07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 12, 2012

இத்துடன் முடித்துக் கொள்கிறேன்...

                வணக்கம் தோழமைகளே..இன்றோடு ஒரு வார காலமாக நான் மேற்கொண்ட வலைச்சரத்தின் ஆசிரியப்பணி முடிவடைகிறது. இன்று இறுதிப் பதிவை இட்டு நன்றி தெரிவிக்கலாம் என்று பதிவிட அமரும்போது ஒன்று தோன்றியது..நன்றியதனைச் சொல்லி விடை பெறாமல் எனக்கு பிடித்த சில பதிவுகளையும் இன்று சுட்டிக் காட்டிவிட்டு விடை பெறலாம் என்று.. நாளொன்றுக்கு ஒரு பதிவு என திட்டமிட்டே பணியைத் தொடங்கினேன். ஆனால் செவ்வாய் அன்று தோழர் மாய உலகம் ரமேஷ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அன்றைய தினம் நானும் பதிவிடவில்லை.. தொடர்ந்து மின் வெட்டின் காரணமாகவும் ஏழு பதிவுகள் இடலாம் என்று எண்ணி இருந்ததில் ஆறு பதிவுகளே இட முடிந்தது.சரி தோழர்களே நான் ரசித்த சில பதிவுகளை சுட்டிக் காட்டிவிட்டு பின் விடை பெறுகிறேன்..
            கவிதை வாசிப்பவன் கற்பனையோடு தன்னை புகுத்திக் கொள்கிறான். கதை வாசிப்பவன் யூகத்திலேயே வாசிக்கிறான்.கட்டுரை வாசிப்பவன் யோசித்துக் கொண்டே வாசிக்கிறான். எதை வாசகன் வாசிக்கிறானோ அந்த மனநிலைக்கு அவனை கொண்டு செல்வது என்பது எழுத்தாளனின் கடமை. அப்படி நடக்குமாயின் அவன் எழுத்தில் வெற்றி பெற்றுவிட்டான் என்று அர்த்தம். கவிதையிலும் கதையிலும் கட்டுரையிலும் ஒரு வாசகனை திருப்தி படுத்தி விட முடிகிறது.ஆனால் நகைச்சுவை படைப்புகளை கொடுக்கும்போது அதை வாசிக்கும் வாசகன் சிரிக்க யோசித்தாலோ அல்லது சிரிக்க முடியாமல் திண்டாடினாலோ அந்த இடத்தில் அதை எழுதிய எழுத்தாளன் தோற்றுப் போகிறான்.
         எழுத்துகளால் வாசிப்பவனை சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமில்லை.அப்படி வாசிப்பவனை சிரிக்க வைக்கும் எழுத்தாளர்கள் குறைவே.நகைச் சுவையாய் எல்லோராலும் எழுதிவிட முடிவதில்லை.அப்படி நான் வலைப்பதிவில் வாசித்து சிரித்த சில பதிவுகளை சுட்டிக் காட்டுகிறேன்.
        தன் மனதில் தோன்றிய நகைச்சுவை ஆனாலும் சரி தான் படித்து ரசித்த நகைச்சுவை ஆனாலும் சரி அதை அழகாக நமக்கு பகிர்ந்தளிப்பதில் மிகவும் கெட்டிக்காரர் ஐயா சென்னை பித்தன் அவர்கள்..நகைச்சுவையோடு ஒரு கருத்தையும் முன் வைப்பது சிறப்பு. அவற்றுள் கீழ் காணும் இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்   மற்றும் சொர்கத்துக்கு போன ஜோடி போன்றவை சமீபத்தில் நான் ரசித்தது.
       பதிவுலகில் தான் பிரபலமாவது மட்டுமில்லாமல் தன் மனைவியையும் பிரபலப் படுத்திய பதிவர் யாரென்றால் அது தோழர் கணேஷ் அவர்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன்..அவரது எழுத்துகள் குறும்பையே சுமந்து வரும்..பன்முக எழுத்தாளரான அவர் பேய் கதை எழுதினால் கூட அதில் ஒரு நகைச்சுவை இழையோடுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் சரிதா செய்த ஷாப்பிங் மற்றும் சரிதாவின் சங்கீதம் போன்றவை நான் மிகவும் ரசித்தவை.
        மதிப்பிற்குரிய பதிவர் அம்பலத்தார் எழுதிய சொல்லாதே யாரும் கேட்டால் என்னை கவர்ந்ததில் ஒன்று அவரது எழுத்திலும் குறும்புகள் குதூகலிக்கும்.. .அவரது தமிழை வாசிக்கவும் சுவையாக இருக்கும்.
        காதலனுக்கு காதலியும் காதலிக்கு காதலனும் எழுதிய பல காதல் கடிதங்களை வாசித்திருக்கிறேன்.ஆனால் இந்தக் கடிதம் வாசித்ததும் உணமையில் ரசித்தேன் சிரித்தேன். நீங்களும் அந்த கடிதம் வாசித்து ரசிக்க சித்தாரா மகேஷின் சுவர் தேடும் சித்திரங்களில் ராக்கெட் விடுறவங்களுக்கு பதிவுக்கு செல்லுங்கள்.
         கவிதைகள் வாசிக்க ரேவாவின் பக்கங்களுக்கு சென்றபோது இந்த மனுசனைக் கட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே என்ற சகோதரி ரேவாவின் கலாட்டாவையும் ரசிக்க நேர்ந்தது.புன்னகைத்த படியேதான் வாசித்து முடித்தேன்.
         இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா வைத் தெரிந்து கொள்ள அதிரடிக்காரனை அணுகினேன்.அவர் சொன்ன பயோடேட்டாவை நினைத்து சிரிக்காமல் வேறென்ன செய்யமுடியும்.
         அப்படியே சிரித்துக் கொண்டு சோலை அழகுபுரம் சென்றால் நமது கிரிக்கெட் அணியின் போட்டோ கமெண்ட்ஸ் என்னை தொடர்ந்து சிரிக்க வைத்தது.
       ஆமாம் தோழர்களே..நேரமிருக்கும்போது பதிவுகளுக்கு சென்று சிரித்து வாருங்கள்.நான் உங்களிடம் இருந்து விடை பெறும் தருணம் வந்துவிட்டது.
         பதிவுலகில் வளர்ந்து வரும் நிலையில் என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக பதவி உயர்வு கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கும் தோழர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
       அதே சமயம் என்னை முதன் முதலாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சகோதரி ஷக்தி பிரபா அவர்களுக்கும் இரண்டாவது முறையாக என்னை வலைச்சரத்தில் சுட்டிக் காட்டிய ஐயா சென்னைப் பித்தன்  அவர்களுக்கும் மூன்றாவது முறையாக வலைச்சரத்தில் பெருமைப் படுத்திய வீடு சுரேஷ் அவர்களுக்கும் எனது அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

           என் பெயர் மதுமதி
           கவிதைகள் விளைந்து கிடக்கின்றன
           சிறுகதைகள் சிதறிக் கிடக்கின்றன
           கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்
           அனுபவங்களை அனுபவிக்கலாம்
           இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

            மேற்கண்ட பதிவுகளை தொடர்ந்து வாசித்து வாழ்த்து சொல்லி கருத்திட்டு இந்த வார ஆசிரியப் பணியை சிறப்பாக செய்து முடிக்க உற்சாகம் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிதனை சமர்ப்பிக்கிறேன்..எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் விடை பெறுகிறேன் என்று சொன்னால் மனதில் ஒரு ஓரமாய் சின்ன வருத்தம் இருக்கும் அப்படித்தான் எனக்குள்ளும் இருக்கிறது.

நன்றி..நன்றி..நன்றி..

                    மதுமதி
         தூரிகையின் தூறல்
          

31 comments:

  1. என்னைப் பற்றிக் குறிப்பிட்டு அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அருமையாகத் தொகுத்து இருக்கிறீர்கள்
    மதி சகோ ! தங்கள் பணியை வெகு சிறப்புடன்
    செய்து முடித்து இருக்கிறீர்கள். இறுதியில்
    தங்களின் ஆறு பதிவுகளையும் இணைத்திருப்பது
    அருமை. பல பயனுள்ள பதிவர்களைத் தந்ததற்கு
    நன்றிகள் பல. மீண்டும் தூரிகையின் தூறலில்
    சந்திப்போம். வாழ்த்துக்கள் & வணக்கம் !

    ReplyDelete
  3. சென்னைப் பித்தன்.

    உடன் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  4. ஸ்ரவாணி..

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.. நாளை தூரிகையின் தூறலின் வாயிலாக சந்திப்போம்.

    ReplyDelete
  5. செம்மையோடும்,சிறப்பாகவும் வலைச்சரத்தில் ஆசிரியப்பணியை செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள் திரு மதுமதி அவர்களே! நகைச்சுவைகளை தரும் பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  6. தங்களது வலைச்சரப் பணி சிறப்பாக இருந்தது.....
    இன்றைய அறிமுகங்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்....

    ReplyDelete
  7. வே.நடன சபாபதி..

    நன்றி ஐயா..

    ReplyDelete
  8. நன்றி..

    கோவை டூ தில்லி

    ReplyDelete
  9. அருமையான அறிமுகங்கள்.

    மனநிறைவு அளித்த நிறைவுப்பகுதி.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. மனைவி/கணவர் துணை இன்றி பதிவர்களால் சிறக்க இயலுமா கவிஞரே... அவ்வகையில்தான் என் மனைவியை நகைச்சுவைத் துணைவியாக்கியதும். அதை நீங்கள் ரசித்துக் குறிப்பிட்டது என் பாக்கியம். ரேவா மற்றும் சித்தாரா ரமேஷ் ஆகியவர்களை இனி படித்து கருத்திடுகிறேன். இனிய வலைச்சர வாரத்தில் உங்களோடு பயணித்ததில் மன மகிழ்வுடன் என் நன்றியை நவில்கிறேன்!

    ReplyDelete
  11. அறிமுகமானவர்கள் எனும் போது மனதில் மகிழ்வு தானே! இப்படித்தான் எனக்கும் தங்கள் பணி மன நிறைவாக இருந்தது. இதே வலைச்சரத்தில் சகோதரர் மாயஉலகம் ராஜேஸ் என்னை அறிமுகம் செய்ததை எப்படி மறப்பது. சொல்லும் பேதே கண்கள் குளமாகிறது. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
    மிக மிக நன்றியுடன் வாழ்த்துகளையும் தங்கள் பணிக்குக் கூறுகிறேன். வாழ்க! வளர்க!. தொடருவோம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. செம்மையாக செய்து முடித்து விட்டீர்கள் . வலைச்சரத்தில் அடுத்தடுத்த தங்கள் ஒவ்வொரு பதிவுமே மிகவும் அருமை . இன்னும் தொடர்ந்திருந்தாலும் மகிழ்ச்சி அளித்திருக்கும் .

    ReplyDelete
  13. அறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. கணேஷ் அவர்களே ,சரியாக சொன்னீர்கள்... மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  16. ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக நிறைவேற்றியதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. // கோவை கவி..//

    //ரத்தினவேல் நடராஜன் //

    தங்கள் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  18. திரு.வை.கோபாலகிருஷ்ணன்..

    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும்

    மிக்க நன்றி

    ReplyDelete
  19. //சசிகலா //
    //வி.பாலகுமார்//

    மிக்க நன்றி..

    ReplyDelete
  20. லக்ஷ்மி அம்மா,

    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி..

    ReplyDelete
  21. சிறப்பான அறிமுகங்கள் மின்வெட்டுக்கு இடையில்...வாழ்த்துகள் தோழர்மதுமதி அவர்களுக்கு இனி வரும் நண்பருக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  22. நன்றி

    வீடு K.S.சுரேஸ்குமார்

    ReplyDelete
  23. சிறப்பான பணிக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  24. அருமையாய் முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து தங்கள் தளத்தில் தொடருவோம்.

    ReplyDelete
  25. நிறைவான ஆசிரியர் பணி செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  26. சிறப்புடன் செய்தீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. @மதுமதி:

    என்னுடைய பதிவை அறிமுகம் செயத்தற்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  28. பலரை அறியக்கூடியவாறு வலைச்சர ஆசிரியராக இருந்து சிறப்பாக பணி செய்தீர்கள் வாழ்த்துக்கள் கவிஞரே!

    ReplyDelete
  29. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது