07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 10, 2012

கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்

கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்


                 மொழி,இனம்,பண்பாடு,நாகரிகம், மனிதம்,  கலாச்சாரம் என்று பல்வகை தலைப்புகளில் இறந்த காலத்தில் மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை நமக்கு எடுத்துக்காட்டுவது பண்டைய நூல்கள் தான். அவை இன்றைய மனிதன் புரிந்து கொள்ள முடியாதபடி செய்யுள் வடிவிலே இருந்த காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் பிற்பாடு வந்த பல அறிஞர்கள் பொறுமையாகவும் ஆழ்ந்தும் வாசித்து பொருளுணர்ந்து வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ள உதவும் என்ற நோக்கோடு உரை எழுதி வைத்து மாண்டார்கள் என்பது நாம் அறிந்ததே.உதாரணத்திற்கு வள்ளுவப் பெருந்தகை ஈரடியில் சொன்ன செய்தி பரிமேலழகர் உரையின் வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடிந்தது. நாளடைவில் மனிதன் மனிதனுக்குச் சொல்லும் செய்திகளை இலக்கண விதிகளுக்கு உட்படாமல் அதே சமயம் இலக்கண பிழைகளும் ஏற்பட்டு விடாமல் பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு இனமான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி சொல்ல வந்ததை எளிய நடையில் சொல்ல ஆரம்பித்தான். சுருக்கமாக சொல்ல வந்ததை கற்பனை கலந்து சொற்ப வரிகளில் சொல்வதை கவிதை என்கிறோம்.அதைபோல சொல்ல வந்ததில் சிறிதும் கற்பனை கலக்காது உள்ளது உள்ளபடி சொல்வதை கட்டுரை என்கிறோம். மனிதன் இறந்த காலத்தையோ எதிர்காலத்தையோ நிகழ்காலத்தையோ கட்டுரை வடிவில் சொன்னால் மட்டுமே வாசிப்போருக்கு சரியாய் விளங்கும். செய்திகளுக்கு ஆதாரமாக கதைகளோ கவிதைகளோ திகழாது கட்டுரைகளே திகழும்.வலைப்பதிவுகளில் பொதுவாக கட்டுரைகள் எழுதுவது பிரபலமான எழுத்தாளர்களே..ஏனென்றால் செய்திகளைச் சேகரித்து வார்த்தைகளை வரிசையாய் வைத்து கட்டும்போது பொருள் சிதறிவிடுமோ என்ற அச்சம் தான்..சொல்ல வந்ததை நேர்த்தியாக சொன்னாலே போதும்.ஏனோ நம்மில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் கதை கவிதைகளிலே ஆர்வம் செலுத்துகின்றனர். நாமும் கட்டுரை எழுத முயற்சிப்போம்.சரி தோழர்களே இன்று நான் சுட்டிக் காட்டப்போவது நம் வலைப்பதிவர்கள் எழுதிய கட்டுரைகளில் என் கண்ணில் பட்ட சில கட்டுரைகள்தான்..வாருங்கள் அந்த கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்.
    ஒரு விசயத்தைக் கற்றுக் கொண்டாலே அது கல்வியாகி விடுகிறது.ஆனால் கல்வியென்றாலே பெரும்பான்மையாய் நாம் பொருள்படுத்திக் கொள்வது பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி என்றுதான்.ஒருவனின் கல்வியென்பது அவனுக்கு மட்டும் சொந்தமாகி விடுவதில்லை.அது அவன் பிறந்த நாட்டுக்கும் சொந்தம் தான்.அக் கல்வியால் அவன் பயன்படுவதோடு  மட்டும் இல்லாமல் நாடும் பயன் பெற வேண்டும்.அப்படியானால் அவன் தரமானதொரு கல்வியை கற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
    இந்த நிலையில் எது விழுமியம் தரும் கல்வி என்று தான் எழுதிய கட்டுரையின் மூலம் கேள்வி எழுப்புகிறார் கல்விக்கான சிறப்பு வலையின் மூலம் மதுரை சரவணன்.


     உலகின் பெரிய ஜனநாயக நாடு ..உலக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு.. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு.. வளர்ந்து வரும் வல்லரசு நாடுகளில் ஒன்று என்று நாம் நம் நாட்டை பெருமை படுத்தி பேசுகிறோம் ஆனால் நாட்டின் முக்கிய வாழ்வாதாரமே வேளாண்மை என்பதை நாம் பெருமையாக சொல்ல மறுக்கிறோம்.. வேளாண்துறையை அழிக்கும் தொழிற்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு வேளாண்துறைக்கு கொடுக்கிறதா என்று யோசித்தும் பார்க்க வேண்டும். இதையெல்லாம் யோசித்துதான்..முன்னாள் ஊழல் ஒழிப்பு ,கண்காணிப்பு ஆணையர் வேளாண்மையும் பெருந்தொழிலாக வேண்டும் என்கிறார்.

      மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று நாமும் சொல்லிக் கொண்டும் கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோம்..ஆனால் சொல்பவனும் மரம் வளர்ப்பதாய்த் தெரியவில்லை.அதைக் கேட்பவனும் மரம் வளர்ப்பதாய்த் தெரியவில்லை.ஆனால் முற்றிலும் இல்லையென்று சொல்லமுடியாது சிலர் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தாலும் சிலர் ஆங்காங்கே நட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.சரி அது இருக்கட்டும் மரங்களை வெட்டுங்கள் அவற்றை வளர விடவேண்டாம் என்கிறாரே மனதோடு மட்டும் கௌசல்யா..ஏன் எதற்கு வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

       ஒரு இனத்தைத் தாங்கிப் பிடிப்பதே கலாச்சாரமும் பண்பாடுதான் அப்படி அவை இரண்டும் சீரழியும்போது அந்த இனமும் சீரழியும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பதாய் எனக்குத்தோன்றவில்லை..
           கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம் பண்பாடு ஏன் இப்படி என்று கேட்கிறார் தோழர் தெக்கிக் காட்டான்.
         
           ஒரு இனம் தோன்றவேண்டுமென்றால் அதற்கு மொழிதான் அடித்தளமாக இருக்கும் அந்த இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறதென்றால் சொல்லவே தேவையில்லை மொழியும் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.எவன் ஒருவன் தாய்நாட்டில் தாய்மொழி பேசுகிறானோ அவன் மொழிக்கு அழிவில்லை.

சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற அளவில் தாய்மொழி புறந்தள்ளப்பட்டு வரும் அவலமும் மறுக்கமுடியாத ஒன்று .

         என்று கோபப்பட்ட ஈரோடு கதிர் இனம் காக்க மொழி காப்போம் வாருங்கள் தமிழர்களே என்கிறார்


                 தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி பல தமிழர்களுக்கு தெரிவதில்லை என்பது தெரிந்துதான் தமிழ் நண்பர்கள் தமிழ்மொழியின் சிறப்பு என்ற கட்டுரையை பகிர்ந்திருக்கிறார்கள்.தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை.


                நாகரிகம் என்றாலே சிந்து சமவெளிதான் நினைவுக்கு வரும் அதைப் பற்றி எத்தனைப்பேருக்கு தெரியும் ..அதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா..அப்படியானால் சிந்து சமவெளி வரலாறு அறிந்து கொள்ள வழிப்போக்கனது உலகத்திற்கு செல்லுங்கள்.
                 
              உலகில் முதலாவதாக உருவான நூலகம் எதுவென்று தெரியுமா அதன் பின்னனி என்னவென்று தெரியுமா..தெரியாதவர்கள் உடனே வரலாற்று சுவடுகள் வாசியுங்கள்.வேலைக்காக கலந்துகொள்ளும் நேர்முகத்தேர்வில் இக்கேள்வியைக் கேட்டாலும் கேட்கலாம்.


              இந்த ஆண்டு கணித ஆண்டு என்று சொன்னதோடு விட்டு விடாமல் கணித மேதை ராமானுசரைப் பற்றியும் சுவையான சில தகவல்களையும் தன் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார் தோழர் முத்தரசு..


அடுத்த அறிமுகப் படலம்


   அனுபவங்களை அனுபவிக்கலாம்
               
                                நன்றி
                 மீண்டும் சந்திப்போம்..
                          மதுமதி

33 comments:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்"

    கட்டுரைத்த அத்தனை பகிர்வுகளும் அமர்க்களம்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ”கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்"

    அத்தனை பகிர்வுகளும் அருமை. பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நல்ல தேடல் தோழர்.
    சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள்.
    சில புதியவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.
    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ரத்னவேல் ஐயா.

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  7. நன்றி..


    இராஜராஜேஸ்வரி.


    கோவை டூ தில்லி.

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  9. மிக்க நன்றி

    ReplyDelete
  10. கட்டுரை தொகுப்புகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.வழிப்போக்கனது உலகம் நிறைய வரலாற்று செய்திகளைக்கொண்ட பதிவு.அதனை அறிமுகப்படுத்திய மதுமதிக்கு நன்றி.

    ReplyDelete
  11. மிக மிக அருமையான அறிமுகமான அறிமுகங்கள்.வாழ்த்துகள் மதி !

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு பாஸ் பல பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கின்றீர்கள். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக இவர்களின் தளங்களுக்கு சென்று பார்க்கின்றேன்.

    ReplyDelete
  13. நல்ல விடயங்களைச் சொல்லியிருப்போரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ!

    ReplyDelete
  14. அனைத்துப் பதிவர்களுக்கும் அவர்களை அழகாக அறைமுகம்
    செய்த தங்களுக்கும்
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. நண்பர்களுக்கு வணக்கம் ..,

    எமது வலைத்தளத்தை இங்கு அறிமுகம் செய்த ஆசிரியருக்கு எனது தாழ்மையான வணக்கங்கள்...,

    இங்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த பாராட்டுக்கள்...!

    ReplyDelete
  16. கவிதை , கதை , கட்டுரை அடுத்த உங்கள் பதிவிர்க்காய் காத்திருக்கிறேன் . தவறாமல் ஆறுமுக நண்பர்களை சென்று பார்த்து வருகிறேன் .

    ReplyDelete
  17. மிக்க நன்றிகள் மதுமதி.

    இத்தகைய அறிமுகம் அந்த பதிவுக்கு மிக பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதை எண்ணி மிக மகிழ்கிறேன்...

    மரங்களை வெட்டுங்கள் என்பதை சொல்வது நிற்காமல் தற்போது செயலிலும் இறங்கிவிட்டோம் என்பதை இங்கே சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்...இதற்க்கு பெரும் உதவி செய்வது இந்த பதிவுலகம் என்பது ஒரு சிறப்பு.

    நீங்கள் அறிமுகபடுத்தி இருக்கும் பதிவுகளில் சில படித்திருக்கிறேன், பிறவற்றையும் பார்கிறேன்...

    மீண்டும் என் பாராட்டுகளும் என் நன்றிகளும்

    பிற அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. கட்டுரைப் பெட்டகங்கள் தந்தீர்கள் .தங்களிற்கும், கட்டுரையாளர்களிற்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. சார். கடந்த சில நாட்களாக கமெண்ட்கள் எதுவும் இடவில்லை. கடின வேலைப்பளுவின் நடுவிலே பதிவு இடவே கஷ்டமாக இருக்கீறது. தினமும் தங்கள் தளத்துக்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை. மற்றொரு முக்கிய காரணம் இந்த மின்சார வெட்டு.

    சரி. போகட்டும். அட்டகாசமான அறிமுகங்கள். வலைச்சரத்தில் அருமையாக பணீயாற்றுகிறீர்கள்.வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  20. நன்றி..


    ஈரோடு கதிர்..

    விச்சு.

    ஹேமா.

    ReplyDelete
  21. நன்றி..

    கே.எஸ்.ராஜ்.

    தனிமரம்.

    துரைடேனியல்.

    ReplyDelete
  22. புலவர் ராமானுசம்..

    சசிகலா..

    வரலாற்று சுவடுகள்.

    நன்றி.

    ReplyDelete
  23. மகிழ்ச்சி..

    கோவைக்கவி.

    கௌசல்யா.

    ReplyDelete
  24. // ஏனோ நம்மில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் கதை கவிதைகளிலே ஆர்வம் செலுத்துகின்றனர்.//
    உண்மைதான்.அதற்கு காரணம் கட்டுரை எழுதுவோரில் சிலர் அதை சுவைபட எழுதாததுதான்.
    நல்ல கட்டுரைகள் உள்ள வலைப்பதிவுகளை தெரியப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  25. அறிமுகம் செய்த / சொன்ன விதம் பிடிச்சிருக்கு

    ReplyDelete
  26. ”கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்"

    அத்தனை பகிர்வுகளும் அருமை. பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. அருமையான பகிர்தல்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. பகிர்வு அருமை. நல்ல கட்டுரைகள். வாழ்த்துகள் மதுமதி சார்.

    ReplyDelete
  29. பகிர்வுக்கு நன்றி...பல கட்டுரைகள் படிக்கும் வாய்புகள் கிடைத்தது ...

    ReplyDelete
  30. வே.நடன சபாபதி..

    மனசாட்சி..

    நன்றி..

    ReplyDelete
  31. லட்சுமி அம்மா..

    ஜலீலா கமல்..

    நன்றி..

    ReplyDelete
  32. ஸ்டார்ஜன்...

    சேகர்..

    நன்றி..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது