07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 11, 2009

கதை கேளுங்க 2

http://kavinaya.blogspot.com/2009/02/blog-post.html
கவிநயாவின் -நினைவின் விழிம்பில்- வலைச் சரம் .அங்கே ஒரு அரை மணி நேரம் ஆர அமர வாசித்து ரசித்த அனைத்து கதைகளில் நான் ரசித்தது. ரயில் பயணங்களிலில் .
இந்த கதையின் முடிவு, இறுதி பாரா வரை, நம்மால் யூகிக்கவே இயலாத வண்ணம் எழுதியிருக்கிறார்.ஆசிரியை. முத்தான அந்தக் தேர்ந்தெடுத்துத் தருகிறேன்.வாசித்து பின்னூட்டம் இடுங்கள்.மனித நேயத்தை உணர்த்தும் அருமையான கதை.அடுத்தவருக்கு உதவும் எண்ணம் உள்ளவருக்கு ஆண்டவனும் may i help you ?என்று நிச்சயமாகக் கேட்பார்.
இந்த கதை மூலம் நான் கற்ற பாடம் இது.[தெரிந்த விஷயமென்றாலும் சமயத்தில் தொலைத்து விடுகிறோமே.]
-----
http://nandhu-yazh.blogspot.com/2006/12/blog-post_13.html
அமுதாவின் என் வானம் பதிவில் மின்னிக் கொண்டிருந்த இரண்டு நட்ச்சத்திரங்களை எடுத்து வந்திருக்கிறேன்.
கதையின் தலைப்பு கோணங்கள்[இரண்டு ,சின்னகதைகள்]
பெண்களை ,பொறுமையில் பூமாதேவி பாசம் காட்டுவதில் வற்றாத ஜீவநதி,என்ற வர்ணனைகளில் ,அடக்கி அந்த வட்டத்தை விட்டு ,வெளியே வரவிடாமல் அழகாக அவளுக்கென ஒரு அந்தஸ்த்தைத் தந்து விடுகின்றது ,இந்த சமூகம்.
ஆனால், மனதளவில் ,பெண்களை அவரவர் குடும்ப சுழல்,வேலைப் பளு ,என்று ஒவ்வொரு காரணமும் அவர்களை வெவேறு கோணத்தில் நிறுத்தி விடுகின்றன .கதை என்னவோ சின்ன கதைதான் .கருத்து நம்மை யோசிக்க வைக்கும்.
வாசித்துச் சொல்லுங்கள்.

14 comments:

  1. //கதை என்னவோ சின்ன கதைதான் .கருத்து நம்மை யோசிக்க வைக்கும்.
    வாசித்துச் சொல்லுங்கள்.//

    இம்மாதிரியான அறிமுகங்கள் எங்கேயும் அலுப்பை தராது!

    நன்றி

    ReplyDelete
  2. ரயிலைப் போலவே தொடர்கிறது கதையோடவே...மனசும்!

    ReplyDelete
  3. டயட்- க்கு அர்த்தம் தெரிந்தால் இப்படியெல்லாம் பெண்கள் யோசிக்கமாட்டாங்க. ஒல்லியாக ஆசைப்பட்டு பட்டினி கிடப்பதால் ஏற்படும் விளைவுகளை ஏற்கனவே ஒரு பதிவில படிச்சேன். எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பெண்கள்!

    ReplyDelete
  4. 'ரயில் பயண'த்தை இங்கு அழைத்து வந்திருப்பதை தற்செயலாகக் கண்டேன். மிக்க நெ/ம/கிழ்ச்சியும் நன்றியும் கோமா.

    ReplyDelete
  5. ரயிலைப் போலவே தொடர்கிறது கதையோடவே...மனசும்

    இதே போல் நீங்கள் எல்லோரும் இந்த வலைச்சர ஆசிரியை என்ற இன்ஜின் பின்னாடி தடம் புரளாமல் வரணும் ஓகே-வா

    ReplyDelete
  6. 'ரயில் பயண'த்தை இங்கு அழைத்து வந்திருப்பதை தற்செயலாகக் கண்டேன். மிக்க நெ/ம/கிழ்ச்சியும் நன்றியும் கோமா.

    அந்த கதை, சுமார் 10 மணி நேர ரயில் பயணத்தில் ஒரே செட்டில் எடுத்த மினி “நெஞ்சில் ஓர் ஆலையம்”

    ReplyDelete
  7. கவிநயா
    அடுத்தவர்களுக்காக வாழ்பவர்கள் அனைவர் நெஞ்சிலும் ஒரு ஆலையம் நிச்சயம் இருக்கும்.
    அந்த வகையில் இந்த கதை என்னைக் கவர்ந்தது

    ReplyDelete
  8. டயட் பற்றியெல்லாம் இந்த காலத்தில் தெரியாமலா இருப்பார்கள்.ஒரு பரு வந்த ”உடன் டாக்டர் ஆன் லைன்” வெப் சைட்டுக்குள் நுழைந்து படுத்துற பாடு இருக்கே....சொல்லி முடியாது.

    ReplyDelete
  9. கவிநயாவின் கதை நான் படித்ததே. அமுதாவின் “கோணக்கள்” படிக்க விட்டுப் போனது. அருமையான கதை. சுட்டிக்கு நன்றி கோமா.

    ReplyDelete
  10. நல்ல அறிமுகம்!

    ReplyDelete
  11. நன்றி கோமா. அமுதாவின் கதைகளையும் ரசித்தேன். அங்கு போய் பின்னூட்டி விட்டேன் :)

    ReplyDelete
  12. கவிநயா said...

    //அங்கு போய் பின்னூட்டி விட்டேன் :)//

    ஹி, நானும்தான்.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் மேடம். இராமலஷ்மி மேடத்தின் பின்னூட்டம் வழியாக வந்தேன். கோணங்களுக்கு மிக்க நன்றி.

    மீண்டும் வந்து படிக்கிறேன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது