07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 9, 2012

சிறுகதைகள் சிதறிக் கிடக்கின்றன

        தினைந்து ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் இருந்த வீடுகளில் தவறாமல் கதை புத்தகங்கள் நிச்சயம் இருந்திருக்கும்.பொதுவாக பள்ளி பருவத்தில் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு கவிதைகளை ரசித்துப் படிக்க ஆரம்பித்து அப்படியே சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்து மாத நாவல் வரை வந்து அடுத்த கட்டமாக வரலாற்று புதினங்களை வாசிக்க முனைந்திருப்போம்.ஒவ்வொருவரின் வாசிப்பு பழக்கம் இப்படித்தான் வளர்ந்திருக்கும். இன்றைய காலத்தில் வளர்கின்ற குழந்தைகளுக்கு வாசிப்பது என்பதே என்னவென்று தெரியாமல் போய்விட்டது. அதன் அடையாளமாக எத்தனையோ வார இதழ்கள் மாத இதழ்கள் காணாமல் போய்விட்டன. நூலகங்கள் கூட ஓய்வு பெற்ற மூத்த குடிமகன்களின் குடிலாகத்தான் காட்சியளிக்கிறது.இளைய தலைமுறையினரை அங்கே காணமுடிவதில்லை.
         வசர உலகத்தில் அவசரமாகத்தான் மனிதன் பயணித்துக் கொண்டு இருக்கிறான். இதன் விளைவு மனிதனுக்குள் இருந்த பொறுமை என்பது வெறுமையாகிவிட்டதுதான். சமூக வலைத் தளங்களின் மூலம் நொடியில் உலகைப் பார்த்து விடுகிறான் மனிதன்.பதினைந்து வருடங்களுக்கு முன்னாடி தொலைக்காட்சிகள் வீடுகளை ஆக்கிரமிப்பு செய்தபோதே படிக்க வாங்கி வைக்கப்பட்ட பல புத்தகங்கள் அலமாரியில் அனாதைகளாகத்தான் காட்சியளிக்க ஆரம்பித்தன.போதா குறைக்கு இணைய தளம் இல்லத்திற்குள் குடிபுகுந்தது கேட்கவா வேண்டும்.போட்டதைப் பார்க்கும் தொலைக்காட்களுக்கே அடிமையானவன் மனிதன்.வேண்டியதைத் தேடிப் பார்க்கும் இணையம் இருக்கும்போது எப்படி அலமாரியில் இருக்கும் புத்தகங்களின் மீது பார்வை படும்.இன்று ஒரு வார இதழையோ மாத இதழையோ வாசகர்களிடம் விற்பனை செய்வது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.அதனால் இன்று கடைகளில் விற்பனையாகிக்கொண்டு இருக்கிற சில இதழ்களும் இலக்கிய தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் மெதுவாக குறைத்து கல்லூரி இளசுகளின் படங்களையும் பேட்டிகளையும் பிரசுரக்கிறது.அப்படி செய்தால் தான் நமது இளசுகள் அந்த இதழ்களை  வாங்குகிறார்கள். தரமான சிறுகதைகளைத் தாங்கி வரும் இலக்கிய இதழ்கள் அன்றாடம் நூலகம் வரும் சொற்ப வாசகர்களை மட்டுமே அடைகிறது. தொலை தூர ரயில் பிரயாணத்திற்கு மட்டுமே கதைப் புத்தகங்கள் பயன்படுகின்றன்.ஆனால் ஒரு நிம்மதி என்னவென்றால் புதிய வாசகர்கள் தான் உருவாகவில்லையே தவிர பழைய வாசகர்கள் இணையத்தின் மூலம் தேடித் தேடி நிறைய விசயங்களை படித்து பயன் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்த ஒரு வாசகர் தினமும் திரட்டிகளின் வாயிலாக பல்வேறு வலைப்பூக்களுக்கு சென்று சிறுகதைகள வாசித்து வருகிறார்.என்ன முன்பு போல நேரமெடுத்து கதைகளை வாசிக்க முடிவதில்லை.ஒரு கதைக்கு பத்து நிமிடங்கள்தான் ஒதுக்க முடிகிறது.அப்படி ஒதுக்கிய பொழுதுகளில் சிறுகதைகளை மட்டுமே வாசிக்க முடிகிறது.
           ஆரம்பத்தில் வலைப்பதிவுகளில் சிறுகதைகள் அவ்வளவாக எழுதப்படவில்லை.இப்போது கணிசமான பதிவர்கள் எழுதுவருகிறாகள் காரணம் பல திரட்டிகள் சிறுகதை போட்டி வைத்து பதிவர்களை ஊக்குவிப்பதே.. சரி தோழர்களே நான் வலையுலகில் சுற்றி வந்தபோது நிறைய சிறுகதைகள் சிதறிக்கிடந்தன்.என் கண்ணில் பட்ட சிலவற்றை இங்கே ஒன்று சேர்க்கப் போகிறேன் வாசியுங்கள் .கருத்தை சொல்லுங்கள்.சிறுகதை எழுதுவோரை நீங்களும் ஊக்குவியுங்கள்..

           பெண்ணுக்கு திருமணம் என்பது எவ்வளவு கடினமானதோ அதைப்போல அவளுக்கு நல்ல கணவன் அமைவதும் கடினமானதுதான்.கணவன் சரியில்லாத மனைவிகளின் பாடு எப்படியிருக்கும்..இடுப்பில் கைக் குழந்தை.. பசியைப் போக்க கையாலாகாத கணவன்..என்ன செய்வாள் பெண்?.. என்ன வேண்டுமானாலும் செய்வாள். சகோதரி மஞ்சுபாஷிணி அவர்களின் நாயகி கமலம் என்ன செய்கிறாள் என்று கதம்ப உணர்வுகள் சென்று காணலாம்..

         கவலைகளும் இயலாமையும் மனிதனை ஆட்டிப்படைக்கும்போது அது மனிதனின் வாழ்நாளை தீர்மானிக்கும் சக்தியாகிவிடுகிறது. பொழுது விடியட்டும் என்று சொல்கிறார் தோழர் ஸ்டார்ஜன்.. போய்ப்பாருங்கள்  இருண்டு போன பெரும்பொழுது ஒன்று விடியவேயில்லை.
         பெண் பிள்ளைகளை ஈன்றெடுத்த நடுத்தர தாய்மார்களுக்கு தினம் தினம் கவலையைக் கொடுக்கும் ஒரு நிகழ்வு எதுவென்றால் அது செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் சொல்லும் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு நானூறு ரூபாய் ஏறியிருக்கிறது என்று சொல்லுவதுதான்.

ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்க 
உலக நாடுகள் ஒரு மித்த முடிவு.
தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!
அமெரிக்கன் டாலர் தடாலடி உயர்வு!
பங்கு வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம்!

மீடியாக்களில் கடந்த சில தினங்களாக இவைகள்தாம் தலைப்புச்செய்திகள்.   
      என்று சகோதரி ஸாதிகா சொல்கிறார்.என்னவென்று கேட்டால் ஆமாம்
தங்கமே தங்கம்  என்கிறார். 

  "னிதன் தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறரால் நிமிர்த்தி   வைக்கப்பட்டவனாக இருக்கக் கூடாது."
  என்று மார்க்ஸ் அரேலியன் சொன்ன பழமொழிக்கேற்ப ஒரு கதை படித்து இருக்கிறீர்களா..படித்து விட்டீர்களா..என்னது இல்லையா..அப்ப ஈரம் காய்ந்து போவதற்குள் தோழர் ரிஷபன் வலைப்பூவுக்கு போலாம் வாங்க.

   ண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது. 
காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. 
 மேற்கண்டவாறு நான் சொல்லவில்லை தோழர்களே..ஐயா வை.கோபாலகிருஷ்ணன் தான் சொல்கிறார்.எங்கு சொன்னார் என்று கேட்கிறீர்களா ..ஒரு சிறுகதையில சொன்னாரு..என்ன,சிறுகதை எங்க இருக்குன்னு கேட்கறீங்களா அவரோட காதல் வங்கி யில இருக்கு.வேகமா போய்ப் பாருங்க.

       
       பழக்கமில்லை..சரியாய் வராது என்றால்..எப்போதுதான் பழகிக் கொள்வது எப்படி சரியாய் வரும்..செய்யச் செய்ய தானே எதுவும் சரியாய் வரும்..என்று உணர்ந்து கோவையிருந்து டெல்லி சென்று பீட்ஸா சீடை செய்ய ஆரம்பிக்கிறார் சகோ ஆதி வெங்கட்..சென்று சுவைத்து விட்டு கருத்து சொல்லி இன்னும் நிறைய படைக்கச் சொல்லுங்கள்.

          " னுஷனை மனுஷனா மதிச்சு நேசிக்கணும். ரொம்ப சாதாரணம். மத்தவங்க நம்மள எப்படி நடத்தணும்னு நாம விரும்புறோமோ அப்படியே நாமளும் மத்தவங்கள நடத்தணும்"


முதல்ல மத்தவங்க மேல நேசம் வைக்கனும் .இதை வச்சு அற்புதமான சிறுகதை எழுதியிருக்கார் இளையபாரதம் சரண்.

                தோழர் அப்பாவி தங்கமணி வலைப்பூவிற்கு போனால் என்ன சத்தம் இந்த நேரம் பாட்டு பாடவில்லை.அவர் எழுதிய சிறுகதையின் தலைப்புதான் அது.விடுவேனா நானும் வாசிச்சேன்..உங்களுக்கு முகவரிய கொடுத்துடுறேன்.
               
"ப்ப்....பா.....ன்னு வெண்புரவி கத்த ஓடிப்போய் பார்த்தேன்..அங்க ரெண்டு அப்பாக்கள் ரெண்டு மகன்கள்..மனசுக்கு ஒண்ணு மகிழ்ச்சியா இருந்தது.இன்னொன்று அந்த மகிழ்ச்சியைப் பிடுங்கிக் கொண்டது.நீங்களும் போய்ப் பாருங்கள்.
               
 பாஸ்வேர்டு எதெற்கெல்லாம் பயன் படுத்தலாம் என்று ஓரளவிற்கு நம்மால் சொல்ல முடியும்..ஆனால் அனைத்திற்கும் பாஸ்வேர்டு வேணும் என்கிறார் வீடு சுரேஸ்.ஐம்பது வருங்களுக்கு பின்னால் நடப்பதாய் நல்ல கற்பனையோடு PASSWORD ஐ எழுதியிருக்கிறார்.அவசியம் வாசியுங்கள்.முடிவில் சின்னதாய் ஒரு நகைச்சுவை இழையோடும்..
---------------------------------------------------------------------
அடுத்த அறிமுகப் படலம்


      "கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்"


                                   நன்றி..
                      மீண்டும் சந்திப்போம்..
                                மதுமதி
                  தூரிகையின் தூறல்

53 comments:

 1. வலைப்பதிவின் சரித்திர ஏட்டில்
  கதைப்பதிவாளர்களுக்கான இடத்தில்
  இங்கு நீங்கள் பகிர்ந்திருக்கும் அனைவர்க்கும்
  என்றும் புகழ் நிலைத்திருக்கும்.

  ReplyDelete
 2. சிறுகதைகள் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. இன்று வார இதழ்கள் அதைப் புறக்கணித்து விட்டதில் வருந்துபவன் நான். நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தையும் அவசியம் படித்து விடுகிறேன். நன்றி!

  ReplyDelete
 3. தாங்கள் அறிமுகப் படுத்தி இருக்கிற பதிவுகள் அனைத்தும்
  நான் தொடர்கிற தரமான பதிவுகள் என அறிந்து
  என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்
  அறிமுக உரையும் அறிமுகங்களும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ரமணி..அப்படியா ஐயா..மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 5. சிறுகதைகள் படிப்பது சுவாரசியமான அனுபவம். இன்றைய அறி முகங்களுக்கு வழ்த்துகள்.

  ReplyDelete
 6. மகேந்திரன்..

  நிச்சயம் தோழர்..

  ReplyDelete
 7. கணேஷ்..

  உங்கள் வருகைக்கு நானும் நன்றி சொல்கிறேன்..

  ReplyDelete
 8. லட்சுமி அம்மா..

  மகிழ்ச்சி அம்மா..

  ReplyDelete
 9. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு என் அன்பு நன்றிகளும் மகிழ்ச்சியும்.

  ReplyDelete
 10. நல்ல அறிமுகங்கள்...சிறந்த சிறுகதைகள் என் சிறுகதையை அறிமுகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 11. //அப்ப ஈரம் காய்ந்து போவதற்குள் தோழர் ரிஷபன் வலைப்பூவுக்கு போலாம் வாங்க.//

  எனது மிகச்சிறந்த நண்பரும், எழுத்துலகில் எனக்கு வழிகாட்டியும்,
  என் மானஸீக குருநாதருமாகத் திகழும் திரு. ரிஷபன் அவர்களை அடையாளம் காட்டிப் பெருமைப்படுத்தியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 12. //உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது.

  அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.

  காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது.

  மேற்கண்டவாறு நான் சொல்லவில்லை தோழர்களே..

  ஐயா வை.கோபாலகிருஷ்ணன் தான் சொல்கிறார்.

  எங்கு சொன்னார் என்று கேட்கிறீர்களா ..

  ஒரு சிறுகதையில சொன்னாரு..

  என்ன,சிறுகதை எங்க இருக்குன்னு கேட்கறீங்களா!

  அவரோட காதல் வங்கி யில இருக்கு.

  வேகமா போய்ப் பாருங்க.//

  ஆஹா! என் “காதல் வங்கி” கதை மூலம் என்னையும் இன்று வலைச்சரத்தில் தாங்கள் அடையாளம் காட்டியுள்ளதற்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  அதுவும் என் குருநாதர் ரிஷபன் அவர்களுக்குக் கீழேயே ஒட்டியபடி காட்டியுள்ளது, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது.

  நன்றி நன்றி நன்றி. vgk

  ReplyDelete
 13. அப்படியா ஐயா..மகிழ்ச்சி..

  ReplyDelete
 14. எனக்கும் ரிஷபன் ஐயாவின் கதைகள் ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 15. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 16. ஸாதிகா..

  வீடு சுரேஷ்..

  நன்றி..

  ReplyDelete
 17. தாங்கள் என்னையும் என் சிறுகதை ”காதல் வங்கி”யையும் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நல்ல நேரம்,என் மற்றொரு சிறுகதைக்கு
  எனக்கு சர்வதேச அளவில் மற்றொரு பரிசு கிடைத்துள்ளது. மேலும் இதுபற்றி அறிய கீழே உள்ள இணைப்புக்கு வருகை தாருங்கள், ஐயா!

  http://gopu1949.blogspot.in/2012/02/hattrick-award-of-this-february-first.html

  இன்று தங்களால் அறிமுகம் ஆன அனைவருக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

  தங்களுக்கு எங்கள் நன்றிகள்.
  அன்புடன் vgk

  ReplyDelete
 18. அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 19. அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 20. முன்னுரையில் முத்தான கருத்துக்கள் !
  அறிமுகங்கள் அபாரம் ! வாழ்த்துக்கள் !
  ஆனால் முன்னைப் போல் இப்போதெல்லாம்
  கதை வாசிக்க நேரமும் பொறுமையும்
  குறைந்து விட்டது என்னிடத்தில்
  அனைவரையும் போல.

  ReplyDelete
 21. மளிகை மடித்து கொடுக்கும் காகிதத்தையும் விடாமல்
  படிக்கும் ஆர்வம் உண்டு. இவர்களை விடுவேனா கிளம்பிவிட்டேன் அருமையான முயற்சி நன்றி மதுமதி அவர்களே .

  ReplyDelete
 22. பல சிறுகதைகளிஅ அறிமுகம் செய்து இருக்கின்றீர்கள் நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாக்கின்றேன் பாஸ்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 23. நன்றி..

  இராஜேஸ்வரி..

  ReplyDelete
 24. நன்றி..

  தமிழ்வாசி பிரகாஷ்.

  ReplyDelete
 25. ஸ்ரவாணி..

  நீங்களும் வாசிப்பை மறந்துவிட்டீர்களா.. வாசியுங்கள்.விசயங்கள் கிடைக்கும்..நன்றி

  ReplyDelete
 26. சசிகலா..

  கே.எஸ்.ராஜ்

  நன்றி..

  ReplyDelete
 27. புதிய வாசகர் உருவாகவில்லை என்றாலும் பழைய வாசகர்கள் தேடிப்படிக்கின்றார்கள் என்று உண்மையைச் சொல்லி அழகான சிறுகதைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் வலையின் அறிமுகம் செய்ததற்கு நன்றி. காதல் வங்கி எனக்குப்பிடித்த சிறுகதை. மற்றவையும் இனி நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன்.

  ReplyDelete
 28. நன்றி நண்பரே. சிறுகதைகள் பல படித்தால் தான் என்னாலும் எழுதுவதற்கு இயலும். அவசியம் படிக்கிறேன்.

  ReplyDelete
 29. இதுவரை நான் கதைகள் எழுதவில்லை மனதில் ஆசை இருக்கிறது அனால் செயலில் இறங்கவில்லை நான் இப்போதுதான் எழுத தொடங்கி உள்ளேன் ...இந்த பகுதியில் அறிமுகமான அனைவருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன் உண்மைதான் சிறுகதைகள் எப்பொழுதுமே சுவாரசியமான அனுபவம். நன்றி மதுமதி அவர்களே ..

  ReplyDelete
 30. //தனிமரம் said...
  காதல் வங்கி எனக்குப்பிடித்த சிறுகதை. மற்றவையும் இனி நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன்.//

  மிக்க நன்றி, நண்பரே.

  இப்படிக்கு
  “காதல் வங்கி”
  உரிமையாளர் vgk

  [ஒரு சின்ன சந்தேகம் எனக்கு:
  தங்களுக்கு மிகவும் பிடித்ததாகச்
  சொல்லும் அந்தக்கதைக்கு இதுவரை பின்னூட்டம் தராதது ஏனோ?]

  ReplyDelete
 31. அருமையான தொகுப்பு சார். அனைத்தையும் பார்த்துவிடுகிறேன். நன்றி.

  ReplyDelete
 32. திரு.ரிஷபன் சார், திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் போன்ற பெரிய கதாசிரியர்களின் மத்தியில் முதன் முறையாக கதை என்று ஒன்றை முயற்சித்து எழுதியதை தாங்கள் படித்து இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார். மகிழ்ச்சியும் கூட....

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 33. நானும் இவர்களில் பலரின் கதையைப் படித்திருக்கிறேன்
  அனைவருக்கும் தங்களுக்கும்
  என வாழ்த்துக்கள்

  சா இராமாநுசம்

  ReplyDelete
 34. நானும் இவர்களில் பலரின் கதையைப் படித்திருக்கிறேன்
  அனைவருக்கும் தங்களுக்கும்
  என வாழ்த்துக்கள்

  சா இராமாநுசம்

  ReplyDelete
 35. வீடு சுரேஸ் அவர்களின் Password சிறுகதையைப் படித்தேன். மிக அருமை.சிதறிக்கிடக்கும் மற்ற சிறுகதைகளையும் படிக்க இருக்கிறேன்.

  நல்ல தொகுப்புக்கு நன்றி!

  ReplyDelete
 36. நன்றி..

  தனிமரம்

  சங்கர் பரத்வாஜ்.

  ReplyDelete
 37. யசோதா காந்த்..

  எழுதுங்கள் சகோதரி.படிக்க ஆவலாக இருக்கிறேன்.வாழ்த்துகள்.

  ReplyDelete
 38. நன்றி..

  துரைடேனியல்

  கோவை டூ தில்லி

  ரத்னவேல் ஐயா.

  ReplyDelete
 39. நன்றி..

  புலவர் ராமானுசம்..

  ReplyDelete
 40. வே.நடன சபாபதி

  அப்படியா மகிழ்ச்சி ஐயா..நன்றி.

  ReplyDelete
 41. வணக்கம் சகோதரம்...

  தங்களின் வலைச்சரப் பிரவேசத்திற்கு உடனே வந்து வாழ்த்துச் சொல்ல முடியவில்லை...

  தங்களுக்கும், தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டோருக்கும் வாழ்த்துக்கள் சகோதரம்...

  ReplyDelete
 42. வணக்கம் தோழர்..நலமா..பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது..நீங்கள் வந்தது மகிழ்ச்சி..நன்றி.

  ReplyDelete
 43. வாசிப்பு என்பதே அரிதாகிவிட்டது இப்போது. அதுவும் இந்த மாதிரி சிறுகதைகள் படிப்பவர்கள் மிகவும் அரிது. அதுவும் தேடித் தேடி படிப்பவர்கள் இல்லவே இல்லை. உங்களைப் பார்த்தால் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. என்னுடைய கதையையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி. மற்ற கதைகளையும் படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
 44. நல்ல அறிமுகங்கள் நண்பரே....

  தொடரட்டும் அறிமுகங்கள்....

  ReplyDelete
 45. இன்றைய அறி முகங்களுக்கு> மதுமதிக்கும் வழ்த்துகள்.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 46. Many thanks for referring my page... nice collections of other bloggers too.. thanks

  ReplyDelete
 47. சிறுகதைகள் எழுதுவோர் இப்போது குறைவாகவே உள்ளனர். இன்னும் படைப்புகளை நேர்த்தியோடு எழுதும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கிறேன். அப்போதுதான் தரமான படைப்பை உருவாக்க முடியும். இங்கே என்னையையும் குறிப்பிட்டுள்ளீர்கள். மிக்க சந்தோசம்+ மகிழ்ச்சி.

  அறிமுகத்துக்கு நன்றி மதுமதி சார்.

  ReplyDelete
 48. நன்றி..

  வெண்புரவி..


  நன்றி..

  வெங்கட் நாகராஜ்.

  ReplyDelete
 49. நன்றி..

  அப்பாவி தங்கமணி

  நன்றி..

  ஸ்டார்ஜன்

  ReplyDelete
 50. சிதறிக்கிடக்கும் சிறுகதைக்களங்களை சேர்த்தெடுத்துத் தொகுத்து எங்கள் பார்வைக்கு அளித்த தங்களுக்கு நன்றியும் பாராட்டும். ஒவ்வொரு தளமாகச் சென்று வாசித்து மகிழ்வேன்.

  ReplyDelete
 51. கீதமஞ்சரி..

  மிக்க மகிழ்ச்சி சகோதரி..

  ReplyDelete
 52. அன்பின் மதுமதி சார்,

  சிலநாட்கள் நான் எங்கும் பதியவில்லை உடல்நலம் சரியில்லை என்பதற்காக... அன்புச்சகோதரி வேதாம்மா எனக்கு சொல்லி தான் தெரியும் தாங்கள் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியது....

  எல்லோரின் அன்புக்கு கைம்மாறு என்ன செய்வேன் என்று தெரியாத நிலை....

  தாங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களின் வலைப்பூக்கள் நான் சில படித்திருக்கிறேன்.. அத்தனையும் அருமை...

  உடல்நலம் சீரானப்பின் கண்டிப்பாக திரும்ப வரவேண்டும், வந்து மறுபடி எல்லோரின் படைப்புகள் ஆழ்ந்து படித்து மனசாத்மார்த்தமான விமர்சனங்கள் எழுத காத்திருக்கிறேன்..

  அன்பு நன்றிகள் மதுமதி சார் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு...

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்...

  இவ்ளோ லேட்டா நான் பதிவு எழுதி இருக்கேன் மன்னிச்சுக்கோங்கப்பா....

  ReplyDelete
 53. அன்பின் மஞ்சுபாஷிணி..

  தங்களின் உடல்நிலை சரியானதும் வந்து பதிவிடுங்கள்..உடல்நிலைதான் முக்கியம்.இந் நிலையிலும் வந்து கருத்திட்டு ஊக்கப் படுத்தியதற்கு மிக்க நன்றி சகோதரி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது