ரசித்த பதிவுகள்
➦➠ by:
விச்சு
கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.
- மகாகவி பாரதியார்.
பல்வேறு தலைப்புகளில் பல தளங்களை அறிமுகப்படுத்தினாலும் அது நதிபோல் நீண்டு கொண்டே போய்கொண்டிருக்கிறது. பல தளங்கள் விடுபட்டிருக்கின்றன. இருந்தாலும் கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்த அளவு பல சிறப்பு வாய்ந்த பதிவுகளை அறிமுகப்படுத்தி வருகிறேன். அந்த வகையில் இன்று நான் ரசித்த பல பதிவுகளில் சில வரிசைகளைச் சரமாக தொடுத்துள்ளேன்.
இராஜராஜேஸ்வரி அம்மா பதிவு செய்த எங்கள் ஊர் ஸ்ரீ ஆண்டாளின் வைர மூக்குத்தி சேவையைத் தரிசனம் செய்வோம். பழமையிலே புதுமை கண்ட இஸ்லாம் என்று ஆமினா சொல்வதைக் கேளுங்கள்.ஷைலஜாவின் அன்புபூ ஒன்று வந்தது என்ற அருமையான கிருஸ்துமஸ் கவிதை என்று மூன்று மதங்களுமே அன்பை மட்டுமே வலியுறுத்துகிறது.
மேலும் ஆன்மீகப் பயணத்தில் கீதா சாம்பசிவத்தின் மாரியம்மாவையும் வணங்கி, கோமதி அரசுவின் திருமங்கையாழ்வார், கடம்பவன் பூங்காவின் எங்கெங்கு காணினும் சக்தி என்றும் சக்திபிரபாவின் கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் என்று கற்பனையிலும் ஆன்மீகம் தொடர்கிறது.
முத்துச்சரத்தில் ராமலட்சுமி அம்மாவின் கூண்டுப்பறவையின் சோககீதத்தையும் கேளுங்கள். கன்னாபின்னானு கதம்பம் படைக்கிறார் கவிதா பார்வைகள் தளத்தில். சே.குமார் அவர்கள் மனசில் கிராமத்து நினைவுகளை வடிக்கிறார். ஸ்ரவாணியின் கிராமத்திலும் நகரத்திலும் காதல் வித்தியாசங்கள் பாருங்கள். அட நிஜம்தான்!!. ஊர்சுத்தி வந்தால் காடெங்கும் ததும்புகிறது காமம்.
நான் வலைப்பூவிற்கு வந்த புதிதிலும் இன்றும் விரும்பி படிக்கும் ஒன்று ஜாக்கிசேகரின் சாண்ட்வெஜ் அண்ட் நான்வெஜ். அட்ரா சக்க சி.பி.செந்தில்குமாரை மறந்தால் யாரும் என்னை மன்னிக்கமாட்டார்கள். அவரின் சினிமா விமர்சனமும் அதற்குரிய படங்களும் அருமையாக இருக்கும். சிவகார்த்திகேயன் பெண்களை கலாய்த்த ஜோக்குகளை சொல்கிறார். பதிவுலக உறவுமுறைகளை காமெடியாய் கலாய்க்கும் நாய் நக்ஸ்.
சிவகுமாரின் மெட்ராஸ் பவனில் ஸ்பெசல் மீல்ஸ் உண்ண வாருங்கள். சூப்பராக இருக்கும். சூர்யஜீவாவின் மால்குடி சித்தனும் சுவராஸ்யமான ஒன்றுதான். செவிலியன் அவர்கள் பசியையும் ருசியையும் படம் போட்டு காண்பிக்கிறார். என்ன கொடுமையான உலகம் என எண்ணத்தோணும்.
பிரியமான வசந்த் மொக்கைத் தத்துவங்களை உதிக்கிறார்.விக்கியின் அகடவிகடங்களில் கைகொடுத்தல் பற்றி விளக்குகிறார். ரம்யமான வேளையில் மாதேவியின் பூபூக்கும் ஓசையை கேட்டுப்பாருங்கள். நீங்கள் பாடல்களை ரசிக்க வேண்டுமானால் ரசித்த பாடல் தளத்திற்கு சென்று "கண்ணில் என்ன கார்காலம்" என்ற பாடலைக் கேளுங்கள்.
கடற்கரயின் பதிவான ஊர்ப்புராணம் தொடரில் எனக்குத் தெரிந்த மெட்ராஸ் வாசித்துப் பாருங்கள்.வழிப்போக்கனது உலகத்தில் உலகின் வரலாறு தொடரை ரசியுங்கள்.
வேதா லங்காதிலகத்தின் வேதாவின் வலையில் வெள்ளைக்காரரும் விரும்புவார் என்ற சிறுவர் பாடல் வெகு சிறப்பாக உள்ளது. மஞ்சுசுபாஷிணியின் எங்கேயடா பாரதி நீ? அற்புதமான கவிதையில் இன்னொரு பிறப்பெடுத்துவாயேன் என்று பாரதியை அழைக்கிறார். வனப்பு பதிவில் சந்திரகௌரியின் ஆடைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீககும் வழிமுறைகளை தொடர்பதிவாகத் தருகிறார்.
அறிமுகம் :
1. நா.முத்துநிலவனின் வளரும் கவிதை வலைப்பூ. தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்த இவரின் படைப்புகளையும் பாருங்கள்.இவரது வலைப்பூவினை அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிகப்பெறும் மகிழ்ச்சி.
ரிலாக்ஸ் ஆகிட்டேன்!!!
நன்றி :
இதுவரை தொடர்ந்து ஏழு நாட்கள் பதிவு எழுதியதேயில்லை. அதுவும் மற்றவர்களின் தளங்களை அறிமுகம் செய்யும் ஒரு அரிய வாய்ப்பு. அதனை வலைச்சரத்தில் தொடுக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த சீனா ஐயா மற்றும் அவரது குழுவினர்களுக்கும் எனது முதல் நன்றி. இந்த வாரம் முழுவதும் அனைத்து பதிவுகளுக்கும் கருத்துக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நான் கணினியிலேயே அமர்ந்திருப்பதை பொறுமையாகவும் கோபத்தை அடக்கிக்கொண்டும் இருந்த எனது அன்பு மனைவிக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் எனது நன்றிகள்.
இப்படிக்கு
அலையல்ல சுனாமி - விச்சு...
படங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை (எனது போட்டோவைத் தவிர). இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துக்களையும் இடுங்கள்.
|
|
அருமையான பதிவு.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
உங்களது கடின உழைப்பை பாராட்டுகிறேன்.
வாழ்த்துகள்.
முதல் ஆளாக வந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteமிக மிக அருமையான பதிவர்களை
ReplyDeleteஅருமையாக அறிமுகப் படுத்தி
இந்த வார வலைச்சர ஆசிரியர் பணியினை
மிகச் சிறப்பாக நிறைவு செய்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
பல்வேறுவிதமான பதிவர்களை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்திருக்கறீர்கள். உங்கள் கடின உழைப்பிற்குப் பாராட்டுகள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்! நிறைவாகச் சென்றது வாரம்! வலைச்சர ஆசிரியராக சிறப்பாகப் பணியாற்றிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteநிஜத்தில் ஓர் ஆசிரியரான உங்களின்
ReplyDeleteஅழகான வழிநடத்துதலில் , புதிய வலைகளின்
அறிமுக அணிவகுப்பில் இந்த வலைச்சர ஆசிரியர்
பணியும் இனிதே நிறைவுற்று இருக்கிறது.
பட்டியலில் நானும் இடம் பெற்றதற்கு
என் மனமார்ந்த நன்றி கூறி வாக்கும் இடுகிறேன்.
இன்றும் நல்ல பதிவு.தங்களுடைய வலைப்பூக்களின் அறிமுகப்பதிவை தவறாமல் பார்வையிட்டு நான் இதுவரை அறியாத தளங்களாயின் அவற்றை பின்தொடருவேன். என்னைப்போன்ற பதிவர்களுக்கு பின்தொடர்ந்து புதிய தகவல்களை திரட்டுதல் முக்கியமான ஒன்று அதற்கு உதவும் வலைச்சரத்திற்கு ஒரு சல்யூட்.
ReplyDeleteஎன் தளம் http://www.googlesri.com/
Thanks....
ReplyDeleteVICHU...
மன நிறைவான பதிவு ! நன்றி நண்பரே !
ReplyDeleteநல்ல அறிமுகம் சார் ,
ReplyDeleteநட்புடன் ,
கோவை சக்தி
http://kovaisakthi.blogspot.in/
எனது மொழிபெயர்ப்புக் கவிதையும் இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. நன்றி. சிறப்பான வலைச்சர வாரத்துக்கு பாராட்டுகள்.
ReplyDelete"ரசித்த பதிவுகள்" என்று எமது வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.. வாழ்த்துகள்..
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியினை
ReplyDeleteமிகச் சிறப்பாக நிறைவு செய்தமைக்கு
சிறப்பான வாழ்த்துக்கள்
நல்ல சிறப்பான அறிமுகங்கள். எனக்கும் சில புதிய வலைத்தளங்கள் தெரியவந்திருக்கின்றன. நன்றி.
ReplyDeleteநிறைவான வாரம். சிறந்த ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ரம்யம் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
மிகச்சிறப்பான வலைச்சரப்பணி! அறிமுகங்கள் அனைத்தும் அருமை, முத்துநிலவன் அவர்களை அறிமுகப்படுத்தியது அருமை,மிக்க நன்றி!
ReplyDeleteவலைச்சரத்தில் என் பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றிங்க.
ReplyDeleteவலைச்சர வாரம் சிறக்க வாழ்த்துகள் !
என் பதிவுகள் எத்தன வந்துடுச்சு.. நன்றி நன்றி நன்றி
ReplyDeleteமிக்க நன்றிங்க விச்சு
நல்ல அறிமுகங்கள்! நிறைவாகச் சென்றது வாரம்! வலைச்சர ஆசிரியராக சிறப்பாகப் பணியாற்றிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சரத்தில் என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. ஒரு பதிவில் இத்தனை அறிமுகங்கள். வாசிச்சுட்டே வந்த எங்களுக்கே மூச்சு முட்டிருச்சுங்க.... இன்றைய அறிமுகங்களில் நிறையபேருடைய பதிவுகளுக்கு ரசிகை நான்.
ReplyDeleteவாசனையான கதம்பம் இன்றைய சரம்.
21 கருத்தாளர்களிற்குப் பின்பு தான்(நேர வித்தியாசத்தால்) வலைச்சரம் திறந்தேன். பல ரசனையான அறிகங்களோடு அடியேனையும்(வெள்ளைக்காரரும் விரும்புவார்-குழந்தைப்பாடல்)அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். மிக மகிழ்வும் மனமார்ந்த நன்றியும். உங்கள் அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்துகள், ஏழு நாள் தங்கள் பணி இனிதாக அமைந்தது. வாழ்த்துகளும், மிக மிக நன்றியும். மேலும் பல சிறப்புகள் பெற்று வாழ்க! வளர்க! என் அறிமுகத்தை முகநூலில் பகிர்வேன். என் வலையூடாக முகநூல் செல்லலாம். (என் முகநால் பட்ஜ் உள்ளது)
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்
என்கணவரின் பெயருக்கு ''இ'' னா முதலில் போடவேண்டும்.- இது அவரது விருப்பம்.வேதா. இலங்காதிலகம்
நிறைவான பணி,விச்சு.வாழ்த்துக்கள்.
ReplyDelete// இராஜராஜேஸ்வரி அம்மா பதிவு செய்த எங்கள் ஊர் ஸ்ரீ ஆண்டாளின் வைர மூக்குத்தி சேவையைத் தரிசனம் செய்வோம்.//
ReplyDeleteஅது என்ன சாதாரண பதிவா என்ன?
வைரம் போல மின்னிய பதிவல்லவோ!
அதை தாங்கள் இன்று வலைச்சரத்தில் அடையாளம் காட்டிப்பெருமைப் படுத்தியது மிகச்சிறப்பான செயல்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அனைத்து அறிமுகங்களும் அருமை.
அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.
தங்களுக்கு என் நன்றிகள்.
அருமையான பதிவுகள்! இந்த வாரம் முழுக்க தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை!
ReplyDeleteஒரு தேர்ந்த ஆசிரியர் என்பதைப் பதிவுகளின் தொகுப்பிலும் திட்டமிடலிலும் காட்டி நிரூபித்துவிட்டீர்கள்,மனமார்ந்த பாராட்டுகள் விச்சு.
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான பணி....
ReplyDeleteதொடங்கிய பணியை செவ்வென முடித்த திருப்தி....
அருமையான அறிமுகப்பகிர்வு...
இந்த வார வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக செய்தமைக்கு அன்பு வாழ்த்துகள்...
அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்...
பலதும் பத்துமான கலந்த அறிமுகங்கள்.சிலர் எனக்குப் புதியவர்கள்.நிச்சயம் பார்ப்பேன்.நன்றி விச்சு.உங்கள் பணியைச் சிறப்பாகவே நிறைவேற்றியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள் !
ReplyDelete"வேதா. இலங்காதிலகம்
ReplyDeleteஎன்கணவரின் பெயருக்கு ''இ'' னா முதலில் போடவேண்டும்.- இது அவரது விருப்பம்"
தவறுக்கு மன்னிக்கவும்.
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ReplyDeleteஇப்போத் தான் பார்த்தேன். வலைச்சர ஆசிரியரானதுக்கு முதலில் வாழ்த்துகள். பல தெரியாத புதிய அறிமுகப் பதிவுகளுக்கு நன்றி.
ReplyDeleteஎன்னுடைய பதிவை அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி.
தமிழ்மணத்தில் வாக்களிப்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. எனக்கு எப்போது திறந்தாலும் தமிழ்மணம் கட்டண சேவை தான் வருகிறது. கட்டண சேவையில் நான் இணையவில்லை. நான் தமிழ்மணத்திற்கு எப்போவோ போவதால் இது குறித்து எதுவும் புரியவில்லை. வாக்களிக்காமைக்கு மன்னிக்கவும். :((((((((
ReplyDeleteஉங்கள் கருத்துக்களே எனக்கு ஆயிரம் வாக்குகளுக்கு சமம். நன்றி கீதா சாம்பசிவம்.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி நண்பரே!!!...
ReplyDeleteநல்ல தொகுப்பு!!!
உங்கள் அறிமுகத்தில் இரண்டாவது முறை எனது பதிவு அறிமுகமாய்...
ReplyDeleteஎத்தனையோ முறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் வலைச்சர ஆசிரியரால் இரண்டு முறை அறிமுகமாவது இதுவே முதல் முறை...
நன்றி நண்பரே... வாழ்த்துக்கள் உங்களுக்கும்... உங்களால் அறிமுகமான என்னைப் போன்ற நண்பர்களுக்கும்...
என் பதிவையும் ரசித்து அறிமுக படுத்தியதற்கு நன்றி விச்சு.
ReplyDeleteஎவ்வளவு அறிமுகங்கள்!
சிறப்பாய், மனநிறைவாய் வலைச்சர பொறுப்பை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்.
தன்னலம் போற்றும் மனிதர்கள் மத்தியில், தகுதி உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றி, அறிமுகப் படுத்தும் தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!
ReplyDeleteதன்னலம் போற்றும் மனிதர்கள் மத்தியில், தகுதி உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றி, அறிமுகப் படுத்தும் தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteகருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றி விச்சு என் கவிதையை இங்கே சிறப்பித்து கூறீயதற்கு.. வார இறுதி நாட்களில் ஊரில் இல்லாமல்போய்விட்டதால் உடன் இங்கு மடலிடமுடியவில்லை
ReplyDeleteஷைலஜா
மிக்க நன்றி விச்சு......
ReplyDeleteதாமதமாக வந்துவிட்டேன் அருமையான அறிமுகங்கள்,அருமையாக பணியை முடித்துள்ளீர்கள் .
ReplyDeleteபதிவை ரசித்தமைக்கும், அறிமுகத்துக்கும் மிக்க நன்றி விச்சு.
ReplyDeleteவலைச்சரம் மணக்கும் பூச்சரத்தில் எனது கவிதைத் தோட்டத்துப் பூவையும் கதம்பத்தில் தொடுத்தமைக்கு அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் தோழர். வாழ்தல் இனிது. :)
ReplyDeleteநன்றி நண்பர் விச்சு அவர்களே!
ReplyDeleteபுதியவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியதோடு எனது வலைக்குள்ளும் புகுந்து
பின்தொடர்வோர் பட்டியலில் இணைந்த உங்கள் அன்பிற்கும் நன்றி.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
http://valarumkavithai.blogspot.in/
வலைச்சரத்தில் சிறப்பாக பணியாற்றிய தங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteரசித்த பாடல் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.