக்கு அட்வைஸ் வேண்டாம் ஐடியா கொடுங்கள் எனக் கேட்டுக்கொண்டேன். இந்தப் பதிவிற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. பதிவு ஆரம்பித்த புதிதில் என்னுடைய நண்பர் இராஜை நந்தனின் கவிதைகளை அவரின் அனுமதியுடன் வெளியிட்டேன்.
இந்திய நேரம் கணக்கிடுவது பற்றிய குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். அதனைத் தமிழில் தரலாம் ன்ற எண்ணத்தில் இந்தியத் திட்ட நேரம் கணக்கிடுவது பற்றியும், கிமு கிபி என்பது நிறைய மாணவர்களுக்கு சின்ன சின்ன குழப்பங்களை எற்படுத்தும்.அதனையும் ஒரு பதிவாக எழுதினேன்.நானும் ஒரு பட்டதாரி ஆசிரியர் என்பதால் நான் எழுதியவற்றில் அதிக வரவேற்பினைப் பெற்ற ஆசிரியர்களுக்குப் பயன்படும் ஒரு தொகுப்பினை ஆசிரியர்களுக்கு தேவையான பதிவின் மூலம் தொகுத்து வழங்கினேன்.
தமிழ்நாட்டில் கல்விமுறை குழப்பம் இன்னும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. தற்போதைய கல்விமுறை என்ன என்பதே அதிகம்பேருக்குத் தெரியாது. தொடக்கப் பள்ளிகளில் தற்போதைய கல்விமுறை சிறந்ததா? இல்லையா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
கல்லூரியில் படிக்கும்போது கவிதை எழுத முயற்சித்து வெற்றியும் கண்டுள்ளேன். ஆனால் நண்பர்கள் மட்டும்தான் அதனைப் படித்துப் பார்ப்பார்கள். வலைப்பதிவு எழுத ஆரம்பித்துவிட்டு கவிதை எழுதாமலிருந்தால் எப்படி? கூகுளில் கிடைத்த சில படங்களுடன் செல்லின்றி அமையாது உலகு என்ற கவிதையும் தனித்து விடப்பட்ட முதியவர்களின் பார்வையிலும், அதிகமாகப் பெருகிவரும் 'செல்போன் டவர்களை' பற்றியும் மரங்கள் என்ற கவிதை, மனைவியைப் பற்றிய கற்பனையில் மிதக்கும் கனவிலும் நீ . இன்றைய அவசர உலகத்தில் எல்லாமே அவசரம்தான் .ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் இல்லாமல் இருக்குமா?
எங்கள் ஊரினைச்சுற்றி நிறைய பயன்படுத்த முடியாத நிலையில் மண்டபங்கள் உள்ளன.வழிப்போக்கர் மண்டபம் என்ற பதிவிற்காக ஊரைச்சுற்றியுள்ள மண்டபங்களின் போட்டோக்களை எடுத்து தொகுத்தேன். இது மாதிரி விழிப்புணர்ச்சி பதிவு எழுத அதிக ஆசை.
அறிவியல் மீது எப்போதுமே கொள்ளை ஆசை. ஆகவே நான் படித்து ரசித்த துணுக்குகளை அறிவியல் ஆனந்தம் என்ற தொடர் பதிவின்மூலம் தொடர்ந்து வருகிறேன்.
அறிமுகம்:
இன்று புதிய பதிவர்களாக ( நானே புதிது..!!!)
1. கவிதை, கட்டுரை பழைய பள்ளிக் கால நினைவுகள் என அருமையாக எழுதும் குருவிக்கூடு .
2. 'அவளும் நானும்' என அம்மாவினைப் பற்றியும் , இன்னும் இருக்கிறார்கள் என பாஸிட்டிவ் எண்ணம் கொண்டும் எழுதும் யுவராணியின் கிறுக்கல்கள்.
|
|
அன்பின் விச்சு - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான முன்னுரையுடன் துவங்கியுள்ள
ReplyDeleteஉங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி ஐயா, ரமணி சார்.
ReplyDeleteவலைச்சரப் பொறுப்பு இந்த வாரம் விச்சு நீங்களா.அசத்துங்க.ஆரம்பமே கலக்கலா இருக்கு.வாழ்த்துகள் விச்சு !
ReplyDeleteஅருமையான முன்னுரையுடன் துவங்கியுள்ள
ReplyDeleteஉங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
வலைசரப் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள் விச்சு அவர்களுக்கு ஆரம்பமே உங்கள் பாணியில் அசத்தல்!
ReplyDeleteகோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061
ReplyDeleteஅருமையான அறிமுகப் பதிவு. நல்வாழ்த்துகள்!
ReplyDeleteசிறப்பான முன்னுரையுடன் தொடங்கியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.
ReplyDeletesimply superb bro...
ReplyDeleteplease continue your work..
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteவாருங்கள் கலக்குங்கள்
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteஎன் பதிவிற்கு தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்கும் ஹேமாவிற்கு மனப்பூர்வமான நன்றிகள். மேலும் லட்சுமி அம்மா, சுரேஷ்குமார், ராமலட்சுமி, ராம்வி, தமிழ்கிழம், தனசேகரன், என் ராஜபாட்டை ராஜா, கோவை2தில்லி அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteஅருமையான துவக்கம்....
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.....
நண்பனின் வலைத்தளம் "குருவிக்கூடு" புதிதாய் உங்களினால் ஓர் அறிமுகம்.
ReplyDeleteஅவன் வலைத்தளம் ஆரம்பித்து அவனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.
வாழ்க நீங்கள்
வளர்க உங்கள் எழுத்துக்கள்
நாம் உலகில் எதிர் பார்ப்பதே .. அங்கீகாரம் அதை எனக்கு என் வலைபதிவு அறிமுகம் ஊடாக தந்த உங்களுக்கு நன்றி அண்ணா........
ReplyDeleteஎன்றும் பனிவுடன் நான் குருவிக்கூடு
தங்களது அருமையான துவக்கத்திற்கு வாழ்த்துக்கள்! எனது பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!!!
ReplyDeleteபாவேந்தரின் பாடலுடன் ஆரம்பமே ஜோர்.வாழ்த்துக்கள்1
ReplyDeleteஅருமையான அறிமுகப் பதிவு. நல்வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள் விச்சு!
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே,நல்ல அறிமுகத்துடன் துவக்கியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.
ReplyDeleteஆரம்பமே அருமை.பாராட்டுக்கள்.
ReplyDeleteபாரதிதாசன் வரிகளுடன் அறிமுகம் அருமை.....சிறப்பாக உள்ளது..ஆசிரியரே. வலைப்பணி சிறக்கட்டும்..வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.