சினிமாவும்...பதிவுலகமும்...
➦➠ by:
வீடு சுரேஷ் குமார்.
வணக்கம்! வலைச்சரத்தினை காண வந்திருக்கும் அனைத்து மக்களுக்கும், சினிமா பார்க்காமல் யாராவது இருக்கிறீர்களா? எனக்கு சினிமா பிடிக்காது என்பவர்களிடம் நான் கேக்கும் முதல் கேள்வி ஒரு படம் கூட பார்த்ததில்லையா? எனக் கேட்பேன், முதியவர்களாக இருந்தால் சிவாஜி, எம்ஜிஆர் படத்தைச் சொல்லுவார்கள், நடுத்தரம் என்றால், ரஜினி, கமல், இளைஞர்களுக்கு விஜய்,அஜித் அல்லது நன்றாக ஓடிய படத்தைப் பற்றி கூறுவார்கள்.
அதனால் சினிமாவை வாழ்வில் ஒருமுறையாவது ருசிக்காமல் இருப்பவர்கள் யாராவது இருப்பார்களா? இருந்தால் ஆச்சர்யம்தான்! என் பாட்டி பார்த்த தியாகராஜபாகவதர் நடித்த 50 பாட்டுள்ள படத்தை விடியவிடிய டூரிங்டாக்கீஸ்ல பார்த்த அனுவத்தை இன்னும் தன் பசுமையான நினைவுகளில் வைத்திருக்கிறார்கள்,அப்பொழுது இடைவேளையின் போது திரைச்சீலைக்கு பின்னால் சென்று நடிகர்கள் உள்ளே இருக்கிறார்களா என்று பார்ப்பார்களாம்,இப்படியிருக்கும் போது நம் மாநிலத்தின் தலைமையை திரைத்துறையை சார்ந்தவர்களே ஆண்டிருக்கிறார்கள், ஆண்டுகொண்டும் இருக்கிறார்கள், அதனால் சினிமா அதிக மக்களை கவர்ந்தது ஒன்று என்றால் மிகையில்லை, இது பதிவுலகையும் விட்டுவிடுமா என்ன? சினிமாவை நேசிப்பவர்கள் அதை எப்படி விமர்சிக்கிறார்கள் என பார்ப்போம்...
1.ஜீ அவர்களின் பூங்காற்று திரும்புமா..?மலேசியாவாசுதேவனின் அவர்களின் பாடல்கள் சிவாஜி அவர்களுக்கு எப்படி பொருந்துகிறது காணொளியுடன்..
2.சினிமா உலகம் என்னும் வலையில் ஈசன் படத்தின் விமர்சனம் சிறப்பான கண்ணோட்டம்
3. ரெவரியின் மெமரியில் இருக்கின்ற படங்கள் ஏராளம், அதில் Soul surfer-மிகச்சிறந்த படத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார், கண்டிப்பாக பார்க்க வேண்டிய தன்னம்பிக்கையை ஊட்டுகின்ற திரைப்படம்.
4. அடங்காத கொலைவெறி...பாடலுக்கு நமது வேர்களைத்தேடி முனைவரின் கருத்து எச்சரிக்கையாக இருக்கவேண்டியது தமிழன் அல்ல ஆங்கிலேயன்தான்...!! அது எப்படி என்று கேட்காதிர்கள் படித்து பாருங்கள்.
5.தம்பி குமரன் 18 வயதுதான் ஆகின்றது என்கிறார், ஆனால் தீராத சினிமா காதல், பல திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார், ஆங்கிலத்தில் உள்ள குடும்ப படங்களை அறிமுகப்படுத்துகிறார், ஓய்வு நேரத்தை கழிக்க இவரின் வலைதளம் சென்றால் போதும் தளமெங்கும் ஹாலிவுட் படங்கள் இறைந்து கிடக்கின்றன.
6.ஹாலிவுட் ரசிகன் 50/50 திரைப்படத்தினை விரிவாக அலசுகிறார் அதில் (கான்சர்னு சொல்லேன்யா?)நக்கல் வேறு படிக்க மிக சுவாரஸ்மான பதிவு...
ஓய்வு நேரத்தை கழிக்க இவர் தளத்திலும் நிறைய படங்களின் விரிவான விமர்சனம் உள்ளது....நம் கணினியில் படங்களை ஒழுங்கு படுத்த ஒரு சிறப்பான தொடரை
எழுதிவருகிறார்...
7.24வயது இளைஞன் இவர்! நடிகர்திலகம்சிவாஜிகணேசன் அவர்களைப்பற்றி அவரை தான் ரசித்த விதங்களைப்பற்றி ஒரு 60 வயது உள்ளவர்களால்
கூட இப்படி கூற முடியாது சிவாஜி இன்னும் வாழ்கிறார்.......
8.180 திரைபடத்தைப் பற்றிய தெளிவான விமர்சனம் எழுதியுள்ளார், அனைத்து மொழித் திரைபடங்களையும் ஒரு கை பார்க்கிறார் தெளிவான எழுத்து நடை
ரசிக்கும் படியான கமெண்ட்கள்,
9. INCEPTION(2010) திரைப்படத்தை நண்பர் கொடுத்தார், மிகச்சிறப்பான திரைப்படம், இவர் விமர்சனம் அந்த படத்தை பற்றிய அதிக புரிதலோடு உள்ளது, படம் எனக்கு கொஞ்சம் புரியலை....இவர் விமர்சனம் படித்து புரிந்து கொண்டேன், பிறமொழிப்படங்கள்....தமிழில்...ஜெய் நிறைய படங்களைப்
பற்றிய இவருடைய பார்வைகள் துல்லியம்.
10. விமர்சனம் எழுதுவதில் தனிஇடத்தை பிடித்தவர் நண்பேன்டா ஓனர் சிவக்குமார்காரு, பிசினஸ்மேன் விமர்சனத்தை மகேஸ்பாபு படிச்சா கூட சிரிச்சு..சிரிச்சு நொந்து போவார்...கலக்கல்.
மேலே படத்தில் உள்ளவர் நடராசமுதலியார், இவர்தான் முதல் தமிழ் திரைப்படத்தை தயாரித்தவர், ஏன் முதல் இயக்குனரை போட வேண்டியதுதானே? என கேட்கிறீர்களா அதற்கும் அர்த்தம் உள்ளது நமது நண்பர்களின் விமர்சனத்தினை படித்து விட்டுத்தான் படம் பார்க்க செல்பவர்கள் அதிகம், படம் சரியில்லையென்று விமர்சனம் மூலம் தெரிந்து கொண்டால் பாதிக்கப்படுவது பயன் பெறுவதும் அதிகம் தயாரிப்பாளர்கள்தான்...,என்ன நான் சொல்றது சரிதானே?
|
|
////
ReplyDelete7.24வயது இளைஞன் இவர்! நடிகர்திலகம்சிவாஜிகணேசன் அவர்களைப்பற்றி அவரை தான் ரசித்த விதங்களைப்பற்றி ஒரு 60 வயது உள்ளவர்களால்
கூட இப்படி கூற முடியாது சிவாஜி இன்னும் வாழ்கிறார்..////
இந்த சிறியவனின் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள் பாஸ்
ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்
அப்பறம் எனக்கு இரண்டு வயது கூட்டி சொன்னமைக்கு கடும் கண்டனங்கள்.ஹி.ஹி.ஹி.ஹி....
நன்றி பாஸ்
இடுகை அறிமுகங்களுடன் சிறு குறிப்பையும் பகிர்ந்திருபப்து வித்த்யாசமா இருக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள் அப்பு...
சரியாக சொன்னீர்கள் தோழர்..திரைக்கு வந்த மறுநாளே விமர்சனங்கள் வருவதால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பது உண்மைதான்.படம் வந்து ஒரு வாரம் கழித்து விமர்சனங்களை பத்திரிக்கைகள் முன் வைத்தால் தயாரிப்பு தரப்பில் பாதிப்புகள் குறையும்..இன்றைய
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..
மாப்ள வாழ்த்துக்கள்யா...லேட்டா வந்தாலும் ரெகுலரா வரேன்ல!
ReplyDelete//படம் சரியில்லையென்று விமர்சனம் மூலம் தெரிந்து கொண்டால் பாதிக்கப்படுவது பயன் பெறுவதும் அதிகம் தயாரிப்பாளர்கள்தான்//
ReplyDeleteஉண்மைதான் பாஸ்!
நன்றி! வாழ்த்துக்கள்!
// சிவக்குமார்காரு//
ReplyDeleteபைக் வாங்கவே அல்லாடிட்டு இருக்கேன். நீங்க என் பேருக்கு பின்ன காரை பார்க் செஞ்சிட்டீங்க. நன்றி நண்பரே!
நீங்கள் குறிப்பிட்டுள்ள சினிமா பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteநம்ம தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி பாஸ். என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஏனைய விமர்சகர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி.
//நமது நண்பர்களின் விமர்சனத்தினை படித்து விட்டுத்தான் படம் பார்க்க செல்பவர்கள் அதிகம்//
மிகவும் உண்மை. போனவருடம் விமர்சனங்கள் வாசித்ததால் ஏகப்பட்ட மொக்கைப் படங்களை தவிர்க்கமுடிந்தது.
ரசிக்க வைக்கும் சினிமா பதிவுகளின் அறிமுகங்கள்
ReplyDeleteநன்று..
வாழ்த்துக்கள் நண்பரே.
என் இனிய வணக்கங்கள்,
ReplyDeleteஎம்மையும் பெரிசா மதித்து, அறிமுகம் செய்து வைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.சில பதிவர்களை இதன் வழி தெரிந்தும் கொண்டேன்.
வணக்கம், ஏதோ எனக்கு தெரிந்த சில சினிமா நண்பர்களின் வலைப்பூக்களை இங்கு தரலாம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅருண் : http://muratusingam.blogspot.com/
ராஜ் : http://hollywoodraj.blogspot.com/
சினிமா பற்றிய பதிவுகள் தாங்கிய வலை அறிமுகப் பகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteவணக்கம் நண்பா..
ReplyDeleteஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.
அறிமுகங்கள் தங்களுக்கே உரிய நடையில் அருமை.
ReplyDeleteமுதல் சினிமா தயாரிப்பாளர் நடராச முதலியாரையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
இங்கே அறிமுகமாகியிருக்கும் அனைத்து தோழமைகளுக்கும்,
அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.