ஆதலினால் காதல் செய்வீர்
➦➠ by:
விச்சு
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்:
ஆதலினால் காதல்செய்வீர் ; - பாரதியார்
காதலிக்கும்போது ராசிபலன் பார்ப்பதில்லை. சாதிமதம் பார்ப்பதில்லை. சிலநேரம் முகத்தினைகூட பார்ப்பதில்லை.
"உன் கால்நகம் கூட கவி சொல்லும்"
எனத் தத்துவத்தை உதிர்த்துவிட்டு பின்பு முகத்தினைப் பார்த்து அறண்டு போனவர்களும் உண்டு. உங்கள் ராசி பலனில் காதல் எப்படி பார்த்துதான் தெரிந்து கொள்ளுங்களேன்.
சிலநேரம் காதலியையோ காதலனையோ வாழ்த்த... அதாங்க...ஐஸ் வைக்க வார்த்தைகளில்லாமல்
"என் இனிய ரோபோவே... என் இனிய ஆப்பிளே... என் இனிய முத்தமே.."
என்று சகட்டுமேனிக்குப் புகழும்போது மாதங்களை விட்டு வைத்தால் எப்படி? மாதங்களில் காதலி " ஆவணியில் வீசிய என் தவணிக்காற்று" என ஒவ்வொரு மாதமாக அழகாக வர்ணிக்கிறார் தினேஷ்குமார்.
கடன் கேட்டலும் கொடுத்தலுமே காதலுக்கு அழகு. ஆனால் அதனை வட்டியுடன் கேட்கிறார் கவிதை காதலன்.
காதலித்தபின் ரொமான்ஸ் இல்லையென்றால் எப்படி.
"சாயம் பூசாமல் எப்போதுமே
சிவந்து கிடக்கின்றன
சாயப்பட்டறையாய் என் உதடுகள்
உன் முத்தத்தால்." என ரொமான்ஸ் மழையில் நனைய வைக்கிறார். வேற யாருங்க? கவிதையில் அசத்தும் தேனம்மை.
ஜில்லுனு ஒரு காதல். அட சினிமா படமில்லீங்க. அப்பாவி தங்கமணியின் இது ஒரு தொடர்கதை. சும்மா 25 பாகங்கள்தான். நேரம் கிடைத்தால் படித்துப்பாருங்கள். குளிர்ந்துவிடும் மனது.
நல்லநாள் பார்த்தே உன் அப்பாவை
சந்திக்க போகிறேன்
உன்னை பெண் கேட்பதற்காக அல்ல
என்னை உன்னிடம் எழுதித் தருவதற்காக!!!
சும்மா காதலியைப் புகழ்ந்து தள்ளுகிறார் தெருப்பாடகனின் வெட்கத்துண்டை வீசியவள்.
முதலில் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது யாரெனத்தெரியாது. நாட்கள் செல்லசெல்லத்தான் தெரியும் அவள்தான் நீயென்று. விழிச்சேர்க்கையில்தான் சிலபேரின் உயிரே வாழும். நீ யாரெனத் தெரியவில்லை எனச் சொல்லிக்கொண்டே அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டார் மதுமதி.
மணமானவர்கள் உண்மையான காதலை எங்கும் தேடவேண்டாம். உன் மனைவியை நேசி. காதலும் உன்னை காதலிக்கும். காதலிக்க கற்றுக் கொள்ளத் தவறுவதால்தான் விவாகரத்து அதிகரிக்கின்றன. எனக்கு வாய்த்தவளைப்பற்றி நான் அப்படித்தான் நினைக்கிறேன்.
இமை, இதழ், கன்னம், மார்பு எதையும் விட்டு வைப்பதில்லை காதலர்கள். அட... நீங்க வேற... வர்ணிக்கும்போதுதான்!!!. போர்க்களம் சென்று பாருங்கள். அப்போதுதான் உண்மை தெரியும்.
காதலுக்காக பெற்றொரையும் மற்றோரையும் மதிக்கத் தவறும் இக்காலத்தில் காதலுக்காக மாமியாரை மதிக்கும் கதிரவன் சொன்ன காதல் கதைகள்.
கணவனும் மனைவியும் சின்ன சின்ன சண்டைகளைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்டால் வாழ்வில் என்னாலும் வசந்தமே. கணவன் மனைவி ஜோக்ஸ் மூலம் இதனைச் சொல்கிறார் மணிவண்ணன்.
சோமசுந்தரத்தின் கண்ணுக்குத் தெரியாத என் தேவதை என்ற குறுநாவலை கொஞ்சம் வாசித்துப்பாருங்கள். ஷைலஜாவின் காதல் நதிகள் மூலம் முடிந்தால் நீந்திப்பாருங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த ஹேமாவின் காதல் சாக்லெட்டினை சுவைத்துப்பாருங்கள். தனி இனிமையுடன் கூடியது அது.
செய்தாலியின் ஒரு அற்புதமான வரி
"சுவாசிக்கும் காற்றினில் உணர்கிறேன்
அவள் மூச்சுக் காற்றின் ஸ்பரிசம் "
இன்று முகம்பார்க்காமல் வளரும் காதலினால் ஏற்படும் தொல்லையை ஒரு செய்திமூலம் வேடந்தாங்கல் கருன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
எப்போதும் காதல் வெற்றி பெறுமா? நிறைய காதல்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன. புவனேஷ்வரியின் காதல் தோல்வியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
சிலபேர் காதலித்துவிட்டு கழட்டிவிட முடியாமல் தவிப்பர். சி.பி.செந்தில்குமார் சொல்லியதுபோல் காதலர் தினம் என்பது சேர்வதற்கு மட்டுமல்ல...கழட்டிவிடவும்தான். காதலில் தோற்பது எப்படி என அழகாகப் பாடம் எடுக்கிறார் நிலாப்பெண்ணுக்கு.
காதலித்தால் கிடைப்பது என்னவோ தூக்குதான் என முடிவு செய்துவிட்டார் நினைவுத்தூறல்களில் காதல் தூக்கு கவிதையின் மூலம்.
காதல் என்றால் இது மட்டும்தானா?
அப்பாவையும் காதலி உன் அன்பினால். ஓய்வு பெறும்போது தான் தனித்துவிட்டது போன்ற பிரமையுடன் வரும் அப்பாவினை அப்பா நானிருக்கிறேன் உங்களுக்கு என அழகாக அப்பாவுடன் துணையிருக்கும் ராஜி சொல்கிறார்.
ரெவெரியின் அன்புள்ள அம்மாவினை வாசியுங்கள். அம்மாவின் மீதான காதல் அதிகமாகும். எல்லோருக்கும் பிடித்தமானவர்கள் தாத்தா,பாட்டிதான் . ஆனால் இன்றைய நவீன உலகத்தில் உறவினை நேசிக்க முடியாமல் அவர்களைத் தனித்து விட்டு விடுகிறோம். உறவுகளுடன் கூடி வாழ்ந்த பாட்டியை பாசத்திற்காக ஏங்க வைக்கும் உலகமிது. பாட்டியை நேசித்துப்பாருங்கள். வாழ்வின் அர்த்தம் புரியும். உலகம் உன் வசப்படும்.
காதல் தேவையில்லை எனப் பொய் சொல்பவர்கள் பிரபாகரனின் முந்நூறு டன் காதலை வாசியுங்கள்.
அறிமுகம் :
1. பாமரனுக்காக திருக்குறள் எழுதும் வியபதியின் ஏதாவ்து எழுதுவோம்.
2.வித்தியாசமான எழுத்தில் ஓலைக்கணக்கன். பட்டாம்பூச்சி என்ற பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
|
|
காதல்ர் தின சிறப்புப் பதிவாக
ReplyDeleteகாதல் தொடர்பான பதிவுகளை அறிமுகம் செய்து போனவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
காதல் தொகுப்புகள் அருமை.
ReplyDeleteகாதலர்தின வாழ்த்துகள் விச்சு !
காதலர் தின வாழ்த்துகள் தோழர். இன்றைய சிறப்பு பதிவில் எனது கவிதையையும் அறிமுகம் செய்தது மகிழ்ச்சி.மற்ற அறிமுகங்களுக்கும் பணியை தொடர்ந்து சிறப்புடன் செய்து முடிக்க உங்களுக்கும் எனது வாழ்த்துகள். ஆதலினால் காதல் செய்வோம்.
ReplyDeleteஅருமையாக வழங்கியுள்ளீர்கள்.
ReplyDeleteகருத்துக்களைப் பகிர்ந்த ரமணி சார், ஹேமா,மதுமதி,குணா தமிழ் அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteகாதலர் தின சிறப்பு தொகுப்பில்
ReplyDeleteஅனைத்தும் சிறப்பான தேர்வுகள்.
அனைவருக்கும் அன்பர்கள் தின வாழ்த்துக்கள்.
காதலர் தின சிறப்பு தொகுப்பு அருமை அன்பரே .புதிய தளங்கள் பல அறிந்து கொண்டேன்
ReplyDeleteகாதலுக்காக காத்திருப்பதும்,தேடுவதும் சுகமான அனுபவம் தான்,நல்ல தேடல்.வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகமான புதியவர்களுக்கு வாழ்த்துகள்.
ஓ, வாலண்டைண்டே ஸ்பெஷலா.
ReplyDeleteவாழ்த்துகள்.
சிறப்பு
ReplyDeleteபாமரனுக்காக திருக்குறள் எழுதும் "ஏதாவ்து எழுதுவோம்" என்று என் வலைப்பதிவை அறிமுகம் செய்துள்ளமைக்கு நன்றி.
ReplyDeleteஅத்தனை காதல் பதிவுகளையும் படிக்க வசதியாக நீங்கள் தேடித்தேடி பதிவு செய்திருக்கும் அரிய பணி பாராட்டுக்குரியது.வாழ்த்துகள்
என் கவிதையை இங்கே அறிமுகப்படுத்தி இருப்பதற்கு மிக்க நன்றி தலைவா... உங்களின் எல்லா அறிமுகப்பதிவுகளும் அருமை. வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாதலர் தின சிறப்பு பதிவு அள்ளுது போங்கள் ....
