அனுபவங்களை அனுபவிக்கலாம்
➦➠ by:
மதுமதி
அனுபவங்களை அனுபவிப்போம்
வணக்கம் தோழர்களே..என்னதான் இந்த அவசர உலகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருந்தாலும் கடந்து வந்த பாதைகளை அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அப்படி அனுபவங்களை அசைபோட்டு பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.
'அ' ன்னா 'ஆ'வன்னா எழுதிப் பார்த்தது..அழுதுகொண்டே முதலாம் வகுப்பு போனது..என்று ஆரம்பித்து முதல் சினிமா,முதல் முத்தம் ,முதல் காதல்,முதல் சண்டை,காதல் தோல்வி,பெண் பார்க்கச் சென்றது,திருமண சுப நிகழ்வு,முதல் வேலைக்கு போனது,பிரியமானவர்களை இழந்தது என்று எத்தனையோ நிகழ்வுகள் இன்னும் பசுமை மாறாமல் மனதிற்குள்ளே குடியிருக்கும். அப்படியான நிகழ்வுகளை நாம் அதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவோம் அல்லது நண்பர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவர். சந்தோசமான விசயத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது நமது சந்தோசம் அதிகரிக்கிறது.அதே துக்கங்களை நண்பர்களிடம் பகிந்து கொள்ளும் போது நமது துக்கங்கள் குறைகிறது..
முன்பெல்லாம் நண்பர்களை நேரில் பார்த்தால் மட்டுமே அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிலை இருந்தது. இப்போது நிலைமை தழைகீழ்..வலைப்பூ மூலமாக தன் கடந்த காலங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.
சரி தோழர்களே..நம் வலைப் பூ தோழர்களின் அனுபவங்களை நாமும் அனுபவிக்கலாம் வாருங்கள்.
சென்னை பாரி முனையில் ஒரு வருந்ததக்க சம்பவம்.பள்ளி ஆசிரியையை மாணவன் கொலை செய்தான்.சாதாரணமாக இந்த செய்தியை எடுத்துக் கொள்ள முடியாது.மாணவன் ஏன் இப்படி செய்தான்.அவன் மனநிலம் பாதிக்கப் பட்டதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்தால் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் திரைப்படங்கள் தான் காரணம் என்கின்றனர்.திரைத் துறையினரே மாணவப் பருவத்தை சீர்குலைக்கும் கதைக் கருக்களை விட்டுவிட்டு 'பசங்க' போன்ற கதைகளை படமாக்கலாமே.
ஆசிரியை மாணவனுக்கான உறவு இவ்வளவுதானா என்று நான் வேதனை பட்டபோது அன்புடன் நான் தோழர் கருணாகரசு அவர்கள் கண்ணீர் கரைந்த தருணம் என்று தலைப்பிட்டு தன் ஆசிரியை சுசீலாவின் பிரிவைத் தாங்காமல் கதறிய அனுபவத்தை கட்டுரையாகத் தந்துள்ளதை வாசித்தேன்.அன்றைய மாணவனுக்கும் இன்றைய மாணவனுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிந்தது.
சமீபத்தில் தோழி ஹேமாவின் ‘உப்புமடச் சந்தி’க்குப் போய்ப் படித்தபோது, இந்தப் பதிவின் மூலம் என் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீரை வரவழைத்தார். அதுவரை நாம்தான் வாழ்க்கையில் நிறைய சோகத்தைச் சந்தித்தவன் என்று சுய இரக்கம் கொண்டிருந்த நான், தலையில் குட்டிக் கொண்டு, ‘இதில் பாதியைக் கூட நீ அனுபவித்ததில்லை.’ என்று சொல்லி, சந்தோஷமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன்.
இப்படி தோழர் திரு.கணேஷ் அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டிருக்க அப்பதிவை தவறவிட்ட நான் விரைந்தோடி வாசித்தேன்.அந்த அனுபவத்தின் தலைப்பு பாணும் பஞ்சமும் சிறீமா அம்மாவும் என்னால் பாதிக்கும் மேல் வாசிக்க முடியவில்லை.அப்படியே எழுத்துகளில் கண்கள் நிலை குத்தி நின்றன.மனிதருள் எத்தனை சோகங்கள்.நம்முடன் அதை பகிர்ந்து கொண்டதற்கு பிறகு அவர்களின் மனது கொஞ்சம் இலகுவாகியிருக்குமென நினைக்கிறேன்.
சரி கணேஷ் அவர்கள் என்னதான் வாழ்க்கையில் அனுபவித்தார் என்று கேட்பது தெரிகிறது.அதற்குதான் அவர் ஒரு மாதத்திற்கு முன்பே தன் அனுபவங்களை எல்லாம் திரட்டி நடை வண்டிகள் என்று பெயரிட்டு தனது பத்திரிக்கை அனுபவங்களை சுவை பட சொல்லி வருகிறார்..வேகமாக சென்று நடைவண்டியில் துண்டைப் போட்டு இடத்தைப் பிடியுங்கள்.ஏற்கனவே அதில் பயணிக்கும் ஆட்கள் அதிகம்.
"உங்கள் காதலைக் கழற்றி இந்தப் பக்கத்தில் ஒட்டிவிட்டீர்கள் போல..இதை வாசிக்க வாசிக்க மீண்டும் ஒருமுறை காதல் வயப்படலாம் என்ற ஆசை எனை அறியாமல் எனக்குள் எழுகிறது..
.காதலை விட ....காதலைச் சொல்லாமல் தேக்கி வைத்திருப்பது நிஜமாகவே சுகம்தான்......
உண்மை தான் அந்த சுகம் காதலை சொன்ன பிறகு கிடைக்காது..
கயல்.கயல்..கயல்.."
மேற்கண்ட வாறு நான் வாசித்த என்னைக் கவர்ந்த ஒரு சுகமான பதிவிற்கு சென்ற மாதம் கருத்திட்டு வந்தேன்.இந்த மாதம் காதல் மாதம் என்பதால் சுவாசமே காதலாக என்ற தோழர் தேவாவின் காதல் அனுபவத்தை குறிப்பிடுகிறேன்.
கோவையில் இருக்கும் எனது தோழர் மகி.ஈரம் மகேந்திரன் அவர்களின் அனுபவங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே அவரின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆதரவற்றோருக்கெல்லாம் ஆதரவு கொடுப்பவர் மகேந்திரன்.
'மத்தவங்களுக்கு நல்லது செய்யனும்' என்ற வாக்கியத்தை தாரக மந்திரமாக சொல்லிக் கொள்கிறார்.இவரின் அனுபவங்கள் காதலைச் சார்ந்ததோ சொந்தங்களை தொலைத்ததோ இல்லை.தொலைத்த சொந்தங்களையும் தொலைந்து போன சொந்தங்களையும் மீட்டுத் தந்ததுதான்.யார் அந்த மகேந்திரன் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தனது பாட்டியையும் அவரோடு வாழ்ந்த சொற்ப காலங்களையும் அசை போட்டு பார்ப்பது வழக்கம்.அப்படித்தான் சகோதரி ராஜி தனக்கும் தன் பாட்டிக்குமான உறவை மீண்டும் ஒருமுறை பிறப்போமா என்ற தலைப்பின் கீழ் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.ஆரம்பத்தில் நகைச்சுவை இழையோடினாலும் இறுதியில் சோகம் படர்கிறது.
அனுபவங்கள் பலவகை.அதில் ஒருவகை அமானுஷிய அனுபவம். சமீபத்தில் நான் அப்படியான் அனுபவத்தை வாசிக்க வாய்த்தது.அமானுஷ்யம்-சிறுகதையாகவும் இருக்கலாம் என்று தன் அனுபவப் பகிர்வுக்கு தலைபிட்டிருந்தார் திரு.ரமணி அவர்கள்.இரவு நேரத்தில் வாசித்தேன். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது..ஆதலால் நீங்கள் இப்போதே சென்று வாசியுங்கள்.
2009/04/21
செவ்வாய்க்கிழமை. ஒவ்வொரு நாட்களையும்போலவே பொழுது விடியத்தொடங்கியது-பயந்து பயந்து.ஆனாலும்,அன்றையநாள் வழமையைவிட இன்னும் கொஞ்சம் துக்கமும் ரத்தமும் தோய்ந்தநாள்.20ஆம் திகதி அதிகாலையில் ....
இப்படி ஆரம்பித்து தன் நினைவேட்டின் அழிக்க முடியாத பக்கங்கள் எல்லாவற்றையும் அணு அணுவாய் விவரிக்கிறார் தோழர் சுவடுகள்.ஐய்யகோ..இந்த அனுபவம் இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்றே வாசித்தவுடன் நமது மனம் சொல்லும்.
ஒரு வங்கியாளர் தான் கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்க்கிறேன் என்கிறார்.அவரின் நினைவுகளை வாசித்தாலே போதும் அவரைப் பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம் ..அனுபவங்களைக் கூட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி 'தொடரும்' போட்டு முடிக்கலாம் என்பதை அவரின் பதிவில் தான் தெரிந்து கொண்டேன்..படிக்க படிக்க சுவையாகவும் நமக்கு ஒரு பாடமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.அந்த வங்கியாளர் வேறு யாருமில்லை.ஐயா வே.நடன சபாபதி அவர்கள்தான்.
இருபது வயது இளைஞர்கள் தான் காதலின் புகழ் பாட வேண்டுமா அறுபது வயதினர் காதல் பற்றி பேசக்கூடாதா..காதலை பற்றிய கருத்தரங்கிற்கு அழைப்பு விடுக்கும் மூத்த குடிமகனைப் பார்த்து மண் பூத்த சாலையில் ஆச்சர்யப் பட்டதை நினைவு கூறுகிறார் தோழர் விமலன்.
இன்றைய வாசிப்பு பழக்கம் நம் வாரிசுகளிடம் இல்லாததற்கு காரணம் நம் பெற்றோர்களே.ஆம் அவர்கள் தான் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊட்ட வேண்டும் என்ற கருத்தை தன் அனுபவத்தினூடாக பெற்றோரியல் என்ற தலைப்பில் சொல்கிறார் வேதா இலங்காதிலகம்.. பெற்றோர்களே தவறாமல் இந்த பதிவை வாசியுங்கள்..வாரிசுகளை வாசிக்க வையுங்கள்.
நாளை..
இத்தோடு முடித்துக் கொள்கிறேன்
நன்றி..
மீண்டும் சந்திப்போம்..
மதுமதி
தூரிகையின் தூறல்
|
|
நடன சபாபதி, ரமணி சார், வேதா அனைவரது பதிவையும் படித்திருக்கிறேன். மற்றது புதிது. எனக்கும் இந்த வலைச்சரத்தில் இடம் ஒதுக்கி மகிழச் செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள் நண்பா...
ReplyDeleteஉடனே வருகை தந்து கருத்துரைத்தமைக்கு நன்றி..
ReplyDelete"பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும்" என்ற ஹேமாவின் பதிவை நானும் படித்திருக்கிறேன்.மீண்டும் ஒருமுறை பிறப்போமா' ராஜியின் பாட்டி கலாய்த்த கதையுமாக பலரின் அனுபவங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteவலைச்சரத்தில் எனது பதிவையும் அறிமுகப்படுத்தி,
ReplyDeleteபெருமைப்படுத்தியதற்கு நன்றி கவிஞர் மதுமதி அவர்களே!
என்னையும் நல்ல பதிவர்களுடன் இணைத்து
ReplyDeleteஅறிமுகப் படுத்தியமைக்கு நன்றி
அறிமுகப் படுட்தப் பட்டவர்கள் அனைவருக்கும்
மிக அழகாக அனைவரையும் அறிமுகம் செய்த உங்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் .வாழ்த்துக்கள் ......
ReplyDeleteமிகவும் அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்றைய மாணவனுக்கும் இன்றைய மாணவனுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிந்தது.
ReplyDeleteபளிச்சிட்ட நிதர்சன வரிகள்! பாராட்டுக்கள் பகிர்வுக்கு..
அனுபவித்து எழுதிய உழைப்பு தெரிகிறது.
ReplyDeleteபாராட்டுகள்.மகேந்திரன் போன்றவர்களின் அறிமுகம் நெகிழ வைக்கிறது.
தென்றலையும் அறிமுகப்படுத்தி தென்றலுக்கு அனைவரையும் அறிமுகபடுத்துவது போல உங்கள் ஒவ்வொரு பதிவும் படிக்கும் பொது எனக்கு தோன்றுகிறது . அருமைங்க .
ReplyDeleteஓ! மதுமதி மிக்க மிக்க நன்றி என்னை அறிமுகம் செய்ததற்கு. அது போல பல அறிமுகங்களிற்கு வாழ்த்துகள். பலரை புதிதாக அறிய முடிகிறது. நன்றி. தங்களிற்கு நன்றி மட்டுமல்ல. மனமார்ந்த வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteவலைச்சர வாரத்தினை இனிமையாக கொண்டு செல்கிறீர்கள்.
தங்கள் பணி தொடார்ந்தும் சிறப்பாக இடம் பெற வாழ்த்துகிறேன்,
இங்கே அறிமுகமாகியிருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்! ஏலவே அறிமுகமாகியிருந்த நண்பர்களின் பதிவுகளை
மீண்டும் படிக்கும் சந்தர்ப்பத்தினை கொடுத்திருக்கிறீங்க.
நன்றி.
வணக்கம்.
ReplyDeleteஎன்னுடைய பதிவு பற்றிக்குறிப்பிட்டமைக்கு நன்றி.
தாமதத்திற்கு மன்னித்துக்கொள்வீர்களென்று நம்புகின்றேன்.-உங்களுடன் ஏற்கெனவே நான் தொடர்புகொண்டு காரணம் சொல்லியிருந்தேன்.மீண்டும் புதன் கிழமையிலிருந்து தொடர்ச்சியாக உங்களுடன் இணைந்துகொள்கிறேன்.தவறவிட்ட பதிவுகளுக்கும் வந்து என் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
நன்றி.
நிரூபன்..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..
சுவடுகள்..
ReplyDeleteசரி தோழர்..அதன்படியே செய்யுங்கள்.. ஆனாலும் வந்து கருத்துரைத்தமைக்கு நன்றி.
நல்ல விடயங்களைச் தவறவிடும் வாசிப்பாளர்களுக்கு மீண்டும் வாசியுங்கள் என்று அறிமுகம் செய்யும் உங்கள் பணிக்கு ஒரு பூச்செண்டு வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteமிக்க நன்றி சகோ..
ReplyDeleteமிக்க நன்றி மதி.ஓரிருவரைத் தவிர மிகுதி அத்தனைபேரின் தளங்களுக்கும் ஒட்டிப்போவேன்.மிக நல்ல அறிமுகங்கள்.உங்கள் பணி சிறப்பாக உள்ளது.வாழ்த்துகள் தோழா !
ReplyDeleteஅனுபவங்களை பகிர்ந்தளித்த
ReplyDeleteஅருமையான பதிவர்கள் அறிமுகம்.
வாழ்த்துக்கள் உங்களுக்கும் பகிரப் பட்டவர்களுக்கும்.
நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் .வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி..
ReplyDeleteஹேமா
மகேந்திரன்
நன்றி..
ReplyDeleteஆசியா ஓமர்
லட்சுமி அம்மா
கோவை டூ தில்லி
நல்ல நல்ல பதிவுகளை பகிர்ந்தீருக்கீங்க. நன்றி.
ReplyDeleteஎன் தோழர்களே, தோழிகளே... வணக்கம்
ReplyDeleteநான் மகேந்திரன்
மற்றவர்களை மகிழ்விப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்...
தேடல் இனிமையானது நான் தேடும் தேடல் புதுமையானது, ஒரு உயிர் கொண்டது,
தேடலில் நமக்கு எல்லாம் கிடைக்கும், இந்த தேடலில் மட்டும் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை கிடைக்கும்.
இல்லை என்பதில் கூட எதோ ஒன்று இருக்கிறது அதை தான் நான் தேடினேன்...
என்னை வாழ்த்திய அணைத்து நல இதயங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ....
என்னையும் மகிழ்வித்த மதுமதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
~மகேந்திரன்