Friday, October 31, 2008

கொங்கு தமிழ் பேசி எனை மயக்கும்


எத்தனை தமிழ் இருந்தாலும் ஈடாகுமா இத் தமிழுக்கு என சுண்டி இழுக்கும் பேச்சு வழக்கு கொங்கு நடை.வார்த்தைக்கு வார்த்தை மரியாதையை இழைத்து கண்ணியம் கொள்ள வைக்கும் பேச்சு வழக்கு கொங்கு மக்களின் தனிப்பெரும் சொத்து. நம்ம சாதாரணமாக "ஏன்டா நாயே அறிவிருக்காடா உனக்கு என்று உணர்ச்சி வசப்பட்டு திட்டுவதைக்கூட " ஏனுங் நாய்ங்களே, அறிவிருக்குங்ளா உங்களுக்கு என்று அழகாக மரியாதையோடு திட்டுவார்கள்.


கொங்குத் தமிழில் கொஞ்சி விளையாடி என் மனதைக் கவர்ந்தவர் அண்ணன் மகேஷ். இவர் தன்னுடைய வலைப்பூவிற்கு துக்ளக் என்று பெயர் வைத்து இருப்பதில் இருந்தே இவர் குறும்பு உங்களுக்கு புரிந்து இருக்கும்.

ஒருமுறை அனைத்து பதிவுகளையும் தமிழ்மணத்தில் படித்து முடித்த பின்பு பொழுதுபோகாமல் பதிவுகளின் பட்டியலை பார்த்துக் கொண்டு இருந்தேன்.அப்போது துக்ளக் என்ற பெயரை பார்த்து விட்டு திரு.சோ அவர்களின் வலைப்பூ போல என்று நினைத்தே போனோன். கரெக்டா அந்த நேரத்திலதான் மகேஷ் அண்ணனும் புதிதாக ஆரமித்து இருந்ததால் அண்ணே எழுத்த ஆரம்பத்தில் இருந்தே படிக்கும் பாக்கியம் இந்த எளியவனுக்கு வாச்சுச்சு.



"முளைச்சு வரும்போது" என்ற தலைப்பில் தனது பால்ய கால மழலைச் சேட்டைகளை கொங்கு வழக்கில் பின்னி இருப்பாரு பாருங்க...அடா..அடா..அடா.நான் என்னத்த சொல்றது நீங்களே போய் படிச்சு பார்த்து இரசிங்க.




டிஸ்கி : நீ ஒரு ஆளப்பத்தி இந்த அளவிற்கு சொல்றனா அதுல ஏதாவது நுண் அரசியல் இல்லாம இருக்காதேன்னு தங்கச்சி ராப்பும் அவங்க சம்பந்தி வெண்பூவும் நினைக்கிறது எனக்கு புரியுது. அது இல்லாம இருக்குமா??? அண்ணனோட அந்தப் பதிவுகள்ல அதிகமா பின்னூட்டம் போட்டது நான் தான்...ஹி...ஹி...ஹி.....

Thursday, October 30, 2008

வேலைகள் அதிகமானால் வேண்டுவோம் மீள்பதிவாண்டவரை


வலைச்சரத்தில் ஒரே ஒரு பதிவு சுயபுராணம் போட்டுக்கலாம்னு நம்ப பொறுப்பாசிரியர் சீனா அய்யா அனுமதி கொடுத்தாரு. என்னுடைய வலைச்சர வாரத்தில் ஒரு பதிவு கூட சுயபுராணம் போடக்கூடாதுன்னு முடிவு பண்ணி இருந்தேன். ஆனால் என் நேரமோ என்னவோ தெரியவில்லை பதிவு போட முடியாத அளவிற்கு ஆசிரியர் ஆனதில் இருந்து அலைந்து கொண்டு இருக்கிறேன். வலைச்சரத்தில் முதல் பதிவை எழுதும் போது டில்லியில் இருந்தேன். நேற்றும் இன்றும் ஹைதராபாத். அதனால் வேறு வழி இன்றி சுயபுராணம் போட்டுக்குறேன்.



அந்தக் காலத்தில் நான் பதிவு போடத்துவங்கிய போது எழுதிய கவிதை இது. அப்போது என் வலைப்பூ தமிழ்மணத்தில் இணைக்கப் படாமல் இருந்ததால் யாராலும் படிக்கப்படாமலேயே போய்விட்டது. புதுகைத் தென்றல் அக்காவும், நிஜமா நல்லவன் அண்ணனும், சுரேகா அண்ணனும், மகேஷ் என்ற எனது கல்லூரித் தோழனும் மட்டுமே அதை அப்போது படித்து கருத்து சொன்னார்கள். படிங்க...புடிக்காட்டினலும் கூட சொல்லிட்டுப் போங்க...

அந்தக்கவிதை இதோ

சாய்வு நாற்காலி
பால்ய பிராயத்து
தொட்டில் ஆட்டத்தின்
நினைவுகளின் நீட்சிகள்
சாய்வு நாற்காலி!

மாத்திரை மாறாமல
அவை எழுப்பும் ஓசைகள்
எந்த வித்வான்களுக்கும்
வசப்படாதவை!

காலையில் முன்வாசல்
மதியம் நடுகூடம்
மாலையில் காற்று வாங்க
பின் தோட்டமென
தாத்தாகளை விட
அதிகம் நடமாடுபவை!

சரிந்து விழும் தேகத்தை
சாய்த்துக் கொண்டு
அமரும் போது
தாத்தாகளுக்கு வரும்
ஒரு தனி கம்பீரம்!

மற்ற நேரங்களை விட
தாத்தாகள் பேப்பர் பார்க்கும்
நேரத்தில் ...
சாய்வு நாற்காலிகளுக்கு
வரும் ஒரு தனி அழகு!

நாகரீக உலகத்தில்
நம்மால் வசதியாக
மறக்கப்படுகின்றன.......
சாய்வு நாற்காலிகளும்
கூடவே தாத்தாகளும்!
புதுகை.அப்துல்லா

Wednesday, October 29, 2008

நமீதாவை நேரில் பார்த்து பேசினேன்

இனிய வலைச் சொந்தங்களே,


இன்று "நான் பின்னூட்டம் போட பயப்படும் பதிவர்கள்" என்ற தலைப்பில் வலைச்சரத்தில் எழுதுவதாக இருந்தேன். ஆனால் அதை விட முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி இன்றே எழுத வேண்டிய தேவை ஏற்பட்டதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

சென்னை லயோலா கல்லூரியில் பார்வையற்ற மாணவர்களுக்கு பரிட்சை எழுத உதவியாக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அந்த மாணவர்களுக்கு நாம் கேள்வித் தாளைப் படித்துக் காட்ட வேண்டும். அவர்கள் சொல்லும் பதிலை நாம் எழுத வேண்டும். நமக்கு எழுதப் படிக்க தெரியவும் , 3 மணி நேரம் செலவளிக்க மனமும் இருந்தால் போதும். ஒரே ஒருமுறை எழுதிப் பாருங்கள் சிகிரெட், மது போல இதுக்கும் நீங்கள் அடிமை ஆகாவிட்டால் சத்தியமாக நான் பதிவு எழுதுவதையே விட்டு விடுகிறேன்.


மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்காக பரிட்சை எழுத முன் வருபவர்கள் மிகவும் குறைவு. இதனால் அந்த மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் சொல்லில் வடிக்க இயலாதது. சென்னையில் இருந்து இந்தப் பதிவைப் படிக்கும் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களால் முடியாவிட்டாலும் வீட்டில் சீரியல் பார்த்து பொழுதைக் கழிக்கும் உங்கள் தங்கமணிகளையோ அல்லது சகோதரிகளையோ அனுப்பி வைங்க. இதுபற்றிய மேலும் விபரங்களுக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.மேத்யூ அவர்களை 9444223141 என்ற எண்னில் தொடர்பு கொள்ளுங்கள்.


இது நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி அல்ல. இறைவனுக்கு நாம் செய்யும் கடமை.


டிஸ்கி 1 : ஒரு நல்ல விஷயத்தை எல்லோருக்கும் சொல்றதுன்னா இந்த மாதிரி கெட்ட தலைப்பு வச்சுத்தான் எல்லாரையும் கூப்பிட வேண்டி இருக்கு :)


டிஸ்கி 2: இந்தப் பதிவு வலைச்சரத்தின் 775 வது பதிவு. ஒரு நல்ல விஷயத்தை அனைவருக்கும் கொண்டு சென்ற மனநிறைவை உணர்கிறேன்.

Tuesday, October 28, 2008

குரு மரியாதை

கூகுளில் ஒரு நாள் எங்க ஊரான புதுகையை( புதுக்கோட்டை) பற்றிய சில விஷயங்களைத் தேடிக் கொண்டு இருந்தபோது என் கண்ணில் பட்டது புதுகைத் தென்றல் என்ற வார்த்தை. அட பேரு வித்யாசமா இருக்கேன்னு போய் பார்த்தா நம்ம புதுகைத் தென்றல் அக்காவோட வலைப்பூ. அப்ப ஃபிளாக்குன்னா என்னனெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவங்களோட வெப்சைட் என்றே நினைத்தேன். பின்னர் அவர்களுக்கு வந்திருந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்த போது அனைத்து முகவரிகளிலும் blogspot.com என்ற வார்த்தையை பார்த்த போது ஏதோ கொஞ்சம் புடிபட்ட மாதிரி இருந்துச்சு.


அப்புறம் அக்காவோட பதிவுகளுக்கு அனானியாக ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டேன். பின்னூட்டங்களின் இறுதியில் அப்துல்லான்னு போடுவேன்.பின்பு சற்றே முன்னேறி கூகிளில் அக்கவுண்ட் உருவாக்கி பெயரோடு பின்னூட்டம் இட்டேன். (கவுண்டர் ஓரு படத்தில நடந்து பின் சைக்கிள்,டூவீலர்,கார் என படிப்படியாக முன்னேறி பிச்சை கலெக்சன் செய்வாரே...அதுமாதிரி).அக்கா ஓரு முறை ஏன் நீங்களும் ஓரு வலைப்பூ துவங்கக்கூடாது என்று என்னுடைய ஓரு பின்னூட்டத்திற்கு பதில் போடப்போக அன்றைக்கு ஆரமித்தது ஃபிளாக் உலகத்திற்கு ஏழரை சனி. இப்படி நான் பதிவுலகிற்கு வர காரணமாக இருந்தவர் என் பதிவுலக குருநாதர் பாசமிகு அக்கா புதுகைத் தென்றல் அவர்கள். அந்தவகையில் அக்கா புதுகைத் தென்றல் அவர்கள் உங்கள் அனைவரின் கண்டனத்திற்கும் உரியவர்.

அக்கா அவர்கள் புதுக்கோட்டை நகரில் அனைவருமே அறிந்த மிக,மிக மதிப்பான குடும்பத்தில் பிறந்தவர் (வெறும் புகழ்ச்சி இல்லை சத்தியமாய் உண்மை). புதுக்கோட்டை நகரில் உள்ள புகழ் பெற்ற சுப்புராமய்யர் பள்ளி அவர்கள் மூதாதையரால் துவங்கப்பட்டு 120 ஆண்டுகள் கடந்து இன்றும் சிறப்போடு நடைபெற்று வரும் பள்ளி. போஸ் நகர்,மற்றும் காந்தி நகர் பகுதிகளில் வசிக்கும் வறுமையில் வாடும் தாழ்த்தப்பட்ட மக்கள் செலவின்றி தங்கள் பிள்ளைகளை தரமான முறையில் படிக்க வைக்கும் புகலிடமாக இன்றுவரை அந்தப் பள்ளி விளங்குகிறது.அக்காவின் அப்பா திரு.ரமணி சார் ப்துக்கோட்டை கூட்டுறவு வங்கியில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.ரமணி சாரின் தயவால் லோன் வாங்கி வணிகத்தில் வெற்றி பெற்ற வணிகர்கள் எங்க ஊரில் அநேகம், எங்க அப்பா உட்பட.

அக்காவின் வலைப்பூ ஒரு காக்டெயில்.எந்த எல்லைக்கும் கட்டுப்படாது எல்லா சப்ஜெக்டிலும் வூடு கட்டி அடிப்பார் அரசியல் தவிர. கிட்டத்தட்ட 300 பதிவுகள் கடந்து தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கும் அக்காவின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு M.SC HUSBANDOLOY ங்கிற அவரோட இந்தப் பதிவுதான். அநேகமாக பழைய பதிவர்கள் அனைவரும் படித்த தொடராகத்தான் இருக்கும். புதிய பதிவர்கள் மறக்காம அந்தப் பதிவ ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு போங்க.

நாளைய எனது பதிவின் தலைப்பு " நான் பின்னூட்டம் போட பயப்படும் பதிவர்கள்"

Sunday, October 26, 2008

வந்தனமினா வந்தனம்! வந்த சனமெல்லாம் குந்தனும்!

ஃபர்ஸ்டு அல்லாத்துக்கும் சலாம் வச்சுகிறேம்பா.

எப்பேர்கொத்த மனுசங்கல்லாம் வாத்தியாரா இருந்துக்கிற வல்சரத்துல நீயும் ஒரு தபா இருந்துகப்பான்னு பெர்ய மன்சோட சொன்ன நம்ம சீனா அய்யாவ நெனைக்க சொல்ல மெய்யாலுமே ஃபீலிங்காகீதுபா. தோ நம்ம இப்ப வந்த ஆளு, நம்ம கிட்ட இன்னாத்த கண்டு இந்த மன்சன் நம்மள வாத்தியார இருக்க சொன்னாரன்னு யோசிக்கசொல்ல ஒன்னியுமே புரிய மாட்டேங்கீது.

வெண்பூ, வெண்பூ ஒரு ஆளு கீராருப்பா. அவ்ரும் நானும் வாய்யா நம்பளும் ரவுடி வேசம் போடுவோன்னு சொல்லிகினு வலைப்பூ வண்டில ஏறி பதிவர் வேசம் போட்ட ஆளுங்க. நம்பளயும் ரவுடின்னு நினைச்ச சீனா அய்யா மெய்யாலுமே ரொம்ப நல்ல மன்சன்பா. நம்ப படைப்பாளி இல்ல...படிப்பாளி. அத்தக்கண்டி சரின்னு ஒத்துகினு இதோ நானும் வல்சரத்துல வாத்தியாரா ஆயிகினேன்.


இதுல ஒரு விஷ்யம் கீதுபா. அத்து இன்னானா நம்ம சீனா அய்யாகீறாரே அவ்ரு பெரிய நுண் அரசியல்வாதிபா. போன கிருஸ்துமஸ் சமயத்துல தம்பின்னு ஒரு ஹிந்து சகோதரர வாத்தியாராக்கினாரு. அப்பால இந்த ரம்ஜான் சமயத்துல நம்ப ஜோசப் பால்ராஜ் அண்ணனை வாத்தியாராக்கி ரமலான் வாழ்த்து சொல்ல வச்சாரு. இப்போ இஸ்லாமியனான என்னிய வாத்தியாராக்கி இந்த தீபாவளி சமயத்துல உங்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்ல வச்சுகிறாரு.


நம்ம கடந்த 16 வர்ஷமா தீபாவளிய கண்டுகுறதில்ல. அது இன்னாத்துக்குன்னு இந்த பதிவுல சொல்லிக்கிறேன். என் சோகம் என்னியோட. உங்க எல்லாத்துகும் என்னோட ஹார்ட்டான தீவாளி விஷ்சுப்பா. எல்லாரியும் டப்பாசெல்லாம் கொலுத்திகினு சந்தோஷமா தீபாவளி கொண்டாடிகினு நாளைக்கு வாங்க.நானும் அப்பால வர்றேன். அப்புறம் மறக்காதி லேகியம் வுட்டுக்கோங்க. இல்லாங்காட்டி கண்டதயும் தின்னி பிச்சுக்கபோவுது.

வர்ட்டா....

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருக்கும் .....

அன்பின் சக பதிவர்களே !


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


கடந்த ஒரு வார காலமாக சகோதரி அருணா - அருமையாக அழகாக பதிவுகள் இட்டு விடைபெற்றிருக்கிறார். அவர் இட்ட பதிவுகள் மொத்தம் இருபத்து நான்கு. அதிக பட்ச பதிவுகள் இட்ட பட்டியலில் பெருமையுடன் இடம் பெறுகிறார். பெற்ற மறுமொழிகளோ நூற்று இருபத்தி ஐந்து . இன்னும் மறு மொழிகள் வரும். அறிமுகப்படுத்திய பதிவர்களோ எழுபத்தி இரண்டு. அவர் வசிக்கும் ஊரான ஜெய்பூரையும் அதிலுள்ள முக்கிய இடங்களையும் அழகான பளிச்சென்ற புகைப்படங்களுடன் அற்புதமான விளக்கங்களுடன் அறிமுகப் படுத்தி உள்ளார்.


கொடுத்த பணியினை செவ்வனே செய்து - இன்னும் இருக்கிறதே நேரம் போத வில்லையே என ஆதங்கத்துடன் விடை பெறுகிறார்.


அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றியினைத் தெரிவித்து நல்வாழ்த்துகளுடன் விடை அளிக்கிறோம்.
-------------------------------------------------------

அடுத்து இவ்வாரம் - 27ம் நாள் தொடங்கும் வாரம் - தீபத் திருநாள் தொடங்கும் வாரம் - ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் அருமை நண்பர் புதுகை அப்துல்லா. கடந்த ரமழான் தினத்தன்று ஜோசப் பால்ராஜ் என்னும் கிருத்துவ நண்பர் ஆசிரியராக இருந்தார். சென்ற கிருஸ்துமஸ் சமயத்தில் ஒரு இந்து நண்பர் ஆசிரியராக இருந்தார். இப்பொழுது தீபாவளி சமயத்தில் ஒரு இசுலாமியத் தோழர் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா !

அப்துல்லா புதுக்கோட்டையைச் சார்ந்தவர். சென்னையில் வசிப்பவர். ஒரு ஆண்டிற்கு அறுநூறு கோடி வணிகம் செய்யும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்டவர். வலது கை கொடுப்பது இடது கை அறியக்கூடாதென்பதில் குறியாக இருப்பவர்.

அருமையான வலைப்பூவினில் அருமையான பதிவுகள் இடுபவர். இவரை வரூக வருக என வலைச்சரம் சார்பினில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகளுடன் .... சீனா ... Cheena

ஒரு வாழ்த்தும், விடைபெறுதலும்.......

வேலை,வீடு,பயணம் என எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் எப்போதும் இணைந்து இருப்பது ஸ்ட்ரெஸ்...மன உழைச்சல்.இதைத் தவிர்ப்பதற்காகத்தானே இந்த வலைப் பதிவு பதிதல்,படித்தல்,சினிமா,கவிதை,பாட்டு,இசை,மழை,கும்மி எல்லாம்.....மன உழைச்சலைக் குறைக்க வழி...
சுரேஷின்
இந்தப் பதிவு உதவுகிறது...

இதைத் தவிர்க்க நான் படிப்பது .
ஸ்ரீ
dreamz
திவ்யா
கார்த்திக்
நவீன் ப்ரகாஷ்
பிரியன்
சரவணகுமார்msk
கொலைவெறியோட எழுதும் ரசிகன் இப்போ என்னவோ எழுதுவதில்லை.

முகமூடியின் கவிதைத் தொகுப்பு.
சுரேஷின் உணர்வுகள்
சகார தென்றலின் கவிதைகள்
பலவிதமாய் கலக்கும் சஞ்சய்

இன்னும் இன்னும் நிறைய நிறைய......
பெரியவங்க,பிரபலமானவங்க நிறைய பேர் எழுதிய இடத்தில் ஏதோ எனக்குத் தெரிந்த வரை வலைச் சரத்தைத் தொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்.........
இப்பிடி ஒரு வாரத்தில் முடிக்கச் சொன்னா எப்பிடி???
பிரிய மனமில்லாமல் உங்களிடமிருந்து விடை பெறுவது.....
உங்களின்
அன்புடன் அருணா....(FM. ரேடியோ ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்.....)

பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைவருக்கும்,பின்னூட்டமிடாமல் படித்த அனைவருக்கும்,படிக்காமலும் ,பின்னூட்டமிடாமலும் இருந்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
நன்றி ...வணக்கம்..
அன்புடன் அருணா

புது ரத்தம் கொடுக்கும் பதிவுகள்....

இந்த ஜனாவைப் பற்றிப் படித்தால் அப்படியே புது ரத்தம் உடம்பில் பாய்கிறது....குழந்தை சாதனையாளர் இவர்.

அடுத்து அந்தோணிமுத்துவின் இந்தப் பதிவைப் படித்தவுடன் உடனே நம்மிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் எனத் தோன்றுவதென்னவோ நிஜம்....

"இது தவிர்க்க இயலாத சங்கிலித் தொடர்.

எப்போது இல்லாமையும், இயலாமையும்...
இல்லாமல் போகிறதோ...
அப்போது இந்தச் சங்கிலித் தொடர் துண்டிக்கப் படும்"

நல்ல விஷயங்களை விஷுவலாக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்..இந்தக் கடைசிப் பக்கத்தில்

நம்மால் முடியும்........

நாமும் உதவலாமே?
முடிந்தால் இவர்களுக்கு உதவலாமே..???

மனீஷ்....இவரின் வாழ்வில் ஒரு சோகம்.ஒரு பொருந்தாத காலமாக இவருக்கு இரத்தபுத்து நோய் தாக்கியுள்ளது.

எலும்பு மஜ்ஜையின் தானம் மூலம் உயிர் பிழைக்கும் வாய்ப்பு இருந்தும்.

இதுவரையில் அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு வாய்க்கவில்லை.மஜ்ஜை தானம் ஒன்றுதான் இவர் உயிர் காப்பாற்றக் கூடியது....இதைப் பற்றி பனிமலரின் பதிவு...

இந்தப் பதிவைப் படித்தவுடன் மஜ்ஜை எப்படித் தானம் செய்வது?

இதில் ஏதும் பிரச்னை இருக்குமோ என்ற பயமும் தயக்கமும் வருவது இயல்பு..!

கண்ணபிரான் ரவிஷங்கரின் இந்தப் பதிவு அதற்கெல்லாம் விடையளிக்கிறது.

மேலும் சந்தேகங்களுக்கு சர்வேசனின் இந்தப் பதிவு... படியுங்கள்..!

Saturday, October 25, 2008

அழகிய கோட்டை அம்பர்....



அடுத்ததாக அம்பர்(amber)கோட்டை.

இந்தக் கோட்டை மலைமேல் இருக்கிறது.

இந்தக் கோட்டையின் உள்ளே அழகான கண்ணாடி மஹல், மற்றும் பார்க்க வேண்டிய அழகிய இடங்கள் நிறைய உள்ளன.






மியுஸியம் பாருங்க!!!!



இது ஜெய்ப்பூர் மியுஸியம்.

இங்கே போரில் உபயோகப் படுத்திய அத்தனை ஆயுதங்களும் மற்றும் ராஜா காலத்து ஓவியங்கள், திரைச் சீலைகள், படுதாக்கள் என வகைப் படுத்தியிருக்கிறார்கள்.

வெளியே இருந்து பார்ப்பதற்கு இதுவும் ஒரு அரண்மனை மாதிரிதான் இருக்கும்.

அரண்மனையைத்தான் மியுஸியமாக்கி வைத்திருக்கிறார்கள்..

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா????

பூக்கள் இல்லாமல் வலைச் சரமா?
அதெப்படி?

இன்னிக்குப் பூப் பதிவுகள்.
இது ஷங்கரின் கல்லறைப் பூக்கள்.

"வில‌கியிருப்ப‌துதான்
உன் விருப்ப‌மென்றால்,
வில‌க‌லுக்கான கார‌ண‌த்தையாவ‌து
சொல்லிவிடு,
விருப்பமாய் நீ வாழவே,
விடைபெறுகிறேன்." ஏனோ படிக்கும் போது நிஜ வலியில் எழுதிய கவிதை போல் தெரிகிறது.


அடுத்ததா இந்துமதியின் சின்னச் சின்ன பூக்கள்.

"*உனக்கென்று வாங்கும்போது ம‌ட்டும்
சிறு சிறு நிலாக்களாகிவிடுகின்றன‌
ரோஜாப் பூக்கள்."

என்ன அழகான யோசனை???

அடுத்ததாக நளாயினியின் பேசும் பூக்கள்......
அடுத்ததாக ...ஜீவி
"மனுஷப் பிறவிகளில் யாரும் 'வேஸ்ட்' இல்லை. 'எத்தனை மனிதர்கள், எததனை குணங்கள்' என்று வியக்கவைக்கின்ற தனித்தனி சுபாவங்கள், வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உண்டு. கவனித்துப் பார்த்தால், 'அடடா..' என்று ரசிக்கத் தோன்றும்; ரசிப்பதுதான் ஆரம்பப்படி அந்த ரசிப்பில் லயிப்பது அடுத்தபடி. அந்த லயிப்பு தீர்க்கமாகிக் கூடும் பொழுது, இன்னொரு மனுஷனின் ஆத்மாவின் அழகைத் தரிசிக்கும் பொழுது, மனித மேன்மை புரிகிறது. "

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்....நிஜம்தான்... எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா????

"ஜந்தர் மந்தர்...மந்திர வார்த்தைகள்....."




இந்த இடத்திற்குப் பெயர் ஜந்தர் மந்தர்...

என்ன ஏதோ மந்திரம் தந்திரம் மாதிரி இருக்கிறதா?

இதன் அர்த்தம், "மந்திர வார்த்தைகள்....."

மஹாராஜா ஜெய் சிங்II......
பல வருடங்களுக்கு முன்பே (1727-1734)கண்டுபிடித்த ஒரு அதிசயம்............

எந்தவிதமான டெக்னாலஜி இல்லாமலே வெறும் சில ஜாமெட்ரி கட்டிடங்கள் மூலமாக ஜெய்ப்பூரின் லோகல் டைம் கண்டு பிடிப்பது, நட்சத்திரங்கள், ஜோதிடம், மழை, புயல், காலநிலை மாற்றங்கள் பற்றி அறிவதும் ஆகிய பல தந்திர ஜால வித்தைகள் கற்றுத் தருகிறது.

முதல் தடவையிலேயே காது செவிடாகப் போய் விட்டதே!




இன்னொரு அதிசயம்....
ஜெய்கட் கோட்டை...

இங்குதான் பீரங்கி தயாரிக்கும் இடம் இருக்கிறது.

மான் சிங் ராஜா தனக்காக நிறுவிக் கொண்ட பீரங்கி தயாரிக்கும் இடம் இது.

இங்கேதான் உலக பிரஸித்தி பெற்ற "ஜெய்பாண்" என்ற ஆசியாவின் மிகப் பெரிய பீரங்கி
இருக்கிறது.

50 டன்கள் எடையும்,20 அடி நீளமும், சுடக் கூடிய தூரம்.30 கி.மீ ஆகும்.

ஒரு தடவை உபயோகிப்பதற்கு 100கிலோ கன் பவுடர் தேவைப் படும்.

ஒரே ஒரு தடவை சோதித்துப் பார்ப்பதற்காக உபயோகப் படுத்தப் பட்டது.

முதல் தடவையிலேயே அதை இயக்கியவரின் காது செவிடாகப் போய் விட்டது.

தூவப் படும் விதைகள் மலர்களாகட்டும்.......

உதவும் உள்ளங்கள் பல வலை உலகில் உலவுகின்றன.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உதவுகின்றன..அவைகளுக்கு அறிமுகம் தேவை இல்லைதான்......இருந்தாலும் இவர்களை அறிமுகப் படுத்த வில்லையென்றால் வலைச்சரம் தொடுத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடுமே....முதலில்....

"இங்கு தூவப்படும்
விதைகள் எங்கேயாவது
மரமாகட்டும்.
நிழல் கிடைப்பவர்கள்
வாழ்த்துவார்கள்."

இந்த கவிதையுடன் ஆரம்பிக்கிறது இந்த வலைப்பூ.....
இதன் உரிமையாளர்...ஞானியார்ரசிகவ்
நோய்களுடன் போராடும் நோயாளிகளுக்கும் , வேலை தேடுபவர்களுக்காகவும்.....பல உதவிகள்,தகவல்கள் கொடுக்கிறார்.

அடுத்ததாக ஸ்ரீவத்ஸ்......இவர் சத்தமில்லாமல் சாதிச்சுக்கிட்டு இருக்கிறார்.....பார்வை இல்லாதவர்களுக்காக இவர் பரிட்சை எழுதுகிறார்..... இவரின் முயற்சியால் சுமார் 100 பேர்கள் இவரைப் போல பார்வையற்றவர்களுக்காக பரிட்சை எழுதி உதவுகிறார்கள்.

இவையெல்லாம் கடவுளுக்குச் செய்யும் சேவை.வாழ்த்துக்கள் ஸ்ரீவத்ஸ்!!!

அப்புறம் வேர்கள்.....நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு, நாமும் உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தை உடைய நண்பர்களால் நடத்தப் படும் அறக்கட்டளையின் வலைப்பூ........ ஆதரவற்றோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்களில் அடைக்கலமாய் இருப்பவர்களுக்கு, உணவு வழங்குவது,இரத்த தானம், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துகிறார்கள்..

அடுத்ததாக என்றென்றும் அன்புடன் பாலா .....இவர் வலைப்பூவிற்கு அறிமுகம் தேவையில்லைதான் இருந்தாலும் இவரின் இந்த சாதனையைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.....நீங்கள் அடிக்கடி படித்ததுதான்....அந்தோணிமுத்துவுக்கு இந்த வலைப்பூ செய்த உதவி நீங்கள் அனைவரும் அறிந்ததே....

இனி டெக்னிகலாக கணினி பிரச்னைகளுக்கு உதவும் வலைப்பூக்களை ஒரு ரவுண்ட் வரலாமா???

தட்டச்சு பலகையின் சிற்சில குறுக்குவழிகள் பற்றி விபரமாகத் தரும் பதிவு இது...தருபவர் இக்பால்

அடுத்து ரவி...... தமிழ் வலைப்பதிவர்களுக்கான சின்ன சின்ன சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் வலைப்பூ இது.வலைப்பூவின் பெயர் வைப்பிலிருந்து வாசகர்களை எப்படி வலைப்பூவிற்கு நிரந்தரமாக வர வைப்பது வரை சொல்லிக் கொடுக்கிறார்.

இப்படி மற்றவங்க சந்தோஷத்திற்காகவே வாழ்றவங்க கொஞ்சமே கொஞ்சம் பேர்தான்......அதிலேயும் நமக்குத் தெரிஞ்சவங்க ரொம்பக் கொஞ்சம்தான்...வேற உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தால் சொல்லலாமே???? அப்புறம் நாளைக்குப் பார்க்கலாமா???? வர்ட்டா?????

Friday, October 24, 2008

உங்களுக்குத் தெரியும்தானே????...



அடுத்ததா ரொம்ப ரொம்ப அழகான மஹல்கள் நிறைய இருக்கிறது...ஜெய்ப்பூரில்னு உங்களுக்குத் தெரியும்தானே????...

அதிலே ரொம்ப சிறப்பு வாய்ந்தது இந்த ஹவா மஹல்....

மேல் உச்சி வரைக்கும் ஏற முடியும்.

இந்த மஹலின் மிகச் சிறந்த அம்சம் என்னான்னா......

இந்த மஹலின் உள்ளே எங்க நின்னாலும் காற்று சும்மா பிச்சுக்கிட்டு போகும்.

"ஹவா" அப்படின்னா ஹிந்திலே காற்றுன்னு அர்த்தம்.....

காற்று மஹல்...... நல்லாருக்கா??

சிந்தாமல் சிதறும் சிந்தனைப் பூக்கள் சில.....

எழுத்துதல் என்பது வெறும் மன நிறைவை விடவும் உதவியுள்ளவையாகவும், சிந்தனையைத் தூண்டி விடுபவையாகவும் இருந்த்து விட்டால் எவ்வளவு மன நிறைவு?????அப்படிச் சிந்தனையைத் தூண்டி விடும் ஒரு சில பதிவுகளைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
வைரவன் கலையரசியின் இந்த வலைப்பூ....

"என்மதம்! என்இனம்!
என்மொழி! என்னாடு!"
எனும் மானுடர்களை "என்உலகம்!
என்உயிர்கள்!!" - எனச்சிந்திக்கப்
பழக்கவேண்டும். "
என்று சொல்லும் இவரின் மனம் என்னும் கவிதையின் சில வரிகள்....

"கட்டுப்படுத்தி
குப்பைகள் அகற்றி
குணங்கள் சேர்த்தால் கடவுள்!"

அப்புறம் கிருத்திகாவின் வடிகால்...
நிறைய யோசிக்க வைக்கிறது...
நம்ம ஏன் இப்பிடி யோசிக்கவில்லை என யோசிக்க வைக்கிறது..இவரின் இது ஒரு மழைக்காலம் என்னை ரசிக்க வைத்தது என்றாலும் மூகமூடிக் கவிதைகள் சிந்திக்க வைத்தது.அதிலும் இந்த வரிகள்...இயலாமையின் கொடுமையை அழகாகப் பதிகிறது...

"நடப்பின் இருப்புகளை
உதறவோ உடைக்கவோ முடியாத
இயல்பின் மனநிலையில்
கரம்நீட்டித்தரும்
உதவியின் கோப்பைகளை
உடைத்தெறியத்துடிக்கிறது மனது

ஏனெனில்
யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

பெண்களின் உரிமைகள் பற்றிய பதிவில்

"முண்டியடித்து முகம்சிவந்து
முந்திச்செல்வதில் சுகம் கண்டதை
புரட்சி எனச்சொல்லாதே
புரட்சி புத்தியில் வரவேண்டியது,"

என்னைக் கவர்ந்த வரிகள் இவை...

அப்புறம் பாரி அரசின் சிந்தனைப் பூக்கள்.....
எப்பொழுதாவது சொல்லலாம்,பயன்படும் என்று சேகரித்து வைத்த உண்மைகள் நிறைய இவர் பதிவில்....அருமையான சிந்தனைபூக்கள் பல....

Thursday, October 23, 2008

இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜல் மஹல்...



இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜல் மஹல்...ஜல் என்றால் தண்ணீர்.....தண்ணீருக்கு நடுவில் அமையப் பெற்றிருப்பதால் இந்தப் பெயர்.தண்ணீர் இருக்கும் காலங்களில் ரொம்ப அழகாக இருக்கும்.....கோடை காலத்தில் தண்ணீர் வற்றி காய்ந்து போய் இருக்கும் ..இந்தப் படத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

சாண்டில்யனின் கதைகளை நினைவு படுத்தும் கதவுகள்...

ஒவ்வொரு கதவும் ஒவ்வொரு விதத்தில் வடிவமைப்பு...

ஆகா...!

அழகோ அழகு....!










ஒரு கனவும்.., சில கனவுப் பூக்களும்!

என்னுடைய சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று......

உங்களிடம் சொல்லாமல் எப்படி????

நானே பள்ளிக் கூடம் ஒன்று ஆரம்பித்து நடத்த வேண்டும்.

அதுவும் என் இஷ்டப் படி.....

ஏட்டுப் படிப்பு வேலைக்காகாது........

தற்போதைய படிப்பு முறை என் மனதுக்கு ஒவ்வாத ஒன்று....

ஆசிரியர்கள் சிலபஸ் பின்னாலும்...
மாணவர்கள் மதிப்பெண்கள் பின்னாலும்...
அலையும் காலமிது..!

புரிந்து படிக்கும் நிலை வகுப்பிற்கு ஒன்றிரண்டு மாணவர்களிடம் இருந்தாலே அதிகம்..!

மதிப்பெண்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்களையும் கண்டிருக்கிறேன்..!

இதை எல்லாம் மாற்றுவதென்பது??????


என் வரையில் முயன்றுதான் பார்க்கலாமே......
என்னும் எண்ணம்தான் ஒரு பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும் ஆசைக்கு வித்திட்டது....
என் பள்ளியில் சிலபஸ்....
அதை முடிப்பது என்ற சிக்கலே இருக்காது...
தேர்வு...
மதிப்பெண்கள்...

என்னும் மன நோய் பிடிக்க வைக்கும் வேதனைகள் இருக்காது...

கல்வி என்பது, உருப் போடுவதாக அல்லாமல் கற்றுக் கொள்வதாக இருக்கும்.....

விரும்பிக் கற்றுக் கொள்வதாக இருக்கும்.....

வாழ்வியலுக்கு ஏற்ற கல்வி முறையாக இருக்கும்......

வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கும் துறை சார்ந்த கல்வியாக இருக்கும்.......ம்ம்ம்ம்...

கனவுகள் பல..பல...கனவு காணக் கூடாதா என்ன????????
இந்த என் கனவு நிச்சயம் பலிக்க வேண்டும்..!

இனி இன்னிக்கு கனவுப் பதிவுகள்.....

இது சம்பத்தின் கனவு.....அழகிய உருப்படியான கனவுகள்தான் ...ஆனால் பலிக்க வேண்டுமே??????

அப்புறம் அருள்குமாரின் கனவுப் பெண் பற்றிய பதிவு.....

மணியம் செல்வனின் பெண்களை நினைக்காதவர்கள் யாரேனும் இருக்கமுடியுமா???

அந்த நெடிதுயர்ந்த உருவமும்,
நீளக் கூந்தலும்,பூவும்,
வெடு வெடுவென்று நீளும் விரல்களும் ...
ம்ம்ம் பெண்களுக்குப் பொறாமை தரும் அழகல்லவோ???
அதை இவர் ரசித்துச் சொல்வது மட்டுமல்லாமல் வரைந்துமிருக்கிறார்...

அப்புறம் நாட்டியின்( இதுதாங்க பெயர்) உயிர் வளர்க்கும் கனவுகள்.......உணர்வு பூர்வமான பதிவு....
"உயிருக்கு உவகை பாய்ச்சும் உரம்
உணர்வுக்கு மட்டுமே உள்ளது...."

அடுத்ததாக நம்ம கலையரசியின் உயிர்ப்பு..... அவரின் கனவுகள் பற்றி ரொம்ப விரிவாகச் சொல்லியிருக்கிறார்.......கொஞ்சம் விசித்திரக் கனவுகள் கூட உண்டு....

"விசித்திரமான கனவுகள். நாவல் (நீண்ட கனவுகள்), சிறு கதைகள் (குறுகிய கனவுகள்), தொடர்கதைகள் (சொன்னா நம்புங்க, எனக்கு ஒரு கனவின் தொடர்ச்சி, ஒரு விழிப்பின் பின்னர் அடுத்த தூக்கத்தில் தொடரும்) எல்லாம் வரும். ஒரு கனவு கண்டு எழுந்த பின்னர், அந்த கனவு கண்டதாக அடுத்த கனவில் வேறு யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பேன்"
படிச்சுப் பாருங்க....

அப்புறம் பா.நம்பியின் வைகறை வானம்....கொடுக்கும் கனவு.கனவும் காட்சியும்..
அழகான எளிமையான வார்த்தைகள்தான் இருந்தும் மனதைத் தொடுகின்றன....

"கண்ட கனவு பலித்தால்" என்பதுதானே பல நேரங்களில்
நாளையே நமக்கு துவக்கி வைக்கின்றது! மாற்றியும் வைக்கின்றது
நமது கனவென்ன?
எல்லோருக்கும் நல்லன எல்லாம் கிட்ட வேண்டும் என்பதுதானே!

நம் கனவும் காட்சியாகட்டும்,
நம் கனவையும் அயரா உழைப்பையும் அதற்கே விலையாய்
இன்றே தருவோம்!!

நம்புங்கள் நாட்கள் எல்லாம் பொய்,
இன்றின் கனவுகளும் நாளையின் காட்சியும் மட்டுமே உண்மை"

இது கொஞ்சம் வருத்தக் கனவு .....பத்மா அர்விந்த்துடையது..."சுதந்திரக் காற்றும் கூண்டுக் கிளியும்"பதிவும் அருமையானது...பதிவின் முடிவில் இருக்கும் கனவுக் கவிதையும் ரொம்ப அருமை.....

"கனவுகள் வேண்டாம் பெண்ணே
நிஜங்களின் நிழல்கள் ரசிக்க
நீயேனும் கற்றுக்கொள்க
என்ற கவிதை வரிகள் போல
இங்கே இன்னமும் கனவுகளாகவே
சுதந்திரமும் இருக்கிறது. "

கனவுக்கு உள்ள சுதந்திரம் வேற எதற்கும் கிடையாது...

ஏன் என்றால் கனவு வெளியில் நம்முடன் நாம் மட்டுமே.

மனவருத்தத்தை பளிச்சென்று காட்டக் கூடிய முகம் கிடையாது கனவுக்கு.....

சூரியனில் கூடப் போய் குடியிருந்ததாகக் கனவு காணலாம்....
சூரியன் சுடாது...

கனவுக்கு வானமே எல்லை.

கனவு என்றால் அப்துல் கலாமோடு முடிப்பதுதானே பொருத்தம்???

இது அப்துல் கலாமின் சிறிய வயது விவாதம்.....பதிந்தவர் ஸ்ரீநிவாசன்.அ.பால்ராஜ்.

Wednesday, October 22, 2008

இதெப்பிடி இருக்கு ??????



முதல்லே இந்தக் கூஜாவைப் பற்றி எழுதிடுறேன்...இல்லைன்னா அவசரக் குடுக்கை பக்கி லுக்......என்னை ஒரு வழி பண்ணிடும்......

நேற்று போனோமே அந்த பேலஸில் இந்த மாதிரி இரண்டு பெரிய வெள்ளி ஜாடிகள் இருக்கிறது....

உலகத்திலேயே பெரிய வெள்ளிப் பொருட்கள் வரிசையில் இது கின்னஸ் புக்கில் இடம் பெற்றிருக்கிறது.

இது 345 கிலோ எடையும்,
5.3" அடி உயரமும்,
14'10" சுற்றளவும் கொண்டது.

இது 14,000 வெள்ளி காசுகளை உருக்கி ஒரே துண்டாக்கி பின் ஜாடியாக வடிவமைக்கப் பட்டது.

இது எதற்காகச் செய்யப் பட்டதுன்னு தெரிந்தால் "ஆ"வென்று வாயைப் பிளந்து விடுவீர்கள்.

மஹாராஜா இரண்டாம் சவாய் மாதோ சிங், இங்கிலாந்து மன்னர் ஏழாம் "எட்வார்ட்டின்" முடிசூட்டு விழாவில் பங்கு பெற இங்கிலாந்து சென்ற போது குடிக்கத் தண்ணீர் கொண்டு போவதற்காகச் செய்தது.

இதெப்பிடி இருக்கு??????

குட்டிக் குட்டிக் கதைப் பூக்கள்!!!

கதை எழுதுவது ஒரு கலை.

நிறைய சமயங்களில் நல்ல கதை கூட எழுதிய விதத்தினால் அடிபட்டுப் போவதுண்டு.

கருத்தில்லாத கதைகள் கூட சமயங்களில் எழுதிய நடையினால் மின்னுவதுண்டு.

அவரவர்க்கென்று எழுத ஒரு தனி ஸ்டையில் நம்மை அறியாமலேயே உருவாகிவிடும்.

பிறகு அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதையே பின்பற்ற வேண்டியதிருக்கும்.

சில காலம் முன்னால் எழுத்தாளர்கள் அவர்களுக்கென்று கதாநாயகிகளும், கதாநாயகர்களும், காமெடியர்களும் கூட தனியாக உருவக்கிக் கொண்டார்கள்.

அவற்றில் எழுத்தாளர்கள் சுபா-வின் "வைஜயந்தி,நரேன்!"

ராஜேஷ்குமாரின் ரூபலா,விவேக்,

சுஜாதா-வின் கணேஷ்,வசந்த்

பட்டுக்கோட்டை பிரபாகரின் "பரத், சுசீலா"
இவர்களெல்லாம் மறக்க முடியாத ஜோடிகள்.

தனி பாணி உருவாக்கிக் கொள்வது ஒரு தனி வித்தைதான்.

அதெல்லாம் கதாசிரியர்களின் கவலை...

நமக்கெல்லாம் எதற்கு????

நல்ல நல்ல கதைகளாகத் தேடிப் பிடித்துப் படித்தால் போதாதா??

அந்த வகையில் நான் தேடிப் பிடித்துப் படித்த கதை வலைப் பூக்கள்.....

ஜென் கதைகளுக்கு....தினம் ஒரு ஜென் கதை....

(Wired) என்ற அமெரிக்க மாத இதழில் வெளிவந்த ஆறு வார்த்தை கதைகளின் மொழி பெயர்ப்பு இந்தப் பதிவில் அங்குமிங்கும்

அப்புறம் குட்டி குட்டியாய் ....அழகான கருத்துள்ள கதைகள் இங்கே...

குட்டிக் குட்டிக் கவிதையாளர் தபூ ஷங்கரின் கதைத் தொகுப்பு......இது ஆச்சரியமான வலைப் பதிவு....

உங்க வீட்டு செல்லக் குட்டீஸ்களுக்கு டிஜிட்டல் கதைகள் ஒளி ஒலி வடிவில் இங்கே...
அழகோ அழகு......புதுவண்டே!!!

அப்புறம் இங்கே கொஞ்சம் நெடுங்கதைகள் பானுவாசன் தருகிறார்...

இன்னிக்குக் கதையும் முடிஞ்சுது......கத்தரிக்காயும் காய்ச்சது!!!
நாளைக்குப் பார்க்கலாமா???

நான் என்னும் எண்ணம்...........அதாங்க ஈகோ!!..

எனக்குப் பிடித்ததும் பிடிக்காததுமான ஒன்றைப் பறறி எழுதியே ஆக வேண்டும்.

எல்லோரிடமும் இருக்கும் ஒன்று.......

ஆனால் எல்லோருக்கும் அடுத்தவரிடம் இருந்தால் பிடிக்காது......
என்ன...?

குழப்பமாக இருக்கிறதா??

அதுதான் நான் என்னும் எண்ணம்..... (ஈகோ).....

இப்போ நான் சொல்லப் போகும் கதை...

நான் சின்ன வயதில் படித்த கதை ஒனறு கொஞ்சம் அரை குறையாய் நினைவில் இருக்கிறது.......

ஒருமுறை ஒரு முனிவரும் அவரின் சீடரும் யார் சொர்க்கத்தி்ற்குப் போவார்.....
என்று வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார்கள்....

"நான்தான் போவேன்......நான்தான் போவேன்" எனறு உரத்த குரலில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்......

அதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த ஒரு பெண் "நான் போனால் போகலாம்" எனறு மிகச் சாதாரணமாக சொல்லி விட்டுப் போனாள்......

கொஞ்ச நேரம் முனிவரும் சீடரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு "நீ எப்படிப் போவாய்?"..... என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார்கள்.

அந்தப் பெண் மீண்டும் வந்து உங்களிருவரிடமும் உள்ள "நான் என்னும் எண்ணம் போனால் போகலாம்"..... என்று சொல்லிச் சிரித்தாள்.....

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்தமான என் மனதில் ஆழப் பதிந்த ஒரு கதை....

இதை மாதிரி ஆழ்கருத்துக்ளுடைய கதைகள் பல இவரின் ஒரு நிமிடக் கதைகளில் கொட்டிக் கிடக்கிறது......

வினையூக்கியின் ஒரு நிமிடக் கதைகள்....,
வலைப்பூ உலகில் ரொம்ப பிரபலம்...!

Tuesday, October 21, 2008

எங்க ஊர்லே இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜெய்ப்பூர் பேலஸ்...



ம்ம்ம்...இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜெய்ப்பூர் பேலஸ்...

நம்ம அடிமைப் பெண் படத்திலே வருமே அதே பேலஸ்தாங்க....

அதுக்கப்புறம் நிறைய படங்களில் வந்திருந்தாலும் காதலுக்கு மரியாதையில் ரொம்ப அழகாக காட்டியிருப்பாங்க....

உள்ளே ஒவ்வொரு இடமும் ரொம்ப அழகுணர்ச்சியுடன் கட்டப் பட்டிருக்கும்.

சுற்றிப் பார்க்கும் போது ராஜாக்கள் எல்லாம் ரொம்ப ரசிச்சுதான் வாழ்ந்திருக்காங்கன்னு சின்னதா ஒரு பொறாமையும் கூட வரும்ங்க.

ஒளி வீசும் நிலாப் பூக்கள்.....

நிலவை ரசிக்காத மனமும் உண்டோ???

நிலாச் சோறு உண்ணாதவரும் உண்டா?

மாம்மை (அம்மா வழிப் பாட்டி) வீட்டில் மொட்டை மாடியில் மாம்மை கையால் நிலாச் சோறு சாப்பிட்ட அனுபவம்....

ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு நிலாக் காலம்...

திண்ணை நினைவுகள் எப்படி எல்லோருக்கும் உண்டோ, அது போல நிலா நினைவுகளும் எல்லோருக்கும் இருக்கும்....

அந்த நிலா பற்றிய பதிவுகள் இன்னிக்கு.....

இது யாழ் அகத்தியனின் பகல் நிலாவின் நிலா பாட்டு.....

"வா ...வா நிலாவா நிலா....
வாழ்வோம் ஒன்றாய்
வானம் உள்ளவரை சேர்ந்தே..."

இது ஆதிபன் சிவாவின் குட்டி நிலா
"மேகமாய் வந்துபோகும் நினைவுகளிடையே
வெள்ளிநிலவாய் உன்னினைவு என்னுள் "

விழிமொழியின் "நீயிருக்கும் தூரத்தில்"
"மன்றாடிக் கேட்ட
நிலாவிற்காய்
உனை வர்ணித்த
கவிதையில் - நிலா
இப்படியாக
பெருமைத்தேடிக் கொண்டது.

நீயிருக்கும் தூரத்தில்
நிலா."


பெயரே வித்தியாசமாக அ+மீன்....கவிதையும் அது போல....
அவருடைய நிலாப் பெண்ணே கவிதை....

"என் கனவு விடிகிறது
துயிலைக் கடந்து
நீயும்
விலகிப்போகிறாய்
உன் சூரியனை
விட்டு…"

இது கொஞ்சம் பெரிய இடம்.கவிதைக்குத் தலை....
அருட்பெருங்கோஅவர் எழுதின நிலா.....

"கோபம்…
சூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!"

இது கமல் ராஜன் நிலாப் பதிவு....வித்தியாசமாக இது நிலவைப் பற்றியில்லாமல் நிலா ரசிகைக்காகவும்,நிலா ரசிகனுக்காகவுமான கவிதை....படித்துப் பார்த்தால் தெரியும் அழகு.

அதைவிட வித்தியாசம் அனிதா பவன்குமாரின் நிலாக் கவிதை..

"அட இன்று அமாவாசை என்றார்கள்

பின் இந்த நட்ச்சத்திரங்கள் யாரைப் பார்த்து கண் சிமிட்டுகின்றன

ஓ என்னவள் மொட்டை மாடியில் படித்துக்கொண்டு இருக்கிறாளோ???!!!!"

இது கொஞ்சம் வருத்தக் கவிதை...சையது மீரான் வருந்துகிறார்.

"நான் எத்தனையோ முறை விதவையானேன்.
ஒருநாள் உனக்காக வெறுமையாகுவேன்
உனக்காக தேயும் நாளும் வரும் என்றாள்
மாதா மாதம் அவள் தேய்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

யார் யாருக்காகவோ......"


அப்புறம் ஞானதேவனின்......நிலா சொந்தம்.
கவிதைன்னு நினைச்சுப் போயிராதீங்க....நிலவில் நிலம் வாங்குவது எப்படின்னு விலாவாரியாச் சொல்றாருப்பா!!!

"நிலா பூமிக்கு சொந்தம்
பூமி நமக்கு சொந்தம் - எனில்
நமக்கு நிலாவும் சொந்தம் "

அம்மாடி ....நிலா நிலான்னு பேசி இரவு நினைவுக்கு வந்து தூக்கம் தூக்கமாய் வருதுப்பா!!!.நாளைக்குப் பார்ப்போமா????

என்மேல் பட்டுத் தெறித்த மழைப் பூக்கள்!!!!

மழை என்னுள் ஏற்படுத்தும் சிலிர்ப்பு ...இன்று நேற்றல்ல....ரொம்ப வருஷத்துச் சிலிர்ப்பு...

"நேற்றுப் பெய்த மழையில்
இன்று முளைத்த காளான்
குடையின் கீழ் ஒதுங்கி
இருக்கும் குட்டிப் புழுவே!!!
மழை நின்று விட்டது
வெளியே வா."

இது எனக்குப் பிடித்த என் மழைக் கவிதை....

மழை பற்றி யார் என்ன எழுதினாலும் எனக்குப் பிடிக்கும்....

தேடித் தேடிப் பார்த்துப் படிப்பேன்.

அப்படிப் படித்த பதிவுகளில் எனக்குப் பிடித்தவை... இவை.

இன்னும் சில மழைப் பதிவுகள் விட்டுப் போயிருக்கலாம்..நீங்களும் பின்னூட்டம் போட்டுச் சொல்லலாம்....

சரவணகுமார் சுமார் பத்துக்கும் அதிகமான மழைக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.....அத்தனையும் மழை முத்துக்கள்.
இது அவரின் மழை தேவதை...

"மழையாய் வந்தாய்..
மழை போல் வந்தாய்..
மழை போலவே இருந்தாய்"

இது ப்ரியனின் ப்ரிய மழை....

"முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!"

உணராமல் வழிந்தோடும் மழைநீரைப்போல,
என்னையறியாமல் கால் இயங்கும்
மனம் நிரம்பித் தளும்பி ஞாபங்களால் கலங்கலடைந்து
கடந்து போவோரில் அறிந்த முகம் தேடும்!


இது 'மழை' ஷ்ரேயா

அதிகாலை நடை சுகம்.
அதுவும் முன்னாள் பெய்த மழைவிட்டுச்சென்ற
மண்வாசனையினை முகர்ந்து கொண்டே நடப்பது ஆனந்தம்.

இது விழியனின் மழைக் காலம்....
படிக்கும் போது நிஜம்மாகவே மண் வாசனை நுகர்ந்த ஆனந்தம்....

மழைமழைமழைமழைமழை
ழைழைழைமமமமமழைழைழை
மழைழைமழைமமழைழைம

மழைமழைமழை
மழைமழைமழை

மழைமழை
மழைமழை

மழை

மழை



ழை

இது கவிஞர் மதுமிதாவின் மழை....
மழைத் துளியின் சாரல் மேல் பட்டது போல ஓர் உணர்வு படித்தவுடன்....

அப்புறம் அனுராதாவின் மழையின் நட்பில்.....

"மறுபடியும் மேகம் குவியும்
மற்றொரு மழைக் காலத்துக்காக
அந்நாளுக்காக
கையில் குடை பிடித்துக்
காத்திருப்போம் மீண்டும் நனைய"

இது அய்யனாரின் அழகிய மழை வருத்தம்...

"நீ மழை பெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்"

அடுத்து சிவஞானம்ஜியின் ‘பெண்ணல்ல…..மழை!’

விரும்பி வேண்டுகையில்
விலகிப் போவதுவும்…
வெறுத்து ஒதுக்குகையில்
வீம்பாய்க் கொட்டுவதும்..
பெண்ணல்ல………..
மழை!

இது தீபாவின் மழைப் பதிவு.....
"அம்மா...மழைய்யை ரசிக்க வாயேன்"
என்று எல்லோரையும் அழைக்கும் ஒரு பதிவு.மழை பற்றித்தான் எத்தனை எத்தனை நினைவுப் பொக்கிஷங்கள்?????

தங்ஸ் இந்தப் பேரு கொஞ்சம் புதுமையானது....இவரின்
"மழையும்,மழை சார்ந்த பொழுதும்" இவரின் பெயரைப் போலவே புதுமையானது....

மழை அழகோ அழகுதான்.....ஆனாலும் அதற்கும் ஒரு மறுபக்கமிருக்கே.

எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் கஷ்டம்தானே???????

இது மழையின் மறுபக்கத்தைப் பதியும் ஒரு பதிவு.....மழையை ரசிக்கும் போது....இதையும் அனுபவிக்கத்தான் வேண்டும்.
யெஸ்.பால பாரதியின் இந்தப் பதிவு மழையின் மறுபக்கத்தைக் காட்டுகிறது.....

இன்னிக்கு இவ்வ்ளோதாம்ப்பா....????

கொஞ்சமா மழையிலே நனைஞ்சுட்டோமில்லே,....????

ஜல்ஸ் புடிச்சிக்கிச்சுப்பா.....நாளைக்குப் பார்க்கலாமா......???

வர்ட்டா.....???

Monday, October 20, 2008

வாழ்த்தலாம் வாங்க!!!


அழகியைப் படைத்த விஷி
நாளை பிறந்த நாள்
கொண்டாடுகிறார்....
என் தமிழ் வலைப்பூ
இனிமையாகியதற்கு
அழகியும் ஒரு காரணம்.....
தனிமை விரும்பியான இவரை
கூட்டமாக வாழ்த்தலாமா????

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஷி.....

எங்க ஊரைப் பற்றித் தெரிஞ்சுக்கோங்க!!!!!!!!!

பொதுவா நான் எனக்குப் பிடித்தவைகள் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன்...

இது பொது இடமாச்சே ஏதாவது உபயோகமா எழுதணும்னு தோன்றியது.

அப்போதான் வினையூக்கி செல்வா உங்க ஊரைப் பற்றி எழுதினால் என்னன்னு எப்பவோ கேட்டது நினைவுக்கு வந்தது.

சரி இப்போ வலைச் சரத்திலே எழுதிர வேண்டியதுதான்னு முடிவு பண்ணியாச்சு.

ஐடியாவுக்கு நன்றி செல்வகுமார்...!!!




எங்க ஊரைப் பற்றித் தெரிஞ்சுக்கோங்க!!!!!!!!!!!!!

ஜெய்ப்பூருக்கு பிங்க் சிட்டி (Pink City)-ன்னு ஒரு பேரு உண்டு!

வீடு, கோவில், கட்டிடங்கள்னு எல்லாமே பிங்க் கலர்லே இருக்கும்.

ஊருக்குள் நுழையும் எல்லா திசைகளிலும் பெரிய பெரிய ராஜா காலத்து நுழைவாயில்கள்...

நடந்து போகும் போது ஏதோ நாமே ராஜாவாகிட்ட மாதிரி ஒரு உணர்வுதான் போங்க......!

மனம் ஒரு அதிசயமான கலவை....!

எனக்கு சீரியஸ் பதிவுகள், ஆன்மீகப் பதிவுகள், பெரியார் பதிவுகள், வம்புக்கு இழுக்கும் பதிவுகள், பின் நவீனத்துவப் பதிவுகள், முன் நவீனத்துவப் பதிவுகள், கடவுள் சண்டைப் பதிவுகள்... அரசியல் பதிவுகள்... இதெல்லாம் கொஞ்சம் அலர்ஜி........ சமூக அக்கறை உள்ள பதிவுகள் கொஞ்சமாய் பிடிக்கும்.

என்னைப் பாதித்தவைகளை மட்டுமே நான் எழுதுகிறேன்...

ஆனால் என் அனுபவங்களால் மட்டுமே நான் பாதிக்கப் படுவதில்லை

மனித மனம் ஒரு அழகான...... ஆனாலும் அதிசயமான..... ஒரு கலவை..!

எனக்குப் பிடித்தவைகள் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்..!

எனக்குப் பிடிக்காதவைகள் உங்களுக்குப் பிடித்திருக்கலாம்..!

உங்களுக்குப் பிடித்தவைகள் எனக்குப் பிடிக்காமல் போகலாம்..!

உங்களுக்குப் பிடிக்காதவைகள் எனக்குப் பிடித்திருக்கலாம்..!

என்றாலும் இந்த வாரம் முழுவதும் என்னோடு கை கோர்த்துக் கொண்டு தான் வர வேண்டும்............ தப்பிச்சுப் போக முடியாதே!!!!!!!

ஏற்கெனவே சொல்லிருக்கேன்...
எனக்கு நிலா, மழை, மேகம், காற்று, நட்சத்திரம், அலை, பாட்டு, புத்தகம்னு ஒரு கனவுலகில் வாழப் பிடிக்கும்னு..
அதனால முதலில் கொஞ்சம் அழகியல் கவிதைகள்...

இங்கே இவர்கள் நட்சத்திரம் பொறுக்கும் அழகே அழகு...அருள்முருகனின் இந்தக் கவிதை நட்சத்திரம் போலவே அத்தனை மினு மினுப்பு...

"ஒவ்வொரு முறையும்
நினைத்துக்கொள்வேன் -
நிச்சயம் நாளையாவது
நீயில்லாத வேறுதிசையில்
பயணிக்கவேண்டும்.

ஆனால் விடிந்ததும்
தினம்தினம் உன்சுவடுகளைத்
தொடர்வதே வழக்கமாகிவிட்டது"

அடுத்தது குட்டிச் செல்வனின் காற்று....சிலு சிலுவென்று வீசுகிறது....

"காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதறிச் செல்ல‌ மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன் "

அப்புறம் என்னை மயக்கும் மேகங்கள்.....அவை வரையும் நொடி ஓவியங்கள்...இதைப் பற்றி அரவிந்த் எழுதியிருக்கும் இந்தப் பதிவு மேகத்தைப் பற்றி ஒரு டாக்டரேட் பண்ற அளவுக்கு விரிவாகப் பதிந்திருக்கிறார்...

"மேகங்கள் சுதந்திரத்தை மொத்தமாக குத்தகை எடுத்திருக்கின்றன.
எந்த உருவத்தையும் எடுக்கலாம்.
தூங்காப் பறவைகள் போல எந்த திசையும் பறக்கலாம்."

அப்புறம் நதி.....பார்க்கப் பார்க்க அலுக்காத நதி....சுழித்து ஓடும் நதி....இது என் நதி...

இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது.

அப்புறம் ராஜாசந்திரசேகரின் கல் நதி...

"உள் உளி
பாய
நகர்கிறது
கல் நதி"

அவரே கடல் பற்றி சொல்லும் போது....

"தான் வரைந்த கடலில்
நேற்றுப் பார்த்த கடல்
இருக்கிறதா
கேட்டாள் சிறுமி
அவள் நீலக் கோடுகளிலிருந்து
எம்பிக் குதித்த வண்ணமீன்
ஆம் என்று
சொல்லச்சொல்லி
உள் ஓடி
மறைந்து போனது"

இன்னும் கொஞ்சம் அழகியல் பதிவுகள் நாளைக்கு பார்க்கலாமா??
வர்ட்டா...???

நான் கவியரசியான கதை........

நான் நாகர்கோவிலில் தவழ்ந்து தூத்துக்குடியில் வளர்ந்து ஜெய்பூரில் சிறகடிக்கும் ஒரு தமிழ்ப் பறவை...!

மழை, நிலவு, கடல், மேகம், அலை, பாட்டு, புத்தகங்கள், நட்சத்திரம் என்று ஒரு கனவுலகில் வாழப் பிடிக்கும்.

மன நிலைக்கு ஏற்றவாறு பிடித்த பாடல்களின் வரிசை மாறும்.

பாலகுமாரனின் ,சுஜாதாவின் எழுத்துக்களில் உயிர் கரையப் பிடிக்கும்.

உயிர் உருக்கும் நட்பு பிடிக்கும்..!

மழையுடன் எப்போதும் இணைந்து நனையப் பிடிக்கும்..!

மழை முடிந்த மரம் உதிர்க்கும் மழையும் பிடிக்கும்.

மழையுடன் ரயில் பயணம் பிடிக்கும்.

பிடிக்காத ஒன்று...

என்னுடைய மௌனமும்,யாருடைய மௌனமும்.......

கொஞ்சம் எழுதுவேன்...............

நிறைய படிப்பேன்............

கொஞ்சம் பதியவும் செய்வேன்....

சில நேரங்களில் கைவிரல்களாக..........

பல நேரங்களில் கால்தடங்களாக................

ஆனால் நிச்சயம் உங்கள் மனதில் பதிவேன்.............

கவிதைகள் எனக்கு அறிமுகமாகியது என் தமிழ் ஆசிரியர் சாலமன் மூலமாக.....

கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ???? இதுதான் கட்டுரைப் போட்டியின் தலைப்பு....

நானும் எழுதிட்டுப் போனதைப் படித்த அவர், "சில கவிதைகளும் மேற்கோள் காட்டி எழுதியிருந்தால் நல்லாருக்குமே..." அப்படின்னார்.

எங்கிட்டே கவிதைப் புத்தகங்கள் எதுவும் இல்லை....
அதனால நானே சில வரிகள் எழுதி சேர்த்துக் கொண்டேன்.

அதற்கு மூன்றாவது பரிசு கிடைத்தது.... பாராட்டும் கிடைத்தது..... அந்தக் கவிதை வரிகள் யார் எழுதினதுன்னு எல்லோரையும் கேட்க வைத்தது......

அதற்கப்புறம்தான் நம்ம கவியரசியானதெல்லாம்.......!!!!!.??????

நம்பாதவங்களுக்காக என் முதல் கவிதை வாரமலரில் பிரசுரமாகியதற்கு அனுப்பிய 10 ரூபாய் மணி ஆர்டர் ரசீதைப் பார்த்துக்கோங்கப்பா.....ம்ம்ம்ம்



ம்....ம்ம்ம்...இதெல்லாம் சைக்கிள் கேப்லெ ஆட்டோ ஓட்டற வித்தை!!!! இப்போ விட்டா அப்புறம் முடியுமா???

என்னையும் என் எழுத்துக்களையும் ஒரு பொருட்டாக மதித்து இந்த வார வலைச் சர ஆசிரியராக ஆக்கிய சீனா அய்யாவுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

எனக்குப் பிடித்த என் பதிவுகள் சில......

என் வீட்டுக் கதை

ஒரே நாளில் கதாநாயகியாயிட்டோமில்லே!!!

அன்றொரு நாளில் முட்டாளாகிட்டொமில்லே!!!!

அன்றைக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே!!!!

ஒரு நிமிஷத்திலே திருடனாயிட்டோமில்லெ!!


அட இன்னும் நிறைய ஒருநாள் வித்தை வச்சுருக்கோம்லே!!!

Sunday, October 19, 2008

வழி அனுப்புதலும் வரவேற்பும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வாரமாக அருமை நண்பர் வால் பையன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, தனது பணியினை அமைதியாக, ஆறு பதிவுகளிட்டு, நூற்றுப் பதினான்கு மறுமொழிகள் பெற்று, சிறப்புற செய்து விடை பெற்றிரூக்கிறார். அவருக்கு வலைச்சரத்தின் சார்பிலும் என் தனிப்பட்ட முறையிலும் நன்றி கூறி வழி அனுப்புகிறோம்.


அடுத்து 20ம் நாள் துவங்கும் ஒரு வார காலத்திற்கு சகோதரி அருணா ஆசிரியராகிறார். அவர் பதிவின் பெயரே வித்தியாசமாய் இருக்கிறது. நான் இறக்கப் போகிறேன் - அருணா என வைத்திருக்கிறார். முதல் பதிவினில் இறப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என அழகாக எழுதி இரூக்கிறார். அதில் முக்கியமானது இரு அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்து அருமையாக வளர்க்க வேண்டும் என்கிறார். இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை அளிக்கவும், இவரது கனவுகள் நிறைவேறவும் ஆசி வழங்குவாராக !.


அருணோவியா என்ற பதிவினில் அழகான படங்கள் வரைந்திருக்கிறார்.


இவரை வாழ்த்தி வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நன்றியுடன் விடைபெறுகிறேன்..!

எனக்கு சனி ஞாயிறு விடுமுறை. இருப்பினும் நான் மேலும் எழுத ஊக்கபடுத்தின சீனா ஐயாவுக்கு நன்றி சொல்லாமல் போனால், இந்த வலையுலகம் என்னை மன்னிக்காது.
மற்ற பதிவர்களை நினைவு கோர எனக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.


எனக்கு ஆதரவளித்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி!

இந்த ஒரு வாரத்தில் நான் எழுதிய பதிவுகள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே!
அவைகளுக்கு நானே முழு பொறுப்பு! அது பற்றி ஏதும் விவாதிக்க விரும்பினால் என் வலைப்பூவில் தொடரலாம்.

பிறந்த வீட்டை விட்டு வெளியே செல்லும் மனநிலையில் கனத்த இதயத்தோடு மீண்டும் ஒரு முறை சீனா ஐயாவுக்கும், நண்பர்களுக்கும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன்

நன்றி

Friday, October 17, 2008

தமிழ் வலையில் பின்நவீன இலக்கியங்கள்

பள்ளி நாட்களில் சிறுவர்மலரில் ஆரம்பித்து, அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர் போன்ற புத்தகங்களில் ஆரம்பித்தது எனது வாசிப்பு, அதிலும் படக்கதைகளே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காமிக்ஸ் உலகில் ராணி காமிக்ஸ், முத்து மற்றும் லயன் காமிக்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், ராணி காமிக்ஸ் மற்றவைகளை விட வெகுவாக கவரவில்லை என்பதே உண்மை.

படக்கதைகள் இல்லாமல் போரடிக்கும் நேரம் அம்புலிமாமாவில் உள்ள குட்டிகதைகளை(இது அம்புலிமாமா குட்டிகதை) படிக்க ஆரம்பித்தேன். பின்னாளில் அதுவே ஆனந்த விகடன், குமுதம் என்று விரிந்து குறுநாவல் வரை சென்றது. அந்நாளில் குமுதம்,விகடனை விட பாக்யா எனக்கு பிடிக்கும். பயணங்களில் போது படிக்க ஆரம்பித்த குறுநாவல் ராஜேஷ்குமார், சுபா,பி.கே.பி, ஆகியோரின் ரசிகன் ஆக்கியது. இவையெல்லாம் ஜனரஞ்சக எழுத்துகள் என்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலில் இந்த மரபில் இருந்து வெளியேறி புதிய அனுபவத்தை பெற்றது ஆர்னிகா நாசரின் எழுத்துகளை படிக்கும் போது தான். ஆர்னிகா நாசரின் எழுத்துகள் பின்நவீனம் இல்லை என்று யாராவது சொன்னால் அது பற்றி விவாதிக்க என் வலையில் காத்திருக்கிறேன்.

தடித்த புத்தகங்களை பார்க்கும் பொழுது இதையெல்லாம் மாதக்கணக்கில் உட்கார்ந்து படிப்பார்கள் போல என்று நினைத்து கொள்வேன். ஒரு நண்பரின் வீட்டில் எதேட்சையாக
சுஜாதாவின் கொலையுதிர் காலம் படிக்க நேர்ந்த போது வேறொரு புது அனுபவம் கிடைத்தது. முழுதாக முடிக்கும் வரை அதை கீழே வைக்கவில்லை. பின்னாளில் எம்.ஜி.சுரேசின் "அலைக்சான்டரும் ஒரு கோப்பை தேநீரும்" படிக்க நேர்ந்தது. அது ஒரு பின்நவீன நாவல் என்று அறியபட்டேன். ஆனாலும் அதன் மொழி நடையில் எனக்கு எந்த சலிப்பும் ஏற்ப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக அவரின் "அட்லாண்டிஸ் மனிதம் மற்றும் சிலருடன்" "சிலந்தி" "யுரேகா என்றொரு நகரம்" "37" புத்தகத்தின் பெயரே நுப்பதிஏழு தான். சில வித்தியாச அனுபவங்களை கொடுத்தது.

அதன் பிறகு அவருடைய நண்பர் என்று அறியப்பட்ட ரமேஷ்.பிரேமின் "கனவில் பெய்த மழையை பற்றி சில இசை குறிப்புகள்" கிடைத்தது. முதல் இரண்டு பக்கங்களில் எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. இது தான் உண்மையான பின்நவீனமா என்று சந்தேகம் வந்தது. எம்.ஜி சுரேஷ் பின்நவீனத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று கேள்வி பட்டு அதை வாங்கி படித்தேன். பின்நவீனம் ஓரளவுக்கு புரிய ஆரம்பித்தது.

பின்நவீனத்தை பற்றிய எனது ஆராய்ச்சி
சலிப்பு தரலாம் நேரம் இருந்தால் மட்டும் பார்க்கவும்
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
என்னுடைய பின்நவீன பதிவுகள் (அப்படீனு நான் தான் நினைச்சுக்கிறேன்)

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு

பின்நவீனம் ஒரு அனுபவம். அது கொஞ்சம் வித்தியாசமானது. மாற்று கோணத்தில் யோசிக்கவைப்பது. அதை வெறுமனே வார்த்தைகளில் விவரிக்க முடியாது. சாதாரண எழுத்துகளில் ஒரு பாராவுக்கும் மறு பாராவுக்கும் இடையில் நமது சிந்தனை ஆயிரம் முடிவுகளை தீர்மானிக்கும். பின்நவீனத்தை பொறுத்தவரை உங்கள் சிந்தனை சிறிது நகர்ந்தாலும் நீங்கள் ஒரு அருமையான அனுபவத்தை வீணடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஓஸோ சொல்லுவார், ரோஜா என்ற மலரை ரசி, அங்கே நீ ஒரு காண்பவன் மட்டுமே, அதை விட்டு ரோஜாவின் வாசம், அதை சூடி வரும் பெண்ணின் கோணம் என்று சிந்தனை ஓடினால் அது கடைசியில் மலத்தில் வந்து நிற்கும் என்பார். பின்நவீனமும் அதை அதுவாக ரசிக்க மட்டுமே. அது ஆசிரியனுக்கு மட்டுமே உரியது. பல்வேறு கோணத்தில் சிந்திக்கும் உங்களின் சிந்தனைகளின் சிக்கலுக்கு அது பொறுப்பாளியல்ல.

மேலுள்ளவை என் வாசிப்பனுபவமும், பின்நவீனத்தை நான் புரிந்து கொண்ட முறையும் தான். வெறும் அனுபவங்களையும் உலக தத்துவங்களை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று பெயருடன் சிலாகித்து சொல்வதையும் பின்நவீனமாக நான் பார்ப்பதில்லை.

இனி வருவது தமிழ் வலைகளில் பின்நவீனத்தை கலந்து கட்டி அடிப்பவர்களில் நான் விரும்பி படிப்பவர்கள். சென்ற பதிவில் சில நகைச்சுவை பதிவர்கள் விட்டுபோனதாக குற்றசாட்டு. அதில் இம்சைஅரசியை நான் படித்ததில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். அபிஅப்பா விட்டு போனதற்கு வருத்தபடுகிறேன்.

அய்யனார்

தமிழ் வலைகளில் எனக்கு பின்நவீனத்தை அறிமுகப்படுத்தியவர். அவருடைய பதிவுகளை என் நண்பர்களை அழைத்து படித்து அர்த்தம் சொல்லுங்கள் என்று பந்தயம் கட்டுவேன். மிகவும் அனுபவித்து எழுதுபவர். ஆயிரம் அர்த்தகளுடன் இவரது கவிதை இருக்கும். சினிமாவில் இவரது ரசனை கூட மரபு சார்ந்து இருக்காது. இலக்கிய தரம் வாய்ந்த படைப்புகளாக இவரது பல பதிவுகளை உணர்ந்திருக்கிறேன். பலகை மிக இனிமையானவர் என்பது பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அய்யனாரின் புனைவுகள் , கவிதைகள்

சென்ஷி

எனக்கு மிக சமீபத்தில் தான் பழக்கம். இவரது படைப்புகள் அய்யனாரின் பதிவுகளை படிக்கும் அனுபவத்தை தந்தாலும், இவரது கோணம் வேறு என்பது உண்மை. இவரது கவிதைகளும், பின்நவீன கதைகளும் வாசிப்பனுபவத்தை வேறு கோணத்திற்கு மாற்றுகிறது. இவருடைய பதிவுகளை முழுவதுமாக என்னால் படிக்க முடிவதில்லை என்றாலும் அதை அவரிடமே ஒத்து கொள்வேன். எனக்கு இன்னும் அந்த பக்குவம் வரவில்லை என்பது தான் உண்மை.
சென்ஷியின் புனைவுகள்

ஜ்யோவ்ராம் சுந்தர்

இவரது கவிதைகள் எனக்கு அந்த அனுபவத்தை தரும். எதிர் கருத்துகளை இவர் நாகரிகமாக தான் விவாதிக்கிறார். இவருடைய காம கதைகள் ஆழ்ந்து படிக்கும் போது ஒரு வித்தியாச அனுபவத்தை தரும். பல சர்ச்சைகளுக்கு உட்பட்டாலும், என் பார்வையில் காமம் ஒரு நடைமுறை இலக்கியமாக தான் தெரிகிறது.

இன்னும் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள்.
பதிவின் நீளம் கருதி பின்நவீன காமெடி எழுத்தாளர் நிஜமா நல்லவனுக்கு மட்டும் நன்றி சொல்லி கொள்கிறேன். மாற்ற பதிவர்களை எனது வலையில் கண்டிப்பாக நினைவு கூறுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்

Thursday, October 16, 2008

தமிழ்வலையில் நகைசுவை பதிவர்கள்!

மனிதனை மற்ற விலங்குகளிடமிருந்து பிரித்து காட்ட நாம் பயன்படுத்தும் வார்த்தை சிரிப்பு, சிரிப்பு என்பது சந்தோசத்தின் வெளிப்பாடு, எல்லோரும் வாழ விரும்புவது அப்படியே.

தமிழ் வலைப்பூவை பொறுத்தவரை நிறைய பேர் நகைச்சுவையை கையாளுகிறார்கள்.
சிலரது குபீர் சிரிப்பு, சிலருடையது சிந்தனை சிரிப்பு, சிலரது பயங்கர மொக்கைகளாக இருந்தாலும் ஒரு சிறு புன்னகையாவது நம்மில் கொணராமல் அது போவதில்லை,
இங்கே நான் ரசிக்கும் நகைசுவை பதிவர்களை உங்களுக்கு அடையாள படுத்துகிறேன்.

குசும்பன்!

இவர் ஒரு பதிவு போட்டாலே, இனிப்பை கண்ட குழந்தை போல் ஆகிவிடுவேன். நான் அறிந்த பலருக்கும் இதே அனுபவம் தானாம். வெரைட்டி மீல்ஸ் போல வெரைட்டியாக குசும்பு பண்ணவது இவரது கலை, இவைகள் என்று குறிப்பிட்டு சொல்வதர்கில்லாமல், ஓரிரு சீரியஸ் பதிவுகளை தவிர மற்ற அனைத்துமே உங்களை கவரும். இவரது கார்டூன்கள் குசும்பின் உச்சகட்டம். பின்னூட்டங்களிலும் குசும்பை வெளிப்படுத்துவது பதிவர்களுக்கு ஊக்கம் தரும். சமகால பதிவர்களில் குசும்பன் மிக முக்கியமானவர்

லக்கிலுக்

இவருடைய எதிர்பதிவுகள் உலகபிரசித்தம், இவர் உருவாகிய கதாப்பாத்திரங்களான காண்டு கஜேந்திரன், பாரு நிவேதிதா நிஜத்தில் வாழ்வது போன்றே அவரது எழுத்தில் தெரியும். எவ்வளவு பெரிய சீரியஸ் மேட்டரயையும் நகைச்சுவையாக்கி எழுதியவரையே சிரிக்க வைப்பது இவரது யுக்தி. இவரது பதிவுகளில் லேபில் இல்லை என்பதால் அதற்கு மட்டும் தனியாக சுட்டி கொடுக்க முடியவில்லை.

ச்சின்னப்பையன்

மிக குறிகிய காலத்தில் நிறைய நண்பர்களை அடைந்தவர்களில் இவரும் ஒருவர்.
இவருடைய தனித்தன்மை "இன்னார் மென்பொருளாலரானால்" என்று பலரையும் கலாய்ப்பது ரசிக்கதக்கவாறு இருக்கும். இவருக்கு நண்பர்கள் மத்தியில் மொக்கை மன்னன் என்ற பட்டம் இருந்தாலும் இவருடைய மொக்கைக்கு யாரும் ஈடுடில்லை என்பதால் இவரை மொக்கை மாமன்னர் என்றே அழைக்கலாம்.


அதிஷா

இவரும் குறுகிய காலத்தில் நிறைய நண்பர்களை அடைந்தவர்.
ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியசாகவே எழுதினாலும் தற்பொழுதெல்லாம் வெறும் நகைச்சுவைக்கே முக்கியத்துவம் தருகிறார். லக்கிலுக்கின் பாணியில் காதாபாத்திரங்களின் பெயரை மாற்றி கலாய்ப்பது லக்கியையே தூக்கி சாப்பிடம் அளவுக்கு நகைச்சுவையாக இருக்கிறது. பின்ன லக்கியின் தயாரிப்பல்லவா அதிஷா.

ஆசிப் அண்ணாச்சி!

இவரை நகைச்சுவை பதிவர் என்று சொன்னால் யாராவது கோபப்பட போகிறார்கள்.
சில நேரங்களில் பயங்கர சீரியஸ் மேட்டரும். மனம் நெகிழக்கூடிய விசயங்களும் எழுதுவார். குறிப்பிட்டு அய்யனாருக்கு எதிர்பதிவு எழுதி கலாய்ப்பது மிகவும் ரசிக்கதக்கவாறு இருக்கும். வட்டார மொழி நடையில் இவர் எழுதும் பதிவுகள் எல்லாமே நகைச்சுவை தான் எனக்கு. படிக்காதவர்கள் படியுங்கள் உங்களுக்கே தெரியும்.

ராப் என்னும் வெட்டிஆபிசர்,

எல்லா பதிவர்கள் பின்னூட்டத்திலும் me the first போடுவது இவரது பழக்கம். அதாவது இவரை தெரியாதவர்கள் எவரும் இல்லை. சுய எள்ளல் இவரிடம் தண்ணி பட்ட பாடு. மற்றவர்களை கலாய்ப்பதை விட நம்மை நாமே கலாய்த்து கொள்ளலாம் என்று நினைத்து விட்டார் போல. நல்ல நகைச்சுவையுடன் எழுதுகிறார். இவருடைய இந்த பதிவு ஒரு சான்றுக்கு மட்டுமே

இருளும் ஒளியும் அல்லது அதுவும் இதுவும்

நேற்று பெய்த கன மழையில் எனது அகலப்பட்டை இணைய சேவை படுத்து விட்டது அதனால் எதுவும் எழுத முடியவில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லதிற்கு தான். இன்று ஏதாவது சிறப்பாக எழுத வேண்டும் என்று யோசித்த போது தோன்றியதை இங்கே கொட்டி விடுகிறேன்.


அது இருத்தலின் ரகசியம்

இது தொலைதலின் ஏக்கம்

அது இயல்பின் உண்மை

இது நிறம் மாறும் தன்மை

அது வெற்றிடமாய் நிரம்பிகிறது

இது வெற்றிடத்தை நிரப்புகிறது

அது இயல்பின் உச்சகட்டம்

இது ஏமாற்றத்தின் ஆரம்பம்
நம் வாழ்க்கையை போல





இது சும்மா

தோன்றலில் தோற்ற பிழை தோன்றுமாயின்
புரிதலின் புரியாமை நன்று

Tuesday, October 14, 2008

மீண்டும் ஒரு முறை!!

அது ஆட்டத்தின் முக்கியமான கட்டம். அந்த கோல் தான் அந்த அணியின் எதிர்காலத்தையும் அவனுடைய எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகிறது.
சீனியர் முதல் ஜூனியர் வரை அனைவரும் அட்வைஸ். இத்தனைக்கும் அவன் தான் அந்த டீமின் பீலே என்று பெயர் வாங்கியவன். பல புதியவர்களின் வருகையால் தனது முழுத் திறமையையும் காட்டவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான்.

எதிர்பாராமல் கிடைத்தது தான் அந்த பெனால்டி ஷாட். கோல் போஸ்டின் நடுவே எதிர் அணியின் கோல் கீப்பர் நின்று கொண்டிருக்கிறான். அவனையும் தாண்டி உள்ளே செல்லவேண்டும் அவன் உதைக்கும் பந்து. பெனால்டி ஷாட்டில் அவனது திறமை அறிந்தே மொத்த அணியினரும் அவனை தேர்வு செய்திருந்தனர். அந்த கோலை போடவில்லை என்றால் அந்த தகுதி சுற்றிலேயே அந்த அணி வெளியேற வேண்டும்.

நொடிப்பொழுதில் சில கணக்குகள் போட்டான் அவன். பொதுவாக மனிதர்கள் வலது பக்கத்தில் உறுதியானவர்கள். கீப்பரின் இடது பக்கத்தை பயன்படுத்தி கொண்டால் இந்த கோலை போட்டுவிடலாம். இருப்பினும் அவனை திசை திருப்ப அந்த வலது பக்கத்தில் அடிப்பது போல் பாவனை செய்ய வேண்டும். அவன் அறிந்த பல யுக்திகளை பயன்படுத்தி பந்தை உதைத்து விட்டான்.

அது அந்தரத்தில் பறந்தது.

கோல் கீப்பர் பாலை தடுக்க அவனது வலது பக்கத்தில் பறந்தான்.

பந்து அவனுக்கு போக்கு காட்டி விட்டு இடது பக்கத்தில் பறந்தது.

அது கண்டிப்பாக கோல் தான் என்று எதிர்பார்த்து அனைவரும் சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தனர்.

பந்து பறந்து சென்று இடது பக்க கோல் போஸ்டில் அடித்தது

பந்து உள்ளே செல்லாமல் வெளியே பாய்ந்தது.

எல்லோரும் அவனை பூச்சியை பார்ப்பது போல் பார்த்து சென்றனர்.
அவனால் அவமானத்தில் அங்கே நிற்க முடியவில்லை.
எந்நேரமும் கண்ணில் அணை ஒடிந்து வெள்ளம் பெருக்கேடலாம் என்பதை உணர்ந்தான்.

தனி அறையில் வாய் விட்டே கதறினான்.

கடவுளே உன்னை எவ்வளவு நம்பினேன். என்னை கை விட்டு விட்டாயே.

உணர்ச்சி பெருக்கில் அருகில் இருந்த கத்தியை எடுத்து கை வெட்டி கொள்ள போனான்.

தீடிரென்று அந்த குரல்

"மகனே"

யார் அது?

நான் தான் கடவுள்!

எதற்காக வந்தீர்கள், நான் சாவதை பார்ப்பதற்கா!

இல்லை, இன்னும் வாழ்வு உண்டு என்று சொல்வதற்காக!

இனிமேல் என்ன வாழ்க்கை, எல்லாம் தொலைந்து விட்டதே!

அப்படி நினைக்காதே, வேண்டியதை கேள்!

மீண்டும் நான் அங்கே செல்ல வேண்டும்!

எங்கே?

அந்த கோலை நான் மறுபடியும் போட வேண்டும்!.

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது!

என்ன?

ஏற்கனவே நீ அந்த முயற்சியை செய்திருக்கிறாய் எனற ஞாபகம் உனக்கு இருக்காது!

பரவாயில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடியும்!

சரி உன் ஆசை படியே நடக்கும்!


இப்போது மீண்டும் நீங்கள் பதிவின் முதல் பத்திக்கு செல்லலாம்

Monday, October 13, 2008

நான் சந்தித்த பதிவர்கள்!!

ஆனந்த விகடன் மூலம் பதிவுலகை அறிந்து கொண்டேன். அதிலேயே தான் எனக்கு அவரும் அறிமுகமானார். பதிவுலகில் நான் முதல் முதல் சந்தித்தது இவரை தான்! வந்த புதிதில் எனகிருந்த பல சந்தேகங்களை தீர்த்து வைத்தவர், உலகில் நேற்று நடந்தது வரை விவாதிக்கும் இளைஞர். எப்போது அழைத்தாலும் மனம் கோணாமல் பேசுபவர், பதிவர்களை கொண்டாடுபவர், இது அனைவருக்கும் தெரியும் ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியானவர், அதற்காக தான் சமூகத்தையே எதித்தவர். ஒய்வு எடுக்க வேண்டிய வயதிலும் வரும் சமுதாயம் பாழாகி விட கூடாதென்று இன்னும் உழைக்கிறவர் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அந்த இளைஞரின் பெயர் தருமி. அவரை சந்தித்தது பற்றிய பதிவு.


இரண்டாவது நான் சந்தித்ததும் ஒரு இளைஞரை தான். இவரும் பதிவர்களை கொண்டாடுபவர். இவரும் பதிவுலகை பத்திரிகை வரை கொண்டு சேர்த்தவர். பல சர்ச்சைகளுக்கு ஆளானவர். இவருடன் பழகிய அனைவருக்கும் ஏதாவது ஒரு கெட்ட அனுபவம் நடந்திருக்கும். மற்றவர்கள் அவரை அடையாளம் காட்டுவது போல் ஒரு அடையாளமும் அவரிடம் இல்லை. என்னுடம் சேர்ந்து மட்டன் பிரியாணி சாப்பிட்டார். ஒரு பீர் குடித்தார். அவரிடம் எனக்கு பிடித்தது அவரது நகைச்சுவை உணர்வு. அந்த இளைஞரின் பெயர் டோண்டு.

முதல் தரம் அவரைப் பார்க்க சென்ற பொது அஜ்மீர் என்ற எனது நண்பரையும் அழைத்து சென்றிருந்தேன். அவர் பங்கிற்கு அதியமானை அழைத்திருந்தார். அதியமான் ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர். என்னிடம் என்ன ராசி என்று கேட்க, நான் அதில் நம்பிக்கை இல்லை இருந்தாலும் சொல்கிறேன் மிதுன ராசி,மிதுன லக்னம் என்றேன்.
நம்பிக்கை இல்லை என்று சொன்னீர்களே என்று அதியமான் கேட்க, தெரிந்ததால் தான் நம்பிக்கை இல்லை போல என்று அந்த இடத்தை கலகலப்பாக்கினார் டோண்டு.

ஒரு முறை கோவையில் ஒரு பெரிய சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள். செந்தழல் ரவியும், ஓசை செல்லாவும். மிக அருமையான சந்திப்பாக அது இருந்தது. இருபது பதிவர்களுக்கு மேல் ஒரே இடத்தில். சென்னை மற்றும் பாண்டியில் இருந்தும் பதிவர்கள் வந்திருந்தனர். அங்கே இளையகவி, ஜிம்ஷா, நல்லதந்தி ஆகியோரையும் சந்தித்தேன். அதன்பிறகு ஒரு முறை இளையகவி என் வீடிற்கு வந்து என்னை சிறப்பித்தார், மேலும் முதன் முதலில் எனது புகைபடத்தை வெளியிட்டு பாராட்டுகளைப் பெற்றவர் இவர்.

நல்லத்ந்தியை முதன்முதலில் கோவையில் தான் சந்தித்தேன். நல்ல மனிதர் சேலத்தை சேர்ந்தவர். நான் எப்போது சேலம் சென்றாலும் அவரை அழைப்பேன். பிரதி பலன் எதிர்பாராமல் உதவுபவர். ஆனால் பாருங்கள் என்னை மாதிரியே பதிவுலக அரசியல் தெரியாதவர்.

செந்தழல் ரவி, இவரையும் முதன் முதலில் கோவையில் தான் பார்த்தேன் ஆனாலும் இவர் வசிப்பது பெங்களூரில். மிகுந்த வேலைபளுவிலும் என்னை பார்க்க வந்தார். நகைச்சுவையாக எழுதுபவர். இவருடைய நட்பு வட்டம் பெரிது. அங்கே எனது பெயருடைய மற்றொரு நண்பரையும் அறிமுக படுத்தினார். மற்றொரு முறை அவரை அழைத்த பொது வர கிளம்பியவர், உடன் வேலை செய்பவரின் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்பட்டதால் அங்கே சென்றார். இம்மாதிரியான மனிதர்கள் எனக்கு தெரியும் என்று சொல்லி கொள்வதே பெருமை தானே.

ஆசிப் அண்ணாச்சியின் இல்ல திருமண விழாவிற்கு சென்ற போது முதன்முதலாக லக்கிலுக், பால பாரதி, மோகன் தாஸ் மற்றும் பைத்தியகாரனையும் சந்தித்தேன். அவர்கள் பெருந்தலைகள், தலையிருக்கும் போதுய் வாலாடக் கூடாது என்பதால் பெரிதாக எதுவும் அவர்களிடத்தில் பேசவில்லை. இருப்பினும் அவர்கள் எனக்கு துணையாக ரமேஷ் வைத்யாவை அனுப்பி வைத்தார்கள்.

நொடிப்பொழுதில் எந்த வார்த்தைக்கும் கவிதை படைக்கும் திறமை உள்ளவர் ரமேஷ். விகடனில் பணி புரிகிறார். பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நகைச்சுவை இருக்கும். நன்றாக எழுதி கொண்டிருந்தவர் என்ன காரணமோ தெரியவில்லை அவரது வலைப்பூவையே அளித்து விட்டார். வாரத்திற்கு இரண்டு முறையேனும் என்னுடம் பேசுவார். பதிவர் அல்லாது உடன் பிறந்த சகோதரர் போல பழகுபவர்.

பரிசல், மிக குறுகிய காலத்தில் பதிவர் வட்டத்தில் பெரும் புகழை சம்பாதித்தவர். காரணம் அதற்கு அவர் மிக தகுதியானவர். இலக்கிய பிரியர். பல்சுவை எழுத்தாளர். கூடிய விரைவில் இவருடைய எழுத்துகள் வெகுஜன பத்திரிகையில் வரப்போகிறது.
இவரும் பதிவர்களை கொண்டாடுபவர். என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.
திருப்பூரில் வசிக்கிறார். வெயிலான் மற்றும் சாமிநாதன்(ஈர வெங்காயம்) இவரது நண்பர்கள். இவர்கள் ஈரோடு வந்திருந்தபோது எழுதிய பதிவு.

புதுகை அப்துல்லா மற்றும் வெண்பூ, இருவரும் சென்னை வாசிகள். அப்துல்லா பற்றி சொல்லவேண்டியதில்லை. தமிழகமே அறியும் அவரது சேவை மனப்பான்மை பற்றி, இவருடைய திராவிடமும் கம்யூநிஷமும் பதிவு இவருக்குள் இருக்கும் இலக்கியவாதியை காட்டி கொடுத்து விட்டது. இந்த இருவரும் தொடர்ச்சியாக எழுதுவதில்லை என்றாலும் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட்டு ஆதரவு தரும் நல்லவர்கள்.

சின்ன ரஜினி கிரி என்னை பார்க்க ஈரோடு வந்திருந்தார். நல்ல மனிதர் என் மகளுக்காக வெளிநாட்டில் இருந்து சாக்லேட் வாங்கி வந்திருந்தார். மிக அமைதியானவர். நாம் பத்து வார்த்தை பேசினால் தான் ஒரு வார்த்தை பேசுவார்.

ஈரோடு அருகே இருக்கும் கூடுதுறை என்ற இடத்தில் வசிப்பவர், அவர் வலைத்தளத்தின் பெயர் காரணமும் அதுவே. இவரும் அமைதியானவர். நல்ல மனிதர். இவர் முதன் முறை வந்திருந்த போது எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரியாக கவனிக்க முடியவில்லை.

கடைசி மற்றும் முக்கியமானது.
ஈரோட்டில் இருந்து கொண்டு இவரை பற்றி எழுத வில்லை என்றால். பதிவுலகம் என்னை முதுகில் ஏறி மிதிக்கும். இவரை செல்லமாக போட்டோகாரர் என்று தான் அழைப்போம். நிலா குட்டியின் தந்தை என்ற பெருமைக்குரியவர். பேசுவதற்கு ஏகப்பட்ட விசயங்கள் வைத்திருக்கிறார். இவரிடம் நேரில் பேசியவர்களுக்கு தான் இவர் எவ்வளவு பெரிய இலக்கிய வாசகர் என்பது தெரியும்.

இவருக்கு நான் எழுதிய பகிரங்க கடிதம்

வழி அனுப்புதலும் வரவேற்பும்

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலம் கலக்கலாக பல பதிவுகள் ( பதினாறு ) இட்டு, பல பதிவர்களை அறிமுகம் செய்து, அருமையான சுட்டிகள் கொடுத்து, பொறுப்பினை நிறைவாக, மன மகிழ்வோடு நிறைவேற்றி விடை பெறுகிறார்

அன்பு நண்பர் சுரேகா. பல பணிகளுக்கு இடையேயும் அயராது உழைத்து, தொடர்ந்து தொடர்பு கொண்டு, எடுத்த செயலை செவ்வனே முடித்த சுரேகாவிற்கு வலைச்சர குழுவின் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் நன்றி கூறி விடை அளிக்கிறேன்.

அடுத்து இவ்வாரத்திற்கு ஆசிரியராக பொறுப்பேற்க வருகிறார் அன்பு நண்பர் வால்பையன். இவர் வலைப்பூ ஆரம்பித்து 11 மாதங்களில் 100 பதிவுகளுக்கும் அதிகமாக பதிவுகள் இட்டிருக்கிறார். அட்டகாசமாக இருக்கிறது. மனிதனின் இரு பக்கங்கள் இரு வலைப்பூவாக இருக்கின்றன. அறிவிற்கு விருந்து - மனம் மகிழவும் விருந்து.

கமாடிட்டி அனலைசர் என்று MCXARUN என்ற வலைப்பூவினிலும் கடந்த 11 மாதங்களில் ஏறத்தாழ 1000 பதிவுகள் இட்டிருப்பது இவரது உழைப்பினையும் உழைப்பின் மூலம் பெற்ற வெற்றியினையும் காட்டுகிறது.
இவரை வருக வருக என வலைச்சர் குழுவினார் சார்பாக வரவேற்கிறேன்.
நல்ல பல பதிவுகள் தருக என வாழ்த்துகிறேன்.

நன்றி


Sunday, October 12, 2008

நன்றியுடன் விடைபெறுகிறேன்.!

இந்தவாரத்தை நான்
ஏதோ ஓட்டிவிட்டேன்.
இந்தப்பதிவூடகத்தில்
என்னையும் மதித்து
அன்புசெய்யும் இன்னும்
சிலரும் இருக்கின்றார்கள்
சுட்டி கொடுத்தால்தான்
பார்க்கவேண்டும் என்பதில்லை!
இவர்களை நினைத்தாலே
உங்கள் கணிணியே
கொண்டுபோய்
இவர்களிடத்தில் விட்டுவிடும்!

அலட்டாமல் லந்து செய்யும் அபி அப்பா!
அமுக்கமாய் குசும்பு செய்யும் குசும்பன்!
அனாயாசமாய் எழுதி வரும் தம்பி!
சகஜமாகப்பழகிவரும் சஞ்சய்!
அனைவரையும் அண்ணனாக்கும் அப்துல்லா!
வெடிதேங்காய் சொல்லித்தரும் தமிழ்ப்பிரியன்!
மணமாலையில் மயங்கிக்கிடக்கும்
மங்களூர் சிவா!   :)

சிரிக்கவைத்து சேதி சொல்லும் நாமக்கல் சிபி!
எல்லாவற்றிலும் நன்மை செய்யும் இம்சை!
எப்பவாவது பதிவு போடும் ஜி3 !
பாடல்களால் மனம் நிரப்பும் கானா பிரபா!
விவசாயியாக வெளிச்சம்காட்டும் இளா!
தடக்கென்று உண்மைசொல்லும் தஞ்சாவூரான்!
நிற்காமல் கவிதை சொல்லும் நிலாரசிகன்!
நெடுங்கவிதை,கதைகள் சொல்லும் அருட்பெருங்கோ!
சிரித்துக்கொண்டே கவிதைக் கலாய்க்கும் காயத்ரி!
பதிவுலகத் தங்கச்சி ஸ்ரீமதி!
பயணப்பதிவின் முன்னோடி துளசி டீச்சர்!
வகுப்பறையின் ஒரே ஆசான் சுப்பையா வாத்தியார்!
எங்கள் ஊர் மணம் பரப்பும் புதுகைத்தென்றல்!
நிஜமாவே நல்லவரான நிஜமா நல்லவன்!
நீண்ட நாளாய் எழுதாமல் இருக்கும் பாசமலர்!
மக்களுக்காக சேவை செய்யும் மங்கை!
பண்புடன் அன்புகாட்டும் ஆசிப் மீரான்!
அசராமல் பதிவு போடும் கோவி.கண்ணன்!

என்று இத்தனைபேரின் பதிவுகள்
ஏதாவது ஒரு செய்தியை
எப்போதும் அள்ளித்தந்து
என்னை வளப்படுத்த
இவ்வுலகில் உதவுகிறது.


எல்லாப்பேச்சிலும் அன்புகாட்டி
எல்லோர் மனதிலும் 
இடமும் பிடித்து
வலைச்சரத்துக்கு
என்னை வரவழைத்து
வாரம் முழுதும்
வலைப்பூக்களில் என்னை 
வளைத்து வளைத்து
பதிவுகளை, பக்குவமாய்த்
தேடவைத்த
அன்புடை அய்யா
சீனா அவர்களுக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்!

இவர்தான் வருவாரென்று
முன்னமே தெரியாமலே
இவருக்கு ஒரு அறிமுக்த்தை
நான் தந்து முடித்துவிட்டேன்
வரும்வாரம் வந்திருந்து
வலைச்சரத்தை 
தொடுக்கப்போகும்
வளமான வால்பையனுக்கு
என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

நிறைவாக....

கடைசியாக நான் சொல்லவேண்டிய பதிவர் ஒருவர் இருக்கிறார்.  

எல்லோருக்கும் இவரைத்தெரிந்திருக்கும் 2004களில் அதிகப்பதிவுகளை எழுதியவர்..இப்போது குறைவாகத்தான் எழுதுகிறார்.
நல்ல மனிதர். ! விபரம் தெரிந்தவர் என்பதை இவரது பதிவுகள் பறைசாற்றுகின்றன.

 குத்தாமல் வலிக்காமல் சர்க்கரை அளவைத்தெரிந்துகொள்ள என்ன வந்துள்ளது சொல்கிறார் !

சில கோக்குமாக்கான குறிப்புகளில் எப்படிக்கொதிக்கிறார் என்று பாருங்கள் 

''கடவுச் சீட்டைப் புதுப்பிக்க வேண்டும். அதைப் புரட்டிப் பார்த்தேன். அதன் ஏடுகளுக்குள் என் 10 வருடங்களை விறுவிறுவென யார்யாரோ எழுதி முடித்துவிட்டார்கள்''. என்று பேருந்துக்குறிப்புகள் எழுதுகிறார்.

பிள்ளைகளா சுண்டெலிகளா? என்று ஒரு திடுக் தகவல் தருகிறார் பாருங்கள்!


நான், எங்க தாத்தா மற்றும் கமலஹாசனின் தாயுள்ளம் என்று தன் கூற்றை எழுதியுள்ளார்!

நிறைய சிந்திக்கும் இவர் போன்றவர்களது எழுத்துக்களைப்படிப்பதால், நானும், எனக்குள் இருக்கும் நானும் வடிவம் பெறுகிறேன் என்பதில் ஐயம் இல்லை!

அப்புறம்..!

சொல்ல விட்டுப்போகக் கூடாதவர்கள்...

அடுத்த பதிவர் பழமை பேசி !
 இவர் இந்த ஆண்டுதான் பதிவெழுத ஆரம்பித்திருந்தாலும் ஒரு அக்கறை தெரிகிறது.
 பழமைபேசி சொல்லும் எள்ளுத்தாத்தா வைத்தியம்
நன்றாக உள்ளது.


சிறப்பாக எழுதுகிறார்.
இன்னும் நிறய நிறைவாக எழுதி நம் உள்ளங்களில் இடம்பிடிக்க வாழ்த்துவோம்.

ஆங்கிலத்தில் எழுதினாலும், 
அழகாக எழுதும் இரண்டு பதிவர்களை நான் அறிமுகப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

முதலாமவர் மோகன்ராம் அவர்கள்

இவர் எல்லா நாட்களிலும்,உங்கள் வீட்டுத்தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு தொடரிலோ, ஒரு திரைப்படத்திலோ வந்துவிடுவார்.
மேலாண்மை குருவான இவர், சினிமா பற்றி மிகவும் அதிகம் தெரிந்தவர். அதிலேயே ஊறியவர்.
என் அன்பான நண்பர் !  அவரது வலைப்பூவுக்குச்சென்றால் அரிய தகவல்கள் நிச்சயம். இடையில் தமிழிலும் எழுதியிருக்கும் இவர் ...
 ரஜினிகாந்த்தைப்பற்றி எழுதியிருப்பது அனுபவப்பூர்வமாக உள்ளது.

மேலும் திரைத்துறையினருக்கு இந்திய அரசு வெளியிட்டிருக்கும் தபால்தலைகளைப்பற்றி இவர் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

சத்யராஜைப்பற்றியும் சுவாரஸ்யமாக ஒரு பதிவு ரசிக்கவைக்கிறது.

இவர் பதிவூடகத்திலும் , அனைவரது மதிப்பையும் பெற்று மென்மேலும் சிறந்துவிளங்க உளமாற வாழ்த்துவோம்.

அடுத்தவர்...
உமாகுமார்

இந்தக்கதையைப்படித்துவிட்டு எப்படி விவரிக்கிறார் என்பதிலேயே தெரிகிறது. எவ்வளவு ஆழ்ந்து வாசிக்கிறார் என்பது.!

நம்ம ஊரு ஜார்ஜ் புஷ்கள் என்று இவர் பொறுமியிருப்பது பற்றித்தெரிந்தால், இனி நீங்களும், நானும் இன்னும் கொஞ்சம் கவனமாக எரிபொருள் நிரப்புவோம்.

சிறந்த சிந்தனையாளராக , சமூக நல்லெண்ணம் கொண்டவராக , அன்பான தாயாக இருக்கும் இவர் நம் பிரபல பெண் பதிவர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

நிறைவாக....

அடுத்த சினிமா வலைப்பூ.....


சுரேஷ் கண்ணனின் பதிவுகளுக்கு நான் ரசிகன்.


  TSOTSI என்ற படத்தின் பார்வையை மிகவும் அழகாக, நிதர்சனங்களுடன் சொல்லி-ஒரு வன்முறையாளனின் குழந்தைமை என்ற தலைப்புடன் கூறியிருக்கிறார்.

பார்வை பார்த்திருக்கிறார். இவரது பதிவுகளைப்பார்த்தாலே , அந்தப்படத்தைப்பார்த்த திருப்தியோ, அதை உடனடியாகப்பார்க்கவேண்டுமென்ற ஆவலோ ஏற்படுவது நிச்சயம்

 சற்றே திகைக்க வைத்த கொரியன் படம் என்று old boy என்ற படத்தைப்பற்றிக்கூறி கலக்குகிறார்.

இவர் நெல்லை கண்ணன் அய்யாவின் புதல்வர் என்று முதலில் நினைத்தேன். ஏனெனில், அவரும் திரைத்துறையில்தான் இருக்கிறார். பிறகுதான் அவர் வேறு, இவர் வேறு என்று தெரிந்துகொண்டேன்.

வெளிநாட்டு சினிமாக்களை அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், இவரது வலைப்பூவுக்கு தினம் அட்டெண்டென்ஸ் கொடுப்பது நலம்.

அடுத்து...

சினிமாப்பதிவர்கள்

சினிமா பற்றி தமிழில் எழுதும் பதிவர்கள் பற்றி எழுதாமல் போனால் சினிமாண்டவர் என்னை மன்னிக்கமாட்டார்.
எனக்குத்தேவையான பழைய, புதிய சினிமா செய்திகளுக்காக இவர்களை நான் அணுகாமல் இருந்ததில்லை.


ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் பற்றி முழுமையாகத்தெரிந்துகொள்ள இதோ தகவல் தருகிறார் முரளிகண்ணன் ! 

பற்றி எழுதி ஒரு ஆய்வுக்கட்டுரையே எழுதியிருக்கார். உங்கள் ஆதங்கம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புங்க சார் !
:)

என்று எழுதி நம் இளம்பிராயத்தில் நாம் பார்த்த அந்தத்திரைப்படங்களின் காலத்துக்கே நம்மைப்போகவைத்து, அந்தப்பாத்திரங்களைப்பற்றிய நமது சிந்தனையையும் ஒப்பிட வைக்கிறார்.

 என்று சின்னதாக ஆய்ந்திருக்கிறார் பாருங்கள் !

தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட உணவு உண்ணும் காட்சிகள்! இதெல்லாம் உட்கார்ந்து யோசிப்பாரோ என்று எண்ணும் வண்ணம் சொல்லியிருக்கிறார். மிகவும் அருமையான பதிவு.!



அடுத்து ...


ஆனால் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கப்பா! என்று தலைப்பிட்டுள்ளார்.

இவர் நிறைய வீடியோக்களைக்கொடுத்துள்ளார்.
என்ன ஒரு கொடுமை என்றால், புதுப்படங்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
ஆனால், இவையெல்லாம் வெளிநாட்டுக்காரர்களுக்கு என்று மனதைத்தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.
அதுவும் அவராகப்போடவில்லை...இன்னொரு தளத்திலிருந்துதான் எடுத்துக்கொடுப்பதால், விட்டுவிடலாம். :))


நதியோசை நயமாக உள்ளது.

அடுத்த சினிமா வலைப்பூ.....

விஞ்ஞானக்குருவியின் வினோதங்கள்



2003 ம் ஆண்டிலிருந்தே எழுதிக்கொண்டிருக்கும் இந்தப்பதிவர்...!


இந்தத்தொகுப்பிலேயே சிறிய அரிய தகவல்களுடன் கலக்கியிருக்கியிருக்கிறார். வலைப்பக்கமே மிகவும் தெளிவாக தகவல்களுக்கென்றே பிறந்தது என்பதையும், அந்த நோக்கத்தை விட்டு மாறாமலும் செல்கிறது.

சுட்டிக்காட்டியிருக்கிறார் பாருங்கள் ! 

முதலை மனிதர்...இர்வினின் மரணம் பற்றி எழுதியிருக்கிறார்!

உலகில் அதிக காலம் உயிர் வாழ்ந்த உயிரி பற்றி கலக்கலாக எழுதியிருக்கிறார்.

என்று கேட்கும்போது, அக்கறை பளிச்சிடுகிறது.

நமக்குத்தேவையான அறிவியல் தகவல்களை அறிந்துகொள்ள இதுபோன்ற ஒரு துறைசார்ந்த பதிவு தமிழில் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான்.!


அடுத்து...