ReplyDeletehttp://eththanam.blogspot.in/2012/02/blog-post_14.html
இத்தனை விஷயம் இருக்கா?தொடருங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையாக வழங்கியுள்ளீர்கள்.
ReplyDeleteசுவையான பதிவு . நன்றி.
ReplyDeleteஓ! விச்சு ரெம்ப அருமையாக காதலர் தின காதல் அறிமுகம் சிறப்பு, இதில் எனது கவிதையையும் சேர்த்துள்ளீர்கள். இன்ப அதிர்ச்சி சக பதிவரின் ஆசிரியத்துவத்திற்கு - காதலுடன் நல் வாழ்த்துகள். மிக்க நன்றி...நன்றி. மற்றைய அறிமுக அன்புறவுகளுக்கும் வாழ்த்துகள், தங்களுடன் சேர்த்து. வளர்க மேலும் மேலும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இன்று காதலர் தினம்
ReplyDeleteதோழமைகளின்
வலைப்பூக்களில்
தேனாய் சொட்டுகிறது
காதல் கவிதைகள்
எதை
வாசிப்பது எதை ரசிப்பது என்று
தத்தளிக்கிறது மனம்
வலைச் சரத்திலோ
மழையாய் குவிந்து கிடக்குது
காதல் கவிதைகள்
நிறைய காதல் கவிதைகளை வாசிக்கையில்
புதிய நல்ல காதல் சிந்தனைகள் பிறக்குகிறது
சிறந்த படைப்பாளிகளுக்கு மத்தியில் என்னையும் அறிமுகம் செய்த
அன்புத்தொலருக்கு நன்றி வாழ்த்துக்கள்
தோழமைகளுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்
மிக்க நன்றி விச்சு.. வலைச்சரத்தில் அடிக்கடி என் பதிவுகள் குறிப்பிடப்படுவது பெருமை அளிக்கிறது. நன்றி சீனா சாருக்கும்..:)
ReplyDeleteபட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர் மணி (கவிதைக் காதலன்) சாருக்கு ஸ்பெஷல் வாழ்த்து..
நல்ல விடயங்களை அலசிய தொகுப்பு.
ReplyDeleteகாதலர் தின சிறப்பு அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஎனது பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றி விச்சு.
ReplyDeleteகருத்துக்கள் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்..
ReplyDeleteகாதலர் தின சிறப்புப் பதிவில் என்னுடைய வரிகளையும் அறிமுகப்படுத்தியது மகிச்சியாக உள்ளது நண்பரே .... அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும்...
ReplyDeleteசிறந்த படைப்பாளிகளுக்கு மத்தியில் எனது பதிவையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி விச்சு...
ReplyDeleteHappy St.Valentine Day...
சிறப்பான அறிமுகங்கள்... வாழ்த்துகள் நண்பரே..
ReplyDeleteதினேஷ்குமார், ரெவெரி , வெங்கட் நாகராஜ் அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்கநன்றி.
ReplyDeleteபதிவுகளின் தொகுப்பு அமர்க்களம்.
அந்தக் குறுநாவலை ஆரம்பித்துவிட்டு யாருமே ஆதரவு தராவிட்டால் எதற்கு நேரத்தை வீண் செய்யவேண்டும் என்று
கைவிட்ட நேரத்தில் உம்முடைய இந்த அறிமுகம்,எப்படியும் அதைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற ஆசையை உண்டுபண்ணியுள்ளது.
மீண்டும் நன்றிகள்.
அருமையாக இருக்கிறது தங்களது அறிமுகம்!
ReplyDeleteThank you for including me in here... nice collection for the special day...;)
ReplyDeleteகாதல் தொகுப்புக்கள் அருமை. இனி தான் ஜில்லுனு ஒரு காதல் தொடர் படிக்க வேண்டும்.
ReplyDeleteகாதல் கவிதைகளின் தொகுப்பு....பல புதிய அறிமுகங்கள்....கிடைத்தது
ReplyDelete// நல்லநாள் பார்த்தே உன் அப்பாவை
ReplyDeleteசந்திக்க போகிறேன்
உன்னை பெண் கேட்பதற்காக அல்ல
என்னை உன்னிடம் எழுதித் தருவதற்காக!!!
சும்மா காதலியைப் புகழ்ந்து தள்ளுகிறார் தெருப்பாடகனின் வெட்கத்துண்டை வீசியவள்.//.......
...................................
என வருடத்தின் மிகச் சிறந்த நாளில், சுய நலமற்ற ஒரு பதிவில் என்னுடைய கவிதையையும் இணைத்துக் கொண்டமைக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் உச்சி குளிர்ந்துதான் போய்விட்டேன்...(:-D)
உங்களது பணி மென்மேலும் சிறந்து விளங்க, வலைச்சரத்திற்கும், உங்கள் குழுவிற்கும், என்னுடைய நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தெருப்பாடகன் (எ) ஞா.ஸர்வேஸ்வரன், இலங்கை.