07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 17, 2012

கட்டுரை பூக்கள்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.  
                                                                 - பாரதியார்


          இன்று வலைச்சரத்தினை ஒரு கதம்பமாகத் தரலாம் என எண்ணினேண். பல தலைப்புகளில் நம்மவர்கள் எழுதுகிறார்கள். அத்தனையும் இணைக்க முனையும்போது நிறைய கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன. நான் படித்த சில தொகுப்புகளைக் காணலாம். நண்பர் சூர்யஜீவாவின் ஒரு சந்தேகத்திற்காக ஒரு பதிவினையேப் போட்டுள்ளார் வவ்வால்வால்மார்ட், சில்லரை வர்த்தகம் பற்றிய பதிவு. எனது சில சந்தேகங்களையும் இது போக்கியுள்ளது.

           நம்முடைய சில பாரம்பரிய கலைகள் இன்று கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன அல்லது திசை மாறி போய்விட்டன. நாற்று வலைப்பூவில் சினிமா சின்னத்திரை மூலம் சீரழியும் பாரம்பரிய கலைகள் பற்றி சொல்லியுள்ளார் நிரூபன்.

        நீங்க மரமாகப் போறீங்க என்று பயமுறுத்திவிட்டு மரம் பேசுவதுபோல் அருமையான கட்டுரை வடித்துள்ளார் திண்டுக்கல் தனபாலன். இன்றைய காலக்கட்டத்தில் அந்த மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் சிக்கிச் சீரழிகிறோம். சிவகாசி போன்ற ஊருக்குள் ஒருநாள் முழுவது சுற்றிவிட்டு வாருங்கள். உங்களின் மேனியின் பளபளப்பு மெருகேறிவிடும்.சுற்றுச்சூழல் மாசுபடுதல்  மூலம் விளக்குகிறார் ராஜா.

        சங்கீதாவின் அம்மா ஊருக்குப் போகிறாள் மூலம் சீனியர் சிட்டிசன்கள் படும்பாட்டை விளக்கியுள்ளார். இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

     விமலன் வலைப்பூ அற்புதமான பல கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இவரது எழுத்தும் வேறு கோணத்தில் பயனிக்கிறது. இவரின் உலர்களம் படித்துப்பாருங்கள். பசியினால் யாசகம் கேட்கவருபவர்களைப் பற்றி விவரித்து்ள்ளார்.


     ஆமினாவின் ஆணாதிக்கம் பெண்ணேதான் காரணம் என்ற கட்டுரையில் பழைய காலத்து மாமியார்கள் செய்யும் செயல்கள், ஒரு புதுமணப்பெண்ணுக்கு அவருடைய அம்மா தரும் அட்வைஸ் எனப்போட்டு உடைக்கிறார். இதுவே கவிதாமணி கவிதைகளில் இருபால் இணைப்புக்கோட்பாட்டில்  வேறுவிதமாக ஒலிக்கிறது.
     நேற்று - குழந்தை, இன்று - குமரி, நாளை - அடிமை எனச் சாடுகிறார்.

      ஜோஸபின் பாபா இதனைப்போன்றே ஒரு கட்டுரையில் பெண்களுக்கு மனஅழுத்தம்  என்ற தலைப்பில் எழுதியுள்ளார். காலைமுதல் இரவுவரை வேலை பார்த்துக்கொண்டே இருக்கும் பெண்களின் மன அழுத்தத்தினைப்பற்றி கூறியுள்ளார்.

      செ குவேராவை அறிந்துகொள்ள என்னைகவர்ந்த பிரபலங்களில் ராஜ் நண்பர்கள் வலைப்பூவில் சுவைபடக்கூறியுள்ளார். செ குவேராவினை அறிந்துகொள்ள அந்தத் தளம் சென்று பாருங்கள்.

    சே.குமாரின் வரி கொடுக்க மறவான் என்ற கட்டுரையில் "முப்பது வயதில் ஆட்சிப்பொறுப்பேற்று வெள்ளையனை எதிர்த்துப் போராடி 39வது வயதில் மக்களுக்காக இன்னுயிரை ஈந்த வீர மறவனை போற்றுவோம்" என்கிறார்.

     இரா. எட்வின் அவர்கள் ஒரு சிறுகதையின் மூலம் சாமிக்கும் ஒரு பொம்மை விற்கும் வியாபாரிக்கும் இடையில் நடக்கும் சம்பாஷைனைகளை சுவைபட விவரித்துள்ளார். சாமி மீண்டும் பொம்மையாகிப் போனார் கதையினைப் படியுங்கள்.


       சோழிகளை வைத்து ஜோசியம் பார்க்கணுமா? லட்சுமி அம்மாவின் பலகரை சோதிடம் சென்று பாருங்கள். நீங்களும்கூட சோழிகளை வைத்து ஜோசியம் பார்க்கலாம்.

        என்னங்க உங்களுக்கு எதப்பார்த்தாலும் தெனாலி கமல் மாதிரி பயமா இருக்குதா? பயப்படாதீங்க நிறைய போபியாவைப்பற்றி ராம்வி அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வோம்.

         சிவரஞ்சனியின் உங்களுக்கும் ஒரு குழந்தை வாசியுங்கள். உங்களிடம் இருக்கும் குழந்தை மனப்பான்மையால் டென்சனிலிருந்து வெளியே வாருங்கள். உழவனின் குழந்தை மொழியை புரிந்துகொள்ள அம்மா டம்மா வாசியுங்கள். உங்கள் குழந்தைகள் பேசும் பேச்சுக்களை ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

      இப்போது நாகரீகம் என்ற பெயரில் நமது குழந்தைகளுக்கு தனி அறை ஒதுக்கி கொடுக்கிறோம். இணைய இணைப்புடன் கூடிய கணினி கொடுக்கிறோம்.அதுதான் பிரச்சினைக்கே ஆரம்பம். எனது உறவினர் அத்தகைய தவறினை செய்துவிட்டு உடனே சுதாரித்து ஹாலில் இணைய இணைப்புள்ள கணினியை வைத்தார். அங்கேதான் யன்படுத்த வேண்டும். வீடு சுரேஷ்குமார் அபாயம் இணைய இணைப்பு இங்குள்ளது என எச்சரிக்கை விடுக்கிறார்.

     கீதமஞ்சரியில் ஆஸ்திரேலிய பள்ளிகள் பற்றிய தொடர் பதிவினை கீதா அவர்கள் எழுதிவருகிறார்கள். நிறைய விசயங்கள் இதில் உள்ளன.இதுவரை  ஐந்து பகுதிகள் எழுதிவிட்டார்.சென்று படித்துப்பாருங்கள்.

     சக்திபிராபாவின் கடவுள்,இருப்பு நிலை மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற பதிவில் கடவுள் இருப்பு நிலையை பல கோணத்தில் அலசி ஆராய்கிறார்.  சமுத்ராவின் அணு அண்டம் அறிவியல் தொடர் பதிவினைப் படியுங்கள். செம சுவாரஸ்யமான பதிவு. இதுவரை 60 பகுதிகளாக எழுதியுள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன் ஐயாவினைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். எனக்கு வலைப்பூவினை எழுத தொடர்ந்து உற்சாகம் கொடுக்க கூடியவர்.அவரின் ஹீமோபிலியா பற்றிய பதிவு அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படங்களுடன் எளிமையாகவும் புரியும்படியும் இருக்கும்.
    
அறிமுகம் :

1. திவ்யா@ தேன்மொழியின் வலைப்பூ தேன்சிட்டு. கவிதைகளை அழகாக தொகுத்து வருகிறார்.
2. கடம்பவன் குயிலின் கடம்பவன பூங்காவில் கவிதைகள் கட்டுரைகள், இலக்கியங்களை எழுதுகிறார்.

         படங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை. இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துகளையும்  இடுங்கள். 


19 comments:

  1. அருமையான அறிமுகங்கள்.இறுதியில் புதியவர்களை அறிமுகப்படுத்து விதம் அருமையோ அருமை.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. என்னுடைய பதிவினை குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, விச்சு.
    அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. என்னை மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    வாழ்த்துகள் விச்சு.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்...என்னை மீண்டும் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி!

    ReplyDelete
  5. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. சிறப்பானதொரு கதம்பப் பதிவு அருமை . அறிமுகப் பதிவுகளை காண வருகிறேன் .

    ReplyDelete
  7. அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! என் பதிவினை குறிப்பிட்டு, என்னை மீண்டும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மிக்க நன்றி விச்சு சார் !

    ReplyDelete
  8. என்னுடைய பதிவினை குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...

    அருமையான அறிமுகங்கள்.

    வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. பாரதியின் எழுச்சி மிக்க வரிகளோடு சிறந்த பல பதிவுகளை கோர்த்த சரம்... அருமை...
    அனைவருக்கும் வாழ்த்துகள்...

    என்னையும் இந்த பூமாலையில் சேர்த்துக்கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி...
    நன்றி நண்பரே...
    வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. கட்டுரைத் தொகுப்பை நேயர்கள்
    எட்டிவிடச் செய்தீர்கள் இவ்வாரம்
    பட்டு என ஒளிரும் தங்கள் ஆசிரியம்,
    நேயர்களின் அறிமுகம், அனைவருக்கும் வாழ்த்துகள்
    நாளை என்னவாக இருக்கும் என்ற ஆவலுடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. எண்ணற்றப் பொக்கிஷங்களைத் தேடித்தேடிக் கொணர்ந்திங்கு கொட்டிவைத்துள்ளீர்கள். எல்லாவற்றையும் படிக்க மனம் ஆவலாய் விரைகிறது. விரைவில் படித்துக் கருத்திடுவேன்.

    என்னுடைய பதிவையும் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி விச்சு.

    ReplyDelete
  12. சகோதரா போர்களம் அறிமுகத்தை முகநூலில் பகிர்ந்துள்ளேன். நன்றி.
    https://www.facebook.com/#!/photo.php?fbid=3034771385478&set=a.1336357726198.2046607.1148741300&type=1&theater
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  13. நல்லதொரு தொகுப்பு மீண்டும் உங்களிடமிருந்து. பல புதிய விஷயங்கள் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  14. விச்சு,

    அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! அடேங்கப்பா ஒரே வலைச்சரப்பதிவில் ஏகப்பட்ட அறிமுகங்கள் செய்து இருக்கிங்க :-))

    //பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;//

    இது தான் இன்றைய நிலையிலும் தேவையாக இருக்கு, புரியாத மொழியில் படிப்பதால் மனப்பாடம் செய்யும் எந்திரமாகத்தான் மாணவர்கள் உருவாகிறார்கள். இதனாலேயே மாணவர்களுக்கு அழுத்தம்,கொலைவெறி எல்லாம் உருவாகிறது.

    ReplyDelete
  15. வணக்கம் நண்பா விச்சு, மற்றும் வலைச்சர உறவுகளே, 
    வலைச்சர வாரத்தில் சிறப்பான அறிமுகங்களை வழங்கிக் கொண்டிருக்கிறீங்க. அறிமுகமாகியிருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். 
    இச் சிறியேனையும் அறிமுகப்படுத்திய உங்களிற்கு உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  16. கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  17. என்னை அறிமுகப்படுத்திய விச்சு அய்யா விற்கு மிக்க நன்றி.. சந்தோஷத்தில் குழந்தையாகவே மாறிவிட்டேன் :)

    ReplyDelete
  18. கதம்பத்தில் அருமையான முத்துக்களை கோர்த்து தந்திருக்கிறீர்கள். பதிவின் இறுதியில் என்னுடைய வலைப்பூவையும் ரசித்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  19. நன்றி விச்சு. வலைச்சரத்தில் நீங்கள் குறிப்பிடும்படி என் பதிவு அமைந்தது மகிழ்ச்சி. கட்டுரைப் பூக்களின் தொகுப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது