07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 8, 2012

க'விதை'கள் விளைந்து கிடக்கின்றன.

          என் பெயர் மதுமதி என்ற எனது அறிமுக படலத்தை வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்திய தோழமைகளுக்கு நன்றி..

க'விதை'கள் விளைந்து கிடக்கின்றன


          'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்றான் பாரதி. இப்போது பாரதி இருந்து வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பு ஏற்று பல வலைப்பூக்களுக்கு  பயணம் செய்திருந்தால் 'எங்கெங்கு காணினும் கவிதையடா' என்றுதான் சொல்லியிருப்பான் என்றே எனக்குத்தோன்றியது.பெரும்பான்மையான  வலைப்பூக்களில் கவிதைகளே பூத்துக் குலுங்குகின்றன என்று சொல்வதை விட நம் பதிவர்கள் விதைத்த க'விதை'கள் பதிவுலகமெங்கும் விளைந்து கிடக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்..என் கண்களுக்கு எட்டிய வரைக்கும் அறுவடை செய்திருக்கிறேன். வாருங்கள் ருசித்து பசி தீர்ப்போம்.
        உலகமொரு நாடக மேடை அதில் நாமெல்லாம் சாதாரண பாத்திரங்களே என்றான் சேக்ஸ்பியர். எப்போது வேண்டுமானாலும் போட்ட வேடம் கலையலாம்ம் என்று நன்றாகவே தெரிந்திருந்தாலும் வேடத்தைக்கட்டிக் கொண்டு மனிதன் போடுகின்ற ஆட்டம் அதிகம் தான்.அவசர உலத்தில் இயற்கையை மறந்து செயற்கையாய்த்தான் நாட்களை செலவு செய்து கொண்டு இருக்கிறான் மனிதன். நூறு பேரில் எத்தனை பேர் இயற்கையாக நகைக்கிறார்கள் என்றால் சொற்பம் தான்.ஆளைக் கண்டவுடன் புன்னகைக்க வேண்டுமே என்று அவசர அவசரமாக ஒரு புன்னகையை உற்பத்தி செய்து உதடுகளை பணித்து பற்களால் பகிர்ந்து கொள்கிறான்.கட்டளைக்குட்பட்டு பாவம் உதடுகள் நடிக்கிறது. நான் புன்னகை என்று சொன்னதைத்தான் பூச்சரம் தொடுக்கும் சகோதரி பூங்குழலி அதை இளிப்புகள் என்கிறார் அது மட்டுமா
"பல வேடதாரிகளின்
 மேடையாக இருக்கிறது
 காலம்
 பல்லிளுப்புகளும் பாசாங்குகளும்
 கடவு சீட்டாக"
          என்று ஆரம்பித்து தலைப்புகளை வகைப்படுத்துவது போல இளிப்புகளை வகைப்படுத்துகிறார்.

சகோதரி யசோதா காந்த்
           சாதாரண பெண்ணவளுக்கே பாதுகாப்பில்லாத போது பார்வையற்ற பெண்ணுக்கு என்ன பாதுகாப்பிருக்கப் போகிறது இந்த நாட்டில்.தனக்கேற்பட்ட பாதிப்பையே தனக்கு பாதுகாப்பாய் பயன்படுத்திக் கொள்கிறாள் அப்பெண் என்று வெளிச்சம் இட்டு காட்டுகிறார் எண்ணப் பறவைகள் சிறகடிக்க வண்ணவண்ண கனவுகளோடு விண்ணில் பறக்கும் சகோதரி இதமான அலைகள் யசோதாகாந்த்.
           ஆனாலும் அவரது தேடல் இன்னும் தீரவில்லை. போய்ப் பாருங்கள் அவரது தேடல் எதுவென்று..
                       
         கிராமத்தில் விதைத்து கிராமத்தில் விளைந்தது எல்லாம் நகரத்திற்கு வந்து சேர்கிறது..வந்து சேர்ந்தது எல்லாம் விளைந்த நிலத்திற்கு மீண்டும் திரும்புவதில்லை.விளைந்த பொருளுக்கு நகரத்தில் மதிப்பு கூடுகிறது.
தென்றல் சசிகலா
விளைவித்த நிலமோ இன்னும் மழையை எதிர்பார்த்தபடி வறண்டு போய்தான் கிடக்கிறது. கிராமத்தில் விதைத்து கிராமத்தில் விளைந்தது நகரத்திற்கு வந்தது என்பது பயிர்கள் மட்டுமல்ல தோழர்களே மனித உயிர்களும்தான்.விதைத்தது அவர்கள்..விளைந்தவன் அவன்.நகரத்திற்கு சென்றவனின் பாதங்கள் மீண்டும் கிராமம் வாராதா கண்கள் தன்னைப் பாராதா அம்மாவென உதடுகள் கூறாதா என்று மழையை எதிர்பார்க்கும் நிலம் போல அங்கே தாய்மை முதுமையில் முனகிக் கொண்டிருக்கிறது. குழந்தையை இளமை தாலாட்டியது.முதுமையை இளமை தாலாட்டுவது தானே முறை.அதைத்தான் தென்றல் சசிகலா முதுமையைத் தாலாட்டுங்கள் என்கிறார்.
       
சகோதரி திவ்யா@தேன்மொழி
         சமுதாயத்திற்காக வாழவில்லை நமக்காகத்தான் வாழ்கிறோம் என்கிறோம். நாம் என்றாலே சமுதாயம் என்றாகிவிடுகிறது. கணவனோடு சேர்ந்து வாழும்போது சுமங்கலி என்று சொல்லும் சமுதாயம் தன் கணவன் தன்னை விட்டு உயிர் துறந்த மறு கணமே அவளுக்கு கொடுக்கும் நினைவுப் பரிசு என்னவென்று அவருக்கான பாணியில் கடலூரில் இருந்து சொல்லுகிறார் வலையுலகத்தின் புது வரவு சகோதரி தேன்சிட்டு திவ்யா@தேன்மொழி..
            ணுக்குத்தான் அதிகாரம் பெண்ணுக்கல்ல என்று இந்த நூற்றாண்டிலும் ஆண்கள் சொல்லிக்கொண்டு இருப்பதையும் ஆணுக்குப் பெண் சரிநிகர்தான் என்று மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்குவதையும் கவனித்துக்கு கொண்டுதான் இருக்கிறோம். இருபாலரும் அதிகாரம் யாருக்கு என்று இங்கே அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூன்றாம் பாலொன்று அடிப்படை உரிமைகளுக்காகவும் சமுதாய அங்கீகாரத்திற்காகவும் போராடிக் கொண்டிருப்பதை ஏனோ எப்போதும் இவ்விருபாலரும் கண்டு கொள்வதில்லை அரசும் பொருட்படுத்திக் கொள்வதில்லை.   மரியாதைக்கு உரியவர்களை 'திரு' முன்னால் சேர்த்து அழைப்பது வழக்கம்..மூன்றாம் பாலினத்தாரை திருநங்கை என்றுதான் அழைக்கிறோம் ஆனாலும் அவர்களுக்கான மரியாதை என்னவோ மட்டுப்பட்டுத் தான் இருக்கிறது.. அர்த்தனாரி என்று அழைத்து சிவனிடம் சரணடைபவன் கூட திருநங்கையரை கேலிக்கும் கிண்டலுக்குதான் ஆளாக்குகிறான்.இதைக் கண்ட சகோதரி பேரொளிஎஸ்தர் சபி உறங்கியது போதும் விழித்தெழு திரு நங்கையே என்று எழுப்பி 
"இந்நாளில் அகிம்சை விடியாதம்மா
 வளையல் விற்று
 வாளை வாங்கி போராடம்மா" என்று புது இரத்தம் பாய்ச்சுகிறார்.


சகோதரி ஸ்ரவாணி
    ரசிடம் உதவி கேட்டு விண்ணப்பம் செய்வோம் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வோம் குழந்தையை பள்ளி சேர்க்க விண்ணப்பம் செய்வோம். ஆனால் தமிழ்க் கவிதைகள் தங்கச்சுரங்கம் சகோதரி ஸ்ரவாணி கணிப்பொறி வல்லுநர்களிடம் ஒரு மென்பொருள் கேட்டு சென்னையிலிருந்து விண்ணப்பம் செய்கிறார்.அது எதற்கான மென்பொருள் என்று தெரிய விண்ணப்பத்தை பிரித்துப் பாருங்கள்..
        அடடே..
        ஆகா..
        இனிமை.
   என்று அகர வரிசையில் பாராட்டு பெறும் அளவுக்கு சகோதரி ஸ்ரவாணி அகர வரிசை வெண்பாக்கள் எழுதியிருக்கிறார்.வலைப்பூ ஆரம்பித்த புதிதில் எழுதியதால் என்னவோ நிறைய பார்வைகளை சந்திக்காமல் இருக்கின்றன வெண்பாக்கள்.இப்போது உங்கள் பார்வைகளை கொண்டு செல்லுங்கள் அகர வரிசை வெண்பாக்கள் ஆனந்தம் கொள்ளட்டும்..     

       பெறும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நமக்கானதல்ல..அவற்றை நமது  பெயர்தான் பெற்றுக்கொள்கிறதாம்.
"கிரீடமும்
முள்முடியும் உனக்கன்று
உன் பெயர்க்கே"
சகோதரி சக்தி

       என்று புதுச்சேரியில் பெயர் துறப்பு விழா வில் சொல்லுகிறார் 
சகோதரி குறள் சக்தி.

      "வானத்தை வசப்படுத்தி
       தனக்குள் வைத்திருக்க
       பறவைகளுக்கு 
       சின்ன சிறகுகள் போதாது
       அதைப்போல
       உன் காதலை வசப்படுத்தி வைக்க
       சின்ன இதயம் போதாமல் தவிக்கிறேன் என்று யாழ்ப்பாணத்திலிருந்து கதைக்கிறார் தோழி காதல் தேசம் மதிவதனி.


சகோதரி மதிவதனி


         "நிகழ்காலத்தின் நிலைவாயிலில் நின்று கொண்டு
         என்றேனும் ஓர் நாள் உறுதியாய் வரவிருக்கும்
         விமோசனத்துக்காக தவமிருக்கிறேன்..
         சாப விமோச்சனமோ பாவ விமோச்சனமோ அல்ல" 
ஆஸ்திரேலியாவிலிருந்து சொல்கிறார் சகோதரி கீதமஞ்சரி..
         இரவுக்கும் பகலுக்குமான அன்றாடப் போராட்டத்தைப்பத்தி புதியதொரு பாணியிலே உயிர்ப்பதும் மரிப்பதுமாய். என்று தலைப்பிட்டு தன் எழுதுகோலை எழுத பணிக்க அது சகோதரியிடம் வார்த்தைகளை வாங்கி இறைத்திருக்கிறது.போய்ப் பாருங்கள் கற்பனை கரை புரண்டு ஓடும்..

    வசரத்தில் விடிந்த அதிகாலை யைப் பார்க்கிறான் ஒரு கவிஞன் அந்த கவிஞன் மூக்கிருந்தும் மூச்சுக் காற்று வாங்க அனுமதியில்லாத இனத்தில் பிறந்தவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிற கவி அழகன்.

தோழர் கவி அழகன்

"காலைப்பொழுதில் கடைக்கு சென்று
பாலும் வெதுப்பியும் வாங்கிவந்து
சூடாய் கோப்பி குடிக்கும்போது-அவள்
ஸ்பரிசமென்று நா உணர்ந்துகொள்ளும்" 

வெட்கம் இன்றி வெளிநாடு வந்து நினைத்துப் பார்க்கிறார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக என்னதான் ஒன்று திரண்டு மக்கள் போராடினாலும் பயங்கர வாதம் ஒடுங்கியபாடில்லை மக்கள் இரத்தம் சிந்ததுவது நின்றபாடில்லை.
  "மிருக வேட்டையாடி
    பசியாறினான்
   ஆதி மனிதன்.
   மனித வேட்டையாடி
   குஷியாகிறான்
   நவீன மனிதன்."
என்று தன் மனக்குமுறலை அபுதாபியிலிருந்து மனித ரத்தம் புகட்டாதீர்கள் என்று கவிதையாலே சொல்லி பயங்கரவாதிகளின் மேல் கோபம் கொள்ளும் ரியாஸ் தன் காதலியிடம் மழலையாகிறேன் என்கிறார்..
    தாலாட்டு கேட்டுதான் தமிழரெல்லோரும் வளர்ந்திருப்போம்..சேகர் தமிழிலே ஒரு தாலாட்டை சமீபத்தில் கேட்டேன்..
"தாய்மொழி நான் சொல்ல
கனிமொழி நீ பேச
தமிழ்மொழிதான் வளர
தாய்மொழி நீ கற்று
தரணி ஆள்வாய்

தமிழ் மகனே கண்ணுறங்கு"
என்று பாடி முடித்தவிதம் அருமை.தமிழ்த் தாய்மார்கள் இப்படி தாலாட்டினால் நான் தமிழன் என்ற உணர்வு குழந்தையின் ரத்தத்திலேயே ஊறிவிடும்..தன் தோழியைப் பார்த்து
"இவைகளை நினைத்தால்
 இமைகளும் வலிக்கினறன
 உடல்கள் நடுங்குகின்றன
 கண்கள் குளமாகின்றன"
தோழர் தனசேகர்
என்று புலம்பித் தள்ளுகின்றார் என்னாயிற்று என்று தெரியவில்லை.வாங்க தோழி யிடமே கேட்டு விடுவோம்.. 
 ------------------------------------------------------------
            முடிந்தவரை புதியவர்களையே திரட்ட முயற்சித்தேன்.இரண்டு மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் புதியவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.. அவர்களது பதிவிற்கு செல்லுங்கள் வாசித்து கருத்திடுங்கள்..நன்றி
.
அடுத்த அறிமுக படலம்


          "சிறுகதைகள் சிதறிக் கிடக்கின்றன"


                                    நன்றி...
                    மீண்டும் சந்திப்போம்..
                                மதுமதி
                  தூரிகையின் தூறல்

61 comments:

  1. உண்மையில் எல்லாரும் புதியவர்களே. அருமையான தொகுப்பு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நல்ல புதிய அறிமுகங்கள்....சிறந்த கவிதைகள்..வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. நீச்சல்காரன்..

    மகிழ்ச்சி தோழர்.

    ReplyDelete
  4. வீடு சுரேஸ்..

    மிக்க நன்றி தோழர்..

    ReplyDelete
  5. வளர்பிறையில் இன்றோ
    கவி அறிமுகம்...

    ஓரிருவர் தவிர அத்தனை பெரும்
    எனக்கு பரிச்சயம்.
    கவிகளை அறிமுகப்படுத்திய
    கவி வேந்தனுக்கு நன்றிகளும்.
    அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  6. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் மதுமதி அவர்களே..

    ஏனைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தனி மனித வளாச்சி மட்டும் வளர்ச்சி ஆகாது சக தோழர்களையும் வளர ஊக்கப் படுத்தும் உங்கள் முயற்சி பாராட்டுக் குரியது நன்றியோடு தென்றல் சசிகலா

    ReplyDelete
  8. எல்லோருமே சிறந்த கவி படைப்பாளிகள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. எல்லாமே எனக்கு புதுசு - அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  10. மிகவும் அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள் மதுமதி ...

    ReplyDelete
  12. ஓரிருவர் எனக்கு பழக்கப்பட்ட நண்பர்கள். உங்களால் இன்று பல புதிய நல்முத்துக்கள் கிடைத்தன. நன்றி கவிஞரே... தொடரட்டும் உங்கள் முக்குளிப்பு நல்முத்துக்களைத் தேடி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நல்ல கவிஞர்களை இனம் காட்டீனீர்கள் .இதில் கவி அழகன் ,சசிகலா,ரியாஸ் நான் வாசிப்போர் மற்றவர்களையும் இனி தொடர்கின்றேன் கவிதை கற்க.

    ReplyDelete
  14. விதைகளுக்கு எனது பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. பதிவிட்ட தங்களுக்கும் அறிமுகப்
    பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. அருமையான முன்னுரை
    அவசியம் அனைவரும் தொடர வேண்டிய
    அருமையான பதிவுகள்
    அறிமுகம் செய்தமைக்கு நன்றி
    அறிமுகம் செய்யப்பட்டோருக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. தாங்களா ஆசிரியர்! நன்று! புது விதமாகவும் உள்ளது. சிறப்புற வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. நிறைய புதுமுகங்கள் குறிப்பாக....... மகளிர் பதிவுகள்
    அறிமுகமாகி இருக்கின்றன உங்களால். அவசியம்
    சென்று பார்க்கிறேன். கவிதையை சிறப்பித்து முதலில்
    வெளியிட்டு இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியையும் , நிறைவையும்
    தருகிறது. என் முகமும் அறிமுகத்தில் இருக்கக் கண்டு ஆனந்த
    ஆச்சர்யம் கொண்டேன். மிக்க நன்றி மதி சகோ !
    எங்களை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் என் இதய நன்றிகள் !

    ReplyDelete
  19. அருமையான அறிமுகங்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. அருமையான அறிமுகங்கள் பாஸ் தொடருங்கள் தொடர்கின்றேன்

    ReplyDelete
  21. அருமையான தொகுப்பு...
    சிறந்த கவிதைகள்...
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. ஒவ்வொரு வலைப்பூவும் தனித்துவத்துடன் அழகாக அருமையாக உள்ளது. இதுவரை அறியாத தளங்களின் அறிமுகத்துக்கு மிகவும் நன்றி. என்னுடைய வலைப்பூ அறிமுகத்துக்கும் மனதார்ந்த நன்றி.

    ReplyDelete
  23. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  24. எல்லோருமே அருமையான அறிமுகங்கள். அவர்களை தொடர்கிறேன். நன்றி மதுமதி சார்.

    ReplyDelete
  25. நல்ல, புதிய அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. அருமையான அறிமுகங்கள்..

    ReplyDelete
  27. அருமையான தலைப்பு! நல்ல மகசூலை தந்திருக்கிறீர்கள், விளைந்து கிடக்கும் ‘க’விதை’கள்” மூலம்!ஒரே நாளில் எல்லாவற்றையும் அறுவடை செய்ய முடியவில்லை.நிதானமாக இரசித்து படிக்க வேண்டிய பதிவுகளை திரட்டித் தந்தமைக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. நல்ல அறிமுகங்கள்....அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. அறிமுகத்திற்கு மிக்க நன்றி மதுமதி

    ReplyDelete
  30. கவிஞர்கள் அறிமுகங்கள்... அசத்தல்... தொடருங்கள்...

    ReplyDelete
  31. அழகான அறிமுகங்கள் ..
    ஆசிரியரின் கடின உழைப்பு தெரிகிறது ... இதில் பலர் புது முகங்களாக இருக்கிறார்கள் ..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  33. அவர்களின் படங்களுடன் பதிவும் அறிமுகமும் அருமை.

    ReplyDelete
  34. நிறைய புதியவர்களின் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. உண்மையில் திறமையான கவிப்படைப்பாளிகள்.அத்தனை பேருக்கும் வாழ்த்தும் பாராட்டும்.தொடரட்டும் வலைச்சரப்பணி !

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. மகேந்திரன்..

    ரியாஸ்..

    சசிகலா..

    நன்றி...

    ReplyDelete
  38. தமிழ்வாசி பிரகாஷ்..

    மனசாட்சி...

    நன்றி...

    ReplyDelete
  39. வை.கோபாலகிருஷ்ணன்..

    நன்றி ஐயா..

    ReplyDelete
  40. கணேஷ்...

    மிக்க நன்றி..

    தினேஷ்..

    நன்றி..

    ReplyDelete
  41. புலவர் ராமானுசம்..

    தனிமரம்..

    இந்திரா..

    நன்றி..

    ReplyDelete
  42. சென்னைப் பித்தன்..

    ரமணி..


    மிக்க நன்றி..

    ReplyDelete
  43. கோவைகவி..

    ராஜ்..

    ஸ்ரவாணி..

    நன்றி..

    ReplyDelete
  44. கீதமஞ்சரி..

    சே.குமார்..

    தனசேகரன்..

    நன்றி..

    ReplyDelete
  45. ஸ்டார்ஜன்..

    நிஜாமுதீன்..

    அமைதிசாரல்..

    நன்றி..

    ReplyDelete
  46. நடன சபாபதி..

    கோவை டூ தில்லி..

    பூங்குழலி..

    ReplyDelete
  47. குடந்தை அன்புமணி..

    ராஜபாட்டை ராஜா..

    சே.அரசன்..

    ReplyDelete
  48. லட்சுமி அம்மா..

    விச்சு..

    ஹேமா..

    நன்றி..

    ReplyDelete
  49. புதியவர்களுக்கும் இடம் கொடுத்து, அறிமுகப்படுத்தும் உமது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களண்ணா.. இனி, பொழுதுபோக்கிற்கு டிவியாவது, ரேடியோவாவது.. இங்கே ஆஜராகி விடவேண்டியதுதான்..! (சிறு திருத்தம்- என் ஊர் கூடலூர் அல்ல, “கடலூர்”.. ):):)

    ReplyDelete
  50. திவ்யா @ தேன்மொழி..

    ஊர் பெயரை மாற்றிவிட்டேன் சகோதரி..

    ReplyDelete
  51. மதிப்பிற்குரிய ஆசிரியர் மதுமதி அவர்களே...வணக்கம் .இங்கு என்னை அறிமுக படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ...வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் அன்பின் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் ..(என் பெயர் யதோதா என்று எழுத பட்டுள்ளது ..யசோதா என் திருத்துமாறு வேண்டுகிறேன் ..நன்றி )

    ReplyDelete
  52. ஒவ்வொரு வலைப்பூவும் அழகாக அருமையாக உள்ளது.
    இதுவரை அறியாத தளங்களின் அறிமுகத்துக்கு மிகவும் நன்றி. என்னுடைய வலைப்பூ அறிமுகத்துக்கும் மனதார்ந்த நன்றி. புதிய அறிமுகங்கள்.
    சிறந்த கவிதைகள்.
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  53. ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?

    நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை.

    அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.

    அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.

    சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!



    Part 1: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

    Part 2: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

    .

    ReplyDelete
  54. யசோதா..

    மாற்றி விடுகிறேன் சகோதரி.அவசரத்தில் எழுத்து மாறிவிட்டது.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  55. மதி..

    மகிழ்ச்சி தொடர்ந்து நல்ல பதிவுகள் தர வாழ்த்துகள்....

    ReplyDelete
  56. என் கவயையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி சகோதரரே.இப்பதிவு என்னும் என் எழுத்தாற்றலை துாண்டுவதாய் அமைகின்றது

    ReplyDelete
  57. என் கவயையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி சகோதரரே.இப்பதிவு என்னும் என் எழுத்தாற்றலை துாண்டுவதாய் அமைகின்றது

    ReplyDelete
  58. மகிழ்ச்சி..

    ReplyDelete
  59. மிக மிகத் தாமதமாய்க் கண்ணுற்றேன் மதுமதி!உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி...
    எத்தனை புதியவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள்..நெகிழ்வான நன்றி!குரல் வலைப்பூவின் வாசலில்
    காத்திருக்கிறேன் வாருங்கள்!

    ReplyDelete
  60. தாங்கள் வந்தது மகிழ்ச்சி.தங்கள் தளத்திற்கு தவறாமல் வருகிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது