07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 24, 2012

ஜொலிக்கும் பெண் சிற்பிகள்


வணக்கம் அன்பு உள்ளங்களே..வலைச்சர வெள்ளி இன்றைய பதிவில் தமிழ்பதிவுலகில் தங்கள் எழுத்துக்களால் ஜொலித்துக்கொண்டிருக்கும் சகோதரிகளின் பதிவுச்சரங்களுடனும் புதிய அறிமுங்களுடனும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.பொதுவாக வலையுலகில் பதிவெழுத வரும் பெண்பதிவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.எனினும் தற்போது பதிவெழுதிக் கொண்டிருக்கும் பெண்பதிவர்கள் அனைவரும் தமிழ் பதிவுலகை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்லும் தேடல்களில் இருப்பது நிஜம்.சமூக அவலங்களைச் சாடுவதிலிருந்து,எதிர்கால சந்ததிகளை வளமாக்குவதுவரை அனைத்துப் பணிகளையும் வலையினூடே செய்து வருவது பாராட்டுதலுக்குரியது.

நேற்றைய கவிதைசரத்திற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொண்டு இனி எனது பார்வையில் பதிவுலகில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பெண் சிற்பிகள்.

இனி வலையுலகில் ஜொலிக்கும் பதிவுச் சிற்பிகளின் சரம்

முதலில் நாம் செல்ல இருப்பது பதிவுலக அம்மா லட்சுமி அவர்களின் வலைக்கு.தனது பயணபகிர்வுகளின் மூலம் அவருடன் நாம் சென்று வந்த உணர்வை அளிக்கவல்லவர்.இப்போது கூட தமிழ்பதிவர்களை கிலிபி ஆப்பிரிக்காவிற்க்கு அழைத்துச்செல்கிறார்.நாமும் செல்வோமா..

மிடில்கிகிளாஸ் மாதவி என்ற வலையில் நடுத்தர குடும்பத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நிகழும் சொத்து அடமானம் வைப்பதினை விரிவாக அலசியுள்ளார் சகோதரி மிடில்கிளாஸ் மாதவி

முக்திநாத் யாத்திரைக்கு சென்று வந்த அவர் நம்மளையும் பதிவின் வழியே அழைத்துச் செல்கிறார் சகோதரி கோமதி அரசு 

சாதாரணமானவள் வலையில் எழுதும் சகோதரி காதலைப்பற்றியும் காதலின் அடுத்த பரிணாமம் பற்றிய ஓர் அலசல் பதிவு

சகோதரி கீதமஞ்சரி அவர்களின் ஆஸ்திரேலியாவில் பள்ளிகளும் கற்பிக்கும் பாட முறைகளும் நமக்கும் பாடம் கற்றுத்தருகின்றன.இவரது கவிதை ஒன்று சமூகத்தினை சாடி நிற்கிறது பாருங்களேன்

தென்றல் எனும் வலையில் எழுதிவரும் சகோதரி சசிகலா அவர்கள் நடுத்தர வர்க்கத்தின் அவலத்தினை படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்

சகோதரி ஆச்சி அவர்களின் வலையில் தற்பொழுது மறக்க முடியாத பேருந்து நினைவுகள் இடைநில்லா பேருந்தாக ஓடிக்கொண்டிருக்கிறது.நீங்களும் பயணம் செய்ய என்னோடு வாருங்களேன்

சகோதரி சந்திரகவுரி அவர்கள் எழுதும் வலைப்பூவில் புத்தாண்டுத்தீர்மானங்கள் 2012 ஓர் சுய பரிசீலனை கவிதையை வாசிக்கலாமா,,

மதுரகவி வலை எழுதும் சகோதரி ராம்வி அவர்கள் தனது ஹாஸ்டல் நினைவுகளை சுவாரஸ்யம் மாறாமல் பதிவின் வழியாக தருகின்றார்.இந்த லின்கில் சென்று நீங்களும் வாசிக்கலாமே

டென்மார்க்கிலிருந்து வலை எழுதும் கோவைக்கவி அவர்களின் வேதா திலகம் வலையில் நான் ரசித்த கவிதை ஒன்று ஒருகாதலர் தினம் ஏன்

சகோதரி அம்பாளடியாள் அவர்களின் கவிதைகளில் ஓர் அழகிய கவிதை ஒன்று சொன்னால் புரிஞ்சுக்கோ..

