07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 26, 2012

சம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப் பைங்கிளி பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !


அனைவருக்கும் வணக்கம்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சம்பத் குமார் - தான் ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக, கடுமையாக உழைத்து, பலப்ப்ல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் தேடித்தேடி - கண்டு பிடித்து - அறிமுகப்படுத்திய விதம் நன்று. புதுப் பதிவர்களையும் அறிமுகப் படுத்துவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு பலரையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகளில் எல்லாம், அறிமுகப்படுத்திய விபரத்தினை மறுமொழியாகவும் இட்ட நல்ல செயலினையும் புரிந்திருக்கிறார்.

அறிமுகப்படுத்துவதற்கு எடுத்துக் கொண்ட தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள். அததனையும் அருமை. பிளாக்கர் டிப்ஸ், மனம் கவர்ந்த பதிவுகள், கவிதைச் சரம், பெண் சிற்பிகள், பல்சுவைப் பதிவர்கள், ஃபேஸ்புக் மற்றும் கூகுள்+ டிப்ஸ் எனக் கலக்கி விட்டார். அத்தனையும் அருமையான அறிமுகங்கள்.

அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களும் பதிவுகளும் : 146
தான் எழுதியதில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் : 16
பெற்ற மறு மொழிகள் :445

நாளை முதல் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் தென்காசியினைச் சார்ந்த தமிழ்ப் பைங்கிளி. இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியினைச் சார்ந்த இடைக்கால் கிராமத்தினை சொந்த ஊராகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று - தற்போது பொதிகைத் தொலைக் காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராகப் பணி புரிகிறார்.

14 வயதிலேயே தன்னுடைய கவிதைப் பயணத்தினைத் துவக்கியவர்.முதல் கவிதைக்கு, இவர் வளர்த்த கிளியின பெயரினையே - இவரது தந்தை - கவிதை எழுதியவருக்குப் புனைப் பெயராக - தென்காசித் தமிழ்ப் பைங்கிளி - சூட்டி விட்டார்.

சம்பத் குமாரினை நன்றியுடன் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். தென்காசித் தமிழ்ப் பைங்கிளியினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சம்பத் குமார்
நல்வாழ்த்துகள் தென்காசித் தமிஅழ்ப் பைங்கிளி

நட்புடன் சீனா



11 comments:

  1. சோதனை மறு மொழி

    ReplyDelete
  2. அசாத்திய பணியாற்றியிருந்தார் சம்பத்.பாராட்டுகள்.

    பொறுப்பேற்கும் தென்காசிதமிழ் பைங்கிளிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஒருவார காலம் வலைச்சரத்தை கலக்கியதற்கு வாழ்த்துகள் சம்பத்.

    ReplyDelete
  4. பாராட்டுக்கள் சம்பத்.
    வாழ்த்துக்கள் தமிழ்ப்பைங்கிளி.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பைங்கிளி நல்ல சேவையை செய்யுங்க.

    ReplyDelete
  6. அருமையானத் தேர்ந்தப் பதிவுகளையும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியும் பெருமைப்படுத்தியும் அற்புதப் பணியாற்றிய சம்பத் குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தென்காசிப் பைங்கிளிக்கு இனிய வரவேற்புகள்.

    ReplyDelete
  7. வாழ்த்திய அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றி

    இந்த வார ஆசிரியர் பொறுப்பேற்கவிருக்கும் சகோதரி தென்காசி தமிழ்பைங்கிளிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  8. சம்பத்க்கும் வாழ்த்துக்கள்,

    தமிழ்ப்பைங்கிளி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அசாத்திய பணியாற்றியிருந்தார் சம்பத்.பாராட்டுகள்.

    பொறுப்பேற்கும் தென்காசிதமிழ் பைங்கிளிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பைங்கிளி நல்ல சேவையை செய்யுங்க.

    ReplyDelete
  11. என்னுடைய வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது