பனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி
➦➠ by:
தென்காசித் தமிழ்ப் பைங்கிளி
வணக்கம் வலைச்சர அன்பர்களே,
தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்ப மிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
- மகாகவி சுப்ரமணிய பாரதியார்
என்று பாடிய மாகாகவி பாரதியார் பிறந்தமண்ணில்
தமிழூர் என்ற ஊரையே உருவாக்கி தமிழுக்காக
தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்துவரும்
அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களுடைய ஊர் அருகில்
மூத்த எழுத்தாளர் கலாபிரியா அவர்கள் வாழ்ந்து வரும் கிராமம் தான்
எனது ஊர் இடைகால்.
எனது உண்மையான பெயர் அருள்மொழி.
எனது வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு காட்டுக் கிளியின் பெயரே தமிழ்ப் பைங்கிளி.
என் தந்தை நான் எழுதிய முதல் கவிதைக்கு அத்தான் மட்டும் புனைப் பெயராகச் சூட்டினார்.
14 வயதில் என்னுடைய கவிதைப் பயணம் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது.
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் வலைப்பதிவினை ஆரம்பித்து கவிதைகளை எழுதி வருகிறேன்.
எத்தனையோ மிகச் சிறந்த மூத்த பதிவர்கள் வலைதளங்களில் உலா வரும் வேளையில்
இந்த சிறியவளையும் மதித்து பொறுப்பினை அளித்த வலைச்சர குழுவிற்கும் சீனா அய்யா அவர்களுக்கும்
வலைப் பதிவர்களைப் பெருமைப்படுத்திவரும் ஈரோடு சங்கமம் குழுவினருக்கும்
முதன் முதலில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய வீடு சுரேஷ் குமார்,திரு .சம்பத் அவர்களுக்கும்
நன்றிகள்.
படத்தைப் பார்த்து கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
இப்படி படம் பார்த்து கவிதைகள் எழுதிஉள்ளேன் .
தந்தையாய்த் தாயுமானவன் என் தந்தைக்காக
அம்மாவும் கனகாம்பரமும் என் அன்னைக்காக
என்னைப் போல எனக்குப் பிடித்த கவிதை
பிறப்பிற்கொரு ஒப்பாரி சமுதாயத்திற்காக
ஒரே ஒரு முத்தம் காதல் கவிதைகள் .
என்னுடைய சுய புராணங்களை இத்துடன் முடித்துக் கொண்டு
வரும் ஆறு நாட்களுக்கு
சமுதாய சிந்தனையுடன்
புதிய பதிவர்களுடன்,
சிந்திக்கத்தக்க கருத்துக்களை எழுதக் கூடிய பதிவர்களையும்,
சிந்திக்கத்தக்க கருத்துக்களை எழுதக் கூடிய பதிவர்களையும்,
வியக்கவைக்கும் பதிவர்கள்
1 தேடித் திரிகிறான் இங்கொருவன்
2 இவர்தான் மனிதன்
3 இவரிடம் தமிழ்வந்து தமிழ் கற்றுக்கொள்ளும்
4 கண்ணீர்தான் சொந்தம்
5 எண்ணங்களுக்குச் சொந்தக்காரன்
6 சகலகலா வல்லவன்
இப்படிப்பட்ட ஆறு அருமையான வலைப்பதிவுகளைப் பற்றியும்
உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறேன். நன்றி.
- நாளையிலிருந்து தமிழ்ப் பைங்கிளி வலைதளங்களுக்கு அழைத்துச் செல்வாள் வலைச்சர நேயர்களை.
|
|
"பனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி"-க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் பைங்கிளி - இன்னும் பனி இருக்கிறதா சென்னையில் - சிவராத்ரி முடிந்து விட்டதே ! பணியினைத் துவங்கி - நல்லதொரு அறிமுகம் அளித்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துக்கள். உங்கள் ஊர் இடைகால்'ஆ!! நான் அங்கு வந்திருக்கிறேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteபனி இன்னும் குறையவில்லை சென்னையில்.வாழ்த்துக்களுக்கு நன்றி
ReplyDeleteகருவின் குரல் சுட்டி வேலை செய்ய வில்லை - கவனிக்கவும் பைங்கிளி
ReplyDeleteவாருங்கள் விச்சு..இடைகால் வந்தால் எனது வீட்டிற்கும் வருகை தாருங்கள் நண்பரே
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் பைங்கிளி - அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி - சென்று - பார்த்து - படித்து - மகிழ்ந்து - மறுமொழிகளும் இட்டு விட்டேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் சகோ! பனியிலும் வலைசரப்பணியை சிறப்பாக முடிப்பீர்கள் என ஆரம்பமே கூறுகிறது வாழ்த்துகள்!
ReplyDeleteவலைச்சர ஆசிரியராய் சிறப்பான பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி..
ReplyDeleteநட்புடன்
சம்பத்குமார்
உங்கள் கவிதைகளை பார்க்கும் போது படத்துக்கு கவிதையா,கவிதைக்கு தேடிய படமா என்ற சந்தேகம் இருந்தது,இப்போது தீர்ந்தது.
ReplyDeleteஅறிமுகம் நல்லாருக்கு.சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்.
அருமையான அறிமுகம் . தொடருங்கள் ...
ReplyDeleteஆஸ்கார் அவார்ட் அனவுன்ஸ் பண்ண அன்னைக்கு நீங்க வலைச்சர ஆசிரியராய் வலம் வந்திருக்கீங்க.. கலக்குங்க தோழி..அவார்ட் வாங்குற அளவுக்கு அசத்தலா எழுதுங்க.(பதிவுலகத்துல மாத்தி மாத்தி கொடுத்து வாங்கிக்கிற டுபாகூர் விருதை நான் சொல்லலீங்கோ)..
ReplyDeleteஎதிர்காலம் உங்கள் எழுத்துக்கு மேடை அமைத்து தரட்டும்..உங்கள் திறமை மென்மேலும் வளரட்டும்..வாழ்த்துகள்..
வாழ்த்துகள் பைங்கிளி.. தொடரட்டும் எழுத்தாக்கம்.
ReplyDelete- நாளையிலிருந்து தமிழ்ப் பைங்கிளி வலைதளங்களுக்கு அழைத்துச் செல்வாள் வலைச்சர நேயர்களை.
ReplyDeleteவாழ்த்துகள்...
தமிழ் பைங்கிளி! வாங்கோ! நல்ல பணி தொடரட்டும். வாழ்த்துகள் தொடர்ந்து பின் தொடர எண்ணம் . தூள் கிளப்புங்க. இன்று ஞாபகமாய் வலைச்சரம் திறக்க வைத்த இறைக்கு நன்றி. வாழ்! வளா:க!
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயன்மிக்க பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துங்கள்.
வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களைப் பற்றிய அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன்,
ReplyDeleteஉங்கள் சமூகம் சார்ந்த அக்கறைக்கு தலை வணங்குகிறேன்,
உங்கள் பணிமேலும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்
உங்களுக்கு வாழ்த்து சொல்வதை மிகப் பெருமையாய் கருதும் உங்களின் அன்பு நண்பர்.
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
ReplyDeleteவாழ்த்துகள். உங்கள் பணி சிறக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துகள். உங்கள் பணி சிறக்கட்டும்.
ReplyDelete