தமிழ்கவிதைகள் தங்கச்சுரங்கம் வலை நடத்தும் சகோதரி ஸ்ரவாணி அவர்கள் தங்க மங்கைகளைப்பற்றி ஓர் பதிவிட்டுள்ளார்.916 ஹால்மார்க் சொக்கத்தங்கத்தினைப் பற்றிய ஓர் பதிவையும் வாசியுங்களேன்

அடுத்து சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆன்மீகப் பதிவுகள் அதிகம் எழுதுகிறார்.இவரது ஓவ்வொரு பதிவின் வழியே இணையத்திலிருந்தே கோயிலை தரிசிக்கலாம்.அவரின் மஹாசிவராத்திரி பதிவு ஒன்று.

டாக்டர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ரதனவேல் ஐயா அவர்களின் வலையில் எழுதிய நாய்கடியா ஜாக்கிரதை வெறி நாயாகவும் இருக்கலாம்.மருத்துவ விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கின்றார்.

முத்துச்சரம் வலையில் எழுதிவரும் சகோதரி ராமலட்சுமி அவர்களின் ஓர் பதிவுச்சரம் பள்ளி நிர்வாகங்கள்,ப்ளாஸ்டிக் அரக்கன் போன்ற தூறல்களின் துளிகள்

வானம் வெளித்த பின்னும் வலையில் எழுதிவரும் சகோதரி ஹேமா அவர்கள் காட்சிப்பிழை என்ற கவிதை வரிகளை வாசித்துவிட்டு வரலாமே.. 

அடுத்து ரம்யம் வலையில் பகிர்ந்து வரும் சகோதரி மாதேவி அவர்கள் பூக்களில் இத்தனை வகைகளா பார்த்ததும் பிரமித்துப்போனேன்.நீங்களும் பூ பூக்கும் ஓசையை பார்க்க வாங்களேன்

அடுத்து சமையல் அட்டகாசங்கள் வலையில் நமக்கு தேவையான சமையல் வகைகளை பரிமாறும் சகோதரி ஜலீலா கமால் அவர்கள்.ஆண்களுக்கு கோடைகாலத்தினை சமாளிக்கும் டிப்ஸ் தருகிறார்.கண்டிப்பாய் உதவும்.

என்பக்கம் வலையில் பகிந்து வரும் சகோதரி அதிரா அவர்கள் அவரது வளர்ப்பு மகள் சிறுகதையை வாசிக்க செல்லலாமா..

முத்துச்சிதறல் வலையில் எழுதிவரும் சகோதரி மனோசாமிநாதன் அவர்களின் சார்ஜாவில் வசிக்கும் இவரின் சமீபத்திய தமிழ்நாட்டுப்பயணம் பதிவு நம்ம ஊரு நல்ல ஊரு பதிவு.

அடுத்து உங்களை அழைத்துக்கொண்டு செல்லவிருப்பது அம்மாக்களின் வலைப்பூக்களுக்கு.குழந்தைவளர்ப்பு முதல் அனைத்தையும் விரிவாக அலசுகின்றனர்.தேசம் விட்டு தேசம் சென்றாலும் தமிழ் என்று வாழும் எனபதை உணர்த்தும் அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி

இன்றைய பதிவர் அறிமுகத்தில் 



தேவதையின் கனவுகள் என்ற வலையில் எழுதிவரும் சகோதரி தூயா அவர்கள்.தன்னைப்பற்றி சொல்வதற்க்கு ஒன்றுமில்லை ஏதாவது சாதித்துவிட்டுச் சொல்கின்றேன் என்கிறார்.புலிக்கு பிறந்தது பூனையாகாது ஏனெனில் இவரது பெண்வேங்கை பதிவே அதற்கு சாட்சி

தீபிகா கவிதைகள் என்னும் வலையில் வரும் சகோதரி தீபிகா ஈழத்தில் உதித்த உயிர்துளி எனது என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.இதோ அவரது கவிதைகளில் ஒன்று அறுந்து விழுந்த பல்லியின் வாலும் பயங்கரவாதிகளும்

புதிய அறிமுக பதிவர்களுக்கு வரவேற்று தமிழ் வலையுலகில் அவர்கள் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

விடுபட்டுப்போன நல் இதயங்கள் பொறுத்தருள்க.

நன்றி சகோதர சகோதரிகளே..

நட்புடன் சகோதரன்,

சம்பத்குமார்

79 comments:

  1. மிக்க மிக்க நன்றி சம்பத்குமார், என்னையும் ஒருவராகத் தெரிவு செய்து இங்கே பட்டியலிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்... அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீங்க.

    ReplyDelete
  2. ஒரு சிறுமாற்றம்.. என் பெயர் ”அதிரா”... மிக்க நன்றி.

    ReplyDelete
  3. @ athira said...

    //மிக்க மிக்க நன்றி சம்பத்குமார், என்னையும் ஒருவராகத் தெரிவு செய்து இங்கே பட்டியலிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்... அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீங்க.//

    மிக்க நன்றி சகோதரி

    தவறு திருத்தப்பட்டுவிட்டது

    ReplyDelete
  4. வலைச்சர வெள்ளி மணக்கிறது..!!

    ReplyDelete
  5. வணக்கம் சம்பத்குமார்.உண்மையில் ஒருதரம்கூட உங்கள் பக்கம் நான் வந்ததாக ஞாபகமில்லை.என் பார்வைக்கு நீங்கள் புதியவர்.என்றாலும் என்னைக்கூட அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.மிக்க நெகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன்.என்னோடு சேர்ந்து எத்தனை பெண் பதிவாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.உங்கள் நிறைவான பணிக்கு வாழ்த்துகள் சகோதரா !

    ReplyDelete
  6. @ தங்கம் பழனி said...

    //வலைச்சர வெள்ளி மணக்கிறது..!!//

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  7. @ ஹேமா said...

    //வணக்கம் சம்பத்குமார்.உண்மையில் ஒருதரம்கூட உங்கள் பக்கம் நான் வந்ததாக ஞாபகமில்லை.என் பார்வைக்கு நீங்கள் புதியவர்.என்றாலும் என்னைக்கூட அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.மிக்க நெகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன்.என்னோடு சேர்ந்து எத்தனை பெண் பதிவாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.உங்கள் நிறைவான பணிக்கு வாழ்த்துகள் சகோதரா ! //

    வணக்கம் சகோதரி

    தங்களின் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி..

    தங்களின் வெற்றிப்பயணங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  8. ”ஜொலிக்கும் பெண் சிற்பிகள்”
    என்று இன்று அடையாளம் காணப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆன மிகச் சிறந்த எழுத்தாளர்களே!

    அனைவருக்கும் வாழ்த்துகள்.
    பாராட்டுக்கள்.

    தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. அன்பிற்கினிய நண்பர்களே !

    தமிழ்மணத்தில் மைனஸ் வாக்களித்த அந்த முகம் தெரியா அன்பிற்கினிய நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  10. @ வை.கோபாலகிருஷ்ணன் said...

    //”ஜொலிக்கும் பெண் சிற்பிகள்”
    என்று இன்று அடையாளம் காணப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆன மிகச் சிறந்த எழுத்தாளர்களே!

    அனைவருக்கும் வாழ்த்துகள்.
    பாராட்டுக்கள்.

    தங்களுக்கு நன்றிகள்.//

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  11. தாங்கள் அறிமுகம் செய்துள்ள பெண் பதிவர்களின்
    அனைவரின் பதிவுகளும் மிக அருமையானவை
    அவர்களைத் தவறாது தொடர்பவன்
    நான் எனச் சொல்லிக் கொள்வதில்
    பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
    அறிமுகம் செய்த தங்களுக்கும்
    அறிமுகம்செய்யப்பட்டவர்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பலரை இன்று சிறப்பாக அறிமுகம் செய்தீர்கள் சம்பத் நல்வாழ்த்துக்கள்.வலையில் மங்கையர்களின் வெற்றியை ஜிரனிக்க முடியாதவர்களின் கோரமுகம்தான் மைனஸ் ஓட்டுப்போட்டு வெளிச்சம் காட்டுவது.

    ReplyDelete
  13. தங்கள் மனதிற்கு என் தளம் பிடித்து ,
    அதை மற்றவர்களுக்கும் பரிந்துரை
    செய்ததற்கு மிக்க நன்றி சகோ .
    ஒரு சிறு திருத்தம் - என் பெயர் - ஸ்ரவாணி .
    மற்ற அறிமுகங்களும் அருமை.

    ReplyDelete
  14. @Ramani said...

    //தாங்கள் அறிமுகம் செய்துள்ள பெண் பதிவர்களின்
    அனைவரின் பதிவுகளும் மிக அருமையானவை
    அவர்களைத் தவறாது தொடர்பவன்
    நான் எனச் சொல்லிக் கொள்வதில்
    பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
    அறிமுகம் செய்த தங்களுக்கும்
    அறிமுகம்செய்யப்பட்டவர்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள் //

    வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு.ரமணி அவர்களே..

    ReplyDelete
  15. @ தனிமரம் said...

    //பலரை இன்று சிறப்பாக அறிமுகம் செய்தீர்கள் சம்பத் நல்வாழ்த்துக்கள்.வலையில் மங்கையர்களின் வெற்றியை ஜிரனிக்க முடியாதவர்களின் கோரமுகம்தான் மைனஸ் ஓட்டுப்போட்டு வெளிச்சம் காட்டுவது.//

    வணக்கம் நண்பரே..

    மைனஸ் ஓட்டுப்போட்ட மகாராஜன் யார் என்று ஏகதேசமாய் உறுதிசெய்யப்ப்ட்டுவிட்டது.அவர்களின் பகுத்தறிவு அந்தளவிற்க்கு தான் என்று புறந்தள்ளி பயணத்தினை தொடர்கின்றேன்

    வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. @ ஸ்ரவாணி said...

    //தங்கள் மனதிற்கு என் தளம் பிடித்து ,
    அதை மற்றவர்களுக்கும் பரிந்துரை
    செய்ததற்கு மிக்க நன்றி சகோ .
    ஒரு சிறு திருத்தம் - என் பெயர் - ஸ்ரவாணி .
    மற்ற அறிமுகங்களும் அருமை.//

    மன்னிக்கவும் சகோதரி

    தவறு திருத்தப்பட்டுவிட்டது

    தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணங்கள்

    ReplyDelete
  17. @ Ramani said...

    //Tha.ma 2//

    மிக்க நன்றி திரு ரமணி சார்

    ReplyDelete
  18. தமிழ் வலையுலகில் அவர்கள் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்//

    சம்பத்குமார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    ’ஜொலிக்கும் பெண் சிற்பிகள் ‘ என்று அழகாய் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் . நன்றி.

    பாராட்டுக்கு தகுதியானவளாய் பதிவுகள் தரவேண்டும் என்று எண்ணத்தை ஊட்டுகிறது.

    ReplyDelete
  19. @ கோமதி அரசு said...


    ////சம்பத்குமார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    ’ஜொலிக்கும் பெண் சிற்பிகள் ‘ என்று அழகாய் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் . நன்றி.

    பாராட்டுக்கு தகுதியானவளாய் பதிவுகள் தரவேண்டும் என்று எண்ணத்தை ஊட்டுகிறது. ///

    வணக்கம் சகோதரி

    மனமார்ந்த நன்றிகள்

    தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணங்கள்

    ReplyDelete
  20. இன்றைய வலைச்சரத்தில் என் வலைப்பூவும் ஜொலிப்பது கண்டு மிகவும் மகிழ்வான நன்றி. தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பலரையும் அறிவேன். மிகுந்த திறமைசாலிகள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அழகிய சரமாய்த் தொகுத்து அளிக்கும் தங்களுக்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete
  21. அடுத்து சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆன்மீகப் பதிவுகள் அதிகம் எழுதுகிறார்.இவரது ஓவ்வொரு பதிவின் வழியே இணையத்திலிருந்தே கோயிலை தரிசிக்கலாம்.அவரின் மஹாசிவராத்திரி பதிவு ஒன்று/

    "ஜொலிக்கும் பெண் சிற்பிகள்" பிரிவில் ஜொலிக்கும் வண்ணம் எங்களை அறிமுகப்படுத்தியதற்கு நெகிழ்ச்சியான நன்றிகள்..

    ReplyDelete
  22. அன்பு நண்பரே,
    இங்கிருக்கும் பதிவர்களில் சிலர் தவிர
    அனைவரும் எனக்கு நன்கு பரீச்சமானவர்கள்..
    மற்றவர்களை சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  23. நன்றி.சகோதரரே,இன்று நீங்கள் வைத்திருக்கும் தலைப்பு விருது பெற்ற உணர்வைத் தருகிறது.சக பதிவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  24. சம்பத்... பதிவுலகில் பெண்களின் சாதனையை விளக்கும் அருமையான தொகுப்பு..

    ReplyDelete
  25. யாருய்யா அந்த மைனஸ் ஒட்டு போட்ட புண்ணியவான்....?

    ReplyDelete
  26. சம்பத், அந்த மைனஸ் ஒட்டு புண்ணியவானை கண்டுபிடிச்சாச்சு...
    மெயில் பாருங்க.

    ReplyDelete
  27. பல பெண்பதிவாளர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். அறிமுகம் செய்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ரம்யம் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  28. என்னுடைய பதிவினை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சம்பத்குமார்.
    அறிமுகமான அனைவருக்கும் வாழத்துக்கள்.

    ReplyDelete
  29. இன்றைய வலைசர மாலை பெண் உலகின் பெருமைக்கு சான்று
    அதை கோர்த்து ஒரு சிறந்த ஆண் மகன் என்பது இன்னும் பெருமையை தருகிறது நன்றி சகோதரர் சம்பத் மற்றும் பூவில் மணக்கும் பூவையர்களுக்கும்

    ReplyDelete
  30. இந்த பதிவின் வாயிலாக பெண் பதிவர்களை கவுரவித்து உள்ளீர்கள் சம்பத், அருமையான தொகுப்பு, நம் சகோதரிகளையும், நம் தாய் தங்கைகளை நாம் அறிமுகப்படுத்துவதில்தான் நாம் தாய்மைக்கு கொடுக்கும் சிறு மரியாதை,பதிவு குடும்பத்தில் அவர்களும் ஒரு அங்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது இந்த பதிவினில் மைனஸ் ஓட்டு போடுமளவு என்ன குறை கண்டு விட்டீர்கள் முகம் தெரியாத நண்பா!ஓ பெண்கள் அடிப்படியிலே இருக்க வேண்டும் என நினைக்கு கலாச்சார காவலரோ? எத்தனை பாரதி,பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாது...மைனஸ் ஓட்டிட்டவருக்கு என் வன்மையான கண்டனங்கள்!

    ReplyDelete
  31. வாவ்வ்வ்வ்வ்வ்

    எவ்வளவு புதிய பதிவர்கள்??

    உங்கள் உழைப்பு ரொம்ப நல்லாவே தெரியுது சகோ

    க்ரேட்

    ReplyDelete
  32. மாப்ள பதிவிட்ட உமக்கும் அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. சம்பத் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. Eeleyiiiiiiiiii
    minus vote pottavane....
    Nee unga veetil ulla
    pengalai.....

    Ippadithaan nadathuviya ?????????

    ReplyDelete
  35. தென்றலையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி . அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் . சிறப்பான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  36. எனது பதிவு இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    அறிமுகமாகியிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

    சிறப்பாகச் செல்லும் வலைச்சர வாரத்திற்காக தங்களுக்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete
  37. அனைவருமே ஜொலிக்கும் சிற்பிகள் தான்.நான் அறியாத சிலரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.நல்ல உழைப்பு தெரிகிறது நண்பரே பாராட்டுகள்.

    ReplyDelete
  38. @ கீதமஞ்சரி said...

    //இன்றைய வலைச்சரத்தில் என் வலைப்பூவும் ஜொலிப்பது கண்டு மிகவும் மகிழ்வான நன்றி. தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பலரையும் அறிவேன். மிகுந்த திறமைசாலிகள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அழகிய சரமாய்த் தொகுத்து அளிக்கும் தங்களுக்கு என் பாராட்டுகள்.//

    மிக்க நன்றி சகோதரி

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  39. @ middleclassmadhavi said...

    //Thank you very much !//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  40. @ இராஜராஜேஸ்வரி said...

    //"ஜொலிக்கும் பெண் சிற்பிகள்" பிரிவில் ஜொலிக்கும் வண்ணம் எங்களை அறிமுகப்படுத்தியதற்கு நெகிழ்ச்சியான நன்றிகள்..//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  41. @ மகேந்திரன் said...
    //அன்பு நண்பரே,
    இங்கிருக்கும் பதிவர்களில் சிலர் தவிர
    அனைவரும் எனக்கு நன்கு பரீச்சமானவர்கள்..
    மற்றவர்களை சென்று பார்க்கிறேன்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  42. @ thirumathi bs sridhar said...

    //நன்றி.சகோதரரே,இன்று நீங்கள் வைத்திருக்கும் தலைப்பு விருது பெற்ற உணர்வைத் தருகிறது.சக பதிவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.நன்றி.//

    மிக்க நன்றி சகோதரரே

    ReplyDelete
  43. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

    //சம்பத்... பதிவுலகில் பெண்களின் சாதனையை விளக்கும் அருமையான தொகுப்பு..//

    மிக்க நன்றி பிரகாஷ்

    //சம்பத், அந்த மைனஸ் ஒட்டு புண்ணியவானை கண்டுபிடிச்சாச்சு...
    மெயில் பாருங்க.//

    பார்த்தேன் நண்பா மைனஸ் ஓட்டு மகான் நன்றாயிருக்கட்டும்.

    ReplyDelete
  44. @ மாதேவி said...
    //பல பெண்பதிவாளர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். அறிமுகம் செய்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ரம்யம் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.//

    மிக்க நன்றி சகோதரி

    உங்கள் பயணங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  45. @RAMVI said...
    //என்னுடைய பதிவினை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சம்பத்குமார்.
    அறிமுகமான அனைவருக்கும் வாழத்துக்கள்.//

    மிக்க நன்றி சகோதரி

    உங்கள் பயணங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  46. @ கோவை மு.சரளா said...

    //இன்றைய வலைசர மாலை பெண் உலகின் பெருமைக்கு சான்று
    அதை கோர்த்து ஒரு சிறந்த ஆண் மகன் என்பது இன்னும் பெருமையை தருகிறது நன்றி சகோதரர் சம்பத் மற்றும் பூவில் மணக்கும் பூவையர்களுக்கும்.//

    மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  47. @ வீடு K.S.சுரேஸ்குமார் said...

    நன்றி நண்பரே..

    மறந்துவிடுவோம்

    ReplyDelete
  48. @ ஆமினா said...

    //வாவ்வ்வ்வ்வ்வ்

    எவ்வளவு புதிய பதிவர்கள்??

    உங்கள் உழைப்பு ரொம்ப நல்லாவே தெரியுது சகோ

    க்ரேட்//

    மிக்க நன்றி ஆமினா அக்கா

    ReplyDelete
  49. @ விக்கியுலகம் said...

    //மாப்ள பதிவிட்ட உமக்கும் அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  50. @ Lakshmi said...

    //சம்பத் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி அம்மா

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  51. @ NAAI-NAKKS said...

    //Eeleyiiiiiiiiii
    minus vote pottavane....
    Nee unga veetil ulla
    pengalai.....

    Ippadithaan nadathuviya ?????????//

    குரலுக்கு நன்றி நன்பரே

    விஷயத்தையே மறந்துவிடுவோம்

    ReplyDelete
  52. @ சசிகலா said...
    //தென்றலையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி . அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் . சிறப்பான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .//

    மிக்க நன்றி சகோ

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  53. @ ராமலக்ஷ்மி said...

    //எனது பதிவு இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    அறிமுகமாகியிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

    சிறப்பாகச் செல்லும் வலைச்சர வாரத்திற்காக தங்களுக்கு என் பாராட்டுகள்.//

    மிக்க நன்றி சகோதரி

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  54. அன்பின் சகோதரர் சம்பத்குமார் தங்கள் வலைச்சர ஆசிரியர் பணழக்கு இனிய நல் வாழ்த்துகள்! பெண் பதிவர் வரிசையில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள். இன்னும் புதிய பல அறிமுகங்களிற்கும் வாழ்த்துகள். பணி தொடரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  55. @ கோகுல் said...

    //அனைவருமே ஜொலிக்கும் சிற்பிகள் தான்.நான் அறியாத சிலரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.நல்ல உழைப்பு தெரிகிறது நண்பரே பாராட்டுகள்.//

    மிக்க நன்றி கோகுல்

    ReplyDelete
  56. அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி சகோ.. மற்ற சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  57. @ kovaikkavi said...

    //அன்பின் சகோதரர் சம்பத்குமார் தங்கள் வலைச்சர ஆசிரியர் பணழக்கு இனிய நல் வாழ்த்துகள்! பெண் பதிவர் வரிசையில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள். இன்னும் புதிய பல அறிமுகங்களிற்கும் வாழ்த்துகள். பணி தொடரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.//

    வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  58. @சாதாரணமானவள் said...

    //அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி சகோ.. மற்ற சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சகோதரி

    தொடரட்டும் உங்கள் பயணங்கள்

    ReplyDelete
  59. மிக்க மகிழ்ச்சி.
    எனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  60. சகோதரிகளின் அறிமுகம் அருமை... நண்பரே...

    தங்களின் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  61. @ Rathnavel Natarajan said...
    //மிக்க மகிழ்ச்சி.
    எனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  62. @ ராஜா MVS said...

    //சகோதரிகளின் அறிமுகம் அருமை... நண்பரே...

    தங்களின் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள்...//

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  63. வலைப்பதிவு எழுத்தாளர்களிலேயே அனேகமாக மிகச்சிறியவள் நானாகத்தான் இருப்பேன். இருந்தாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க சார்

    ReplyDelete
  64. சிறந்த பதிவர்களின் சிறந்த பதிவுகளை அறிமுகம் செய்துள்ளீர்கள்.தங்களின் பதிவு சிறந்த பதிவுகளுக்கான எங்கள் தேடலை எளிதாக்குவதாக உள்ளது.நன்றி

    ReplyDelete
  65. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மனங்கனிந்த நன்றி!

    ReplyDelete
  66. அறிமுகப்படுத்தப்ப‌ட்ட அனைத்து சகோத‌ரியர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  67. அனைவருக்கும் வாழ்த்துகள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  68. @தூயா said...

    //வலைப்பதிவு எழுத்தாளர்களிலேயே அனேகமாக மிகச்சிறியவள் நானாகத்தான் இருப்பேன். இருந்தாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க சார்//

    மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  69. @விஜயன் said...

    //சிறந்த பதிவர்களின் சிறந்த பதிவுகளை அறிமுகம் செய்துள்ளீர்கள்.தங்களின் பதிவு சிறந்த பதிவுகளுக்கான எங்கள் தேடலை எளிதாக்குவதாக உள்ளது.நன்றி//

    மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  70. @மனோ சாமிநாதன் said...

    //வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மனங்கனிந்த நன்றி!//

    மிக்க நன்றி சகோதரி

    வெற்றிப்பயண்ம் தொடரட்டும்

    ReplyDelete
  71. @தீபிகா(Theepika) said...

    //நன்றி.//

    வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  72. @திண்டுக்கல் தனபாலன் said...

    //அனைவருக்கும் வாழ்த்துகள்.
    பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  73. ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் நான் அறிந்தவர்களே!
    நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  74. @புலவர் சா இராமாநுசம் said...

    //ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் நான் அறிந்தவர்களே!
    நன்று!

    புலவர் சா இராமாநுசம்//

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  75. இப்பணி இலகுவான பணியல்ல. அப்படியிருந்தும் இப்பணியைத் தலைமேல் கொண்டு முடித்திருக்கும் உங்கள் முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள். அத்தனை தளங்களையும் பார்வையிட்டு அவற்றைப் பலர் அறிய அறிமுகப்பத்தியிருக்கின்றீர்கள். அத்துடன் என்னுடைய தளத்தையும் பலர் பார்வையிடச் சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றீர்கள். இவ்றிற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தையில் கூறிவிடமுடியாது. உங்கள் உழைப்புக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடரும் பொழுதுகள் நன்றாகவே அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்து நீங்கள் தொட்டுக்காட்டிய மற்றையோரையும் தரிசிக்க ஆவலுடன் விரைகின்றேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது